திருவாசிரியம்-2- திவ்யார்த்த தீபிகை -/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2
————————————————————————–
திரு மேனி -அனுபவித்தார் முன்பு -அடுத்து அதில் முக்ய அங்கம்-திரு அடி -அடைய படைய வேண்டிய இடம்-சுயம் பிரயோஜனம்-சேவடியோயே
-சொல் நிரம்பி உள்ளம் முழுவதும் தொடர்கிறார் இதில்–
உபாயம் உபேயம்– பிராபகம் பிராப்யம் -பக்தி கொண்டு மோஷம் -இல்லாமல் பக்தியே உபாயம் உபேயம்-
——————————————————–
அவதாரிகை-
ஆதித்ய வர்ணம் தமஸ் பரஸ்தாத் தேயம்-தியானத்துக்கு வஸ்து பற்றி முன்பு சொன்னார்-தேய வஸ்துவின் விக்ரக வைலஷண்யம்-
அயனாய ந அந்ய பந்தகா வித்யதே வேதாக மேதம் புருஷம் மகாந்தே -வேதம் அஹம் புருசம் மகாந்தம் வேத அறிந்து கொண்டேன்-
பிரகிருதி விட உயர்ந்து சூர்யன் விட பெரிய -இதையே தமிழ் படுத்தினார் முதல் பாசுரத்தில்-
செஞ்சுடர் பரிதி சூடி–அறிவதால் ஒன்றே மோஷ வழி-திரு மேனி வர்ணித்தார்  அந்த தேய வஸ்துவின் பக்கல் பிறக்கும் -பர பக்தி முதல் பரம பக்தி ஈறாக
-நாம் கீழே இருக்கும் -பரபக்தி அடையவே பல தூரம்-பந்து பொருக்கி போடுவாரை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறோம்
-ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள்--பக்தாது அனந்யா சகாயா -அஹம் ஏவம் ஞாதும் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும்-அடைய -பிராப்ய தசை மோஷம்-
-பர பக்தி அறியும் தசை-ஞானம் ஏற்பட்டதும் பயம் விலகும்-தட தட சப்தம் கேட்டு பயந்து தென்னம் மட்டை விழுந்தது அறிந்ததும் பயம் போகும் போல –
-அறிவு முக்கியம்–ஞானம் பிரமம் பற்றி-ரஷிக்க அவன் இருக்கிறான் என்று அறிந்து–பயம் போகும்-சேர்ந்து இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம்
பர பக்தி நிலை/ சேர முயற்சி எடுக்கும் நிலை/அடுத்து சேர்ந்து ஆனந்திக்க –

-மூன்று முதல் ஆழ்வார்கள் இந்த மூன்றையும்-காட்ட-பிராப்ய அந்தர்கதி–ஆனந்தமே பயன்-தத் விஷய பக்தியே அமையும்

————————————————————————–
வடி அழகு/மேன்மை-தேவர் குழாம் தொழ இருந்த /எளிமை மூவடி அளந்த சேவடி-நம்மை தீண்ட -மூன்றையும் முதல் பாசுரத்தில் காட்டினார்-
தாப த்ர்யத்தால் கொதிக்கும் தலையும் தாமரை போன்ற திருஅடி-தேவிமாரும் கூசி பிடிக்கும் மெல் அடி-நீர்மை
/கர்ம ஞான யோகம் செய்து பக்தி யோகம் கிட்டும்–சு தர்ம ஞான சாதனம்–நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன் -லோக விக்ராந்த சரணவ் சரணம்-கர்ம ஞானம் இன்றி பக்தி கிட்டியதே-

-திரு மேனி குண அனுபவமே பக்தி கொடுத்ததே–கர்ம ஞான ஸ்தானம் போல் இவை நிற்க–உபாயம்-அவன் திரு மேனி குண அனுபவம் தான் என்கிறார்

சரணா கதி–நீயே உபாயம்–பக்தி அடைகிறோம்–பக்தி உபாயம் கொண்டு அவனை அடைவது சாதனம் உபாயாந்தரம்–
அவனை அனுபவித்து பக்தி பெறுவோம்-சுலபமான உபாயம்-மாம் ஏக சரணம் விரஜ–சர்வ தர்மான் பரித்யஜ்ய-அவனே தர்மமாக பற்றி-
மற்றவை தர்மம் இல்லை -அவன் திரு உள்ள ப்ரீதி ஏற்படுத்துவதே புண்யம்-பக்தி சாதனம் இல்லை-பிராப்யம் தான்-
அவ அருகு இல்லாதா பிராப்யம்-பக்திக்கு மேம் பட்ட பிராப்யம் வேறு இல்லை..-பர பக்தி ஆதிகள் உத்தேசம்-ஞான கர்ம ஸ்தானம்– இனி அவன் திரு அடிகள் தலையால் தரிப்பதை அருளுகிறார்-திரு அடியை தலையால் சூடுவதே வேண்டும்
உலகு படைத்து உண்டான் எந்தை–உண்டு ரட்ஷித்தான் என் சுவாமி
அறை கழல்சப்திக்கும் -நடந்தும் ஓடியும் ரஷிக்க வருகிற ஓசை–
தென் கலையும் வட கலையும் திவழ்ந்த நாவர்-வேதமும் திரு வாய் மொழி
சுடர் பூம் தாமரை-போன்ற –உலகம் தாவி வையம் கொண்ட தடம் தாமரை போல்-அடிகள் என்று வருவித்து கொள்ள வேண்டும்

ஒளி விடும் பூ மென்மை திரு அடிகள்-

அவா ஆர்- சேர்ந்து இருக்கிற -பக்தி நிரம்பி உள்ள ஆத்மா–தலையால் தரிக்க ஆசை கொண்டு- உருகி உக்க -விசேஷணம்-
அவா /நேரிய காதல்/அன்பின் -/மூன்று சொல்–அவா =ஆசை/அன்பு-ஈடு பாடு -ஏற்பட்டு பிரீதியாக மலரும்–அன்பின் இன்பம்
பக்தி ரூபமான அன்பு-பரம பக்தி –இன்பு ஈன தேறல்-அன்பு செலுத்துவது இன்பம்-தேன் போல் ஓட –
-தேங்கி கடல் –இனிமை வைலஷண்யம் அமுத கடலில் மூழ்கி–இது தான் சிறப்பு–

ஆசை வளர்த்து காதல் ஆகி அன்பாகி இன்பம் கொடுக்க தேன் வழிய கடல் போல் இருந்து மூழ்கி இருப்பவன் அமுத வெள்ளத்தான் —

இதை விட்டு ஒரு பொருள்க்கு-எதை சொல்ல வாய் கூச -ஆழ்வார்-இதில் எண்ணம் இல்லை
-அசைவோர்-பிரயத்தனம் பட்டு–அசையாமல் அவன் பக்தி கொடுக்க-மூ உலகு அளந்த சேவடி-அவனே வர –
-நம் முயற்சி இன்றி பகவத் அனுபவம்–மற்ற அனுபவம் குறைந்த அநேக முயற்சி–ஆச்சர்யம் ஆழ்வாருக்கு
-இதற்க்கு வருவானா அசைக -அசைந்து போகட்டும்–
திரு சீரிய செல்வம்-இயற்க்கை ஸ்வாபம்-மருவிய எப் பொழுதும்-ஸவாபாக  மாய்  விட்டு பிரியாத செல்வம்  –
-மாயா  பெரு விறல் -சக்தி -பெரிய சக்தி அனுபவிக்க -மூ உலகம் -ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தாலும் கொள்வது எண்ணுமோ-
-யார்-தெள்ளியோர் சாஸ்திர ஞானம் பெற்று தெளிந்த ஞானம் படைத்தவர் அபிப்ராயம் —உலகு படைத்த எந்தை அறை கழல் சூடுவதற்கு தெள்ளிடீர் குறிப்பு எண்ணும்–
கர்ம தொலைத்தால் தான்  இந்த ஞானம் அனுஷ்டானம் வரும்–விரோதி கழிய வேண்டும்  பகுச்யாம் -தத் யீஷ்ய -சங்கல்ப சக்தியால் ஸ்ருஷ்ட்டிகிறார் –
-எஞ்சாமல் வயிற்று அடக்கி முற்றும் உண்ட கண்டம்கண்டீர் பிரளயம் பொழுது –
-ரஷித்து பண்ணிய மேன்மை–எந்தை ஸ்வாமித்வம்–தப்பு பண்ணிலாலும் விட மாட்டான் சொத்தை-எளியவன்–என்-நீசனான எனக்கும்–
தாழ நின்ற என்னையும் விஷயீ கரித்து மயர்வற மதி நலம் அருளி -இந்த பாசுரம் பாட வைத்தானே —
என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதற்கு-நெஞ்சமே நீள் நகராக —பிராட்டிமார் நித்யர் உடன் வசிக்கிறான்-எதற்கு-இயற்க்கை ஸ்வாபம்–தண்ணீர் குளிர்வது போலும் நெருப்பு சுடும் போலும் -அடியார் பக்கல் சாய்வான்–
அகம்காரம் வேண்டும் என்னது என்ற எண்ணம் வேணும்- தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –

-திரு மலை நம்பி வரவேற்க-நீசன் வேற யாரும் இல்லை என்ற ஐதீகம்-

பெரிய திரு மலை நம்பி-ஈசன் வானவர்க்கு என்றால்–நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதிக்கே
-பாபிஷ்டக ஆள வந்தார் —அறை-தொனிக்கிற -ஒளி படைத்த நிரதிசய போக்கியம் ஆகிய திரு அடிகள்-
அனுபவித்து முடிக்க முடியாத -அனுபவிக்க அனுபவிக்க கூடும் –அறை கழல் சுடர் பூ-கதா புன -சொல்ல வேண்டும் படி இருக்கும்
-தாமரை சூட ஆள வந்தார் மதிய மூர்தன அலங்கரிஷ்யதே –வஜ்ர லாஞ்சனம்
ஹே-திருவிக்கிரம   தும் சரணாரவிந்தம் ..பரதன் இருப்பையே பெறுவான் பாதுகை பெற்றதும்-
விபீஷணன்-தம்பிக்கு அளித்த மௌலி எனக்கும் ஈந்து அருளுவிஜுரக-பெருமாள் –-இளையவர்க்கு அளித்த மௌலி என்னையும் கவித்தி–கொக்கு வாயும் படு கணணியும் போல் இருந்தது —
அத் தலை வைலஷ்ண்யம் அறிய அவா படாமல் இருக்காதே –ருசி பண்ணி அல்லது நில்லான் இறே- -ருசி-ஆசை-காதல்-அன்பு-நீங்காத அன்பு–
சூடுகையில் அவாவி இருக்கிற ஆத்மா வஸ்து-ஆசை நிரம்பி இருக்கும்-
-ஆத்மா உருகுமா -உடம்பே உருக வில்லை-அசேத்யமான ஆத்மா வஸ்து வெட்டவோ உலர்த்தவோ நனைக்கவோ முடியாது-
பகவானால் முடியும்-பகவத் சிந்தனை த்ரவ்ய திரவமாய்- திடமாக ஆக்க முடியாத பாடி
ஆடி ஆடி அகம் -பாடி பாடி–ஆசை-சங்கம் ஆனது–லோக விஷய நினைவு சங்கம் காமம் கோபம் ஆகும்நிலை மாறி-
-இதில் அவன் விஷயம் -சங்கம் அன்பை பிறப்பிக்க-ஆகார சுத்தி சத்வ சுத்தி இடைவிடாமல் நினைவு-குணாதி விஷயம் என்பதால் அன்பில் இன்பு உண்டு–பிரிதியே இனிமை–ரசிக்கும்-எப்படி பட்ட ரசம்-
ஈன தேறல் அமிர்த சமுத்ரம் கடைந்து எடுத்த அமிர்தம்–பாற் கடல் கடைந்த அமிர்தம் இல்லை-
கோது கழித்து சாறு இல்லை-அமுத கடல் கடைந்து –தள்ளுபடி இல்லை
-நடக்காத ஒன்றை தான் சொல்லி அவன் அனுபவம்-ஆனந்த மயம் -அனுபவம் ஆனந்த மயம் ஆக தானே இருக்கும்

-ரச சாகரம்–தடால் என்று ஆசை உடன் விழுந்து அனுபவிக்க –

நாம் ஒருவனே அனுபவிக்கும் படி கொடுப்பான் ஒரு கடலில் ஏகாங்கி போல்-
அமுத வெள்ளத்தில் இருப்பவன் ஆகிய சிறப்பை விட்டு—தர்ம அர்த்த காமம் மோஷம் -நான்கையும் விட்டு-
ஒரு பொருள்–அநாதரவு தோற்ற தள்ளினார்–அதுவும் சுலபம் இன்றி எத்தனம் பற்றே பெற வேண்டும் –
-ஆசை படுவார் கிலேச படட்டும் –கிலேச அதிகம் இருந்தாலும் நாட்டில் சிலர் விரும்பி இருக்கிறார்களே லோகத்தில் –
அறிவு கேடர் படி நான் சொல்வது இல்லை-திரு வோடு மருவிய ஐஸ்வர்யம் நிலை நின்று அனுபவிப்பதே வாழ்க்கை போக்தாவுக்கு சக்தியும் உண்டு அனுபவிக்க –
மிடுக்கை உடையவன்-திரை லோக்யமும் விஷயம் உள்ள ஐஸ்வர்யம் உலகம் மூன்றினோடு –
-நல் வீடு– வீடு-கைவல்யம் /நல் வீடு-பரம பத அனுபவம் -இவை வேண்டாம் என்கிறார் இதில் –
-எம் மா வீடு திறமும் செப்பம்-போல் –நின் செம் மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை அங்கு–
-கிடைக்க ஆசை மட்டும் இல்லை கிடைத்தாலும் சுவீகரிக்க –கொள்ளுவோம் இல்லை
-ஐஸ்வர்யம் அஸ்திரம் என்பதால் -ஆத்மா லாபம் பரிச்சின்னம் அளவு பட்டது
-பரம பதம்-வேறு உடம்பு கொண்டு வேறு தேசத்தில் அது-தேசாந்தரம் தேகாந்தரம் அனுபவம் அது
–பர பக்தி ஆதிகள் உடன் ஒவ்வாது இவை–ஆனாலும் சிலர் ஆசை பட-
தெள்ளியோர்-சார அசார விவேகம் இல்லாதவர்–பிரித்து அறிந்து கொள்வார்கள் -வேதார்த்த சங்கரகம்-
தெள்ளியோர் உணர்வார் எம்பெருமானார்-குறைவாக இருப்பார்கள்
தெள்ளியோர் –கூடும் ஆசை-அல்லது ஓன்று குறிப்பிலேன் திரு மழிசை ஆழ்வார்-
————————————————————————–
கீழில் பாட்டில்
திருமேனி வைஷண்யம் அனுபவித்து
அவன் திருவடிகளை சென்னியில் சூட வேணும் என்று இருப்பதே புருஷார்த்தம்
இத்தை விட்டு
உண்டியே உடையே உகந்து திரியும் இந்த மண்டலதவரோடு கூடாமல்
சாத்விகர்கள் -பரம பக்தர்களின் -அந்தரங்க உறுதியை பேசி மகிழ்கிறார்
இப்பாட்டில் –
திருச் சந்த விருத்தத்தில் -108-பாசுரம்
கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யள்ளதொன்று கொள்வனோ குறிப்பிலே –
அவனை கிட்டி அனுபவிப்பதை விட
எம்பெருமான் உடன் கூட வேண்டும் என்கிற
அனுபவிக்க மநோ ரதமே நித்யமாகச் செல்லுமாகில்
அதுவே சிறக்கும்-
தேனூறி
அனுபவ நிலையில் காட்டிலும்
அனுபவ பாரிப்பு நிலையே சிறந்தது என்றதாய்த்து –
ஆதியிலே உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றை வயிற்றிலே வைத்து ரஷித்து அருளியும்
வருகிற எம்பெருமான் திருவடிகளை நாம் சிரம் மேல் வைத்துக் கொள்ள ஆசை கொண்டு
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப்பண்டமாகி உருகி
மேன்மேலும் பர பக்தி பரம பக்திகள் தலை எடுத்து இருக்கும்
நிலைமையே தலை சிறந்தது
இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்
அப்படிப் பட்ட ஆவல் பூண்டு
என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்றும்
மாயோனை மனத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே -என்றும்
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே -என்றும்
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே -என்றும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு
பெரும் குழுவு கண்டு
யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே -என்றும்
போன்ற பாசுரங்களை வாய் வெருவிக் கொண்டு
இதுவே ஆனந்தமாக போது போக்க பிராப்தமாக இருக்க
இத்தை விட்டு
கூரை சோறு முதலிய அல்ப பலங்களை அபேஷித்து
அங்கும் இங்கும்
அலைந்து உழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்
ஒரு பொருட்கு அசைவோர் அசைக-
தெளிந்த ஞானம் உடையவர்கள் கீழ்ச் சொன்ன அமுத வெள்ளத்திலே ஊன்றி இருப்பார்கள்
திருவோடு மருவிய இயற்க்கை பெறினும்
மாயாப் பெரு விறல் பெறினும்
உலகம் மூன்று பெறினும்
நல்வீடு பெறினும்
தெள்ளியோர் குறிப்பு
இவற்றைக் கொள்வது எண்ணாது
கூடும் ஆசை அல்லது ஓன்று கொள்வனோ குறிப்பிலே -என்றபடி
எம்பெருமான் உடன் கூட வேணும் என்கிற ஆசை ஒன்றையே தெள்ளியார் குறிக் கொண்டு இருப்பார் -என்றவாறு
தெள்ளியார் -என்றது திரு மழிசைப் பிரான் போல்வாரை –
அவாவு ஆர் உயிர் உருகி யுக்க
நேரிய காதல் அன்பில் ஈன் தேறல்
அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்ற வரையில்
அவா காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் –
ஒரு பொருள் பன்மொழிகளை இணைத்து தொடுத்து
ஆதாரம் அளவற்று இருப்பதை காட்டி அருளுகிறார்
அவா ஆர் –-என்றும் பிரித்து –அவா நிரம்பிய -என்ற அர்த்தம் -ஒரு பொருட்கு அசைவோர் அசைக
வாக்காலே சொல்லவும் கூசி – ஒரு பொருட்கு -என்கிறார் ஆழ்வார்திருவோடு மருவிய இயற்க்கை
அஸ்த்ரமான ஐஸ்வர்யம் போலே இல்லாமல்
எப்போதும் ஸ்திரமாய் இருக்கக் கூடிய ஐஸ்வர்யம் பெற்றாலும் -என்கை
இத்தையும் தெள்ளியோர் விரும்பார் -மாயாப் பெரு விறல்
ஐஸ்வர்யம் அனுபவிக்க சக்தி வேண்டுமே
அதுவும் கிடைக்கப் பெற்றாலும் அதுவும் வேண்டா
மாயா -மாய்தலாவது -அழிதல் -அழியாத -என்றபடிஎம்மா வீட்டும் திறமும் செப்பம் -என்றும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி – என்றும்
வைகுண்ட வாஸோபி ந மேயிலாஷா -என்றும்
அந்த மோஷத்தையும் ஒரு பொருளாக மதியார்கள் இ றே-பகவத் விஷயத்தில் அனுராகம் மிகு இருப்பதே பிராப்தம்=தெள்ளியார் அனுபவம் இங்கேயே தானே
விண்ணுளாரிலும் சீரியர் இ றே

————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading