அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
————————————————————————–
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-
————————————————————————–
பரா-எதிரிகளை அங்குசம் -புற சமய வாதிகளை–தேசிகன்-ஆசார்யன்-
வெண்பா போல் ஆசிரிய பா -ஒரு வகை–அரு மறை-அரிய வேதம்-
காசினி-பூமி-தானே பிரகாசிக்கும் காசினி-
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் தனியனுக்கு –
மணி பிரவாளம்-முத்து பவளம்-ஹாரம் போல்-கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத காசினியோர்
ஆத்ம ஷேமம் பார்க்காமல்–கலி கோலாகலம் குறைக்க -யுவ வர்ண -கிரமம் படி உதித்தார்–ஆவிர்பூதம் ஆனார்-
உதயம்-சூர்யன்-வகுள பூஷண பாஸ்கரன் –அஞ்ஞானம் இருட்டு விலக்க –
கருத யுகம் பிராமண-தத்தாத்ரியன் — திரேதா -ஷத்ரியன்/ ராமன் //துவாபர -வைஸ்யன் -கண்ணன் -கலி -பராங்குசன்
லோகாந்தரத்தில் இருந்து வந்து உதித்தார் –
அவதரித்து செய்த கார்யம்–ஆசிரிய பா இனத்தில் -விஸ்தாரம்-புரியும் படி அரிய வேதத்தை விரித்து
அதுவே நிரூபகம் ஆகும் படி-விரித்தான்-என்கிறார்–தொண்டு வைத்தே அருள பாடு போல்..–வண் தமிழ் நூல் ஆக்கினார்—எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –மூன்று ஏற்றம்-ஆயிரம்/தமிழ்/இனிமை-
வேதார்த்த தரிசியான பராங்குச தேசிகன்-தன் துளவ தாரானை போல் வகுள தாரானை -கண்ணன் கழலினை ..திண்ணம் நாரணமே -சங்க பலகை ஏற்றி–
சங்க புலவர் –சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ
நாமம் பராங்குசனா நாரணனா-..தாமம் துளவமோ வகுளமோ
தோள்கள் இரண்டோ நான்கும் உளவோ பெருமாள் உனக்கு -என்ன கடவரே
பாவின் இன் இசை பாடி திரிவனே–மாசற்றார் மனது உளானை -வணங்கி நாம் இருப்பது அல்லால்–திரு மாலை-பாசுரம்
மனன் அகம் மலம் அற -தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –நிர்மல மனஸ்–ஆசை கொண்டு மனத்தில்வைக்க வேண்டும்
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான்-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே – மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி-
பரி விராஜர் பரம ஹம்சர் –நல்லது தீயது விலக்கி/ சரண் நடந்து காட்டி/பக்தர் ஹிருதய தாமரை அமர்ந்து—நாள் கமழ வகுள் மார்பினன்-
சுப ஆஸ்ர்யம் -மங்களமான புகல் இடம்-பவித்ரானாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..நம்மை திருத்த பாடி அருளினார் –வாழ்த்த வேண்டும்- ஆழ்வார் –திவ்ய மங்கள விக்ரகமே ச்வாப்ச்ராயம் —
————————————————————————–
அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
-திரு விருத்தத்தில் சொரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டை திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
-கர்மா பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
-சமோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-
உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
-நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–இது தாழ்ந்தது என்று அறிந்த ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-
அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1
————————————————————————–
திரு மேனி அழகை வர்ணிக்கிறார்-நேராக அருள சக்தி இல்லை ஆழ்வாருக்கு ..
உதாரணம் வேறு சொல்லி–மரகத பச்சை மலை வர்ணிக்கிறார்–
சொரூப ரூப குணங்கள் அடைவு-நேராக உருவம் அருளுகிறார்-
நேர் நேர் கொடு காண முடியாத படி முகத்தில் அலை எரிவதாலே –அச்சோ ஒருவர் அழிகிய வா–
கிண்ணகத்தில் இறங்குவார் போல-உபமானம் மூலம் அருள–ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–ஓர் அளவுக்கு உபமானம்–இழிகிறார் –
அதிலும் நேர் நேர் கொடு இன்றி-மரகத மலை உடன் சேர்த்து–சூர்யன் சந்திரன் சூட்டி ,பவளம் வைத்து சேர்த்து -நஷத்ரம் ஒட்டி.
.மேகம் கொண்டு கட்டி-செய்ய முடியாத ஒன்றை –சிஷ்டித்து கொண்டு இருக்கிறார்--ஒப்பனை பண்ணி
–உருவம் விட்டு உபமானம்-பச்சை மா மாலை போல் மேனி பவள வாய் கமல செம்கண் பாசுரம்-பாலின் நீர்மை பாசுரம்-
செக்கர்-சிவந்த மா பெரிய மேகம்-சந்த்யா வானம் உடன் சேர்ந்த மேகம் –இதை ஆடையாக உடுத்தி-
சூர்யனை தலையில் சூடி –சந்திரனை அணிந்து –தேஜஸ் உள்ள நஷத்ரம் புனைந்து
பவளம் போன்ற சிவப்பு -இடம்கள் செவ்வாய்-வாயை சொல்ல வில்லை-
இந்த மலை நடந்து போய் -வருண தேவன் கடல் மிசை -அலை திரை கையில்- கண் வளர -போல்-
கிரீடம் போல் சூர்யன்/மா முகில்-பீதாம்பரம் /திரு ஆபரணம் நஷத்ரம்-செவ்வாய் கண்கள் வாய் திரு கரங்கள் போல்வன -ஆதி சேஷனில் சாய்ந்தார்
பீதக ஆடை /முடி /பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வையவும் கண்ணவும் சிவப்ப –
–மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப -அலை வீசும் கடலுக்குள் அரவின் அமளி ஏறி-அறி துயில்-அறிவுடன்
-தூங்குவான் போல் யோகு செய்யும்–தெய்வ குழாங்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் –
தாமரை உந்தி தனி பெரு நாயகன் -தனி/பெரு நாயகன்–மூவடி அளந்தான் -சேவடி ஆனை கண்டவர்-ஆனை ஆனை என்னுமா போல் –
-உலகம் ஏத்தும் தென் ஆனாய்–அனுபவ ஜனித ப்ரீதி—பரபாக வர்ண கலவை-சொவ்குமார்யம்
சேர்ந்து குளிர்ந்த முகிலை வஸ்த்ரமாக கொண்டு–திவி சூர்ய சகஸ்ரச்ய -கீதை- கதிர் ஆயிரம் இரவி நீள் முடி-
–கிட்டேபோக முடியாத சூர்யன் போல் அன்றி-சீதளமாக அம் சுடர் மதியம்-பூர்ண சந்தரன்–தேய்ந்து வளராத சந்தரன்
-அபூத உபமானம் –பல சுடர் நஷத்ரம் பூண்டு–பல சிவந்த இடம் கொண்டு-மரகத மலை- வருண தேவன் கை- கடல் அலைகள்-
சாய்வது போல் சொல்லாமல்-கண் வளருவது போல்—உவமானமே கண்வளர்வது-திரு மலை நம்பி-எம்பெருமானார்
-பொன்னால் ஆகிய தோடு கூட போட முடியாத காது கொண்டவர் அடையாளம் போல்--மேதகு-உயர்ந்த -ஸ்வரூப அநுரூப மேவி தகுந்த
நட்ஷத்ரம்-அணிகலன் -குளிர்ந்து பளிச்ச் என்று -நூபுராதி-ஆதி சப்தம் அபரிமத திவ்ய பூஷணம்-சூடகமே -என்று அனைய பல்கலனும்..
சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப– இரண்டு -செவ்வாய் =சிவந்த இடங்கள்-என்று முன்பு அருளி–
ஒளி உமிழ்ந்து -மீதிட்டு- இடித்து மோதி மிக பதைப்ப –சுட்டு உரைத்த பொன் மேனி நின் திரு மேனி ஒளி ஒவ்வாது —
-மீது இட்டு-தள்ளி விட்டு-நச்சு வினை-மது கைடபர் விரோதிகளை நச்சு மூச்சால் -உமிழ்ந்த செம் தீ -பல தலைகளை உடைத்தாய்-
ஸ்வ ஸ்பர்சத்தால் பணைத்த -சிந்தாமணி -கக்கி-பெருமாள் திரு மேனி பட்டு ஆனந்தத்தால் பெருத்து–விகசித்து-
பிரஜை மடியில் வைத்த தாய் போல்–அனந்தாழ்வான் திரு கோஷ்டியூர் நடந்த இடத்தில்- பட்டரை மடியில் கொண்டு ஆதரவுடன்–பார்த்து
-முன் குழந்தை-பெருமாள் திரு மஞ்சன நீரை -ரெங்க ராஜா கமலா லாலி–மெய் நொந்து பெத்த பிள்ளை போல் அரவு பார்த்து இருந்தது போல் அமளி-
பஞ்ச சயனம் -மென்மை வெளுத்து வாசனை குளிர்ந்து விசாலம்–ஏறி-தன பேறாக -பெரிய ஆதரவுடன்–கைங்கர்யம் பெற்ற ஆனந்தம்-
-இவனுக்கு -கைங்கர்யம் செய்யும் ஆனந்தம்-ஆறு கால் திரு சிவிகை-எழுந்து அருளும் பொழுது 16 பேர் எழுந்து அருள பிராட்டி மார் உடன்-நம் பெருமாள்
-அலை ஆர்பரிக்கும் கடல்-பெருமாள் இருப்பதால்-நித்தரை பொழுதும் ஞானம்-அறி துயில்- உறங்குவான் போல் யோகு செய்யும் —
கண் மூடி இருக்கும் பொழுதும் பிரகாசம்–பிரசித்த தேவர் அனைவரும் பிரம்மாதி தேவர்-இறுமாப்பு புகட்டி
–அபிமான பங்கமாய் சாய்ந்து இருந்த அழகில் அடிமை சாசனம் எழுதி கொடுப்பார்கள்-கிடந்த -ஒன்றே அவன் செயல்-
கொக்கு கூட்டம் கடல் கரையில் இருந்தால் கடல் அசையாதே ஏக ரூபமாய் -ஐஸ்வர்ய செருக்கால்-விகாரம் இன்றி–
ஜகத் உத்பத்தி காரணம் ஆன உந்தி தாமரை —தனி பெரு நாயக-அவ் வருகு இல்லை-ஒப்பிலா அப்பன் -பொன் அப்பன் மணி அப்பன் என் அப்பன்
-அத்வீதிய நாயகம்-மற்றவர் உபசார வார்த்தை-வேண்டியதை கேட்டு வாங்குவார் வரம் கொடுத்து கஷ்டம் படும் பொழுது-பெரு நாயகன்-
தனக்கு ஒரு நாயகன் இன்றி -நிமித்த உபபாதன சக கார்யம் அவனே–தனி/பெரு நாயகன்–வேர் முதல் வித்தாய்-
அவர்கள் இருந்த இடத்தில் சென்று அனுபவிக்க பண்ணும்-திரு விக்ரமன்-தலை தீண்டி-இழந்த இழவை–
கொள்ள வந்த திரு அடி இல்லை-செவ்வடி- அழகுக்கு -காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத அழகன்-அழகையும் குணங்களையும் அனுபவித்தார் இத்தால்
————————————————————————–
செக்கர் மா முகில் –
கீழ் திருவிருத்தம் முதல் பாசுரத்தில் -அழுக்கு உடம்பு -தன உடம்பை பற்றி பேசி
இங்கு எம்பெருமான் திரு மேனி வை லஷண்யத்தை-
அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பிராக்ருத வஸ்துக்களில் ஒன்றை உபமானமாக சொல்வது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -என்றபடியே
அவத்யமேயாயினும்
உபமானத்தை இட்டு அனுபவித்து தீர வேண்டியும்
வேதாந்தங்களிலும் அப்படியே சொல்லி இருப்பதாலும்
ஆழ்வார் அப்படியே அருளிச் செய்கிறார்– உவமை -பிரசித்த உவமை அபூத உவமை இரண்டு வகை உண்டே
இல்பொருள் உவமை
மரகத பச்சையான மலை –
செந்நிறமான மேகத்தை பீதக வாடையாக உடுத்திக் கொண்டு –
செக்கர் -சிகப்பு நிறத்துக்கும் செவ்வானத்துக்கும்
மேகங்கள் மலையிலே படியுமே –
கிரீடத்தின் ஸ்தானத்திலே சூர்யனை அணிந்து கொண்டு
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் –
மிக்க செஞ்சுடர் பரிதி சூடி
முத்துவடம் சந்திர ஹாரம் போன்ற திரு ஆபரணங்கள் ஸ்தானத்தில் நஷத்ரங்களை புணைந்து
தேஜஸ் சமூஹம் -பல சுடர் –
மேதகு -மேவத்தகு -திரு மேனிக்குப் பொருந்தித் தக்கின –
மெய் தகு -என்றும் பாடம்
மெய் -திரு மேனி அதற்குத் தக்க
திரு அதரம் திருக்கண்கள் -ஸ்தானத்தில் பவள மயமான பிரதேசங்கள் –
பவளச் செவ்வாய் –
மலையிலே பல இடங்களிலே பவளம் உண்டே
பவளவாய் கமலச் செங்கண்-
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே-
பவளத்தால் சிவந்து இருக்குமே –
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் –
பசுமை நீலம் கருமை
காளமேக திரு உருவம் -மரகத குன்றம்
கண்ணையும் நெஞ்சையும் குளிர வைத்து
தாபத் த்ரயங்களை ஆற்ற வல்ல -திகழ் பசுஞ்சோதி மரகதம் –இவற்றுடன் கடலிலே பள்ளி கொண்டு அருளுமா போலே-
கீழ் திருவிருத்தம் முதல் பாசுரத்தில் -அழுக்கு உடம்பு -தன உடம்பை பற்றி பேசி
இங்கு எம்பெருமான் திரு மேனி வை லஷண்யத்தை-
அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பிராக்ருத வஸ்துக்களில் ஒன்றை உபமானமாக சொல்வது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -என்றபடியே
அவத்யமேயாயினும்
உபமானத்தை இட்டு அனுபவித்து தீர வேண்டியும்
வேதாந்தங்களிலும் அப்படியே சொல்லி இருப்பதாலும்
ஆழ்வார் அப்படியே அருளிச் செய்கிறார்– உவமை -பிரசித்த உவமை அபூத உவமை இரண்டு வகை உண்டே
இல்பொருள் உவமை
மரகத பச்சையான மலை –
செந்நிறமான மேகத்தை பீதக வாடையாக உடுத்திக் கொண்டு –
செக்கர் -சிகப்பு நிறத்துக்கும் செவ்வானத்துக்கும்
மேகங்கள் மலையிலே படியுமே –
கிரீடத்தின் ஸ்தானத்திலே சூர்யனை அணிந்து கொண்டு
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் –
மிக்க செஞ்சுடர் பரிதி சூடி
முத்துவடம் சந்திர ஹாரம் போன்ற திரு ஆபரணங்கள் ஸ்தானத்தில் நஷத்ரங்களை புணைந்து
தேஜஸ் சமூஹம் -பல சுடர் –
மேதகு -மேவத்தகு -திரு மேனிக்குப் பொருந்தித் தக்கின –
மெய் தகு -என்றும் பாடம்
மெய் -திரு மேனி அதற்குத் தக்க
திரு அதரம் திருக்கண்கள் -ஸ்தானத்தில் பவள மயமான பிரதேசங்கள் –
பவளச் செவ்வாய் –
மலையிலே பல இடங்களிலே பவளம் உண்டே
பவளவாய் கமலச் செங்கண்-
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே-
பவளத்தால் சிவந்து இருக்குமே –
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் –
பசுமை நீலம் கருமை
காளமேக திரு உருவம் -மரகத குன்றம்
கண்ணையும் நெஞ்சையும் குளிர வைத்து
தாபத் த்ரயங்களை ஆற்ற வல்ல -திகழ் பசுஞ்சோதி மரகதம் –இவற்றுடன் கடலிலே பள்ளி கொண்டு அருளுமா போலே-
மீதிட்டு பச்சை மேனி மிகப் பகைப்ப –
பீதக வாடை
திரு அபிஷேகம்
திவ்ய பூஷணங்கள்
திவ்ய அவயவங்கள்
இவற்றின் சோதி வெவேற நிறமாக இருந்தாலும்
திருமேனியின் நிறமாகிய பாசின் நீர்மை -பச்சை நிறமே
போட்டி போன்று வென்று விளங்குகின்றனவாம்
மேனி -உடலுக்கும் நிறத்துக்கும் பெயர்
மீதிட்டு மிகப் பகைப்ப -மிகப் பகைத்து மீதிட -விகுதி மாற்றி கூட்டி உரைக்கலாம்
மீதிடுதல் -வெற்றி பெறுதல்
மேலே பள்ளி கொள்ளும் அழகை பாடி அருளுகிறார் –
ஷீர சாகர மத்தியிலே திரு வநந்த ஆழ்வான் மடியிலே சாய்ந்து அருளி
சிவன் பிரமன் இந்த்ராதி தேவர்களால் தொழப் படுமவனே
தாமரை பூத்த திரு நாபியை உடைய சர்வேஸ்வரனே
மாவலி இடம் நீர் ஏற்று உலகு அளந்து அருளினவனே
ஜய விஜயீ பவ –
அழகிலே ஈடு பட்டு வினை முற்று உடன் முடிக்காமல்
மூவுலகு அளந்த சேவடியோயே
கவர்தலை -கப்பு விட்டு கிளர்கின்ற தலையை உடைய -பல பல தலைகளை உடைய
அமளி -படுக்கை
அறிதுயில் யோக நித்தரை
சேவடியாய் -சேவடியோன்-என்பதன் விளி –
பீதக வாடை
திரு அபிஷேகம்
திவ்ய பூஷணங்கள்
திவ்ய அவயவங்கள்
இவற்றின் சோதி வெவேற நிறமாக இருந்தாலும்
திருமேனியின் நிறமாகிய பாசின் நீர்மை -பச்சை நிறமே
போட்டி போன்று வென்று விளங்குகின்றனவாம்
மேனி -உடலுக்கும் நிறத்துக்கும் பெயர்
மீதிட்டு மிகப் பகைப்ப -மிகப் பகைத்து மீதிட -விகுதி மாற்றி கூட்டி உரைக்கலாம்
மீதிடுதல் -வெற்றி பெறுதல்
மேலே பள்ளி கொள்ளும் அழகை பாடி அருளுகிறார் –
ஷீர சாகர மத்தியிலே திரு வநந்த ஆழ்வான் மடியிலே சாய்ந்து அருளி
சிவன் பிரமன் இந்த்ராதி தேவர்களால் தொழப் படுமவனே
தாமரை பூத்த திரு நாபியை உடைய சர்வேஸ்வரனே
மாவலி இடம் நீர் ஏற்று உலகு அளந்து அருளினவனே
ஜய விஜயீ பவ –
அழகிலே ஈடு பட்டு வினை முற்று உடன் முடிக்காமல்
மூவுலகு அளந்த சேவடியோயே
கவர்தலை -கப்பு விட்டு கிளர்கின்ற தலையை உடைய -பல பல தலைகளை உடைய
அமளி -படுக்கை
அறிதுயில் யோக நித்தரை
சேவடியாய் -சேவடியோன்-என்பதன் விளி –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply