நம் ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ வைகுண்டம் பரத்வம் ஈடு பாடு முதல் ஆழ்வாருக்கு –நம் ஆழ்வாரும் பெரி ஆழ்வாரும் ஆண்டாளும் கிருஷ்ண அவதாரம் ஈடு பாடு குலசேகரர் ஸ்ரீ ராமனின் மீது ஈடு பாடு  திரு மழிசை ஆழ்வார் அந்தர் யாமியில் ஈடு பாடு–தொண்டர் அடி பொடி ஆழ்வாரும் திரு பாண் ஆழ்வாரும் திரு அரங்கத்தில் ஈடு பட்டு திரு மங்கை ஆழ்வார் அர்ச்சைகள் பலவற்றிலும் ஈடு பட்டார் —

ஆவணி ரோகிணி -பெரிய வாச்சான் பிள்ளையும் ஆவணி ரோகிணி –அவர் அனுபவித்த விதம் பார்ப்போம்..கண்ணனே கண்ணனை அனுபவித்தது போல்

பரிய வேண்டிய படி -எளிமை இவனுக்கு -சம்ப்ராந்தகன் பிதா ராமனுக்கு -தமிகள் அனைவரும் தனி சைன்யம் ராமனுக்கு–ராமோ ராமோ என்று இருக்கும் அயோதியை-பேதிக்க முடியாத தேசம்–மரம் செடி கொடி கூட ராமன் –ஆவும் அழுத அதன் கன்றும் அழுத -ஸ்ரீ ராமன் காட்டுக்கு போனதும் நந்த கோபாலன் வெளுத்தது எல்லாம் பால் -பல ராமன் சாத்விகர்-தீர்த்த யாத்ரை போனார் யுத்தம் பொழுது -பீமன்-துரியோதரன்-தவறான யுத்தம்–விழாம் பழம் மருத மரமும் அசுரர் இங்கு கன்று குட்டி வட்சாசுரன்..-அதனால் பரிந்தார்கள்
ஸவாமி தாச பாவம் திரு மங்கை ஆழ்வார்— அடி நாயேன் நினைந்திட்டேனே–அடிமை தனத்தை வளர்த்தான் –அரசனாக இருக்க அடிமை தனம்

ஆண்டாள் பார்த்தா பார்யை பாவம் –
பெரி ஆழ்வார் தாய்-சேய் பாவம் –
நம் ஆழ்வார்–வகுள பூஷண பாஸ்கரர் -ஆழ்வார் கண்ணன் அனுபவித்ததை விட -கண்ணன் இவரை எப்படி அனுபவித்தான் என்று முதலில் பார்ப்போம் இன்று-ஆழ்வாரை ஆசைப் பட்டான்–ஆழ்வார் திரு மேனியை ஆசை பட்டான் –கலியுகம் தொடங்கி 42 நாளில் ஆழ்வார் தோன்ற -கீதை 38 வருஷம் முன்-காந்தாரி சாபம் -தன உடை ஜோதிக்கு -எழுந்து அருளினான்–கடல் கொண்டு விட்டது துவாபர யுகம் முடிவில்-கண்ணன் -வாசு தேவ சர்வமிதி மகாத்மா துர் லபம்–கீதையில் அருள -ஆழ்வார் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-என்கிறார்..அர்ஜுனன் யுத்தம் முடிந்து திரு அடியில் சரண் என்று சொல்லாமல்-நாட்டை ஆள்வது பலன் இல்லை என்று சொல்ல வில்லையே –வருத்தப் படும் அவதாரம் கண்ணன்-யாரும் கை கொடுக்க வில்லை-அங்கு குரங்கு கூட்டம் கரடி உதவிக்கு வந்தது–கோகுலம் இடைச்சி அனுபவம் திரும்ப வர வில்லை சாந்தீபன் இடம் கற்றான் மீண்டும் தொடர்பு இல்லை ராமன் வசிஷ்டர் விஸ்வாமித்ரர் முதல் கடைசி வரை வந்தார்கள் –சடகோபன்-16 வருஷம் பிறந்து வாய் திறக்க வில்லை-தவழ்ந்து போய் திரு புழி மரம் அடியில் சென்று அமர்ந்தார் -ஜோதிஸ் இழுக்க மதுர கவி ஆழ்வார் வர -செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்-அத்தை தின்று அங்கெ கிடக்கும் பதில் -ஜீவாத்மா ஞான சூன்யம் போல் இருக்க -சிறிய ஞானம் பெற்றால் எதை வழியாக கொண்டு எதை அடைந்து அனுபவிக்கும்.. பகவானின் திரு அடிகளை பற்றி -இதுவே உபாயம் -அதையே அனுபவித்து கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்கும் -இதுவே புருஷார்த்தம் ஆறும் பேரும் -உபாய உபேயம் -வழியும் சேரும் இடமும்..-

அ காரத்தில் தொடங்கி-சமஸ்த சப்த வாசகம்-கண்ணன் திரு அடியே உபாயம்-
ஞானத்தால் மோஷம் சாஸ்திரம்-பக்தியால் மோஷம்கீதை-ஞானம் முற்றி பக்தி-கிருஷ்ண பக்தியால் மோஷம் -ஆழ்வார் திரு வாய் மொழி
10-5 -1 கண்ணன் கழிலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -சத்யம் சத்யம் சத்யம் ந தெய்வம் கேசவாத் பரம்–மனம் உடையீர்-நிதி உடையீர் போல் அழைக்கிறார்-சங்க பலகையில் கூடல் மா நகரத்தில் ஏற்றி மற்ற பாசுரம் தள்ளி-சேமம் குருகையோ–
ஐந்து சரணாகதி – திருக்  குடந்தை  இறுதியில் ஆழ்வார் – கழல் கள் அவையே சரணாக கொண்ட குருகூர் சடகோபன்
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே –பாத்ரம்-கை கலந்து இடது வலது கை கலந்து -களவில் உதவியர் உடன் கலந்து
கரு மலர் கூந்தல் –ஒருத்தி -மருவி மனம் வைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை-குலசேகரர்-
வெண்ணெய் இலும் ஆழ்வார் இடமும் போய் கலவாது இருந்தான்– ஆழ்வாருக்கு தியாஜ்யம் ஆன சரீரம் கிடீர் இவனுக்கு போக்கியம் -இனி யாம் உறாமை இனி–ஆள் கொள்வான் ஒத்து என் உயர் உண்ட மாயன்..–நாயகியின் உடம்பின் அழுக்கை காதலிக்கும் நாயகன் போல்–வாசு தேவம் சர்வம் இதி துர் லபம்- – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம்கண்ணன் ..எம்பெருமான் என்று என்றே கண்ணில் நீர் மல்கி –திரு கோளூர் வைத்த மா நிதி பெருமாள்–தாரகம் போஷகம் போக்கியம் அனைத்தும் கண்ணனே ஆழ்வாருக்கு- மாம் பழம்பெருமை அறிந்து கிடைக்காத ஓன்று கிடைத்து – காத்து இருந்து கிடைத்து  கீழே விழுந்தது போல் -பாவியேன் பாலில் பட்டு தெறிப்பதே -திரு குருகை பிரான் பிள்ளான் -எம்பெருமானாரின் அபிமானபுத்திரன் -ஞானியை விக்ரகத்தோடு ஆதரிப்பார் வேர் சூடுபவர்கள் மண் பற்று கழற்றாமல் போல்—- ஞானம் பக்தி வைராக்கியம் வளர்ந்து இருக்கும் சரீரம் என்று -வாரி கொண்டு அவனை கொள்ள வந்த என்னை -என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் –திண்ணம் என் இள மான் போகும் ஊர் திரு கொளூரே –கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்– கிருஷ்ண -காதல் காமம் பக்தி வடிவு எடுத்தவர் அவனுக்கு ஏதோ ஒரு -பாவம் இல்லை– தன்மையி பாவம் ஆழ்வார்..தர்ம தரமி ஐக்கியம்-இவரே கிருஷ்ண பக்தி

இவையும் அவையும் பதிகம்-ஆழ்வார் திரு மேனியில் இருக்க ஆசை அவனுக்கு-முக்தி தா  ஸ்ரீ வைகுண்ட எகா தசி -அத்யயன உத்சவம்-ஆழ்வார் திரு அடி தொழுதல் எல்லா திவ்ய தேசங்களிலும்–௨௦த் நாள் நடக்கும்..துளசி போட்டு மூடி நம் ஆல்வாரைதந்து அருள வேண்டும் -தந்தோம் தந்தோம் தந்தோம்–ஆழ்வார் திரு நகரி திரு முடி சேவை– நம் ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரான் 2 அடி மாறி மாறி நடந்து பொலிந்து நின்ற பிரானை ஆழ்வார் திரு முடியில் வைத்து சேவை–பிடிக்க மெதுவாக நெருங்கி-காலில் இடுப்பில் மார்பில் தோள்களை-தலையில்—சூழல்  உளானே–அருகில் உளானே ஒக்கல் லில் உளானே –நெற்றி  உளானே -உச்சி உளானே -உச்சி உள்ளே நிற்கும் தேவ தேவன் கண்ண பிரானுக்கு  -இறுதி பாசுரம் கண்ண பிரானுக்கு ஆழ்வார் திரு மேனியில் காதல் அறிகிறோம்

திண்ணன் வீடு -முதல் முழுதுமாய்-ஸ்ரீ வைகுண்டம் தொடங்கி எண்ணின் மீதிய எம்பிரான் =கல்யாண குணங்கள் முழுவதும் நிரம்பிய -மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட கண்ணன் நம் கண்ணன் – நம் கண்ணன் கண் அல்லது  இல்லாதோர் கண்ணே — படைத்து காத்து அளித்து அனைத்தும் நாராயணன் இல்லை -கண்ணன்- தானே – வையம் எழும் கண்டால் பிள்ளை வாயுளே –கண்ணன் =கண்ணை படைத்தவன் தாமரை கண்ணன் ஈறிதியாலோ-அழகு /ரட்ஷகன்–பீலி கண் மற்றவர்கள் கண்–எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து – இங்கு இல்லையால் -என்சிங்க பெருமான் சீர்மை–கண்ணன் எல்லா அவதாரத்துக்கும் பொது/புராண வாக்கியம்-மனசை பிடித்து கொண்டு கிருஷ்னே பிரகலாதன் நீங்காத காதல் -வியாபிப்பவன் நானே கண்ணன்-கீதை-அதனால் தான் எங்கும் உளன் கண்ணன் –வியாபகன் நீக்கம் அற நிறைந்து இருப்பவன் கண்ணன்
மொய்ம் மா பூம் பொழில் பொய்கை-முதலை சிறைப் பட்டு நின்ற கைமா -கஜேந்த்திரன்-வெள்கி நிற்ப-அருள் செய்த கார் முகி போல் வண்ணன் கண்ணன் -சந்தான கரணி விசேஷ கரணி-வேது கொண்டு -இப்படி எளியவன் கண்ணன் தானே என்கிறார் ஆழ்வார் —
நின்னோடும் ஐவர் ஆனோம்-குகன் சுக்ரீவன் விபீஷணன் வேடர்  தலைவன்/குரங்கு கூட்ட தலைவன்-ராட்ஷச தலைவன் ராஜா கை தானே பிடித்தான் ஊனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தாய் கோவிந்தா -ராம  பால லீலை–எதை சொன்னாலும் கண்ணன் சொல்வதில் ஆசை/ ராமன் செய்து இருக்க மாட்டான் இதையும் கண்ணன் தான் என்கிறார் ஆழ்வார் -போம் பழி எல்லாம் அமணன் தலையில் போம் ஈர சுவர்/சிற்றாள் /குயவன் கொடுத்த பானை பெரிசு/வேசி நடக்க /துணி வெளுக்கு /வண்ணான்/பிட்சு தபஸ் பண்ண போகிற வரை காத்து இருக்க /வாயை திறவாமல் இருக்க -செய்ய தாமரை கண்ண னாய்–அர்ச்சா சௌலப்யம்–கூறும் திருவாய் மொழி பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூளை கலத்தானாய்-அன்று தேர் கடவிய பெருமான் கணை கழல் காண்பது என் கொலோ-அடுத்த திரு வாய் மொழி–கண்ணன் தோஷம் கொண்டே உலகம் ஜெயித்தான் ராமன் குணம் கொண்டு -கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட மாயன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே -மாசறு ஜோதி 5-3 திரு வாய் மொழி-மடல் எடுக்கிறார்..–

ராவணன் மாரீசன் அப்ரேமேயச்ய-ராம வைபவம் சொல்கிறான் ராவணன்-விரோதிகள் எல்லோரும் பாடி தாரை மண்டோதரி சூர்பனகை வாலி/எத்தனை குணம் இருந்தாலும் என் உடம்பு ராமனை நோக்கி விழாது நேராக விழுந்தால் ராமன் காலில் விழுந்து போல் கொள்வான்-எத்தனை குணம் இருந்தாலும் மனம் செல்லாது -ஆழ்வார் எத்தனை தோஷம் இருந்தாலும் அவனை விட போகாது உய்யா புகும் ஆறு அவன் கழல் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறார் ஆழ்வார்
கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் -புகழும் நல் ஒருவன் என்கோ-எல்லாம் அவனாய் இருக்க –

கண்ணன் என்று தெரிந்து கொண்டார்-புரிந்து கொண்டார் இது மட்டும்–
ஆய்ச்சி வெண்ணெய் கானில் அவன் உண்ட வெண்ணெய் இது என்னும்–கூத்தர் குடம் எடுத்துஆடில் கண்ணன் கூத்து என்பர்-ஏறிய பித்தினோடு-
தோஷம் எத்தனை இருந்தாலும் ஆழ்வாரை உடல் உகப்பான் கண்ணன்–
பர கத ச்வீகாரம் அருளி காட்டினார் ஆழ்வார்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading