கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை..
முந்நீர்- முதலில் அப்பு –பிருத்வி முன் -மூன்று நீர் ஆற்று ஊற்று வேற்று நீர் –முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -வாசி இன்றி அனைவருக்கும் பொழியும் முகில் போல் —
படகையும் துடுப்பையும் கொடுத்தான்-போகிற வழியில் போக வெள்ளத்தில் முழுகுவது போல் –சம்சாரம் அழுந்தி -நோவு பட -கிலேச பாஜனம் -கோரம்-உடல் இந்த்ரியம் மனசு கொடுத்தான் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க —
சாஸ்திரம் அறிந்து ஞானம் பெற -ஞானம் இருந்தால் தானே சாஸ்திரம் படிப்பான்-பிரதீபமான விளக்கு போன்ற கலைகள் சாஸ்திரம்..-
முக்தர் நித்யர் -விட சம்சாரிகள் பக்கல் கவலை கொண்டு -உண்டது உருக்காட்டாதே — தேசாந்தரம் இருக்கும் புத்திரன் பக்கலில் பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே —
கண் காண நிற்கில் ஆளை விட்டு துரத்துவார் என்று அந்தர்யாமியாக இருந்து –சோதி வெள்ளத்தில் இருக்கும் ஒளி வெள்ளம் பரம பதம் வெறுத்து கால் கடை கொண்டு-களேபரம்-ஒழுங்கு முறை இன்றி இருக்கும் –உள்ளது வெளியானால் காக்காய் கொத்தும்
தாய் மருந்து முலைப் பால் வழியாக கொடுப்பது போல் –உபதேசம் புரியாமல் அனுஷ்டித்து காட்ட -அவதாரம்..கடி தின்னாரை கட்டில் இட்டு கொடுப்பது போல்- சக்கரை கட்டி மூடிமருந்து கொடுப்பது போல் – தாய் ஒக்க குதித்து குழந்தை காப்பது போல் குதித்தான் -அவ =கீழே தாரம் -வருகிறான் ..-குதித்த இடம்-பாட்டு கேட்க்கும் இடம் கூப்பிடு கேட்க்கும் இடம் ஊட்டும் இடம் வளைத்த இடம் ..–ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக உடைய ஆச்சார்யர்-ஞானத்தால் திருத்த முடியாத சிஷ்யனை அனுஷ்டானம்மூலம் நிலை நிறுத்துவார் ஆச்சார்யர்..ஆச்சர்ய பரம்பரை முதல் ஸ்தானம்..கொண்டான் அவனும்..பஞ்ச தந்திர கதை- விஷ்ணு தர்மா வந்து -கதை மூலம் பாடம் சொல்வான்-மித்ர பேதம்-எருதுகள் -சிங்கம்–கற்று கொண்டது என்ன -ஓன்று பட்டால் உண்டு வாழ்வு-ராஜ நீதி கற்று கொடுக்க -இதி காச புராணங்கள் கதை வழியாக சாஸ்திரம் கற்று கொடுகின்றன ..வேதம் பிரதம பிரமாணம் ..-புராண பிரவசனம் சொல்லி புரிய வைப்பார்கள் -வேத வேதாந்தம் ஏகாந்தமாக ரகசியம் ஆசை ஊட்டிய பின்பு ..சைதன்ய மகா பிரபு அவதார தினம் மாசி மகம் அன்று கிருஷ்ண அவதார வைபவம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ பாகவதம் -ஹரி வம்சம் -நாராயண கதா தொடக்கி -கங்கா காங்கேயன் சொல்லி மகா பாரதம் -எச்சில் வாய்-பிராய சித்தம் ஹரி வம்சம் பூர்த்தியாக கிருஷ்ண வைபவம் –
ஆழ்வார்கள் அருளி செயல் வியாக்யானம் ஸ்தோத்ர ஸ்ரீ சுக்திகள் கொண்டு பார்ப்போம்–அவதாரம் எண்ணிக்கை இல்லை–தசா அவதாரம்-தசா =அழகு அத்புதம் அற்புதம் -நிறைய அவதாரங்கள் உண்டு..மீனோடு ஆமை கேழல் அரி குறள் முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய் –கல்கியும் ஆனான் தன்னை–பூர்ண அவதாரம்-ஆவேச அவதாரம்..-சக்தி ஆவேச அவதாரம்–மனிசராய் பிறந்து படாதன பட்டு அளந்திட்ட தூணை அவன் தட்ட -ஆவிர்பவித்து -அஜாய மானாக -மாதா மகித்வம்-கம்பம் பாட்டி ஆக வைத்தான்..பிரம்மாவுக்கு குறை தகப்பன் மட்டும் என்று இருக்க -அதை மீட்டு கொடுத்தான் –11000 வருஷம் பெருமாள் தசரதன் 60000 வருஷம் இருக்க -இருக்க பிரம்மா விட வில்லை..அனைவரையும் வைகுந்தம் புக வைத்தான் –
கண்ணன் 100 வருஷம்-துவாபர யுகம் கடைசி– கலியை தொட்டு கொண்டு இருந்த காலம்..இருந்தாலும் செஷ்டிதங்கள் பல ..அவாப்த சமஸ்த காமன் -அவதரித்து சாதிக்க வேண்டியது இல்லை சத்ய சங்கல்பன் –சர்வக்ஜன் –பகவான்சக்தி ஞான பல வீர்யம் தேஜஸ் ஐஸ்வர்யம் போன்ற ஆறு குணங்கள் நிறைந்தவன்–கடந்து உள்ளே இருப்பவன் கடவுள்..பரித் ராணாயா சாதூனாம் -சம்பவாமி யுகே யுகே –அவதரித்து பண்ண வேண்டுமா –தர்மம் நிலை நாட்டுவது கெட்டவர்களை அழித்து நல்லவர்களை காத்தல்-ஒரே பிரயோஜனம் சொன்னால் போதுமே -விநாசாய துஷ்க்ருதாம் மட்டும் சொன்னால் போதுமே –நம் பல ஆத்மா அபகரித்து 1000 இராவணன் போல் இருக்கிறோம்..–கருதும் இடம் சென்று பொருதும் சக்கரம்-உண்டே–கீழ் உலகில் அசுரர்களை கிளர்ந்து இருந்து பெயராமல் சக்கரத் தாழ்வான் முடிப்பான்–பாணம் கொண்டு பெருமாள் சமுத்திர ராஜன் விரோதி முடித்தார்ர்சன் சுதர்சன்அம்சம் தானே பாணம் -ஹேதி ராஜன்–சங்கல்பத்தலோ ஆயுதம் கொண்டே முடிக்கலாம் –அடைய வேண்டியது ஒன்றும் இல்லை-கூரத் ஆழ்வான்-சங்கல்ப்பத்தாலே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கரித்து பண்ணி -பகுசயாம்-நினைத்து முடிகிறாய்–திர்யக்-போல கூட அவதரித்து–ஆஸ்ரித ரட்ஷனம் –கலந்து பரிமாறுவது ஒன்றே பிரயோஜனம் தழுவி முழுசி பரிமாறுதல்–கீதா பாஷ்யத்திலும் -ஸ்வாமி சாது ரட்ஷனம் -ஒரு நாள் காண வாரா–கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி அடியேன் பால் வாராய் — கொடியேன் பால் வாராய் –கதறுகிறார் ஆழ்வார்–சாது பரித்ராணம்–த்ராணம் இல்லை பரி நன்றாக காத்தல் –உயிர் வாழும் வஸ்து கொடுப்பது மட்டும் இல்லை–சாது-திவ்ய சேஷ்டிதம் காண கல்யாண குணம் அனுபவம் நொடி பொழுதும் பிரியாமல் -பிரிந்தால் பிராணன் போகும் படி துக்கித்து இருப்பவர் தான் சாது அந்தர் அதிகரணம் ஸ்ரீ பாஷ்யம்- மீண்டும் -ச அதுவும் -ச காரம்-விநாசாய ச காரம் சேர்த்து -சாது பரித்ராணமே முக்கய காரணம்–துஷ்டர்களை அழிக்கவும்–துஷ்டானாம்- சொல்ல வில்லை–துஷ் கருத்தாம் தீய செயல்களை செய்பவர்–என்கிறார்–தீய செயல்களைஅளிக்க பார்கிறான் திரு த்தி பனி செய்ய பார்ப்பான்–ராவணனை நிறைய உபதேசம் பண்ணி பார்த்தும் -திருந்தாமல் இருந்த தால் தானே -அழிக்க விரும்பாமல் இருந்த காரணத்தால் தானே அம்பை கடல் கரையில் இருந்து விட முடிய வில்லை–வலிமை உணர்ந்து கம்சன் திருந்துவான் என்று கண்ணனும் பார்த்தான் –துஷ் கருத் விநாசனம்-கிருத்யத்தை நாசம் –தர்மம்-இவனே —ராமோ விக்ரவான் தர்மா கிருஷ்ணன் தர்மம் சனாதனம் ..சாஷாத் தர்மம் தானே என்கிறது –சர்வ தர்மான் பரித் யஜ்ய -மாம் ஏகம்-அவனை பற்ற சொன்னான் –தன்னை நிலை நிறுத்த அவதாரம்–கல்யாண குணம் கண்டு அனுபவிக்க -எட்டு சுரைக்காய் போல் இல்லை– அழுத நோக்கும் அஞ்சும் நோக்கும் காண கொடுப்பான்–இது தான் தர்மம் சமஸ்தானம் –பூ பாரம் -மண்ணின் பாரம் நீக்க தான் வட மதுரை பிறந்தான் நீசனான நம்மையும் வாழ்விக்க -அனைவர் கண் களுக்கும் இலக்காக்கி கொண்டு வந்தான் –அக்ரூரர் மாலா காரர் விதுரர் போன்றோருக்கு–அவஜானந்தி மாம் மூடாக -அவமானம் படுத்து கிறார்கள்- மேன்மை அறியாமல் –நம்மை சொன்னான் –ராவண சைன்யம் துரி யோதன சைன்யம் இருந்து இருப்போம்–அன்று அறிந்து கொள்ளாத குறை தீர அர்ச்சை -விசுவாசம் வைக்க வேண்டும்..தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே –ஜன்ம கர்ம மே திவ்யம் -அவனுக்கே இப் படி திவ்யமாக இருக்கிறது-அறிந்தவனுக்கு தேகம் துறந்து புனர் ஜன்மம் இன்றி அவனை அடைகிறோம் அவதார ரகஸ்ய ஞானம் பரம பதம் கொடுக்கும் .நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் –விவச்மான் மனு இஷ்வாகு–சொன்ன கர்ம யோகம்-பிரசன்காது அவதார ரகசியம் அருளுகிறார் –கர்மம் தள்ள நாம் பிறக்க –அனைவருக்கும் ஈச்வரனான நான் கிருபையால் -கரை ஏற்ற -அவதாரம் என்கிறார்–தர்மம் வாட்டம் -ஒற்றை காலில் நிற்கிறது கலி யுகம்-.ஏக ஹஸ்த ரிஷி ஏக கர்ண ரிஷி-போன்ற ஹிம்சை-ராஷசர் தின்ற உடம்பை பெருமாள் இடம் காட்ட –பெருமாள் இருந்த தண்ட காரண்யம்-ஆத்மா -வாசு தேவ சர்வம் -ஞானி து ஆத்மைவ மே மதம்–உயிர் ஆனவர்கள்-ஆத்மானான் ஞானி களை உண்டாக்குவேன் என்கிறான் -எம்பெருமானார் -கலியும் கெடும் கண்டு கொண்மின்..-சைசவ பருவ கண்ணன் அனுபவம் ஆனந்தத்தின் எல்லை–சௌசீல்யம் ராம அவதார முக்யகுணம்– சௌலப்யம் கிருஷ்ண -தாழ விட்டு கொண்டு ஏவி பணி செய்வான் கட்டுண்ண அடி உண்டு -காட்டினான்
நெல் செய்ய புல் தேயுமா போலே சாது பரித்ராணம் பண்ண தன் அடைவே துஷ் கிருதம் போகும்–விளக்கிலே விழுந்து விட்டில் பூச்சி -உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்–ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு அவன்..–புரை அற கலந்து பரி மாறுதல் –வேத வேத்யே பர –வேத வேத்யன் பகவான் –வேத புருஷன் -பிதரம் -தசரதனை தேர்ந்து எடுத்தான் பெருமாள்–வால்மீகிக்கு பிள்ளையாக வேத புருஷன்-ஸ்ரீ ராமாயணம் –அடியாரை கலக்க முடியாத வருத்தம் பெருமாள்-ராஜ குளம்– வால்மீகி வசிஷ்டர் போல்வார் போல் தான்–வியாஜம் வன வாசம்–ஏழை எதலன் கீழ் மகன் –சொல்லும் படி குகன்/சுக்ரீவன் /விபீஷணன்-14 வருஷம் தான்பின் சக்கரவர்த்தி ஆக்கி -பிறந்த அன்றே சௌலப்யம் சௌசீல்யம் காட்ட -வசுதேவர் பிள்ளையாக பிறந்து-யயாதி சாபம்-ராஜ்ஜியம் ஆளும் அதிகாரம் இழந்த குலம்–உக்ரசெனரை வைத்து -ஆலோசனை பண்ணி வந்தான்-பிறந்த அன்றே ஆய குலம் புக்கி –அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம் வளர்ந்தான் –தசரதன் -பாயாசம் பங்கு போட்டு பெருமாளை நால்வராக -பரத லஷ்மண சத்ருக்னன் கூட பெருமாள்..அர்தாம்சம் ஸ்ரீ ராமன்-ஸ்ரீ கிருஷ்ணன் பூரணன்-ஒருத்தன் தபசு பண்ணி ஸ்ரீ ராமன் – -இங்கு நால்வர் தபசு பண்ணி ஒரு பிள்ளை–நாட்டில் பிறந்து படாதன பட்டு-அனுசாசன பர்வம் மிக பெரியது மகா பாரதத்தில் எல்லாம்தர்மம் சொல்லும் சகஸ்ர நாமமும் இதில் தான்..-உபதேசித்தவற்றில் உயர்ந்த தர்மம்-கண்ணனை காட்டி-கிருஷ்ணன் தர்மம் சனாதனம்-.-வசுரேத திரு நாமம்-அவதாரிகை- கிருஷ்ண –விசேஷ அர்த்தம் ஒவ் ஒரு திரு நாமம் கேசவ நாமம் நான்கு அர்த்தம் –பிரம்மா ஈசன் இருவருக்கும்/ கிலேச நாசன் கேச பாசம் உடையவன் கேசி அசுரனை அழித்தவன்–மனோ ஜாவா வசு பிரத அடுத்து அடுத்து இரண்டு தடவை வரும் வசு=செல்வம் ஐஸ்வர்யம்–திவ்ய தேஜசை ஒளியை -தன் அவதாரம் தானே காரணம்- முதல் திரு நாம அர்த்தம்-காட்டி-செல்வம் கொடுப்பவர் சங்கரர் அருள பராசர பட்டர் அருளிய அர்த்தம் -தாமாகிய செல்வத்தை தேவகி வசு தேவருக்கு கொடுத்தவர்–பகவத் அனுபவம் தம்மையே ஒக்க அருள் செய்வார் தன்னையே தந்த கற்பகம்..எனக்கே தன்னை தந்த கற்பகம்-ஏ வகாரம்-தன்னையே கொடுத்தவன் –பெற்றோர்களுக்கு தன்னை கொடுத்தவன்..அவதாரித்த பொழுதே பிரார்த்தித்த படியே -பர பிரம்மா ரூபத்துடன்–அடையாளம் உடன் -ஆசைப் பட்டாள்-கருத்த நீல மேக சியாமளன் -கழுத்தே கட்டளையாக நீரை பருகிய மேகம் போல் பட்டு பீதாம்பரம் உடுத்தி கொண்டு புண்டரீ காட்ஷன் -பஞ்ச ஆயுதம் கொண்டு–சங்கு சக்கரம் கையிலே தரித்து கொண்டு அவதரித்தான்..ஸ்ரீ ராம அவதாரம் விட மேம்பட்ட ரூபம்–அச்சுத பானு -உலக தாமரை விகசிக்க -தேவகி பூர்வ சந்தை ஆவிர்பவித்தான் –கிழக்கு திக்கில் –சூர்யன்-கிழக்கு திக்கு சம்பந்தம் போல் தேவகி-கண்ணன்–சந்திர குலம் —வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு போல் ஸ்ரீ ராமன்–ஆவீர் ஆஸீத் –கற்ப வாசம் –வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்து–கேட்க்கும் பொழுது அவனுக்கு ஆனந்தம் ஏன் நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா –ஒருத்தி மகனாய் பிறந்து -பிறக்க வில்லை என்று ஆழ்வார்கள் அருள வில்லை-அஜாய மானா பகுதா விஜாயதே -பிறக்காதவன் பல படி பிறக்கிறான்..–பல ஜன்மம் பல ரூபம்–கர்மாதினம் இல்லை கிருபை அடியாகா சங்கல்பத்தால் இச்சையால் பிறக்கிறான் -வேண்டி இரக்க -இரண்டு சப்தம்–தானாகவும் வேண்டி தேவரும் இரக்க –நம்மை கரை ஏற்ற –தன் நினைவு அடியாக பிறக்கிறான்–பிறவாதவன் பிறக்கிறான்–மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்-பேய் ஆழ்வார் -சர்வ லோக பிதா பிதா தேடிபிரகிறான்-ஒன்பது வித சம்பந்தம்-பிதா ரட்ஷக சேஷி பர்தா -வேதாந்திகள் வசு தேவன் கண்ண பிரானுக்கு பிள்ளை என்பர்–ஸ்ரீ ஜெயந்தி-ஆவணி -ரோகிணி-முகூர்த்தம் தான் -கண்ண பிரானின் அவதரித்த முகூர்த்தத்தின் பெயர் தான் இது..விஷமும் அமிர்தம் ஆகும் முகூர்த்தம் -அரண்மனை-சிறைக்கூடம்/பகல்-இரவு/சித்தரை வசந்த ருது-வர்ஷா ருது ஆவணி–திவ்ய ரூபம் –உப சம்கர -வசு தேவர் மறைத்து கொள்ள சொன்னதும்-விச்வாத்மா -உலக்குக்கு எல்லாம் ஈசனே -மறைத்து கொள் தேவகியும் சொல்ல கம்சன் ஆபத்து என்பதால் மறைத்து கொள்ள -பர பிரமம் -என்று தெரிந்தாலும்..மக்கள் அருவரை கல்லிடை மோத-சர்வேசன் தேவ தேவன்விச்வாத்மா என்று தெரிந்தும்–மங்களா சாசனம் -பொங்கும் பரிவு-போல்—தந்தை சொல் கேட்டு கானகம் போனது பெருமாள் 24 வயசில்– இங்கு கண்ணன் பிறந்த அன்றே –மறைத்து கொண்டான்–தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல்–நமக்கும் சம்சார விலங்கு அறுக்க பிறந்தும் மாட்டி கொண்டு கிடக்கிறோம்..யமுனை -மதுரைக்கும் திரு ஆய்ப்பாடி நடுவில்—விரஜை பூமி-விரஜை பிரதட்ஷண்யம் அங்க பிரத்யட்ஷனம் பண்ணுவார்கள் இன்றும்..தூய பெரு நீர் யமுனை–கங்கை கோதாவரி சரயு விட தூய்மை-சரயு பெருமாள் தன் உடைஜோதிக்கு போகும் பொழுது தான் -குளித்தோ உமிழ்ந்தோ போல்வன பண்ண வில்லை-கோதா பெயர்தரித்த பின் மீண்டும் நாம ஏக தேசம் கொண்டதால் -பாபம் போனதாம்–நாய் குடலிலே நறு நெய் தங்காதது போல் –இரவே போனான்-இரவை கொண்டாடுவார்கள்-கம்சன் அறிய வில்லை–இடை பிள்ளை உடன் சேர்ந்து பண்ணிய கொட்டம் கிடைக்க –18 -12 ச்லோஹம் பெருமாள் பிறக்க 30 ச்லோஹம் விச்வமித்ரர் வர ௧௬ வயசு ஆக வில்லை–அப் பொழுது 12 வயசு -பால ராமன் வைபவம் -சொல்ல ஒன்றும் இல்லை-இவனுக்கு எல்லாம் பால லீலை தான்–ஒரு பிறவியில் இரண்டு பிறவி–இரண்டு மாதா பிதா குலம் யது குலம் யாதவ குலம்-ருக்மிணி தாயாரையும் நப்பின்னை பிராட்டியையும் கொள்ள -சௌலப்யம் காட்ட தான் ஆய் குலம் புகுந்தான்–ஒரு இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர–பெருமைகளை மேன்மையை ஒளித்துகொண்டு வளர்ந்தான் –சுருதி ஸ்மிர்த்தி பாரதம் கொண்டாடட்டும் நந்தனைகொண்டாட போகிறேன்-பர பிரமம் தவள பெற்றானே அவன் பவனத்தில்..அந்தரி- துர்க்கை–இவள் பார்வதி இல்லை–யோக மாயை -நித்ய கன்னிகை இவள்–நவமியில் பிறந்தவள் தங்கை கண்ணா பிரானுக்கு –எடுத்து வளர்த்த் தாய்க்கு பிறந்தவள்–அந்தரத்தில் மறைந்தவள்-அந்தரி-கூரை அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழி நான்..-தம்பி வளை காரி-காப்பு போல் -காப்பு இடுபவள் இவள் நஞ்சீயர்-முன்பே பிறந்து காத்தாள்–பூதனை- எழும் பூண்டு எல்லாம் அசுர பூண்டு – முழுதும் முடித்தான் கண்ணன் -மாரீசனை விட்டு சூர்பனகைமுடிக்காமல் மிச்சம் விட்டார் பெருமாள்..-பூதனை சகடாசுரன்-பேய் முலை உண்ட பிள்ளைக்கு ஏற்றம்-சிறு சேவகமும் நெய் உண் வார்த்தையுள் -அடி உண்டு அழுத நிலை என் நெஞ்சை உருக்குமே
பும்ஸாம் திருஷ்டி சித்த அபகாரம்-ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கம்பர்–கண்களையும் நெஞ்சையும் கொள்ளை கொள்ளும் அழகு–சகர வர்த்தி திரு மகன் அழகு–கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானை கண்டார் கொலோ–அவர்களே வழங்கும் படி கண்ணன் அழகு–அபகரிக்க வேண்டாம்
ஏக தார விரதன் பெருமாள்-இவனோ 16108 தேவிமார்களை கொண்டான்..ஆத்மா தாதா பலம் தாதா– தன்னை கொடுத்தான் ஒருவருக்கு– அனுபவிக்கும் பலன் இன்னும் ஒருவருக்கு கொடுத்தான் ..–யசோதை பாவனையில்-பெரியாழ்வார் அனுபவம்–பிள்ளைத் தமிழ்–குலசேகர ஆழ்வார் ஸ்ரீ ராம அவதாரம் இழிந்தவர்-இரண்டு பதிகம் கிருஷ்ண-பிரான் மேல் அருளி இருக்கிறார் அதில் ஓன்று தேவகி பாவனை புலம்பல்–விலஷனமான தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்–ஓடுவார் விழுவார் –உகந்து -ஆய் பாடியில்–முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறை முறை தம் தம் குரங்கிடை இருத்தி — -எந்தையே ஏன் தன குலப் பெரும் சுடரே எழு முகில் -கொண்டாடி கேட்டாள் –உந்தை யாவன் என்று உரைப்ப –சென் கேள் விரலிலும் -கடை கண்ணிலும் காட்ட நந்தன் பெற்றனன் –நல் வினை இல்லா நாங்கள் கோன் வசு தேவன் பெற்றிலேன் –பெயரிலே தெரியும் வசு-செல்வம் ஐஸ்வர்யம் நந்த -ஆனந்த படுபவன்..ஆத்ம தாகா தன்னை கொடுத்து பல தாகா அனுபவிக்க பலமும் கொடுக்கிறான்..-நந்த கோபன் குமரன் நந்த கோபன் இளவரசு சொல்லி கொள்வதில் பெருமை-சக்கரவர்த்தி திரு மகன்-ராமம் தசரதா ஆத்மஜம்–வாசு தேவன் -பிள்ளை பெயரே கொண்டான் இவனும்..-நந்த கோபர் கம்சனுக்கு கப்பம் கட்ட போவார்-வசுதேவர் பேசுகிறார்-பிள்ளை பிறந்து -உபதேசம் பண்ணுகிறார் நந்தனுக்கு .-தன பிள்ளை பல ராமனையும் உம பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்று உபதேசிக்கிறார் –.வரும் வழியில் பூதனை மாண்டதை பார்த்தார்-வஞ்சனை செய்ய தாய் உருவாக்கி வந்த பேய் — தீய அலவலை =பகு ஜல்பிகா -தொண தொண பேசும்-வஞ்ச பேய் வீய விடப் பால் –செம் கண் அலவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணி தான் அலவலை என்பதை காட்டினான்–அதனால் தான் பூதனை இடம் பிடித்து போனதாம் கண்ணனுக்கு ..ஸ்ருனு- எழுப்பி எழுப்பி சொன்னான் அர்ஜுனனுக்கு ..எடுப்பும் சாய்ப்புமாக அருளினான் கீதையை–தூய குழவியாய்–வஞ்சனை செய்ய தாய் உருவாக்கி–ஆழ்வார் வயிறு பிடிக்கிறார்–வேக வாதி சாபம்-தலை வெடிக்கும் -ஸ்திரீயை இஷ்டம் மீறி அனுபவித்தால்–அதனால் தான் ராவணன் முயன்றான் பல வழியில்–ராமன் வேஷம் போட்டு கொண்டு போக சொல்ல -ராமன் வேஷம் போட்டு கொண்டதும் ஏக தார -மனம் வந்ததாம் —தாய் வேஷம் கொண்டதும் அபிப்ராயம் கை விட வில்லைபூதனை–பெண்மை மிகு வடிவு கொண்டு வர-அனந்யார்கமான வஸ்து–அவளுக்கு இல்லை வேறு யாருக்கும் இல்லை உனக்கே ஆம் ஆள் செய்வோம்–ரசித்து உறிஞ்சி சாப்பிட உயிர் சேர்ந்து வந்ததாம் உயிர் கலந்து பாலை கொடுத்தாள் ..விஷம் உடன் கூடி இருந்தாலும் இனிமையாக இருந்ததாம் சக்கரை சேர்த்த முலைப் பால்-யாரேனும் ஆக்கவுமாம் அவனை கிட்டிய பின் சொரூபம் வெளிப் படும் -சேஷப் படுவதே ஆத்மாவின் சொரூபம்-நம் சொரூபம் வெளிப் படும் அவனை பற்றினதும்..அது போல் பூதனை சொரூபம் வெளிப் பட்டது -லோக பால அக்னி போல் வந்து-ஸ்தானம் கொடுத்து நல் கதி பெற்றாள்–அஞ்சாதே முலை கொடுத்தாள் ஆய்ச்சி–அகில் சந்தன கந்தம் வீசிற்றாம் பூதனை உடலில்–விரோதத்தால் பற்றினவள் மோட்ஷம் பெற்றாள் ஸ்ரத்தை உடன் பற்றினால் என்ன கிட்டும் சொல்ல வேண்டுமா –இடை சாதி பிறந்தவனுக்கு பால் கிட்டும்-தாய் பால் கிடைக்காமல் பண்ணுவான்-பிறவி இல்லை–கவி நயம்–சமத் காரா வார்த்தை–நிச்சயம் மோட்ஷம் கிட்டும் சரித்ரம் கேட்டவர்களுக்கு ..தாயே ரட்ஷகம் ஆக வைத்த சகடம்–நாள்கலோர் நால் ஐந்து திங்கள் அளவில்-பெரியாழ்வார்-ஏழு திங்களில் -யமுனை நீர் ஆடப் போனேன் —யசோதை போக –ஏழு மாதம் திரு மங்கை ஆழ்வார்-பொங்கும் பரிவு–முரன் என்கிற அசுரன் -அனைவரையும் ரசிப்பது அவன் திரு அடி தானே -அவனையும் காக்குமா பரிட்சை -தளர்ந்து முறிந்தும்-திரு கால் ஆண்ட பெருமான்-உபயோக படுத்து ஆளுகை–திரு சேவகமும் -நவநீத -நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -நவநீத சோரம் அனுபவிக்காத ஆழ்வார்கள் இல்லை–உரலோடு கட்டி-விஷ்ணு புராணம்-வெண்ணெய் திருட்டு சரித்ரம் நிறைய இல்லை ரிஷிகள் விட ஆழ்வார் அனுபவம் அதிகம்–அவன் அருளால் மதி நலம் அருள பட்டவர்கள்–வார்த்தை பழக கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய்-அவதார பயன்-வெண்ணெயால் தான்–கட்டுண்ண பண்ணி எளிமை குணம்காட்ட -மிடறு மெழு மெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி போய் -வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்பான்–கவ்யம்-பசு கொடுக்கும் பால்/தயிர்/வெண்ணெய்/நெய்/மோர்/திருடி ஓட வெண்ணெய் தான் திட பதார்த்தம்–சூட்டு நன் மாலைகள் –ஆராய்ந்து வந்தானாம்–தொண்டையில் கரைந்து போகும் வெண்ணெய் -மென்று தின்று அரைத்து விழுங்க வேண்டும் தானாக இறங்கும் வெண்ணெய்-வாயில் இருக்கும் வெண்ணெய் விழுங்கினால் போகும் கையில் உள்ளதை உடம்பில் பூசி கொண்டான் – வெண்ணெய் அளந்த குணுங்கும்–முகத்தில் ஈசி கொண்ட வெண்ணெய் தனக்கு தெரியாது அதனால் பிறர்க்கும் தெரியாது ஏற்று நினைக்கும் குழந்தை–ஓர் ஓர் தடா உண்ண-பெரியாழ்வார்–உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய் ஆங்கு ஓர் ஆய்ப்பாடி–வாரார் வன முலையாள் மத்தார பற்றி கொண்டு–கெட்டி தயிர் –ஏரார் இடை நோவ சீரார் தயிர் கடைந்து -சீர்மை வெண்ணெய் திரண்டு அதனை- தெய்வ வசத்தால் திறந்ததாம்-கடை வெண்ணெய் உண்பான்–கும் கும் -இதி ததி மத்யே -நடுவில் கும் கும் வருகிறதே என்ன என்பானாம்–அம்பா நவ நீதம்–கிம்பா பூதம் என்பாளாம் –நமக்கு தெரியாத பூதம்–திரண்ட வெண்ணெய் பார்த்தான்–அது விழுங்கும் முன் நான் விழுங்கி விடுகிறேன் என்றானாம் –அம்பா நவநீதம் என்றானாம் என்ன ஆனந்தம் மந்த ஹாசம் யசோதைக்கு –வேறோர் கலத்து இட்டு–வழக்கமான கலம் இல்லாமல்–சாத்து பரணியில் வெண்ணெய் வைத்தாள்–நாரார் உரி ஏற்றி நன்குஅமைய வைத்துஅது அதனை —கள்ள கயிறு உருவி -வேல் கண் மடவாள் -கண்ணால் கண்ணனை பார்த்து கொண்டு இருக்கிறாள் –அவள் போந்தனையும் பொய் உறக்கம் -ஒராதவன் போல் உறங்கி-அறிவுற்று -தாரார் தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி-ஆராத வெண்ணெய் விழுங்கி–அருகு இருந்த மோரார் குடம் உருட்டி–கலப் படம் கொடாது -அநந்ய -மாம் ஏகம் சரணம் என்றவன்–சாரமான வெண்ணெய் எடுத்த பின் அசாரம் உதறினான் மோர் உருட்டி–கறந்த நல் -பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன்–அம்மா மண்டபம் திருடன் கதை–காது அறா கள்ளன்-முன் கிடந்த தானத்தே ஒராதவன் போல் கிடந்தான் -கை போட்ட இடத்தில் கை போட்டு கால் போட்ட இடத்தில் கால் போட்டு–மோர் வழிந்து இருக்க -தான் வைத்தது காணாள் வயிறு அடித்து -குழந்தைக்கு ஜீரணம் ஆகாதே -யாரார் புகுவார் ஐயர் இது அல்லால்–நீரார் இது செய்தீர் நெடும் கயிற்றால்-காண உரலோடு –சிக்கன வார்த்து அடிப்ப -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்-திருப்தி இன்றி–வெட்கம் இன்றி -வெண்ணெய் வீணாக போகிறதே அங்கு இருந்தால் விழுங்கி இருக்கலாமே பெரிய திரு நாளிலே சிறை பட்டால் போலே –பிள்ளை உறங்கா வல்லி தாசர்– மண் உண்டு பேய்ச்சி முலை உண்டு வெண்ணெய் உண்டு ஆய்ச்சி வயிற்றினோடு ஆற்றா மகன்–திருப்தி பண்ண முடிய வில்லையாம்-வண்ணனுக்கு இட்டாரோ-சால் பெரியவை துணிகள் போட்டு-வாரா வண்ணான் சாலா -கேடடால் முகம் மலருமாம் கண்ணனுக்கு –உரல்-பொத்தை உரல்–மரத்தால் பண்ணிய உரல்–கல் உரலில் இடித்தால் அரிசி பொடி பொடி ஆகும்-பொத்தை உரலை கவிழ்த்து –அவனுக்கு என்று நடுவே தேடுவார் உண்டே நல்ல உரலுக்கு -பிறர்க்கு ஆகாத ஒன்றே இவனுக்கு ஆகும் –களவுக்கு துணை–கட்ட 2 அங்குலம் குறைய –பத்து சுற்றுக்கு போகும் படி குறைத்து கொண்டான் -பரத்வத்தை வெளி படுத்தி உடனே சௌலப்யம் காட்டி அதை மறக்க மயக்கி விடுவான் ..கன்னி நுண் சிறு தாம்பி னால்–முடிந்தால் அறுத்து போ என்றாளாம்–கயிற்றினால் கட்டினவள் சொல்லாலும் கட்டினாள் –எளிமையை காட்ட வந்த அவதாரம்–மயங்கி நிற்க –கரும் களிறே போல நின்று தடம் கண்ணீர் மல்க -நினைக்க நினைக்க மோகம்-பத்துடை அடியவர்க்கு எளியவன் உரலினோடு இருந்து ஏங்கிய எளிவு எத் திறம் -ஆறு மாசம் ஆனதாம் ஆழ்வாருக்கு ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply