தாய்-கோசலை–சொன்னதை கேளாமல்-ஸ்ரீ ராமனை அனுபவிக்கிறார்..-எஷ தர்ம சனாதனக -பர்தா விட்டு பார்யாள் பிரிய கூடாதே -தர்மத்தால் கட்டு படுத்த அந்த தர்மம் உன்னை காக்க மங்களா சாசனம் பண்ணி அனுப்பினாள்–அடுத்து சீதை பிராட்டி–அனைவருக்கும் தக்க படி பேசி ஜெயித்தவர் இவள் இடம் தோர்க்க -பர்தாவை பிரிய கூடாது என்று பெருமாள் அருளிய வார்த்தை-சொல்லியே -தன் நேர் இல்லாத ஸ்வாமி-தோள் நலத்துக்கு எடுத்து காட்டு உலகு அளந்த விருத்தாந்தம்
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் ஒண் கமலம்
ஆர்ந்தேன் வுன் சேவடி மேல் அன்பாய் –ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ ? முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல் –80
நேர் பட்டேன்-அடிமை கைங்கர்யம் பண்ணி–பகவத் பிரிதியாக செய்வதேதர்மம்–ராவணன் ஹிரண்யன் தபம் செய்தாலும் மாண்டார்கள்-அஸ்வத்தாமாசெத்தார் -துரோணர் பிள்ளை-பிரம்மாஸ்திரம் –சொல்ல முடியாது- தர்மன்–யானை –பீமன் கொள்ள அப் பொழுதும் சொல்ல வில்லை-பீமன் சொன்னான்..கங்கையில் இறங்கி மறைய-யம தூதர் -நரகம் வழியாகதர்ம புத்றரை அழைத்து போய் சொர்க்கம் விட்டார்கள் -கண்ணா பிரான் சொல்லியும் முடியாது என்றதால் நரக தர்சனம் ..கண்ணன் சொல்வதே தர்மம் என்று உணர வில்லையே ..-ஆர்ந்தேன் -மனசு நிறைவு பெற்றேன் அவன் அன்பால்–பகல்=காலம்–பகவத் பக்தி பண்ணியே மனம்நிறைந்து இருக்க -உன்னை நேரில் கண்டவர்கள் எப்படி இருந்து இருப்பார்கள் நினைக்க –ஒரு விழி தோற்றம்-தோள் கண்டார் தோலே கண்டார்-ஒரு இரவு முகத்தில் விளித்தாராய் படுத்தும் பாடு–ரதம் போனாலும் கண்ணில் உள்ள ஸ்ரீ ராமன்போக வில்லை கண்ணிலே நித்ய வாசம் பண்ணுகிறான்–மல் யுத்தம் வந்த கண்ணனை கண்களாலும் மூக்காலும் குடிக்க -உச்சி முகருவது போல் அனுபவம் –திரு மேனி பார்த்து பட்ட பாடு ஆழ்வார் நினைந்து பார்கிறார் —
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு –81
கண்டேன் கண்டேன் கண்டேன் திருப்பி திருப்பி அருளுகிறார் அதிலும் – மெய்யே சத்யம் என்கிறார் இதில்–பகலிலும் பார்த்தேன்–இரவிலும் -துணிந்து -கண்டவர் விண்டிலர் என்றார் இவரோ துணிந்து சொல்கிறார்..–நாரணனை சாஷாத் கரித்தார் இவர் –பரம் ஜோதி வடிவை கண்டேன் —
வடிக் கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல் நாள் –அடிக் கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ ?
கோலத்தால் இல்லை குறை –82
ஸ்ரீ தேவி -கோலம்-அழகு -வடி கோலம்-வடி கட்டின அழகு–சர்வாங்க சுந்தரி—ஜிதேந்தரர்களையும் மயக்கும் ரம்பை மேனகை-இந்த்ரிராணி–அனைவரையும் தள்ளி-பார்வதி-லலிதா -சரஸ்வதி–அவர்களையும்விலக்கி ஸ்ரீ திரு சோபை -லஷ்மி ஸ்ரீ என்றே திரு நாமம் கொண்டவள்–புவன சுந்தரி–அழகுக்கு எல்லாம் ஹேது-வடி கட்டி எடுத்த அழகு -வாள் வீச்சு போல் பெருமாளை பார்க்கும்–பார்த்து கொண்டே -அகலாமல் இருக்க –பூமி தேவியும்–தன் உடன் பெருமாள் பேராமல் இருக்க தானே தரையாக ஆகி -ஞாலத்தால்-பத்ரி முதல் திரு புல்லாணி வரை பரவி–திவ்ய தேசம் தோறும் தன் மேல் திரு அடி வைக்கும் படி–எம்பெருமான் அழகுக்கு குறை இல்லை–ஸ்ரீ ரெங்கம் உபய நாச்சியார் இருவரும் இருந்தே -நம் பெருமாளை பார்த்து தலை சொக்கி போக ரெங்கா என்று அமர்ந்தார்களாம்–
குறையாக வெம் சொல்கள் கூறினேன் கூறி
மறையாங்கு என வுரைத்த மாலை –இறையேனும்
ஈயும் கொல் ! என்றே இருந்தேன் எனை பகலும்
மாயன் கண் சென்ற வரம் –83
சொன்னது குறை– சொல்லி முடிக்க முடியுமா –ஏதோ சொன்னேன்–நல்ல தமிழன் நான் என்றார்-பெரிய தமிழன் பெரிய நல்லெண என்று முன்பு சொன்னேன்-தன்னைலஷ்மி சனாதனாக அனுபவித்த பின்பு -தோற்றேன் என்கிறார்-தாயார் கடாஷம் பெற்றதும் பத படும் தூதோஹம் என்றவர் தாசோஹம் விபர நாராயணன் முன்பு தொண்டர் அடி போடி அப்புறம்.. -தாசன் சொல்லும் பரி பக்குவம் தாயார் கடாஷத்தால் தான் –அது போல் ஆழ்வாரும் இங்கு-குறையாக வெம் சொல்கள்-எச்சில் வாய்-இதம் இத்தம் வேதமே சொல்லி முடிக்காமல்–அவன் அவன் என்று எட்டி சொல்லும் வேதம்–
வரம் கருதித்தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத் தவணை நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது -84
சிங்க பெருமாளை அனுபவிகிறார் –வரத்தினில் சிரத்தை வைத்தான்–பிச்சை வாங்கிய பலம்–வரம் கொடுத்தவன் பிரம்மாவுக்கும் வரம் சக்தி கொடுப்பவன் அவன் என்று உணராமல்–தன் பலம் கருதி–அவன் வரம் படி முடித்த –அசுர வாக்ய பரி பாலனம்–பீஷ்மர் பிரகலாதன் வாக்கியம் சத்யம் பண்ணினாரே –நரம் கலந்த சிங்கமாய்–திவ்ய மங்கள விக்ரகம்-திரு வன்-லஷ்மி நரசிம்கன்-அம் கண் ஞாலத்துக்கு இவனே அமுது
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –அமுதன்ன
சொல் மாலை ஏத்தித் தொழுதே சொலப் பட்ட
நல மாலை ஏத்தி நவின்று -85
அமுதன்–சக்ரபாணி–அமிர்தம் கடைந்து கொடுத்து அமிர்தம் கொண்டவன்-தேன் என்றும் சொல்லி-அமிர்தமான சொல்கள் கொண்டு தொழுதேன்–அவன் அமிர்தமாக பேச வைக்க சொலப் பட்ட -கிளி போல் சொன்னேன்–பாடுவிக்கிறான்-ஆழ்வார் போல்–ரிஷிகள் சாஸ்திரம் இப்படி சொல்லும் சொன்னது என்பர் ஆழ்வார்களோ அவன் சொல்ல திரும்பி அருள திவ்ய பிர பந்தங்களின் ஏற்றம்
நவின்று உரைத்த நா வலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் –பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பான் கொல் இன்று ?-86
நா வீறு உடையவர்கள்–நவின்று-பூ மலர் சேர்த்து -பெற்ற பயன் என்ன –பெருமாளை கண்டார்களா –என் கொல் –வியாசரே தியானம் பண்ணி கொண்டு இருக்க –துருவன் பிரகலாதன் -கைங்கர்யம் ஹனுமான்-பிரேமை-கோபிமார்கள்-ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்–என்ன சாதனைபண்ணி காண முடியும் காட்டகண்டேன்–எனக்கு போய் கிடைத்ததே –கருணையால்–நாயமாத்மா –அவன் நம்மை பிடிக்க கிட்டுவான் —
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திரு வடியை அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திரு கோட்டி எந்தை திறம்-87
திரு கோட்டி யூர் -சௌம்ய நாராயணன்–முன்பே அறிவேன்-கற்பம் இருக்கும் பொழுதே கற்ப ஸ்ரீ மான் கருவிலே திரு உடையவர்–மது சூதனன் கடாஷத்தால் ஞானியாக பிறப்பார்கள்
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் –திறம்பாச்
செடி நரகை நீக்கித் தாம் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசல் கதவு -88
கதவு திறம்பிற்று –அறிந்தேன்-தமியனேன் பெரிய அப்பனே–அவனே அப்பா அவளே அம்மா ஆன பின்பு எனக்கு என்ன குறை–
இந்தரனுக்கு பட்டம் கொடுத்தும் நாம் தானே பாவத்தால் சுகப் பட வேண்டும் ஸ்ரீ மான் –தென் அரங்கத்திலஎந்தை–திறம்பா வழி -தப்பாமல் வழியில் போய் –நாரணனை விட்டு தேவதாந்தரம் செல்வதே தப்பான வழி -அநந்ய பக்தி வேண்டும்..–பர்தா பதி போல்–உறுதி வேண்டும் –மோட்ஷ துவாரம்–கதவு திறந்தே இருக்கும் பூர்ண கும்பம் கொடுத்து வர வேற்ப்பார்
கதவிக் கது அஞ்சி இறந்த காஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை யோசித்து –பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால் மா வலியை
மாணியாய்க் கொண்டு இலையே மண் ?–89
கதவி-கோபித்து –கஞ்சனை கோபித்து யானையை கொன்றான்–குவலயா பீடம்–ஒசித்து–பதவியை-பதமாக பழகுவான்-பலி சகர வர்த்தி இடம் நடந்தானே –கடை தேங்காயை எடுத்து கொண்டவனை–சொத்து இவன் உடையது தானே பூ பதி–உதைக்காமல் பதமாக ஸ்தோத்ரம் பண்ணி-இரங்கி-மாணியாய்–நீர் ஏற்று -சர்வ லோகமும் அளந்து–கொண்டானே மண் —
மண் உலகம் ஆளேனே ?வானவர்க்கும் வானவனே
விண் உலகம் தன அகத்து மேவேனே ?–நண்ணித்
திருமாலைச் செம் கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்–90
மண்ணரசும் யான் வேண்டேன்-குலசேகரர் இவரை பார்த்து அருளுகிறார் –அச் சுவை பெறினும் வேண்டேன் –உன் திரு அடி தான் வேண்டும்..
பின்னால் அரு நரகம் சேராமல் பேது உறுவீர்
முன்னால் வணங்க முயன்மினோ –பல் நூல்
அளந்தானைக் கார்க் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91
அவன் திரு அடி பிடித்து கொண்டு-அநந்தாவை வேதா பல நூல் களும் அவனையே சொல்லும்..–பித்து பிடித்த ஜனங்களே உண்டியே உடையே உகந்து இருந்து –துக்கமும் இங்கே இருக்கிறது- முன்னால் வணங்க முயலுங்கள் –கிருஷ்ணா பிரேமை-100அஸ்வமேத யாகம் பண்ணியும் சம்சாரம் போக்காது ஒரே நமஸ் காரத்தால் ஸ்ரீ வைகுண்டம் பெறலாம்
அடியால் முன் கஞ்சனை செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் –நெடியான் தன
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92
கருட கொடி உடையவன்–உதைத்து -செற்று-காஞ்சனை உதைத்தவன் உறையும் கோயில்–கஞ்சனை சிண்டு பிடித்து உதைத்தவன் –திரிவிக்கிரம -நெடியான் ஜனார்த்தன திரி யுக நாத நாராயண –தேசிகன்-நாமமே சொல்லி-நரக பயம் நீங்கும்–நான்கு புருஷார்த்தங்களும் கொடுப்பான் —
கடிது கொடு நரகம் பிற் காலும் செய்கை
கொடிது என்று அது கூடா முன்னம் –வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய்க் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்து மினோ வுற்று –93
நரக வகை சுகர் அத்யாயம் முழுவதும் சொல்லி பயம் உணர்த்துகிறார்..-சங்கம் எந்தினவனை- கேசி கொன்றவனை- பூதனை விஷம் உண்டவனை ஏத்துமினோ இவை போகாமல் இருக்க
உற்று வணங்கித் தொழுமின் உலகு எழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் –பற்றிப்
பொருந்தா தான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே –94
நரக வகை சுகர் அத்யாயம் முழுவதும் சொல்லி பயம் உணர்த்துகிறார்..-சங்கம் எந்தினவனை- கேசி கொன்றவனை- பூதனை விஷம் உண்டவனை ஏத்துமினோ இவை போகாமல் இருக்க
என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் –முன்னம்சேய்
ஊழி யான் ஊழி பெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அதி ஊரான் –95
காஞ்சி வரதனை மங்களா சாசனம் பண்ணுகிறார்..-ஸ்வாமி ராமானுஜரை கொடுத்து அனைவரையும் வாழ வைத்தான் –ஆச்சார்யர் பலரையும் பெற்று கொடுத்த தேவ பெருமாள் பேர் அருளாளன் –குதிரை வாகன அழகன் அழகர்- காஞ்சி கருட சேவை -அத்தி ஊரான் புள்ளை ஊர்வான் -ஹிருதயம் ஸ்தானம் -தகராகாசம்–
அத்தி ஊரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சு கண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96
கருட சேவை–பிர பலம்-தொட்டாச்சர்யர் சேவை–நாக பர்யங்கம் சயனம்—முத்தீ மறையாவான்-மூன்று வித யக்ஜம்-அதனால் ஆராதிக்க படுகின்ற எம்பெருமான் அக்னி குண்டம் இருந்து வந்து -முக்தி மோட்ஷம் தருவான் –மகா தேவ தேவன் –குடை அழகும் காஞ்சியில்–தக்கானுக்கு மிக்கான் இல்லை–தக்கான் குளம்–வரதன் சேவை–அர்ச்சக முகேந ஆவேசித்து தொட்டாச்சர்யர் சேவை சொல்லி காட்டினான் வரதன் —
எங்கள் பெருமான்! இமையோர் தலை மக! நீ
செம் கண் நெடுமால்! திரு மார்! –பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம் பனை மேல் சேர்ந்தாய்
குட மூக்குக் கோயிலாகக் கொண்டு -97
திரு குடந்தை ஆரா அமுதன் நினைவு வர அருளுகிறார் இதைஇமையோர் தலை மகன்-யுவ குமரன்-ஸ்ரீ வைகுண்டத்திலும் குழந்தை-வைகுண்ட லாலா நந்த லாலா போல் அங்கும்..சிறு பிள்ளை–ஸ்ரீ வத்சம் உள்ளவன்..உத்தான சாயி -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது
உண்டது உலகு எழும் உள் ஒடுங்க –கொண்டு
குடம் ஆடிக் கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடம் ஆகிக் கொண்ட இறை –98
இறுதியிலும் திரு கோவலூரை மங்களா சாசனம் பண்ணுகிறார்–ஆயன்-உலகு அளந்த -இரண்டுக்கும்–இரண்டு பாசுரம்-ஒருத்தி மகனாய் பிறந்து -கொண்டு போய் கொடுத்தான்- சீதை குழவி –பாத கமலா கமலம் காணீரே -போத் தந்த —அங்கு குழந்தையாக வளர்ந்து -மாயன்-உண்டது உலகு எழும் ஒடுங்க –குடம் ஆடும் கூத்தன்—கிருஷ்ண அவதார எளிமை–கோவலனாய் மேவி–திரு கோவலூரில் மேவி -ஆழ்வார் நெஞ்சம் மேவி இடமாக கொண்டான்
இறை எம்பிரான் ! அருள் என்று இமையோர்
முறைநின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய்
மா வடிவில் மண் கொண்டான் மால் –99
பெரிய திரு மேனி உடன் மண்ணை அளந்தான்–கழல சேவடி-நூபுர சப்தம்-திரு அடிக்கு தக்க -அறை கழல –இமையோர் முறை நின்று கூட்டமாக -புஷ்பம் வர்ஷம் செய்ய
மாலே ! நெடியானே !கண்ணனே ! விண்ணவர்க்கு
மேலா ! வியன் துழாய்க் கண்ணியனே ! மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே ! என் தன்
அளவன்றால் யான் உடைய அன்பு –100
மாலே நெடியானே -மயக்கு கின்றவனே கண்ணனே -துளசி மாலை தரித்து கொண்டு —இருவரின் லீலை–உலகு அளந்தவன் -கண்ணன் -லீலைகளை விட பெரியதால் ஆழ்வாரின் அன்பு –அன்பு அளக்க முடியாது–என்னால் —
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா –நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் –1
அந்தாதி -முதல் பாசுரம் ஆரம்பமும் இறுதி பாசுரம் முடிவும் அன்பே –அன்பில் ஆரம்பித்து அன்பில் தலை கட்டி விட்டார் –அவனை அன்பால் தானே பார்க்க வேண்டும்–அன்பையே கேட்டு முடிக்க வேண்டும் -அதுவே புருஷார்த்தம் –திரு கண்டேன்-தீபா ஆராதனை இருவரும் காட்ட மூன்றாவது பேய் ஆழ்வார் திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று ..என்று அருளினார்-
—————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..
Leave a Reply