பிராட்டிக்கு உபகாரம் பண்ணினவன்–அம்தாமத்து அன்பு செய்தவன் –தண்ணீர் பந்தலில் ஒதுங்க —
நித்யர் போல் அனுபவிக்க கடவ -விரோதி தொலைய பற்றுவோம்-ஸ்வரூப அனு ரூபமாக பற்றுவோம்
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துலங்கள் தீர நல்கு சோதி சுடராய
வலங்கை யாழி இடம் கை சங்கம் உடையானூர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே 6-5-1-
முந்நீர் –ஆற்று நீர் ஊற்று நீர் –
கிருத கிருத்யகன் விபீஷணன் பட்டாபிஷேகம் பண்ணி ஜுரம் நீங்க பெற்றான் –
வேற்று நீர் முதிர்ந்த பழைய நீர் ..
அமுதம் கொண்டு-இன் அமுதம் கொண்டான் கொடுக்க வில்லை-
இமையோர்-தேவர் சொல்லாமல்-அகங்கரித்து இருப்பார்கள்- அவர்களேக்கே காரியம்-
அபிமான பங்கமாய் வந்த நம்மை காப்பான்..தன் உடைய துலங்களும் தீர்த்தான் அவனுக்கும் கலக்கமா –
அடியார் கலக்கம் தீரும் வரை தானும் கலங்கி இருப்பான் விஜுரக-தம்பிமார் எல்லோரும் அரசு சூட மறுத்தார்களே –
அதனால் விபீஷணன் ஒத்துக் கொண்டதும் ஜுரம் நீங்க பெற்றான் –
ஜோதி சுடர்-அடியார் துயர் துடைக்க பெற்றதால்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதிக்கே —
சங்கு சக்கரம் -வலம் கை ஆழி இடக் கை சக்கரம் -வாய்மை-வேதம் உண்மை பேசும் அந்தணர் வாழும் –
——————————
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ பட ஈர்ந்த புனிதனூர்
சினையார் தே மா செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே 6-5-2–
அசுரர் பிள்ளைக்கே திரு நாமம் சொன்னதால் உதவிய விருத்தாந்தம்–
முனைகிற சீயம் எடுத்த காரியத்தில் முனைப்பு-புனை சேர்த்தி-வாள்-அழகு உகிர் நகர்-போழ்ந்த புனிதன்-கிழித்து புனிதம் –
அடியான் வார்த்தையை நிஜம் படுத்திய புனிதன்-ஆள் வைத்து அந்தி தொழுவார் உண்டா –நேராக வந்து உதவிய புனிதன்..
அவன் இட்ட தூணை அவனே தட்ட -என் சிங்க பிரான் பெருமை யாரால் சொல்ல முடியும் -தூண் பாட்டி ஆனது–
நாராயணனை ஈன்று எடுக்க பிரமனுக்கு பாட்டி-பிசவிகிறதால் ஸ்த்ரி லிங்கம்–எல்லா தூணிலும் ஆவிர்பவித்தானாம் –
பிளந்தது தூணும் செங்கண் சீயம் வெளிப் பட்டது ..
குயில் கூவும் முக்தர் போல-ஹாவு ஹாவு கூவி-பரம பதம்-திரு நறையூர் குயில்-நித்ய சூரிகள் —
ஆஸ்ரிதர்களுக்கு உதவிய விருத்தாந்தம் இரண்டு பாசுரங்களிலும் அருளினார்-
——————————–
ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட
சேனை தொகையை சாடி இலங்கை செற்றானூர்
மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நாளை புதலில் ஆமை யோளிக்கும் நறையூரே -6-5-3–
பிராட்டிக்கு உதவினத்தை அடுத்து -சர்வ ரக்ஷகன்-வாசி இன்றி –
ஆனை புரவி தேர் கல் ஆள் படை-நான்கும் -சேனை தொகையை–போன க்ரமம்–
மீனை தழுவ -வழுக்கி போக வீழ்ந்து எழும் இந்த மள்ளர்க்கு அலமந்து ஆமை ஒளியுமாம் –ஆனை ஆயிரம்
3 மணி நேரம் ஒலிக்க ஒரு கோடி-ஆயிரம் கவந்தன்-
பிராட்டிக்காகா -கிள்ளிக் களைந்தான் –இஷ்ட பிராப்தி -அமிர்தம் கொடுத்ததை முதலில் சொல்லி
அநிஷ்ட நிவ்ருத்தி-விரோதி தொலைந்ததை இரண்டாம் மூன்றாம் பாசுரங்களால் அருளுகிறார்
——————————————
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு–
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர்
பொறியார் மஜ்ஜை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே 6-5-4–
ஆஸ்ரித கர ஸ்பர்சம் இல்லாமல் இருக்கும் -படியை சொல்கிறார் –
உயர்ந்த உறியில் உயர்ந்த வெண்ணெய்–பாத்ரம் மாற்றி மாற்றி வைப்பாள் —
இதை கண்டு பிடிப்பதே இவன் கார்யம்-உண்டு உரலோடு கட்டு பட்டான்-இரண்டுக்கும் வாசி இல்லை இரண்டும் ஆனந்தம் –
ஆஸ்ரித கை இரண்டிலும் –உரலோடும்- உம்மை தொகை-இரண்டுக்கும் சாம்யம்–
கட்டு உண்டு-கட்டுண்ண பண்ணிய பெரு மாயன் என் அப்பன்- கண் நுண் சிறு தாம்பு-
மாயையால் ஜகத்தை இவன் கட்டி வைக்க இவனை அவள் கட்ட பார்க்க -தாம்பு -சிறு தாம்பு நுண்ணிய –
அனுகூலர் இடம் தோர்ப்பதே -கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா கூடுவார் இடம் தோர்ப்பான்–
தன்னை தானே அமைத்து கொண்டான் –வெறி -நறு மணம் கொண்ட கூந்தல் பின்னை பொருட்டு –
மயில்கள் நடம் ஆட-நாண் மலர்கள் ஆனந்தம் பட்டு வாசனை விட -வண்டுகள் இசை பாடும்-
——————————————–
விடை எழ வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர்
பெடையோடு அன்னம் பே வளையார் தம் பின் சென்று
நடை யோடியிலி நாணி யோளிக்கும் நறையூரே 6-5-5–
தான் கட்டுண்ண பட்டு இருந்தாலும் –விரோதி நிரசனம் பண்ணி மகிழுவான் –
மருதம் சாய்த்தான் -ஏழே ரிஷபம் வென்று–தவழ்ந்து சென்று நடையாலே மருதம் சாய்த்தான் —
யுத்தம் பண்ண வில்லை-சகடம் சாய்த்த நடை–விட்டில் பூச்சி போல் விளக்கில் வந்து விழுந்தன —
அனைத்து பருவத்திலும் விரோதி நிரசனம்–பெடை-அன்னம்-மிதுனம் -பிராட்டி உடன் சேர்ந்து அவன் போல –
நடை யோடு இயலி- அன்னம் நடை பயில -பெண்களை பார்த்து -நாணி ஒளிக்கும்-
———————————–
பகுவாய் வான் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழ பொருதாநூர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே -6-5-6-
அடுத்து வட மதுரை விருத்தாந்தம்-பூதனை -பாலை பருக உயிர் உடன் உறிஞ்சினான்
வேகமாக உறிஞ்ச பாலோடு பிராணன் வந்ததாம் –புகுகின்ற வாயிலே –
வில் பெரு விழா -நின்ற குவலயாபீடம் –கிருஷ்ணன் விடாமல் முடித்தான் ஸ்ரீ ராமன் மிச்சம் வைப்பான் —
தீர்த்த பாத்ரம் மிச்சம் கூடாது போஜன பாத்ரம் மிச்சம் இருக்கணும்-சாஸ்திரம்-வேழமும் பாகனும் வீழ –
சந்தன வஸ்த்ர மாலை அலங்காரம் பெற்று கொண்டு வர -சிசு -குமார வைபவம்–
நெய்தல் பூ -மது-வாங்கி கமலத்தின் மேல் படுத்தனவாம் அன்னம்-
—————————————-
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை அக்ஜான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகி புள்ளோடி
நந்துவாரும் பைம் புனல் வாவி நறையூரே 6-5-7–
சாந்தீபன் பிள்ளை மீட்ட விருத்தாந்தம் -முப்புரி நூல் யக்ஜோபவீதம் முந்து நூல்-வேதம்–
கடல்கொண்ட அன்று காத்து –மாற போனதில் குட்டி பறவை இருக்க –இறை தேடி -நத்தை வாரி கொண்டு வரும் —
————————————————-
வெள்ளை புரவி தேர் விசயற்க்காய் விறல் வியூகம்
விள்ள சிந்துக் கோன் விழா ஊர்ந்த விமலனூர்
கொள்ளை கொழு மீன் உண் குருகு ஓடிப் பேடை யோடும்
நள்ளக் கமலத் தேறலுக்கும் நறையூரே 6-5-8–
சர்வ சக்தித்வம் அருளி செய்து இனி சௌலப்யம் அருளுகிறார்..-
அர்ஜுனனுக்கு -பளிஷ்ட வியூகம் தொலையும் பட -ஜெயந்த்ரன் விழும் படி-சிந்து கோன்
சமிர்த்தி உள்ள மீன்-உண்ண குருகு ஓடும் -உண்ட பின் தாகத்துக்கு தேன் பருகுமாம் —
———————————————-
பாரையூரும் பாரம் தீரப் பார்த்தான் தன
தேரை ஊரும் தேவ தேவன் சேரும் ஊர்
தாரை ஊரும் தன் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல வயல் சூழ்ந்த நறையூரே -6-5-9-
பூ பாரம் தீர்க்க தான் அவதாரம்–பார்த்தனுக்கு கார்யம் செய்தான்
————————–
தாமத் துளப நீண் முடி மாயன் தாள் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்பும் அவர்க்குத் திரு மாலே -6-5-10–
மாயன் -கூட்டம் கூட்டமாக மாளிகை -கணங்கள் பல போல -நாம திரள்- பேர் உடன் –
ஒளி பொருந்திய வேல்-காம கதிர் வேல் -திரு மால் சேம துணை–
பிராட்டி உடன் சேர்ந்து -சால பல நாள் உயிர்கள் காப்பான் கோல திரு மா மகள் உடன் சேர்ந்து –
ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகன் இல்லை-
சேம துணை– பாணாசுரனுக்கு துணை என்று சொல்லி கை விட்ட்டவர் போல் இல்லை சேம துணை-
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply