அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி
கூடினான் திரு அடியே கூட கிற்ப்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
மணி வண்டு வகுளத்தின் மலர் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-1–
யசோதை இடம் கட்டு பட்டான்-நம் இடமும் கட்டு படுவானா -நமக்கும் கார்யம் செய்வானா –
சோழன் அரசனுக்கு வாள் கொடுக்க -திரு வேம்கடம் உடையவன் சங்கு சக்கரம் கொடுத்தது போல்–
திரு உள்ளத்துக்கு உபதேசம் இதிலும் —
அனைத்தையும் உண்ட கண்டன் –ஆல் இலை தளிரில் சயனித்தான் -வட பத்ர சாயி–
அவன் திரு அடியே கூட ஆசை படுபவர்கள்-திரு நறையூர் -பரிமளம் கொண்ட செண்பகம் –
வாசம் உண்டு-வகுளம் மகிழம் பூ மலர் மேல் சயனிக்க –விஷயாந்தர அனுபவம்-செண்பக பூ வாசம்–
மகிழம் பூ நறையூர் நம்பி–விஷயாந்தர ரசம் மாற்றி அவனது திரு அடி சேர வேண்டும்–
காவலில் புலனை வைத்து -கட்டு காவல் வைத்து /இல்லாத புலன்-இரண்டும்-திரு நாம வைபவம்-நம்பி திரு அடி பலத்தால் கிட்டும்-
விஷயாந்தர ரசத்தில் மூழ்கி இருந்தாலும்..-சோழ அரசன் சேர்ந்த கோயில் —
மஞ்சார -எஞ்சாமல் வயிர் அடக்கி–ஆல் இலை சயனம்-
அரசனுக்கு உதவினது -எல்லாம் ஓன்று தான் ஆழ்வாருக்கு திரு நறையூர் சம்பந்தம் என்பதால்–
—————————————————-
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி அண்டத்தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை
இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் ! இனவண்டாலும்
உழும் செருவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த
திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே -6-6-2–
கொளுத்து கிடக்கும் மத்ஸ்ய உருவம் –பிரளய சமுத்ரம் தாண்டி-குல பர்வதம் மீது ஓடி-எழுந்து இனிது விளையாடும் —
இணை அடிகீழ் -பள்ளி கட்டில் கீழ் ஆண்டாளும்–கால் கீழ் வாழ்ச்சி–இனிது இருப்பீர் –வெளியில் வர வர பயம் மிகும்–
வண்டு ஆலும் நர்த்தனம்—ரத்னம் சந்தன அகில் கட்டை காவேரி கொண்டு கொட்ட —
மட்சய மூர்த்தி வர்த்திக்கும் இடமும் திரு நறையூர்–
———————————–
பவ்வ நீர் உடை ஆடையாகச் சுற்றிப்
பார்கலாம் திருவடியாப் பவளம் மெய்யா
செவ்வி மா திர மெட்டும் தோளா அண்டம்
திரு முடியா நின்றான் பால் செல்லகிர்பீர்
கவ்வை மா களிறு உந்தி விண்ணி ஏற்ற
கழல் மன்னர் மணி முடி மேல் காகமேற
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3–
சமுத்திர நீர் ஆடை–ஜகம் திரு அடி தாமரை- காற்று திரு மேனி–எட்டு திசைகளும் தோள்–
அண்டம் திரு முடி -நின்றான் -விஸ்வ ரூபம் கண்டான் அர்ஜுனன்–திவ்ய சஷுஸ் கொடுத்து –
பயந்து பழைய திரு மேனி சேவிக்க கேட்டான் வீர கழல் மன்னர் மணி முடி கீழே விழ காக்கை ஏற –
தெய்வ வாள் கொடுக்க பெற்று உய்ந்த சோழன் சேர்ந்த திரு நறையூர் சேர்மின்களே என்கிறார்
ஜகத் ஆகாரம் அனுபவிகிறார் இதில்–
———————————————-
பைம் கண் ஆள் அரி வுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அம கை வாள் உகிர் நுதியால் அவனதாகம்
அம குருதி பொ ங்குவித்தான் அடிக் கீழ் நிறப்பீர்!
வெம் கண் மா களிறு உந்தி விண்ணி யேற்ற
விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செம் கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-4-
பசுமையான கண்-வெம் கண் மா களிறு- செம் கணான் -கோ சோழன்-
அவன் திரு கண்கள் எப்பொழுதும் அனுக்ரகம் பொழியும் -அரி உருவாய் இருந்தாலும் கோபம் ஏறிட்டு கொண்டு–
அடியார் அபச்சாரம் பொறாமையால் –வரத்தினில் சிரத்தை வைத்து–
வியாப்த்தி சொன்னதும் நிருசிம்கனை அனுபவித்து அடுத்து திரு விக்ரமனை அனுபவிகிறார்–
——————————————–
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறோர்
அரி வுருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண் ணுலகில் செல வுய்த்தாற்கு
விருந்தாவீர் !மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப்
புலம் பரந்து நிலம் பறக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வட புலக் கோன் சோழன் சேர்ந்த
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-5–
மூன்று உலகும் அளக்க மூன்றாவது திரு அடி எங்கு வைத்தான் -தெரியாது-வேதாந்தமே தெரியாது–
அவன் ஒருவனுக்கே தெரியும்–ஈர் அடியால் அளந்து முடித்தான்–
அத்வதீயம் ஓர் அரி உருவாய்–சேராதது சேர்த்த-பாலும் சக்கரையும் போல்-வரத்துக்கு தக்க படி எடுத்த உருவம்–
நிலம் பரக்கும் பொன்னி–பொன் சிதறி-
———————————————
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயம் கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய்த்
தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர் !
மின்னொடு வேலேந்து விளைந்த வேளை
விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6–
அடுத்து நாராயணா அனுபவம்–இச்சா மாத்ரத்தாலே –
சொரூபம் ரூபம் எல்லாம் இவனுக்கு ஆதீனம்-
தன்னாலே தன் உருவம் பயந்த தானாய்–குட நாடு-மேற்கு மலையாள நாடு–
——————————————–
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழல் லூதி ஆயர் மாதர்
இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர் !
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-7–
அந்த நாராயணனே கிருஷ்ணன்-சேஷ்டி தங்கள் அனுபவிக்கிறார் –
பேய்ச்சி துஞ்ச முலை தடத்த நஞ்சை உண்டு–முது -பழைய துவாரகை–
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி–காலி பின்னே-இலையால் செய்த குழல்–
மாதர் வளை கொண்டான்-கூரை பணியாய் ஆண்டாள்–ஒரு கூரையை எழுவர் உடைப்போம்-கை கூப்பி –
இரு கையால்-தண்டம் போல் விழுந்து -சேவித்து-தோழியும் நாமும் தொழுதோம்–
வையம் உய்ய வளம் கொடுக்கும் பொன்னி-
————————————————
முருக்கிலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்
மண்னெல்லாம் முன் அவியச் சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழிய செற்ற வேந்தன்
சிரம் துணிந்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் !
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு
எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8–
அந்த கண்ணனே நப்பின்னை பிராட்டி –கோவை வாயாள் பொருட்டு–கொம்புக்காகா ஏழு கொம்பில் குதித்தான் —
ராமன் ராவணனின் சிரம் துணித்தான்–சீதை பொருட்டு–மன் எல்லாம் ஷத்ரியர்களை முடித்த நம்பி மூத்த பிரான்–
எழுபது மாடம் செய்தானாம் சோழன் ஈசனுக்கு –சிவா பக்தன் முதலில் –பின் விஷ்ணு பக்தன் ஆனான்-
திரு குலம்- விஷ்ணு பக்தன் ஆனதும்–மோஷம் ஜனார்த்தனன் –சகல பல பிரதன்–
—————————————————
தாராளன் தன் னரங்க வாளன் பூ மேல்
தனி யாளன் முனி யாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேர் உடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் !
பாராளர் இவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
படை மன்னர் உடல் துணியப் பரி மா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-9–
ஒரே பாசுரத்தால் எல்லா சரித்ரம்–கங்குலும் பகலும் பதிகத்திலும் இது போல் -பஞ்ச பிரகாரம்-
கடல் வண்ணா கட்கிலி காகுத்தா கண்ணனே போலே–
முனியாளன் ஏத்த நின்ற பேராளன்-ஸ்ரீராப்தி-பின்னைக்கு மணவாளன்-விபவம்
ஆயிரம் பேர் உடைய ஆலன்-அந்தர்யாமி-பூ மேல் தனி யாளன் ஸ்ரீ வைகுண்ட நாதன்-
கிருஷ்ணன் ஒருவனையே என்றும் வியாக்யானம் -திரு அழுந்தை-
————————————-
செம்மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
திரு நறையூர் மணி மாடச் செம் கண் மாலை
பொய்ம் மொழி யொன்று இல்லாத மெய்ம்மை யாளன்
புல மங்கை குல வேந்தன் புலமை யாரந்த
அம் மொழி வாய்க் கலி கன்றி இன்பப் பாடல்
பாடுவார் வியன் வுலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே 6-6-10-
யதார்த்தம் சொல்லக் கூடிய செம் மொழி-சத்யம் பேசு பிரியம் பேசு–மெய்யே பேசும் திரு மங்கை ஆழ்வார் –
இன்ப பாடல்–பாடினால் நமன் தமரால் ஆராய பட மாட்டார் –
சொல்லி விண்ணவர்க்கு விருந்தாகும் –உயர்ந்த ஸ்தானம்–
ஸ்ரீ பாதம் விளக்குவார்களாம் நித்ய சூரிகள்–
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply