விண் நாட்டவர் மூதுவராம் தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே-2
கண்ணன் நீள் மலர் பாதம் -37
குடம் ஆடியும் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து நடம் ஆடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே 38
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் என் கால் அளவின்மை காண்மின் என்பான் ஒத்துவான் நிமிர்ந்த தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்களே 42
கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே 43
அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் திட நெஞ்சமாய் எம்மை 46
எம் ஈசர் விண்ணோர் பிரானார் மாசில் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே 54
கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஒரு கழல் போய் நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது 58
ஜாலம் முற்றும் வேயகமாயினும் சோரா வகை இரண்டே அடியால் தாயவன் ஆய குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே 61
உலகு அளந்த திரு தாள் இணை நில தேவர் வணங்குவர் 64
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கியும் உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ் உற்றும் உறாதும் 65
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் 69
பார் அளந்த பேர் அரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்து ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உருகின்றதே 80
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் தாவின வேற்றை எம்மானை 89
உன் திருவடி சூடும் தகைமையால் நிலை பெய்த 90
மாவலி மாட்டு இரும் குறளாகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே 91
—————————————————————————————-
திருவாசிரியம்
மூ உலகு அளந்த செவடியோயே !
அறை கழல் சுடர் பூ தாமரை சூடுதற்கு அவாவு ஆர் உயிர் உருகி வுகக நேரிய காதல்
மாய கடவுள் மா முதல் அடியே
மா முதல் அடி பொது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒன சுடர் அடி பொது ஓன்று விண் செலீஇ
————————————————————————————————–
பெரிய திரு அந்தாதி
பார் இடந்த அம்மா ! நின் பாததருகு 7
பருகலாம் பண்பு உடையீர் ! பார் அளந்தீர் ! 8
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு 12
மாணி உருவாகி கொண்டு உலகம் நீரேற்ற சீரான் 20
அடியால் படி கடந்த முத்தோ ? அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ ? நெடியாய்! செறி கழல்கள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம் அறிகிலமால் நீ அளந்த அன்று 27
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழல குடங்கள் தலை மீது எடுத்து கொண்டாடி 31
புனமேய தண் துழாயான் அடியை தான் காணும் அக்தன்றே ? 51
அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி 56
மேலால் பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு 58
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அந் நாள் 61
மணிகாம்பு போல் மண் அளந்தான் 62
மட நெஞ்சே ! கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் 67
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல் 80
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி -84
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே ! எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் 87
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
Leave a Reply