திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்-நம் ஆழ்வார்-திருவாய் மொழி -இரண்டாம் பகுதி ..

கரு நாராய் ! நம் பெருமானை கண்டு பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே 6-1-2

எனக்கு ஓன்று உரை   ஒண் கிளியே …திரு வண் வண்டூர் கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே 6-1-7

அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் திரு வண் வண்டூர்  உறையும்  கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலை கண்டு கொடிய வல் வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே 6-1-9

விண்ணோர் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வான் சரணே 6-3-7

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் தன சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும்  தென் சரண் திசைக்கு திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னைஆள் உடைய என் அப்பனே 6-3-8

தன அப்பன் தன ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே 6-3-9

திரு விண்ணகர்  மன்னு பிரான்  கழல்கள் அன்றி மற்று ஓர் களை கண் இலம் காண்மின் களே 6-3-10

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரத்து திரு விண்ணகர் பத்தும் வல்லார்  கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர்குரவர்களே 6-3-11

மாயங்கள் செய்து ..தன தாமமே புக மேவிய சோதி தன தாள் நண்ணி நான் வணங்க பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகரே 6-4-10

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன தூய ஆயிரத்து இப் பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே 6-4-11

கையேடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என் தையல் இளந்தது தன உடைய சாயே -6-6-7

மாய சகடம் உதைத்த மணாளர் 6-6-8

தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் 6-8-6

மது சூட பிரான் அடி மேல் ..சடகோபன் சொன்ன  6-8-11

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறா பிளந்து வீய திரு கால் ஆண்ட பெருமானே ! 6-9-4

பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்  பரவை
நிலம் எல்லாம் தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடா வந்த மாயோன் ! 6-9-6

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவி கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ 6-9-9

திலதம் உலகுகாய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே 6-10-1

ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே 6-10-2

அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆவா என்னாயே 6-10-3

பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே 6-10-4

திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என் நாளே ? 6-10-5

என் நாளே ? நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று என் நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் மெய் நா மனத்தால் வழி பாடு செய்யும் திரு வேங்கடத்தானே மெய் நான் எய்தி என் நாள் உன் அடி கண் அடியேன் மேவுவதே ? 6-10-6

நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே 6-10-7

நோலாது ஆற்றேனே நோலாது ஆற்றேனே என்று நுண் உணர்வின் 6-10-8

அந்தோ  ! அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே 6-10-9

புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் ..சடகோபன் 6-10-11

ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் 7-1-1

உன் திருவடி சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி ? அந்தோ ! 7-1-3

உன் அடி போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் 7-1-4

என் பரம் சுடரே ! என்று உன்னை அலற்றி உன் இணை தாமரை கட்கு அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் 7-1-10

உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே 7-2-5

அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே 7-2-10

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த்தவன் ..சடகோபன் முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் 7-2-11

ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோளழ எழ முடி பாதம் எழ அப்பன் வூழி எழ உலகம் கொண்ட வாறே 7-4-1

சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த தன்மை அறிவாராய் அறிந்துமே 7-4-3

வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ ? போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கி தன தாளின் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணிதெளிவுற்றே 7-5-10

பாமரு மூஉலகம் அளந்த பற்ப பாதாவோ ! 7-6-1

என்று கொல் ? சேர்வது அந்தோ ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திரு பாதத்தை யான் 7-6-2

வந்து எய்துமாறு அறியேன் ..அடி உந்தி கை மார்வு கண் வாய் செம் சுடர் சோதி விட வுறை என் திரு மார்பனையே 7-6-6

அகல் இடம் முற்றவும் ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திரு குறள் அப்பன் அமர்ந்து உறையும் ….திரு வாறன் விளை 7-10-2

மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க …திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே 7-10-5

வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலமே 7-10-7

அன்றி மன்று ஒன்றிலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின் வாய் நின்று தன நீள் கழல் எத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் 7-10-8

தாள்களை எனக்கே தலை தலை சிறப்ப தந்த பேர் உதவி கைமாறா தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ ..தாள்கள் ஆயிரததாய் ..பெரியஅப்பனே  8-1-10

நன் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர் பாதம் அடைந்ததுவே 8-2-10

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு  கோதில் புகழ் கண்ணன் தன அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன  ..ஆயிரத்துள் 8-2-11

என்றே ? என்னை உன் ஏரார் கோலத்து இருந்த அடி கீழ் நின்றே ஆள் செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஏழ் ஜாலம் முழு ஏழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழி திரு மாலே ! 8-3-8

திரு செங்குன்றூரில் திரு சிற்றாங்கரை மீபால் நின்ற எம்பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிரித்து இல்லை எனக்கே 8-4-3

திரு செங்குன்றூர்  திரு சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற எம்பெருமான் அடி இணை அல்லாதோர்  ஓர் அரணே 8-4-4

திரு செங்குன்றூரில்   திரு சிற்றாறு  அதனுள் கண்ட அத திருவடி என்றும்  திரு செய்ய கமல கண்ணும் செவ் வாயும் செவ் வடியும் செய்ய கையும்  திரு செய்ய கமல உந்தியும் செய்யகமல மார்பும் செய்ய உடையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தை உளானே 8-4-7

மாய கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதி செவ் வாய் முகிழதா சாயல் சாம திரு மேனி தண் பாசடையா தாமரை நீள் வாச தடம் போல் வருவானே! ஒரு நாள் காண வாராயே ! 8-5-1

உன் துளங்கு சோதி திரு பாதம் எல்லையில் சீர் இள ஜாயிறு இரண்டு போல என் உள்ளவா 8-5-5

என்னை ஆள கூப்பிட்டு  அழைதக்கால்    தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே 8-5-6

உன் வையம் தாய மலர் அடி கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவி பணி கொள்ளாய் செம் தண் கமல கண் கை கால் சிவந்த வாயோர் கரு ஜாயிறு ..அம்மானே 8-5-7

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழவானவர் தாம் வந்து  நண்ணு திரு கடி தான நகரே 8-6-7

இருத்தும் வியந்து என்னை தன பொன் அடி கீழ் என்று அருத்தித்து 8-7-1

கரு மாணிக்க குன்றத்து தாமரை போல் திரு மார்பு கால் கண் கை செவ் வாய் உந்தி யானே 8-7-6

சுடர் பாம்பணை நம் பரனை திரு மாலை அடி சேர் வகை வண் குருகூர் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்து 8-7-11

தெருளும் மருளும் மாய்த்து தன திறத்து செம் பொன் கழல் அடி கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திரு மாலை  அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால் அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே 8-8-11

கரு மாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் திரு மாறவு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் 8-9-1

தண் திரு புலியூர் மல் அலன்செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இம் மட வரலே 8-9-7

கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் விடுமாறு எனபது என் ? அந்தோ  !வியன் மூ உலகு பெறினுமே 8-10-1

புயல் மேகம் போல் திரு மேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் சயமே அடிமை தலை நின்றார் திரு தாள்; வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவி யேனுக்கே? 8-10-2

திரு குறளன் நறு மா விரை நாள் மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே 8-10-3

அருள் பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் சுழி பட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் 8-10-5

உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் நன் இனி மா கலவி  இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே 8-10-7

தளிர் நீர் கடலை படைத்து  தண்   தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி 8-10-8

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே 8-10-9

நீக்க மில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் 8-10-10

மாயவன் அடி பரவி போழ்து போக உள்ள கிற்கும் புன்மை இலாதவர்க்கு 9-1-8

ண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதர்ற்கே வட மதுரை பிறந்தான் திண்ண மானும் முடைமை வுண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ  எண்ண வேண்டா நும் மதாதும் அவன் அன்றி மற்றுஇல்லையே 9-1-10

உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் 9-2-2

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி  9-2-8

வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே  9-2-10

உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளதோர்வாரே 9-2-11

தொல் புகழ் பாம்பு அணை பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன்ன தாள்களே 9-3-9

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி கோல நீள் குருகூர் சடகோபன் சொல் மாலை ஆயிரத்துள் 9-3-11

அரவின் அணை பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காண கருதும் கருத்தே 9-4-5

குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே 9-4-10

நான் வளர்த்த சிறு கிளி பைதலே …என் ஆர் உயிர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தன் 9-5-6

குளிர் மூழி களத்து உறையும் செக் கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய் அக் கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கே 9-7-3

திரு மேனி அடிகளுக்கு தீ வினையேன் விடு தூதாய் ..முகில்காள் 9-7-4

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனை பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என்தேவே 9-8-8

மாலை நண்ணி தொழுது எழுமினோ வினை கெட காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ் திரு கண்ண புரத்து ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே 9-10-1

சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரண் அமைந்த மதிள் சூழ் திரு கண்ண புரத்து தரணியாளன் தனது அன்பர்க்குஅன்பாமே 9-10-5

அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் 9-10-6

அணியனாகும்  தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் ..திரு கண்ண புரம் பணிமின் நாளும் பரமேட்டி தன பாதமே 9-10-8

பாதம்  நாளும் பணிய தணியும் பிணி 9-10-9

குருகூர் சடகோபன் சொல் பாடலான இப் பத்தும் பாடி ஆடி பணிமின் அவன் தாள்களே 9-10-11

திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றியாமே 10-1-2

பாம்பு அணை பள்ளி கொள்வான் திரு மோகூர்  இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே 10-1-4

திரு மோகூர்   ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம்  அரணே 10-1-5

மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செவ்வாய்  அணி கொள் நாள் தடம் தோள் தெய்வம் ..உறை பொழில் திரு மோகூர் நணித்து நம் உடை நல் அரண் நாம் அடைந்தனமே 10-1-9

செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் 10-2-5

படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் 10-2-8

தூம நல் விரை மலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே 10-2-9

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம கண்ணா ! உன் கோல பாதம் 10-3-5

மா மணி வண்ணா !உன் செம் கமல வண்ண மென் மலர் அடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்த அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலை பெயில் எவன் கொல் ஆங்கே ? 10-3-7

செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத திருவடி திருவடி மேல் ..சடகோபன் சொல் ஆயிரத்துள் 10-3-11

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் 10-4-1

வாள் கெண்டை யொண் கண் மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே 10-4-3

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் 10-4-4

இள மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே 10-4-6

பாழி அம தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே! மறவாது வாழ் கண்டாய் 10-4-8

கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை ஆயின எல்லாம் 10-4-9

இப் பத்தும் கற்றார்க்கு  ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே 10-4-11

கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே 10-5-1

ஆள் வானாழிநீர் கோள் வாய் அரவின் அணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே 10-5-4

இருள் தரு மா ஜாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே 10-6-1

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஜால பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே ! கேசவன் எம்பெருமானை பாட்டாய பல பாடி பழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே 10-6-2

தேன் ஏறு மலர் துளவம் திகழ பாதன் செழும் பறவை தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே 10-6-5

தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் நிலை பெறான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் மலை மாடத்து அரவு ஆணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலை யானை மறுப்பு ஒசித்தான் குரை கழல்கள்குருகினமே 10-6-6

குரை கழல்கள் குருகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்  திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் விரை குழுவு நறும் துளவம் மெய் நின்று கமழுமே 10-6-7

காட்டி தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம்பெருமானை 10-6-11

நன்கு என் உடலம் கை விடான் ஜாலத்தூடே நடந்து உழக்கி  தென் கொள் திசைக்கு திலதமாய் நின்ற திரு மால் இரும் சோலை நாங்கள் குன்றம் கை விடான் 10-7-4

திருமால் என்னை ஆளு மால் சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே 10-7-6

கொடி கோபுர மாடங்கள் சூழ் திரு பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே 10-8-3

உற்றேன்  உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் ! கற்றார் மறை வாணர்கள் வாழ் திரு பேரர்ற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லல்நில்லாவே 10-8-10

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading