ஸ்ரீ விஷ்ணுஸ் சேஷீத்யாதி ஏக ஸ்லோகம் -ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம்–

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
–யமுனரின் மகனும், யாருடைய கடாக்ஷமோ எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் அருளை நமக்கு மிக எளிதாகப் பொழியச் செய்யுமோ, அந்த பெரியவாச்சான் பிள்ளையை நான் வழிபடுகிறேன்.

விஷ்ணு: சேஷீ ததீய: ஸூபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி:
ஸ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் |
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத்
ஸிஷ்டம் ஸ்ரீமத் குரூணாம் குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ: ||–ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையின் பெருமையையும், ஆசாரிய அபிமானமே (இராமானுசரின் திருவடிப் பற்றே) மோட்சத்திற்கு எளிய வழி என்ற தத்துவத்தையும் இந்த ஒற்றைஸ் ஸ்லோகம் அழகாக உணர்த்துகிறது.-இந்த ஏக ஸ்லோகம் ஸ்ரீவைணவத்தின் உத்தாரக ஆசாரிய (சம்சாரத்திலிருந்து நம்மை விடுவித்து மோட்சம் அளிக்கும் ஆசாரியர்) தத்துவத்தை மிக ஆழமாக விளக்குகிறது:

விஷ்ணு: சேஷீ – ஸ்ரீமந் நாராயணனே அனைவருக்கும் மற்றும் அனைத்து உலகங்களுக்கும் ஒரே எஜமானன் (சேஷி – தலைவன்).ததீய: ஸூபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி: – அந்த பகவானுடைய நற்குணங்களின் இருப்பிடமாகவும், அவனது திவ்ய மங்கள வடிவமாகவும் (விக்ரஹமாக) விளங்குபவர் நம்மாழ்வார் (ஸ்ரீசடாரி).ஸ்ரீமாந் ராமாநுஜார்ய: – கைங்கர்ய ஸ்ரீயைக் கொண்டவரான எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர்—பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் – அந்த நம்மாழ்வாரின் அழகான தாமரை மலர் போன்ற திருவடி இணைகளாக பிரகாசிக்கிறார்–தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர – “ஆசாரியன்” (குரு) என்ற சொல்லும் அதன் முழுமையான பொருளும் அந்த இராமானுசனிடமே முழுமையாகப் பொருந்துகிறது, வேறு எவரிடமும் இல்லை–தஸ்மாத் ஸிஷ்டம் ஸ்ரீமத்குரூணாம் குலமிதமகிலம் – எனவே, அவருக்கு முன்னும் பின்னும் உள்ள மற்ற அனைத்து ஆசாரிய வர்க்கங்களும்–தஸ்ய நாதஸ்ய சேஷ: – அந்த இராமானுசனுக்கே (நாதனுக்கு) அடியவர்களாக (சேஷமாக) விளங்குகிறார்கள்.–

பகவானே முதன்மைத் தலைவன்: உலகங்கள் அனைத்திற்கும் ஸ்ரீ விஷ்ணுவே அதிபதி (சேஷி). ஆனால், ஜீவாத்மாக்கள் நேரடியாக அவனிடம் செல்வது கடினம்.-ஆழ்வாரின் பெருமை: அந்த பகவானின் கருணையே வடிவமாக வந்தவர் நம்மாழ்வார். அவர் இறைவனின் அவயவமாக (வடிவமாக)ப் பார்க்கப்படுகிறார்.-இராமானுசரின் தனித்துவம்: நம்மாழ்வாரின் திருவடிகளாக விளங்குபவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தில் ஆசாரியரின் திருவடிகளே நமக்குப் புகலிடம். எனவே, ஆழ்வாரின் திருவடியான இராமானுசரே நமக்கு மோட்சம் அளிக்கும் உத்தாரக ஆசாரியர் ஆவார்.-குரு என்ற பதம்: “குரு” அல்லது “ஆசாரியன்” என்ற இலக்கணத்திற்கு முழு இலக்கணமாகத் திகழ்பவர் எம்பெருமானார் மட்டுமே. மற்ற குருமார்கள் அனைவரும் இராமானுசரின் பெருமையைப் பேசுவதாலும், அவரது வழியைப் பின்பற்றுவதாலும், ஒட்டுமொத்த குருபரம்பரையுமே இராமானுசருக்குச் சேஷம் (அடிமை) என்று இந்த ஸ்லோகம் அறுதியிட்டுக் கூறுகிறது

விஷ்ணு: -ஸர்வ வ்யாபியான ஸர்வேஸ்வரன்
சேஷீ –ஸர்வ ஸ்வாமியாய் இருக்கும்
ஸ்ரீசடாரி:-ப்ரக்ருதி பந்த நிவர்த்தகரான நம்மாழ்வார்
ததீய: -அந்த சர்வேஸ்வரதனாய்
ஸூப குண நிலயோ -ஸர்வ கல்யாண குணா ஆவாஸமான
விக்ரஹ: –திருமேனியாய் இருப்பர்
ஸ்ரீமாந் -உபய விபூதி நாயகரான
ராமாநுஜார்ய: -எம்பெருமானார்
ரம்யம்-ஸகல சேதன ஸமாஸ்ரயண அர்ஹமாய்
ததீயம்-ஆழ்வாராகிய திருமேனியின் ஏக தேசமான
பதகமலயுகம் -பாதாரவிந்த யுகளமாய்க் கொண்டு
பாதி -விளங்குகிறார்
தஸ்மிந் -அப்படி சரண்யத்வ ரூபரான
ராமாநுஜார்யே -ஸ்ரீ ராமானுஜர் இடத்திலேயே தான்
குருரிதி -ஆச்சார்யர் என்கிற
ச பதம் –ஸப்தமும்
பாதி -ஸார்த்கமாய் பிரகாசியா நின்றது
தஸ்மாத்-அந்த ஹேதுவாலே
ஸிஷ்டம் -மீந்த
ஸ்ரீமத் -நிரவதிக ஞாந அனுஷ்டான தேஜஸ்ஸை யுடைத்தான
குரூணாம் -பூர்வ உத்தர ஆச்சார்யர்களுடைய
அகிலம்-சகலமான
குலம் -சமுதாயமானது
தஸ்ய-சேஸ்வர ஸகல சேதன உத்தாரகரான
நாதஸ்ய-ஸர்வ ஸ்வாமியான உடையவருக்கு
சேஷ: ஆத்ம உஜ்ஜீவன கார்ய நிரவர்தக பரிஜனமாய் சேஷமாய் இருக்கும்

இஸ் ஸ்லோகார்த்தம் தான் பாஷ்யகார அபிமத விஷய கூரேச குல ப்ரதீபராய் கோவிந்த குரு சரணாரவிந்த வந்தந பரராய் இருக்கிற பட்டாருடைய பாத கமல ராஜ ஹம்ஸரான நிகமாந்த யோகி நியத மாநஸராய் அத்தோடே ஸ்ரீ மாதவ ஸிஷ்ய அபிதேயரான லோகாச்சார்யருடைய சரணாம்புஜ ஸம்ஸரயண மஹா தநராய் இருக்கிற அபயப்ரத ராஜ சந்தர்சித ராஜ பதமாய் இருக்கும் – இதில் பிரதிபாதிக்கிறவர் தம்தான் ஸ்ரீ யபதியாய் -ஸர்வ வியாபகனான சர்வேஸ்வரன் ஸர்வ ஆத்மாக்களுக்கும் சேஷி –அவனதாய் கல்யாண குணங்களுக்கு இருப்பிடமான விக்ரஹம் ஆழ்வார் -அவருடைய வகுளாபிராமமான ஸ்ரீ மத் ததங்கரி யுகளம் -(ஸ்தோ ரத் -5) ராமானுஜராய் விளங்கா நிற்பர் -ஆகையால் மாறன் அடி பணிந்து உய்ந்த -ராமானுஜாச்சார்யார் இடத்திலே ஆச்சார்ய பதம் பிரகாசியா நிற்கிறது -ஆகையால் அவரை ஒழிந்த மற்றவர்களிடத்தில் அது இல்லை -இப்படி நீர்ணீத மாகையாலே சேஷித்வ ஆச்சார்யர்களுடைய ஸகல குலமும் உபய விபூதியையுமுடையவரான உடையவருக்கு சேஷம் என்கிறது –

விஷ்ணுஸ் சேஷீ -ஸர்வ வியாபகனாய் -அத ஏவ-ஸர்வ ஸரீரியாய் இருக்குமவன் இறே ஸர்வ சேஷியாகிறான் –சேஷித்வ ஸித்திக்காக சேஷ பூதரைத் தேடியோடித் திரியுமத்தனை -அந்தஸ் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வத்மா -தைத்ரிய -3-11-21-ஸாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித-விஷ்ணு புராணம் -1-17-20-என்னக் கடவது இறே-வ்யாபகத்வ நியந்த்ருத்வ தாரகத் வாதிகளை யுடையவனிறே சேஷி யாகிறான் -அல்லாதவர்கள் சரீரவச் சேஷியாய் இருப்பர்கள் -அந்த ஸம்பந்தத்தை அறியாமையாலே அஹம் அபிமானம் பண்ணி அநர்த்தப்படுகிறது -அத்தைப் பற்ற அவர்கள் ஹ்ருதய ஸ்திதி ஈஸ்வரனுக்கு தவா அநலமாகையாலே ஸீதள தடாகம் போன்ற விசேஷஞ்ஞர் சித்தத்தை விரும்பிப் போரா நிற்கும் –இவர்கள் தான் விஷ்ணுவைச் ஸித்தத்திலே யுடையவைகளிறே -என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ -5-4-9- என்றாரிறே -இப்படிப்பட்ட இவர்கள் தர்சனம் அரிது என்னுமத்தை ஸர்வத்ர ஸூலபோ விஷ்ணு -ஸர்வ வ்யாபி நிரஞ்சன துர்லபம் ஸர்வ லோகேஷு விஷ்ணு பக்தஸ்ய தர்சனம் -என்கிற ப்ரமாணத்தில் சொல்லப்பட்டது -ஆஹேயால் இப்படி சேஷியாக -சேஷியான -அந்த விஷ்ணுவினுடைய விசேஷ அதிஷ்டானம் ஸஸ்ரீக மாயிறே இருப்பது -அவள் தான் விஷ்ணு பத்னி இறே -(பூ ஸூக்தம் நீளா ஸூக்தம் )விஷ்ணோஸ் ஸ்ரீரீர் அநபாயிநீ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததை வேயம் -விஷ்ணு பு -1-8-17- என்னக் கடவது இறே

இந்த விக்ரஹ வியாப்தி தான் பத்ம கோஸ பிரதீ காஸம் ஹ்ருதயஞ்ச அப்யதோ முகம் -தைத்த -11-26-95-என்கிற ஹ்ருதய கமலத்திலே அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிர் இவா அதூமக-கட-2-1-13-என்றும் நீல தோயத மத்யஸ்தா வித்யுல் லேகேவ பாஸ்வரா -தைத்-11-26-100-என்றும் யேஷாம் இந்தீவரஸ்யாமோ ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித (ஸ்ரீ இராமாயண ப்ராயண க்ரமம் ) என்றும் சொல்லுகிறபடியே ஸூபாஸ்ரயமான (விஷ்ணு 6- -7-76) திருமேனியோடே அவர்களுக்குத் த்யேயனாகைக்காகவும் -அவர்களை ரக்ஷிக்கைக்காகவும் பந்து பூதனாய்க் கொண்டு எழுந்தருளி இருக்கும் இருப்பு–

இப்படி வியாபிக்கும் இடத்தில்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க சக்ர -பராங்குச அஷ்டகம்
-4-என்றும் நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்த என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி யங்கை யுளதே -திருவாய் -5-5-7-என்றும் –கண்கள் சிவந்து -என்று தொடங்கி -கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –8-8-1-என்றும் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தாய் -10-8-1-என்றும் சொல்லுகிறபடியே ஸ விக்ரஹனாயக் கொண்டு பத்நீ பரிஜனாதி களோடே யாய்த்து வியாபிப்பது -அரவத்தமளியில் –5-2-10- படியே -இத்தால் ப்ரணவத்தில் லுப்த சதுர்த்தியில் ப்ரதிபாதிக்கிற சேஷத்வ ப்ரதிகோடியான சேஷித்வமும் விஷ்ணு ஸப்தத்தாலே அந்தர் வியாப்தி பஹிர் வ்யாப்திகளை ப்ரதிபாதிக்கிற நாராயண ஸப்தார்த்தமும் சொல்லிற்று -வியாப்தியில் ஸித்திக்கிற ஸரீரி சரீர பாவத்தாலுண்டான சேஷித்வமும் ஸித்தம்–

ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் ஆழ்வாரைக் கணிசித்து இறே -எங்கணும் நிறைந்த வெந்தாய் -திருவாய் -3-2-4-என்று ஸ்வார்தமாக வனுசந்தித்தார் இறே –அல்லாதார் இடத்தில் இருப்பு -முள் மேலில் இருப்புப் போலே -ஞானசாரம் -10-பூ மேலில் இருப்புப் போலே காலூன்றி இருப்பது இங்கே இறே -பேரேன் என்று-10-8-2-என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -8-7-1-இருள் தான் அற வீற்று இருந்தான் -8-7-3-என்றார் இறே -இப்படி ஈஸ்வரன் நெடுங்காலம் எதிர் சூழல் புக்கு -2-7-6-யத்னப்பட்டு தேடிக்கொண்ட திருமேனி ஆழ்வார் என்கிறது –ததீய ஸூப குண நிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி:என்று-

ஸூப குணங்களாவன -ஸமஸ்த கல்யாண குண அம்ருதோததி –ஸ்தோத்ர-18- என்றும் அஸங்க்யேய கல்யாண குண கண ஏக மஹார்ணவ -சரணாகதி கத்யம் -5- என்றும் குணங்கெழு கொள்கையினான் -1-6-4- என்றும் சொல்லப் படுகிற கல்யாண குணங்களுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் என்கை –

ததீயமாவது –
அவன் தனக்கும் அப்ருதக் ஸித்த விசேஷணமாய் ஒழிக்க ஒழியாததாய் இருக்கை -(திருப்பாவை -28)-துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே (திருவாய் -3-10-6) என்னக் கடவது இறே -ததீய-என்கையாலே ஸ்வா தந்தர்யம் நிவர்த்தமான படியைச் சொல்லுகிறது –தன்னோடு தனக்கு அந்வயம் இல்லாத பாரதந்தர்யம் நமஸ்ஸிலே இறே தோற்றுகிறது -அதைச் சொல்லுகிறது -இத்தால் தனக்கு அசாதாரணமாய் ஸமஸ்த கல்யாண குண ஆஸ்பதமாய் இருக்கிற விக்ரஹம் ஆழ்வார் என்கிறது –

இவர் விக்ரஹமாகிற படி எங்கனே என்னில் -ஸர்வேஸ்வரனுக்கு ஸாதாரணம் என்றும் அசாதாரணம் என்றும் விக்ரஹம் தவிதமாய் இருக்கும் -அதாவது –பரஞ்சுடர் உடம்பும் அழுக்குப் பதித்த உடம்பும் -6-3-7-அவை தான் ஸூத்த ஸத்வ மயமாகையாலே பஞ்ச உபநிஷண் மயமான அப்ராக்ருதமாயும் மிஸ்ர ஸத்வ மயமான பாஞ்ச பவ்திகமாகையாலே ப்ராக்ருதமாய் இருக்கும் –அவை தான் ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாசகம் -என்றும் பகவத் ஸ்வரூப திரோதான கரீம் -(சரணாகதி கத்யம் -13)-என்றும் ப்ரகாஸ அப்ரகாஸ ங்களை யுடைத்தாய் இருக்கும்-ஜகத் ஸர்வம் ஸரீரம் தே (யுத்த -120-26) என்னக் கடவது இறே -இப்படிப்பட்ட இரண்டு விக்ரஹங்களில் காட்டிலும் அந்தரங்க விக்ரஹம் ஆழ்வார் என்கிறது –

கீழ்ச் சொன்ன இரண்டு விக்ரஹமும் அசேதனமாய் அதில் ஓன்று அஹங்கார மிஸ்ரமாய் அழுக்கு உடம்பாய் -(திருவிருத்தம் -1) இருக்கும் –இது வடிவே வடிவாம் என்னும்படி (அடிமையே வடிவாம் என்னும்படி ) சேதனமுமாய் அத்யந்த பரதந்த்ரருமாய் இருக்கும் -அதில் தத்வ த்வய வைசிஷ்ட்யமே யுள்ளது -இதில் தத்வ த்ரயமும் கூடியிருக்கும் -சேதன அசேதன சரீரி இறே நாராயணன் ஆவான் -யாவையும் யாவரும் தானாம் அமைவுடி நாரணன் -1-3-3-என்றார் இறே -அவற்றிலும் இவருடைய ஸ்வரூப ரூபங்களிலே யாய்த்து ஆதரித்து வர்த்திப்பது -அப்போது இறே நாராயணத்வ பூர்த்தி யுள்ளது -அறிகிலேன் இத்யாதி -(திருவாய் -9-6-4)-இப்படி விரும்புவது தன் ஸ்வரூப லாபத்துக்காக -ஆவி யல்லல் மாயத்ததே -4-3-3-

புகுந்ததற்பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கான -2-6-2-இந்த விக்ரஹம் ஸூக ஞான கந பூர்ணத்வாத் -விஞ்ஞான கந ஏவம் (ப்ரு உப -2-4-15) பர ஞான கந ஏவம் (நரஸிம்ஹ தாப உப -5)என்று இறே இருப்பது -பர நன் மலர்ச்சோதி -10-10-10- என்னக் கடவது இறே -ஸத்யம் ஞானம் -(தைத் உபை -3-) ஞான ஸ்வரூபம் (விஷ்ணு ப-1-4-40) உணர் முழு நலம் -1-1-2- ஞான இன்பம் -10-10-10- என்னும்படி இறே பர ஸ்வரூபம் இருப்பது -இப்படி ஸத் தர்ஸமாய் இருக்கிற இருவர் சேர்த்தியும் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் ஓத்தே -2-3-1- என்னும்படி ஏக ரசமாயச் சேர்த்தி இறே இருப்பது -உள்ள உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ -பெரிய திரு -76-

விதி சிவாதிகள் இடத்தில் கார்யகாலத்தில் வியாபிக்கும் இடத்தில் அஹங்கார யுக்தன் சேதனராகையால் அடிச்சுட்டு நெல்லும் மோரும் கலந்தால் போலே பொருத்தமற்று இருக்கும் -த்வாமாவிஸ்ய என்றும் மமாந்தராத்மா (மோக்ஷ தர்மம் -179-4) என்றும் ஸோ அந்தராதந்தரம் ப்ராவிஸத் (அதர்வசிக உப ) திசைமுகன் கருவுள் வீற்று இருந்து படைத்திட்ட கருமங்களும் (5-10-8) என்றும் அரன் அயன் என (1-1-8) என்றும் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரங்களைப் பண்ணும் என்னக் கடவது இறே –

ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந -என்று இறே சேதன ஸ்வரூபம் -ஞான ஆனந்த ஸ்வரூபம் என்றும் சொல்லப்படுகிற பரன் இறே சேஷி யாவான் –இப்படி இருக்கிற சேஷ சேஷிகளுடைய ஸ்வரூபத்தை யுணர்ந்து யதேஷ்ட விநியோக அர்ஹமான அகமேனி (திருவாய் -9-7-10)இறே இவர் தான் -இவர் தான் மதிநலம் -1-1-1- பெறுகையாலே கரணிக்குக் கண் மணி போல் த்ருஷ்ட்டி பூதராய் இருப்பர் -இப்படி சேதனமாய் இருபத்தொரு விக்ரஹம் உண்டு என்னுமத்தை -இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதி வித்தி மே பராம் ஜீவ பூதாம் -கீதை -7-5-என்று தானே அருளிச் செய்தான் இறே –அறிவார் உயிரானாய் -6-9-8-அவன் உலகங்களுக்கு எல்லாம் ஓர் உயிருமாய் பேர் உயிருமாய் இருக்கும் -ஏவம் விதமானவன் சரீரியாய் வியாபிக்கும் இடத்தில் ஸ மஹாத்மா -கீதை -7-19 என்னும்படி ஸ தர்ஸராய் இருப்பர் –

கண்ணனுக்கு என்றீரியாய் -6-7-9-எல்லாம் கண்ணன் -6-7-1-என்று இருப்பவர் இறே இவர் -அவனும் கண்ணி எனதுயிர் -4-3-5-தோளிணை மேலும் –1-9-7– இத்யாதிப்படியே எல்லாம் -6-7-1- இவரே யாக வெண்ணி தலை தடு மாறாக விநியோகம் கொள்ளும் தசையிலே சேஷி கருத்தறிந்து எதிர்விழி கொடுத்து பாரதந்தர்ய போக்யத ஏக விஷயமாகத் தம்மை விநியோகப்படுத்தி அவனை யுகப்பித்து அது கண்டு ஆர் உயிர் பட்டது எனதுயிர் பட்டது -9–6-9-என்று தான் உகக்கும் வியக்தி இது ஓன்று இறே

அஹம் ஈஸோ ந மே கஸ்சித்-இத்யாதி இவர் தான் சேதனராய் இருந்து வைத்தும் ஸ்ரக் சந்தநாதிகளோபாதி போக்தாவான வனுக்கு போக்யமாய் இறே இருப்பது -தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே -2-9-4–உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க வின்புறுதும் -10-3-9-என்னை முற்றுமுயிர் வுண்டு -10-7-3-என்னுயிராய் என்னுயிருண்டு -10-7-3-அஹம் அன்னம் அஹம் அன்ன மதந்தமத்மி -ரஸம் ஹ்யேவாயம் லப்தவா ஆனந்தீ பவதி –படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே -4-9–அஹம் ஸர்வம் கரிஷ்யாமி –ஸ்வயம் து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத-ஆரண்ய -15-7- நித்ய கிங்கர ப்ரஹர்ஷயாமி ஸ்தோத்ர-46- என்று இறே ஸ்வரூப யதாத்ம்ய தர்ஸிகள் ஸூக்தி இருப்பது –

இனித்தான் இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ -விஷ்ணு -6-5-84- என்றும் ஸ்வ அபிமத அனுரூப –என்று தொடங்கி அனந்த குண நிதி திவ்ய ரூப-சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிற படியே தனக்கு அபிமதமாய் ஸமஸ்த கல்யாண குணாகரமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் -நித்யமாய் –எண்ணும் பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய் -1- என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசகமான அப்ராக்ருத விக்ரஹத்தில் காட்டில் இதற்கு உண்டான வாசி -அந்த விக்ரஹத்தை தான் உகக்கை ஒழிய அது தன்னை உகக்க அறியாதிறே –சைதன்யா அநாதரமான அசித்தாகையாலே –இங்கு பரிபூர்ண ஞானராகையாலே -ஞானம் கனிந்து -66-ஆராத காதலாய் -2-1-11-காதல் கடல் புரைய -5-3-4–காதல் உரைக்கில் -7-3-8-அதனில் பெரிய என் அவா -10-10-10-என்னும்படி அபி நிவேசம் விஞ்சி இருக்கையாலே –

ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -(ஸ்ரீ பாஷ்யம் ஜிஞ்ஞாஸ அதி கரணம் -லகு ஸித்தாந்தம் -நாயமாத்மா ஸ்ருதி வியாக்யானம் )ப்ரியா ஹி ஜ்ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ஸ ச மம பிரிய -கீதை -7-17-தம்மை உகப்பாரைத் தான் உகப்பர் -நாச் திரு -11-10- என்கிறபடியே ஒன்றுக்கு ஓன்று ப்ரீத்தி விஷயமாய் இறே இருப்பது –இச்சயா யது பாதேயம் யஸ்யா அதிசய ஸித்தயே உபயா அநு ரூபயைக ஏக ஜூஷாதவ் சேஷி சேஷிணவ் -என்னக் கடவது இறே-

கீழ்ச் சொன்ன அந்த அபிநிவேசத்துக்கு அடி அவன் இறே –எல்லாம் கண்ணன் -6-7-1-தொல் சீரை ஓவாத ஊணாக வுண் -பெரிய திருவந்தாதி -78-அமுதமுண்டு களித்தேனே -10-8-6-பருகலாம் பண்புடையீர் -பெரிய திரு வந்தாதி -8-என்றும் சீர்க்கடலை யுட் பொதிந்த சிந்தனையேன் -69-என்றும் கல்யாண குணங்களே தாரகாதிகளான இவ்விக்ரஹம் ஒளிக் கொண்ட சோதியாய் இறே -2-3-10- இருப்பது -அந்நாதி தாரகர்களான வர்களுடைய தேஹம் அழுக்கு உடம்பாய் -1- மாம்ஸ அஸ்ருகாதி மயமாய் இறே இருப்பது –

ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த விடத்திலும் -3-5-5-வயமந்நஸ்ய காங்ஷிண –வேர்த்துப் பசித்து -12-5- ஸ்ரீ சபரி கையாலும் (ஸ்ரீ வசன பூஷணம் -233) வேண்டி அடிசில் உண்டான் இறே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக வவன் –மர்த்ய மயமான தநுவாய் இருக்கவும் ஸ்தந்யாத்ய நபி லாஷியாகையாலே அதுவுமில்லை இவருக்கு -ஆகையால் கரிப்பானைக்கும் மாணிக்கக் குப்பிக்கும் உண்டான வாசி யுண்டிறே அல்லாதார் தேஹத்துக்கும் இவர் திவ்ய தேஹத்துக்கும் -இதை எல்லாம் நினைத்து ததீயஸ் ஸூப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரி -என்கிறது –

ஸ்ரீ ஸப்தம்
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து
-9-2-1-என்னும்படியான இவர் கைங்கர்ய ஸ்ரீ யைச் சொல்லுகிறது -இவர் தான் திருமாலால் அருளப்பட்ட சடகோபன் இறே -8-8-11-
அன்றிக்கே
திருப்புளி யருகே திரண்ட தெய்வக் குழாங்களாயும் -1- குழாங்கொள் தென் குருகூர் -2-3-11-என்னும்படி திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ குழாங்கள் அடியாக வந்த ஸ்ரீ யாகவுமாம்
இனி அவ்வளவும் அன்றிக்கே
ஸ்ரீ மந் நாராயண சரணவ் -த்வய உப -என்கிற பதத்தில் சொல்லுகிற குண ப்ரகாஸகமான சரணங்களாக அவன் இவற்றை இடுக்கி நடக்கையாலும் -அத்தைப்பற்றி சடகோபன் என்று வியவஹரிக்கக் காண்கையாலும்
அவர் தான் ஸடாந் குப்யதீதி ஸட கோப-என்று ஹேய ப்ரத்ய நீகராகையாலும்
அதுக்கு மேலே
இத்திரு -4-4-7–திருவுரு -87- மணிவல்லி -9- என்னும்படியான பரி ஸூத்த ஆத்ம ஸ்வரூபமாகையாலே அவன் தான் ஸ்ரீ ஸ்தநம் போலவும் ஸ்ரீ கௌஸ்துவம் போலவும் நிரதிசய போக்யமாக விரும்புகையாலும்–அவனுக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் ஸூப ஆஸ்ரயமான விக்ரஹம் இவரே என்னுமத்தைப் பற்றச் சொல்லுகிறது —துயரறு சுடரடி -1-1-1- சடகோபன் இறே -அப்போது ஆத்ம ஆஸ்ரய தோஷம் வாராதோ என்னில் இவர் ஆஸ்ரயிக்கும் இடத்தில் அயர்வறும் அமரர்கள் அதிபதி -அவன் துயரறு சுடரடி–என்று ததீயரை முன்னிடுகையாலே அப்போதைக்கு சேனை முதலியார் ஆகிறார் -ஆகையால் தோஷமில்லை –

அசாதாரண விக்ரஹ த்வாரா ஆஸ்ரயணீயனாய் தானே யறிந்து ஜகத்தைத் திருத்துமதே யுள்ளது -அந்தரங்க சரீரமான இவர் அவன் திருத்திப் பணி கொள்ள வேணும் என்கிற திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -6-7-2-செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ள -(கண்ணி -10) வல்லவர் இறே -இனி அனுபாவ்யமான விக்ரஹ குணங்கள் எல்லாம் இவர் ஸ்வரூபத்தில் உண்டாய் இருக்கும் –நின் மாட்டாய மலர் புரையும் திருவுருவம் -3-1-4-என்றும் வெறி கொள் சோதி மூர்த்தி -6-9-8- என்றும் சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -3-1-2- என்றும் நிலவும் சுடர் ஒளி மூர்த்தி -6-10-1- என்றும் புது மலர் ஆகத்தை -9-2-9-என்றும் சொல்லக் கடவது இறே -அவை எல்லாம் கண்ணி எனதுயிர் -4-3-5- என்றும் வெறி கொள் துழாய் மலர் நாறும் -4-4-3-அம் தண் துழாய் கமழ்தல் -8-9-10-தேனும் பகலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப -4-3-10-ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை போலே -திருவிரு -50-கடந்த பொன்னே -26-என்றும் சொல்லப் படுகிற இத்யாதிகளில் யுக்தமான திவ்ய குணங்களானவை தெய்வ வுருவில் -4-4-2- பிரகாசிக்கும் இறே–

அருகலில் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் –1-9-3- பிராட்டி திருவடி திருவனந்தாழ்வான் எல்லோரோடும் பண்ணும் விருப்பத்தை என்னொருவனோடும் பண்ணா நின்றான் என்றார் இறே -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8-இவருடைய அதி நிர்மலமான ஆத்ம ஸ்வரூபம் திருநிலைக் கண்ணாடி போலே அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் பிரகாசிப்பிக்க வற்றாய் இருக்கும் —மநஸ் ஸ்படிக தர்பண நக்ஷத்ர மாலிகை -10- இத்யாதியால் அவற்றைப் பெற்று தெளிந்த வென் சிந்தை யகம் கழியாதே என்னை ஆள்வாய் -5-2-4-என்னும்படி பக்க நோக்கு அறியாதே -2-6-2- கண்டு கொண்டு இருக்கும் அத்தனை –இவர் ஸ்வரூபத்தாலே தனக்குத் தன்னைக் காணலாய் இருக்கும் -தருணாருண கோடி பாநு துல்யமுமாய் ஸூர்ய கோடி ப்ரதீகாசமமாய் இறே இருவர் ஸ்வரூபமும் இருப்பது –

இனி கரணியான இவர் ஸ்வரூபத்தளவு அன்றிக்கே இவருக்குக் கரணமான இவர் விக்ரஹத்தையும் விரும்பிப் போரா நிற்கும் –இவர் தாம் துயரறு சுடரடி -1-1-1- உணர் முழு நலம் -1-1-2- என்று திவ்ய மங்கள விக்ரஹத்தையும் திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் ஆதரிக்குமா போலே ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து -1-7-7-என்றும் உருவமும் ஆர் உயிரும் உடனே யுண்டான் -9-6-5-என்னை முற்றவும் -9-6-8-தானேயாய் நின்று-10-7-3-இப்படி ஆதரிக்கைக்கு அடி இவர் ஸம்பந்தம் -பூசும் சாந்து இத்யாதி -4-3-2-வேர்ச் சூடுவார் மண் பற்றுப் போலே (ஸ்ரீ வசன பூஷணம் -168)–

அவ்வளவும் அன்றிக்கே
திருமாலிருஞ்சோலை -10-7-8- இத்யாதிப்படியே உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை (ஸ்ரீ வசன பூ -170)இவர் உத்தம அங்காதிகள் எல்லாவற்றிலும் இரட்டிக்கப் பண்ணா நின்றான் –தலை மேலே தாளிணைகள் -10-6-6-இத்யாதிப்படியே அந்தர் பஹி -அதிஷ்டியா நின்றான்
ஸ்ரீ மத் பராங்குச முநீந்த்ர மநோ நிவாஸாத் -அதிமானுஷ-3- யஸ் ச மூர்தா ஸடாரே -வரதராஜ ஸ்தவம் -59-சடகோப வாக் வபுஷி -ரெங்கராஜ ஸ்தவம்
-1-78-என்னக் கடவது இறே-

இப்படி ஸர்வ அங்க ஸம்ஸ்லேஷம் பண்ணும் அளவன்றிக்கே என்னை முற்றவும் -9-6-8-தானாய் நின்றும் ஸிர பாத பர்யந்தம் ஒழிவற நிறைந்து நின்றான் -3-2-7-என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய வம்மான் -10-7-3- தானே யாகி நிறைந்து -10-7-2- யானும் தானாய் ஒழிந்தானை -8-8-4- தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானான் -10-7-11-ஆகையால் இவருடைய அஹந்தையே தன் அஹந்தையாம்படி அதிஷ்டித்தான் -இவரைத்தேடிப் பிடிக்க வேண்டும் படி யாய்த்து -இது இறே வைஸிஸ்ட்யம் இருக்கும்படி –

இஸ் ஸம்பந்தத்தை அறியாத அஞ்ஞர் யானே என் தனதே -2-9-9- என்று அவனுடைய அபிமானத்துக்கு அசலாய் அசன்னேவ என்னும்படி அநர்த்தப்பட்டுப் போவர்கள் –நேஹ நாநா அஸ்தி கிஞ்சன -இஸ் ஸம்பந்தத்தை அறிந்த இவர் யானே நீ என்னுடைமையும் நீயே -2-9-9- என்று அனுசந்தித்து சந்தமேனம் என்னும்படி க்ருதார்த்தராய் தாமும் உஜ்ஜீவித்து அத்தாலே தேவு மற்றறியேன் -என்று தம்மை யடைந்தவர்களையும் கரையேத்த வல்லவராய் இருப்பர் -இவர் முத்துத் திரைக்கடல் சேர்ப்பன் -பெரியாழ்வார் -5-2-2- என்னும்படி துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பனா கையாலே -7-2-11- முக்தோத்பத்தி ஸ்தல தேசிகராய் அந்த முக்தாதிகள் தரைப்பட்டு விலைச் செல்லுமாப் போலே இவர் ஸம்பந்தமுடைய ஆத்மாக்களும் அக்கரை ஏறி நித்ய முக்தரோடே ஒரு கோவை யாவர் -இவர் தான் தேசிக குல கூடஸ்தர் இறே –

இப்படிக் கரை ஏத்தும் உத்தாரகரான இவரைப் பற்றுகை இறே அவனைப் பற்றுகை யாவது -அவனும் மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றதும் கையும் ஞான முத்ரையுமாய் திறம் காட்டி யன்று ஐவரைக் காத்தேனே -5-6-5-என்னும்படியான ஆழ்வாரை யாய்த்து –
அவ்விருப்புக்கு பிரமாணம் பத்மாஸந உப விஷ்டம் -இத்யாதி -ராமானுஜா அநு ராக ரஞ்ஜிதமான ஸ்ரீ மத் ததங்கரி யுகளங்களும் -சாருவான ஊருக்களும் -கௌசேய ஸோபிதமான கடீ தடமும் -அதுக்கு மேலாய் கம்பீரமான நாபீ தட ஸரஸ்ஸூம் தநு மத்யமும் -வகுதல வனமாலா அலங்க்ருதமான வக்ஷஸ்ஸூம் -உபதேச முத்ரா முத்ரிதமாய் -அநித்ர ஸரோருஹம் போன்ற கர கமலங்களும் -கம்பு காந்தகமான கந்தரமும் -மந்த ஸ்மிதத்தோடே கூடிய மதுர கடாக்ஷமும் -ஊர்த்வ புண்ட்ர மண்டிதமான ஒண் நுதலும் பரிமள வகுளா அலங்க்ருதமான பலகமுமான இவ் விலக்ஷண விக்ரஹம் இறே அத்யந்த அபிமதமான விக்ரஹமுமாய் இருப்பது –
நாமம் பராங்குசமோ நாரணமோ தாமம் துளவோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும் உளவோ பெருமான் உனக்கு-என்றார்கள் இறே -அபிமதமாய் இருக்கிற -விஷ்ணு பு -6-5-84- சதுர் புஜ ஸஹிதமான விக்ரஹத்திலும் காட்டில் த்வி புஜமான இது இறே அத்யந்த அபிமதமாய் இருப்பது -உன்னிணைத் தாமரைகளுக்கு -7-1-10- ஆருயிருகுமாப் போலே –உடலம் ஆத்ம தர்மம் கொள்ளும் படியாய் இறே (ஆ ஹ்ரு -132) இருப்பது -ஆகையால் உகந்தருளின நிலங்களில் நிக்கிற நிலை ஸாதநம் -இவ்விருப்பு சாத்யம் (ஸ்ரீ வசன -171) மலை மேல் தான் நின்றும் என் மனத்துள் இருந்தானை -10-4-4- கல்லும் கனை கடலும் -இத்யாதி (பெரிய திரு -68) கோயில் கொண்டான் இத்யாதி -8-6-5–அவை கோயில் என்னும்படி ஒரு க்ருஹ மாத்ரமாய் இருக்கும் -இது திவ்ய மங்கள விக்ரஹமாய் இருக்கும் -மே ப்ரியம் க்ருஹம் -என்றார் இறே -ஆகையால் சாதாரண விக்ரஹத்திலும் அசாதாரண விக்ரஹத்திலும் உன்னுரை கொள் சோதித் திரு வுருவம் என்னதாவி மேலதே
-4-3-7- என்னும்படி அத்யந்த ஆதரணீயமான விக்ரஹமாய் இருக்கும் புவியும் இரு விசும்பும் இத்யாதி –விபூதியையும் விபூதிமானையும் உள்ளே கொண்டிருக்கையாலே வந்த ஆதிக்யம் உண்டு இறே இவ்விக்ரஹத்துக்கு -அங்குண்டான தேவிமார் -8-1-1- தெய்வத்தினம் -திருவிரு -23- எல்லாம் ஒரோ வகைக்கு ஒப்பாம் படியாய் அந்தாமத்து அன்பு செய் -2-5-1- யும்படியான ஆகாரத்தை யுடையராய் இருப்பர் –

இப்படி எல்லார்க்கும் மேலான ஸ்ரீ சடகோபனை திவ்ய மங்கள விக்ரஹமாக அபிமானித்தால் அந்த விக்ரஹ ஏக தேசம் என்னலாய் சரமமாய் இருப்பதான சரணங்களைச் சொல்லுகிறது –ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் -என்று
வேதாந்த வேத்யனுடைய வைபவத்தை உபய வேதாந்திலும் பிரகாசிப்பித்தவர்கள் தான் அவனுக்குப் படியும் அடியுமாய் இருக்கிற படி –

ஸம்ஸ்க்ருத த்ராவிட வேத ஸூக்தை -1-15- புரா ஸூத்ரை -உடையவர் விஷய முக்த ஸ்லோகம் -ஸர்வ ஸாதாரணமான நாராயண சரணங்களான சடகோபனில் காட்டில் சடகோப சரணமான ராமானுஜ அடிக்கழஞ்சு பெற்று -இராமானுசனைத் தொழும் பெரியோர்க்கேயாய் இருக்கும் -105-திரு நாமங்களின் வாசி போலே நாராயண சடகோப ராமானுஜன் இறே -சதுரஷரியான நாம த்ரயத்திலும் சரம சதுரஷரி யிறே மோக்ஷ ஏக ஹேதுவாவது –ஜப்தவ்யமான காயத்ரி தான் மூன்று வகையாய் இருக்கும் -விப்ர காயத்ரி என்றும் -விஷ்ணு காயத்ரி என்றும் விசேஷஞ்ஞ ஜன காயத்திரி என்றும் –
இதில் நூற்று எட்டுச் சாவித்திரி என்னும் நுண் பொருளாய் சரமமான ப்ரபந்ந காயத்ரீ ப்ரதிபாத்யரும் ப்ரதிபாதகரும் உத்தாரகர் இறே
–

இம் மூன்றுக்கும் விஷயம் சைதன்ய லேசமுடையாரும் சைதன்ய முடையாரும் பரம சேதனரும் இறே -இனி திருவடிகளுக்கும் அதனை வாசி யுண்டு –
பத கமல யுகமாவது
பதாம்புஜ யுகளம்
என்றபடி -அதாவது
ஸ்ரீ மச் சடகோப பத த்வயத்தை
மேவினேன் அவன் பொன்னடி
என்னும் படி த்ரிவித கரணங்களாலும் பற்றி இருக்கை –
வர்த ஸ்வ வேங்கட கிரீஸ்வர பாத யோக வர்த ஸ்வ லஷ்மண முனீந்திர வந்த்ய பாத -என்று பாதம் அகல கில்லாதவர் பாதங்களில் பற்றி இருக்கிற படி –

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகள ஸம்பந்தத்தாலே இவரையும் ஸ்ரீ மாந் என்கிறது -அன்றிக்கே உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் உண்டான கைங்கர்ய ஸ்ரீ யாகவுமாம் -பதி தொறும் புக்கு நிற்குமவர் இறே -60-பெரிய பெருமாளாலே பெற்று உடைய உபய விபூதி ஐஸ்வர்யமாக வுமாம் –லஷ்மீ வாந் லஷ்மணாக்ரஜ –லஷ்மணோ லஷ்மி சம்பன்ன —ஸ்ரீ மத் பராங்குசருடைய த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் அடியாக வந்த ஸ்ரீ இறே -கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -4-3-6-என்றாப் போலே –
அங்கனும் அன்றிக்கே
ஆழ்வார் தாம் பொலிக பொலிக -5-2-1– என்று மங்களா ஸாஸனம் பண்ணும்படி எங்கும் இடம் கொண்டு –5-2-3 வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னின -5-2-5- இவர் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யாகவுமாம் -இதுவும் உபய விபூதி ஐஸ்வர்யத்தோடே ஓன்று இறே –கண்டவாற்றால் தன் தனதே யுலகென நின்றான் -4-5-10-என்னும்படி இவர் வடிவில் வைஷ்ண ஸ்ரீ யாகவுமாம் –ரூபமே வாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே –காஷாய ஸோபி இத்யாதி -ஸ்ரீ மாந் ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே

ஏவம் விதமான ஸ்ரீயை யுடையவிவர் குரு பதாம்புஜம் த்யாயேத் –என்கிறபடியே நிரை மலர்க் குருகூர் மாறன் பாதார விந்தத்தில் நித்ய அனுசந்தானராகையாலே அத்தைப் பற்ற சரண ஸம்பந்தம் அவிஸிஷ்டமாய் இருக்கிறது –சடகோப சரண கமல நிலய விமல ஹ்ருதயர் இறே –இவர் தாம் பாத ஸமர் -பாத ரஷா சமர் -பாத ரேகா சமர் -என்னக் கடவது இறே -குரை கழற்குப் பாதுகமாய்க் கூடினார் -அதாவது
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -18-என்னும்படி சிஞ்சா மூல வாஸத்தைக் குலைத்து சிந்தா விஷயமாய் இருக்கும்படி அநுஸந்திக்கை -ஆகை யிறே தத் பாவ பாவ மாபந்ந –-விஷ்ணு -6-8-95-என்னும்படி யோ நித்யம் -பக்த்யாதிகளை யுடையராய் பவத்ய பேதீ –6-8-95-என்னும்படி திரு மகிழ் மாலையைப் பெற்று யுடையரானதும் ஆழ்வாருடைய விக்ரஹ ஏக தேசத்தைச் சொன்னது அவர் விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம் -சரீரவத் பரதந்த்ர ராகையாலே திருமாலிருஞ்சோலை மலையே -10-7-8-இருப்பிடம் -106-என்னும்படி யாய்த்து -சரணங்கள் தான் கரணியினுடைய கருத்தைப் பின் செல்லக் கடவது இறே -இது தான் முடியானேயில் கரணமாகையாலே -தனித்தனியே சேதன சமாதியாய் இருக்கும் –அவை தான் மற்றை யாழ்வார்கள் -அங்காந் யந்யா தேவதா –அவர்களில் இவர் சரணவத் கரணமாய் சடகோபாச்சார்யருடைய சந்தத்தைப் பின் சென்று நடக்கையாலே -பத கமல யுகம் -என்கிறது –

பத்லு கதவ் –என்கிறபடியே கதியை யுடையராய் அல்லாதாருக்கும் கதியாய் இருக்கும் –ராமானுஜன் சரணே கதி -13-அந்த ஆழ்வார் பிரபத்தி மார்க்க அநு சரியாய் இருப்பர் -அதாவது பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து -6-10-11-என்னும்படி அவரை அடிவிடாது இருக்கை -பூர்ண பிரபத்தி யுள்ளது –அடிக்கீழ் அமர்ந்து புகுந்த 6-10-10-அவர் ஒருவருக்குமே யிறே -ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –பின்னே இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றுகை இறே யுள்ளது -இராமானுசனான இளைய பெருமாளும் -நித்யம் பிராண சமையாய் இருக்கிற பிராட்டியை விஸ்லேஷித்த வியசனத்தாலே முன்னடி தோற்றாதே தளர்ந்து மந்தகதியாய்ச் செல்லுகிற பெருமாளை –ரரக்ஷ தர்மேண பலேந சைவ -என்று நோக்கிப் போந்தார் இறே -ஆகையாலே லஷ்மணேந கதாம் கதிம் -என்று சரணங்களானவர் போன வழியே பின் சென்றார் -இந்த இளையாழ்வாரான ராமானுஜரும் ஆழ்வார் பக்தி பாரவஸ்யத்தாலே இருவருமான சேர்த்தியைக் காண வேணும் என்று தத் விஸ்லேஷத்தாலே காலாழும் -இத்யாதிப்படியே யாய் சிந்தை கலங்கித் திருமால் -9-8-10- என்று தளர்ந்து -சென்று தேவர்கள் கை தொழுவார்களே -9-3-8-என்னும் மநோ ரதத்தைப் பின் சென்று -சென்று வணங்கி -நான்முகன் -42- அகலிடத்தை ஆராய்ந்தது திருத்தலாவதே -பெரிய திரு -25- என்றத்தை சர ரூபமான தாம் எங்கும் திரிந்து -திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கியும் -78-கலியும் கெடும் கண்டு கொண்மின் -5-2-1- என்ற பவிஷ்ய தர்தத்தை -கலியே யாள்கின்ற நாள் வந்தளித்தவன் காண்மின் -16-என்னும்படி அத்தை ப்ரத்யஷிக்கலாம் படி செய்தருளினார் இறே -ராமானுஜ முநிர் ஜீயாத்யோ ஹரேர் பக்தி யந்த்ரித கலி கோலா ஹல க்ரீடா முதாக்ரஹமபாஹரத்-என்று இறே அடியறிந்த பட்டர் அருளிச் செய்தது -நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியின் பலத்தை யிறே செறுத்தது-34–யாவத் ஸ பாத பத்மாப்யாம் -என்ற திருவடிகளை அண்டை கொண்ட பலத்தாலே கிருஷ்ண ஆஸ்ரயனான விஷ்ணு ராதன் கலியை யடக்கி யாண்டது –

இவரும் கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவமான ஆழ்வார் திருவடிகளான அடியுரத்தாலே இறே
அவ்வளவும் அன்றிக்கே
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் –5-2-4- என்று அருளிச் செய்தபடியே செழும் திரைப் பாற் கடல் கண் துயில் மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானியான -105-இவரும்
புண்யா மஹா பூத புரீ -என்னும்படியான ஊரிலே மிக்க புண்ணியனாய் அசன்னேவ-என்று இருக்கிறவர்களுக்கு சத்தை யுண்டாம்படி –ஆனது செம்மையில் படியே -49- அவதரித்து –தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையான் சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும் நிற்க்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் -89 என்றும் கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை -46 என்றும்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் -64-என்றும் இவர் திவ்ய ஸூக்தியைக் கொண்டு கலி கலுஷித மனஸ்கர்களான பாஹ்யரைக் கிழங்கெடுத்து –உறு பெரும் செல்வத்தில் படியே -19-திருவாய் மொழியே எல்லாமா க வெண்ணி ஆதரித்து அறியக் கற்றவராகை யாலே -5-5-11-ஓத வல்ல பிராக்கள் என்னும்படி உத்தேசியராய் வளர்த்த இதத்தாய் என்னும்படி வர்த்திப்பித்து அந்த தீர்க்க ஸரணாகதியில் -திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ -4-1-1- அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10- என்கிற பிரபத்தி யுபதேஸ அனுஷ்டானங்களை யும் -அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்ற உத்தர வாக்கியத்தில் கைங்கர்ய பிரார்த்தகனையும் -உயிரை யுடையவன் நாரணன் என்றும் அறிவாரில்ல -59- என்று அஞ்ஞரும் அறிய சர்வலோக பிரஸித்தமாம் படி யது சைல தீபமாகையாலே குன்றத்தில் இட்ட விளக்காய் நிற்கிற திருநாரணன் -4-1-1- திருவடிகளைக் காட்டியும் -சர்வருக்கும் அப்படியே ஏற உபதேசித்தும் -ஸ்ரீ மன் நாராயண தவ சரணாரவிந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே -என்று தாம் அத்தைப் பின் சென்று அனுஷ்டித்தும் ஸர்வ அவஸ்த உசித அஸேஷ-என்று தொடங்கி குருஷ்வமாம் -என்று நித்ய கைங்கர்ய பிரார்த்தனையைப் பண்ணியும் -அனந்தாழ் வானைக் கொண்டு அனுஷ்ட்டிப்பித்தும் ஆத்யஸ்ய ந குல பதே என்னும்படி ப்ரபந்ந ஜன கூடஸ்தரான இவர் திருவடிகளில் பிரபத்தியே உஜ்ஜீவனம் என்னுமத்தை மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று நடத்திப் போருமவராகையாலே அவர் திருவடிகள் என்கிறது –

மதுர கவிகள் தேவு மற்று அறியாதே அவருக்குப் பரதந்த்ரராய் அவர் பொன்னடியே மேவி பாத சாமராய் இருந்தாலும் பாரதந்தர்யத்துக்கு எல்லையாய் பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரான எம்பெருமானார் அளவிலேயே யாயிற்று ஆழ்வாருடைய நாடாவிய கூற்றமான கடாக்ஷம் பரிபூர்ணமாய் இருப்பது -வரும் காலம் நிகழ் காலம் கழி காலத்திலும் -3-1-5-உண்டான கார்யங்கள் எல்லாம் அறிந்து அருளுமவராய் -ருஷி முனி கவி என்னும்படியான ஞான வைபவத்தை யுடையவராய் அத்தாலே தீர்க்க தர்சிகளாய் இருக்கையாலே தர்சனம் இவரடியாய் நடக்கும் படியை தர்ஸித்து அருளி ஆ முதல்வன் இவன் -7-9-3-என்று அபிமானித்து அருளினார் இறே –இப்படி பரமாசார்யரான பராங்குச முனி பரம கருணாபாத்ர பூதரான இவரும் அந்த அடி அறிந்து பற்றினார் –ஆளவந்தாரைப் போலே நாதாய நாத முனயே அத்ர பரத்ர சா அபி என்று இறே பிரதிபத்தி இருப்பது –

தம்முடைய போதில் கமலமன்ன மாநஸ பத்மத்தில் (பெரியாழ்வார் -5-2-8) ஆழ்வாருடைய வகுளாபிராமமான ஸ்ரீ மத் தத்தங்கரி யுகளங்களான ப்ரணமாமி மூர்த்நா என்னும்படி சேவித்து அடி சூடும் அரசாய் -அத்தை இளங்கோயிலான (பெரும்கோயிலான )உள்ளத்திலும் வைத்துத் தியானித்துக் கொண்டு அவ்வழியில் தத் ஸம்பந்த அநு ஸந்தானத்தை உடையவராய் உளன் எனில்-இத்யாதி யுக்தியை யுடையவர் திவ்ய ஸூக்திகளைக் கொண்டு ஸூத்ர வாக்கியங்களையும் ஒருங்கவிட்டு -நின் கண் வேட்க்கை எழுவிப்பான் -என்ற அம் பகவன் வணக்குடைத் தவ நெறியான -1-3-5-பக்தியையும் கீதா பாஷ்யத்தில் தர்சிப்பித்துக் கொண்டு போந்து மதி நலத்தை ஸேமுஷீ பக்தி ரூபா என்று ஸ்ரீபாஷ்யத்திலே தர்சிப்பித்தும் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் -6-7-2-என்றத்தை அர்த்த க்ரியா காரியாம்படி செய்தருளி அவரடி விடாதே போருவார் ஒருவர் இறே
வகுளதர ஸரஸ்வதி இறே யதீஸ்வர ஸரஸ்திக்கு மூலப்பிரமாணம் -இந்தக் கரணி கரண ஸம்பந்தத்தாலே சரணங்கள் என்கிறது -ஆகையால் ஆழ்வாருடைய பரம ஹம்ஸமாய் இறே இருப்பது -வேதாத்மா வைப்போலே விவேக உந்முகர் மேலாய் இருக்கை -ஜங்க விமானம் இறே -அது தான் -பாத கமல யுகம்பாதி -என்று விளங்குகைக்கடி என் என்னில் -வகுள பூஷண பாஸ்கரருடைய சரண நளின யுகளங்கள் ராமானுஜ திவாகாரராகையாலே -பாதி -என்னும்படி விளங்கும் இறே -ஒளியுடைய எதிராசர் பூதூரில் மா முனிவர் -இனித்தான் உன் துளங்கு சோதித்திருப் பாதம் எல்லையில் சீரிள நாயிறிரண்டு போலே இறே -8-5-5-எல்லாவற்றுக்கும் முதலடி இருக்கும்படி -அது துயர் அறு சுடரடி இறே -தத் சம்பந்தமுண்டே ஆழ்வாருக்கு-அந்த ஸம்பந்தத்தாலே வந்த ப்ரகாசமாய்த்து -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி கட -2-5-15-என்னும்படியான உதயத்தை உத்தர தேசத்திலே இருந்த மதுரகவிகள் கண்டு வந்து ஆச்ரயித்தார் இறே –வகுளாபி ராமமாகையாலே ரம்யமுமாய் இருக்கும் -ராமானுஜனாகையாலும் ரம்யமுமாய் இருக்கும் -இத்தால் ரமந்தே யோகிநோ அனந்தே இத்யாதி தச் சிந்த அநு வர்த்தித்வம் அநுஜ சபிதார்த்தம் -அதுக்கும் மேல் சவும்ய ரூப என்னும்படி இறே இருப்பது –

இனி ததீயம் என்கிறது
ததீயாநாம் அக்ரேஸரரான ஆழ்வார் தம்முடையதாகையாலே -இத்தால் ஸர்வ ஸாதாரணமான நாராயண சரணங்களான சடகோபனில் காட்டில் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான சடகோப சரணங்கள் ராமானுஜன் என்கிறது -இது இறே அல்லாதார் எல்லாரும் இவரைக் கால் கட்டுகைக்கு அடி –ஆழ்வார் ஒருவருக்கு நாராயண சரண சமாஸ்ரயணம் –அவரை ஒழிந்தாருக்கு ராமானுஜ பதாம்போஜ ஸம்ஸ்ரயணம் -திருமால் திருப்பேர் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் -100-என்கையாலே அவர் தனக்கும் ஆச்ரயணீயராய் இருப்பர்–

பரஸ்பர நீச பாவை -மாதவன் பேரான த்வயத்தை வளர்த்து த்வய வக்தா வுமாய் இருப்பர் -இப்படி ஆழ்வார் கருத்தை அறிந்து அவருக்கு சரணவத் பரதந்த்ரராகையாலே சரணங்கள் என்று பேசும்படியான அந்த ராமானுஜர் இடத்திலே ஆசார்ய பதம் என்று சொல்லப்படுகிற அந்தப்பதமானது விளங்கா நிற்கும்
நாராயண பரம் ப்ரஹ்ம -நாராயண பரோ ஜ்யோதி -என்றும் பரஞ்சோதி நீ பரமாய் -3-1-3-என்றும் பரத்வம் அவனிடத்திலே விளங்குமாப் போலே குருத்வம் இவரிடத்திலே விளங்கா நிற்பது ஓன்று இறே -இவர் தான் ஜீவ பர ப்ரகாசகர் இறே –
கு ஸப்தஸ் த்வந்தகாரஸ் ஸ்யாத் -இத்யாதி -ஞான தீப ப்ரதே குரவ் -மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் -ஆசி நோதி ஹி ஸாஸ்த்ர அர்த்தாத் -இத்யாதி
இவர் தான் ஸிஷ்யன் பக்கல் கிருபையும் ஸ்வ ஆச்சார்யன் பக்கல் பாரதந்த்ர்யமும் யுடையர் ஒருவர் இறே -கிருபயா நீஸ் ஸ்ப்ருஹோ வதேத் —
என்கிறபடியே ஸப்தார்த்தங்களின் சீர்மை பார்த்துக் மறைத்துக் கொண்டு ஓராண் வழியாய் பூர்வர்கள் நடத்திக் கொண்டு போந்தான் மந்த்ர ரத்னத்தை -அந்த நியமத்தைக் குலைத்துப் பெரு வழியாக நடத்திப் போரும்படி ஆச்சார்யர்களை நியமித்தும் நம்பி பாடேறப் பல கால் தேய நடந்து கேட்ட சரமமாய் இருப்பதான பரமார்த்தத்தை தெற்காழ்வார் சந்நிதியில் ஓலக்கமாக வைத்து உபதேசித்தும்-வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜென்ம சந்ததி -இத்யாதிப்படியே ருசி விச்வாஸ ஹீனரையும் நிர்பந்தித்து சரம உபாயஸ்தராக்கியும் -இப்படி அதிகாரம் பாராமல் அவர்கள் துர்கதியே பார்த்து உபதேசித்தருளும் ஸ்வ பாவருமான எம்பெருமானாருக்கு இறே ஆசார்ய பதம் உள்ளது –

ஆச்சார்யத்வம் உபதேச மூலமாய் இருக்கும் -அது பிரமாண மூலமாய் இருக்கும் –ஆச்சார்யோ வேத சம்பன்ன –குருரித்யபி தீயதே –சொல்ளார் தமிழொரு மூன்றும் யானும் தெரிந்தவன் –44-ஸகல வித்யாவா ஹி நீஜென்ம ஸைலம் (யதிராஜ சப்ததி -28)-இறே -ஆகையால் அசாரம் அல்ப சாரஞ்ச -இத்யாதிப்படியே விவேகித்து உபதேசிக்கும்படியான பரம ஹம்ஸர் இறே -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –5-7-3-இப்படி சார அசார விவேக சதுரரான வைதிக உத்தமரிடத்திலே யாயத்து ஆசார்யத்வம் நிறம் பெறுவது -புண்டரீகாக்ஷத் வாதிகளால் வந்த புருஷோத்தமத்வம் புருஷாந்தரங்களில் இல்லாதாப்போலே –க புண்டரீக நயன புருஷோத்தம க –12-ராஜகுமாரனுக்கு அவனுடைய பைத்ருகத தனத்தைக் காட்டிக் கொடுக்கும் வ்ருத்த மந்திரிகளைப் போலே முன்புள்ள ஆசார்யர்களும் இவரை அனுவர்த்தித்துத் தங்களில் உண்டான அர்த்தங்களையும் தர்சிப்பித்தும் தர்சன ப்ரவர்த்தகர் இவரே என்று பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போந்தார்கள்–

வேதாந்தார்த்தே ந ஸாகம் –இத்யாதி -இவரும் ஞான வ்ருத்தா மயா ராஜன் பஹவ பர்யுபாஸிதா -என்னும்படி அவர்களைத் தாமும் அனுவர்த்தித்தார் -அத்தைப்பற்ற வடுகநம்பியும் ஆச்சார்ய பதமுள்ளது எம்பெருமானாருக்கே -என்று அருளிச் செய்தார் -அதாவது ஸம் சேவிதே –இத்யாதிப்படியே எழுந்தருளி இருந்து ஸ்ரீ ரங்க ஸ்ரீ யையும் வர்த்திப்பித்துக் கொண்டு சர்வாத்மாக்களையும் அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் –தானது தந்து –52- என்னும்படி பகவத் சம்பந்தத்தோடு ஒட்டற்று நின்றவர்களையும் தத் ஸம்பந்தத்தை யுணர்த்தி யுஜ்ஜீவிப்பித்து –அரங்கன் மெய்யடியார்கள் என்னும்படி அத்தலைக்கு ஆட்ச்செய்து அருளுகிற இவரிடத்தில் யாய்த்து அந்தப் பதம் உள்ளது என்கை -மது லுப்தமாகையாலே போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு –100-உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் –104-என்னும்படி இதர நிரபேஷமாய் இறே பூர்த்தி இருப்பது –

ஆகையால் நாந் யத்ர-என்னும்படி இவரை ஒழிந்த லஷ்மீ நாதாதிகள் தொடங்கி அஸ்மத் குரு பர்யந்தமுண்டான மற்றையோர் இடத்தில் இதில்லை என்கை -உண்டாகில் ஈஸ்வர த்வித்வம் போலே யாகையால் அதில்லை என்கை -யதஸ்த்வ தித்யாதி -ஆனாலும் நடந்து போருகிறதே என்ன தத் ஸா பேஷமாய் வந்ததித்தனை –ஸ்ரீ ஸம்பந்தம் அடியாக வந்த கடகத்வம் போலே -ஈஸ்வரனும் நமக்கு யாவாரை நாமே தேடிக் கொள்ளு கிறோம் -என்று விஷயீ கரித்தான் -ஆழ்வாரும் ஆரானும் யாதானும் செய்ய -பெரிய திருவந்தாதி -25- என்று சலித்து கலியும் கெடும் கண்டு கொண்மின் -5-2-1-என்று மேலே கடாஷித்தார் -நாதமுனிகளும் ப்ரவர்த்தகனை வலிய அழைத்தாகிலும் இவ்வர்த்தத்தை உபதேசியும் என்றார் –ஆளவந்தாரும் அப்படியே ஆம் முதல்வன் -7-9-3-என்று கடாஷித்து அனந்தரம் தர்சனத்துக்கு மூன்று கார்யம் செய்து முடிப்பிக்கைக்கு இவரே கடவர் என்று அறுதியிட்டு அத்தை மூன்று திருவிரல்களால் முடக்கிக் காட்டி நடந்தார் -பெரிய நம்பியும் ஆளவந்தாரைப் போலே பிரபத்தி பண்ணி அத்தாளுக்குத் தக்க தலை என்ன அனுவர்த்தித்தார் -ஆகை யிறே லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -என்று உபக்ரமித்து யதீந்த்ராக்ய பத்மாகரேந்தரம் ஸம் பூர்ய-என்று கிருபா பிரவாஹத்தைப் பேர் ஏரியிலே தேக்கினார்கள் –அது பின்புள்ள ஆசார்யர்களாகிற கால்களாலே புறப்பட்டு எல்லாரிடத்திலும் ஏறிப்பாய்ந்து பலித்தது இறே -ஆகையால் ஈஸ்வரனுக்கும் இவ்வழியாலே அஹமன்னம் என்னும்படியான ஜீவனம் யுண்டாய்த்து–இவருக்கு இவ்வருகில் உள்ளார் இவர் உபதேசம் கேட்டபடியே தாங்களும் பரம்பரயா உபதேசித்துக் கொண்டு ஆசார்யத்வத்தை இவரிடத்தலே அனுசந்தித்து ராமானுஜமுடையார் என்னும்படி அவர் அபிமானத்தில் அடங்கி க்ருதார்த்தகராய்ப் போந்தார்கள் இறே -ஆகையால் ஆசார்யத்வம் அவ்வியக்தியிலே கிடப்பது ஓன்று –பரஸ்ய பிராமண ப்ராப்தேர் யுபாயம் யோ வைத்தேத் த்விஜ ஆசார்ய கத்யதே ஸத்பி -என்னக் கடவது இறே –

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டே போமத்தனை -இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயண மஹாபாரத தாத்பர்யமான ஸ்ரீ கீதையையும் அபய பிரதானத்தையும் இவர் தாமே வேத ரஹஸ்யமாம்படி வியாக்யானம் பண்ணி உபதேசத்தார் –இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் -37-கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் -68- என்னக் கடவது இறே -ஆகையால் உக்த்யா ந்யாஸ திலகம் -என்றார் இறே –இப்படி ஸர்வ கல்யாண குண ஸம் பூர்ணம் ஸர்வஞ்ஞாந உப ப்ரும்ஹிதம் ஆசார்யம் ஆஸ்ரயேத் தீ மாந் ஸ்ரேயோர்த்தீ ஸூஸமாஹித –என்ன ஸஜாதீயனாய் நின்றும் உபதேசிக்கும் தத்வ ஞான நிதியான சதாச்சார்யன் இறே ஸமாச்ரயணீயன் -ஆகையால் அடைபவருக்கு பொருந்திய தேசம் திருந்திட ஞானமும் செல்வமும் சேரும் -32-
அங்கன் அன்றிக்கே விஜாதீயனாய் தேவ தேவனானவனை ஆஸ்ரயிக்கப் பார்க்கில் –சிறு மானிடவரான நாம் -தேவர் என்று அஞ்சும்படியாய் இருக்கும் -அர்ச்சா ஸ்தலங்கள் அஸங்கேதமநாலாபம் -என்னும்படியாய் இருக்கும் -ஆகையால் ஈஸ்வரனுக்கும் ஞானம் உபதேசம் பண்ணுகைக்கு நர நாராயண அவதாரமே பண்ணி யிறே திருமந்திரத்தை வெளியிட வேண்டிற்று -நர நாரணனாய் யுலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் -10-6-1- என்னக் கடவது இறே -அத்தைப் பற்ற நாராயணம் நர ஸகம் சரணம் ப்ரபத்யே என்றதும் -இங்கும் ஸாஷாந் நாராயணன் இறே -நாரதீயம் -ராமானுஜனாய் மர்த்யமான தனுவை பரிக்ரஹித்து அருளிற்று -ஆகையிறே ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -என்றதும் -இவர் தாம் தக்ஷிண பத்ரிகாஸ்ரமண திரு நாராயண புரத்திலும் சித்தாஸ்ரமமான திருக்குறுங்குடியிலும் நாரண நம்பிகளை சிஷ்ய புத்ரர்களாக அபிமானித்து உபதேசாதிகளைப் பண்ணிப் போந்தார் இறே -ஆகையால் ஈஸ்வரனுக்கு ஸிஷ்யத்வமே ஸித்தம் -மற்றையார்க்குச் சொல்ல வேண்டாவிறே –

இவர் தாம் த்ரிவித தத்வ நிர்வாஹகர் என்னும்படியான வைபவத்தை யுடையராய்-பிரமாண ப்ரமேய ப்ரமாத்ரு வர்த்தகராய்ப் போருவார் ஒருவர் இறே -வேதார்த்தஸ்ய ச இத்யாதி -ஸ்ரீ ரெங்கேசாதி ஸ்தலங்களையும் ஸ்ரீ பரங்குசாதிகள் வைபவத்தையும் வர்த்திப்பித்தார் -இவ்வாகாரங்கள் மற்ற வ்யக்திகளில் அரிதாய் இறே இருப்பது -ஆனாலும் அஸ்மத் குருப்யோ நம -என்று அடியிலே அனுசந்திக்கப் படுமவனாய் -அகிலார்த்த பிரதானாய் –அத்யந்த மஹா உபகாரகனான ஸ்வாச்சார்யனுக்கும் யதிராஜ சரணாம்புஜ ஸம்பந்த அனுசந்தானத்தை யுடையனாய் ஆஸ்ரயிக்குமவர்களுக்கும் அத்தை யுணர்த்துகையாலே தத் ஸம்பந்த நிபந்தநமாய் வந்ததாய் இருக்கும் ஆச்சார்யத்வம் -இன்புற்ற சீலத்து இராமானுசா என்று தொடங்கி உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யாங்காட் படுத்தே -107-என்று பிரார்த்தியமாகையாலே தத் ஸம்பந்த யுக்தனான ஸதாசார்ய ஸம்பந்தமும் ஸதா அனுசந்தேயமாய் இருக்கும் -தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை யுற்றாட் செய்ய இராமானுசன் தன் தகவால் இன்று என்னை யுற்றான் –97-நல்லார் பரவும் –சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே -80-இது தான் எம்பெருமானாருடைய கிருபா லாபமாய் ஸித்திப்பது ஓன்று இறே –
மம மத் பக்த பக்தேத்யாதி –பூஜநீயா விசேஷத-என்னக் கடவது இறே -ஸ்வாச்சார்யனையும் பொற் கற்பகமான -99-ராமானுஜ பாத்தாச்சாயை என்றே ஆஸ்ரயித்து விஸ்ரமிக்கக் கடவன் -அந்தப் பிரபத்தி இன்றிக்கே பற்றில் பனை நிழல் போலே ஒருவனுக்கும் ஒதுங்க நிழல் இன்றிக்கே இருக்கும் -கீழ்ச் சொன்னபடியே பிரதிபத்தியுடைய மஹாத்மாக்கள் ஒரோ காலத்துக்கு ஒரோ வியக்திகளாகையாலே அவர்கள் இடங்களிலே கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற –92- கருத்தில் புகுந்து -78சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் -47-

உன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் –27-இன்றவன் வந்திருப்பிடம் என் தன் இதயத்துள்ளே -106-என்னும்படி எம்பெருமானார் விசேஷ அதிஷ்டானமாக எழுந்தருளி யிருந்து ஜகத்தைத் திருத்திப் போருவர் -ஆகையால் இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர் ஆனவர்கள் -29-வாசி யறிந்து பற்றினால் யாயிற்று உஜ்ஜீவனம் உள்ளது -அவர்கள் ஞான அனுஷ்டான பரி பூர்ணமான வியக்தி விசேஷங்கள் ஆகையாலே நேமிப்பிரான் தமர் போந்தார் –5-2-6-என்னும்படி ஜகத்தைத் திருத்த வல்லராயும் இருப்பர்கள் -அதாவது யதிராஜருக்கு ஆளாக்கும் இயல்வுடைமையாகையாலே இவனுக்கு இவ்வர்த்த லாபம் பெற்ற விடமே உத்தேச்யமாகக் கடவது -சமகாலத்தில் ஸாஜாத்யத்தை விட்டு அதீத காலத்தில் அவ்வடிகள் இவ்வடிகளாய் நம்மளவும் வளர்ந்ததென்று முடிய பிரதிபத்தி பண்ணக் கடவன் பூக்கொண்டு புட்டில் பொகடுமாப் போல் அன்றிக்கே அத்ர பரத்ர சா அபிப்படியே அங்கோடு இங்கோடு வாசியற எங்கும் அனுவர்த்தனம் உண்டாக விறே இவர் அருளிச் செய்தது –

இது இறே ரஹஸ்ய த்ரய சாரத்திலும் ப்ரமேய சாரமான பரமார்த்தம் -இச்சரம அர்த்த ப்ரகாசகன் சரம சேஷி –தீர்க்க சரணாகதியான திருவாய் மொழிக்கு இரண்டு த்ருஷ்டிகளாய் இருக்கும் -பயிலும் சுடரொளி -3-7- நெடுமாற்கடிமை -8-10-அதில் அர்த்தம் இது -இப்படி அர்த்த ஸ்திதி யாகையால் இவருடைய ஆசார்யத்வம் ஆழ்வார் அடியாய் அவர் உகந்த பகவத் ஸம்பந்த ப்ரகாசத்வத்தாலே யாயிருக்கும் எம்பெருமானாருக்கு-மற்றையார்க்கு பாஷ்யகார ஸம்பந்த ப்ரகாசகத் வத்தாலே-ஆகையிறே நம்பியும் ஆச்சார்யத்வத்தை ஆசைப்பட்டு நாமும் ராமானுஜமுடையோம் என்றதும் —இவ்விடத்தில் ஆச்சார்யர்கள் அனைவரையும் குறித்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-மம பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் -தஸ்மாந் மத் பக்த பக்தாஸ் ச பூஜநீயா விசேஷத–அடியார் அடியார் -3-7-10-தம்மடியார் எம்மடிகளே -3-7-9-என்கிறபடியே பகவத் வைபவத்தை உபகரித்த உபகாரத்தில் காட்டில் ஆச்சார்யன் வைபவத்தை அறிவித்த மஹா உபகாரகன் அளவிலே அதிகமாக பிரதிபத்தி பண்ணிக் க்ருதஞ்ஞனாய்க் கடவன் -ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத் –ஆகையால் த்வய அநுகாரியான சரம ப்ரபத்தியே ஸர்வ ஆத்ம உஜ்ஜீவனமாகக் கடவது -இப்படி இதுவே நிலை நின்ற அர்த்தம் -ஆனபின்பு சர்வாத்மாக்களுக்கும் சேஷியான உடையவனே திருவடிகளில் ஸம்பந்தத்தை ஒழிய உபதேசிக்கில் உபதேச ஸித்தி இல்லை –ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமை தீருகைக்கு இறே இவர்தான் உபதேசிப்பது -இவர் விஷயத்தில் மங்களா ஸாஸனத்துக்கு அர்ஹராம்படி இறே மற்றை ஆச்சார்யர்கள் உபதேசிப்பது -வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் –எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி–என்று என்று இறே திவ்ய ஸூக்தி இருப்பது -இவர் உண்டாகவே ஸ விபூதிகனானவன் உளனாம்–

இப்படி ஆசார்யத்வம் அவரிடத்திலே கிடப்பது ஒன்றாகையாலே –தஸ்மாச் சிஷ்டம் ஸ்ரீ மத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ -என்கிறது –சேஷித்த அகில ஆச்சார்யன் குலமடைய இராமானுசன் எம் குலக்கொழுந்தே -60-என்னும்படி குல நாதரான அவருக்கு சேஷமாய் இருக்குமிறே –எம்மை யாளுடை நாதரே -3-7-2–நாத த்வமேவ யதிராஜ–விம்சதி -13-யதீந்த்ர நாத -விம்சதி -19என்னக் கடவது இறே—அகில ஆச்சார்ய குலமாவது -ஸ்வாசார்ய வம்ஸோ ஜ்ஜேய ஆசார்யாணாம ஸாவஸா வித்யா பகவத -என்று எம்பெருமானாருக்கு சரம சரணங்களான ஸ்வாச்சார்யனைத் தொடங்கி கில ஆச்சார்ய குலமாவது –ஸ்வாசார்ய வம்ஸோ ஜ்ஜேய ஆசார்யாணாம ஸாவஸா வித்யா பகவத -என்று எம்பெருமானாருக்கு சரம சரணங்களான ஸ்வாச்சார்யனைத் தொடங்கி வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு-4-3-1-என்னும்படி வேத தாத்பர்யம் கைப்பட்ட ஆழ்வாருடைய உச்சியுல்லே 1-9-11-ஸிரோ பூஷணமாய் இருக்கும் பிரதம குருவான ஈஸ்வர பர்யந்தமாய் உள்ளத்தை –
இந்தக் குரு பரம்பரைக்கு நாத முநி ஆளவந்தார் -நஞ்சீயர் -நம்பிள்ளை கொண்டாட வருகின்ற நடு நாயக ரத்ன தீபம் என்னும்படி இரண்டு தலையையும் நிறம் பெறுத்தி விலைச் செல்லப் பண்ணுமவர் இறே –அதுக்கு –ஸ்ரீ மத்தை யாவது -ஸ்ரீஸ்ரீ தரர்கள் அடியாய் இருக்கை -இவர்கள் தான் ஸ்ரீ மத் புத்ரர்களாகையாலும் ஸ்ரீ மானுடைய அடிவிடாதிருக்கையாலும் ஸ்ரீ மானான ராமானுஜனை நடுநாயகமாக வுடையவராகையாலும் உண்டான ஸ்ரீ மத்தை என்கை –

விஷ்ணு பதத்திலே இருக்கிற நக்ஷத்ர மாலையை சித்ரா ஸஹிதனான பூர்ண சந்திரன் பிரகாசிப்பித்துக் கொண்டிருக்குமாப் போலே சித்ரா ஆர்த்ரையிலே தோன்றி -ஸகல கலைகளாலும் பூர்ணரான யதீந்த்ர சந்திரனும் -( சப்ததி -28 ) விஷ்ணு பதத்தைப் பற்றி வருகிற குரு பரம்பரையாகிற ஹாரத்துக்கு நடுவே இருந்து உஜ்வல்யத்தை உண்டாக்கிப் போருவார் யாய்த்து -யதா யதிபதி க்ருஷ்ணோ வ்ருஷ்ணீ சாக்ரைரிவாத்ருத தத்ரா அதி ஸூ ஸூ பே –தேவகீ புத்ர ரத்னமிறே -ஸூர்யோ நக்ஷத்ர மாலயா போலே -இது தான் பெரும் புறக்கடலிலே -7-10-1-உண்டான முத்து மாணிக்யமிறே -ஆர்த்ரம் ஜ்வலதி –முளைத்து எழுந்த திங்கள் தானாய் -என்னும்படி இவருடைய ஸ்வரூப ஞான பிரகாசம் இருக்கும்படி -இஷ்வாகு யது வம்சங்களுக்கு -ஓர் விளக்கும் -அணி விளக்கும் போலே -இவரும் ப்ரபந்ந குல ப்ரதீபராகையாலே அல்லாதார் எல்லாரும் இவருக்குத் தொழும் குடியாய் இருப்பர்கள் –குலம் தாரயதே –இவரும் ராமானுஜன் இறே -இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -6-2-10-போலே வீடளிக்குமவராய் இறே -95- இருப்பது -ராஜ குலஸ் யாஸ்ய த்வததீநம் ஹி ஜீவிதமாகையாலே -(அயோத்யா–87-8-) இஷ்வாகு நாதர் (ஆர -16-37) அப்படியே யாய்த்து இவரும் இக்குலத்துக்கு எல்லாமே நாதரான படி -இப்படி உபய குல ப்ரகாசகராய் ஆசார்ய பதஸ்தராய் விளங்குகிற அந்த அகில சேஷிக்கு -சேஷித்த குருகுலமடைய சேஷம் என்கிறது –

அவ்வளவும் அன்றிக்கே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான -11-3- பெரிய பெருமாளாலே உபய விபூதியையும் கையடைப்பாகப் பெற்றுடையராய் அத்தாலே உடையவர் என்று நிரூபகத்தை யுடையரான எம்பெருமானாருக்கு உபய விபூதியில் உண்டானாரெல்லாம் சேஷமாய் இருக்கும் –ஆகையால் இவர் விஷயத்தில் இந்த சேஷத்வத்துக்கு இசையாதார் இவற்றின் புறத்தாள் -(திருவிரு -33) என்னும்படி பஹிர் பூதராக எண்ணப்படும் அத்தனை -அதுக்கு விஷயம் இல்லாமையாலே எல்லாரும் இவருக்கே சேஷம் என்றதாய்த்து -இத்தால் கிருஷ்ணனுக்கு வ்ருஷ்ணிகள் சேஷமானாப் போலேயும் சந்திரனுக்கு நக்ஷத்திரங்கள் சேஷமானாப் போலவும் குரு பரம்பரையாகிற முக்தாஹாரமும் ஸ்ரீ கௌஸ்துப மணி ஸ்தாநீயரான இவருக்கு சேஷம் என்னத் தட்டில்லை -சந்த்ரமா நக்ஷத்ராணாம் அதிபதி -இறே -மதி புரையும் தண்மையும் உண்டு இறே இவர்க்கு –

விஷ்ணுஸ் ஸேஷீ என்று தொடங்கி -தஸ்ய நாதஸ்ய சேஷ -என்கையாலே சேஷத்வம் இவ்வளவும் வந்ததாய்த்து -அப்போதே இறே அவன் சேஷியாவது -பெரிய பெருமாள் உயிர் நிலையாய் இருக்கும் -பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி ராமாநுச னாகையாலே –11-சேஷத்வத்துக்கு எல்லை இவரளவும் வருகை இறே -இவர் தாம் அசேஷ சேஷ வ்ருத்திகளையும் செய்து போரும் சேஷன் இறே –உடையவராகையாலே பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று இம்மண்ணின் தலத்துதித்த -95- ஏற்றத்தைப் பற்ற இது எல்லாமே சொல்லுகிறது -உடனமரில் பாடியே -9-4-உபாயவிபூதியையும் படுக்கைப் பற்றாக்கி வைத்தானவன் -திருமாற் கரவு -சென்றால் குடையாம் -53-அணைவது புணர்வதான -2-8-1-ஐக்கியமுண்டு இறே -இங்கே அவதரித்த தசையிலும் அஹம் ஸர்வம் கரிஷ்யாமி –என்கிறபடியே சத்ர சாமர பாணியாய்ப் பின் சென்று போந்தார் -கோயிலிலும் அப்படியே அடிமை செய்து போந்தார் -கொற்றக்குடை இராமானுசன் என்று இறே கூறுவது –

அதுக்கு மேலே விஷ்வக் ஸேநோ யதிபதி ரசவ் வேத்ர ஸாரஸ் த்ரிதண்ட-(சப்ததி -32) வேத்ரபாணி -யத் வேத்ர ஸிகரஸ் பந்தே விஸ்வ மேதத் வ்யவஸ்திதம் (சப்ததி -3)-இவர் தன் கையிலே செங்கோல் கொண்டு சக்ரம் செலுத்துகிற படி -அருளார் திருச்சக்கரத்தில் படியே -திருவிரு -33-இவரும் திருவாழி மோதிரம் கைக்கொண்டு ஸேநாதி பதிப்பட்டமிறே செலுத்துகிறது -அவன் தான் நிஸ் ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூச –வ்ரத சகலமேதத் ஸம் ஸ்ரிதார்த்தம் சகர்த்த -என்னும்படி தன்மையும் தன்னுடைமையையும் இவரிட்ட வழக்காக்கின படி -பகவத் வஸ்து திருவானந்தாழ்வான் மடியிலும் திருவடி திருத்தோளிலும் சேனை முதலியார் திருப்பிரம்பின் கீழுமாய்த்து வளர்ந்து போருவது -அவை எல்லாம் அவர்கள் எல்லாரும் ஒரு வடிவு கொண்டது என்னும்படியான இவரிடத்திலே யாய்த்து -அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து-5-3-8-இப்படியாயிற்று -தான் நித்ய ஸூரிகள் அதீனமாகையால் அந்த நித்ய விபூதியும் வானவர் நாடாய் இருக்கும் -3-3-9-

இப்படி சேஷ சேஷாஸ நாதி ரூபேண அவ்விடமும் நோக்கி அடையார் கமலத்து -33- இத்யாதிப்படியே இந்தப்பூதலம் காப்பதற்கு என்றிடையே இராமானுச முனியாயின –33-என்கையாலே இவ்விடத்துக்கும் நிர்வாஹகர் இவரே இறே -வேதாந்தாநாம் இத்யாதி -ஆகையால் இராமானுசன் செய்யும் சேமங்கள் –மாற்றுளார் தரமோ –39- என்று அருளிச் செய்தது –இவ்விடத்தில் மூக ரக்ஷஸ் ஸூக்களுடைய வார்த்தையை ஸ்மரிப்பது -பால மூக ஜடாந்தாஸ் ச -பரத்வாஜ ஸம்ஹிதை -1-35-என்கிற பிரமாணார்த்தம் இவரிடத்திலே ப்ரத்யஷிக்கலாம் இறே –

வீடளிக்குமவரான -95-இவருக்கு விபூதியில் உள்ளார் எல்லாரும் சேஷமாகில் வீடு பெறாதே ஒழிவான் என் என்னில் -உலகில்லை -4-10-6-என்கிறபடியே ஸாஸ்த்ர வையர்த்யம் வாராமைக்காகவும் ஸர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காகவும் -லோகவத்து லீலா கைவல்யம் -2-1-33- என்று அவனுக்கு லீலா ரஸமும் நடக்க வேண்டுமே -எல்லாத் தசையிலும் அவனுடைய பாவத்தைப் பின் செல்லுமவராகையாலே –சென்று சென்றாகிலும் -3-9-10-காரியம் செய்ய வல்லவர் இறே -என்னை யாள வந்திப்படியில் பிறந்தது -51-என்னும்படி -பலபடியாக உகந்தோர் உயிர்கள் காக்கும்படி -6-9-3-அவதரித்தருளுவர் -ஸம்பவாமி யுகே யுகே போலே -இனித்தான் சேதனருக்கு ருசி முன்னாக ஆஸ்ரயித்ததால் யாய்த்து உஜ்ஜீவனம் உள்ளது -அந்த ருசி ஆசார்யனடியாக வர வேண்டுமே -ருசி முன்னாகப் போகாமையாலே வைதிக புத்ரர்களுக்கு புநரா வ்ருத்தி யுண்டாய்த்து -மீளாரோ தேசியன் பால் மேவாதார் —இவர் தாம் அந்தப் ருசி உண்டாகும்படி எங்கும் சஞ்சரித்து ருஸ் யுதபாதநம் பண்ணி அதுக்கு மேலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டலா மார்க்கதாயியாய் பரந் தாமம் என்னும் திவத்தையும் தந்தருளுமவர் இறே -94-ஆகையாலே எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்றாருக்கு இறே மோக்ஷ ஸித்தி யுள்ளது என்று அருளிச் செய்வர்கள் -அவர் அளவும் அன்றிக்கே அவர் ஸம்பந்த சம்பந்திகளும் தங்களை யாஸ்ரயித்தவர்களுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட ப்ராப்தியையும் பண்ணக் கடவராய் இருப்பர்கள் –

நான் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும் என்றார் இறே -அத்தைப் பற்ற கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் –அல்லா வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே -7– என்றார் –இவருடைய மாஹாநஸிக ஸம்பந்த முடையார் இறே தும்பையூர் கொண்டிக்கு மோக்ஷம் கொடுத்தது -இவருடைய ஸிஷ்ய ப்ரஸிஷ்யர் இறே பரம பதத்திலே ஒரு கோல் தரைக்குச் சிறு முறி இட்டது -மற்றும் இவர் ஸம்பந்த முடையார் இறே சராசரங்களுக்கும் -ஸ்தாவராண் யபி முச்யந்தே -என்னும்படி மோக்ஷ பிரதானம் பண்ணி யருளிற்றும் -இன்னமும் ராமானுஜ ஸித்தாந்தம் நடையாடும் தனையும் இவ்வைபவம் நடந்து செல்லும் இறே–

பஸூர் மனுஷ்ய இத்யாதி –யம் யம் ஸ்ப்ருஸதி இத்யாதி -அந்தோ நந்தேத்யாதி -ஆகையால் குன்றம் எடுத்தானடி சேர் இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி–நன்றும் திருவுடையோம் -என்றது இறே -குன்றம் எடுத்த பிரானடியாரோடும் ஓன்றி நின்ற சடகோபன் -7-4-11-என்று இறே அருளிச் செய்தது -ஸகல தூர்வாஹண சாமர்த்தியத்தை யுடையவனை இறே இவர் சமாஸ்ரயணம் பண்ணிற்று -ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-9-சடகோபனுக்கும் ராமானுஜனுக்கும் உண்டான ஐக்யம் இருக்கிறபடி–

ஆகையால் ராமானுஜன் அடியைத் தொடருகை இவ்வாத்மாவுக்குத் தஞ்சமாவது –இராமானுஜனை யுன்னும் திண்மை -73-அந்த அத்திவசாயத்துக்கு அனுகுணமாக நந்தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப்பூ மன்னவே -108-என்றும் உன் பத யுகமாமேர் கொண்ட வீடு -83-என்றும் இறே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய வேஷம் இருப்பது -அங்கும் பர்யங்க வித்யையில் படியே இறே அனுபவிப்பது -தயா ஸஹா ஆஸீநம நந்தபோகி நி -ஸ்தோத்ர 39- சேஷ போகே ஸ்ரியா ஸஹா ஆஸீநம் -என்றும் ஆயிரவாய் வாளரவின் சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் -என்றும் இறே இருப்பது –

விண்ணின் தலையிலே -95-வீற்று இருக்கும்படியிலும் -4-5-1- அப்படியே -அன்றியே சுடராழியும் பல்லாண்டு -அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -என்று இறே மங்களா சாசனத்தின் எல்லை இருப்பது -கையாழி என்னும் படை -33-தொடக்கமானவை இறே இவரும் -அன்றியும் முக்தரான பராங்குச பரகாலாதிகளான அடியார்கள் குழாங்களோடே -2-3-10-பரங்குசாத் யைர் பக்தைரப்யா சார்யைஸ் சமுபஸ்திதம் -என்னும்படி எழுந்தருளி இருக்கும் இருப்பும் -அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை -10-9-11- என்றும் ப்ராப்யத்தில் முடிந்து நிலமாய் இறே இருப்பது -அவை தர்மை -இத்யாதி -வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் (நான் -90)யதோபாஸநம் பலமிறே -விசிஷ்டமிறே ப்ராப்யம்

இப்படி எல்லாத்தாலும் அத்ர பரத்ர ஸ அபிப் படியே ப்ராப்யத்தில் சரமாவதி எம்பெருமானார் திருவடிகளாய் இருக்கும் -அதுக்குப் ப்ராபகமும் இவர் திருவடிகளே -அது தான் ஸ்ரீ வத் சாங்க நாமாவாய் இருக்கும் -அது தான் ஸ்ரீ ராமா அவரஜ முநீந்த்ர லப்த போதத்தை யுடைத்தாகையாலே பரம சேதனமுமாய் -ஸ்ரீ பாஷ்ய ப்ரவர்த்தனத்துக்கு ஸஹகாரிகளான ஸஞ்சார மஹா பாஷ்யம் என்னும்படியாய் -ராமாநுஜார்ய வஸகமுமாய் தீர்க்க ஸரணாகதி ப்ரவர்த்தகத்வத்தாலே பிரபத்தி மார்க்க ப்ரதர்சகமுமாய் -ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்றும் சரணம் அடைந்திருப்பதுமாய் இருக்கும் -அத்தைப் பற்றப் பிள்ளை லோகாச்சார்யாரும் எம்பெருமானார் என்றும் நிரூபகமானவருக்குக் கூர குலோத்தம தாஸர் என்றும் தாஸ்ய நாமம் ப்ரசாதித்தருளிற்று -பரமாத்வைத விஞ்ஞான பரஸ்ய பர யோகிந ஸூஸ்ரூஷா க்ரியதே யேந தத்பாதவ் மம மஸ்தகே –என்கிறபடியே ஸர்வேஸ்வரனுக்கு சிரஸா வாஹ்யராவது இவ்வாத்ம வஸ்து அவருக்கு சேஷமாகில் இறே –இவர் ஸம்பந்த அனுசந்தானம் இருக்கிற படி -விசிஷ்டாத்வைத ப்ரதிபாதந ஸஹகாரியான ஸிஷ்டர் இறே–

இனி அதுக்கு மேலே யதிவர புநரவதாரமாய் -அதயேவ ஸமஸ்தாத்ம ஸம் உஜ்ஜீவன ஜென்மமுமாய் தத் வைபவம் ப்ரதிபாதகமுமாய் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் யதிராஜம் என்னுமாப் போலே யதிவர சரணமுமாய் தததிகமுமாய் இறே யதீந்த்ர ப்ரவண நாமாவான சரம சரணங்களின் ஏற்றம் இருப்பது -பூ மகள் கோன் -இத்யாதி (திருவாய் மொழி நூற்ற -42) திரு மா மகள் கொழுநன் -உபதேச -61-இத்யாதி -அடியாக இறே ஜகத்தை எல்லாம் உஜ்ஜீவிப்பது -ஆக இவ்வைபவங்களை எல்லாமே நினைத்து -தஸ்ய நாதஸ்ய சேஷ -என்று தலைக் கட்டிற்று–

இந்த விபூதியில் நடையாடாத இவ்வர்த்தங்களை ஓர் ஆச்சார்ய முகத்தாலே கேட்டவன் க்ருதார்த்தன் -இம் மஹா நிதியான இவ்வர்த்த பிரதர்சகரான ஸ்வாசார்யனை -இராமானுசன் என் தன் மா நிதியே -20- சேம வைப்பே –22-என்னும்படி கண்டு மண்டி அனுபவித்து -தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் -84- என்னும்படி தொண்டு பூண்டு -திருமாலை -5-எத்தொழும்பும் சொல்லால் மனத்தை கருமத்தினால் செய்து போரக்கடவன் -80-

ஸித்தே ததீய சேஷத்வே ஸர்வார்த்தாஸ் சம்பவந்தி ஹி கைங்கர்யம் அகிலாவ்ருத்தி இத்யேஷ ஞான சங்க்ரஹ -என்னக் கடவது இறே -இராமானுச முனிக்கன்பு செய்யும் சீரிய பேறுடையரான -3-மஹாத்மாக்களோடே இவ்வர்த்தத்தை ஸ்ரவித்து வைத்து அந்த ஆச்சார்ய வைபவத்தை பிரகாசிப்பியாமல் ப்ரசன்னமாக்கில் ஆஸ்திக நாஸ்திகனாய் தன்னுபதேசம் கேட்டவனும் தானும் ப்ரஸ்யுதவ் தாவுபாவபி -என்னும்படி அநர்த்தப்பட்டுப் போவர்கள் –இப்படி க்ருதக்நன் இன்றிக்கே க்ருதஞ்ஞனாய் அநுவர்த்தாதிகளோடே ஆதரிக்குமாகில் தானும் உஜ்ஜீவித்துத் தன்னை அடைந்தாரையும் உஜ்ஜீவிப்பிக்க வல்லனாம் -இப்படி எம்பெருமானார் ஸம்பந்தத்தோடே உபதேசிக்குமதுவே அர்த்தம் -தத் ஸம்பந்தத்தை ஒழியச் செல்லுமது அபார்த்தம் -குரும் ப்ரகாசயேத் -இப்படி சரீர சரீர சரணங்களின் ஐக்யத்தை நித்யமாகச் சொல் மாலைக் கண்ணிப் பூக்களின் அனுசந்தானத்தாலே தமருகந்த தெவ்வுருவம் –44-தத் ததர்ச்சாகதாந் பக்தான் குர்வா தீம்ஸ் ச –என்னும்படியான அடிகளின் படிகளை உகந்த உகந்த மேவி மன்னிப் போரக் கடவர்கள்–

ஆக இத்தாலே
ஸ்ரீ யபதியாய் ஸர்வ வியாபகனாய் அத்தாலே ஸர்வ சேஷியாய் இருப்பான் ஸர்வேஸ்வரன் என்றும்
இப்படி ஸர்வ வியாபகனுக்கு ஸர்வ கல்யாண குண ஆஸ்பதமான விக்ரஹம் ஆழ்வார் என்றும்
இப்படி பரம சேதனமான அவ்விக்ரஹத்துக்கு நினைவறிந்து நடக்குமதாய் தத் ஸம்பந்தம் அடியான ஸ்ரீயை யுடைய ராமானுஜன் பதாம்புஜங்களாய் விளங்கா நிற்பர் என்றும்
அப்படி சடகோப சரணங்களாய் விளங்கா நிற்கிற அந்த ராமாநுஜாசார்யாரிடத்திலே ஆசார்ய பதமானது விளங்கா நிற்கிறது என்றும்
இப்படி ஆசார்ய பதஸ்தராய் இருக்கிற இவரை ஒழிந்த மற்றையாரிடத்தில் ஸ்வத இல்லை இப்படி யாகையாலே யென்றும்
இப்படியாகையாலே இவரை ஒழிந்த சேஷித்வ ஆச்சார்ய குலம் அடங்கலும் -அர்வாஞ்ச இத்யாதிப் படியே குலநாதரான இவருக்கே சேஷமாய் இருக்கும்
என்றும் சொல்லித் தலைக் கட்டிற்றாய்த்து –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ.நாயனார் ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading