- ஸ்ரீபெரும்புதூர் ஆளும் அரசே திருவடி அழகே தெள்ளிய துறவே
மாபெரும் தருவாம் வைணவம் அதனை மண்ணில் வளர்த்த ராமானுஜனே
2.உபய விபூதி செல்வமனைத்தும் உத்தமன் அரங்கன் அள்ளி வழங்க அபயம் அளிக்க அடியவர் மீது அருள் விழி காட்டும் ராமானுஜனே
3.ஆம் இவன் முதல்வன் என்றொரு வார்த்தை ஆளவந்தாரின் திருவாய் மலர தாம் முதல்வன் என வைணவம் காத்து தரணியை ஆளும் ராமானுஜனே
4.தன் குருவாகிய பெரிய நம்பியின் அன்பினை ஏற்ற சீடனும் நீயே தன் குருவும் தன் குருவாய் கண்ட தன்னிகரில்லா ராமானுஜனே
5.திருக்கோட்டியூரின் நம்பியின் வாயால் திருமந்திரத்தின் பொருளை அறிந்து பெரு உலகத்தின் செவியில் உரைத்து பெருமை கண்ட ராமானுஜனே
6.ஆண்டாண் அரையர் திருமலை நம்பி ஆசிரியர் குழு யாவும் உகந்து வேண்டிய ஞானம் யாவும் அளித்து வேண்டிய குருவே ராமானுஜனே
- அஞ்சலி செய்து அருகில் அழைத்து அன்புடன் எங்கள் துயர்கள் அழித்து அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும் அழகே யதியே வருக வருக!
- பரமபதத்தில் மாலவனுடனே பாக்கியம் கொண்டு நித்தமும் வாழ்வார் அமரர் அனைவரின் தலைவனும் ஆகிய அற்புத ராமானுஜனே வருக
3.நரகம் அழுந்தா நற்கதி அருளும் நானிலமெங்கும் நன்மைகள் புரியும் உரமென அமையும் உயரிய அடிகள் உடையவன் நீயே வருக! வருக
4.சடகோபனுக்கு முன்னே எழுந்த சத்திய உருவே ராமாநுஜனே கடலாம் பிறவியைக் கடந்து செல்ல கருணை காட்டிட வருக !வருக! - தாமரை மலரால் தாங்கிய மார்பை தாங்கிய ஹரியை பாடிய முனியின் மாமலர் விந்தம் மாண்புடன் பணிந்த வடிவே ராமானுஜனே வருக
- காவிரி அழகன் நம்பெருமாளை கண்களில் வைத்து நெஞ்சில் நிறுத்தி பாவிரி கலியன் திருவடிபணியும் பரமா ராமானுஜனே வருக.
1.திசைகளில் ஒளிரும் கமலச்செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும் இசைவுடன் அதிலே இணைந்து அமைந்த இனிமை கூட்டிடும் இடது கழலும்
- இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற் கழலும் திடமெனஅழகை எல்லாம் சேர்த்த திவ்வியமான கணுக்கால் எழிலும்
- அதிசய ஒளி முகம் சுருளாய் இறங்கும் அழகைப் போலிரும் முழந்தாள்களும் புதிரென அமையும் திருத்தொடைகளும் பொன்னரை நாணைப் பூண்ட அழகும்
- அந்தி நிறத்தில் அமையும் ஆடையும் அஞ்சலி செய்யும் தடைக்கைகளும் உந்தி மலரும் உயரிய கரமும் உடன் இணைந்திடும் கணுக்கைகளும்
- தங்க வளையலை தாங்கிய அழகும் தானாய் மடிந்த முழங்கைகளும் அங்கம் விரிந்து நீண்டு அமைந்த அழகிய புஜங்கள் ஆடும் அழகும்
- பள பளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும் வளமாய் பிரிந்த முந்நூல் அழகும் வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்
- வலம்புரி சங்கின் சுழி போல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும் உலகை மயக்கும் மந்திர முகமும் உரையை வழங்கும் திருப்பவளமும்
- மந்தஹாசமும் ஸ்படிக மயத்தில் மண்டலம் போன்றிரும் கபோலங்களும் செங்கணகத்தில் செழித்து வளர்ந்து செவிமெல் அமைந்த கர்ணபாசமும்
- கொடி மூக்கழகும் கோலத் தாமரை குடி கொண்டாலும் இரு நயனங்களும் வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்
- சந்திர கிரணம் ஒன்று கலந்து சரியும் அழகாய் தாமரை நாமமும் இந்திரை மலராள் திருவடி போலே இலங்கி வரும் ஸ்ரீ சூர்ணமும்
- உயர்ந்து வளர்ந்த திருமுடி அழகும் உறைந்து தழைந்த திருக்கேசமும் நயந்து சுற்றிய நல்ல குழலினை நன்றாய் சுற்றிய சிகாபந்தமும்
- பின் எடுத்ததோர் பிடரியின் அழகும் பிரிந்து கூடிய முக்கோல் அழகும் கண்ணுடன் பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்
- காணக் காண திகட்டிடாது கவினாய்த் தோன்றும் ராமாநுஜனே தேனாம் உன் அடி சரணம் அடைந்தோம் தினமும் எம்மை காத்தருள் என்றே
- பெரியோய் உந்தன் திருவடி நிலைகள் பெரிய மனதுடன் எங்களை காக்க ஹரியின் அணையாய் அமையும் வடிவே அடியார் கால்களை அன்புடன் காக்க
- பாஷ்யகாரரே உங்கள் பரிவு பாதநிலைகளை பதமாய் காக்க பரமபதத்தை அருளும் முனியே பணியும் இடையை பரிந்து காக்க
- வயிற்றுப் பகுதியை ராமானுஜனே வண்ணத் திருவருள் வலிந்து காக்க அயர்வே அறியா இளையாழ்வாரே அன்புடன் மார்பு பகுதியை காக்க
- எம்பெருமானார் என்றும் துறவே எங்கள் முதுகுப் பகுதியை காக்க உம்பர்கள் போற்றும் உபய வேதமே உன்னை காணும் கண்களை காக்க
- பூதப் புரியிலே வாழும் அரசே புகழை கேட்கும் செவிகளைக் காக்க யாதுமாகிய எதிராஜா நீ எங்கள் நாசியை என்றும் காக்க
- உன்னை காணும் வதனம் தன்னை உயர்வே யதீந்த்ர முனியே காக்க உன்னைப் பேசும் வாயை நாவை உணர்வே லக்ஷ்மண முனியே காக்க
- பொன்னடி வணங்கும் சென்னிப்பகுதியை பூமன்னு மார்பன்அடியே காக்க உன்னிரு கண்ணின் கடைவிழியாலே உள்ளப்பிணிகள் வராது காக்க
- அரவின் வடிவே விஷங்கள்எதுவும் அடியார் பக்கம் வராது காக்க வரமாய் அருளும் உனது கரங்கள் வாழ்வில் பிணிகள் வராது காக்க
- மஞ்சனம் ஆடும் மறைமாமுனியே மண்டிய தோஷம் அகற்றிக் காக்க தஞ்சமளிக்கும் ராமானுஜனே சாபம் விலக்கி சதிருடன் காக்க
- முப்புரி அணிந்த முக்கோல் முனியே முப்பொழுதும் எனை முனைந்து காக்க அப்பனுக்கு சங்காழி அளித்தாய் அல்லல் ஏதும் வராது காக்க
- காக்க கனிவுடன் காக்க காக்க காக்க காரேய் கருணை முனியே காக்க காக்க பூதூர் கோனே காக்க காக்க கமலப் பதத்தால் – கமல பதத்தால்
- வேண்டிய எம்மை ஆண்டருள் செய்வாய் வேதச் செறிவாய் யோகம் புரிவாய் நீண்ட கரத்தால் நாளும் அருள்வாய் நின் திருவடியால் ஞானம் தருவாய்
- ராமானுஜனே என்னாரமுதே ராமானுஜனே என் உறுதுணையே ராமானுஜனே என் மாநிதியே ராமானுஜனே என் பெருந்தகையே
- சரணம் சரணம் ராமானுஜனே சரணம் சரணம் உனது மலர்த்தாள்சரணம் சரணம் ஸ்ரீ எதிராஜா சரணம் ஸ்ரீபெரும்பூதூர் முனியே
———————
ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்
சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.
ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்
ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்
ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,
சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்
மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.
தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்
மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,
ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,
ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான
சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.
ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:
நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே
வாஸரேஸ்வர:
என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்
காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே
ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.
க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:
ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே
ஸுரவந்தித:
என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட
ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.
ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:
என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.
மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு
உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.
அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.
ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:
யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ
அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்
ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:
ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.
யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.
இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்
சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி
மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:
சூர்ய மங்கள ஸ்லோகம் !
பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !
சூரிய பகவான் !
காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்
வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சூர்யன் த்யான ஸ்லோகம் !
ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்
சூரியன் காயத்ரி !
அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply