அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
——-
ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்
இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்
முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்
இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
——–
1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி₂ அதி₄கரணம்
சாண்டில்யர் காட்டும் ப்ரஹ்ம வித்யை
முதல் பாதத்திற்கும் மேல் பாதங்க்ளுக்கும் ஸங்கதி
ப்ரஹ்ம ஸூத்ரங்களின் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயத்தில், உபநிஷத்தில் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் அனைத்துமே பரமாத்மாவிடம் தான் பொருந்துகின்றன என்று காட்டுகிறார் வ்யாஸர். அதில் முதல் பாதத்தில் உள்ள 11 அதிகரணங்களால் ஜகத்காரணமான ப்ரஹ்மம் அனைத்து சேதந மற்றும் அசேதநப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டது என்று நிரூபித்தார் வ்யாஸர். இனி இரண்டாவது பாதத்தைத் தொடங்கலாம்.
முதல் அத்யாயத்தில் முதல் பாதத்துக்கும், மேல் உள்ள மூன்று பாதங்களுக்கும் பல விதமான ஸங்கதிகள் உள்ளன.
- ’ஜந்மாத்₃யஸ்ய யத:’ என்ற ஸூத்ரத்தில் ஜகத்துக்குக் காரணமாக இருத்தல் என்பது ப்ரஹ்மத்தின் இலக்கணம் என்று சொல்லப்பட்டது. இனி, அந்த ப்ரஹ்மம் பரமாத்மாவே என்று நிரூபிக்க இரண்டு விஷயங்களை நிரூபிக்க வேண்டும்.
(i) அயோக₃ வ்வவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது – இதுவே முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப் பட்டது.
(ii) அந்ய யோக₃ வ்யவச்சே₂த₃ம் –ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது –
இதுதான் மேலுள்ள மூன்று பாதங்களால் செய்யப் படுகிறது.
34 அதிகரணங்கள் -முதல் அத்தியாயத்தில் உள்ளன –
பிரதம -பாதம் -அயோக விவச்சேதம் -அர்ஜுனன் வில்லாளியே-ப்ரஹ்மத்திடம் ஜகத்காரணம் உள்ளது
த்ரிபாதி -அந்ய யோக வியவச்சேதம் –மூன்று பாதங்களும் சேர்ந்து -அர்ஜுனன் தான் வில்லாளி –ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம்-வேறு யாரிடமும் இல்லை -பொருந்தாது என்று நிரூபணம்
- முதல் அத்யாயத்தில் ஒவ்வொரு அதிகரணத்திலும், உபநிஷத்தில் ஓரிடத்தில் இருக்கும் ஏதோ ஒரு அடையாளத்தைக் கொண்டு தான் பூர்வ பக்ஷீ கேள்விகளை எழுப்புகிறார் – ப்ரதானம் அல்லது ஜீவன் அல்லது ஆகாசம் அல்லது ஸூர்யன் ஜகத் காரணமாக இருக்கட்டுமே என்று. இவ் விடத்தில், பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் –
(i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள்
(ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள்
(iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள்
(iv) நான்காம் பாதத்தில் மிகவும் தெளிவான அடையாளங்கள் என்று.
(அத்யந்த அஸ்பஷ்ட தரம் லிங்கம் -ராமன் விஷ்ணுவின் அவதாரம்
அஸ்பஷ்டம் லிங்கம் -ராமன் தசரதனின் மகன்
ஸ்பஷ்டம் லிங்கம் -தசரதனின் மகனான mஅயோத்யைக்கு அரசன் -பரதனும் கொஞ்ச காலம்
அத்யந்த ஸ்பஷ்ட தரம் லிங்கம் -சீதைக்கு மணாளன்)
- முதல் பாதத்தில் ஜகத் காரணமான ப்ரஹ்மம் சேதன-அசேதன பொருள்களைக் காட்டிலும் வே றுபட்டது என்று நிரூபிக்கப்பட்டது.
இரண்டாம் பாதத்தில், சேதன-அசேதனங்களை சரீரமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்று கூறும் வாக்கியங்களை ஆராய்கிறார் வ்யாஸர்.
மூன்றாம் பாதத்தில், சேதன-அசேதனங்களைத் தாங்கக் கூடியது ப்ரஹ்மம் என்று கூறும் வாக்கியங்களை ஆராய்கிறார் வ்யாஸர்.
நான்காம் பாதத்தில், ஸாங்க்ய மதம் சொல்லுவது போல் இருக்கும் வாக்கியங்களை ஆராய்கிறார்.
சேதன அசேதன-விஸ்வம்-விலக்ஷணம்-முதல் பாதம்
விஸ்வம் வபு -சரீரமாக இருக்கும் வாக்கியங்கள் -இரண்டாம் பாதம்
விஸ்வ -ஆதாரம் -தாங்குபவன் -மூன்றாம் பாதம்
சாங்க்ய -ப்ரக்ருதியே போன்ற வாக்கியங்கள் -நான்காம் பாதம்
இப்படி பல விதமான சங்கதிகள் உண்டு –
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி – 1.1.11 இந்த்ர ப்ராண அதிகரணத்தில், ஒரு வேதப்பகுதியே பரமாத்மாவைப் பற்றிப் பேசுகிறபடியால் தொடக்கத்தில் இருக்கும் ஜீவனைப் பற்றிப் பேசும் ஒரு வாக்கியத்துக்கு வேறு பொருள் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த அடிப்படையில் தான் 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் பூர்வ பக்ஷீ கூறுகிறார் – இங்கு வேதப் பகுதியே ஜீவனைப் பற்றிப் பேசுகிற படியால், ஜீவன் தான் ஜகத் காரணம் என்று கொள்ள வேண்டும் என்று.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தில் 3ஆம் அத்யாயத்தின் 14ஆம் பகுதி – “சாண்டில்ய வித்யை ”
ஸர்வம் க₂ல்வித₃ம் ப்₃ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத –
இந்த உலகனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி-ப்ரஹ்மத்திடம் லயம் அடைந்து ப்ரஹ்மத்தால் காக்கப் படுகிறபடியால் ப்ரஹ்ம மயமானது என்று புரிந்து கொண்டு, சாந்தி (விருப்பம் வெறுப்பு கோபம் முதலானவை விலகுதல்)உடையவனாய் உபாஸநம் செய்யக் கடவன்.
மநோமய: ப்ராண ஶரீரோ பா⁴ரூப: ஸத்ய ஸங்கல்ப
ஆகாஶாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காம: ஸர்வ க³ந்த:⁴ ஸர்வ ரஸ:
ஸர்வ மித³ம் அப்⁴யத்த அவாககீ அநாத³ர: ॥ 3.14.2॥
த்யானிக்கப்பட வேண்டிய ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்கிறது
12 குணங்களைச் சொல்கிறது-மேல் ஸூத்ர விளக்கத்தில் பார்ப்போம்
ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ருʼத³யே அணீயாந் வ்ரீஹேர்வா யவாத்³வா
ஸர்ஷபாத்³வா ஶ்யாமா காத்³வா ஶ்யாமாக தண்டு³லாத்³வா
ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ருʼத³யே ஜ்யாயாத் ப்ருʼதி²வ்யா ஜ்யாயாந் அந்தரிக்ஷாஜ் ஜ்யாயாந் தி³வோ ஜ்யாயாந் ஏப்⁴யோ லோகேப்⁴ய: ॥ 3.14.3॥
அரிசியை விட -கோதுமையை விட கடுகை விட சோளப் பொறியை விட சிறியதாக இருந்தும் பிருத்வி மண்டலம் விடவும் அந்தரிக்ஷ லோகம் விட பெரியவர்
அவ்வளவு பெரியவர் நம்மை -கொள்ள இவ்வளவு சிறியதாக — கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்கும் என்று -நாள் பார்த்து இருக்கும் –
இந்த ப்ரஹ்மம் நுண்ணியவராய் என் ஹ்ருதயத்திற்குள் இருக்கிறார்.
ஹ்ருதயத்திலிருக்கும் இந்த ப்ரஹ்மம் பூமி, ஆகாசம் முதலானவற்ணறக் காட்டிலும் பெரியது.
ஏதம் இத꞉ ப்ரேத்ய அபி₄ஸம்ப₄விதோ அஸ்மி – அந்த ப்ரஹ்மத்தை நான் ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அடைந்த பிறகு நான் அடைந்து அநுபவிக்கப் போகிறேன்-
.இதி யஸ்ய ஸ்யாத் அத்₃தா ₄ ந விசிகித் ஸாஸ்தி – இவ்வாறு எவன் ஸந்தேஹத்துக்கு இடமளிக்காமல் உறுதியோடு உபாஸனம் செய்கிறானோ , அவனுக்குப் பயன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை
இதி ஹ ஸ்மாஹ சாண்டில்ய சாண்டில்ய ꞉ – இவ்வாறு சாண்டில்யர் உபதேசித்தார்.
ஸந்தேஹம் – இங்கு உபாஸிக்கப் பட வேண்டிய பொருளாச் சொல்லப்படும் ப்ரஹ்மம் ஜீவனா?
ஜீவனே இங்கு சொல்லப்படும் ப்ரஹ்மம் என்று பூர்வ பக்ஷம்
பூர்வபக்ஷம் – இங்கு உபாஸிக்கப் பட வேண்டிய ஜகத் காரணமாகச் சொல்லப்படும் ப்ரஹ்மம்-ஜீவாத்மாவே –
காரணங்கள்-
1-ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம” அதாவது “இந்த உலகனைத்தும் ப்ரஹ்மம் அன்றோ ” என்று முதலில் சொல்லப் படுகிறது. ’இந்த உலகம்’ என்று சேதன அசேதநப் பொருள்கள் அனைத்தும் சொல்லப் படுகின்றன. இவை அனைத்தாகவும் ப்ரஹ்மமே இருக்கிறது என்று கூறப் படுகிறது. இது பொருந்த வேண்டும் என்றால் ப்ரஹ்மம் என்பது ஜீவாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.
ஜீவாத்மா தான் அநாதி காலமாக அஜ்ஞாநத்தால் மூடப்பட்டு, பாபம் மற்றும் புண்யம் என்ற
கர்மங்களைச் சேர்த்து, அதன் விளைவாக உலகிலுள்ள பொருள்களாக ஆகிறார். பரமாத்மாவோ எவ் விதமான குற்றமும் அற்றவர் என்று சொல்லப்படுகிறபடியால், அவர் இந்த உலகமாக ஆகுவது பொருந்தாது
2-“ஜீவாத்மாவைக் குறிக்கவும் ’ப்ரஹ்மம்’ என்ற சொல் பயன்படுத்தப் படுவதைக் காணலாம். -கண்ணனே கீதையில் “நிர்தோ₃ஷம் ஹி ஸமம் ப்₃ரஹ்ம” அதாவது ’தூய்மையான நிலையிலிருக்கும் ஜீவாத்மாவாகிய ப்ரஹ்மம்” என்கிறார்-
இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந–
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா—৷৷5.19৷৷
ப்ரக்ருதி சம்பந்த ரூப தோஷம் அற்றதாய் அதனாலேயே சமமாய் இருப்பதான ஆத்ம வஸ்துவே அன்றோ ப்ரஹ்மம் எனப்படுகிறது
3-மேலும், “தஜ்ஜலாந்” அதாவது “இவ்வுலகம் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டு, ப்ரஹ்மத்தில் அழிந்து, ப்ரஹ்மத்தால் ரக்ஷிக்கப் படுகிறது” என்று கூறப் படுகிறது. இதுவும் ஜீவனுக்குப்
பொருந்தும். உலகிலுள்ள எந்த ஒரு பொருளும் ஜீவாத்மாவின் பாபம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையில் தான் படைக்கப்படுகிறது. எனவே ஜீவனுடைய கர்மத்தால் இவ் வுலகம் படைக்கப்பட்டு , காக்கப்பட்டு , அழிக்கப் படுகிறபடியால் ஜீவனே இதற்கெல்லாம் காரணம் என்று கூறலாம்.
தஜ்ஜ–தல்ல -த அனு –உலகம் அனைத்துமே ப்ரஹ்மமே -இத்தை உணர்வது சாந்தி அடையலாம்-அத்வைதியே பூர்வ பஷீ
ஸர்வம் க₂ல்வித₃ம் ப்₃ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத
தானே உலகு எல்லாம் -தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து- தானே ஆள்வானே
உபக்ரம நியாயம் -கீழே போல் இங்கும் கொண்டு பூர்வ பஷியின் வாத்யம்–8 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம் ஸ்தாபனம்
————
1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி₂ அதி₄கரணம்
அனைத்துக்குள்ளும் இருந்தாலும் குற்றமற்றவரே
1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம் – சாந்தோக்ய உபநிஷத்தின் சாண்டில்ய வித்யையில் ’இந்த உலகம் முழுவதுமே ப்ரஹ்ம மயமானது’ என்று கூறப்பட்டது. அந்த ப்ரஹ்மம் ஜீவாத்மா தான் என்று பூர்வபக்ஷீ வாதிட்டார். இனி இந்த அதிகரணத்தில் 8 ஸூத்ரங்களால் இவ் வாதத்துக்கு வேத வ்யாஸர் பதிலுரைப்பதைப் பார்க்கலாம்.
(1) ஸர்வத்ர ப்ரஸித்₃த உ₄பதே ₃ஸாத் –
முன் பாதத்திலிருந்து ’அந்ய:’ என்ற சொல்லை இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸர்வத்ர – அனைத்திலும், அதாவது ’ஸர்வம் இத₃ம்’ என்று உபநிஷத்தில் கூறப்பட்ட உலகப் பொருள்கள் அனைத்திலும்
அந்ய: – உள்ளே உறைபவர் ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவரான பரமாத்மாவே
ப்ரஸித்₃த உ₄பதே ₃ஸா த் – ’க₂லு’ அதாவது ’அன்றோ ’ என்று ப்ரஸித்தமான கருத்து போல் சொல்லப்பட்டபடியால்-
’தஜ்ஜலாநிதி ஸர்வம் இத₃ம் ப்₃ரஹ்ம க₂லு’, அதாவது ’ப்ரஹ்மத்திடமிருந்து தோன்றி, அத்தால் காக்கப்பட்டு, அதில் லயமடைகிற படியால் இந்த உலகப் பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மம் அன்றோ ’ என்று உபநிஷத் கூறுகிறது, இதில்’க₂லு’ (அன்றோ) என்கிற சொல் இருக்கிறபடியால், இது புதிதாக ஒரு விஷயத்தைச் சொல்ல வில்லை , முன்னமே அறியப்பட்ட ஒரு விஷயத்தை நினைவு படுத்துகிறது. இதற்கு அநுவாதம் என்று பெயர். அதனால், மற்ற உபநிஷத் வாக்கியங்களில் உலகத்துக்குக் காரணமாக யார் சொல்லப் பட்டுள்ளாரோ அவர் தான் இங்கும் ப்ரஹ்மம் என்று அழைக்கப்பட முடியும்.மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மா தான் ஜகத் கரணமாகச் சொல்லப்பட்டுள்ளார் என்று கீழ் பல அதிகரணங்களில் வ்யாஸர் நிரூபித்து விட்டார். எனவே இங்கும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே .
(ஜென்மாத்யா அதிகரணம் கீழே பார்த்தோம்
ச காரணம் -கரண அதிப அதிப -இந்திரியங்கள் அதிபதியான ஆத்மாவுக்கும் அதிபதி
அகில காராணாயா நிஷ்காரணம் அத்புத காரணம் பரமாத்மா ஒருவனே)
(புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—–3-4-1—)
பரமாத்மாவே உலகனைத்துமாகவும் இருக்கிறார் என்று கூறினால் அப் பொருள்களில் இருக்கும் குற்றங்கள் அவருக்கு வந்து விடோதோ ? வராது. நம் உடலில் நோய் முதலான குற்றம் இருந்தால், அது நாம் என்ற ஆத்மாவில் இருப்பதில்லையே . அதே போல் உலகப் பொருள்களில் குற்றம் இருந்தாலும் அது அந்தர்யாமியான பரமாத்மாவிடம் வராது.
மேலும், பூர்வபக்ஷியின் வாதத்தில் குறை உள்ளது. ’இந்த உலகமனைத்தும்’ என்பதில் அசேதனம் மற்றும் சேதனம் என்று எல்லாம் அடக்கம். அவை அனைத்தும் ப்ரஹ்மமே என்பதற்கு ஜீவாத்மாவே என்று பொருள் கொள்ள இயலாது –அசேதனப் பொருள்களை உடலாகக் கொண்டு ஜீவாத்மா இருக்கிறார் என்று சொன்னாலும், ஜீவாத்மாக்கள்
ஒருவருக்கொருவர் சரீரமாக இல்லாதபடியால் ஜீவாத்மாவே உலகனைத்தும் என்று சொல்வது பொருந்தாது.
பரமாத்மாவுக்குப் பொருந்தும்; ஜீவனுக்குப் பொருந்தாது
(2) விவக்ஷித கு₃ண உபபத்தே : ச – “சொல்லப்படுகிற குணங்கள் பொருந்துகிற படியாலும் (இது பரமோத்மாவே )”.-இங்கு ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டு, எந்த குணங்களோடு கூடியவராக த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது. அக் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியவை .
மநோ மய: – தூய்மையான மனதால் மட்டுமே அறியப் படுபவர்,வெளிப் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்
ப்ராண சரீர: – அனைவரையும் வாழ வைக்கும் ப்ராணன் என்ற மூச்சுக் காற்றையும் தனக்கு சரீரமாக உடையவர்
பா ₄ரூப: – ஸூர்யன் சந்திரன் நக்ஷத்ரங்கள் என்று அனைத்தையும் தோற்கடிக்கும் நிகரற்ற ஒளி பொருந்தியவர்
ஸத்ய ஸங்கல்ப: – நினைத்தது எல்லாம் உண்மையாகும் (நிறை வேற்றும்) சக்தி உடையவர்
ஆகாஸாத்மா – ஆகாசம் போல் தூய்மை யானவர் –முழுமையாகப் ப்ரகாசிப்பவர்
ஸர்வ காமோ – உலகில் உண்டாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் படைத்தவர்
ஸர்வ காம: – இன்பம் அநுபவிப்பதற்குத் தேவையான தூய்மையான பொருள்களையும் கருவிகளையும் உடையவர்
ஸர்வ க₃ந் த₄: ஸர்வ ரஸ: – எல்லா நறு மணங்களையும் நற் சுவைகளையும் தன் திருமேனியில் கொண்டவர்
ஸர்வம் இ த₃ம் அப்₄யாத்த : – தனக்கு இப் பண்புகள் தேவைப் படா விட்டாலும் பக்தர்களுக்காக ஏற்றுக் கொண்டவர்
அவாகீ – யாரிடமும் பேசாதவர்
அநாத ₃ர: – நிறை வேறாத ஆசைகளில்லாதபடியால் யாரையும் ஆதரிக்கத் தேவை யில்லாதவர்
இவ்வாறு 12 குணங்கள்
கீழ் இரண்டு ஸூத்ரங்களால் பரமோத்மாவே இங்கு சொல்லப்பட்ட ப்ரஹ்மம் என்று நிரூபித்தார். இனி, இக் கருத்தை மேலும் வலுப்படுத்துவற்காக இதையே எதிர்மறையில் சொல்கிறார் அடுத்த இரண்டு ஸூத்ரங்களில் –
(3) அநுப பத்தே : து நா சாரீர: – “பொருந்தாத படியால் ஜீவாத்மா அல்ல” – இங்கு சொல்லப்பட்ட உயர்ந்த குணங்கள் எல்லாம் அளவற்ற துக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. முக்தி அடைந்த ஜீவாத்மாவும் கூட, ஒரு காலத்தில் துக்கத்தை அநுபவித்தவர் தான் என்றபடியால், அவருக்கும் பொருந்தாது.
எனவே , இந்த வாக்கியம் சாரீரன் (சரீரம் உடையவர்) என்றழைக்கப்படும் ஜீவாத்மாவைச் சொல்லவில்லை
நிலை வேறுபாடு மட்டுமல்ல; பொருள் வேறுபாடும் உண்டே
(4) கர்ம கர்த்ரு வ்யபதே ₃சாத் ச – “கர்மமாகவும் கர்த்தா வாகவும் சொல்லப்படுகிற படியாலும் (ஜீவனல்ல)”-இங்கு மற்ற ஓரு வாக்கியம் கூறுகிறது – “ஏதம் இத : ப்ரேத்ய அபி₄ஸம்ப₄விதா அஸ்மி” அதாவது “இந்த ப்ரஹ்மத்தை நான் இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அடையப் போகிறேன்”. ப்ரஹ்மத்தை உபாஸனம் செய்யும் உபாஸகன்-இவ்வாறு த்யானிக்க வேண்டும் என்று உபநிஷத் கூறுகிறது.
எந்த ஒரு செயலுக்கும் ’கர்த்தா ’ (செய்பவர் – Subject) என்பதும் ’கர்ம’ (செய்யப்படு பொருள் -Object) என்பதும் வெவ்வேறு பொருள்கள் இருக்கும். அதைப் போல் இங்கு, ’அடைதல்’ என்ற செயலைச் செய்பவராக (கர்த்தாவாக) ’நான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள ஜீவாத்மா சொல்லப்படுகிறார். அதே செயலில் செயப்படு பொருளாக (கர்மமாக) ப்ரஹ்மம்
சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், அடையப்படும் பொருளான ப்ரஹ்மமும், அதை அடைபவரான ஜீவாத்மாவும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். எனவே இங்கு சொல்லப்படும் ப்ரஹ்மம் ஜீவாத்மா அல்ல.
பரமாத்மாவை அடையப்படுபவனாகவும் ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்-சாந்தோக்யம் -3-14-4-ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –
இங்கு இருந்து சென்று நான் இப் ப்ரஹ்மத்தை அடைகிறேன் – ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி–என்று ப்ரஹ்மம் ப்ராப்யமாகவும் முக்தன் ப்ராப்தா அடைபவன் என்றும் சொல்வதால் அடைபவனான ஜீவனும் அடையப்படும் ப்ரஹ்மமும் ஒன்றாக முடியாது –
இவ்விடத்தில் பூர்வ பக்ஷியின் கேள்வி – ஏன் அடைபவரும் அடையப்படும் பொருளும் வெவ்வேறு என்று கொள்ளவேண்டும்? ஒரே பொருளின் இரண்டு நிலைகளாக இருக்கலாமே ? ’நான்’ என்பது ஸம்ஸாரத்தில் அகப்பட்டிருக்கும் ஜிவாத்மாவைக் குறிக்கிறது. அவர் தான் கர்த்தா. ’ப்ரஹ்மம்’ என்பது அதே ஜீவாத்மா முக்தி அடைந்த
பிறகு எய்தும் தூய்மையான நிலையைக் குறிக்கிறது. அதுதான் கர்மம். எனவே ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று கொண்டாலும் தவறில்லையே ? இதற்கு வ்யாஸர் பதிலளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் –
(5) சப்₃ த₃ விசேஷாத் – “வேறு வேற்றுமை உறுபைக் கொண்ட சொல்லால்”
நிலை வேறுபாட்டைக் கொண்டு ஜீவன் என்றும் ப்ரஹ்மம் என்றும் ஒரே பொருளைச் சொல்ல்லாமே என்று பூர்வ பக்ஷீ சொன்னதை ஏற்க இயலாது. ஏன் என்றால் ஒரே நிலையில் கூட ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்று காட்டுகிறது உபநிஷத்.
உபாஸநம் செய்யும் ஒரு ஜீவாத்மா “ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ரு ₃தயே ” அதாவது “இந்த ப்ரஹ்மம் தான் என்னுடைய ஹ்ருதயத்திற்குள் இருக்கிறது” என்று த்யானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ’ஏஷ:’ (இந்த) என்று முதல் வேற்றுமை உறுபுடன் ப்ரஹ்மம் சொல்லப்பட்டு, ’மே ’ (என்னுடைய) என்று ஆறாம் வேற்றுமை உறுபுடன் ஜீவாத்மா சொல்லப் பட்டுள்ளபடியால், அவர்கள் இருவரும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். இது ஒரே நிலையிலேயே ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று தெளிவாகக் காட்டுகிறது
(சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –-நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க=இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –)
நுண்ணிய ஆத்மா ஜீவாத்மா தானே ?
(6) ஸ்ம்ருத : ச – “ஸ்ம்ருதி (பகவத் கீதை ) சொல்லுகிற படியாலும்”
“ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ரு ₃தயே ” என்று ஜீவாத்மாவின் அந்தர்யாமியாகச் சொல்லப்படும் ப்ரஹ்மம் யாராக இருக்கும் என்று ஆராய்ந்தால், அதை பகவத் கீதை என்ற ஸ்ம்ருதி நூல் தெளிவாகக் காட்டுகிறது –
“ஸர்வஸ்ய ச அஹம் ஹ்ருதி₃ ஸந்நிவிஷ்ட:” (15.15) – எல்லாருடைய ஹ்ருதயத்திலும் பரமாத்மாவான நான் இருக்கிறேன்
“ஈச்வர: ஸர்வபூ₄தாநாம் ஹ்ருத்₃தே ₃சே அர்ஜுந திஷ்ட₂தி” (18.61) – எல்லா ஜீவராசிகளின் ஹ்ருதயங்களிலும் ஈஸ்வரனான பரமாத்மா இருந்து அவற்றை இயக்குகிறார்.
(7) அர்ப₄ கௌகஸ்த்வாத் தத்₃வ்யபதே ₃சாத் ச ந , இதி சேத் , ந நிசாய்யத்வாத் ஏவம், வ்யோமவச்ச” விரிவாகப் பார்ப்போம்.
இந்த ஸூத்ரத்தின் முதல் பகுதியால் பூர்வ பக்ஷியின் கேள்வி சொல்லப்படுகிறது.
அர்ப₄கௌகஸ்த்வாத் – ’ஹ்ருதயத்திற்குள் இருக்கிறார்’ என்று சிறிய இடத்தில் இருப்பவராகச் சொல்லப்பட்டபடியால்
தத்₃வ்யபதே ₃சாத் ச – ’அணீயாந் வ்ரீஹார்வா’ என்று நெல்லை விடச் சிறியவர் என்று சொல்லப்பட்டபடியாலும்– இங்கு சொல்லப்பட்ட ப்ரஹ்மம் பரமாத்மாவாக இருக்க இயலாத (பரமாத்மா அளவிறந்தவரான படியால்)
இதற்கு மேல் வேத வ்யாஸரின் பதில் உள்ளது –
இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு
ஏவம் நிசாய்யத்வாத் – “இவ்வாறு காணப்பட வேண்டிய படியால்” – இங்கு ப்ரஹ்மமே இயற்கையாக நுண்ணியது என்று சொல்லப்படவில்லை . அளவு கடந்தவரான ப்ரஹ்மம் (பரமாத்மா) உபாஸகனின் நன்மைக்காக, சிறிய இடமான ஹ்ருதயத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு இருக்கிறார் என்று த்யானிக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. இது எப்படித் தெரிகிறது என்றால் –
வ்யோமவச்ச – “வ்யோமம் (ஆகாசம்) போலவும் (சொல்லப்படுகிறபடியால்)” – ப்ரஹ்மம் நுண்ணியது என்று சொன்ன பிறகு ’ஜ்யாயாந் ப்ருதி₂வ்யா ஜ்யாயாந் அந்தரிக்ஷாத்’ என்று இந்த ப்ரஹ்மம் பூமி, ஆகாசம் மற்றும் எல்லா உலகங்களையும் காட்டிலும் பெரியது என்றும் சொல்லப்பட்டுள்ளபடியால், ப்ரஹ்மம் சிறிய இடத்தில் இருக்கிறது என்றதோ சிறியது என்றதோ பரமாத்மாவின் கருணையை நாம் புரிந்து கொள்வதற்கே . அதைக்கொண்டு இங்கு சொல்லப்படும் ப்ரஹ்மம் நுண்ணியவரான ஜீவாத்மா தான் என்று சொல்ல இயலாது.
(வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -புகுந்த பின் வணங்கினேன்- எனது சிந்தனைக்கு இனியாய் -என்று உணர்ந்தேன்)
உடலுக்குள் இருந்தால் துன்பமும் இருக்குமோ ?
இந்த அதிகரணத்தின் கடைசி ஸூத்ரத்தில் மிகவும் முக்கியமான விஷயம் ஆராயப் படுகிறது.
(8) ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” – இதில் பூர்வ பக்ஷியின் கேள்வியும் வ்யாஸரின் பதிலும் உள்ளன.
ஸம்போ₄க₃ப்ராப்தி: – இது பூர்வ பக்ஷியின் கேள்வி. ஸம்போகம் என்றால் உலகத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவம். ப்ராப்தி என்றால் அடைவது. பூர்வ பக்ஷீ கேட்கிறார் – ஒரு ஜீவாத்மா உடலுக்குள் இருக்கிறபடியால் உலகத்தில் ஸுகம் மற்றும் துக்கங்களை அநுபவிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல் பரமாத்மாவும் இந்த உடலுக்குள் இருக்கிறார் என்றால், அவரும் ஸம்ஸாரத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவத்தாய் அடைய நேரிடுமே ?
இதி ந சேத் – “இவ்வோறு கூறினால் அது தவறு” – வ்யாஸர் இதற்கு பதில் கூறுகிறார்.
வைசேஷ்யாத் – “(காரணத்தில் இருக்கும்) சிறப்பால்” – அதாவது – “ஒரு ஜீவாத்மா உடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் பரமாத்மா இவ்வுடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் சிறப்பு (வேறுபாடு) இருக்கிறபடியால்”.
உடலுக்குள் இருப்பது மட்டுமே ஸுகம் மற்றும் துக்கத்துக்குக் காரணம் ஆகாது. எந்த காரணத்தால் ஒருவர் அந்த உடலுக்குள் இருக்கிறார் என்று ஆராய வேண்டும்.
ஜீவாத்மோ ஓர் உடலை அடாய்வதற்குக் காரணம், தான் முன் ஜன்மங்களில் செய்த பாபம் மற்றும் புண்ணியம் என்னும் கர்மம் தான். அதனால் அந்த உடல் அவருக்கு ஸுகம் மற்றும் துக்கத்தைத் தருகிறது.
பரமாத்மாவோ தன்னுணடய கருணையால் இந்த உடலுக்குள் இருக்கிறாரே தவிற, கர்மத்தால் அல்ல. எனவே அவருக்கு எந்த ஒரு ஸுகமோ துக்கமோ இதனால் ஏற்படாது.
இதை உபநிஷத்தே அழகான ஒரு உவமையைக் கொண்டு சொல்கிறது –
த்₃வோ ஸுபர்ணோ ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிசஸ்வ ஜாத |
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி||
இந்த உடல் என்ற ஒரு மரத்தில் ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இரண்டு பறைவகள் உள்ளன. அந்த மரத்தில் பழங்கள் உள்ளன. அவைதான் கர்மத்தின் காரணமாக ஏற்படும் ஸுக துக்கங்கள். ஜீவாத்மா அந்த பழத்தை உண்கிறது. பரமாத்மா என்ற மற்ற ஓரு பறவை அதை உண்ணாமல் ஒளியோடு திகழ்கிறது.
இவ்வாறு 8 ஸூத்ரங்களால் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்து, ப்ரஹ்மம் பரமாத்மாவே என்று நிரூபிக்கப்பட்டது
————
1.2.2 அத்த்ரதி₄கரணம்
உண்பது உணவையா? உலகையா?
அத்த்ரதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி – 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் பரமாத்மா உடலுக்குள் இருந்தாலும் அவர் போ₄க்தா அதாவது உலகத்து இன்ப துன்பங்கணை அநுபவிப்பவர் அல்ல என்று சொல்லப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு பூர்வபக்ஷம் எழுகிறது – உபநிஷத்தில் ஓர் இடத்தில் உலக இன்ப துன்பங்கணை அநுபவிப்பவராக ஒருவர்
சொல்லப்படுகிறார்; அவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் – என்று, அதை ஆராய்வது தான் 1.2.2 அத்த்ரதிகரணம். பின்புலம் –
அத்ரு -அத்தா வின் மூலம் -உண்பவன் -என்னும் அர்த்தம்-
அத்த்ரதிகரணத்தின் கதைப்பகுதி
கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தில் முதல் மற்றும் இரண்டாவது வல்லிகள் – நாசிகேத வித்₃யா—உசந் ஹ வை வாஜச்ரவஸ: ஸர்வ வேத₃ஸம் த₃தௌ₃| தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ-வாஜச்ரவஸர் என்ற தந்தை ஒரு யாகம் செய்து, அதன் இறுதியில் ரித்விக்களுக்கு தக்ஷிணை வழங்கி வந்தார். உயர்ந்த பொருள்களை வழங்காமல், உபயோகமில்லாத பசு மாடு முதலானவற்றை அவர் தானம் செய்வதைக் கண்டு, இந்தக் குறையால் இவரது யாகம் பயனளிக்காமல் போய் விடுமோ என்று அஞ்சின அவரது மகனான நசிகேதஸ், அவரிடம் பல முறை சென்று “என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்?” என்ற நச்சரித்தான். தன்னை வழங்கியாவது யாகம் முழுமை அடைந்து தன் தந்தைக்கு ஆசைப்பட்ட பயன் கிட்டவேண்டும் என்கிற நல்ல எண்ணத்திலே . தந்தை கோவமடைந்து “ம்ருத்யுவுக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டார், ஆனால் உடனே தான் செய்ததை நினைத்து வருந்தினார். நசிகேதஸ் மனம் தளராமல் உடனடியாக ம்ருத்யுவின் லோகத்தைச் சென்றடைந்தார்.
ஆசா ப்ரதீஷே ஸங்க₃தம் ஸூந்ருதாம் ச இஷ்டாபூர்தே புத்ரபசூம்ஸ்ச ஸர்வாந் |
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்ய அல்பமே த₄ஸ: யஸ்ய அநச்நன் வஸதி ப்₃ராஹ்மணோ க்₃ருஹே ||
ம்ருத்யு தேவதை தன் உலகத்தில் இல்லாதபடியால் நசிகேதஸ் மூன்று இரவுகள் அவருக்காக வாயிலில் காத்திருந்தான்.-ம்ருத்யு தேவதை வந்தவுடன் பதரிப் போனார் – எந்த ஒரு மனிதனின் வீட்டில் விருந்தாளி உணவளிக்கப்படாமல் காக்க வைக்கப்படுகிறானோ , அவனுடைய ஆசைப்பட்ட பொருள்கள், அடைந்திருக்கும் பொருள்கள், வைதிகச் செயல்கள், குழந்தைகள், பசுக்கள், இவை அனைத்துமே அழிந்து விடுகின்றன என்று ஸாஸ்த்ரம் கூறுகிறபடியால். எனவே அதற்குப் பரிஹாரமாக எந்த மூன்று வரங்களையும் கேட்கலாம் என்று ம்ருத்யு தேவன் நசிகேதஸ்ஸிடம் கூறினார்.
ஶாந்த ஸங்கல்ப꞉ ஸுமநா யதா₂ ஸ்யாத் வீதமந்யுர் கௌ₃தமோ மா(அ)பி₄ ம்ருத்யோ
முதல் வரம் – என்னை ம்ருத்யுவுக்குக் கொடுத்ததால் வருத்தத்தில் இருக்கும் என் தந்தை ஸாந்தி அடைய வேண்டும்
ஸ்வர்க₃க லோகா அம்ருதத்வம் ப₄ஜந்த ஸ த்வ மக்₃நிம் ஸ்வர்க்₃யமத்₄யேஷி ம்ருத்யோ
இரண்டாம் வரம் – மரண பயமில்லாத உலகத்தை அடைய தேவைப்படும் கர்மங்ளைப் பற்றி உபதேசிக்கவும்
இங்கு ஸ்வர்க்கம் -மரணமடையா தன்மை என்பதால் ஸ்ரீ வைகுண்டம் -மோக்ஷம்
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யே அஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே । ஏதத்₃வித்₃யாம் அநுஶிஷ்ட: த்வயா அஹம்-மரணமடைந்த பிறகு ஒருவன் இருக்கிறானா இல்லையா என்று பலவிதமான வாதங்கள் சொல்லப்படுகின்றன. இதன் உண்மையை நீ உபதேசிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
ஶதாயுஷ꞉ புத்ர பௌத்ராந் வ்ருணீஷ்வ ப₃ஹூந் பஶூன் ஹஸ்தி ஹிரண்யமஶ்வான் | பூ₄மேர் மஹதா₃ யதநம் வ்ருணீஷ்வ
மூன்றாம் வரம் -மிக உயர்ந்த விஷயத்தைப் பற்றியதான படியால், அதை அறிய நசிகேதஸ்ஸுக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக ம்ருத்யு தேவதை கூறினார் – ஆயுஸ்ஸு, குழந்தைகள், பசுக்கள், யானைகள், குதிரைகள், பெரிய ராஜ்யம் என்றும் எதை வேண்டுமானாலும் நீ கேட்கலாமே ? – என்று
ஸ்வோபா வா மர்த்யஸ்ய யதந்த கைதத் ஸர்வேந்த்₃ரியாணாம் ஜரயந்தி தேஜ꞉ | ந வித்தேந தர்பணீயோ மநுஷ்யோ –
அதற்கு நசிகேதஸ் பதிலுரைத்தான் – ம்ருத்யு தேவனே ! நீ சொல்லும் இவை யெல்லாம் அழியக் கூடிய பொருள்கள், நாளை இருக்குமா என்று கூடத் தெரியாது. மேலும் இவற்றை அநுபவித்தால் இந்த்ரியங்கள் மேலும் வலுவிழந்து போகுமே தவிற சிறப்பாக இருக்கமாட்டா. ஒரு மனிதன் செல்வத்தைக் கொண்டு ஒரு நாளும் த்ருப்தி அடைய இயலாது என்பது என் எண்ணம். என்வே எனக்கு இவையெல்லாம் தேவை யில்லை . நான் கேட்ட கேள்விக்கு பதில் தான் வேண்டும்.
உண்பவர் ஜீவனே என்னும் பூர்வபக்ஷம்
நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந் யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட₂
நசிகேதஸ்ஸின் வைராக்யத்தைப் பார்த்து மகிழ்ந்த ம்ருத்யு தேவன் கூறினான் – உண்மை தான் நசிகேதஸ்! நீ கேட்ட கேள்வியோ வெறும் ஆராய்ச்சியால் அல்லது யுக்திகளால் அறியப்படவேண்டிய விஷயமல்ல; ஒரு ஆசார்யனிடம் உபதேசம் பெற்றுத் தான் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உன்னிடம் எனக்கு மிகுந்த ப்ரீதி உண்டாகிறது. எனவே நீ
கேட்டதை உபதேசிக்கிறேன் – என்று.
விஷய வாக்யம் – இப்படிக் கூறிவிட்டு ம்ருத்யு தேவதை செய்த உபதேசத்தில் ஒரு வாக்கியம் தான் ஆராயப்படுகிறது-யஸ்ய ப்₃ரஹ்ம ச ஷத்ரம் ச உபே ₄ ப₄வத ஓத₃ந꞉ | ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் க இத்தா₂ வேத₃ யத்ர ஸ꞉ ||-எவருக்கு ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் இருவருமே உணவாக ஆகின்றனரோ , ம்ருத்யு என்கிற மரணம் யாருக்கு ஒரு பொருட்டல்லவோ , அவர் இருக்கும் நிலையை (அவரது பெருமையை ) யார் தான் அறிய முடியும்?
உபநிஷத் வாக்கியத்தில் அத்தா பத பிரயோகம் இல்லை என்றாலும் உணவைச் சொல்வதால் பிரதி சம்பந்தி உண்பவன் உண்டே-
ஸந்தேஹம் – இங்கு ’ஓத₃நம்’ அதாவது அரிசிச்சோறு (உணவு) பேசப்படுகிறபடியால், இந்த வாக்கியம் உணவு உண்பவர் (அத்தா) பற்றிப் பேசுகிறது என்று தெளிவாகத் தெரிகிறது. உணவு உண்பவர் ஜீவாத்மாவா ? பரமாத்மாவா ?
பூர்வ பஷம் – ஜீவாத்மாதான் இந்த வாக்கியத்தால் சொல்லப்படுகிறார்.
இங்கு மனிதர்களே உணவாகச் சொல்லப்படுகிறபடியால், இது வாயால் உணவு உண்பதைப் பற்றிப் பேச வில்லை .-எனவே உண்பது என்பது இன்ப துன்பங்களை அநுபவிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்.-உலகத்தில் இன்ப துன்பங்களின் அநுபவம் பாப புண்யங்களை உடைய ஜீவாத்மாவுக்குத் தான் உண்டு, பரமாத்மாவுக்குக் கிடையாது என்று கடந்த அதிகரணத்தின் இறுதியான ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது.
ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் உணவு என்பதற்குப் பொருள் –ஆண்-பெண் வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் அநுபவித்துக் கொள்கிறார்கள் என்று. இதுவும் ஜீவாத்மாவுக்குத் தான் பொருந்தும்.ஜீவாத்மா நித்யமானபடியால் அவருக்கு ம்ருத்யு ஒரு பொருட்டல்ல. எனவே ம்ருத்யு ஜீவனுக்கு ’உபஸேசநம்’ அதாவது அடி பணிந்தது இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது-
உண்பது உணவை யல்ல; உலகை !
ஸித்தாந்தம் – இவ்வாறு எழுந்த பூர்வ பக்ஷத்தை நான்கு ஸூத்ரங்களால் கண்டனம் செய்கிறார் வ்யாஸர்.
(1) அத்தா சராசர க்₃ரஹணாத்
முன் பாதத்தில் இருந்த ’அந்ய:’ (வேறுபட்டவர்) என்ற சொல்லை இந்த ஸூத்ரத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்தா – இங்கு உண்பவராகச் சொல்லப்படுபவர்
அந்ய: – ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவரான பரமாத்மாவே
சராசர க்₃ரஹணாத் – சரா சரங்கள் அனைத்தையும் உணவாக எடுத்திருக்கிற படியால் (கூறி யிருக்கிற படியால்)
கேள்வி – இங்கு ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் மட்டும் தானே உணவாகச் சொல்லப்பட்டுள்ளார்கள்? சரா சரங்கள் அனைத்தும் எங்கு உணவாகச் சொல்லப்பட்டுள்ளன?
பதில் – மேலே ’ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம்’ அதாவது ’ம்ருத்யு யாருக்கு உபஸேசநமோ ’ என்று கூறப்படுகிறது.
உபஸேசனம் என்றால் (ஸ்வயம் அத்₃யமாநம் ஸத் அந்ய அத₃ந ஹேது: ), அதாவது
மற்றவற்றை உண்ண உதவி செய்து, தானும் உண்ணப் படும் பொருள் உபஸேசநம் எனப்படுகிறது. இங்கு ம்ருத்யு தேவதையை உபஸேசநமாகக் கொண்டு உணவை உண்பது சொல்லப்படுகிறபடியால், இது ஒரு ஜீவன் மற்ற மனிதர்களின் மூலம் இன்ப துன்பங்கணை அநுபவிப்பதைப் பற்றிப் பேசவில்லை ; முழு முதற் கடவுளான பரமாத்மா, ப்ரளயம் ஏற்படும் போது இந்த உலகத்தை யெல்லாம் ஸம்ஹாரம் செய்வதைப் பற்றிப் பேசுகிறது. எனவே
ப்ராஹ்மணர்கள் க்ஷத்ரியர்கள் என்று சொன்னது ஒரு எடுத்துக் காட்டுக்காக மட்டுமே , உண்மையில் உலகிலுள்ள சரா சரங்கள் அனைத்தும் தான் இங்கு உணவாவச் சொல்லப்பட்டுள்ளன.
“காரேழ் கடலேழ் மலை யேழ் உலகுண்டும் ஆரா வயிற்றான்” என்று நம்மாழ்வார் சொல்வது போல், உலகமனைத்தையும் உண்பவர் பரமாத்மாவே , ஜீவாத்மா அல்ல. “க இத்தா₂ வேத₃ யத்ர ஸ” அதாவது ’அந்த பரமாத்மாவின் பெருமையை யார் அறிய முடியும்?’ என்று தான் உபநிஷத் கூறுகிறது.
இந்த உபநிஷத்தில் மேல் பகுதியில் “மனதை அடக்கி புலன்களை ஆள்பவன் தான் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான்” என்று விஷ்ணுவான பரமாத்மாவைப் பற்றிச் சொல்லப் படுகிறபடியால் இது பொருத்தமானதே .
சரம் அசையும் பொருள்கள் -அசரம் -அசையாத பொருள்கள்-
—————
1.2.2 அத்த்ரதி₄கரணம்
பருகுபவரும் பருக வைப்பவரும்
பரமாத்மாவை அறிவது அரிதா? எளிதா?
கட உபநிஷத்தில் மனிதர்கணை உண்பவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான் என்று பூர்வ பக்ஷம் எழுந்தது. அதற்கு பதிலுரைத்தார் வ்யாஸர் 1.2.2 அத்த்ரதிகரணத்தில் முதல் ஸூத்ரத்தால். இங்கு ம்ருத்யு தைவமே உபஸேசனமாகச் சொல்லப் படுகிறபடியால், உண்பது என்பது சராசரங்கள் அனைத்தையும் ஸம்ஹரிப்பதே என்று தெரிகிறது. எனவே
’அத்தா’ அதாவது உண்பவராக இங்கு சொல்லப்பட்டவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார்.
(2) ப்ரகரணாத் ச – “ப்ரகரணம் (context) என்பதன் அடிப்படையிலும்” (இங்கு உண்பவர் பரமாத்மாவே )
நசிகேதஸ் கேட்ட மூன்றாவது கேள்விக்கு பதிலளிக்கும் ம்ருத்யு தேவதை தொடர்ந்து பல வாக்கியங்களால் பரமாத்மாவைப் பற்றி தான் சொல்லிக் கொண்டு வந்துள்ளார். எனவே இந்தப் ப்ரகரணமே பரமாத்மாவைப் பற்றியது தானே –
(மஹாந்தம் விபு₄ம் ஆத்மாநம் மத்த்வா தீ₄ர: ந சோசதி)
மிக உயர்ந்த, எங்கும் நீக்கமற நிறைந்த ஆத்மாவான பரமாத்மாவை எவன் அறிகிறானோ அவனுக்கு ஸோகம் இல்லை –
நாயமாத்மா ப்ரவசநேந லப்₄ய: ந மேத₄யா ந ப₃ஹுநா ஸ்ருதேந |
யமேவ ஏஷ வ்ருணுதே தேந லப்₄ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் ||
இந்தப் பரமாத்மாவை பேசுவதாலோ , த்யானத்தாலோ , கேட்பதாலோ மட்டும் அடைந்துவிட இயலாது. யாரை அந்தப் பரமாத்மா தேர்ந்தெடுத்துத் தன்னைக் காட்டுகிறாரோ , அவர் தான் பரமாத்மாவை எளிமையாக அறிய முடியும்.
(காட்டவே கண்ட பாத கமலம் –
வெறிதே அருள் செய்வார் தாம் உகந்தாருக்கே)
(என் பெருமான் தன்மையை யார் அறிவிப்பார் –
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே)
ந அவிரத: துஶ்சரிதாத் ந அசாந்த: ந அஸமாஹித: | ந அசாந்த மாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேந ஏநம் ஆப்நுயயாத் ||
தீய செயல்களைக் கை விடாதவனோ , விருப்பு வெறுப்புகளைக் கடக்காதவனோ , உலகப் பொருள்களைப் பற்றின எண்ணங்களைக் கட்டுப் படுத்தாதவனோ , மனதை அடக்காதவவனோ பரமாத்மாவை அறிய இயலாது,-இப்படி வரிசையாக பரமாத்மாவின் பெருமையையும், அவரை அறிவது அரியது என்றும் தான் ம்ருத்யு தேவதை சொல்லி வந்துள்ளார். இந்த வாக்கியத்திலும் “க இத்தா₂ வேத₃ யத்ர ஸ:” அதாவது ’அவரது பெருமை முழுவதையும் யார் தான் அறிய முடியும்? என்றுள்ளது. எனவே இந்தத் தொடர்ச்சி அதாவது ப்ரகரணம் இருக்கிற படியால், ’யஸ்ய ப்₃ரஹ்ம க்ஷத்ரம் ’ என்ற மந்த்ரமும் பரமாத்மாவைத் தான் சொல்ல வேண்டும், ஜீவாத்மாவை அல்ல.
இதயத்தில் ஜீவனோடு இருப்பது மனதா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷீ கேள்வி எழுப்புகிறார் – இது பரமாத்மாவைப் பற்றிய ப்ரகரணம் என்பது தவறு. இதற்கு முன் பரமாத்மா பேசப்பட்டிருந்தாலும், அந்தத் தொடர்ச்சி (ப்ரகரணம்) முடிந்து போய் விட்டது, ஏனென்றால் ’யஸ்ய ப்₃ரஹ்ம ’ என்ற விஷய வாக்கியத்துக்கு அடுத்த மந்த்ரத்தில் ஜிவனைப் பற்றி மட்டும்தான் சொல்லப்படுகிறது. அந்த அடுத்த மந்த்ரம் –
ருதம் பிப₃ந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே கு₃ஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்₄யே |
சா₂யா தபௌ ப்₃ரஹ்ம விதோ ₃ வத₃ந்தி பஞ்சாக்₃நயோ யே ச த்ரிணாசிகேதா: ||
நிழலும் ஒளியும் போன்ற இருவர் புண்யத்தால் அடையப்படும் இந்த பூமியில் இதயத்துக்குள் நுழைந்து இருக்கிறார்கள். அவர்கள் பாப புண்யங்களின் விளைவாக ஏற்படும் ஸுக துக்கங்களைப் பருகிறார்கள் (அநுபவிக்கிறார்கள்).
கர்மத்தால் ஏற்படும் ஸுக துக்கங்களின் அநுபவம் இங்கு சொல்லப் படுகிறது. இது ஜீவனுக்குப் பொருந்தும், பரமாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே இங்கு இரண்டாவதாகச் சொல்லப்படுவது எது? மனது என்கிறர் பூர்வ பக்ஷீ.
மனது அசேநமான படியால் ஸுக துக்கங்கணை அநுபவிக்க இயலாது என்றாலும், ஜீவாத்மா அவற்றை அநுபவிக்க உதவுகிறபடியால் ஏதோ ஒரு விதத்தில் ஸுக துக்கங்களோடு தொடர்பு உள்ளது. எனவே இங்கு பரமாத்மாவைப் பற்றின பேச்சு இல்லை . ஆகையால், முன் மந்த்ரத்திலும் ஜீவாத்மா சொல்லப்படுவதில் தவறில்லை . இதற்கு வ்யாஸரின் பதில் –
(3) கு₃ஹாம் ப்ரவிஷ்டவ் ஆத்மாநௌ ஹி தத்₃ த₃ர்சநாத்
“இதயத்துக்குள் நுழைந்திருப்பவர்கள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் அன்றோ , அது காணப்படுகிறபடியால்”
ம்ருத்யு தேவதையின் உபதேசத்தில் முன்னமே இதயத்துக்குள் நுழைந்திருப்பவர்கள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தான் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஜீவனோடு ஒற்றுமை உடைய பரமாத்மாவை இரண்டாவதாகக் கொள்வதே பொருத்தமானது. முற்றிலும் வேறுபட்ட, அசேநப் பொருளான மனதைக் கொள்வது தகுந்ததல்ல.
ப்ரயோஜக கர்த்தா -செயல்படுத்த நியமிப்பவர் பரமாத்மா தானே
இதயத்திலிருக்கும் இரண்டு ஆத்மாக்கள்
தம் து₃ர்த₃ர்சம் கூ₃ட₄ம் அநுப்ர விஷ்டம் கு₃ஹா ஹிதம் க₃ஹ்வரேஷ்ட₂ம் புராணம் |
அத்₄யாத்ம யோகா₃தி₄க₃மேந தே ₃வம் மத்த்வா தீ₄ர: ஹர்ஷ ஸோகௌ ஜஹாதி ||
கண்களால் காணப்பட முடியாதவராய், ஜீவாத்மாவின் கர்மங்களால் மறைக்கப்பட்டவராய், எல்லா ஜீவ ராசிகளுக்கும் உள்ளே இருப்பவராய், இதயதமென்னும் குஹைக்குள்ளே இருப்பவராய், மிக நுண்ணியவரான ஜீவாத்மாவுக்குள்ளும் நுழைந்திருப்பவராய், தொடக்கமில்லாதவரான பரமாத்மாவை எவனொருவன் ஜீவாத்மாவை உணர்ந்து கொண்டு த்யானிக்கிறானோ , அவன் இவ் வுலக இன்ப துன்பங்கணை ஒழித்து விடுகிறான்.
யா ப்ராணேந ஸம்ப₄வதி அதி₃தி: தே₃வதாமயீ | கு₃ஹாம் ப்ரவிச்ய திஷ்ட₂ந்தீ ஸா பூ₄தேபி₄: வ்யஜாயத ||
ப்ராணன் என்னும் மூச்சுக் காற்றோடு கூடியவராய், தன் கர்மங்களின் பயனான ஸுக துக்கங்களை அநுபவிப்பவராய்,-இந்த்ரியங்களின் மூலம் போகங்களை அநுபவிப்பவராய், இதயத்திற்குள் இருப்பவரான ஜீவாத்மா, ஐம் பூதங்களால் ஆக்கப்பட்ட பல விதமான உடல்களை எடுத்துக் கொள்கிறார்.-இவ்வாறு முன்னமே ம்ருத்யு தேவதை சொல்லி யிருக்கிறார், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் தான் இதயத்திற்குள் இருப்பவர்கள் என்று. எனவே , ’ருதம் பிப₃ந்தௌ’ என்ற மந்த்ரத்திலும் அவர்கள் தான் சொல்லப்பட வேண்டும்.
ஜீவன் குறைந்த ஜ்ஞாநமுடைய படியால் ’நிழல்’ என்றும், பரமாத்மா எல்லை யற்ற ஜ்ஞாநமுடையபடியால் வெளிச்சமென்றும் சொல்லப்படுகிறார்கள்.
ஜீவாத்மா நேரடியாக ஸுக துக்கங்களை அநுபவிக்கிறார். பரமாத்மா, அதற்குக் காரணமாக இருக்கிறார், ஜீவனையே இயக்குகிறார். அதனால் தான் உபநிஷத் இருவருமே ஸுக துக்கங்கணை அநுபவிக்கிறார்கள் என்கிறது. வீரர்கள் சண்டை யிட்டாலும் ’ராஜா யுத்தம் செய்தார்’ என்பது போல் இதுவும் பொருந்தும்.
நசிகேதஸ்ஸின் ஆழமான கேள்வி
(4)விசேஷணாத் ச – “சிறப்பிக்கப் படுகிற படியாலும்”
தன் உபதேசம் முழுவதிலும் ம்ருத்யு தேவதை ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் பற்றித் தான் பல விதங்களில் அடை மொழிகளை இட்டு விளக்கி வருகிறார். ஜீவாத்மா உபாஸநம் செய்பவர், பரமாத்மா உபாஸிக்கப்படுபவர்; ஜீவாத்மா அடைபவர், பரமாத்மா அடையப் படுபவர்; இதுவே சிறப்பிப்பது என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணத்தாலும் ’ருதம் பிப₃ந்தௌ’ என்ற மந்த்ரத்தில் சொல்லப் படுபவர்கள் ஜீவனும் பரனும் தான் என்று தெளிவாகிறது. அதனால் ப்ரகரணத்தில் முறிவு இல்லாத படியால், ’யஸ்ய ப்₃ரஹ்ம ச க்ஷத்ரம் ச ’ என்ற மந்த்ரத்திலும் பரமாத்மா சொல்லப்படுவதில் எந்தக் குறையும் இல்லை .
கேள்வி – இங்கு நசிகேதஸ்ஸின் மூன்றாவது கேள்வி “மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறது?” என்றுதானே ? எனவே ம்ருத்யுவின் உபதேசம் ஜீவனைப் பற்றித் தானே இருக்க வேண்டும்?
பதில் – நசிகேதஸ்ஸின் கேள்வி மிகவும் ஆழமானது. மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறது என்று அவன் கேட்கவில்லை , ஏனென்றால் அவன் உடல் வேறு ஆத்மா வேறு, ஆத்மா அழியாதது என்று நன்கு அறிவான். அவனுடைய பேச்சும் நடவடிக்கையும் இதைக் காட்டுகின்றன. எனவே அவன் கேள்வியின் உண்மையான பொருள் – “ஒரு ஜீவாத்மா பாபம்
மற்றும் புண்யங்களைக் கழித்து, இறுதியான உடலையும் நீத்து முக்தி அடைந்த பின் எப்படி இருக்கிறார்? என்ன ஆகிறார்” என்று முக்தியைப் பற்றியது தான்.
அதற்கு பதிலளிக்கும் ம்ருத்யு தேவதையும் ஜிவாத்மாவின் தன்மைகள், பரமாத்மானவன் தன்மைகள் மற்றும் பெருமைகள், பரமாத்மாவை அடைவதே மோக்ஷம் என்னும் தத்துவம், பரமாத்மாவை அடைவதற்கு வழி அவர் அநுக்₃ரஹத்தைப் பெற்று பக்தி யோகம் செய்வதே என்பது போன்ற பலவற்றை உபதேசிக்கிறார்.
இவ்வாறு, கட உபநிஷத்தின் இந்தப் பகுதியிலும் பேசப் படுபவர் பரமாத்மா தான் என்பது உறுதியாகிறது. அவரே உலகங்களை எல்லாம் அழிப்பவர், அடையப்பட வேண்டியவர், அதற்கான அருளையும் செய்பவர்.
———-
1.2.3 அந்தராதி₄கரணம்
உபகோஸலனின் ஜ்ஞாநப் பசி
அந்தராதிகரணத்தின் பின்புலம்
1.2.3 அந்தராதிகரணம் – அந்தர + அதிகரணம். இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்ரம் அந்தர: என்ற சொல்லோடு துவங்குகிறபடியால் இவ்வதிகரணம் இப் பெயரைப் பெற்றது. கீழ் 1.1.7 அந்தரதிகரணம் (அந்த: + அதிகரணம்) வேறு.
ஸங்கதி – கீழ் 1.2.2 அத்த்ரதிகரணத்தில் பரமாத்மா இதயத்துக்குள் இருக்கிறார் என்று சொல்லும் போது ’தம் துர்த₃ர்ஸம்’ அதாவது பரமாத்மா காண்பதற்கு அரியவர் எனப்பட்டது. எனவே பூர்வ பக்ஷீ கேட்கிறார் – உபநிஷத்தில் வேறொரு இடத்தில் காண்பதற்கு எளியவராகச் சொல்லப்பட்டுள்ள ஒரு ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று.
விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் 4ஆம் ப்ரபாடகத்தின் 10-15 கண்டங்கள் – உபகோஸல வித்யை-உபகோஸலோ ஹ வை காமலாயந꞉ ஸத்யகாமே ஜாபா₃லே ப்₃ரஹ்ம சார்ய முவாஸ தஸ்ய ஹ த்₃வாத₃ஶ வார்ஷாண் யக்₃நீந் பரிசசார-
உபகோஸலன் என்ற ப்ரஹ்ம சாரீ ஸத்ய காமர் என்ற ஆசார்யரின் குரு குலத்தில் இருந்து 12 ஆண்டுகள் வேதங்களைக் கற்றான். அவருக்கும், அவர் வணங்கி வந்த மூன்று அக்நிகளுக்கும் பல விதமான கைங்கர்யங்களைச் செய்து வந்தான். மற்ற மாணவர்களை அனுப்பிய ஆசார்யன் இவனை மட்டும் இல்லத்திற்கு அனுப்ப வில்லை .
தம் ஜாயோவாச – ப்ரப்₃ரூஹி அஸ்மை இதி | தஸ்மை ஹாப்ரோச்யைவ ப்ரவாஸாஞ் சக்ரே
ஆசார்யரிடம் அவரது மனைவி கூட இந்தச் சிறுவனுக்கு உபதேசிக்கும்படி சொல்லிப் பார்த்தாள். ஆனால் ஆசார்யர் எதுவும் சொல்லாமல் புறப்பட்டு வெளியூர் சென்று விட்டார்.
தம் ஆசார்யஜாய உவாச – கிம் நு நாஶ்நாஸீதி | ஸ ஹோவாச – ப₃ஹவ இமே (அ)ஸ்மிந் புருஷே காமா நாநாத்யயா வ்யாதீ₄பி₄꞉ ப்ரதிபூர்ணோ (அ)ஸ்மி நாஶிஷ்யாமீதி
ஆசார்யரின் மனைவி உபகோஸலனை சாப்பிட அழைத்த போது அவன் கூறினான் – கர்ப வாஸம், பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் முதலானவற்றைத் தரும் பல விதமான உலகப் பொருள்களின் ஆசைகள் என்னைப் பயப்படுத்துகின்றன. இப்படி பல விதமான பல வ்யாதிகளால் நான் பீடிக்கப் பட்டிருக்கிற படியால் எனக்கு உணவு வேண்டாம்
அத₂ ஹாக்₃நய꞉ ஸமூதி₃ரே ஹந்த அஸ்மை ப்ரப்₃ரவாமேதி | தஸ்மை ஹோசு꞉
ஆசார்யன் வெளியூர் சென்றிருந்த போது, மிகுந்த துக்கத்தில் இருந்தாலும் உபகோஸலன் ஆசார்யனின் மூன்று அக்நிகளுக்கும்(கா₃ர்ய பத்யம், அந்வாஹார்ய பசநம், ஆஹவநீயம்) பணி விடை செய்து வணங்கிக் கொண்டு வந்தான். இவனது துன்பத்தையும் பக்தியையும் பார்த்து மூன்று அக்நிகளும் கருணைப் பட்டு இவன் ஆசைப் பட்டதை உபதேசித்தார்கள்.ஆசார்யஸ்து தே க₃திம் வக்தா-அக்நிகள் மூன்றும் உபகோஸலனுக்கு அனைத்தையும் உபதேசிக்க வில்லை . ஓரளவு சொல்லி விட்டு,-’க₃தி’ அதாவது’பாதையை ’ உன் ஆசார்யன் கூறுவார் என்று சொல்லி நிறுத்தி விட்டார்கள்.
ஆஜகா₃ம ஹாஸ்யாசார்ய: | ப்₃ரஹ்ம வித₃ இவ ஸோம்ய தே முக₂ம் பா₄தி | கோ நு த்வாநுஶஶாஸேதி | அஹம் து தே தத்₃வக்ஷ்யாமி | வெளியே சென்றிருந்த ஆசார்யன் திரும்ப வந்தார். உபகோஸலனைக் கண்டதும் வியந்து கேட்டார் – “பிள்ளாய்! ப்ரஹ்மத்தை அறிந்தவன் போல் உன் முகம் தோன்றுகிறதே ! யார் உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசித்தார்கள்?”. நடந்ததை யெல்லாம் உபகோஸலன் கூறினான். ஆசார்யனும் மனமுவந்து, மேலே தான் சில உபதேசங்களைக் கூறினார்.ய ஏஷோ (அ)க்ஷிணி புருஷோ த்₃ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாச | ஏதத₃ம்ருதம் ஏத்த₃ப₄யம் ஏதத்₃ப்₃ரஹ்ம இதி
எவரொருவர் கண்ணுக்குள் காணப்படுகிறாரோ அவர் தான் ஆத்மா. அவர் அம்ருதமானவர், பயமற்றவர், அவரே ப்ரஹ்மம் இந்த வாக்கியம் தான் இந்த அதிகரணத்தின் விஷய வாக்யம்.
ஸந்தேஹம் – இந்த அதிகரணத்தில் இரண்டு முறை ஸந்தேஹம் அல்ல, நான்கு முறை ஐயம்.1-இங்கு கண்ணுக்குள் இருப்பவராகச் சொல்லப்படுபவர் கண்ணுக்கெதிரில் இருக்கும் பொருளின் ப்ரதிபலிப்பா? 2-அல்லது அந்த உடலை எடுத்துக் கொண்டு இருக்கும் ஜீவாத்மாவா?3-அல்லது ஸூர்ய பகவான் என்கிற தேவதையா?4-அல்லது பரமாத்மாவா?
மூன்று பூர்வ பக்ஷங்கள்
பூர்வ பக்ஷம் – கண்ணில் இருப்பவர் பரமாத்மாவைத் தவிர்ந்த வேறொருவர் என்பதே பூர்வ பக்ஷம். இதற்கு யுக்திகள் –1. ’ய ஏஷ அக்ஷிணி’ அதாவது ’எவரொருவர் கண்ணில் காணப் படுகிறாரோ ’ என்று ப்ரஸித்தமான (முன்னமே அறியப்பட்ட) விஷயம் போல் சொல்லப் படுகிறபடியால், மற்ற ப்ரமாணங்களைக் கொண்டு கண்ணில் இருப்பவராக அறியப் படுபவர் யாரோ அவர் தான் இங்கும் சொல்லப் பட்டிருக்க வேண்டும். அந்தப் ப்ரமாணங்கள்
மூன்று –
1-ப்ரத்யக்ஷம். நம் புலன்களால் பார்த்தால் கண்ணில் தெரிபவர் முன் இருப்பவரின் ப்ரதிபலிப்பு தான். எனவே அவர்தான் இங்கு சொல்லப்படுகிறார் என்பது முதல் பூர்வ பக்ஷம்.
- அநுமாநம். ஒரு கண்ணைப் பார்த்தால் அவ் வுடலில் ஜிவாத்மா இருக்கிறாரா இல்லையா என்று அநுமானம் செய்யலாம். எனவே அநுமானம் என்ற ப்ரமாணத்தால் கண்ணில் காணப்படுபவர் (கண்ணைப் பார்த்து அறியப்படுபவர் ஜீவாத்மா தான். எனவே அவரே இங்கு சொல்லப்படுகிறார் என்பது இரண்டாவது பூர்வ பக்ஷம்.
- சாஸ்த்ரம். வேதத்தில் பார்த்தால் ஸூர்யன் என்ற தேவதை தான் தனது கிரணங்கள் மூலமாக வந்து நம் கண்ணில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்து – (ரச்மிபி₄: ஏஷ: அஸ்மின் ப்ரதிஷ்டி₂த:. )எனவே இங்கு கண்ணில் இருப்பவராகச் சொல்லப் படுபவர் ஸூர்ய பகவானே என்பது மூன்றாம் பூர்வ பக்ஷம்-கண் தேஜஸ் -ஸூர்யன் தேவதை .
பரமாத்மா கண்ணுக்குள்ளே இருக்கிறார் என்று எந்தப் ப்ரமாணத்தாலும் அறியப்படவில்லை . எனவே இந்த வாக்கியம் அவரைப் பற்றிச் சொல்ல இயலாது.
- ’த்₃ருஸ்யதே ’ அதாவது ’பார்க்கப்படுகிறார்’ என்றும் சொல்லப் பட்டிருக்கிற படியால், கண்ணுக்குள் இருப்பவர் பார்க்கப்பட முடிந்தவராய் இருக்க வேண்டும். பரமாத்மாவோ பார்க்கப்பட முடியாதவர் என்று முன் அதிகரணத்திலேயே சொல்லப் பட்டு விட்டது. எனவே இங்கு சொல்லப்படுபவர் பரமாத்மா அல்ல. -முன் இருப்பவரின் ப்ரதிபலிப்போ ஜீவாத்மாவோ , ஸுர்ய பகவானோ தான்.
வேத வ்யாஸரின் பதில்-ஸித்தாந்தம் –-இந்த பூர்வ பக்ஷங்களுக்கெல்லாம் வ்யாஸர் ஆறு ஸூத்ரங்களால் பதிலளிக்கிறார்.
1-அந்தர: உபபத்தே : – இங்கும் ’அந்ய:’ என்ற சொல்லைக் கீழ் பாதத்திலிருந்து சேர்க்க வேண்டும்.
அந்தர: – கண்ணுக்குள்ளே இருப்பவராகச் சொல்லப்படுபவர்
அந்ய: – சொல்லப்பட்ட மூவரைக் காட்டிலும் வேறு பட்டவரான பரமாத்மா தான்
உபபத்தே : – பொருந்துகிறபடியால் (இங்கு சொல்லப்பட்டுள்ளன குணங்கள் பரமாத்மாவிடம் பொருந்துகிறபடியால்)
இங்கு கண்ணுக்குள் இருப்பவருக்குச் சில குணங்கள் மேலே சொல்லப்பட்டுள்ளன –
ஏஷ ஆத்மா – “இவரே ஆத்மா அதாவது இயக்குபவர்”. அனைத்தையும் இயக்கும் ஈஸ்வரன் பரமாத்மா தானே -ஸமஸ்த சேதன அசேதன அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஆத்மா – -ஸர்வேஸ்வரன் -இவன் ஓருவனே
ஏதத் அம்ருதம் – “இவரே அம்ருதம் போல் அநுபவிப்பதற்கு மிக இனிமையாைனவர்”. வேதம் – “ரஸோ வை ஸ:”.-ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான்
நம்மாழ்வார் –”எத்தனையும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக் கப்பொழுது என் ஆராவமுதமே ”
ஏதத் அப₄யம் – இவரே எவ்வித பயமும் துக்கமும் அற்றவர்
ஏதத் ப்₃ரஹ்ம – இவரே அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியவர்
ஏதம் ஸம்யத்₃வாம இத்யாசக்ஷத ஏதம் ஹிஸர்வாணி வாமாநி அபி₄ஸம்யந்தி – இவர் ’ஸம்ய்த்₃வாம’ என்று அழைக்கப் படுகிறார். ’வாம’ என்ற விரும்பத் தகுந்த குணங்கள் எல்லாம் இவரிடத்தில் ’ஸம்யந்தி’ சேர்ந்துள்ளன.
ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி – இவரே ’வாமநீ:’. ’வாம’ என்ற நன்மைகளை – மங்களங்களை தன்னுடைய பக்தர்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
ஏஷ உ ஏவ பா₄மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா₄தி – இவரே ’பா₄மநீ: -எல்லா உலகங்களிலும் ப்ரகாசிப்பவர்
ஜ்யோதிர் அதிகரணம் பார்த்தோம் -நிரதிசய தீப்தி -ஆயிரத்தில் ஒரு பகுதி ஆதித்யன் –
இங்கு இக்குணங்கள் பரமாத்மாவிடம் பொருந்துகின்றன என்றும் இந்த அதிகரணத்தில் கடைசி ஸூத்திரத்தில் மற்றவர் இடம் இக் குணங்கள் பொருந்தாதவை என்று வேத வ்யாஸர் அருளிச் செய்கிறார்
(2)ஸ்தாநாதி வ்யபதே₃சாத் ச – “ஸ்தா₂நம் முதலானவை சொல்லப்படுகிற படியாலும்”
ஸ்தா₂நம்’ = இருத்தல். ’ஸ்தா₂நாதி₃’ என்றால் ஸ்தா₂னம் முதலானவை -கண்ணில் இருத்தல், இயக்குதல், தாங்குதல் போன்றவை
இவை எல்லாம் பரமாத்மாவுக்குத் தான் ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளன – (யஸ் : சக்ஷுசி திஷ்ட₂ன்).“கண்ணில் காணப் படுகிறார்” என்று சொன்னதும் பரமாத்மாவுக்குப் பொருந்தும் – யோகிகளால் காணப் படுகிறபடியால்
———-
1.2.3 அந்தராதி₄கரணம்-கமலக் கண்ணன் என் கண்ணிலுள்ளான்-முன்னும் பின்னும் சொல்லப்படுபவர் ஒருவரே-– கண்ணில் காணப் படுபவராகச் சொல்லப்பட்டவர் பரமாத்மா தான் என்பதை நிரூபிக்க வேத வ்யாஸர் முதல் இரண்டு ஸூத்ரங்களால் இரண்டு யுக்திகளைக் கூறினார். இனி தொடர்ந்து பார்ப்போம் –
3-ஸூத்ரம் -46-ஸூக விசிஷ்ட அதிபாநாத் ஏவ ச –1-2-15-ஸூகத்தை உடையவர் சொல்லப் படுகிறபடியால்--ச -லும் –ஏவ -மட்டும் -வேறே ஒன்றை எதிர்பார்க்காமல் இதுவே சாதித்திக் கொடுக்கும் என்று காட்டியவாறு-
தஸ்மை ஹோசு꞉ – ப்ராணோ ப்₃ரஹ்ம கம் ப்₃ரஹ்ம க₂ம் ப்₃ரஹ்மேதி ॥-அக்நிகள் கூறினார்கள் – ப்ராணனே ப்ரஹ்மம், ஸுகமே ப்ரஹ்மம், ஆகாயமே ப்ரஹ்மம்
ஸ ஹோவாச விஜாநாம் யஹம் யத் ப்ராணோ ப்₃ரஹ்ம கம் ச து க₂ம் ச ந விஜாநாமீதி-உபகோஸலன் கூறினான் – ப்ராணனே ப்ரஹ்மம் என்றது புரிந்தது, ப்ரஹ்மமே உலகப் பொருள்கள் அனைத்தையும் வாழ வைக்கிற படியால். ஆனால் ஸுகமே ப்ரஹ்மம் ஆகாயமே ப்ரஹ்மம் என்று சொன்னதன் கறுத்து யாது?
தே ஹோசு: – யத்₃வாவ கம் ததே₃வ க₂ம் யதே₃வ க₂ம் ததே₃வ கம்–அக்நிகள் கூறினார்கள் – எது ஸுகமுடையதோ அதுவே ஆகாயம், எது ஆகாயமோ அதுவே ஸுகமுடையது-இதன் பொருள் – ஆகாயம் எனப்படுபவர் ப்ரஹ்மமே , அவரும் ஆகாயம் போல் அளவற்றவரானபடியால். ஸுகமுடைய ப்ரஹ்மமே அளவற்று இருக்கிறார், அதாவது, எல்லை யற்ற ஸுகத்தை உடையவராக இருக்கிறார் என்று பொருள். இந்த ப்ரஹ்மத்தைப் பற்றி மேலும் உபதேசிக்கத் தான் ஸத்யகாமர் துவங்குகிறார். எனவே கண்ணுக்குள்
இருப்பவராகச் சொல்லப்பட்டவரும் அந்த ப்ரஹ்மமாகிற பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.’மட்டும்’ என்ற சொல் இந்த ஸூத்ரத்தில் அதிகமாக உள்ளது. இதன் பொருள் – முன் இரு ஸூத்ரங்களின் யுக்திகளும் எதிர்மறையை எதிர்பார்த்து தான் பரமாத்மாவை ஸாதிக்க முடியும், ஆனால் இந்த யுக்தி தானாகவே ஸாதிக்கும் என்று-
மேலும் –அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
சாந்தோக்யம் -4-11-2-அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள் ப்ரகரணம் மாற்றி இருப்பதால் தொடர்ச்சி போய் விட்டது -பூர்வ பக்ஷம் -இதுக்கு வேத வியாஸர் பதிலும் மேல்
அந்த அக்₃நி வித்₃யையானது ப்₃ரஹ்ம வித்₃யையின் அங்கம் என்றும் சொல்ல இயலாது, தனியாக அதற்குப் பயன் சொல்லப் பட்டுள்ள படியால். அங்கமாக இருந்தால் தனியாக ஒரு பயனைத் தர இயலாது.
வேத வ்யாஸரின் பதில் – அக்நிகளாலும் ஸத்ய காமராலும் உபதேசிக்கப்பட்ட பொருள் ஒன்றே தான்-1-அக்நியின் உபதேசத்தில் ’கம் ப்₃ரஹ்ம’ என்றும், ஸத்ய காமரின் உபதேசத்தில் ’ஏதத் ப்₃ரஹ்ம’ என்றும் இரண்டு இடங்களிலும் ப்ரஹ்மம் என்ற சொல் தெளிவாகச் சொல்லப்பட்ட படியால் இரண்டும் ஒன்றே என்று தெரிகிறது.-2-ப்ரஹ்மத்தைப் பற்றின அக்நிகளின் உபதேசத்தின் இறுதியில் ’-பாதையை ஆசார்யன் கூறுவார்’ என்று உள்ளபடியால், ஆசார்யன் அந்தப் பாதையை உபதேசிக்கும் வரை ப்ரஹ்மத்தைப் பற்றின உபதேசம் (ப்ரகரணம்) முடிய வில்லை .3-ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உடைய உபகோஸலனிடம் அக்நி வித்யையும் உபதேசிக்கப் பட்டுள்ளபடியால்,
அக்நி வித்யை ப்ரஹ்ம வித்யையின் அங்கமாகத் தான் இருக்க வேண்டும். ஒரு செயலின் அங்கத்தை வருணித்தால் அச் செயலின் ப்ரகரணம் (context) முடிவடையாது. எனவே இங்கும் ப்ரஹ்மத்தின் ப்ரகரணம் தொடர்கிறது.-4-தனியாகப் பலம் உள்ள படியால் அங்கமல்ல என்பது தவறு, இப் பலன்கள் ப்ரஹ்ம வித்யைக்கு முரண் படாதவை
பூர்வ பக்ஷியின் கேள்வி – திரும்பி வந்த ஸத்ய காமர் பாதையை மட்டும் தானே உபதேசிக்க வேண்டும்? ஏன் ப்ரஹ்மத்தின் குணங்களையும், அதை உபாஸநம் செய்ய வேண்டிய இடத்தையும் கூறுகிறார்?
வேத வ்யாஸரின் பதில் – பாதை என்றது மீதம் சொல்ல வேண்டிய அனைத்தையும் குறிக்கிறது. ஒரு ஆசார்யனிடம் பெறப்பட்ட வித்யை தான் நிலைக்குமென்பதால் அக்நிகள் ஆசார்யனிடமே மீதத்தைக் கேட்கச் சொன்னார்கள்.
சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு
இந்தப் பாதை பரமாத்மாவையே அடைவிக்கும்
அக்நிகளின் உபதேசத்தில் ’ப்ராணோ ப்₃ரஹ்ம கம் ப்₃ரஹ்ம க₂ம் ப்₃ரஹ்ம’ என்று சொல்லப்பட்டவர் பரமாத்மாதான் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? என்று பூர்வ பக்ஷீ ஆஷேபிக்கிறார். அதற்கு வேத வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரம் –
(4) அத ஏச ச ஸ ப்ரஹ்ம “ஆகையாலேயே அது கூட ப்ரஹ்மமே ”
ஆகையாலேயே என்றால், முன் ஸூத்ரத்தில் சொன்ன “ஸுகமுடையவர் சொல்லப் படுகிறபடியால்” என்ற காரணத்தாலேயே என்று பொருள்.இங்கு ஸுகத்தையும் ஆகாசத்தையும் ப்ரஹ்மமாக நினைத்துக் கொள் என்று சொல்ல வில்லை –ஸுகமுடைய பொருளே அளவற்ற பொருள் என்று சொல்லப் பட்டுள்ளது. எல்லை யற்ற ஸுகமுடைமை பரமாத்மாவுக்கே பொருந்தும்.
(5) ஸ்ருதோபநிஷத்க க₃தி அபி₄தா₄நாத் ச
“உபநிஷத்தைக் கற்றவனின் பாதை சொல்லப்படுகிற படியாலும்”உபநிஷத்துக்களைக் கேட்டு, ஆராய்ந்து, பர ப்ரஹ்மமான பரமாத்மாவை உணர்ந்து, எவன் உபாஸிக்கிறானோ , அவன் முக்தி அடையும் போது பின்பற்றக் கூடிய அர்ச்சிராதி மார்க்கம் என்ற பாதை தான் இங்கு கண்ணுக்குள் இருப்பவரை அறிந்தவனுக்கும் சொல்லப்படுகிறது. எனவே , கண்ணுக்குள் காணப் படுபவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
சாந்தோக்யம் -4-15-5–தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–-சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–-அர்ச்சிராதி கதி என்று உபதேசிக்கப்பட்டு நிகமிக்கப்பட்டது–
(6) அநவஸ்தி₂தே : அஸம்ப₄வாத் ச ந இதர:“இல்லாத படியாலும் பொருந்தாத படியாலும் மற்றவர்கள் அல்ல”
அநவஸ்தி₂தே : = இல்லாத படியால் – ’கண்ணில் இருத்தல்’ என்ற பண்பு பரமாத்மாவுக்கு உண்டு என்றது இரண்டாம் ஸூத்ரம். அப் பண்பு மற்றவர்களுக்கு இல்லை. முன்னால் இருக்கும் பொருள் உள்ளவரை தான் ப்ரதிபலிப்பு கண்ணில் இருக்கும்; ஜீவாத்மா இதயத்தில் தான் இருப்பார், கண்ணில் அல்ல; ஸூர்ய பகவான் ஸூர்யனுக்குள் தான் இருப்பார்.அஸம்ப₄வாத் ச – பொருந்தாத படியாலும் – இங்கு சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று முதல் ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது.-அக் குணங்கள் மற்றவர்களுக்குப் பொருந்தாது.-ந இதர: – ஆகையால், பூர்வ பக்ஷி சொன்ன மற்ற மூவரும் இங்கு சொல்லப்படவில்லை-பரமாத்மா தான் கண்ணுக்குள்
இருப்பவராக இங்கு உபதேசிக்கப்பட்டுள்ளார் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது
கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே – இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –ப்ருஹத் ஆரண்யகா -7-5-10- ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான் அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது – ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்
——————–
1.2.4 அந்தர்யாம்யதி₄கரணம்
எங்கும் உளன் கண்ணன்
முந்தைய மூன்று அதிகரணங்களிலும்-உபாஸகனின் சரீரம் -ஹ்ருதயம் -முதலியவற்றில் குறிப்பிட்ட அளவு இடமுள்ள பரமாத்மாவே உபாஸ்யன் என்று சொல்லி
மேல் மூன்று அதிகரணங்களிலும் விஸ்தாரமான பிரதேசத்தோடு கூடிய பரமாத்மா உபாஸ்யன் என்று கூறுவது என்று பேடிகா
கீழே1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –என்று கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவற்றால் அஷி புருஷன் பரமாத்மா என்று சாதித்து இந்த அதிகரணத்தில் அந்த ஸ்திதி நியமனாதிகளை ஸ்தாபிக்கிறார் என்று சங்கதி –
அந்தர்யாம்யதிகரணத்தின் பின்புலம்
1.2.4 அந்தர்யாம்யதி₄கரணம் – ஸங்கதி – கீழ், ’ஸ்தா₂நாதி₃வ்யபதே₃சாத் ச’ என்ற ஸூத்ரத்தில், பரமாத்மா தான் கண்ணுக்குள் இருக்கிறார் என்று ’ய: சக்ஷுஷி திஷ்ட₂ன்’ என்ற வாக்கியத்தில் சொல்லப்படுபவதாக வைத்துக் கொண்டு,-அதனால் ஸத்ய காமரால் உபதேசிக்கப்பட்டவர் பரமாத்மா தான் என்று நிரூபிக்கப்பட்டது.
தற்போது, அந்த வாக்யத்தின் பொருளே ஆஷேபிக்கப்படுகிறது – “ய: சக்ஷுஷி திஷ்ட₂ன்” என்ற வாக்கியம் ஜீவாத்மாவையையே சொல்கிறது என்று-
விஷய வாக்யம்–அந்தர்யாமி ப்ராஹ்மணம் – சுக்ல யஜுர் வேதம், ப்ருஹதாரண்யக உபநிஷத், அத்யாயம் 3 ப்ராஹ்மணம் 7-அத₂ ஹைநம் உத்₃தா₃லக: ஆருணி꞉ பப்ரச்ச₂ யாஜ்ஞவல்க்யேதி – மத்₃ரேஷ்வவஸாம பதஞ்சலஸ்ய காப்யஸ்ய க்₃ருஹேஷு யஜ்ஞமதீ₄யாநா: தஸ்யா: ஆஸீத் பா₄ர்யா க₃ந்த₄ர்வ க்₃ருஹீதா-யாஜ்ஞ வல்க்யரைப் பார்த்து உத்தாலகர் கூறினார் – நாங்கள் மத்ர தேசத்தில் காப்யரின் வீட்டில் வேதங்களைக் கற்று வந்த போது, காப்யரின் மனைவியை ஒரு கந்தர்வன் ஆவேசித்தான்.
அவன் காப்யரிடம் கேட்டான் –வேத்த₂ நு த்வம் காப்ய தத் ஸூத்ரம் யேநாயம் ச லோக꞉ பரஶ்ச லோக꞉ ஸர்வாணி ச பூ₄தாநி ஸந்த்₃ருப்₃தா₄நி ப₄வந்தீதி-காப்யரே ! எந்த ஸூத்ரம் (நூல்) எல்லா உலகங்களையும் ஜீவராசிகளையும் கோர்த்துத் தாங்குகிறதோ அதை அறிவீரா?
(ப்ரஹ்மமே உள்ளேயே இருந்து இயங்கி -ஆகாசம் உள்ளே இருக்கும் இயக்காது -ராஜா வெளியில் இருந்து இயக்கலாம் உள்ளே இருக்க முடியாதே -ஆகவே அந்தர் யாமி இவன் ஒருவனே -இவனே அனைத்தையுமே தாங்கும் -தரிக்கும் – ஸூத்ரம்)
யோ வை வித்₃யாத் தம் அந்தர்யாமிணம், ஸ ப்₃ரஹ்ம வித் ஸ லோகவித் ஸ பூ₄த வித் ஸ ஆத்ம வித் ஸ ஸர்வ விதி₃தி-எவனொருவன் அந்த அந்தர்யாமியை அறிகிறானோ , அவன் ப்ரஹ்மத்தை அறிந்தவன், உலகங்களை அறிந்தவன், ஜீவராசிகளை அறிந்தவன், ஆத்மாக்களை அறிந்தவன், அவன் அனைத்தையும் அறிந்தவன் ஆவான்.
உத்தாலகர் வினவினார் – யாஜ்ஞவல்க்யரே ! இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில் காப்யருக்குத் தெரிய வில்லை -அந்த விடைகளை நீர் அறிவீரா? – என்று. அதற்கு யாஜ்ஞ வல்க்யர் பதிலளிக்கத் துவங்கினார்.
ஸ ஹோவாச – வாயுநா வை கௌ₃தம ஸூத்ரேணாயம் ச லோக꞉ பரஶ்ச லோக꞉ ஸர்வாணி ச பூ₄தாநி ஸந்த்₃ருப்₃தா₄நி-யாஜ்ஞ வல்க்யர் கூறினார் – ’வாயு தான் அந்த நூல் -வாயுவால் தான் அனைத்தும் கோர்த்துத் தாங்கப் படுகின்றன’ என்று உத்தாலகர் ஏற்றுக் கொண்டார். அடுத்து அந்தர்யாமியைப் பற்றி யாஜ்ஞவல்க்யர் கூறினார் –
ய꞉ ப்ருதி₂வ்யாம் திஷ்ட₂ந், ப்ருதி₂வ்யா அந்தர:, யம் ப்ருதி₂வீ ந வேத₃, யஸ்ய ப்ருதி₂வீ ஶரீரம், ய꞉ ப்ருதி₂வீம் அந்தர: யமயதி, ஏஷ தே ஆத்மா அந்தர்யாமீ அம்ருத꞉-எவரொருவர் ப்ருதிவியில் இருக்கிறாரோ , ப்ருதிவிக்கு உள்ளே இருக்கிறாரோ , யாரை ப்ருதிவீ அறியவில்லையோ , யாருக்கு ப்ருதிவீ சரீரமோ , யார் ப்ருதிவியை உள்ளே புகுந்து இயக்குகிறாரோ , அவர் மரணமற்றவர், அவரே உன் ஆத்மா-
இதே போல் நீர், நெருப்பு, வானம், வாயு, ஸூர்யன், சந்த்ரன், திசைகள், நக்ஷத்ரங்கள், ஆகாயம், தமஸ், தேஜஸ் என்ற பொருள்களைப் பற்றி அதி₄தை ₃வ (தெய்வத்தைப் பற்றின) வாக்யங்களையும், ஜீவ ராசிகள், ப்ராணன், பேச்சு, கண், காது, மனது, தோல் என்ற பொருள்களைப் பற்றி அதி₄பூ₄த (பூதங்களைப் பற்றின) வாக்யங்களையும் கூறினார்.
ய꞉ விஜ்ஞாநே திஷ்ட₂ந், விஜ்ஞாநாத் அந்தர:, யம் விஜ்ஞாநம் ந வேத₃, யஸ்ய விஜ்ஞாநம் ஶரீரம், ய꞉ விஜ்ஞாநம் அந்தர: யமயதி-எவரொருவர் விஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ , விஜ்ஞாநத்துக்கு உள்ளே இருக்கிறாரோ , யாரை விஜ்ஞாநம் அறிய வில்லையோ , யாருக்கு விஜ்ஞாநம் சரீரமோ , யார் விஜ்ஞாநத்துக்கு உள்ளே புகுந்து இயக்குறாரோ …
மாத்₄யந்தி₃ன சாஹையில் இதே வரிசையில் உள்ள வாக்கியங்களில் ’விஜ்ஞாநம்’ என்று சொல்லுக்கு பதிலாக ’ஆத்மா’ என்ற சொல் உள்ளது. எனவே இந்த அந்தர்யாமியானவர் ஆத்மாவுக்கும் அந்தர்யாமியாக உள்ளார் என்று தெரிகிறது.
கான்வ சாகையைப் பார்த்துக் வருகிறோம் -இதே போல் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் மாத்யந்தின சாகையிலும் உண்டே-இங்கு விஞ்ஞானம் -பத பிரயோகம் அங்கு ஆத்மா -பத பிரயோகம் -எனவே இந்த அந்தர்யாமியானவர் ஆத்மாவுக்கும் அந்தர்யாமியாக உள்ளார் என்று தெரிகிறது.
’பார்ப்பவர்’ ஜீவனே என்ற பூர்வ பக்ஷம்
ஸந்தேஹம் – இங்கு எல்லப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – இங்கு அந்தர்யாமியாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவே–இதற்கான காரணங்கள் பின்வருமாறு –
1-மேலே ஒரு வாக்யத்தில் (அத்₃ருஷ்டோத்₃ரஷ்டா அஸ்ருத: ஸ்ரோதா) என்றுள்ளது. த்₃ரஷ்டா என்றால் “கண்ணால் பார்ப்பவர் -அறிபவர்” என்று பொருள். ஸ்ரோதா என்றால் “காதால் அறிபவர்” எனப் பொருள். -எனவே எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாகச் சொல்லப்படுபவர் புலன்களால் உலகப் பொருள்களை அறிகிறார் என்று உபநிஷத் சொல்கிறபடியால், அவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில், பரமாத்மா புலன்களின் தேவையில்லாமலேயே பொருள்களை அறிபவர்.
2-கேள்வி – த்₃ரஷ்டா, ஸ்ரோதா என்ற சொற்களின் பொருளில் புலன்களைச் சேர்க்காமல், வடிவங்களை-நிறங்களை அறிபவர் த்₃ரஷ்டா, ஒலியை அறிபவர் ஸ்ரோதா என்று பொருள் கொள்ளலாமே ?-அப்படிக் கொண்டால் அது பரமாத்மாவுக்கும் பொருந்துமாதலால் பரமாத்மாவே அந்தர்யாமீ என்று சொல்லலாமே ?பதில் – அடுத்த வாக்யத்தில் (நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்டா) என்றுள்ளது. அதன் பொருள்– “இவரைத் தவிற வேறு யாரும் த்₃ரஷ்டா கிடையாது” என்று. நீங்கள் சொன்னபடி ’வடிவத்தை அறிபவர் த்₃ரஷ்டா’ என்று பொருள் கொண்டால், அது பரமாத்மாவைப் போல் ஜீவாத்மாவுக்கும் பொருந்துமான படியால், இவரைத் தவிற வேறு த்₃ரஷ்டா கிடையாது என்று கூற இயலாது. நாங்கள் சொன்ன பொருள்படி, புலன்களால் அறிபவர் ஜீவாத்மா மட்டுமே ஆன படியால் இவரைத் தவிற ’த்₃ரஷ்டா’ இல்லை என்று சொன்னது பொருந்தும்
3-கடைசி வாக்யத்தில் “ஆத்மாவில் இருக்கிறார்” என்றால் தன் மஹிமையில் – தன் காலில் தானே நிற்கிறார், வேறு யாரும் இவரைத் தாங்க வில்லை என்று பொருள். “ஆத்மாவுக்குள்ளே இருக்கிறார்” என்றால் வேறு யாராலும் வ்யாபிக்கப்படாதவர் என்றும் “ஆத்மாவை இயக்குகிறார்” என்று தன்னை இயக்க வேறு பொருள் இல்லை என்று வேறு மாதிரிப் பொருள் கொள்ளலாம்.
எனவே அந்தர்யாமியாகச் சொல்லப்படவர் ஜீவாத்மா தான் என்று கொள்வதில் எந்தக் குறையும் இல்லை –
பார்க்கப்படாத பார்ப்பவர்’ பரமாத்மாவே
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வ பக்ஷத்தை நிராகரித்து, உண்மையான அந்தர்யாமியைச் சொல்கிறார் வேத வ்யாஸர் –
1–அந்தர்யாமீ அதி₄தை₃வ அதி₄லோகாதி₃ஷு தத்₃த₄ர்ம வ்யபதே₃சாத் அதி₄தை₃வ அதி₄லோகாதி₃ஷு – அதி₂தை₃வம் (தெய்வத்தைப் பற்றினது) அதி₄பூ₄தம்(பூதங்களைப் பற்றினது)அதி₄லோகம் (லோகங்களைப் பற்றினது) அத்₄யாத்மம் என்ற சொற்களைக் கொண்ட வாக்யங்களில் எல்லாம் அந்தர்யாமீ – அந்தர்யாமியாகச் சொல்லப்படுபவர்
அந்ய: – ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவரான பரமாத்மாவே (இச் சொல் முன் பாதத்திலிருந்து சேர்க்கப் பட்டுள்ளது)
தத்₃த₄ர்ம வ்யபதே ₃சாத் – பரமாத்மாவின் தன்மைகளைச் சொல்கிறபடியால்
1-உத்தாலகர் ’அந்த அந்தர்யாமியை அறிவாயா’ என்று கேட்டார். எனவே , இந்த வாக்யங்களில் உலகுக்கெல்லாம் அந்தர்யாமியாக ஒருவரே சொல்லப்படுகிறார். எனவே எண்ணிரந்த ஜீவாத்மாக்களை அந்தர்யாமீ என்று பூர்வ பக்ஷீ சொல்வது பொருந்தாது. எனவே , உலகங்களை எல்லாம் இயக்கும் ஒருவர் பரமாத்மா மட்டுமே ஆவார்.
2-’அம்ருத:’ (மரணமற்றவர்) என்றுசொல்லப் படுகிறார். உண்மையில் இயற்கையாகவே மரணமற்றவர் பரமாத்மாவே
(தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2–அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –என்றும்
தைத்ரியம் -2-6–தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6- நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண சஷுஸ் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் – ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் – அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம் ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில்-யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மாஅபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே)
3-ஸுபா₃லோபநிஷத்திலும் இதே போல் உலகப் பொருட்களுக்கெல்லாம் அந்தர்யாமியைப் பற்றி உபதேசித்து, பின்னால் (ஏஷ ஸர்வ பூ₄தாந்தராத்மா அபஹதபாப்மா தி₃வ்ய: தேவ ஏகோ நாராயண : ) அதாவது’இவர் தான் எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மா, அவர் பாபங்களுக்கு அப்பாற்பட்டவர், அவர் நிகரற்றவர், நாராயணனே அவர்’ என்று தெளிவாகச் சொல்லப்nபட்டுள்ளது. ப்ரஹ்லாதனும்’சாஸ்தா விஷ்ணு: அஸேஷஸ்ய’ அதாவது பரமாத்மா விஷ்ணுவே அனைவரையும் இயக்குபவர் என்கிறார்.
4-’த்₃ரஷ்டா’ என்றால் ’வடிவங்களை அறிபவர். அது பரமாத்மாவுக்குப் பொருந்தும். அது ஜீவனுக்கும் பொருந்தும் என்றாலும், ’அத்₃ருஷ்ட: த்₃ரஷ்டா’ அதாவது
’பார்க்கப்பட முடியாதவர் ஆனால் தான் பார்ப்பவர்’ என்று உள்ளபடியால், இது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும். ’நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்டா’ என்றால் ’இப்படி, தான் பார்க்கப்படாமல் ஆனால் தான் அனைத்தையும் பார்ப்பவர் வேறு ஒருவர் இல்லை ’ என்று பொருள்.
மிகுநர் இலன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஸங்கல்ப லேசத்தாலேயே ஸர்வஞ்ஞன்
பரமாத்மாவோடு ஒப்பிட்டால் ஜீவனும் அசேதனம் போல் தான்
அந்தர்யாமிக்குச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்றார் முதல் ஸூத்ரத்தில். இந்த குணங்கள் மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது என்று அடுத்த ஸூத்ரத்தில் காட்டுகிறார் –
2-ந ச ஸ்மார்தம் அதத்₃த₄ர்ம அபி₄லாபாத் சாரீர: ச
ந ச ஸ்மார்தம் – கபிலாசார்யரின் ஸாங்க்ய ஸ்ம்ருதியில் சொல்லப்பட்ட மூல ப்ரக்ருதியும் (அந்தர்யாமி) அல்ல
சாரீர: ச – சரீரத்தை உடைய ஜீவாத்மாவும் (அந்தர்யாமி அல்ல)
அதத்₃த₄ர்ம அபி₄லாபாத் –அவர்களுக்குப் பொருந்தாத தர்மங்களைச் சொல்வதால்
இயற்கையாகவே அனைத்தையும் அறியும் திறமை , அனைத்தையும் இயக்கும் சக்தி, ஆத்மாவாய் இருப்பது, இயற்கையாகவே மரணமற்றதாய் இருப்பது போன்ற குணங்கள் இவை இரண்டுக்கும் பொருந்தாது.-இங்கு மூல ப்ரக்ருதி அந்தர்யாமியாக இருக்கலாம் என்ற வேள்வியே எழுப்பப் படாத போது, அதைப் பற்றிச் சொல்வதுஎதற்கென்றால் – எப்படி அசேதனமான மூல ப்ரக்ருதி அந்தர்யாமியாக முடியாதோ அதே போல் ஜீவாத்மாவும் அனைத்துக்கும் அந்தர்யாமியாக இருக்க முடியாது என்று பூர்வ பக்ஷம் எவ்வளவு அபத்தமானது என்று காட்டுவதற்காகவே –
3–உப₄யேபி ஹி பே ₄தே ₃ந ஏநம் அதீ₄யதே
உப₄யே பி ஹி – காண்வ சாகையைக் கற்பவர்கள் மற்றும் மாத்யந்தின சாகையை ஓதுபவர்கள் என்ற இருவருமே
ஏநம் – சரீரத்தோடு கூடிய ஜீவாத்மாவை
பே ₄தே ₃ந அதீ₄யதே –(அசேதனங்களைப் போல்) அந்தர்யாமியைக் காட்டிலும் வேறு பட்டாதாகவே படிக்கிறார்கள்
காண்வ சாகையில் ’ ய: விஜ்ஞாநம் அந்தரோ யமயதி’ என்றும், மாத்யந்தின சாகையில் ’
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி’ என்றும் சொல்லப் படுகிறபடியால், விஜ்ஞாநம் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்பட்ட ஜீவாத்மா இயக்கப் படுபவர் என்றும், அந்தர்யாமீ தான் இயக்குபவர் என்றும் தெரிகிறது. எனவே இவர்கள் வெவ்வேறாகச் சொல்லப்பட்டுள்ளனர்.
எனவே , பரமாத்மாவான நாராயணனே உலகப் பொருள்களை எல்லாம் இயக்கும் அந்தர்யாமி என்பது திண்ணம்–
என் நெஞ்சத்துள் இருந்து இரும் தமிழ் நூல் அருளி –
ஆமவை ஆயவை ஆய் நின்ற அவரே
—
(நியாயங்கள் உக்திகளின் சேர்க்கையே ப்ரஹ்ம ஸூத்ரம் -ப்ரஹ்ம மீமாம்ஸா -ஆராய்ச்சி நூல் -முதல் பாகம் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் -இரண்டாம் பாதத்தில் சற்றே தெளிவற்ற தன்மைகளைச் சொல்லும் உபநிஷத் வாக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி )
(ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -கடக்கிலி -உன்னைக் காணுமாறு காணுமாறு அருளாய்-அவனே வரித்து காட்டவே காணலாம் – ஒவ்வொரு குணங்களையும் ஒவ்வொரு அதிகரணம் காட்டும்-)
——-
1.2.5 அத்₃ருச்யத்வாதி₃கு₃ணாகாதி₄கரணம்
எல்லையில் ஜ்ஞாநத்தன் பரமாத்மாவே –
அத்₃ருச்யத்வாதி₃கு₃ணாகாதி₄கரண-பின்புலம்
1.2.5 அத்₃ருச்யத்வாதி₃கு₃ணாகாதி₄கரணம்-ஸங்கதி – ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உலகத்தின் அந்தர்யாமியைப் பற்றிச் சொல்லும் போது, “அத்₃ருஷ்ட:” (பார்க்கப்பட முடியாதவர்) என்றுள்ளது. இத்தன்மை அசேதநமான மூல ப்ரக்ருதிக்கும் பொருந்தும் என்றாலும், கூடவே “அனைத்தையும் பார்ப்பவர், அனைத்தையும் இயக்குபவர்“ என்று
அறிவுடைய ஒரு பொருளின் பண்புகளும் சொல்லப் பட்டபடியால், அந்த பார்க்கப்பட முடியாத பொருள் பரமாத்மா தான் என்று முடிவு செய்தோம். ஆனால் வேறு ஒரு உபநிஷத்திலும் பார்க்கப்பட முடியாத ஒரு பொருள் சொல்லப் பட்டுள்ளது, அப் பொருளுக்கு அறிவுடைய பொருளின் பண்புகள் எதுவும் சொல்லப் பட வில்லை – எனவே இந்தப் பார்க்கப்பட முடியாத பொருள் ப்ரக்ருதி என்று கொள்ளலாம் என்றும் பூர்வ பக்ஷம் எழுகிறது.
முண்டக உபநிஷத்தில் -3 அத்தியாயங்கள் இரண்டு கண்டங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு -இதில் உபநிஷத்தில் -1 -2/2-1-விஷய வாக்கியம்-
விஷய வாக்யம் – முண்டகோபநிஷத்தில் உள்ள அக்ஷர பர வித்யை என்ற பகுதி
அத₂ பரா யயா தத் அக்ஷரம் அதி₄க₃ம்யதே | யத் தத் அத்₃ரேஶ்யம் அக்₃ராஹ்யம் அகோ₃த்ரம் அவர்ணம் அசக்ஷுஸ் ꞉ஶ்ரோத்ரம் தத் அபாணி பாத₃ம் । நித்யம் விபு₄ம் ஸர்வ க₃தம் ஸுஸூக்ஷ்மம் தத் அவ்யயம் யத்₃பூ₄த யோநிம் பரிபஶ்யந்தி தீ₄ரா꞉ |
அடுத்ததாக உயர்ந்த வித்யை ; அதனால் அக்ஷரம் அறியப் படுகிறது. அந்த அக்ஷரமானது பார்கப்பட முடியாதது, கையாளப்பட முடியாதது, குணமற்றது, வர்ணமற்றது, கண் காது அற்றது, கை கால் அற்றது, நித்யமானது, எங்கும் வ்யாபித்தது, அனைத்துக்குள்ளும் புகுந்தது, மிகவும் நுண்ணியது,அழிவற்றது, உலகப் பொருள்களுக்கெல்லாம் காரணமானது. அதை சிறந்த ஜ்ஞாநிகள் காண்கிறார்கள்
(சற்று தள்ளி உள்ள வாக்யம்) அஷராத் பரத: பர: – உயர்ந்ததான அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்-ஸந்தேஹம் – இங்கு அக்ஷரம் என்று சொல்லப் படுவது ப்ரக்ருதி மற்றும் அதைக் காட்டிலும் உயர்ந்தவராகச் சொல்லப்படும் ’பரன்’ என்பவர் ஜீவாத்மாவா? அல்லது ’அக்ஷரம்’’பரன்’ எனப்படும் இரண்டுமே பரமாத்மா தானா?
பூர்வ பக்ஷியின் வாதம்
பூர்வ பக்ஷம் – அக்ஷரம் என்பது மூல ப்ரக்ருதி, பரன் என்பது ஜீவாத்மா தான் என்கிறார் பூர்வ பக்ஷீ. இதற்கான காரணம் –
அக்ஷரம் என்ற பொருள் ’அத்₃ரேஸ்யம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சொல்லை ஆராய்ந்தால் இதன் உண்மையான பொருள் புரியும். த்₃ருஸ்யம் என்றால் குடம், மலை , வஸ்த்ரம் போன்ற பார்க்கப் பட முடிந்த பொருள். அத்₃ரோஸ்யம் என்றால் அதைக் காட்டிலும் வேறு பட்டதான, பார்க்கப் பட முடியாத பொருள். பார்க்கப் பட முடியாத பல பொருள்கள்
உலகில் இருந்தாலும், இச் சொல் ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளைத் தான் சொல்கிறது. ஏனென்று பார்ப்போம்.
அவித்₃வான் என்ற சொல் உள்ளது. வித்₃வான் என்றால் அறிஞர். அவித்₃வான் என்றால் அறிஞரல்லாதவர், -அறிஞரைக் காட்டிலும் வேறுபட்டவர். உண்மையில் இந்தச் சொல்லுக்கு கல், மண், கழுதை , புலி, படிக்காத மனிதர் என்று எல்லாமே பொருளாக முடியும். ஆனால் நமக்கு இச் சொல்லைக் கேட்டதும், படிக்காத மனிதர் தான் மனதுக்குத் தோன்றுகிறார். ஏனென்றால் வித்₃வான் என்ற சொல் மனிதனைக் குறிக்கிற படியால், அதற்கு நெருக்கமான ஏதோ ஒரு பொருள் தான் அவித்₃வான் என்ற சொல்லாலும் குறிக்கப் பட வேண்டும் என்று ஒரு எழுதப் படாத நீதி–அபா₃லன் என்ற சொல் உள்ளது. பாலன் என்றால் சிறுவன். அபாலன் என்றால் சிறுவனல்லாதவன். மறு படியும் இது மனிதர்களைத் தவிற மற்றப் பொருள்களையும் கூடக் குறிக்கைாம். ஆனால் நம் மனதில் வயதான மனிதன் தான் தோன்றுகிறார். மனிதன் என்ற பொதுப் பண்பை மாற்றாமல், சிறுவனல்ல என்றால் வயோதிகன் என்று தான் தோன்றும்.
அதே போல், த்₃ருஸ்யம் என்றால் பார்க்கப் பட முடிந்த பொருள், அதாவது மலை , மரம், முதலானவை – இவை யெல்லாம் அசேதனப் பொருள்கள். பார்க்கப் பட முடிந்த சேதநப் பொருளே உலகில் கிடையாது. எனவே , அத்₃ரோஸ்யம் என்ற சொல்லைக் கேட்டதும், பார்க்கப் பட முடியாத அசேதனப் பொருள் தான் மனதில் தோன்றும். ஐம்பூதங்களும் உண்டாவதற்கு முன்னால், கண்ணுக்குத் தெரியாத ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும். அதுவே மூலப்ரக்ருதி-எனவே , அத்₃ரோஸ்யம் என்ற சொல் ப்ரதானம் என்றழைக்கப்படும் மூல ப்ரக்ருதியைத் தான் குறிக்க வேண்டும்-உயர்ந்ததான அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று சொல்லப்பட்டவரும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
பார்க்கப்பட முடியாத அக்ஷரம் பரமாத்மாவே -ஸித்தாந்தம் – அக்ஷரமும், பரன் எனப்படுபவரும் பரமாத்மாவே என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்–
(1) அத்₃ருஸ்யத்வாதி₃ கு₃ணக: த₄ர்மோக்தே :
அத்₃ருஸ்யத்வாதி₃ கு₃ணக: -அத்ருஸ்யத்வம் (பார்க்கப்பட முடியாமை ) முதலான குணங்களை உடையது (அதாவது அக்ஷரம்)
அந்ய: – பரமாத்மாவே
த₄ர்மோக்தே : – அவருடைய தர்மங்கள் சொல்லப் படுகிற படியால்.
அக்ஷரம் என்ற பொருள் ஸர்வஜ்ஞன் (அனைத்தையும் அறியக் கூடியது) என்று சொல்லப் பட்டுள்ளது. இந்தப் பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்துமாகையால் அவரே அக்ஷரம் ஆவார்.-முன் காட்டப்பட்ட விஷய வாக்யத்தில் அக்ஷரம் என்ற பொருள் தான் ’
பூ₄தயோநி’ அதாவது உலகத்துக்கெல்லாம் காரணம் என்று முதலில் சொல்லப் பட்டது.
அடுத்து, (யதா₂ ஊர்ணநாபி₄: ஸ்ருஜதே க்₃ருஹ்ணதே … ததா₂-அக்ஷராத் ஸம்ப₄வதி இஹ விஸ்வம்) அதாவது ’எப்படி ஒரு சிலந்திப் பூச்சி தன் உடலிலிருந்தே ஒரு பொருளை
உமிழ்ந்து அதைக் கொண்டு தானே வலையைப் பின்னுமோ , அதே போல் இந்த அக்ஷரம் என்ற பொருள் தானே உலகத்தைப் படைக்கிறது’ என்று கூறப் பட்டுள்ளது. இத்தால், அக்ஷரம் என்ற பொருள் தான் உலகத்துக்கு உபாதாந காரணமும் நிமித்த காரணமும் என்று தெரிகிறது. இதெல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியது.-அதற்கு மேல்,
(ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித்… தஸ்மாத் ஏதத் ப்₃ரஹ்ம நாம ரூபம் அந்நம் ஜாயதே )-அதாவது“அந்த அக்ஷரமானது ஸர்வஜ்ஞம் அதாவது உலகத்தில் அனைத்தையும்
அறியக் கூடியது. பொதுவாக மட்டுமல்லாமல், சிறப்பாக தனித் தனியாக அனைத்துப் பொருள்களையும் அறியக் கூடியது – அதனிடமிருந்து தான் இந்த உலகம் உண்டாயிற்று” என்று கூறப்பட்டுள்ளது.-இப்படி ஜகத் காரணமாகவும் ஸர்வஜ்ஞராகவும் சொல்லப்பட்ட அக்ஷரம் பரமாத்மவாக மட்டும் தான் இருக்க முடியும்.
(யோ வேத்தி யுக’பத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: இத்யாதீ நாம் ஸ்ருதீநாம்-ஸர்வஞ்ஞன்)
பரன் எனப்படுபவரும் பரமாத்மாவே
கேள்வி – அக்ஷரம் என்பது பரமாத்மா என்று கொண்டால், ’அக்ஷராத் பரத: பர:’ (அக்ஷரத்தைக் காட்டிலும் உயந்தவர் ஒருவர் உள்ளார்) என்ற உபதேசம் என்ன ஆகும்? பரமாத்மாவை விட உயர்ந்தவராக ஒருவர் இருக்க முடியுமா?–பதில் – இரண்டாவது முறை உள்ள அக்ஷரம் என்ற சொல் பரமாத்மாவைச் சொல்ல வில்லை . அது அசேநமான
மூல ப்ரக்ருதியைத் தான் சொல்கிறது. எனவே , அக்ஷரம் என்ற ப்ரக்ருதியைக் காட்டிலும் உயர்ந்தவரான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் பரமாத்மா என்று தான் இந்த வாக்கியம் சொல்கிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் – ’பரன்’ என்பவருக்குச் சொல்லப்பட்ட குணங்களைப் பார்த்தால், அவர் தான் பரமாத்மா என்று தெரிகிறது.
தி₃வ்யோ ஹ்யமூர்த꞉ புருஷ꞉ ஸபா₃ஹ்யாப்₄யந்தரோ ஹ்யஜ꞉।அப்ராணோ ஹ்யமநா ꞉ ஶுப்₄ரோ ஹ்யக்ஷராத்பரத꞉ பர꞉||
“திவ்யமானவராய், உருவமற்றவராய், புருஷன் எனப்படுபவராய்,அனைத்தையும் உள்ளும் புறமும் வ்யாபித்தவராய், பிறப்பற்றவராய், ப்ராணன் அற்றவராய், மனது அற்றவராய், தூய்மை யானவராய் இருப்பவர் தான், அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்த பரன் எனப்படுபவர்”
முன்னால் அக்ஷரம் என்ற பரமாத்மாவுக்குச் சொல்லப் பட்ட ’அபாணிபாத₃ம்’ (கை கால் அற்றவர்) என்ற பண்பு தான் தற்போது ’அமூர்த:’ (வடிவமற்றவர்) என்றும், ’விபு₄ம் ஸர்வக₃தம்’ (எங்கும் இருப்பவர்) என்ற பண்பு தான் தற்போது ’பா₃ஹ்யாப்₄யந்தர:’ (உள்ளும் புறமும் வ்யாபித்தவர்) என்றும் நினைவூட்டப் படுகிறது. முன்னால் ’அக்ஷரம் புருஷம்
வேத₃’ (அக்ஷரம் என்ற புருஷனை அறியும்படி) என்று உபயோகிக்கப் பட்ட புருஷன் என்ற சொல் மறுபடியும் தற்போது ’அமூர்த: புருஷ:’ என்று உபயோகிக்கப் படுகிறது.-எனவே , பண்புகள் எல்லாம் ஒன்றாய் இருக்கிற படியால், அக்ஷரம் எனப்பட்ட பரமாத்மா தான் இங்கு பரன் எனப்படுபவர்-ஆகவே , ’அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்’ என்றவிடத்தில் உள்ள அக்ஷரம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்க இயலாது. எனவே , பொருத்தத்தின் அடிப்படையில், அது ப்ரக்ருதியைத் தான் சொல்கிறது.
வ்யாஸர் கூறும் மற்ற யுக்திகள்
2-விசேஷண பே₄த₃வ்யபதே₃சாப்₄யாம் ந இதரௌ
ந இதரௌ – மற்ற இருவரும் அல்ல = (அக்ஷரம் எனப்படுவது ப்ரக்ருதி யல்ல, பரன் எனப்படுபவர் ஜீவாத்மா அல்ல )
விசேஷண பே₄த₃வ்யபதே ₃சாப்₄யாம் – வேறு படுத்துகிற படியாலும், வேறு பாட்டைச் சொல்கிறபடியாலும்
வேறுபடுத்துதல் – இந்தப் பகுதியில் அக்ஷரம் என்ற பொருள் எப்படி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று பார்த்தால் அது ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபடுத்தப் பட்டிருப்பது தெரியும்.-ப்₃ரஹ்மா ப்₃ரஹ்ம வித்₃யாம் ஸர்வ வித்₃யாப்ரதிஷ்டா₂ம் அத₂ர்வாய ஜ்யேஷ்ட₂புத்ராய ப்ராஹ-ப்ரஹ்மாவானவர், தன் மூத்த மகனான அத₂ர்வாவுக்கு ப்ரஹ்ம வித்யையை உபதேசித்தார். அந்த ப்ரஹ்ம வித்யை எல்லா வித்யைகளுக்கும் ஆதாரம் ஆகும், ஏனென்றால் உலகில் அறிய வேண்டிய பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மத்தில் அடக்கம்.-அதர்வா அதை அங்கிரஸ்ஸுக்கும், அங்கிரஸ் ஸத்ய வாஹருக்கும், ஸத்ய வாஹர் வேறொரு அங்கிரஸ்ஸுக்கும் கூறினர்–
ஶௌநக: அங்கி₃ரஸம் பப்ரச்ச₂ – கஸ்மிந்நு ப₄க₃வோ விஜ்ஞாதே ஸர்வமித₃ம் விஜ்ஞாதம் ப₄வதீதி-ஶௌநகர் என்ற முனிவர் அங்கிரஸ்ஸிடம் கேட்டார் – எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் எல்லாம் அறிந்ததாகும்?-த்₃வே வித்₃யே வேதி₃தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்₃ரஹ்ம விதோ ₃ வத₃ந்தி பரா சைவாபரா ச-எப் பொருளைப் பற்றி இரு வித்யைகளைப் (அறிவுகள்) பெற வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனரோ , அதுவே-தத்ராபரா ருக்₃வேதோ ₃ யஜுர்வேத ₃꞉ ஸாமவேதோ ₃(அ)த₂ர்வவேத₃꞉ ஶிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச₂ந்தோ ₃ ஜ்யோதிஷமிதி । அதில் கீழ் நிலை அறிவு – வேதங்கள், அதன் அங்கங்கள் முதலானவற்றால் ஏற்படும் கேள்வி ஜ்ஞாநம்-அத₂ பரா யயா தத₃க்ஷரம் அதி₄க₃ம்யதே
அடுத்து எந்த வித்யையால் (த்யான வடிவமான ஜ்ஞாநம்) அக்ஷரத்தைப் பார்க்க முடியுமோ , அது மேல் நிலை வித்யை-
ஆகவே , முதலிலிருந்து ப்ரஹ்மத்துக்குள் அனைத்தும் அடங்கிய படியால் ப்ரஹ்ம வித்யைக்குள் அனைத்து வித்யையும் அடக்கம் என்று சொல்லி, அந்த ப்ரஹ்மத்தை அறிந்த அங்கிரஸ்ஸிடம் ஶௌநகர் -எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று கேட்டார் என்று சொல்லி, அதற்கு பதில் அளிக்கும் அங்கிரஸ் ’அக்ஷரம்’ என்ற பொருளை அறிவதற்கான இரண்டு வித்யைகளை உபதேசிக்கிற படியால், இந்த அக்ஷரம் தான் ப்ரஹ்மம் எனப்படும் பரமாத்மா.
வேறு பாட்டைச் சொல்லுதல் – நேரடியாகவே உபநிஷத்தில் ’அக்ஷராத் பரத: பர:’ (அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்ததைக் காட்டிலும் உயர்ந்தது) என்று ப்ரக்ருதி மற்றும் ஜீவனைக் காட்டிலும் ’பரன்’ என்பவரின் வேறுபாடு சொல்லப் பட்டுள்ளது.-இந்தக் காரணங்களாலும் அக்ஷரம் எனப் படுவதும் பரன் எனப்படுபவரும் பரமாத்மாவே-
3-ரூப உபந்யாஸாத் ச – ரூபத்தின் (வடிவத்தின்) உபந்யஸாத்தாலும் கூட
’பரன்’ எனப்பட்ட பொருளை விளக்கும் அங்கிரஸ், அதற்குத் தனித் தன்மையான ஒரு வடிவத்தைக் கூறுகிறார் –
அக்₃நிர் மூர்தா₄ சக்ஷு ஷீ சந்த்₃ர ஸூர்யௌ தி₃ஶ꞉ ஶ்ரோத்ரே வாக்₃விவ்ருதாஶ்ச வேதா₃꞉ ।
வாயு꞉ ப்ராணோ ஹ்ருத₃யம் விஶ்வ மஸ்ய பத்₃ப்₄யாம் ப்ருதி₂வீ ஹ்யேஷ ஸர்வ பூ₄தாந்தராத்மா ||
இந்தப் பரன் என்பவருக்கு ஸ்வர்க லோகமே தலை , சந்த்ரனும் ஸூர்யனும் கண்கள், திசைகளே காதுகள், வேதங்களே பேச்சு, வாயுவே ப்ராணன், உலகங்களே ஹ்ருதயம், பூலோகமே கால்கள். இவரே அனைத்துக்கும் அந்தராத்மா-இப்படிப்பட்ட விச்வ ரூபத்தை உடையவராகச் சொல்லப்பட்ட பரன் என்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
ஆக இவ்வாறு, பார்க்கப் பட முடியாத ஸர்வஜ்ஞமான அக்ஷரமும், விச்வ ரூபமுடைய பரனும் பரமாத்மாவே –
———————————-
1.2.6 வைஸ்வாநராதி₄கரணம்
விஸ்வ ரூபம் உடையவர் யார்?
வைஸ்வாநராதிகரணத்தின் பின்புலம்
1.2.6-வைஸ்வாநராதி₄கரணம் – முதல் அத்யாயத்தின் இரண்டாவது பாதத்திலுள்ள கடைசி அதிகரணம் இது.
ஸங்கதி – கீழ் அதிகரணத்தில், ’அக்ஷராத் பரத: பர:’ என்று மூல ப்ரக்ருதியை விட உயர்ந்த ஜீவாத்மாவை விட உயர்ந்தவரே’பரன்’ என்பவர் -பரமாத்மா தான் என்று நிரூபிக்க வ்யாஸர் “ரூப உபந்யாஸாத் ச” என்ற மூன்றாவது ஸூத்ரத்தில் சொன்ன காரணம் – விண்ணுலகத்தைத் தலையாகவும், சந்த்ர ஸூர்யர்களைக் கண்களாகவும், திசைகளைக் காதுகளாகவும், பூமியைக் கால்களாகவும் உடையவர் அதாவது உலகத்தையே தனக்கு வடிவமாகக் கொண்டவர் (விஸ்வ ரூபம்) என்று சொல்லப் பட்டுள்ள படியால் இந்தப் பரன் என்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று. அதற்கு மேல் கேள்வி எழுகிறது – வேறு உபநிஷத்துக்களில் பரமாத்மாவைத் தவிர்ந்த வேறு சிலருக்குக் கூட இப்படிப் பட்ட விஸ்வரூபம் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளதே ? இது எப்படி பரமாத்மாவுக்கே உரிய வடிவம் என்று கூறலாம்? என்று.-அதற்கு பதிலுரைக்கிறார் வேத வ்யாஸர் இந்த 1.2.6 வைஸ்வாநர அதிகரணத்தில்–
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தில் 3ஆவது அத்யாயத்தில் 11-24 கண்டங்கள் – வைஸ்வாநர வித்யா-ஔபமந்யவ ꞉ ஸத்யயஜ்ஞ꞉ இந்த்₃ரத்₃யும்ந: ஜந꞉ பு₃டி₃ல : | ஏதே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா꞉ ஸமேத்ய மீமாம்ஸாம்-சக்ரு꞉ – கோ ந: ஆத்மா கிம் ப்₃ரஹ்மேதி-ஔபமந்யவர், ஸத்யயஜ்ஞர், இந்த்ரத்யும்நர், ஜனர், புடிலர் என்ற ஐந்து ரிஷிகளும் வேதங்களைக் கற்றுணர்ந்தவர்கள்—இவர்கள் ஓரிடத்தில் கூடி, ஆராயத் தொடங்கினார்கள் – நமக்கெல்லாம் ஆத்மா யார்? எது ப்ரஹ்மம்? என்று.
உத்₃தா₃லகோ வை ப₄க₃வந்த: அயம் ஆருணி꞉ ஸம்ப்ரதி இமம் ஆத்மாநம் வைஶ்வாநரம் அத்₄யேதி | தம் ஹந்த அப்₄யாக₃ச்சா₂ம இதி | தம் ஹாப்₄யாஜக்₃மு꞉-நமக்குச் சரியான புரிதல் இல்லை ; உத்தாலகர் என்பவர் தான் வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் அந்த ஆத்மாவைத் தற்போது உபாஸிக்கிறார்; எனவே அவரிடம் கேட்டு அறியலாம் என்று முடிவு செய்து உத்தாலகரிடம் சென்றார்கள்.
ப்ரஹ்மத்தை அறிவதற்கான தேடல்
அஶ்வபதிம் கைகே யம் ஹாப்₄யாஜக்₃மு꞉ | தேப்₄யோ ஹ ப்ராப்தேப்₄ய꞉ ப்ருத₂க₃ர்ஹாணி காரயாஞ்சகார | யக்ஷ்யமாணோ வை ப₄க₃வந்த: அஹமஸ்மி | யாவதே₃வைகஸ்மா ருத்விஜே த₄நம் தா₃ஸ்யாமி தாவத் ப₄க₃வத்₃ப்₄யோ தா₃ஸ்யாமி | வஸந்து ப₄க₃வந்த இதி-உத்தாலகர் கூறினார் – “நானும் இந்த வைஸ்வாநர ஆத்மாவை முழுமையாக அறிய வில்லை ; கேகேய தேசத்து அரசனான அஸ்வபதி என்பவனே அதை முழுவதுமாக அறிந்தவன்; அவனிடம் செல்லலாம்” என்று. அனைவரும் சேர்ந்து அஸ்வபதியிடம் சென்றார்கள். அரசன் அவர்களுக்கான பணிவிடைகளைச் செய்து விட்டு,
“நான் தற்போது யாகம் செய்து கொண்டிருக்கிறேன். இச் சமயம் நீங்கள் வந்தது மிகச் சிறந்தது. ஒவ்வொரு ருத்விக்குக்கும் கொடுக்கும் தனத்தை உங்களுக்கும் அளிக்கிறேன், நீங்கள் இங்கு தங்க வேண்டும்” என்று கூறினான்-
தே ஹோசுர: – யேந ஹைவ அர்தே₂ந புருஷ: சரேத் தம் ஹைவ வதே₃த் | ஆத்மாநமேவ இமம் வைஸ்வா நரம் ஸம்ப்ரதி அத்₄யேஷி | தமேவ நோ ப்₃ரூஹீதி-அவர்கள் பதிலுரைத்தார்கள் – “அரசே ! யார் எதை ஆசைப் படுகிறார்களோ அதைத் தான் அவருக்குக் கொடுத்து த்ருப்திப் படுத்த இயலும். நாங்கள் இந்தச் செல்வத்தை ஆசைப் பட்டு வரவில்லை – வைஸ்வாநரன் என்ற ஆத்மாவை நீ உபாஸிக்கிறாயே , அதையே எங்களுக்கு உபஸிப்பாய்” என்று.
அஸ்வ பதியும் ஒப்புக் கொண்டான்-இவர்கள் குறிப்பாக வைஸ்வாநர ஆத்மாவைப் பற்றிக் கேட்பதால், முன்னமே இவர்கள் சிறிதளவு அதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்த அரசன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து, அவர்கள் அறிந்தது என்ன என்று கேட்டான். அவர்களும் கூறினார்கள்
ஆறு ரிஷிகளில் ஒவ்வொருவரும் வந்து, தாங்கள் உலகத்தின் ஒரு பகுதியையே வைஸ்வாநர ஆத்மாவாக உபாஸநம் செய்வதைச் சொன்னார்கள். அரசன் பதிலுக்கு அவர்கள் உபாஸிக்கும் பகுதிக்கு ஒரு பெயர் அளித்து, அது எல்லாம் வைஸ்வானர ஆத்மாவின் ஒவ்வொரு பகுதியே ஆகும், முழுமையான வைஸ்வாநர ஆத்மாவை அவர்கள் உணர வில்லை என்று கூறினான்.
ரிஷியின் பெயர் –ஔபமந்யவர்
உபாஸித்தது –த்₃யுலோகம்
அதன் பெயர் -ஸுதேஜா: – சிறந்த தேஜஸ்ஸை உடையது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி–மூர்தா₄ (தலை )
ரிஷியின் பெயர் –ஸத்யயஜ்ஞர்
உபாஸித்தது –ஆதித்யன்
அதன் பெயர் -விஸ்வ ரூப: – உலகங்களை எல்லாம் ப்ரகாசப் படுத்துவது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி–சக்ஷுஸ் (கண்)
ரிஷியின் பெயர் –இந்த்₃ரத்₃யும்நர்
உபாஸித்தது –வாயு
அதன் பெயர் -ப்ருத₂க்₃வர்த்மா – பல விதமான கதிகளை உடையது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி– ப்ராண : (ப்ராணன்)
ரிஷியின் பெயர் — ஜனர்
உபாஸித்தது –ஆகாசம்
அதன் பெயர் -ப₃ஹுல: – மிகப் பெரிதானது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி–ஸந்தேஹ: (இடை )
ரிஷியின் பெயர் — பு₃டி₃லர்
உபாஸித்தது –ஜலம்
அதன் பெயர் -ரை : – செல்வம் போகல்-வேகமுடையது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி-ப₃ஸ்தி: (ஜலம் கழிக்கும் புலன்)
ரிஷியின் பெயர் — உத்₃தா₃லகர்
உபாஸித்தது –பூமி
அதன் பெயர் -ப்ரதிஷ்டா₂ –பொருள்கள் எல்லாம் நிலை பெரும் இடம்
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி- பாதௌ₃ (கால்கள்)
ய: து ஏதம் ஏவம் ப்ராதே₃ஶ மாத்ரம் அபி₄விமாநம் ஆத்மாநம் வைஶ்வாநரம் உபாஸ்தே ஸ ஸர்வேஷு லோகேஷு ஸர்வேஷு பூ₄தேஷு ஸர்வேஷ் வாத்மஸ் வந்நமத்தி- இப்படி உலகத்தின் ஒவ்வொரு பகுதியைத் தன் அவயவமாய் உடையவராய், மொத்தத்தில் அளவுக்கே அப்பாற்பட்டவரான வைஸ்வாநர ஆத்மாவை எவன் உபாஸிக்கிறானோ , அவன் எல்லா உலகங்களிலும் எல்லா ஜீவ ராசிகளிலும் எல்லா ஆத்மாக்களிலும் உள்ள அந்நத்தை (உணவை ) உண்கிறான்.
இந்த அதிகரணத்தின் தனித் தன்மை –ஸந்தேஹம் – இந்த அதிகரணம் சற்றே விசித்ரமானது. மற்ற அதிகரணங்களில் எல்லாம் ’இந்த விஷய வாக்யத்தில்
சொல்லப்படுபவர் இவரா? அவரா? மூல ப்ரக்ருதியா பரமாத்மாவா? ஜீவாத்மாவா பரமாத்மாவா?’ என்று தான் கேள்வி இருக்கும். ஆனால் இந்த அதிகரணத்தில் ஸந்தேஹம் வித்தியாசமானது.
இங்கு வைஸ்வாநர ஆத்மா என்று சொல்லப்பட்டார்- யாரென்று முடிவு செய்ய இயலாதா? இயலுமா?” என்று தான் இங்கு ஸந்தேஹம். ஏனென்றால், பூர்வ பக்ஷீ இவ் விடத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் வைஸ்வாநரன் என்று கூற வில்லை , வைஸ்வாநரன் யாரென்றே முடிவு செய்ய இயலாது என்று தான் கூறுகிறார்! ஏன் என்று பூர்வ பக்ஷத்தைப்
பார்க்கும் போது நமக்குப் புரியும். வ்யாஸர் அதைத் தவறென்று நிரூபித்து, பரமாத்மா தான் வைஸ்வாநரன் என்கிறார்–
பூர்வ பக்ஷம் – “வைஸ்வாநரன்” என்பது ஒரு பொதுச் சொல்; பல பொருள்களைக் குறிப்பதற்குப் பயன் படுத்தப் படுகிறது.-எனவே , இங்கு எந்தப் பொருளைக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யவே இயலாது. அதன் பொருள்கள் –
1-ஜாட₂ர அக்₃நி (வயிற்றில் இருக்கும் நெருப்பு) -(அயம் அக்₃நி: வைஸ்வாநர:
யேந இத₃ம் அந்நம் பஸ்யதே யதி₃த₃ம் அத்₃யதே ) – இந்த வைஸ்வாநரன் என்ற நெருப்பு உண்ணப் பட்ட உணவைச் சமைத்து ஜரிக்க வைக்கிறது.
2-நெருப்பு – (விஸ்வஸ்மை அக்₃நிம் பு₄வநாய தே₃வா: வைஸ்வாநரம் கேதும் அஹ்நாம் அக்ருண்வன்) – உலகத்துக்காக தேவர்கள் வைஸ்வாநரம் என்ற அக்நியால் ஆன ஸூர்யனை பகலுக்குத் தலைவனாக ஆக்கினார்கள்.
3-அக்₃நி ப₄க₃வான் -(வைஸ்வாநரஸ்ய ஸுமதௌ ஸ்யாம, ராஜா ஹிகம்
பு₄வநாநாம் அபி₄ஶ்ரீ: ) – வைஸ்வாநரன் என்ற அக்₃நி ப₄க₃வானின் நல்லெண்ணத்தில் (அருளில்) நாம் இருப்போம், -அவர் அன்றோ செல்வத்தை யெல்லாம் உடையவர், உலகத்தின் அரசன்.-ஆரோக்யம் பாஸ்கரர் -அக்னி பகவான் -செல்வத்துக்கு அரசன்
4-பரமாத்மா – (ததாத்மநி ஏவ ஹ்ருத₃ய்யே அக்₃நௌ ப்ராஸ்யத்) – தன் இதயத்தில்
இருக்கும் அந்தர்யாமியான வைஸ்வாநரன் என்ற ஆத்மாவிடம் ஸமர்ப்பித்தான்
சாதாரண ஸப்தம் -பொதுச் சொல்– வைதிக பிரமாணம் கொண்டு பொதுச் சொல் இது என்பதே பூர்வ பக்ஷம்-இது ஒரு விசேஷ ஸப்தமே -குறிப்பிட்ட ஒரு சொல்லே -பரமாத்மாவுக்கே பொருந்தும் என்பதே ஸித்தாந்தம் என்று ஒன்பது ஸூத்ரங்களால் வேத வியாஸர் நிரூபிக்கிறார் –
1.2.6 -வைஸ்வாநராதி₄கரணம்- ஜாடராக்நி என்ற வாதத்தை முறித்தல்-பரமாத்மாவே வைஸ்வாநரன் ஸித்தாந்தம் –
சாந்தோக்ய உபநிஷத்தின் 5ஆம் அத்யாயத்திலுள்ள வைஸ்வாநர வித்யையில் சொல்லப்பட்டவர் யார் என்று முடிவு செய்ய இயலாது என்று பூர்வ பக்ஷீ உரைத்தார். அதைத் தவறு என்று நிரூபித்து, பரமாத்மா தான் வைஸ்வாநரன் என்று நிரூபிக்கிறார் வ்யாஸர் இந்த அதிகரணத்தின் 9 ஸூத்ரங்களால்.
1-வைஸ்வாநர ्ஸாதா₄ரண சப்₃த₃ விசேஷாத் – அந்ய: என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும்.
வைஸ்வாநர: – வைஸ்வாநரன் என்று சொல்லப் படுபவர்
அந்ய: – பரமாத்மாவே
ஸாதா₄ரண சப்₃த₃ விசேஷாத் – பொதுவான சொல்லைச் சிறப்பிக்கிற படியால்
வைஸ்வாநரன் என்ற சொல் ஒரு பொதுவான சொல் (ஸாதா₄ரண சப்₃த₃ம்) ஏனெனில் அதற்குப் பல பொருள்கள் உள்ளன என்று பூர்வ பக்ஷி சொன்னது சரியே . ஆனால், இவ் விடத்தில் அஸ்வபதி அச் சொல்லை மட்டும் பயன்படுத்த வில்லை -அதற்கு மேல் பல பண்புகளைச் சொல்லி அச் சொல் சிறப்பிக்கப் படுகிறது-தா₃சரதி₂ (தசரதனின் மகன்) என்ற சொல் இராமன் முதலான நால்வருக்கும் பொதுவானது. ஆனால், “கருப்பான, சார்ங்கம் ஏந்திய, இராவணனை அழித்த தா₃சரதி₂” என்று கூறினால் அது இராமனையே குறிக்கும். அதே போல் இங்கு பரமாத்மாவுக்கே பொருந்தும் பண்புகள் சொல்லப் பட்டுள்ள படியால், இங்கும் வைஸ்வாநரன் என்று பரமாத்மாவே –
1-முமுக்ஷுக்களான ரிஷிகளால் ஆராயப்படுதல்
2- (கோ ந: ஆத்மா) என்று அனைவருக்கும் ஆத்மாவாய் இருத்தல்
3- (கிம் ப்₃ரஹ்ம) என்று ப்ரஹ்மமாய் இருத்தல்
4-ப்ரஹ்மம் என்று சொல்லுக்கு பதிலாக வைஸ்வாநரன் என்று சொல்லப்படுதல்
5-(தத்₃யதா₂ இஷீக தூலம் அக்₃நௌ ப்ரோதம் ப்ரதூ₃யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ₃யந்தே ) + (ஸ ஸர்வேஷு ஆத்மஸு அந்நம் அத்தி) அதாவது“வைஸ்வாநரனை அறிந்தவனின் பாபங்கள் எல்லாம் தீயிலிட்ட தூசி போலே அழியும்; அவன் எல்லாப் பொருள்களுக்கும் இருக்கும் பரமாத்மாவை அநுபவிக்கிறான்” என்று சொல்லப்பட்ட சிறந்த பயன் -பரமாத்மாவுக்கே உரிய இந்த ஐந்து பண்புகளால் வைஸ்வாநரன் என்ற சொல்
சிறப்பிக்கப் படுகிறது. எனவே அந்த வைஸ்வாநரன் பரமாத்மா தான் என்று முடிவெடுக்க இயலும்.-எனவே , இங்கும் வைஸ்வாரனுக்கு உலகங்கள் எல்லாம் உடலாகச் சொல்லப் பட்டுள்ளதைப் பார்த்து – இந்த வைஸ்வானரன் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று-நாம் ஊஹிக்கலாம்-
(அன்னம் –அனுபவிக்கும் இனிமையான பரமாத்மாவைக் காட்டும் இங்கு)
2-ஸ்மர்யமாணம் அநுமானம் ஸ்யாத் இதி
இதி -இவ்வாறு
ஸ்மர்யமாணம் -ஸ்மரிக்கப் படுவது(நினைவு கூரப்படுவது) அநுமானம் ஸ்யாத்-அடையாளமாகக் கடவது
அநுமானம் என்ற சொல்லுக்குப் பொதுவாக ஊஹம் செய்வது (inference) என்று பொருள். இவ் விடத்தில், அந்த -ஊஹம் செய்யக் காரணமாக இருக்கும் அடையாளத்தை இது காட்டுகிறது.
இந்த வைஸ்வாநரனுக்கு விண்ணுலகவம முகம், ஸூர்யனே கண், ஆகாசமே இடை , பூமியே கால்கள் என்று உலகங்கள் எல்லாம் உடலாய் இருக்கின்றன என்று கூறப் பட்டுள்ளது. இவ்வாறு நினைக்கப் படுகிற இந்த வடிவமே இந்த வைஸ்வாநரன் பரமாத்மா தான் என்று அறிய ஒரு சிறந்த அடையாளம் ஆகும்,
பொதுவாக உலகில் ஓரிடத்தில் புகை என்ற அடையாளம் (லிங்கம்) இருப்பதைக் கொண்டு அங்கு நெருப்பு இருக்க வேண்டும் என்று ஊஹிக்கிறோம்-புகை நெருப்பை விட்டு இருக்காது என்று அறிந்த படியால்–அதே போல், அந்தர்யாம் யதிகரணத்தில் “ரூப உபந்யாஸாத் ச” என்ற ஸூத்ரத்தில் சொன்ன படி,
அக்₃நிர் மூர்தா₄ சக்ஷுஷீ சந்த்₃ர ஸூர்யௌ தி₃ஶஸ் ஶ்ரோத்ரே வாக்₃விவ்ருதாஶ்ச வேதா₃꞉ ।
வாயு꞉ ப்ராணோ ஹ்ருத₃யம் விஶ்வ மஸ்ய த்₃ப்₄யாம் ப்ருதி₂வீ ஹ்யேஷ ஸர்வ பூ₄தாந்தராத்மா ||-“இந்தப் பரன் என்பவருக்கு ஸ்வர்கலோகமே தலை , சந்த்ரனும் ஸூர்யனும் கண்கள், திசைகளே காதுகள், வேதங்களே பேச்சு, வாயுவே ப்ராணன், உலகங்களே ஹ்ருதயம், பூ லோகமே கால்கள். இவரே அனைத்துக்கும் அந்தராத்மா” முதலான வேத வாக்கியங்களில், உலகங்களை எல்லாம் உடலாகக் கொண்டவர் பரமாத்மா தான் என்று முன்னமே நிரூபிக்கப் பட்டுள்ள படியால்-எனவே , இங்கும் வைஸ்வாரனுக்கு உலகங்கள் எல்லாம் உடலாகச் சொல்லப் பட்டுள்ளதைப் பார்தத்து – இந்த வைஸ்வானரன் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று-நாம் ஊஹிக்கலாம் –
ஜாடராக்நியே வைஸ்வாநரன் என்ற பூர்வ பக்ஷம்
3-சப்₃தா₃தி₃ப்₄ய: அந்த:ப்ரதிஷ்டா₂நாத் ச ந, இதி சேத் ந, ததா₂ த்₃ருஷ்டி உபதே₃சாத், அஸம்ப ₄வாத், புருஷமபி ச ஏநம் அதீ₄யதே
சப்₃தா₃தி₃ப்₄ய: அந்த:ப்ரதிஷ்டா₂நாத் ச ந – ஜாடராக்நியே வைஸ்வாநரன் என்று இப் பகுதியால் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
ந – வைஸ்வானரன் பரமாத்மா தான் என்று நீங்கள் சொன்னது தவறு, அது ஜாடராக்நி தான், ஏனெனில்–
சப்₃தா₃தி₃ப்₄ய: – சப்தம் முதலான காரணங்களால் (இத்தால் 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன)-1-சப்தம் – (ஸ ஏஷ: அக்₃நி: வைஸ்வாநர: ) என்று வைஸ்வானரன் என்ற சொல்லோடு சேர்த்து அக்₃நி என்ற சொல் உபயோகிக்கப் பட்டுள்ளபடியால், ஒரு நெருப்புத் தான் வைஸ்வானரன் என்று தெரிகிறது.-2-த்ரேதாக்₃நி கல்பநம் – (ஹ்ருத₃யம் கா₃ர்ஹ பத்ய:, மநஸ் : அந்வாஹார்ய பசந:, ஆஸ்யம் ஆஹவநீய: ) என்று இந்த வைஸ்வானரனின் முகமும் மனமும் வாயும் மூன்று நெருப்புகளாகச் சொல்லப் படுகிற படியால், வைஸ்வானரன் நெருப்பு வடிவமான ஜாடராக்நி தான்-3-ப்ராண ஆஹுதி ஆதா₄ரத்வம் – உணவு உண்ணும் போது ’ப்ராணாய ஸ்வாஹா’ முதலாக உண்ண வேண்டும். அது இந்த வைஸ்வானரனுக்குக் கொடுக்கும் ஆஹுதி ஆகும் என்று சொல்லப் பட்டுள்ளது. உண்ணப் படும் உணவு சென்றடைவது ஜாடராக்னியைத் தான். எனவே அது தான் இங்கு வைஸ்வானரன் என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும்.-4-அந்த:ப்ரதிஷ்டா₂நாத் ச (இது நான்காவது காரணம்) – (வைஸ்வானரம் புருஷ வித₄ம் புருஷே அந்த:ப்ரதிஷ்டி₂தம்) அதாவது“இந்த வைஸ்வானரன் மனிதனின் உடலுக்குள் இருக்கிறான்” என்று சொல்லப் பட்டுள்ள படியால், இந்த வைஸ்வானரன் ஜாடராக்னி தான். பரமாத்மா எங்கும் வ்யாபித்தவரான படியால் அவர் உடலுக்குள் இருக்கிறார் என்று கூறுவது பொருந்தாது-எனவே இக் காரணங்களால் பரமாத்மாவை வைஸ்வானரன் என்று கூறியது தவறு என்கிறர் பூர்வ பக்ஷீ.
வேத வ்யாஸரின பதில்-
இதி சேத் ந – (இது தொடங்கி வ்யாஸரின் பதில்) இவ்வாறு நீ கூறினால் அது தவறு
ததா₂ த்₃ருஷ்டி உபதே₃சாத் –
ததா₂ அவ்வாறு –
த்₃ருஷ்டி உபாஸநத்தின்
உபதே₃சாத் –உபதேசத்தால்
இங்கு ஜாடராக்னிக்குப் பொருந்தும் பண்புகள் சொல்லப் பட்டுள்ளது-உண்மை தான். அது எதற்காகவெனில்,-அப்படிப்பட்ட அக்னிக்கு அந்தர் யாமியாய் பரமாத்மா வைஸ்வானரன் இருப்பதாக த்யானிக்க வேண்டும் என்று கூறுவதற்காக. “அக்₃நி: வைஸ்வாநர:” என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து படிக்கப் பட்டுள்ளன. அதில் அக்₃நி என்ற சொல்லின் நேரடியான பொருள் நெருப்பு. ஆனால் அது இங்கு பொருந்தாது. எனவே ,-“அக்னிக்கு அந்தர்யாமீ” அல்லது “அக்னியை உடலாகக் கொண்டவர்” என்று தான் இங்கு பொருள் கொள்ள வேண்டும்.அஸம்ப ₄வாத் – இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று எப்படித் தெரியும்? அதைத் தான் இந்தப் பகுதி காட்டுகிறது. அஸம்பவம் என்றால் இருக்க முடியாத – நடக்க முடியாத ஒன்று. இங்கு அக்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்று பொருள் கொண்டால், அந்த நெருப்பு உலகங்களை எல்லாம் தனக்கு உடலாகக் கொண்டதாக இருக்கவே முடியாது. ஆகையால் பொருந்தாமை ஏற்படும். எனவே , மூ வுலகங்களையும் சரீரமாகக் கொண்ட வைஸ்வானரனை ’அக்னி’ என்று கூறினால், –அக்னிக்கு அந்தர்யாமீ” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
புருஷமபி ச ஏநம் அதீ₄யதே – இப்படிப் பொருள் கொள்வதற்கு மற்றும் ஓரு காரணமும் உள்ளது. இதே உபதிசத்தில்(ஸ ஏஷ: அக்₃நி: வைஸ்வாநர: யத் புருஷ: ) அதாவது’இந்த வைஸ்வாநரன் என்கிற புருஷன்” என்று சொல்லப் பட்டுள்லது. புருஷன் என்ற சொல் பொதுவாக அறிவுடைய ஆத்மாவைத் தான் குறிக்கும்,-அறிவற்ற அசேதனமான அக்னியை அல்ல. விசேஷமாக, வேதத்தில் புருஷன் என்ற சொல் பரமாத்மாவைக் குறிப்பதற்கே
பயன் படுத்தப் படுகிறது. இது கொண்டும் நாம் வைஸ்வானரன் பரமாத்மா தான் என்று அறியலாம்-எனவே , இங்கு ஜாடராக்னி சொல்லப்பட வில்லை – ஜாடராக்னியை உடலாகக் கொண்ட பரமாத்மாவைப் பற்றின த்யானம் தான் சொல்லப்படுகிறது.
1.2.6-வைஸ்வாநராதி₄கரணம்-மற்ற ரிஷிகளின் பங்களிப்புகள்–ஜைமிநியின் நுட்பமான கருத்து-1.2.6 -வைஸ்வாநராதி₄கரணம் ஸித்தாந்தம் – முதல் இரண்டு ஸூத்ரங்களால் வைஸ்வானரன் பரமாத்மாவே என்றார். மூன்றாம் ஸூத்ரத்தில் ஜாடராக்னி வைஸ்வானரன் அல்ல என்றார். இனி மற்ற பூர்வ பக்ஷங்களை எதிர்க்கிறார்.
4-அத ஏவ ந தே ₃வதா பூ₄தம் ச
ந தே ₃வதா – அக்னி பகவான் என்ற தேவதை வைஸ்வானரன் அல்ல
பூ₄தம் ச (ந) – பஞ்ச பூதங்களுக்குள் ஒன்றான நெருப்பும் (அல்ல)
அத ஏவ – அந்தக் காரணங்களாலேயே-
கீழ் ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட காரணங்களைக் கொண்டே இந்த வைஸ்வானரன் என்பவர் அக்னி பகவானோ நெருப்போ அல்ல என்று அறியலாம். அவையாவன – (1) ’நமக்கெல்லாம் ஆத்மா’ என்று அந்தர் யாமியாகச் சொல்லப்படுதல் (2) ’புருஷன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுதல்(3)வைஸ்வானரனை அறிந்து உபாஸித்தால் எல்லாப்
பாபங்களும் விலகி பரமாத்மாவை அநுபவிக்கலாம் என்று சொல்லப்பட்ட பயன். இவை பரமாத்மாவுக்கே பொருந்தும்-
5-ஸாக்ஷாத் அபி அவிரோத₄ம் ஜைமிநி:
ஸாக்ஷாத் -நேரடியாகவும்
அபி -கூட
அவிரோத₄ம் -முரண்பாடு இல்லை என்பதை
ஜைமிநி: ஆசார்யர் ஜைமிநி கூறுகிறார்-
கீழே மூன்றாவது ஸூத்ரத்தில் ’அக்₃நி: வைஸ்வாநர:’ என்ற இடத்தில், அக்நி என்ற சொல் பொதுவாக நெருப்பைக் குறித்தாலும் இவ் விடத்தில் அது பொருந்தாத படியால் ஜாடராக்நி என்ற நெருப்பு அந்தர்யாமியான பரமாத்மாவைச் சொல்கிறது என்று சுற்றி வளைத்துக் கூறினார் வேத வ்யாஸர்.
ஜைமிநி கூறுகிறார் – நேரடியாகவே அக்நி என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது என்று கொண்டாலும் எந்த முரண்பாடும் இல்லை -அக்நி என்ற சொல்லுக்கு ’அக்₃ரம் நயதி’ அதாவது ’முன்னே அழைத்துச் செல்பவர்’ என்று பொருள். இது பரமாத்மாவுக்கு நன்றாகவே
பொருந்துமான படியால், அக்நி எனப்படுபவர் பரமாத்மாவே –வைஸ்வாநரன் என்றால் ’விஸ்வான் நரான் நயதி’ அதாவது உலக மக்கள் அனைவரையும் வழி நடத்துபவர் என்று பொருள்.-அது போல் அக்₃நி என்ற சொல்லும் நேரடியாகவே பரமாத்மாவைக் குறிக்கிறது என்கிறார் ஜைமிநி.
சில வினா விடைகள்
6-அபி₄வ்யக்தே : இதி ஆஸ்மரத்₂ய: – “புத்தி ஸௌகர்யத்துக்காக என்கிறார் ஆஸ்மரத்யர்”
பூர்வ பக்ஷியின் கேள்வி – அளவுக்கு அப்பாற் பட்டவரான பரமாத்மா ஏன் இங்கு விண்ணுலகம், ஸூர்யன், ஆகாசம், பூமி முதலான அளவுபட்ட பொருள்களோடு தொடர்பு படுத்திச் சொல்லப் பட்டுள்ளார்?
ஆஸ்மரத்யரின் பதில் – அபி₄வ்யக்தி என்றால் பு₃த்₃தி₄ ஸௌகர்யம் அதாவது புரிந்து கொள்வதில் எளிமை – அதற்காகத் தான் உபநிஷத் இப்படி உபதேசிக்கிறது. அளவு கடந்த ஒரு பொருளை அறிவது கடினமானது. அளவு கொண்ட பொருள்களோடு தொடர்பு படுத்தினால் தான் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதே காரணம்.
7-அநு ஸ்ம்ருதத: பா₃த₃ரி: – “த்யானத்துக்காக என்கிறார் பா₃த₃ரி”
பூர்வ பக்ஷியின் கேள்வி – சரி, அளவு படுத்திச் சொல்வதாவது இருக்கட்டும். ஆனால் பரமாத்மாவுக்கு தலை , கண், இடை , கால் என்று மனித வடிவம் போன்ற ஒரு வடிவம் எதற்காகச் சொல்லப் பட்டுள்ளது?
பா₃த₃ரியின் பதில் – ஸ்ம்ருதி என்றால் நினைவு. அநு ஸ்ம்ருதி என்றால் தொடர்ச்சியான நினைவு, அதாவது த்யானம். -அந்த த்யானத்துக்காகத் தான் இப்படி மனிதன் போன்ற உருவம் பரமாத்மாவுக்குச் சொல்லப் பட்டுள்ளது.(யஸ்து ஏதம் ஏவம் உபாஸ்தே ) அதாவது “எவன் ஓருவன் இந்த வைஸ்வானரனை -இப்படி-அதாவது மனிதன் போன்ற வடிவமுடையவனாக உபாஸிக்கிறானோ … அவன் முக்தி அடைகிறான்”-எனப்பட்டுள்ளது.
8-ஸம்பத்தே : இதி ஜைமிநி: ததா₂ ஹி த₃ர்சயதி
பூர்வ பக்ஷியின் கேள்வி – “ (உர: வேதி₃: லோமாநி ப₃ர்ஹி: ) அதாவது“இந்த உபாஸகனின் மார்பு தான் வேதி, உரோமங்களே தர்பங்கள்” என்று சொல்லப் பட்டுள்ளதே ? வேதி என்றால் அக்னியை வைக்கும் இடம்.-எங்கோ மிகப் பெரியவராக இருக்கும் பரமாத்மா தான் வைஸ்வானரன் என்றால் அவர் இருக்கும் இடமாக மார்பு எப்படி ஆகும்? எனவே இங்கு வைஸ்வானரன் என்று சொல்லப்படுவது ஜாடராக்னியாகத் தான் இருக்க வேண்டும்.
ஜைமிநியின் பதில் – ஸம்பத்தே : இதி ஜைமிநி: – “ஸம்பத்திக்காக அதாவது ஆக்குவதற்காக என்கிறார் ஜைமிநி”-எதை எதுவாக ஆக்குவதற்காக இது சொல்லப்படுகிறது? ப்ராண ஆஹுதியை அக்₃நி ஹோத்ரமாக ஆக்குவதற்காக.
நாம் உணவு உண்கிறோமே , அப்போது ’ப்ராணாய ஸ்வாஹா’ முதலான மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டு, நம்வயிற்றில் ஜாடராக்நி வடிவத்திலிருக்கும் பரமாத்மாவுக்கு நாம் கொடுக்கும் ஆஹுதி இந்த உணவே என்று நினைக்க வேண்டும். அதனால் தான் இதற்குப் ப்ராண ஆஹுதி என்று பெயர். இப்படி உண்பது கூட பரமாத்மாவுக்காக-அக்நிஹோத்ரம் என்று ஒரு மிகச் சிறந்த ஹோமம் உள்ளது. தினமும் காலையும் மாலையும் செய்யப்பட வேண்டியது -இங்கு சொல்லப் படுவது – இந்தப் ப்ராண ஆஹுதியையே அக்நி ஹோத்ர ஹோமமாக பாவிக்க வேண்டும் என்று-
ஒருவரை நம் தந்தையாக பாவிக்க வேண்டும் என்றால், அவருக்கும் நம் தந்தைக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்–அது போல் ப்ராண ஆஹுதிக்கும் அக்நி ஹோத்ரத்துக்கும் ஒற்றுமை உள்ளது என்பதைக் காட்டத் தான் ’-உர: வேதி₃: லோமாநி ப₃ர்ஹி:’ என்று மார்பே அக்னி இருக்கும் வேதியாகக் கற்பனை செய்யப்படுகிறது. ததா₂ ஹி த₃ர்சயதி – “அவ்வாறு அன்றோ காட்டுகிறது”. உபநிஷத்தில், ப்ராண ஆஹுதியை அக்நி ஹோத்ரமாக
அறியாதவன் உண்பதே வீண் என்றும் அறிந்தவன் அனைவரையும் த்ருப்தி செய்கிறான் என்றும் கூறப் பட்டுள்ளது-
9-ஆமநந்தி ச ஏநம் அஸ்மிந் –
ஏநம் -இந்த வைஸ்வானரனை–அஸ்மிந் -இந்த உபாஸகனின் உடலில் ஆமநந்தி ச -ஓதவும் செய்கிறார்கள்”
பூர்வ பக்ஷியின் கேள்வி – உபாஸகனின் தலை , கண் முதலானவற்றை விண்ணுலகம், ஸூர்யன் முதலானவையாக த்யானிக்க வேண்டும் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? பரமாத்மாவின் தலை முதலானவற்றைப் பற்றி அல்லவே ?
வ்யாஸரின் பதில் – இரண்டுமே சொல்லப் பட்டுள்ளது. முதலில், வைஸ்வானரன் என்ற பரமாத்மாவினுடைய உடலில் ஒவ்வொரு பகுதியாக விண்ணுலகம் முதலானவை உள்ளன என்று கூறி விட்டு, இப்படிப்பட்ட வைஸ்வானரனை உபாஸனம் செய்பவனின் தலை , கண், உடல் முதலானவையும் விண்ணுலகம், ஸூர்யன், ஆகாசம் முதலானவை என்று கூறப் பட்டுள்ளது. இதன் கறுத்து – “பரமாத்மாவின் தலையான விண்ணுலகம் தான் எனக்கும் தலை ” என்று உபாஸகன் கற்பனை செய்து கொண்டு, அதன் மூலம் பரமாத்மா தனக்கு எவ்வளவு நெருக்கமாக வுள்ளார் என்று உணர வேண்டும்.
ஆக இப்படி 9 ஸூத்ரங்களால் வைஸ்வாநரன் எனப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வேத வ்யாஸர்–
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply