மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவோமே
ஸாது
சந்திம் இச்சந்தி சாதவ -அன்பு பெருகும் சந்தியில் -நல்லன்பர் சாதுக்களாவார்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -இவன் அவனது திருநாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி செய்யும் நிலமே சடகோபர் தத்வம்
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்துக்கள் ஆவார்
ஸ்ரீ பாதுகை பெற்று மீண்ட பரதாழ்வானை பரத்வாஜர் -பேறு பெற்றீரோ -பரனை ஒன்றினீரோ -பரத்வாஜர் உசாவுகிறார்
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமான் –ஸ்ரீ வால்மீகி பகவான் புகழ்ந்தார்
ப்ரபந்ந ஐந கூடஸ்தர்
ஆத்யஸ்தன குல பதேர்
குல தனம்
குல தைவதம் -என்று ஆர்ய ஜனங்கள் புகழ்ந்து போற்றுவதுக்கு மூலம் இவர் ஸ்ரீ ஸூக்தியே –
விண்ணுளார் போற்றித் தொழும் ஸ்ரீ வைகுந்தக் கோனுடைய திருப் பாதுகைக்கு ஸ்ரீ சட கோபன் என்று அன்றோ திரு நாமம் –
நிதி-பரன் என்பது பிரதம பர்வம் -சடகோபன் என்பது சரம பர்வம் –
தன் திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனை -அபய ப்ரதான ஸாரம்
ஸ்ரீ சடகோபன் நிற்கும் பாத பீடத்தளவும் சென்று -பரமபத ஸோபநம்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
மந்திரம் கொள் மறை முனிவன் -காயத்ரி கண்ட -ருஷி விஸ்வத்துக்கு மித்ரர்
அதன் பொருளை விரித்து அருளியவர் வால்மீகி கவி 24 அக்ஷரங்கள் கொண்ட -காயத்ரியை விளக்கும் ஸ்ரீ ராமாயணமும் 24 ஸ்லோகங்கள் கொண்டது
ஸரணாகதி ஸாஸ்த்ரமும் அதுவே
ஸரணாகதி தர்மத்தை விளக்கும் மறைகளுக்கு எல்லாம் காயத்ரியே தாய்
அத்தாய் மந்த்ரம் கண்ட இவரே ரிஷி
அதன் அர்த்தம் விரித்து அருளிய இவரே கவி
காயத்ரியே விஸ்வ ஜநநீ
பக்தைர் பாகவத சஹா என்றது ஆழ்வார் ஆச்சார்யர்களையே
மறைச்சிரம் மருவும் ஆன்antrumஅன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறனை அமிழ்தின் இணையடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழு மூதுவர் உலகு வாழ
நிறை யரித் திருவாய் ஓது நிதி எனும் நிலை விரித்தனமே
———
மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர் புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.
இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.
சங்க காலம்
குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம்[6]வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.
திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.
- வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.
இந்தப் பூவின் சிறிய உருவம் பற்றியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடிய ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.
பேரிலேயே-மகிழ்”ச்சி தரும் “மகிழ”ம்பூ
பண்ணும் தமிழும் தவம் செய்தன! பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! – என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!
மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்) என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் “வகுளா பிராமம்“
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!
திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!”
சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்
துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?
உளவோ பெருமான் உனக்கு?
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற – நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம்.
மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply