இயம்புதல்-ஒரு பொருட் பலசொற்கள்-

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7– 

எண் திசையும் அறிய இயம்புகேன்-
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –

எண் திசையும் அறிய இயம்புகேன்
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு எல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –

எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்
மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்
ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன்
என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே
தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்
தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே
அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்
இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

அறிய வியம்புகேன் –
“அறியச் சொன்ன வாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப் போலே
நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார்.

“தமிழ்ச் சடகோபன்” என்றது
தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

———

அருள் கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள் கொண் டாயிரமின் தமிழ் பாடினான்
அருள் கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.

இவ்வுலகினில் என்பதை ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதிலும் ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு,
ஆழ்வாருடைய அருள் இந்த லோகத்திற் காட்டிலும் பெரிது என்றுரைப்பதும் ஒக்கும்.

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் செய்த படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலை கடலிடையில் துயில்வோன்
அலைகடல் குறு முனி கையில் அடக்கம்
குறு முனியோ எனில் கலசப் பிறவியோன்
கலசமோ புவிதனில் கண்டதோர் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ சிவபிரான் பாகத்து ஒடுக்கம்
சிவனோ திருமால் திருவடி ஒடுக்கம்
திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டருள் பெரியோர் தூய சடகோபர்
சடகோபர் அருள் சகத்தினும் பெரிதே -என்றார் பாகவத கவிவரர்

அன்றி, இவ்வுலகிலே என்று ஏழாம் வேற்றுமையாகவே கொண்டு,
“அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்ற சொல்லமைப்பு நயத்திற்கேற்ப
‘பாசுரம் மிக்கது பரமபதத்திலே, அருள் மிக்கது இவ்வுலகத்திலே’ என்றுரைப்பதும் சிறக்கும்.
அதாவது-
“கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றபடி-திருவாய்மொழியை
நித்யஸுரிகள் விசேஷமாக ஆதரிப்பதனால் திருவாய்மொழியின் பெருமை பரமபதத்தில் ஓங்குகின்றது;
அத்திருவாய்மொழியை அருளிச்செய்வதற் குறுப்பான ஆழ்வாருடைய அருள் மாத்திரமே இவ்வுலகில் நிலாவுகின்றது என்றபடி.

————–

ஒரு பொருட் பலசொற்கள் : சொல்லுதல், பேசுதல், கூறுதல், சாற்றுதல், மொழிதல், என்னுதல், கிளத்தல், பன்னுதல், நுவலுதல், உரைத்தல், நவிலுதல், பகர்தல், நொடித்தல், செப்புதல், அறைதல், மாறுதல், விள்ளுதல், விளம்புதல், புகலுதல், இசைத்தல், கழறுதல், இயம்புதல், கரைதல்

  1. ஒலித்தல்- ஓசை கடிமனை யியம்ப (புறநா.36)
  2. வாத்தியம் ஒலித்தல்- வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்த பு.வள்.92)
  3. சொல்லுதல் (பிங். )
  4. துதித்தல்- ஞானக்கொடிதனை… இயம்புவோமே
  5. உரைத்தல் -அர்த்தம் சொல்லுதல்
  6. ஓதுதல் காதில் சொல்லுவது
  7. உரளுதல்
  8. கத்துதல்
  9. பொழிதல் -சொற் பொலிவு
  10. கூப்பிடுதல்
  11. இனிமையாகக் கூறுதல்
  12. இயம்புதல் வேட்கை அணி“ ஆகும்.
  13. வேட்கை – விரும்புதல், ஆசைப்படுதல்
  14. இயம்புதல் வேட்கை அணி“ ஆகும்.
  15. வேட்கை – விரும்புதல், ஆசைப்படுதல்
  16. அசைத்தல் -அசை அழுத்தத்துடன் சொல்லுதல்
  17. அறைதல் –அடித்து வன்மையாகப் பேசுதல்
  18. இசைத்தல் -ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
  19. இயம்புதல் -இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
  20. எண்ணுதல் -என்று சொல்லுதல்
  21. கத்துதல் -குரல் எழுப்பிச் சொல்லுதல்
  22. கரைதல் -அழைத்துச் சொல்லுதல்
  23. கழறுதல் இடித்துச் சொல்லுதல்
  24. கிளத்தல் இன்னது என்று எடுத்துச் சொல்லுதல்
  25. கிளத்துதல் –குடும்ப வரலாறு சொல்லுதல்
  26. குயிலுதல் -குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்
  27. குழறுதல் -நா தழுக்கத் தழுக்கச் சொல்லுதல்
  28. கூறுதல் -கூறுபடுத்திச் சொல்லுதல்
  29. சாற்றுதல் -பலர் அறியச் சொல்லுதல்
  30. செப்புதல் -வினாவுக்கு விடை சொல்லுதல்
  31. நவிலுதல் -நாவினால் ஒலித்துப் பயிலுதல்
  32. நுதலுதல் -நூலின் நுண் பொருள் சொல்லுதல்
  33. நொடித்தல் -கதை சொல்லுதல்
  34. பகர்தல் -பண்டங்களை பகுத்து விலை சொல்லுதல்
  35. பறைதல் -மறை ரஹஸ்யம் வெளிப்படச் சொல்லுதல்
  36. பன்னுதல் -நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்
  37. பனுவுதல் –செய்யுளால் புகழ்ந்து சொல்லுதல்
  38. புகலுதல் -விரும்பிச் சொல்லுதல்
  39. புலம்புதல் -தனக்குத் தானே சொல்லுதல்
  40. பேசுதல் -ஒரு மொழியில் சொல்லுதல்
  41. மாறுதல் -உரையாட்டில் மாற்றிச் சொல்லுதல்-
  42. மிழற்றுதல் –குழந்தையைப் போல் சொல்லுதல்
  43. மொழிதல் -சொற்களை விளக்கிச் சொல்லுதல்
  44. வலத்தல்–கேட்ப்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்
  45. விடுதல்-மெள்ள வெளிப்படச் சொல்லுதல்
  46. விதத்தால் -சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்
  47. விள்ளுதல் வெளியிட்டு -இடைவெளியுடன் சொல்லுதல்
  48. விளத்துதல் -விவரித்துச் சொல்லுதல்
  49. விளம்புதல் -அறிவிப்பு செய்தல்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading