திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்
அவதார ஸ்தலம்: திருவரங்கம்
ஆசார்யன்: வடக்குத் திருவீதிப் பிள்ளை
ஶிஷ்யர்கள்: கூர குலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப் பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட் குழி ஜீயர், திருக் கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.
பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)
அருளிச் செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல
நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருவரங்கத்திலே திருக்குமாரராய் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். அயோத்தியில் பெருமாளும் இளையபெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட் பார்வைக்கும் வழி காட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றை பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது திருத் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச் சிறப்பு யாதெனில் இவ் விருவரும் தங்கள் வாழ் நாளில் நைஷ்டிக ப்ரஹ்ம சர்யம் அனுட்டிக்கப் போவதாய் ஶபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .
ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஶிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .
பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஶிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஶித்து வந்தார். மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப் பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஶங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஶங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஶங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்
யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதஶையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்) திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேஶிக்குமாறு உத்தர விடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும் உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .
நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருமவை மிக முக்கியமானவை .
- முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் .
- தத்வ த்ரயம் – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது. பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது .
- ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் – ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் .
நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணர வேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.
பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ் வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணி ப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன் ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.
ப்ரமாண ரக்ஷணம் செய்ததோடன்றி ப்ரமேய ரக்ஷணமும் செய்து கொடுத்த வள்ளல் இவரே. திருவரங்கத்தில் அனைத்தும் நலமாக நடந்து வந்து கொண்டிருக்கும் வேளையிலே தான் திடீரென்று துலுக்கர்களின் படையெடுப்பு செய்தி காட்டுத் தீ போல் பரவியது. கோயில்களிலே இருக்கும் செல்வங்களை சூறையாடும் துலுக்க மன்னர்களின் போக்கை அறிந்தவர் அனைவரும் இச் செய்தியை அறிந்து துன்புற்று நிற்க, அக்காலத்தின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் எழுந்தருளி இருந்த பிள்ளை உலகாரியர் அரங்கனை காக்கும் திருப் பணியில் ஈடுபட்டார். பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு , இவர் உத்ஸவ பேரரான நம்பெருமளுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டார். தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது நம்பெருமாளுடன் இவர் பயணமானார். காடுகள் வழியாக நம்பெருமாள் எழுந்தருளிச் செல்லும் போது சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களை திருடினர். சற்றே முன்னே சென்று கொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவியுற்று வந்து திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணி கொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபரணங்களை மீளவும் ஸமர்ப்பித்தனர்.
மதுரையில் ஆனை மலைக்குப் பின்புறம் உள்ள ஜ்யோதிஷ்குடி என்ற சிறு க்ராமத்தைச் சென்றடையும் நேரத்தில், வயோதிகத்தால் திரு நோவு சாற்றிக் கொண்ட பிள்ளைலோகாசாரியர், திருநாட்டிற்கு எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.அச் சமயம் பிள்ளை லோகாசாரியர் தனது சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை நினைத்து, அவரே தமக்கடுத்து ஸம்ப்ரதாய தலைவர் ஆக வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். கூர குலோத்தம தாஸர் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களை அழைத்து, திருமலை ஆழ்வாரை அவரது அரசாங்க பணியிலிருந்து விடுவித்து தரிஶன ப்ரவர்த்தகர் ஆகும் படிக்குத் திருத்திப் பணி கொள்ளுமாறு நியமித்தார். இறுதியாய் தனது சரம திருமேனியை துறந்து இன்பமிகு விண்ணாடு என்று போற்றப்படும் பரமபதத்தை அலங்கரித்தார்.-ஜ்யோதிஷ்குடி – பிள்ளை உலகாரியன் பரமபதம் அடைந்த இடம்
பிள்ளை உலகாரியன் மற்றும் சீர் வசன பூஷண ஶாஸ்த்ரத்தைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு விஶதவாக் ஶிகா மணியான மணவாள மா முநிகள் உபதேஶ ரத்தின மாலையை அருளினார். இதில் மணவாளமாமுநிகள் ஆழ்வார்கள் திருவவதார விஷயமாகவும், ஆசார்யர்கள் திருவவதார விஷயமாகவும், ஆசை உடையோருக்கெல்லாம் ஸத் ஸம்ப்ரதாயத்தைத் திறந்து வைத்த எம்பெருமானாரின் பேரிரக்கத்தின் விஷயமாகவும் , திருவாய்மொழி வ்யாக்யானங்களின் திருவவதார விஷயமாகவும் விளக்கி, பின்னர், பிள்ளை உலகாரியரின் திருவவதாரம் விஷயமாய் ஸாதிக்கத் துவங்கி, சீர் வசன பூஷணத்தின் பெருமைகள் மற்றும் அது கொண்டுள்ள சீரிய அர்த்தங்களின் பெருமைகள் தனை விளக்கி, இறுதியாய், அவ்வர்த்தங்கள் காட்டும் பாங்கிலே நாம் வாழ வேண்டும் என்றும் அவ்வாறாக வாழ்ந்தோமே ஆனால், எந்தை எதிராசரின் (எம்பெருமானாரின்) இன்னருளுக்கு இலக்காகுவோம் என்றும் உபதேஶிக்கிறார். மேலும் பூர்வாசார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் மீது நம்பிக்கை வைக்காது , நம் புரிதலை கொண்டும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் நாமாகவே இவை தான் அர்த்தங்கள் என்று உரைக்க முற்பட்டால், நாம் மூர்க்கர் என்று ஆவோம் என்று ஸாதிக்கிறார். மூர்க்கர் போன்ற அப ஶப்தங்களை ஒரு போதும் உபயோகிக்காத அழகிய மணவாளமாமுநிகளே இவ்வாறாக ஸாதித்துள்ளார் என்றால், பூர்வர்களின் நிலைக்கு மாறாக நடப்பது அத்தனை பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். இதுவே ஸ்ரீ வசன பூஷணத்தின் ஸாரம் என்றும் பெரிய ஜீயர் தனது அரிய உபதேஶ ரத்தின மாலை பிரபந்தத்தில் எடுத்துக் காட்டுகிறார் .
பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளுவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .
ஸ்ரீ வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் உபகார ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் விசுவாசத்துடன் பிள்ளை லோகாசாரியர் இடத்தில் இருத்தல் வேண்டும். பிள்ளை உலகாரியன் இல்லையேல், நம்பெருமாளையோ எம்பெருமானார் தரிசனத்தின் ஆழ்பொருள்களையோ நாம் காணவே முடியாது .
எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆசார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.
திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் – 006 – உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல?
அயோத்தியில் பெருமாளும் இளைய பெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட்பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றைப் பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலேயே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச்சிறப்பு யாதெனில் இவ்விருவரும் தங்கள் வாழ்நாளில் நைஷ்டிக ப்ரஹ்மசர்யம் அனுட்டிக்க போவதாகச் சபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .
சம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் கனவில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .
பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேசித்து வந்தார். ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று பெயர் சூட்டிக் கொண்டான்). கிபி 1321 ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.
தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். இவனது வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதை தோறும் சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப் பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோவில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்து போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று அழைக்கப் பெறும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.
படையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு. அமைதியாய் வேதவாய் மொழி அந்தணர்களை வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம். ஆக்கிரமிக்கும் படை – ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து, திருவரங்கம் வாழ் மக்களுக்கு சொல்லொணாத் துயரம் தருகிறது. அரங்கன் தங்கள் குலதனம் என்று எப்போதும் வாழும் ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்ய பரர்கள், அச்சமயத்தில் வாழ்ந்திருந்த வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர் பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்றப் பாடுபடுகின்றனர்.
பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு, உற்சவரின் அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் சில வீரர்களுடன், சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.
திருக்கோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியரும் அவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடு பல்லக்கில் எழுந்தருளிப் பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டு வழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்துச் சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு தள்ளாடும் பருவம் – நூற்றை தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.
தன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்களுக்குப் பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தைச் சென்றடைந்தார்கள். வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்றதாகக் கோவில் ஒழுகு உரைக்கிறது. இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.
கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118 ஆவது வயதில் உலகாரியர் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளி படுத்தி திருவரசு எழுப்பினார்கள். அப்படி உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல என்கிறாள் திருவல்லிக் கேணி பெண்பிள்ளை.
திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் என சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக் திருப்பதிக்கு செல்கிறார். உலுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.
1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.
அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான் தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்த பிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்ய காலத்திற்குச் சென்று விட்டார்.
அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக் கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.
1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு).
(பிள்ளை லோகாச்சாரியர் 1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் திருநாடு அடைந்ததாக வரலாறு குறிக்கிறது. இதில் கால வேறுபாடுகள் வரலாற்றில் இருந்தாலும் நமது இந்துக்கள் வரலாறு முகலாயர் வரலாறு போல தெளிவாக எழுதப் பெறவில்லை. சிலர் அவர் 1311 ஆம் ஆண்டு தமது 106ஆம் அகவையில் திருநாடு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதில் இப்படிப் பல குழப்பங்களை அன்றைய வரலாற்று அறிஞர்கள் வேண்டும் என்றே எழுதி நம் இந்து குருமார்களின் பல சாதனைகளைச் சந்தேகிக்க வைத்து விட்டனர்.)
மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று பயிலத் துவங்கினார் , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு சம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதசங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேசங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கிப் பயணித்துக் காட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” (பெண் பிள்ளை வாக்கியம் 2ஐ இங்கு நினைவு கூர்க) என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.
யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதசையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்) திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேசிக்குமாறு உத்தரவிடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும் உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .
நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருபவை மிக முக்கியமானவை .
இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துக்களில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும்.
- தத்துவத் திரயம் – வடமொழியில்
- முமுக்சுப் படி – மணிப்பிரவாள நடையில்
- வசன பூசணம் – தமிழில் வைணவம், ஆழ்வார்கள் குறித்து
- முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் .
- தத்வ த்ரயம் – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது. பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது .
- ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் – ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் .
நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணரவேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.
பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன் ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேர் இரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.
பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:—பிள்ளை லோகாசாரியரின் தனியன்:
வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம் வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.—பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்:
———–
ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-
ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
—————————–
முதல் -10-ஸ்லோகங்களால் ஸ்ரீ ரெங்க நாதன் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ விஷ்வக் சேனர் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் /ஸ்ரீ பட்டர் / ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம் பிள்ளை / ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை /
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் / ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் -இவ்வாறு குரு பரம்பரை ஸ்தோத்தம் செய்து அருளி
11-ஸ்லோகம் தொடங்கி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை ஸ்லோகம் செய்து அருளுகிறார் –
காவேரி புலி நாந்தராள லஹரி கல்லோல மாலா லசித்
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ் நித்ரா நிபத்தாதரம்
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமலஜே நாராதிதம் ஸ்ரீ சகம்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத –1–
காவேரி புலி நாந்தராள-ஸ்ரீ காவேரி மணல் திட்டிலே
லஹரி கல்லோல மாலா லசித் -சிறிய பெரிய அலைகளால் தீண்டப் பட்டு –
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ்-திரு அனந்தாழ்வான் மேலே திருப் பள்ளி கொண்டு அருளி –
நித்ரா நிபத்தாதரம்-யோக நித்திரை செய்து அருளி
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமல ஜே நாராதிதம் ஸ்ரீ சகம் -ஸ்ரீ கஸ்தூரி திலகம் பூண்டு -சத்ய லோகத்தில் சதுர் புஜ பிரமனால்
ஆராதிக்கப் பட்டு -பெரிய பிராட்டியார் உடன்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத –ஸ்ரீ கௌஸ்துபம் பூண்டு திரு ஆர மார்பன் –
ஸ்வ பாவிக -பராத் பரன் -நமக்கு அருளை பொழியட்டும் –
—————————-
நாத லோக பால நதியா மருத் வ்ருதா
புளிநம் ஜகாம நளிநம் விஹாய யா
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா
கருணா தரங்க விததீர பாங்க ஜா –2-
நாத லோக பால நதியா மருத் வ்ருதா-புளிநம் -திருக் காவேரி மணல் திட்டின் மேலே -ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்துக்காகவே
ஜகாம நளிநம் விஹாயயா -தாமரை மலர் வாசம் விட்டு வந்து அருளி
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா-கருணா தரங்க விததீர் அபாங்க ஜா -ஸ்ரீ ரெங்கநாதன் மேலே அளவு கடந்த பிரியத்துடன் இருப்பவள்
கடாக்ஷித்து அருளும் அருள் அலைகள் நம்மிடம் வீசட்டும் –
—————————————–
யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ
ஸ்பந்தஸ் ஸூரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா
வைகுண்ட ஸூரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே –3-
யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ –தாமரைக் கரங்களில் -ஸ்வர்ண ஒளிமயமாக திருப் பிரம்பின்
ஸ்பந்தஸ் ஸூ ரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா-சிறு அசைவாலேயே அசுரர்கள் நிரசனத்தால் தேவர்கள் பயங்களைப் போக்கி அருளி
வைகுண்ட ஸூ ரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம-நித்ய ஸூரிகள் தலைவராக இருந்து
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே –ஸூ த்ரவதி பதியாக இருந்து -உலகோரை மகிழ்விக்கிறார்
————————————-
முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே
ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்
மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது–4–
முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே –ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே –ஸமஸ்த வித பாபங்களையும் ஆஸ்ரிதர்க்குப் போக்கி அருளுபவர் –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி நிலைகளான ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரே சரண் ஆவார் -அவர் திருவடிகளை மீண்டும் மீண்டும் அடியேன் தலையால் வணங்கி
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்-மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது-அவர் திரு முடியில் சாத்தி இருக்கும்
வகுள மாலை கந்தம் அடியேன் வாக்குக்கும் மொழிக்கும் மனம் அருளிச் செய்ய வேண்டி ஸ்துதிக்கிறேன் –
வகுளாபரணர் அன்றோ -அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என்றவர் திருவடிகளை பற்றி தம் வாக்குக்கும் அமுதூட்ட சரண் அடைந்து பிரார்த்திக்கிறார்
——————————————————–
விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய
சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம்
ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம்
ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம –5-
ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம் -ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம –ஸ்ரீ பாஷ்யகாரர் -யதிராஜா ஸார்வ பவ்ம்யர் –
பர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் நன்றாகக் காட்டி அருளி
விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய -சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம் -விகசித்து -ஸ்ரீ பாஷ்யம் மூலமாக
ஸ்தாபித்து அருளியவர் நம்மை ரஷித்து அருளட்டும் –
—————————————————–
கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண –6-
கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா –ஸ்ரீ கூரேசர் ஸ்ரீ எம்பார் திருவடிகளில்
கைங்கர்யத்தால் விளைந்த உகந்த திரு உள்ளம் உடைய
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண -ஸ்ரீ பராசர பட்டர் வேதாந்தியான
ஸ்ரீ நஞ்சீயர் உடன் -அடியேனை கடாக்ஷித்து அருள் பொழியட்டும்
———————————–
யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம்
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்–7-
யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம் -சரஸ்வதி -சகல கலா வல்லவள் நாக்கு நுனி நாட்டிய அரங்கத்தில் ஆட விரும்பி
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்-நம் பூர்வாச்சார்யர்கள் -திராவிட வேதாந்தாசார்யர்கள்
ஆழ்வார்கள் அருளிச் செயல் வியாக்கியானங்களை உகப்புடன் நமக்க அருளிச் செய்ய அருளி
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே -ஸ்ரீ கலிகன்றி தாசர் –நம்பிள்ளை -ஸ்ரீ கந்தாடை தோழப்பர்
லோகாச்சார்யார் என்று உகந்து சூட்டி அருளி -பின்பு நஞ்சீயர் நம்பிள்ளை என்று அன்புடன் சூட்டி அருளப் பட்டவரும்
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்—ஸ்ரீ கிருஷ்ண என்பவரான ஸ்ரீ -வடக்கு திரு வீதிப் பிள்ளை யுடைய
ஆச்சார்யருமான அவர் அடியேனை கடாக்ஷித்து வாக் வன்மை அருளட்டும் –
——————————————————
அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா –8-
அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ-அந்த ஸ்ரீ நம்பிள்ளை திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற கொடிக்கு மரம் போன்றவரும்
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா -ஸ்ரீ கிருஷ்ண என்ற திரு நாமம் உடையவரும்
வடக்குத் திரு வீதியில் வாழ்பவருமான அவர் அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –
முடும்பை நம்பிகள் திரு வம்சம் -ஸ்ரீ ஈடு படுத்தி அருளியவர் -மட் அம்பி -மண் பானையில் தண்ணீர் என்பதே முடும்பை என்பர் –
————————————————————–
வத்ஸான் வவாய வரணீய பய பயோதே
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ்
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்
லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்–9–
வத்ஸான் வவாய வரணீய பய பயோதே—
பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றிய -குல விளக்கான –
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ் –உலகில் ஒளி மிக்கு விளங்கிய ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் சந்திரன் போலேயும்-
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்-லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்–ஸ்ரீ வடக்கு திரு வீதி பிள்ளையும்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் -இருவரையும் தியானிக்கிறேன் –
——————————————————
வாணீ புண்ய ஸூதா பாகம் ஷட ஜித ஸ்வைரம் விகாஹ் யாதராத்
ஆநீயாம்ருத மத்ர சக்ர துருபவ் பா நீயஷாலாத்மகம்
யவ் வாக் பூஷண தேசிகேந்த்ர ஹ்ருதயாபிக்ய பிரபந்த த்வயம்
தவ் வந்தே புவ நார்ய ஸூந்தர வரவ் க்ருஷ்ணாத் மஜவ் தேஷி கவ்–10-
ஸ்ரீ நம்மாழ்வார் உடைய இனிய திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ அவற்றில் ஆழ்ந்து
நாம் பருகும் படி -ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -என்ற இரண்டு
வடக்கு திருவீதி பிள்ளை திருக் குமாரர் இருவரையும் வணங்குகின்றேன் –
—————————————–
மது ரிபு மஹி லாயா ஸ்பிதவீஷா சரோஜாத்
மதுரக்பாணி திப்ருங்கீ நிர்கதா காசி தோஷா
புவன குரு பாதாப்ஜ த்வன்ட்வ நிர்யன் மரந்டான்
அநுதினம நு பூயா அனந்த சாந்த்ரா மமாஸ்து–11-
அடியேனுடைய ஸ்ரீ ஸூ க்திகள் இனிமையையாயும் திவ்யமாயும் இருப்பது ஸ்ரீ மது சூதனன் திவ்ய மஹிஷியான
ஸ்ரீ மஹா லஷ்மி கடாக்ஷத்தின் பயனாக வந்தாலே தானே –
அவை மேலும் வன்மையும் திடமும் அடைய அடியேன் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் மேல் ஸ்தோத்ரம் பண்ணி
அவருடைய ஸ்ரீ ஸூ க்திகளை நித்யமும் அனுசந்திக்கிறேன் –
—————————————————–
மணி பிரவாளாந் ஜித ஸூக்தி ஸூநை
விபூஷி தாஷேஷ சஹஸ்ர ஷாகம்
அகல்பயத் கந்ஜந கல்ப வ்ருக்ஷம்
க்ருஷ்ண ஷிதவ் லோக குரூத்த மாக்யம்–12–
ஒப்பில்லா கற்பக வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்உடைய -மணி பிரவாள – திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –
செழும் கற்பகத்தை -கற்பகச் சோலை -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கற்பக வல்லிம்–என்னை ஆள வந்த கற்பகம் -என்பர்கள் –
————————————–
தேவீஷூ பத்ம நிலயா தயிதா பபூவ
பக்தேஷூ ஸோ அபி வகுளங்க முநிர் வரேண்ய
ஆர்யேஷூ நிர்மல குணஸ் த்வய மந்தரங்க
ரங்காதி பஸ்ய ந்ருபதே ஜகதார்ய நாமா –13–
மலர் மகளான பெரிய பிராட்டியாரை போலவும் வகுளாபரணரான ஸ்ரீ நம்மாழ்வாரை போலவும்
ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களில் நிர்மல குணம் உடைய ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை அந்தரங்கமாக கொண்டு அருளுபவர் ஸ்ரீ ரெங்க நாதர்
—————————————————-
ஹ்ருதய முகுர பிம்பம் யத் த்வ ஹங்கார பங்க
ஸ்தகித விமல ரூபம் ஸ்வோக்தி ஷூத் தாம்பு பூரை
புவன குருவர ஸ்தச்சோத யித்வா ஜனாநாம்
சிதசித திபதீம் த்ரீன் தர்ஷயன் பாதி தத்ர–14-
அஹங்காரம்-போன்ற அஞ்ஞானங்கள் -மனக் கண்ணாடியில் அழுக்கு போலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
தம் ஸ்ரீ ஸூக்திகளால் இவற்றை அகற்றி -தத்வ த்ரயம் ஞானமும் ஸ்வரூப யாதாம்ய ஞானமும் அருளுபவர்
———————————————–
ஜனி ஜலதி பரீ தாகரா லீநா ஆத்ம பங்க்த்யை
த்ரிவித விஷய த்ருஷ்ணா ராக்ஷஸீ பீடிதாயை
புவன குருவரோ அதாத் ஸ்ரீ மதீம் ஸூ க்தி பூஷாம்
பவந ஜ இவ தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து –15-
பவந ஜ இவ–திருவடியை போலே
தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து -ஸ்ரீ சீதா பிராட்டிக்கு பெருமாள் உடைய கணை யாழி கொடுத்து அருளியது போலே –
சம்சாரிகள் -பூமி தங்கள் பெண்ணாசை போன்ற ராக்ஷஸிகள் -இவற்றில் இருந்து ரஷிக்க பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணம் –
———————————————————————————-
பணி தி கிரண ஜாலைர் மாநயன் மாந சாப்ஜம்
சர நமுஷித தோஷா அரூட காடாந்த கார
அபர இவ வபுஷமாநம் ஷூ மா லீ ஜனாநாம்
பதமிவ புவ நார்யோ பாசயன் பாதி விஷ்ணோ –16-
ஸூர்யன் இருளை போக்கி ஒளி தருமா போலேயும் தாமரையை விகசிக்க செய்யுமா போலேயும் -இவரது திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
நம் அந்தகாரம் போக்கி -அகங்கார மமகாரங்கள் ஆகிய தோஷங்களை விலக்கி-ஹ்ருதய தாமரை விகசிக்க செய்து
அந்தர்யாமி பகவானை சாஷாத்கரிக்கவே செய்யுமே –
வகுளா பூஷண பாஸ்கரர் -இராமானுஜ திவாகரர்-ஆச்சார்யர்கள் கடாக்ஷம் கொண்டே அவன் அருள்வான் –
நீரில் உள்ள தாமரையை தானே ஆதித்யன் உலர்த்தக் கடவன் –
—————————————————
அந்தர் விலோசனம் அனந்த தமோ நி கூடம்
ஆலோக்ய ஐந்து நிவஹஸ்ய தயாரித்த்ரா சேதா
உன்மீலயந்நு பஹி தேந ரஹஸ்ய த்ரயார்த்த
தீபேன யோ ஜயதி லோக குரும் தமீடே –17-
பரம காருணிகரான பிள்ளை லோகாச்சார்யார் தம் தயை உந்த ரகசிய த்ரய அர்த்தங்களை முமுஷுப்படி இத்யாதி
திவ்ய அஷ்டாதச ரகசியங்கள் மூலமாக நம் ஹிருதய அந்தகாரங்களைப் போக்கி
யாதாம்ய ஞானம் பெரும் படி செய்து அருளினார் -அவர் திருவடிகளைப் பற்றுவோம் –
——————————————
புவன குருத்தம சதுர ரெங்கபுர அபணிக
கலி ரிபு தாச வர்யா கலிதாமல ஸூ க்தி மணீந்
குண பண ஸங்க்ரஹேண நிபுணாய ததாதி ஹிதான்
அத புனரேவ வ்ருத்தி முப யாந்தி விசித்ரமிதம்–18-
நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் விசேஷார்த்தங்களை சாத்விக சிஷ்யர்களுக்கு வழங்கி மேலும் மேலும் பிள்ளை லோகாச்சார்யார் கீர்த்தி வளருவது
நல்ல நகைக் கடை வியாபாரி நல்ல நகைகளை நல்ல முறையில் வியாபாரம் செய்து விருத்தி அடைவது போலே உள்ளது என்றவாறு –
பெருமாள் ஜடாயு மஹாராஜருக்கு சத்யத்தாலே லோகங்களை வென்றதாலேயே மோக்ஷம் கொடுத்ததாக சொல்லிய -அரசன் சங்கை போக்கிய – ஐதிக்யம் –
————————————————–
த்ருட மபவத வித்யா வல்லரீ வாசநா அத்பி
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி
சதருரப்ருதா ச ஷேத்ரினோ பக்நமூலா –19-
ஷேத்ரினோ -ஜீவாத்மா உடைய
அவித்யா வல்லரீ-அவித்யை -கொடி போல –
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே –கர்ம வசப்பட்டு மேலும் மேலும் விருத்தி அடைய
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி — பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்கிற
சூறாவளிக் காற்றாலே கர்மங்கள் தொலைக்கப் பட்டு
பக்நமூலா சதருரப்ருதா ச -அந்த கொடியானது வேருடன் அழியுமா போலே வாசனை ருசி உடன் அழித்து முடிக்கும் –
————————————————————————
யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம்
ஜகத் குரு வலா ஹக படு வவர்ஷ பூமவ் ஜலம்
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா
ப்ரவாஹ பஹுலா அபவத் நிகம மௌலி வித்யா நதீ–20-
ஜகத் குரு வலா ஹக -லோகாச்சார்யார் -நம் பிள்ளை -ஆகிய மேகம் /பிள்ளை லோகாச்சார்யார் ஆகிய மேகம்
யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம் -யதிராஜர் ஸ்ரீ ஸூ க்திகள் -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற அமுதாக கடலை முற்றப் பருகி
படு வவர்ஷ பூமவ் ஜலம் -பூமியில் பொழியுமா போலே பொழிந்து
நிகம மௌலி வித்யா நதீ–வேதாந்த நதியாக ஓட
ப்ரவாஹ பஹுலா அபவத் -வெள்ளமாக -பரவுமா போலே
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா -பரவி ஆஸ்ரிதர்கள் மலர்ந்தார்கள்
நம்மாழ்வார் -மேகம் -அவன் சமுத்திரம் என்பர் சம்பிரதாயத்தில் -அதே போலே
நஞ்சீயர் / யதிராஜர் / நம்பிள்ளை / பிள்ளை லோகாச்சார்யார் இங்கு -லோகாச்சார்யார்கள் இருவரும் என்பதால்
ஸ்ரீ ராமானுஜர் திரு உள்ளக் கருத்துக்களையே கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்றவாறு –
————————————————————
படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா
பவப் ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா –21-
படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே–அநேக பிரபந்தங்களால் -பூர்வர்கள் பலரும் முன்பே அருளிச் செய்து
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம் -ரகஸ்ய த்ரய விவரங்களை விளக்கி இருந்தாலும்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா -பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த
அஷ்டாதச ரகசியங்களும் -ஸூ ர்யன் இருட்டை போக்குமா போலே
பவப்ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா -சம்சாரத்தில் உழன்று மாரி மாரி பல பிறவி எடுத்து
உழலும் அஞ்ஞான அந்தகாரத்தை நன்றாக போக்கி அருளிற்றே-
————————————————————–
அகம்ய மஹிமா ஜநைர் நிகம மௌலி காந்தார பூ
விஹார ரசிகோ வ்ருஷ ஷிதிப்ருதோ வசன் கந்தரே
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன
ஷமோக்தி நகரோ மஹான் ச ஜகதார்ய கண்டீரவ –22–
அகம்ய மஹிமா ஜநைர்-எவராலும் எளிதில் அரிய முடியாத மஹிமையை யுடைய
நிகம மௌலி காந்தார பூ -விஹார ரசிகோ -வேதாந்தம் ஆகிற காட்டுக்குள் அனுபவித்து உகந்து சஞ்சரிக்க
வ்ருஷ ஷிதிப்ருதோ -வசன் கந்தரே-தர்மம் ஆகிற மலையிலே -முழஞ்சிலே வசிக்கும் –திருவேங்கட திரு மலையிலே –
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன -ஷமோக்தி நகரோ –இவர் ஸ்ரீ ஸூ க்திகள் சிம்மத்தின் திரு உகிர்கள்
யானையின் தலையை உடைத்து -தெள்ளிய சிங்கம் ஹிரண்யன் ஆகம் பிளந்தால் போலே –
மஹான் ச ஜகதார்ய கண்டீரவ -மகத்தான பிள்ளை லோகாச்சார்யார் உடைய ஸ்ரீ ஸூக்திகள் பண்ணி அருளிற்று
எங்கள் இராமானுஜ முனி வேழம் –வலி மிக்க சீயம் போலே -யாதாம்ய ஞானம் அருளிற்று என்றவாறு –
———————————————————–
விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி –23-
விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
விஷாந்தரங்களில் நசை அற்று ஸ்ரீ கிருஷ்ணனே உண்ணும் சோறு -இத்யாதி -எல்லாமாகப் பற்றிய
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான -நம்மாழ்வாரைப் போலே முக்கிய ஆச்சார்யராக -பிள்ளை லோகாச்சார்யரும்
-அவர் அருளிச் செய்த நான்கு திவ்ய பிரபந்தங்கள் போலே இவர் அருளிச் செய்த அஷ்டாதச திவ்ய கிரந்தங்களும்
நம்மாழ்வார் கண்ணனே எல்லாமாகக் கொண்டது போலவே இவரும் வடக்கு திரு வீதிப் பிள்ளையையே எல்லாமாக கொண்டவர் –
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே இந்த பஞ்சாஷத்தும்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி -இத்தால் பிள்ளை லோகாச்சார்யர் உடைய சிறப்பையும்
அவர் அருளிச் செய்த திவ்ய கிரந்தங்களில் சிறப்பையும் அருளிச் செய்கிறார் –
———————————————–
சுலுகித பவ சிந்தும் சித்த ஜக்ரோத தைத்ய
ப்ரமத நபடுபுத்தும் ஸ்ரீ ஜகத் தேசி கேந்திரம்
த்ரவிட பணிதஷம் தக்ஷிணா ஷானி ஷண்ணம்
கலஷத நயமன்யம் மன்யதே மே மனஸ் த்வாம் –24–
அகஸ்திய முனி சமுத்திர ஜலத்தை ஆசமனமாக உறிஞ்சி வாதாபி அசுரனை நிரசித்தால் போலே பிள்ளை லோகாச்சார்யாரும்
சம்சார ஆர்ணவம் -காம க்ரோத -அசுரர்களை நிரசிக்க அஷ்டாதச ரகஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்தார் என்றதாயிற்று –
————————————————
ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -அப்யரதி ப்ரியா தே –
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-
லோகா வலீ விமல லோசன கோசராங்க –
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி–25-
ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -மன்மதன் போல அழகானவர் –
மன்மதன் தாதை கிருஷ்ணன் -இவர் தாதை கிருஷ்ணன் என்னும் வடக்குத் திரு வீதி பிள்ளை
அப்யரதி ப்ரியா தே -அவனுக்கு ரதி மனைவி உமக்கோ அரதி-உலக விஷயாந்தரங்களில் ப்ரீதி அற்று -இருப்பதால்
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-வசந்த ரித்து மது அவனுக்கு பிடிக்கும் -நீரோ மது அசுரனை நிரசித்த கண்ணன் மேலே ஆசை கொண்டவர்
அவன் சிவனை கண்டால் பயப்படுவான் -பவ-சிவனின் பெயர் -பவ சம்சாரம் உம்மைக் கண்டு அஞ்சும் –
லோகா வலீ விமல லோசன கோசராங்க -அவன் அங்கம் இல்லாமல் அநங்கன் ஆனான் -நீரோ அனைவரும் கண்டு மகிழும் படி
-அனைவர் கண்களுக்கும் விருந்தாகும் படி -இருக்கிறீர்
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி-கிருஷ்ணர் தாதை என்பது மட்டுமே உங்களுக்குள் பொருத்தம் –
———————————————
த்ருஷ்ட்வா தே புவநார்ய ஸூந்தர வபு கேசித் பாவம்போதி நிதிம்
சந்தீர்ணா ஷ்ரவணாம் ருதம் தவ குணம் ஷ்ருத்வா ஸக்ருத் கேசந
அன்யே கே அபி ஸூ தா சகோதர பீத்வா அப வன் நிர்மலா
தஸ்மாத் ஸம்ஸ்ருதி வர்த நீ ஷிதி தலே ஷீனா பபூவ ஷணாத்–26–
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -தம் திருமேனி அழகாலும் -குணங்களாலும் -ஸ்ரீ ஸூக்திகளாலும் சம்சாரம் கடலை தாண்டுவித்து அருளுகிறார் –
ஆகையால் க்ஷணம் பொழுதில் சம்சாரம் அழிந்தது -உம்முடைய ஸ்வரூப ரூப குண திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலே -என்கிறார் –
———————————————————————
தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித்
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ
பவன குருவர ஸ்ரீ பத்ம நா பஸ்ய பாதே
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான –27–
தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித் –உமது திருவடித் தாமரை பலத்தால் ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ -திரு வனந்த புரத்திலே நித்ய வாசம் செய்யப் பட்டவராய்
பவன குருவர ஸ்ரீ பத்ம நாபஸ்ய பாதே-பிள்ளை லோகாச்சார்யார் திரு அருளாலே திரு பத்ம நாபன் திருவடி தாமரைகளை அடையப் பெற்று –
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான -அனைவரும் பார்த்து புகழும் படி ஆனார்
சப்த காதை திவ்ய பிரபந்தம் அருளப் பெற்றவர் –
கூர குலோத்தமை தாசரும் விளாஞ்சோலை பிள்ளையும் -பிள்ளை லோகாச்சார்யார் ஆணைப் படி
திருவாய் மொழிப் பிள்ளையை சம்பிரதாயத்துக்கு கொண்டு வந்தார்கள் -விளாஞ்சோலைப் பிள்ளைக்கு அந்திம கைங்கர்யமும்
திருவாய் மொழிப் பிள்ளை செய்வித்தார் -பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு செய்தால் போலே –
————————————-
சஞ்சீவநீ சரண ரேணு கணாவலீ தே
சம்சார தக்ஷக முக ஷத முக்த ஐந்தோ
லோகார்ய வர்ய கருணாம்ருத சாரணீ து
சமவில்லதாம் கலயதே ஹ்ருதயே ப்ரரூடாம் –28-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடி துகள்களே-சம்சார விஜ ஜந்துவால் கடி பட்டவர்களுக்கு மருந்து ஆகும் –
ஐந்தலை நாகத்தால் கடி பட்டது போலே பஞ்ச இந்த்ரியங்களால் இழுப்புண்டு இருப்போர்க்கு மருந்தாகும்
கடி பட்டு பாம்பு கடி உண்ட பாம்பு -அனந்தாழ்வான் ஐதிக்யம்
அவரது கருணை அமிர்த ஆறே இருதயத்தில் மலரும் ஞானச் செடிக்கு நீராகி பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்து அடைய உதவும் –
————————————————-
ஷிஷ்யேஷூ வாக் பூஷண போஷி தேஷூ
ஜகத் குரோ தே கருணா அபி ஷே காத்
ச கூரவம் ஷோத்தம தாச நாமா
மாந்யோ குருணாம பவந் மஹிம்நா –29-
உம்முடைய கருணாம்ருதத்தால் அன்றோ ஸ்ரீ கூர குலோத்தம தாசர் -ஸ்ரீ வசன பூஷண அர்த்தங்களில் ஆழ்ந்து
-திருவாய் மொழிப் பிள்ளைக்கு அவற்றை அருளி ரகஸ்ய கிரந்த குரு பரம்பரையில் உமக்கும்
திருவாய் மொழிப் பிள்ளைக்கும் நடு ஸ்தானம் பெற்று உலகம் புகழும் படி ஆனார் –
———————————————–
ரூபம் புராண மணிபி ஷ்ருதி வஜ்ர தீப்தம்
பத்மா பதேர் முனி ஜன ஸ்தத லந்ஜகார
தத்ர த்வயா விரசித்தம் து மணி ப்ரவாள
வாக் பூஷணம் ஹி நிதராம் புநார்ய பாதி –30-
ஸ்ரீ பராசர ஸ்ரீ வியாசாதிகள் புராண ரத்தினங்களை கொண்டு வேத மயனான ஸ்ரீ யபதிக்கு அலங்கரித்தனர்
அவன் திருமேனியில் மிக்க தேஜஸ் இதன் ஸ்ரீ வசன பூஷணம் -மணி பிரவாளமாக -திகழ்கிறதே –
——————————————-
காமம் பவந்து குரவோ விவிதாக மார்த
விஜ்ஞ்சான விஷ்வ விதிதா விஹித பிரபந்தா
த்வத் ஸூ க்தி மௌக்தி ககனோ யதலன் ஐகார
ரங்காதி பஷ்ருதியுகம் புவநார்ய கிம் தை –31-
உமது திவ்ய ஸூக்திகள் ஸ்ரீ ரெங்கநாதன் திருக் காதுக்கு அணியாக இருக்க -மற்றைய ஆச்சார்ய
ஸ்ரீ ஸூக்திகள் நமக்கு எதற்க்காக -ரகஸ்ய த்ரயார்த்தமே சரமம் என்றவாறு –
—————————————
ஸ்ருதி நிகரக பீர கான நந்தர்
விஹரண விஷ் ருத புத்திநாத் வயைவ
ப்ரபதன சரணிர் விஷோதி தாச பூத்
புவன குரோ புவி லோக சாத நீயா –32-
வேதத்தில் பிரபத்தி சொல்லப் பட்டு இருந்தாலும் அரிய அறியதாய் இருக்க நீர் உம்முடைய ஸ்ரீ ஸூக்திகளால் பிரபன்னர் சர்வாதிகாரம்
-சர்வ காலத்திலும் தேசத்திலும் -நின்ற நின்ற நிலைகளில் செய்யலாம் -அதிகாரி நியமமே உண்டு -என்று அருளிச் செய்தீரே
————————————————-
த்வயி விலசதி ரெங்கே சேஷ தல்பேந பும்ஸா
ஜகதி குருவர ஸ்ரீ த்ருஷ்ட்டி பூராபி ஷிக்தே
கதமிவ புவ நார்ய த்வாம் விநா அந்நியம் பஜந்தே
சதிதி நகர பிம்பே கே ப்ரதீபம் வஹந்தி –33-
அரவணையில் பள்ளி கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கநாதன் பூர்ண கடாக்ஷம் பெற்று தேஜஸ் உடன் விளங்கும் நீர் –
வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரர் -ராமானுஜ திவாகரர் போலேயும் இருக்க
பூர்ண சந்த்ரன் போலேயும் ஸூ ர்யன் போலேயும் இருக்க மற்றவர்கள் வெறும் தீபம் போலே தானே -நஹி நிந்தை நியாயம் –
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு வெங்கதிரோன் குல விளக்கு வேண்டாமே என்றுமாம் –
——————————————
அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம்
ததநு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ
ரசயதி ஸூக நித்ராம் ராகவாணாம் குலேந்திர –34–
ராகவாணாம் குலேந்திர –ராகு குல தனமான ஸ்ரீ அரங்க நாதன்
அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ — க்ரமேண உபகார பரம்பரைகள் பல செய்து அருளி -கரண களேபரங்கள் கொடுத்து அருளி
-சாஸ்திரங்கள் கொடுத்து அருளி –ரகஸ்ய த்ரயங்கள் கொடுத்து அருளி –
அவதாரங்கள் பண்ணி அருளி -அனுஷ்டானங்கள் மூலம் காட்டி அருளி -ஆழ்வார்கள் மூலம் அருளிச் செயல்களைக் கொடுத்து அருளி –
நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்கள் மூலம் வியாக்கியானங்களை கொடுத்து அருளி -இவ்வளவும் செய்து அருளி
தத நு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ -அரவணை மேல் உறங்குவான் போலே யோக நித்திரை செய்து அருளி
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம் -பிள்ளை லோகாச்சார்யரை தோன்று வித்து -பின்பு தானே
ரசயதி ஸூ க நித்ராம் -நன்றாக -ஸூ கமாக ரசித்து உறங்குகின்றான் –
————————————————–
பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத
புலி நதட மவாப்ய த்வாம் புவம் சாபயித்வா
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த–35–
பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத –புலி நதட மவாப்ய -ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பிராட்டியார் உடன்
காவேரி மணல் திட்டிலே வந்து சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடந்து
த்வாம் புவம் சாபயித்வா-உம்மை தோன்று வித்த பின்பு தானே அன்றோ
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே —தனது அபேக்ஷிதம் கிட்டப் பெற்றான் –
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த-இதனாலே தானே அவன் திருமுகத் தாமரையும் நன்றாக மலர்ந்து விகாசம் அடைந்து உள்ளது –
——————————————————–
பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான்
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா –36-
பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம் -பலவித துக்க சூழலில் அகப்பட்டு உழலும்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்-த்வயம் போலவே இரண்டு திருக் கரங்களைக் கொண்டு உஜ்ஜீவிக்க
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான் -அனைவரும் அறியும் படி த்வயார்த்தம் தெளிவித்து கரை ஏறும் படி
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா -பரம காருண்யரான பிள்ளை லோகாச்சார்யார்
ஸ்ரீ ஸூக்திகளை அஷ்டாதச ரகஸ்யங்களாக அருளிச் செய்தார் –
——————————————————-
வக்த்ரேந்தோர் புவ நார்ய வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம் –37-
வக்த்ரேந்தோர் புவ நார்ய- வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ -பரம காருண்யரான -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் உடைய
சந்திரன் போன்ற குளிர்ந்த திருக் கண் கடாக்ஷத்தாலே -உதித்த அஷ்டாதச ரகஸ்ய ஸ்ரீ ஸூ க்திகள் என்ற அமுத வெள்ளமானது
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத -18-கால்வாய்கள் மூலம் -சம்சார பூமியில் -நதி மாத்ருகம் –
மழை நீர் தேவ மாத்ருகம் என்றும் ஆறுகள் நீர் நதி மாத்ருகம் -என்றும் சொல்வர் –
இந்த நதி மாத்ருகம் ஜீவர்கள் உஜ்ஜவிக்க அன்றோ வந்தது –
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா -இவர் அருளிச் செய்த இந்த நதி மாத்ருகத்தால் அன்றோ
சம்சாரம் கரை என்ற ஜீவர்கள் உணர்ந்தார்கள்
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம் -இதனால் அன்றி காள மேக ஸ்யாமளனான
ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு அறிந்து உஜ்ஜீவித்தோம் என்றவாறு-
————————————————————-
க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத்
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி –38-
க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத் –கோபம் கடலிலே விழுந்து மறைந்ததே -/ காமங்களும் ஒழிந்தனவே
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர -டம்பம் பாம்பு போலே காட்டிலே மறைந்ததே –
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா-அஹங்காரம் டம்பம் -கார்யம் – கோபம் காமம் காரணம்
-அனைத்தும் மூலையிலே ஒடுங்கிப் போயினவே
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி –நல்ல ஞானம் உள்ளவர்கள் வணங்கும்
பிள்ளை லோகாச்சார்யார் தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைப் பெய்தினரே –
———————————————-
தயா முத முபாக மத்த மஷமஷமா பூஷிதா
விரக்தி ரபிஷோ பதே விமல வித்யயா அலங்க்ருதா
முஹுஸ் ஸூமதி சம்ஸ்க்ருதா லஸதி விஷ்ணு பக்கத்து குணா
விவேக ஜனகம் ஜகத் குரு முபாஷ் ரிதா பாந்த்யமீ –39–
நீர் அருளிய விவேக ஞானத்தால் விஷ்ணு பக்தி வளர்ந்து -விரக்தி மிக்கு -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் வர பெற்றோம் –
—————————————————
ஜகத் குரு வரா நிஷாம் சரண சம்ப்ருதா பூ ஸூ ரா
முமுஷூ ஜனஷேகராஸ் த்விதி ந சித்ர மத்ராவ நவ்
விவிஸ்ய சிதசித் ப்ரபூம் ஸ்தவ க்ருபாஞ்ஜநோத் யத்ருஷா
நிவ்ருத்தி பதகாமி நீ சபதி பாமி நீ கா அப்யபூத–40-
வையத் தேவர்கள் தேவரீர் திருவடியை ஆஸ்ரயித்து தத்வ த்ரய ஞானம் பெற்று உந்து போனார்கள் –
திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாயார் போன்ற பல பெண்மணிகளும் அன்றோ உமது கடாக்ஷ பலத்தால் தத்வ த்ரய ஞானம் பெற்று
நிவ்ருத்த தர்மம் -பிரபத்தி -மார்க்கம் மூலம் உந்து போனார்கள் -உம்முடைய திருவடி பலம் என்னே –
———————————————–
சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு –41-
சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா –நான்முகன் பத்னி சரஸ்வதி உம் தாமரை திரு முகம் அடைந்தாள்
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி -ஸ்ரீ லஷ்மீ தேவி போலவே உம்முடைய பக்தி லஷ்மி திரு உள்ளம் நிறைய இருக்கிறாள் –
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா-நீல கண்டன் பத்னி பார்வதி தேவி போலே உலக விஷய விரக்தி உம்மிடம் பொலிகின்றதே –
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு –இப்படி இருக்க -உம்மை நைஷடிக்க ப்ரஹ்மச்சாரி என்று சொல்வது எங்கனம்
ஸ்வாமி உடைய வித்யா பக்தி விரக்தியை கொண்டாடும் படி –
—————————————————–
ஜகத் குருவர ஷிதவ் ஷபித கல்மஷவ் காம் கலாம்
சதுர்த்த புருஷார்த்த தாமபி கலவ் விதத்ய த்வயி
க்ருதவ தரனே புன க்ருத யுக க்ரம ஷோபதே
நகோபி புவி த்ருஷ்யதே நரக வர்த்தமகாமீ நர –42-
தேவரீர் திருவவதரித்த பின்பு -சாஸ்த்ர யாதாம்ய ஞானம் பிறந்து மோக்ஷம் ஒன்றே புருஷார்த்தமாக கொண்ட பின்பு கலி கெட்டு க்ருத யுகம் போலே ஆனதே –
நரகமும் புல் மூடி ஒழிந்தே-போனதே — கலியும் கெடும் கண்டு கொண்மின் –நலியும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து பெரிய க்ருத யுகம் பற்றிப் பேரின்ப பெறுக
——————————————————
ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம்
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம்
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே–43–
ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே –பக்தி மூலம் தமஸ் அந்தகாரம் நீக்கி அவனை அடைவதோ
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம் –பிரபத்தி மூலம் பிரபல கர்மாக்களை நிர்மூலம் ஆக்கி அவனை அனுபவிப்பதோ
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம் -இரண்டுமே சாதனங்கள் -என்றாலும் நீர் திருவவதரித்த பின்பு அன்றோ
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே-அவன் திருவடித் தாமரைகளை பற்றி அஞ்ஞானம் அந்தகாரங்கள்
களையப் பெற்று சர்வ பாபங்களையும் போக்கப் பட்டு –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -பிரபத்தியில் அசக்தனுக்கு இது -என்று
நீர் பஞ்சம உபாயம் அருளிச் செய்து காட்டிக் கொடுத்தீர் அன்றோ –
———————————————-
குருர் பவதி தேஹி நாம் புவனதே ஷிகஸ் யாதராத்
அபாங்கலவ விப்ருஷ பரிபதந்தி யஸ்யாங்ககே
ஷூபானி கில தம் பஜந்த்யத கலா சமுஜ்ஜ்ரும்பதே
பவந்தி நவ சம்பதோ பஜதி மோக்ஷ லஷ்மீ ஸ்வயம் –44-
உமது கடாக்ஷ லேசத்தாலே -ஆச்சார்யாக விரும்பி சிஷ்யர்களுக்கு சாஸ்த்ர ஞானம் உபதேசித்து -பாபங்களை போக்கி
மோக்ஷ லஷ்மியையும் அருளும் படி அன்றோ ஆகிறார்கள்-
———————————————-
ஷ்ருனோமி யதி வைதிகான் மகவிதீன் ஜகத் தேஷிக
ப்ரக்ருஷ்ட ஜன சேவிதான் அஹஹ மே மனா கம்பதே
அஹேதுக யார சைரவாதி தீன ஜீவான் முதா
ரமாபதி ரிதி த்வயா ரசிதஸூக்திபிர் மோததே –45–
உபாயாந்தரங்களை பின் பற்றி கர்ம யோகாதிகளை பண்ணி பக்தி மார்க்கம் வழியாக எம்பெருமானை அடைவதில் உள்ள
கஷ்டங்களை நினைத்து வருந்தி இருக்கும் உள்ளத்தை -உம்முடைய நிர்ஹேதுக கிருபையால்
ஆச்சார்ய அபிமானம் -பஞ்சம -உபாய சீர்மையை அருளிச் செய்து
அவனே நம்மை அடையும் படி செய்து அருளினீரே –
—————————————-
ஆ சக்ர வாலமவநவ் புவ நார்ய சர்வே
ஷம் சந்தி மங்கள குணான் விபூத ப்ரியாம் சதே
தேஷூ த்வதீய கருணாம் ப்ரகுணாம் து மன்யே
ரஷாம் யயா கலயஸே பவபீத ஐந்தோ –46–
சகல உலகத்தாருக்கும் -சக்கரவாள மலைப் பிரதேசம் -உள்ளாறும் தேவரீர் உடைய அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டாடினாலும்
தேவரீருடைய பரம காருண்யமே -அஷ்டாதச ரகசியங்களை அருளிச் செய்து -நிர்ஹேதுகமாக அவனே தன் சொத்தை தன்னிடம் சேர்த்துக் கொள்வான் –
என்று அருளிச் செய்து சம்சார பயத்தை நீக்கும் படி பண்ணி அருளினீரே -ஸ்ரீ நிவாஸன் தயை போலே இதுவே சிறந்த கல்யாணம் குணம் என்கிறார் –
—————————————–
ஸூ க்ருத லவவி ஹீனம் ஷூத்த பாவைர் விமுக்தம்
துரிதஷத நிகேதும் தூரயாதம் தயாயா
புநரபி ஜன மேநம் வீக்ஷஸே ரஷிதம் தவம்
புவன குருர சீத்தம் கோ அபி வாத்சல்ய சிந்து –47–
குண ஆர்ணவம் நீர் -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு அருளி
-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் கை விட்டாலும் –
அபார காருண்யத்தாலே நிர்ஹேதுகமாக கைக் கொண்டு அருளி லோகாச்சார்யராக இருக்கிறீர்
————————————–
விமத குமதி பீடா மானஸே சம்ரரூடா
த்ருட மமுமிஹ ஜீவம் க்ருந்ததி க்ரூர வ்ருத்தயா
அம்ருத ரஸ சகீ பிஸ்தாம் நிவார்யாஷூ த்ருக்பி
விரசய விதி ஷக்தம் ஸ்ரீ ஜகத் தேஷி கேந்திர –48-
கெட்ட புத்திகள் மூலம் தூண்டப்பட்ட கொடிய செயல்களால் தாழ்ந்து உள்ளவர்களை
உம்முடைய கடாக்ஷ லேசத்தாலே மீட்டு நாரணனுக்கு ஆளாக்கி அருளிச் செய்தீர் –
—————————————————
தோஷா யேன க்ருதா முராரி கருணா சாரா பகாரோ தகா
ஷைலேந்திரா ஷதஷோ வசந்தி ந குணஸ்யானோர ணுர்த் த்ருஷ்யதே
லோகாச்சார்ய ஜனம் தமே நமலசம் ரஷேத் பவாம்ஷ் சேத் தத
பத்மா காந்ததயா தயோ வர குணாஸ்தஸ்மிம்ஸ்து தேப்யோ நம –49–
நாம் அபராத சக்க்ரவர்திகளாக இருப்பதால் –மலை போன்ற அபராதங்கள் -எம்பெருமான் தண்டனைக்கு பாத்திரம் ஆகிறோம் –
ஆச்சார்யர் திருத்தி பணி கொள்வதால் -நம்மால் அவனை அணுக முடிகிறது -சம்சார போகி சந்தஷ்டந் ஜீவ ஜீவாதே நம -என்றவாறு –
————————————–
யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம –50-
யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக –உம்முடைய குல தைவம் பெருமாளால் ஆராதிக்கப் பட்ட ஸ்ரீ ரெங்க நாதன்
-ஸ்ரீ ரெங்க நாயகி கேள்வன் -என் திருமகள் சேர் மார்பன் –
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ –உமது வாஸஸ் ஸ்தானமோ காவேரி நடுவில் உள்ள
பூ லோக வைகுண்டம் -திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி –உம்முடைய திருத் தகப்பனாரோ உபய வேதாந்த ச்ரேஷ்டரான வடக்குத் திரு வீதி பிள்ளை
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம -உம்முடைய திரு சகோதரரே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்
-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் அருளிச் செய்தவர் –
நீரோ பிள்ளை லோகாச்சார்யார் -மிகப் பொருத்தமாக சாத்திய திரு நாமம் -உமக்கு யார் நிகர் ஆவார் –
——————————————–
காவேரீ யுகலாம் புபூர லலிதே புண்யந்தரீ பே அஸ்ம் யஹம்
லோகார்யோ வ்ரஜ தத் விஜேதி வரத ப்ரோவாச பக்தாய ஹி
இத்யேவம் குரு ஸூ க்தி பிர் குருவர த்வாம் மன்யமான ஸ்த்வஹம்
வந்தே வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம் -51-
வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம்–திருக் ஹஸ்தி நகரில் பெரும் தேவி சமேதனாக சேவை சாதிக்கும்
ஸ்ரீ வரதாச்சார்யனே – -மணல் பாக்கத்து நம்பியிடம் அருளிச் செய்த படியே -அவனே பிள்ளை லோகாச்சார்யராக திருவவதரித்தார்
இரண்டு ஆற்றுக்கு நடுவில் சென்று குறையும் ஸ்ரீ வசன பூஷணம் கேட்டுக் கொள்ள சொல்லி அருளினான் –
சேதனர்கள் உஜ்ஜீவனத்துக்காகவே இப்படி வந்து அவதரித்து ஸ்ரீ வசன பூஷணம் முதலியவற்றை அருளிச் செய்தான் பேர் அருளாளன் –
————————————————
வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம் ராமானுஜம் மத்குரும்
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை–52-
வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே -வேதாந்தங்களில் விதித்த கர்ம யோகங்களுக்கு சக்தன் அல்லேன்
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய -வாக் இத்யாதி இந்திரியங்கள் பட்டி மேய்கின்றன
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம்-பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையே தாரகமாக கொண்டு அத்தாலே ஷாந்தியையே தனமாக கொண்டவருமான
ராமானுஜம் மத்குரும் -அடியேன் ஆச்சார்யரான -ஆத்ரேய ராமானுஜர் -கிடாம்பி ராமானுஜ பிள்ளான் -உடைய சிஷ்யன் என்றதையே கொண்டு
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை-அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ மன் நாதமுனிகளை பார்த்து தம்மை அங்கீ கரித்து அருளும் படி ஸ்தோத்ர ரத்னத்தின் அருளிச் செய்தது போலே இங்கும் –
———————————————————–
ப்ரணம்ய சரணவ் தவ ப்ரணததே அஹினாம் காமதவ்
இதம் கிமபி வாஞ்ஜிதம் புவன தேஷிக பிரார்த்தயே
அஸார பணி திஷமா சரணமத்ய ஹித்வா மன
ப்ரயாது பதவீம் ஷூபாம் வசன பூஷண அலங்க்ருதாம் –53-
தேவரீர் திருவடி அபேக்ஷிதர் அபேக்ஷித்தவை எல்லாம் தர வல்லது –சம்சாரத்தில் பிரயோஜனாந்தரங்கள் பலவற்றிலும் அளந்து அவதி படாமல்
தேவரீர் அருளிச் செய்த ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதில் திட விசுவாசம் உடையவனாய் தேவரீர் ஆக்கி அருள வேணும் –
—————————————————–
இத்தம் ஜகத் குரு வர ப்ரவணந ஸர்வ
தந்த்ர ஸ்வதந்த்ர கவிதார்க்கிக ஸிம்ஹநா நாம்
ஸ்ரீ வேங்கடேஷ கவிநா கலிதாம் ஸ்துதிம் யே
ஸ்நிக்தா படந்தி புவி யாந்தி பராம் ஷ்ரியம் தே –54–
நிகமத்தில் பலமாக இந்த ஸ்தோத்ரம் கற்பவர்களுக்கு ஆச்சார்ய அபிமானம் கிட்டி பரம புருஷார்த்தம் பெறுவார் என்று அருளிச் செய்கிறார் –
———————————————
கவிதார்க்கிக சிம்ஹாயா கல்யாண குண ஷாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேஷாய வேதாந்த குரவே நாம –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply