ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம்புஜம்|
ஸம்ஸாரார்ணவ ஸம் மக்ந ஜந்து சந்தார போதகம்||-தனியன்
ஸம்ஸாரக் கடலில் அமிழ்ந்த ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸரணடைகிறேன்.
உவமானம் சொல்லி உபமேயம் பின்-அல்லது மாற்றியும் சொல்லுவது உண்டே
சரணாம்புஜம் -புருஷ வ்யாக்ர -திருவடித்தாமரை
பவ அடவி -ஸம்ஸாரம்
ஐந்து -ஜெனியையுடைய-திருநாவாய் -முகுந்தன் -நாவாய் முகுந்தன்
———–
1242-திருவவதரித்து 1350 வரை 108 ஸம்வத்ஸரம் –இருந்தவர்
நாயனார் ஆச்சான் பிள்ளை ஸச் சிஷ்யர்-
அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் ————45-
தம் பெரிய போதம் உடன் -தமது பெரிய ஞானத்தினால் -ஆசார்ய க்ருபாதீனமான போதம் அன்றிக்கே -ஸ்வ தந்த்ரமான போதம் -என்றபடி
ஏதமில் -குற்றமற்றதான –
பிரதி பதார்த்த ரூபமான வியாக்யானம் -எளிய உரை -என்பதால் பின்போரும் அன்போடு கற்று அறிந்து பேசுகைக்காக-என்கிறார்
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில ———-47-
மன்னார் கோயில் -ஜென்ம ஸ்தானம்– குலசேகரப் பெருமாள் திருவரசு
சிஷ்யர்கள் : யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.
பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்
அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம், த்ராவிடோபநிஷத் சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை, ரஹஸ்ய த்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம், பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ஸ்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.
————————–
அஸ்மத் ஹித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம் -க்ரந்த கர்த்ரு தனியன்
அஸ்மத் ஹித பரித்ராண-அன்பு பெருகி –
வாதி கேஸரி-வாதிகளில் ஸிம்ஹம்
இவர் அருளிய நூல்களில் ஒன்றான “தத்வ நிரூபணம்” என்னும் க்ரந்தத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அர்த்தம்:
ஆஸீர் வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்தேசம் -மங்களா ஸாஸனம்
அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||–ஆச்சார்ய வந்தனம்
ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்
யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .
மாந மேய மயம் ஸர்வம் மதம் யஸ்மிந் நவஸ்திதம்
ஸமஸ்த ஜகதா தாரம் தந் நமாமி ஸ்ரீ யபதிம்
பிரமாணம் ப்ரமேயம் இவற்றுக்குள் அனைத்தும் சேரும்
ப்ரஹ்மத்திடமே நிலை நிற்கும்
மதம் -ஞானம்
அவரே ஜகத்துக்கு ஆதாரம்
அந்த ஸ்ரீயப்பதியை வணங்குகிறேன்
பகவந்தம் யதி வரம் ப்ரணிபத்ய குரூநபி
தத் ப்ரஸாதாத் கரிஷ்யேஹம் ஸம்யக் தத்வ நிரூபணம் –மங்களா சரணம்
பிரணிபத்ய குருக்களுக்கும் சேர்த்து
கரிஷ்யே -செய்யப்போகிறேன்-தத்துவங்களை உண்மையாக நிரூபிக்கப் போகிறேன் என்றும் கிரந்த திருநாமம் என்றும் கொள்ளலாம்
ஸ்ருதப்பிரகாசர் -13 மங்கள ஸ்லோகங்கள் பாடி விக்னங்களை போக்க வேண்டுகிறார்
————–
அதிகாரம் 1 – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
அதிகாரம் 2 – ஸ்ருஷ்டி – காரணத்வம்
அதிகாரம் 3 – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
அதிகாரம் 4- நரக நிரூபணம்
அதிகாரம் 5 – ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
அதிகாரம் 6 – கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
அதிகாரம் 7 – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்
—————
விஷய ஸூசி கா
பிரதம அதிகாரம்– – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
1- மங்களா ஸாஸனம்
2- பிராமண நிரூபணம்
3-ப்ரத்யஷாதி நிருபணம்
4-வேதஸ்ய பூர்வ உத்தர பாக த்வய ஆத்மதத்வ கதநம்
5-தஸ்ய பரமாத்ம ப்ரதிபாதிகத்வ கதநம்
6- உபமாநாதி பஞ்சகஸ்ய ப்ரத்யக்ஷ அநுமானாக மேஷு அந்தர்பூதகத்வ கதநம்
7- வேத அங்காத்மக சிஷாதி ஸ்வரூப நிரூபணம்
8-பூர்வ உத்தர மீமாம்ஸயோர் ஐக ஸாஸ்த்ர கதநம்
9-ஸ்ம்ருதே இதிஹாஸ புராணயோஸ் ச பூர்வ உத்தர பாக உப ப்ருஹ்மணத்வ கதநம்
10- புராண லக்ஷண நிரூபணம்
11-இதிஹாஸ நிரூபணம்
12-புராண அபேக்ஷய இதிஹாஸஸ்ய பிரா பல்ய கதநம்
13- அஷ்டாதஸ வித்யா ஸ்வரூப நிரூபணம்
14-புராணஸ்ய ஸாத்விகத்வாதி நிரூபணம்
15- அஷ்டாதஸ புராணஸ்ய ருத்ர பரத்வ சங்கா பூர்வக நாராயண பரத்வ ஸமர்த்தநம்
16-வேதஸ்ய நித்யத்வ ஸமர்த்தநம்
17- ஸாங்க்யாதி தந்த்ரஸ் யாபி பரமாத்ம ப்ரதிபதிகத்வ கதநம்
18-ஸாங்க்ய யோக பாஸூபத மத நிரூபணம்
19- பாஞ்ச ராத்ரஸ்ய ப்ராமண தமத்வ ஸமர்தநம்
20- ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபணம்
21-தஸ்ய காரணத்வ நிரூபணம்
லோகத்தில் பரீஷகரானார் ப்ரமாணத்தாலே ப்ரமேயத்தை நிஸ்ஸயிக்கக் கடவர் களாய் இருப்பார்கள்
ப்ரமாணமாவது யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்
ஆகையால் ஸம்யக் அநுபவ ஸாதனம் பிரமாணம் என்று சொல்லுகிற நையாயிகாதிகளைப் போலே கரண பிரமாணம் சொல்லுகை அன்றியே ஞானப் பிரமாணம் சொல்லுகை ஸித்தாந்திகளுக்கு அபிமதமாய் இருக்கும்
பிரமாணம் கருவி ப்ரமேயம் -அறிவால் இது என்று காட்டும்-யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்-உண்மை நிலையைக் காட்டும்-
பிரமாணம் தான்
1-ப்ரத்யக்ஷம் என்றும்
2- அநு மானம் என்றும்
3- ஆகமம் என்றும்
4-உபமானம் என்றும்
5-அர்த்தா பத்தி என்றும்
6-அபாவம் என்றும்
7-ஸம்பவம் என்றும்
8- ஐதிஹ்யம் என்றும் -எட்டு வகையாகச் சொல்லுவார்கள்
ப்ரத்யக்ஷ மேகம் ஸார்வாகா —
கணாத ஸூகதவ் புந அநுமாநாஞ்ச –தச்சாஹு–
சாங்க்யாஸ் சப்தஞ்ச தே அபி
நியாய ஏக தேஸி நோப்யேவம் உபமா நஞ்ச கேசந
அர்த்தா பத்த்யா ஸஹைதாநி ஸத்வார்யாஹ ப்ரபாகர
அபாவ ஷஷ்டாந் யேதாநி பாட்டா வேதாந்திநஸ் ததா
ஸம்பவ ஐதிஹ்ய யுக்தாநி தாநி பவ்ராணிகா ஜகு
இதில் ஸார்வாகர் -(லோகாயகர்-)ப்ரத்யக்ஷம் ஒன்றுமே பிரமாணம் என்பர்
வைசேஷிகரும் புத்தர்களும் அத்தோடே அனுமானத்தையும் கூட்டிக் கொண்டு இரண்டு பிரமாணங்கள் என்பர்கள்
நையாயிகரில் பூஷண மதத்தில் உள்ளோர் அவற்றோடு ஆகமத்தையும் கூட்டிக் கொண்டு மூன்று பிரமாணங்கள் என்பர்
உதயந மதித்தில் உள்ளோர் (புது நியாய சாஸ்த்ரா ப்ரவர்த்தகர்)அதோடு உபமானத்தையும் கூட்டிக் கொண்டு நான்கு பிராமணர்கள் என்பர்
பிரபாகரர் அவற்றோடு அர்த்தா புத்தியையும் கூட்டி ஐந்து பிரமாணங்கள் என்பர்
பாட்டர் அவற்றோடு அபாவத்தையம் கூட்டி ஆறு பிரமாணங்கள் என்பர்
ஐதி ஹாசிகர் அவற்றோடு சம்பவத்தையும் ஐதிஹ்யத்தையும் கூட்டிக் கொண்டு எட்டு பிரமாணங்கள் என்பர்
நிச்சயிக்கப்பட்ட ஹேது அனுமானம்
தேவதத்தன் பருத்து இருக்கிறான் -பகலில் உண்ணவில்லை -இரவில் உண்ணுகிறான் -ஹேது மாறலாம் -இதுவே அர்த்தா பத்தி-
இன்மை காணாமை -அபாவம் -தனி பிரமாணமாக கொள்ளுவார் சிலர்-அனுப லப்தி -இல்லை நான் காணாமையாலே-
ஐதிஹ்ய -வாழ்வும் வாக்கும் -தனி பிரமாணம் -முன்னோர் மொழிந்த முறை செவி வழி
1-இவற்றில் ப்ரத்யக்ஷமாவது –இந்திரியங்களுக்கு அர்த்தங்களோடு உண்டான சன்னிகர் க்ஷத்தாலே அபரோஷமாகப் பிறக்கும் ஞானம்(அக்ஷம் கண்ணைச் சொன்னது அனைத்து புலன்களுக்கும் உப லக்ஷணம்)
2- அநுமானமாவது -வியாப்தமான லிங்க பார்மர்சத்தாலே வியாபகமான ஸாத்ய விஷயக ஞானம்
அதாவது தூம அக்னிகாதிகளுடைய நித்ய ஸஹ சார்யத்தை மஹாந ஸாதிகளிலே கண்டவன் பர்வத கதமான தூம தர்சனத்தாலே அக்னி உண்டு என்று அறுதியிடுகை
லிங்கம் அடையாளம்
பெரியது வியாபகம்
நெருப்பு இருக்கும் இடத்தில் புகை இருக்கும் தேவை இல்லையே -மின்சாரம் -புகை இல்லையே
புகை குறைவு -நெருப்பு அதிகம்
3-ஆகமமாவது -ஆப்த உபதேஸம் -அதாவது வேத வைதிக வசனங்கள்)வேத நூல் ஓதுவது உண்மை-ஆப்த -நம்பத்தக்க -அபவ்ருஷேயம்)
4- உபமானமாவது –ஸத்ருஸ வஸ்து தர்சனத்தில் பூர்வ த்ருஷ்ட்ய ஸாத்ருஸ்ய ஞானம் -அதாவது
முன்பு கோவைக் கண்டவன் பின்பு கவயத்தைக் கண்டால் கோ ஸத்ருசம் கவயம் என்று பிறக்கிற ஸாத்ருஸ்ய புத்தி
5-அர்த்தா பத்தியாவது -அநுப பத்யமான அர்த்தத்தைக் கண்டால் அதுக்கு உப பாதகமான அர்த்தாந்தரத்தைக் கல்பிக்கை -அதாவது
ஜீவிக்கிற புருஷனை க்ருஹத்தில் காணாது ஒழிந்தால் புறம்பே போனானாகக் கல்பிக்கிற ஞானம்
6- அபாவமாவது -ஒன்றினுடைய இல்லாமையை ஸாதித்துக் கொடுக்கிற ஞானம் -அதாவது
இந்த பூ தலத்தில் கடம் முதலானவை இல்லை என்று பிறக்கிற ஞானம் முதலானவை
7- ஸம்பவமாவது -ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் கூடும் என்று பிறக்கும் அறிவு
8-ஐதிஹ்யமாவது -லோக ப்ரஸித்தமான வார்த்தையைக் கொண்டு அர்த்த நிஸ்ஸயம் பண்ணுகை
இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும் அனுமானத்தையும் ஆகமத்தையும் -இம்மூன்றை வைதிகர் பிரமாணமாக பரிக்ரஹிக்கிற அளவில்
ஆப்த உபதேஸ ரூபமான ஆகமத்தை அபவ்ருஷேய மாகையாலே பிரம விப்ர லம்பாதி (ஐயம் திரிபு)தோஷ ரஹித நித்ய பிரமாணமாகையாலே
ஆப்த உபதேஸம் என்று வேதத்தையும்
தந் மூலமான முநி வசநாதிகளையும் சொன்னார்கள்(ஆர்ஷம் தர்ம உபதேசம் -வேதத்தை மூலமாகக் கொண்ட முனி வசனங்கள்)
இவை ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாம் இடத்தில்
பவ்த்தாதிகளைப் போலே ப்ரமாண்யம்–(அபிராமண்யம் இதி -ஸ்வா பாவிகமாய் )அப்ராமாண்யம் -(ப்ராமாண்யம்) -குண க்ருதமாயும் –
நையாயிதிகளுக்குப் போலே அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் – ப்ராமாண்யம் குண க்ருதமாயும் இருக்கை
யன்றியே ஸர்வ ப்ரகாரத்திலும் ப்ராமாண்யம் ஸ்வதஸ் ஸித்தமாய் அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் இருக்கும்-
இயற்கையில் பொய் அறிவு -புத்தர்
வேதாந்திகள் இயற்க்கையில் நல் அறிவு-தோஷங்களால் பொய்யாகிறது
இப்படி ஸ்வ ஸித்த ப்ரமாணங்களான இம் மூன்றிலும்
ப்ரத்யக்ஷ அனுமானங்கள் இந்த்ரிய க்ரஹண யோக்யங்களில் பிரமாணங்களாய் இருக்கும்
அதீந்த்ரிய அர்த்தத்தில் பிரமாணம் அறிவது -வேதம் ஒன்றுமே
இது தான் தனக்கு ப்ரகாரங்களான -உபகரணங்களான -ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ந்யாய மீமாம்ஸைகளோடே கூடி ஸ விபூதிகனான ஸர்வேஸ்வரனுடைய வைபவத்தைப் ப்ரதிபாதிக்கையிலே தத் பரமாய் இருக்கும்
அதில் கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாகம்
பகவத் ஆராதன விதியிலே தத் பரமாய் இருக்கும்
ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாகம்
பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அறிவித்து அவனை பிராபிக்கையில் தத் பரமாய் இருக்கும்
ஆகையால் -வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய 15-15–என்று பகவான் தானே அருளிச் செய்த படியே க்ருத்ஸ்ன வேதமும் ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும்
இந்த ப்ரத்யக்ஷ அநுமான ஆகமங்கள் மூன்றிலும் –
அல்லாத ஐந்து பிரமாணங்களை அந்தர் பவிக்கும்
அதில் உபமானமும் அர்த்தா பத்தியும் ஸம்பவமும் வ்யாப்தி ஸஹ க்ருதமாகையாலே அனுமானத்திலே ஸம்பவிக்கும்
ஐதிஹ்யம் ஸப்த ஜன்யமாகையாலே ஆகமத்த்திலே அந்தர் பவிக்கும்
அபாவம் -பாவாந்தர பர்யவசாயி யாகையாலே யதா யோகம் ப்ரத்யாஷிகள் மூன்றிலும் அந்தர் பவிக்கும்-
இப்படி ஸ்வத ஸித்த பிரமாண பாவத்தை யுடையவையாய் -ருக் யஜுஸ் ஸாம அதர்வண ரூப சாதுர் வித்யத்தை யுடைய வேதங்களுக்கு
1-சிஷா
2-வியாகரணம்
3-நிருக்தம்
4-ஸந்தோ விஸிதி
5-கல்ப ஸூத்ரம்
6-ஜ்யோதிஸ் ஸாஸ்த்ரம் -(ஆபஸ் தம்ப தர்மே -2)- அங்கங்கள் ஆறாய் இருக்கும்
1- அதில் சிஷையாவது -வர்ண ஸ்வர மாத்ராதி நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
2- வியாகரணமாவது -ப்ரக்ருதி ப்ரத்யயாதி முகத்தாலே அர்த்தாபி தாயகமான பதங்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
3- நிருக்தமாவது -அக்ஷர ஸாம்ய மாத்ரத்தாலே பதங்களில் அர்த்தத்தை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
4-சந்தோ விசிதியாவது –காயத்ரீ உஷ்ணிக் அநுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹநீ பங்க்தி ஜகததீ -சர்வரீ இதி ஸர்வத்ர பா என்கிற ஸப்தஸ் சந்தஸ்ஸூக்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்(பாதத்தில் 6 எழுத்துக்கள் தொடங்கி)
5-கல்ப ஸூத்ரமாவது -வேதார்த்த அனுஷ்டான பிரகார நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
6-ஜ்யோதிஷமாவது -அத்யயன அனுஷ்டானங்களுடைய கால நியமம் பண்ணும் ஸாஸ்த்ரம்
(சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –உத்தர சதகம்-18-
ஹே ரங்க நாத
சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்
வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –
பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –
சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்
கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –
கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது
ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட
நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்
புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்
தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே
தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –விசாரிக்கின்றன -என்றவாறு-பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே
நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-
நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே)
ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
வ்யாக்ரணம் -இலக்கணம்
ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது
—————-
சந்த பாதவ் ஸப்த ஸாஸ்த்ரம் ச வக்த்ரம் கல்ப பாணிர் ஜ்யோதிஷம் சஷுஷீ ச -சிஷா கிராணம் ஸ்ரோத்ரமேதத் நிருக்தம் வேதஸ் யாங்காந் யாஹுரேதாநி ஷட் ச -என்று
அவயவ ரூபங்களாகவும் நிரூபிப்பர்கள்
இப்படி ஸ அங்கமான வேதங்களினுடைய அர்த்த தவ்சித்யத்தை பிரமாணாதி நிரூபணங்களாலும் தர்க்க மர்யாதையாலும் ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் நியாய ஸாஸ்த்ரம்(ஆர்ஷம் தர்ம உபதேசம் -கண்டு -எழுதி -நியாய வேத சாஸ்திரம் அவிரோதமாக இருப்பதே தர்மம்)
மீமாம்ஸை யாவது -வேத வேதாந்த அர்த்தங்களுடைய அர்த்த கமஹத்வத்துக்கு உபயுக்தமாக பூர்வ பக்ஷ ஸித்தாந்த ரூபேண உண்டான விசாரம்
இது தான் பூர்வ மீமாம்ஸை -உத்தர மீமாம்ஸை என்கிற பேதேந ப்ரஸித்தமாகையாலும்
கர்ம ப்ரஹ்ம ரூபேண ப்ரதிபாத் யர்த்த பேதத்தாலும் ஜைமிநீயம் பாதாராயணீயம் என்கிற கர்த்ரு பேதத்தாலும்
ஸாஸ்த்ர பேதம் உண்டு என்கிற சங்கைக்கு விஷயமாய் இருந்ததே யாகிலும் நிரூபணீயமான வேதம் உபநிஷத் விசிஷ்டமாகையாலே ஏகமாகையாலும்
ரத கோபுராதி நிர்மாணத்தில் போலே கர்த்ரு பேதம் அப்ரயோஜனகமாகையாலும்
ஸூ மந்தம் ஜைமிநீம் பவ்வம் (பைலர்)ஸூகஞ்சைவ ஸ்வ மாத்மஜம் -வேதாநத்யாபயாமாஸ –மோக்ஷ -341-19-என்கிற இத்யாதி வசனத்தாலே ஜைமினி ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு நேரே சிஷ்யனாகையாலும்
த்வீபே பதரி காமத்யே பாதராயணம் அச்யுதம் -பராசராத் சத்யவதீ
(ஸர்வ கர்ம ஆராதனாய்
சர்வ தேவ அந்தர்யாமியாய்
ஸர்வ பல பிரதானனாய் ப்ரஹ்மம் இருக்கும்
20 அத்தியாயங்கள்
ரஹஸ்ய த்ரய அக்ஷரங்களும் 20
யதிராஜ விம்சதி -20 ஸ்லோகங்கள் இதனாலே)
புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும்
புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்நதே ஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும் உபாஸன ரூபமான கார்யத்திலே அதி
புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்ந தேஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும்
(கார்ய அர்த்தம் -விதி வாக்கியமும் பல வாக்கியமும்
ஜ்யோதிஷட ஹோமம் செய்து சுவர்க்கம்-இரண்டையும்
ராத்ரீ சத்ர விதி வாக்கியம் உண்டு பலம் இல்லையே
வேறே இடத்தில் பிரதிஷ்டா பலம் கொண்டு கூட்டிக்கொள்ளுவது போல்)
உபாஸன ரூபமான கார்யத்திலே அதிக்ருத்தனான புருஷனுக்கு பலமான ப்ரஹ்ம ஸ்வரூப ரூப குண விபவாதிகள் ஸ்வ அர்த்தங்களில் வேதாந்த வாக்கியங்கள் ப்ரமாணமாகையாலும்
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைமிநீ யேந ஷோடஸ லக்ஷணேந இது ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி -போதாயன வ்ருத்திகார வசனம் உண்டாகையாலும்(ஸூத்ர -விருத்தி -பாஷ்யம் -மூன்றும் வ்யாஸர் போதாயனர் பாஷ்யகாரர்)
மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-இத்யாரப்ய -அநா வ்ருத்தி ஸப்தாத் அநா வ்ருத்தி ஸப்தாத் -இத்யேதத் அந்தம் சங்கதி விசேஷண விஸிஷ்ட க்ரமம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் வசனம் உண்டாகையாலும் ஏக ஸாஸ்த்ரமாய் இருக்கும்
அதில் ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரதஸ் இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்த அர்த்த ப்ரகாஸ் யதே வாயு புராணம் பூர்வ -4-10–என்கிறபடியே ஆசார்ய வ்யவஹார பிராயச்சித்த ரூப ப்ரதிபாதகமான தர்ம ஸாஸ்த்ரம் -கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது-இதிஹாச புராணங்கள் -ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது
தர்ம சாஸ்திரங்களும் இதிஹாச புராணங்களும் வேதத்தினுடைய அர்த்தத்துக்கு வைஸத்ய ஹேதுவாய்க் கொண்டு உப ப்ருஹ்மணங்களாய் இருக்கும்
அதில் புராணமாவது
சர்க்கஞ்ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச வம்ச அநு சரிதம் சேதி புராணம் பஞ்ச லக்ஷணம் -வாயு புராணம் -என்று
ஸ்ருஷ்ட்டிகளும்
ஸம்ஹாரங்களும்
வம்ஸங்களும்
மன்வந்தரங்களும்
வம்ஸ அநு சரிதங்களும்
ஆகிற பஞ்ச லக்ஷணத்தை யுடைத்தாய் இருக்கிற
ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவம் முதலான கிரந்த ராஸி
பஞ்ச லக்ஷண லஷிதமான புராணங்கள் அல்ப புராணம் என்றும் தச லக்ஷண லக்ஷிதமானவைகள் மஹா புராணம் என்றும் சிலர் சொல்லுவார்கள்
அப்படியே பாகவதத்தில் 12 வது சர்க்கத்தில் 7-8-9–ஸ்லோகங்களில்–சர்க்கோஸ்யாத வி சர்க்கஸ் ச வ்ருத்தி ரஷாந்தராணி -வம்சோ வம்ச அநு சரிதம் ஸம்ஸ்தா ஹேதுர் உபாஸ்ரய தசபிர் லக்ஷணைர் யுக்தம் புராணம் தத் விதோ விது-கேஸித் பஞ்ச விதம் ப்ரஹ்மன் மஹத் அல்ப வ்யவஸ்தயா -என்று சொல்லப்பட்டது
இந்த வசனத்துக்கு விரோதம் வாராமல் கொள்ளவும்
1-சர்க்கோஸ்யாத
2-வி சர்க்கஸ் ச
3-வ்ருத்தி -ஜீவ ஸாதனம்
4-ரஷா
5-அந்தராணி -மன்வந்தரம் -14 மன்வந்தரம் 1000 சதுர்யுகம் ஒரு கல்பம் -நாம் 7 வது மன்வந்தரத்தில் உள்ளோம் -மனு தேவர் மனு புத்திரர்கள் ஸப்த ரிஷிகள் மாறாமல் இருப்பார்கள்
6-வம்சோ
7-வம்ச அநு சரிதம்
8-ஸம்ஸ்தா -பிரளயம்
9-ஹேதுர் -கர்மகாரணம்
10-அபாஸ்ரய -ஆதாரம்
இதிஹாஸமாவது -இந்த லக்ஷண நியம அபேக்ஷை இன்றியே ஸ்ரீ ராமாயணம் மஹா பாரதம் ஸ்ரீ விஷ்ணு தர்மாதியான கிரந்த ராஸி
இவற்றில் புராண நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா -வேதா ஸ்தாநாநி வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்த்த ஸ -மனு என்று தர்ம வித்யா ஸ்தானங்கள் பதினாலாக மனுவும் சொன்னான் –
(வேதங்கள் நாலு
அங்கங்கள் 6
உப அங்கங்கள் 4 என்றும் 8 என்றும் சொல்வர்
அங்க உப அங்கங்கள் -14
வேத சதுஷ்ட்யத்துக்கு-நம்மாழ்வாரது நான்கும் -பரகாலரது ஆறும் -மற்ற எட்டு ஆழ்வார்களது அருளிச் செயல்களும்
நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.
வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.
இவையே நான்கு உபவேதங்கள்-
ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்
அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்
தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்
காந்தர்வ வேதம்– நுண்கலைகள்
இவ்விடத்தில் வித்யா ஸ்தானமாக புராணம் ஒன்றுமே பரிகணிதமாயிருக்க இதிஹாஸத்தையும் கூட்டுவான் என் என்னில்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ருஹ்மயேத் -பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மா மாயம் ப்ரதர்ஷ்யதி -ஆதி பர்வம் -1-2-3-
வேதத்துக்கு ப்ரதாரணமாவது தத் அபி ப்ரேத விபரீத அர்த்த வர்ணநமே என்று வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பரிக்ருஹீத மாகையாலும்
இதிஹாஸ புராணம் -ப்ருஹ உப -6-1-2-
இதிஹாஸன் புராணாநி இதி -என்று
ஸ்ருதியிலும் ஸஹ படிதமாகையாலும்
இதிஹாஸ புராணம் பஞ்சமம் -சாந்தோக்யம் -7-1-1- என்று அல்ப அஸ்த்ரம் அன்றி இருக்க அப்யரஹிதமாகையாலே பூர்வ ப்ரயுக்தமான இதிஹாசத்துக்கு புராணாத் வை லக்ஷண்யம் உண்டாகையாலும்(அத்தாலே அது முற்பட்டது)
இந்த புராண ஸப்தம் இதிஹாஸத்துக்கும் உப லக்ஷணமாகக் கடவது
அங்காநி வேதாஸ் ஸத்வார மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யாஹ் யேதாஸ் சதுர்தச -விஷ்ணு புராணம் -3-6-27-என்று
எண்ணப்பட்ட இந்த பதினாலு வித்யைகளோடே
ஆயுர்வேதா தநுர் வேதோ வேதோ காந்தர்வ ஏவ ச அர்த்த ஸாஸ்த்ரம் இதி ஹ்யேதா வித்யாஹ் யஷ்டா தச ஸ்ம்ருதா -விஷ்ணு புராணம் -3-6-28- என்று
சரீர ஸ்திதி ஹேதுவான ஆயுர் வேதமும்
ஸத்ரு நிவாரண அர்த்தமான தனுர் வேதமும்
போக உபயுக்தமான காந்தர்வ வேதமும்
ஸம்பத் அர்த்தமான அர்த்த ஸாஸ்த்ரமுமான நாலு உப வேதமும்
சத்வாரமாக உப யுக்தமாகையாலே பதினெட்டு வித்யை என்று சொல்லப்பட்டது இறே
ஆயுர் வேதோ –வைத்ய ஸாஸ்த்ரம் காந்தர்வோ கீதி சாஸநம் -அர்த்த ஸாஸ்த்ரம் தண்ட நீதி தநுர் வேதோ அஸ்த்ர சாஸநம் -ஸத்வார உப வேதாஸ்தே இதி வைஜயந்தீ
இந்தப் புராணங்கள் தான் -யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா –தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே–மாத்ஸ்ய புராணம் -289–15-என்று
ஸர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மாவாய் -அவனுக்கு யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தில் யாதொரு குணம் விஞ்சி இருக்கும் அந்தக் குண அனுபவ குண தேவதையினுடைய மஹாத்ம்யத்தை அந்த புராணங்களிலே சொல்லக் கடவனாகையாலே
அக்நேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்தியதே ராஜஸேஷு ச மஹாத்ம்யம் அதிகம் ஹரே(ப்ரஹ்மணோ விது) -தேஷ்வேவ யோக ஸம் ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் -சங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே -மாத்ஸ்ய புராணம் -289-என்று தாமஸ கல்பங்களிலே புராணங்களாலே அக்னி சிவர்களுடைய மஹாதம் யத்தையும் ராஜஸ கல்பங்களில் புராணங்களாலே ப்ரஹ்மா தன்னுடைய மஹாத்ம்யத்தையும் -ஸாத்விக கல்பங்களிலே புராணங்களாலே ஸர்வேஸ்வரனான ஹரியினுடைய மஹாத்ம்யத்தையும் -ஸங்கீர்ண கல்பங்களிலே ஸரஸ்வதியினுடையவும் பித்ருக்களினுடைய மஹாத்ம்யத்தையும் சொல்லக் கடவனாய் இருக்கும்
இதில் ஸாத்விக புராண ஏக நிஷ்டரானவர்கள் யோக முகத்தாலே ஞானத்தைப் பெற்று பர கதியைப் பெறுவார்கள் என்று சொல்லுகையாலே பகவத் பிரதி பாதகங்களான ஸாத்விக புராணங்களே ப்ராமாண்யத்தில் ப்ரக்ருஷ்டங்களாய் இருக்கும் -ஆனால் இதர தேவதா ப்ரதிபாதகங்களான ராஜஸ தாமஸ ஸங்கீர்ண புராணங்கள் அப்ரமாணம் இத்தனையோ என்னில் -அவற்றிலும் பகவத் உத்கர்ஷ ப்ரதிபாதகத்வம் அவிசிஷ்டமாகையாலே (பொதுவாகையாலே)தன் நிபந்தமான ஸாத்விக்யம் உண்டான அம்சத்தில் யதா ஞான சாதகத்வம் அடியான ப்ராமாண்யத்தில் குறை யில்லை-
அஷ்டா தஸ புராணேஷு தசபிர் கத்யதே சிவ -என்று பதினெட்டு புராணத்திலும் பத்து புராணத்தாலே சிவன் சொல்லப்படுகிறான் என்று உண்டாய் இருக்க -ஸகல புராணங்களும் பகவத் ப்ரதி பாதகங்கள் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டா தச புராணாநி புராணாஜ்ஞா ப்ரசக்ஷதே -1-ப்ராஹ்மம் 2-பாத்மம் 3-வைஷ்ணவஞ்ச 4-சைவம் 5-பாகவதம் ததா -ததாந்யம் 6-நாரதீயஞ்ச 7-மார்க்கண்டே யஞ்ச ஸப்த தமம்–ஆக்நேய மஷ்ட மஞ்சைவ பவிஷ்யந் நவமம் ஸ்ம்ருதம் -தசமாம் ப்ரஹ்ம கை -வை -வர்த்தம் 11-லைங்க மேகா தசம் ஸ்ம்ருதம் -12-வராஹம் த்வாதஸஞ்ச 13-சைவ ஸ்காந்தம் ஸாத்ர த்ரயோதஸம் -சதுர்த ஸம் வாமநஞ்ச கௌர்மம் பஞ்சத ஸம் ததா –மாத்ஸ்யஞ்ச காருடஞ்சைவ பிரஹ்மாண்டஞ்ச தத பரம் சர்க்கஸ் ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச -ஸர்வேஷ் வேதேஷு கத்யந்தே வம்ஸ அநு சரிதஞ்ச யத் யதேதத் தவ மைத்ரேய புராணம் கத்யதே மயா ஏதத் வைஷ்ணவ ஸம்ஜ்ஞம் வை பாத்மஸ்ய சமனந்தரம் சர்க்கே ச ப்ரதி சர்க்கே ச வம்ஸ மன்வந்த்ராதி ஷு கத்யதே பகவான் விஷ்ணு அஸேஷேஷ்வேவ சத்தம -என்று
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே புராணங்கள் பதினெட்டையும் அநுக்ரமித்து இப் புராணங்கள் எல்லாவற்றிலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப்படுகிறான் என்று சொல்லுகையாலும்
ஏவமேவ புராணேஷு தச ஸ்வஷ்டஸூ நான்யதா -என்று பதினெட்டு புராணத்திலும் பகவானே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாத்யன் அல்லது தத்வாந்தரம் அன்று என்று புராணாந்தர வசனம் உண்டாய் இருக்கையாலும் இனி ஸர்வ புராணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாத்யன்
தேவதாந்த்ர உத் கர்ஷம் சொல்லுகிற இடம் பகவான் நிஸ்ருஷ்ட காரண புருஷத்வாதி (ஆதி ஸம்ஹார புருஷன்)பத பிராப்தி உடையராகையாலே தத் விபூதி நிபந்தமான உத்கர்ஷ ப்ரதிபாதனத்திலே தாத்பர்யமாகக் கடவது
1-புராணாதிகளிலே (ஆதி ஸ்ம்ருதி போல்வன)ஸர்வ ஜகத்தினுடைய யுகபத் (ஒரே சமயத்திலே)ஸம்ஹாரதிகளைச் சொல்லுகையாலும்–2- ஆகாச விசேஷ குணமான சப்தத்துக்கும் ஸ்வ ஆஸ்ரயமான ஆகாஸத்தோடே ஸம்ஹாரம் உண்டாகையாலும் (தன் மாத்திரை பூத ஸூஷ்மம் தத்வம் -சப்தாதி குணங்கள் வேறே -24 தத்துவங்களில் இவை இல்லையே)3-வர்ணாத்மகமான சப்தத்துக்கு புருஷனுடைய தால்வாதி (தாலு -தாடை)வ்யாபார ஜன்யத்வம் உண்டாகையாலே கர்த்ரபேஷை உண்டாகையால் புருஷ புத்த் யன்வய மூலத்வம் ஸம்பாவிதமாகையாலும் -4-இதா நீ மிவ ஸர்வத்ர த்ருஷ்டாந்தாதி கமிஷ்யதே -என்கிற மீமாம்ஸக மர்யாதையாலே வேதத்துக்கு அவிச்சின்ன பாட ஸம் ப்ரதாயம் அசம்பாவித மாகையாலே (குரு முக உச்சாரண அநு உச்சாரண அத்யயனம்
(வேத அத்யயனம் குரு பூர்வகம் )அக்ஷர ராசி கிரஹணம்ஸம்பாவிதம் இல்லையே) வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்கள் கூடும்படி எங்கனே என்னில் -ஸப்த நித்யத்வம் கொள்ளுகிற பக்ஷத்திலும் அத்யேத்ரு புருஷா அவிச்சேத நிபந்தமான பாட ஸம்ப்ரதாய யவிச்சித்தி இறே நித்யத்வாதிகளுக்கு மூலமாயிற்று –
அது ஸகல ஸம்ஹார அவஸ்தையிலும் குறையில்லை -அதாவது ஸூப்த ப்ரபுத்தரான உபாத்யாயாதிகள் பூர்வ உச்சாரண க்ரமத்தை ஸ்மரித்து சிஷ்யாதிகளை அத்யயனம் பண்ணுவிக்குமா போலே -ஸம்ஹ்ருதி சமயங்களிலே ஸர்வேஸ்வரன் இந்த வேத சந்தர்ப்பத்தைத் (ஆனு பூர்வியை வரிசைக் கிரமத்தை)தன் திரு உள்ளத்திலே ஸம்ஸ்கார விசேஷத்திலே இட்டு வைத்து ஸ்ருஷ்ட்டி காலத்திலே இந்த வேத ஸப்தங்களாலே ஸ்மரிக்கப்பட்ட நாம ரூபங்களை ஸ்ருஷ்ட மான அவ்வோ அர்த்தங்களிலே வ்யாகரித்து -வ்யாபரித்து -(பிரித்து வைத்து)உறங்கி உணர்ந்த பிரஜைகளை பிதா ஓதி வைக்குமா போலே ப்ரஹ்ம ப்ரமுகரான ஸர்வ ப்ராணிகளையும் யோக்யதா அநு கூலமாக அத்யயனம் பண்ணுவித்து அவ்வவருடைய ஹிதங்களையும் சாஸித்துக் கொண்டு போருகையாலே அஸ்மர்யமாண (நினைவிலே வராததான)கர்த்ருத்வாதி நிபந்தநமான வேத ப்ராமாண்யம் வ்யவஸ்திதம் என்றதாயிற்று(தேவதாதிகரணம் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தவை ஒற்றியே இங்கு)
வாஸா விரூப நித்யயா -என்று ஸந்தர்ப்ப விசேஷண ரூபத்தாலே வாக்கு நித்யையாய் இருக்கும் என்று ஸ்ருதி தன்னிலும் சொல்லிற்று(சப்தம் நித்யம் அல்ல ஆனு பூர்வி நித்யம் என்றதாயிற்று)
ஏததேவ ச வேதாநாம் அபவ்ருஷேயத்வம் நித்யத்வஞ்ச -யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார விஸேஷேண தமேவ க்ரம விஸேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யமாணத்வம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -என்று பாஷ்யகாரரும் வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்களை ஸம்ஸ்கார ரூபமான ஸந்தர்ப்ப நித்யதா நிபந்தனமாக அருளிச் செய்தார் இறே
இப்படி புருஷ புத்தி மூலத்வாதி தோஷம் இல்லாமையாலே நித்தியமான வேத ராஸி ஸ்வத ஏவ ஸூத்ருட ப்ரமாணம் என்றதாயிற்று(சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்)
இப்படி ஸ அங்க உப அங்கமான ஸகல வேதங்களும் ஸர்வேஸ்வரனையே ஏக கண்டமாக ப்ரதிபாதிக்கும் அளவில் சாங்க்ய யோக பாஸூபத -பாஞ்ச ராத்ர ரூப தந்த்ர விசேஷங்கள் ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாகிற படி என் என்னில்
1-சாங்க்யம் 2-யோக 3-பஞ்ச ராத்ரம் 4-வேதா 5-பாஸூ பதம் ததா -கிமேதான் யேக நிஷ்டாநி ப்ருதங் நிஷ்டாநி வா முநே -மோஷ -350-1- என்று மஹா பாரதத்தில் நிஷ்டா நிர்ணயாத் யாயத்திலே பஞ்ச ஸித்தாந்த நிர்ணயத்திலே -ஸாங்க்யாதி பஞ்ச ஸித்தாந்தங்களும் ஏக தத்வ ப்ரதிபாதகங்களோ – ப்ருதக் தத்வ ப்ரதிபாதகங்களோ -என்று ப்ரஸ்னம் பண்ண
பஹவோ ஹி யதா மார்க்கா வி சந்தி ஏகம் மஹா புரம் -தத் ஞாநாதி ஸர்வாணி பிரவிசந்தி தமீஸ்வரம் -பாரத வசனமாக -நாரஸிம்ஹ புராணம் -ச 64-68-என்று
பல வழியும் ஒரு படை வீட்டிலே புகுருமாப் போலே ஸர்வ ஞானங்களும் ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும் என்று உத்தரம் சொல்லுகையாலே ஸர்வ ஸித்தாந்தங்களும் ஸர்வேஸ்வரனையே பிரதிபாதிக்கக் கடவது(ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு-வ்யாபனாத் தாரணாத் ஸ்வாமித்வாத் இத்யாதி புருஷோத்தமன் ஒருவனே)
அதிலே வேதமானது கர்த்ராத்ய பாவத்தாலே நிர்த் தோஷமாய்க் கொண்டு பகவத் ப்ரதி பாதனத்திலே ப்ரபல பிரமாணமாகையாலே அல்லாத நாலு ஸித்தாந்தங்களும் தன் மூலங்களாய்க் கொண்டு ப்ரமாணங்களாகக் கடவன-
அதில் சாங்க்ய -யோக -பாஸூ பாதிகள் வேத விருத்த அம்சம் ஒழிய ப்ரமாணங்களாகக் கடவன-அதாவது
1-சாங்க்யன் ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரனுடைய ஸகல இதர வ்யாவ்ருத்தமாய் வேதாந்த வேத்யமான ஸ்வரூபத்தை இசையாதே பஞ்ச விம்சதி தத்வ மாத்ரத்த்லேயே பர்யவசித்து அந்த பஞ்ச விம்சதி புருஷனை உதா ஸீனனாகவும் சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-1-
பிரதானம் புருஷன் -இரண்டையும் -செம்பருத்திப்பூ ஸ்படிக்கல் இரண்டும் அருகில் -இருக்க அசித்தின் தன்மை ஏறிட்டு –
குருடன் நொண்டி -சேர்ந்து -வழி சொல்ல நடக்க -கர்த்ருத்வம் ஒருவன் இடம் ஞாத்ருத்வம் ஒருவனிடம் -உலகம் நடக்கும் –
விவேக ஞானத்தால் மோக்ஷம்
நிரீஸ்வர சாங்க்யன் -ஸ்ரீ பாஷ்யத்தில்
கபிலர் –
தேவபூதி கடைசிப்பிள்ளை -தாயாருக்கு உபதேசம் -பக்தி ஈஸ்வரன் எல்லாம் சொல்லுவார்
சேஸ்வர சாங்க்ய மதம்
ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-
அனுமானம் -பிரதானமானது
ந -ஜகத் காரணம் அல்ல
ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
உபாதான காரணத்வம் கூடாது என்று
ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது
2-யோகி யானவன் யோக ஸாஸ்த்ரத்தில் ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம் யோக ஜன்யமாய்க் கொண்டு ப்ரதி பலநம் போலே ஓவ்பாதிகமாம் ஒழிய ஸ்வ பாவிகம் அல்ல என்று சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-3-
இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –-ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-
வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –
ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே
ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –
3- பாஸூ பதன் பிச்சையுண்ணி எம்பெருமான் என்னுமாப் போலே சாப உப ஹதனான ருத்ரனை பரமேஸ்வரனாக ப்ரமித்தான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-
இவர்கள் மூவருக்கும் இந்த வேத விருத்த அம்சங்கள் ஒழிய -1-தத்வ க்ரம உத்பத்தி கதநத்திலும் -2-யோக ஸ்வரூப ப்ரதிபாத நத்திலும் -3-யோக பிரகார உப பாத நத்திலும் -4-உபாஸ்ய உபாஸக பாவாதி ப்ரதிபாதனத்திலும் விரோதம் இல்லாமையாலே அந்த அந்த அம்சங்களில் இந்தத் தந்திரங்கள் ப்ரமாணங்களாகக் குறையில்லை
ஆனால் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும்
வாஸூ தேவாத் ஸங்கர்ஷணோ நாம ஜீவோ ஜாயதே (சங்கர்ஷணன் இடம் இருந்து பிரத்யும்ன என்னும் மனஸ் பிறக்கிறான்-என்று மேலும் சொல்லும்)-ப்ரஹ்ம ஸம்ஹிதா -என்று வேதாந்த விருத்தமான ஜீவ உத்பத்தியாதிகளைச் சொல்லுகையாலே அதிலும் தந்த்ர சாமான்யத்தாலே வேத விருத்த அம்சம் உண்டாய் இருந்ததே என்னில் -ப்ரஹ்ம ஸூத்ர -2-2-39-40- அங்கே ஜீவ அதிஷ்டாத்ரு ரூபமான ஸங்கர்ஷண வ்யூஹத்தினுடைய உத்பத்தி சொல்லுகிறது –
ஆகையாலே ஜீவ உத்பத்திக்கு ப்ரஸங்கம் இல்லாமையாலும்
இதம் மஹ உபநிஷதம் ஸர்வ வேத ஸமந்விதம் -சாந்தி பர்வ -340-111-என்று ஸகல வேத அநு கூலத்வம் இந்த பாஞ்சராத்ர வசனத்திலே ஸித்தமாகையாலும்
பகவான் தான் பர வ்யூஹ விபவாதிகளுடைய யாதாத்ம்யத்தை ஸ ப்ரகாரமாக ஸாத்விகாதிகளிலே -ஸாத்விக ஸம்ஹிதைகளிலே -அருளிச் செய்கையாலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸனமும் ப்ரமாணமாகக் கடவது(ஒன்றும் இடாமல் எல்லாம் -சகல எல்லாம் விட இதுக்கு முழுமை உண்டே) -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-41-42-
(2-2-எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்
ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்
———
ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்
இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –
ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-
வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –
அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிரமாண தர்மம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –
ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-
இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது
அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று
பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை
கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து
ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்
பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்
இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து
————–
இங்கன் அன்றிக்கே
சாங்க்யாதிகளுக்கும் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸ ப்ரமாணமாம் கொள்ளத் தேடில் ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ ப்ரசங்க இதி சேத் ந அந்நிய ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ பிரசங்காத் –ப்ரஹ்ம ஸூத்ர -2-1-1-என்கிற அதிகரணத்திலே -ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளுக்கு ப்ராமாண்யம் கொள்ளுமளவில் ஜகத்துக்கு ப்ரஹ்ம உபாதாந காரணத்வம் சொல்லுகிற மன்வாதி ஸகல ஸ்ம்ருதிகளுக்கு அநவகாசமாகிற தோஷம் வரும் என்று வேதாந்த ஸூத்ரத்திலே உப பாதிக்கையாலும்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய -யாஸ் ச காஸ் ச குத்ருஷ்டய -ஸர்வாஸ்தா நிஷ்பலா ப்ரேத்ய நமோ நிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா -மநு -12-95- என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸ்ம்ருதிகள் தமஸ் கார்யமான அஞ்ஞாந வர்த்தகைகள் ஆகையாலே நிஷ் பிரயோஜனங்களாய்க் கொண்டு ஸம்ஸார வார்த்திகைகளாம் -என்று மநு வசனம் உண்டாகையாலும் சாங்க்யாதிகளுக்கு ப்ராமாண்யம் கவாசித்தகமாய் ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்துக்கு ப்ராமாண்யம் சார்வத்ரிகம் என்றதாயிற்று
(ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1–ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-
முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –
ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –
அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்
ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்
இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –
ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-
வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து)
ஆகையால் ஸ அங்க உப ப்ரும்ஹண ஸர்வ தந்த்ர ஸஹிதமான ஸமஸ்த வேதங்களும் ஸகல விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய ஸமாப் யதிக ரஹிதமான வைபவத்தையே ஸம்யக் ப்ரதி பாதனம் பண்ணுகின்றன என்றதாயிற்று(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்)
இதி தத்துவ நிரூபணே பிரமாண நிரூபணம் நாம பிரதம அதிகாரம் ஸம் பூர்ணம்
————–
த்விதீயதிகாரம்– – ஸ்ருஷ்டி – காரணத்வம்
1-தஸ்ய திரிவித காரணத்வ நிரூபணம்
2- தஸ்ய உபாதாந காரணத்வ நிரூபணம்
3-ஸ்ருஷ்டி த்வைவித்ய கதநம்
4- சமஷ்டி ஸ்ருஷ்டி நிரூபணம்
5-அவ்யக்த நிர்ணயம்
6-மஹத் தத்துவ நிர்ணயம்
7-தத்ர ஸாத்விக புத்தி நிரூபணம்
8-தத்ர ராஜஸ புத்தி நிரூபணம்
9-தத்ர தாமஸ புத்தி நிரூபணம்
10-மஹத் தத்தவாத அகங்கார உத்பத்தி கதநம்
11-வைகாரிக அஹங்காராத் ஏகாதஸ இந்த்ரிய உத்பத்தி கதநம்
12- ஏகாதஸ இந்த்ரியாணாம் பூதாதே உத்பத்தி கத ந வசநாநாம் அந்நிய பரத்வ கதநம்
13-ஞான இந்திரிய பரிகணநா
14-கர்ம இந்திரிய பரிகணநா
15- மனஸ-ஞான கர்ம இந்த்ரிய உபய ஸஹ காரித்வ கதநம்
16-இந்த்ரியாணாம் அணுத்துவ சமர்த்தனம்
17-பூதாதேஸ் தன்மாத்ராத் யுத்ப்பத்தி கதநம்
18- பரமாத்மந பூத உத்பத்தி கதந வசநாநாம் தாத்பர்ய கதநம்
19-தன்மாத்ராதே ராகாஸாத் யுத் பத்தி க்ரம நிரூபணம்
20- பஞ்சீ கரண பிரகார கதநம்
21-அண்ட ஸ்ருஷ்டி பிரகார நிரூபணம்
22-சதுர்முக ஸ்ருஷ்டி கதநம்
———-
இப்படி வேத வேத்யமாய் -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான பரதத்வம் ஓன்று -அதுவே முமுஷுக்களுக்கு ஞாதவ்யம் -அதுக்கு ஞாபகமான லக்ஷணங்கள் ஏதென்னில்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த் யபி -ஸம் விஸந்தி – தத் விஜிஜ்ஞாஸஸ்வ -தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு -1-1-என்று(வர்ணன் பிள்ளை பிருகு -அவனுக்கு உபதேசம்)
ஜகஜ் ஜென்ம ஸ்திதி லயங்கள் வேதாந்தங்களிலே யுக்தம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்ம ஸூத்ரம் 1-1-1- என்று ப்ரஹ்ம ஞானத்தை விதித்த வேதாந்த ஸூத்ரம் அந்த ப்ரஹ்மதுக்கு லக்ஷணமாக –
ஜந்மாத் யஸ்ய -1-1-2- என்கிற ஸூத்ரத்தாலே ஜகத்தினுடைய ஜன்ம ஸ்தேம லயங்களை ஸூசிப்பித்ததே இறே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தின் பக்கல் உண்டான ஜென்ம ஸ்தேம லயங்களாவன உத்பத்தி ஸ்திதி விநாஸங்கள்
அதிலே ப்ரஹ்மத்துக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வமாவது
கடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான காரணத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ -என்னில் -அப்படி அன்று –
லோகாதி கார்ய உத்பத்தியில்
உபாதாநம் என்றும்
நிமித்தம் என்றும்
ஸஹ காரி என்றும்
காரணங்கள் மூன்று
அதில் உபாதாந காரணமாவது -கார்ய ஸ்வரூபத்திலே அந்தர் பவிக்கும் படி யாதொரு வஸ்துவினுடைய ஸ்வரூபத்தை உபாதாநம் பண்ணி (பரிணாமத்தை உண்டாக்கி)காரியத்தை உத்பாதிக்கிறான் -அது உபாதாந காரணம் -அதாவது
கடமான கார்யத்திலே ம்ருத்தான காரண ரூபத்தை ஸ்வீ கரித்து அத்தை உண்டாக்கினாப் போலே
நிமித்த காரணமாவது -அந்த உபாதாந ஸ்வரூபமான ம்ருத்தை குலாலன் விகரிக்குமா போலே கார்யா காரேண விகரிக்குமது
ஸஹ காரி காரணமாவது -குலாலன் ம்ருத்தாலே கடத்தை உத்பாதிக்குமளவில் தண்ட சக்ராதிகளைப் போலே கார்ய உத்பத்திக்கு உபகரணமாமவை
இவை மூன்றும் லோகத்தில் ஒன்றினுடைய சக்தி ஒன்றுக்கு இல்லை -(இயத்தா ராஹித்யம்)
ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாம் அளவில் இவை மூன்றும் தானேயாய் இருக்கும் என்று ஸ்ருதி சொல்லிற்று
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்-பரிணாமம் அடையலாம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்–பஹு ஸ்யாம் ப்ரஜாயேய
ஞான சக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி காரணம்-வேர் முதல் வித்தாய்
அதாவது -கிம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் -யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு -( நிஷ்ட தஷு-என்கிற இடத்தில் (ஆற்றல் உடன் படைக்கப்பட்டவை –)பஹு வசனம் விவஷிதமன்று -ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் திவஞ்ச ப்ருதி வீஞ்ச -என்று த்யாவா ப்ருத்வியாதிகளுக்கு ஏக கர்த்ருகத்வ ஸ்ரவணத்தாலே கர்த்ரு பஹுத்வம் ஸம்பவியாமையால் இப்படியே ஸ்ருத ப்ரகாஸி காச்சார்யர் அருளிச் செய்தது -1-4-25-)
மநீஷிணோ மனஸா ப்ருச்ச தேது தத் யதத் யுதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் அஷ் -2-8-7-8–என்று
லோக த்ருஷ்டி மர்யாதையாலே நிமித்த உபாதாநாதிகளை பின்னமாக பிரதிபத்தி பண்ணி யாதொரு வஸ்து புவனங்களைத் தரித்துக் கொண்டு நின்று நிமித்தத்தைச் சொல்லி
யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு -என்று யாதொன்றாலே த்யாவா ப்ருத்விகளை வகுத்தார்கள் -அந்த வனம் எதுவென்றும் அந்த வ்ருக்ஷம் எதென்றும் உபாதானத்தையும் ததிதர உபகரணத்தையும் பிரித்து ப்ரஸ்னம் பண்ணி
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு மநீஷிணோ மனஸா விப்ரவீ மிவ –ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் -2-8-9-8-என்று
அதிஷ்டிக்கும் நிமித்த காரணமும் உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று த்ரிவித காரணமும் ப்ரஹ்மமாகச் சொல்லிற்று-
(சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25–வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே-நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-)
(கிம்ஸ்வித் -இத்யாதி –
அத்ர ஸாயநாசார்ய பாஷ்யம் -லோகே ஹி க்ருஹம் சிகீர்ஷு புமான் வனம் கத்வா –தத்ர கஞ்சித் வ்ருக்ஷம் சித்வா ததீயை காஷ்டை -க்ருஹம் நிர்மிமீதே –தத் த்ருஷ்டாந்தேன அத்ராபி (இன்புறும் இவ்விளையாட்டுடை விமலன் -தன்னை தனது பயனுக்காக உருவாக்கினான்)-யத யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதிவீ -த்யு லோக பூ லோகவ் நிஷ்டதஷு- தக்ஷணேந நிர்மிதார -நிர்மிதவந்த தாத்ருசம் வனம் கிம்ஸ்வித் பவேத் கஸ் ச தாத்ருஸ ஸ வ்ருக்ஷ ஆஸீத்- ஹே மநீஷிண -புத்தி மந்த -மனஸா -ஸ்வ கீயேந விசார்ய- ததித மரத்த த்வயம் ஆசார்ய ஸமீபே ப்ருச்சத மிஞ்ச -யத் காரண பூதம் வஸ்து புவநாநி -ஸர்வாந் லோகான் ஸ்வாத்மநி தாராயன் அத்யதிஷ்டத் -நியமன கரோத் -ததிது ததபி ப்ருச்சத யதுக்தம் மநீஷிணாம் ப்ரஸ்ன த்ரயம் (காடு எது வனம் எது)தஸ்ய ஆச்சார்ய உத்தரம் ப்ரூதே -யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதி வ்யவ் நிர்மிமீதே (தாங்குவது யார்)தத் வந ஸ்தாநீயம் வ்ருக்ஷ ஸ்தா நீயம் ப்ரஹ்ம ஏவ -தஸ்ய ஸர்வ சக்தித்வாத் -யஸ்ய உத்பாத் யஸ்ய சா சாமக்ர் யபேஷிதா ஸா ஸர்வா தஸ்மிந் வித்யதே ததேவ ப்ரஹ்ம ஸர்வாணி புவநாநி அஸ்மின் தாரயதி நியமயதி ச ஹே மநீஷிண ஆசார்யோஹம் மனஸா நிச்சித வ -யுஷ்மத்ப்யம் விப்ரவீமி விவிதம் உத்தரம் ப்ரவீமி இதி )
(அபூர்வ அர்த்த ப்ரதிபாதனமே வேதம் -யதார்த்த கதனம் வேதம் -அனைத்துக்குள்ளும் ப்ரஹ்மம் -அனைத்தையும் ஸ்ருஷ்டித்து தரித்து நியமித்து -ஸ்வாமித்வம் ப்ரஹ்மமே -வேதம் கொண்டே அறிகிறோம்-ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் -ஒன்றை அறிந்தால் அனைத்துமே அறிந்ததாகுமே-ஒன்றை அறிந்தால் -ப்ரஹ்மத்தை அறிந்தால் -அது சத்தாகவே இருந்தது -ஒன்றாகவே இருந்தது -இரண்டாவது அற்றதாகவே இருந்தது-ஸஹ காரி அற்றதாக இருந்தது -ஒன்றாகவே இருந்ததுஉபாதானமும் ப்ரஹ்மமே -இதன் காரியமே ஸகலமும்
அசத்தைக் காரணமாக் கொண்டது ஜகத்து இல்லையே-பஞ்ச ஸ்தவம் -சத்- -ஆத்மா-ஞானமுடையது -ப்ரஹ்மம் -பெரியது -யவன் அவன் -விவரித்து -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-தத்வம் ஆத்மா ஜ்யோதிஸ் -பரம் ஒவ்வொன்றுக்கும் நாராயணனே )
இந்த அர்த்தம் -ஸதேவ ஸோம்யேத மக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் –6-2-1- என்று காரண வாக்யத்தில் ஜகத்து ஏகமாகக் கொண்டு லயிக்கும்படி உபாதான ஸச் ஸப்த வாஸ்ய வஸ்து -அத்விதீயம் என்று சொல்லுகையாலே அதிஷ்டாந்தர்த்தைக் கழித்து நிமித்த உபாதாநாதிகள் எல்லாம் ஏக பூத வஸ்து என்றும் சொல்லப்பட்டது
அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதாநத்வ ரூப உபய லிங்க விஸிஷ்ட நித்ய பரி ஸூத்த ஸ்வ பாவ பர ப்ரஹ்மம்
ஜடத்வ துக்கித்வ யுக்தமான சித் அசித் மக பிரபஞ்சத்துக்கு உபாதாநமாம் படி எங்கனே என்னில்
நிர்தோஷ ப்ரமாணமான வேதாந்த பாகத்தில் காரண வாக்யங்களாலே சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய உபாதானாதி பாவத்துக்கு அந்யதா ஸித்தி இல்லாமையாலே ப்ரமாண அனுக்ராஹகமான உபபத்தி விசேஷங்களாலே இவ் வர்த்தத்தை வேதாந்த வித்துக்கள் நிஷ்கர்ஷியா நின்றார்கள் –
எங்கனே என்னில்
ப்ருதிவ் யப்ஸூ லீயதே -ஸூபா உபநிஷத் -என்று துடங்கி தத்துவ க்ரமத்திலே லயத்தைச் சொல்லி – மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் (விபக்த)தமஸ் லீயதே -தமஸ் பரே தேவ ஏகீ பவதி -என்று
மஹத் தத்துவத்துக்கு லய ஸ்தானமான அவ்யக்தம் தன்னுடைய ஸூஷ்ம தஸா ரூபமான அக்ஷர தமோ அவஸ்தமாய்க் கொண்டு பர தேவதை பக்கலிலே ஏகீ
பவிக்கும் என்கையாலே
(அவ்யக்தம் அக்ஷரம் விபக்த தமஸ் அவிபக்த தமஸ் -நான்கும்-பிரகிருதியின் நான்கு அவஸ்தைகள்-விதை-தண்ணீர் பருத்து வெடித்து –முளை விட்டு மேல் -வருவது போல்-மெழுகு தங்கத் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் ஜீவ சமஷ்டிகள் ஒட்டிக்கொண்டு இருக்கும் பிரகிருதி அக்ஷரம்–குணங்கள் சமமாக இருப்பது அவ்யக்தம் –ஸூஷ்ம பரிணாமங்கள் இவை -ஸ்தூல பரிணாமங்கள் மேல் மஹான்-குண வைஷம்யம் மஹானில் -அஹங்காரம் -ஸூஷ்மம் -கண்ணுக்குப் புலப்பாடாதது -விபுவாக இருந்தாலும்
ப்ரஹ்மம் பிரகிருதி – -காலம் இவை அனைத்துமே விபு ஸூஷ்மம்
ஏகீ பவதி ஒன்றாக -ஒன்றி விடும் -ஒன்றாம் என்னும் இவ் வல்லல் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-ஜீவ த்வாரா அதிஷ்டானம் -நேராக அதிஷ்டானம் இரண்டு வகை அசித்க்குள் உண்டே-)
சித் அதிஷ்டித்தமான அவ்யக்தினுடைய ஸூஷ்ம அவஸ்தை அக்ஷரமாய் -அக்ஷரத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையை தமஸ்ஸாகாச் சொல்லுகையாலே புஷபத்தினுடைய முகுள கோரகத்ய வஸ்தைகள் போலே தத்வாந்தரம் இன்றியிலே ஒன்றினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே மஹாதாதிகளோ பாதி நாம ரூப விபாகத்துக்கு அர்ஹமில்லாத ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை தமஸ் ஸப்தத்தாலே சொல்லி அதுக்கு பரமாத்மாவின் பக்கல் ஏக பாவம் சொல்லுகையாலே காரண பூத பர ப்ரஹ்மதுக்கு ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டத்வம் அவர்ஜனீயம்
ஆகையிறே –
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தாவ்யக்த ஸ்வ ரூபிணீ -புருஷஸ் சாப்யு பாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39-என்று
சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பரமாத்மாவின் பக்கலிலே லயத்தைச் சொல்லிற்று –
இப்படி ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மத்தை இதிலே ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -சாந்தோ -6-2-1- என்று முதலான வாக்கியங்கள் ஜகத் காரணமாகச் சொல்லுகிறன
இப்படி இவைகளுக்கு லய ஸ்தானமாகையாலே ப்ரஹ்மம் ஜகத் உபாதான காரணம் என்றதாயிற்று
இந்த ப்ரஹ்மம் ஜகத் உபாதாநமாம் இடத்து
நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் -ஸ்வே -6-18-
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்த -1-1-என்று
விகாராதி ரஹிதமாக ஸ்ருதி ஸித்தமான ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதோ என்னில்
ஸூஷ்ம சித் அசித் மிஸ்ரமான பர ப்ரஹ்மம் ஸ்தூல சித் அசித் மிஸ்ரமான ஜகதாகாரத்தை உடைத்தாமளவில் ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதபடி ஜகத்துக்கு உபாதாநமாய் பரிணமிக்கக் குறையில்லை-
அதாவது –
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய அசித் அம்சத்திலே ஸ்வரூப பரிணாமம்
சித் அம்சத்திலே ஞானமாகிற ஸ்வ பாவத்திலே சங்கோச விகாஸ ரூப பரிணாமமுமாய் -சித் அம்சத்துக்கு ஸ்வரூப பரிணாமம் இன்றியிலே ஒழிகிறவோ பாதி –
உபய நியந்தாவான ப்ரஹ்ம அம்சத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டிலும் பரிணாமம் இன்றியிலே பஹு ஸ்யாம் -சாந்தோ -6-2-3–என்கிற தாதாத்மிக ஸங்கல்ப ரூப பரிணாமமே யாகையாலே சித் அசித்துக்களோ பாதி ஸ்வரூப விகாரம் ஸ்வ பாவ விகாஸ சங்கோசாதிகளாகிற தோஷ ரூப பரிணாமம் இன்றியே கர்த்ருத்வ லக்ஷணாதி ஸித்தமான ஸத்ய சங்கல்பாதிகளும் நியந்த்ருத்வ ஸித்தமான ஞான சக்த்யாதி குண உத்கர்ஷமுமாகிற வைலக்ஷண்ய அதிசயம் பிரகாசிகையாலே விகாரத்துக்கும் கல்யாண குண யோகத்துக்கும் ஒரு குறை இல்லை
இப்படி உபாதானமான பர ப்ரஹ்மம் தானே தன்னுடைய ஸத்ய சங்கல்பத்வாதிகளாலும் ஞான சக்த்யாதி குண யோகத்தாலும் ஸ்வ சரீர பூத சித் அசித்துக்களை அதிஷ்டித்து கார்ய ரூபமான அவஸ்தாந்தரா பத்தியைப் பண்ணுவிக்கையாலே நிமித்த காரணமாய் இருக்கும்
தன்னுடைய ஸர்வ ஸக்தி யோகத்தாலே இதர நிரபேஷமாக காரியத்தை உத்பாதிக்கையாலே ஸஹ கார்யாந்தர ஸா பேஷமுமாய் இராது
ஆகையால் ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மம் என்றதாயிற்று
இப்படி ப்ரஹ்மாத்மகமான ஸூஷ்ம சித் அசித்துக்கள் ஸ்தூலமான ஜகதாகாரமாய்க் கொண்டு ஸ்ருஷ்டமாமளவில்
சமஷ்டி என்றும்
வ்யஷ்டி என்றும்
ஸ்ருஷ்டி த்விவிதமாய் இருக்கும்
அதில் சமஷ்டியாவது -பிரம உத்பத்தி பர்யந்தமான ஆத்ய ஸ்ருஷ்டி
வ்யஷ்டி ஸ்ருஷ்டி யாவது – அண்டாந்தர வர்த்தியான லோக லௌகிக ஸ்ருஷ்டி-
அதில் சமஷ்டி ஸ்ருஷ்டியில் -ஆஸீதி தம் தமோ பூதம் அப்ரஜ்ஞாதம் அலக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்த மிவ ஸர்வத-மநு -1-5- என்று ஞான சூன்யமாய் விபாக லக்ஷண ரஹிதமாய் -விசார யோக்யம் இன்றியிலே விசேஷ ஞான விஷயம் இல்லாதபடி ஸூப்தமாய்க் கொண்டு அவிசேஷிதமாய் தமோ வஸ்தமாய்க் கொண்டு தன் பக்கலிலே ஏகீ பவித்த இந்த ஜகத்தை –
ப்ராது ராஸீத் தமோ நுத -மநு -1-6- என்று ஸ்வரூபாத் விபக்தமாம்படி ப்ரேரித்து ஸ்ருஷ்டி யுன்முகனாய் தமஸ்ஸை அக்ஷரமாக்கி -அக்ஷரத்தை அவ்யக்தமாக்கும்
இவ் வக்ஷர தமஸ் ஸுக்கள் அவ்யக்தத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே தத்வாந்தரம் அல்ல என்று முன்பே சொல்லப்பட்டது-
இந்த அவ்யக்த்தமாவது -த்ரி குணம் தஜ் ஜகத் யோநி அநாதி பிர்பவாப்யயம் -ஸ்ரீ விஷ்ணு புராண -2-21-1- என்கிறபடியே
ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயத்தை ஸ்வ பாவமாக உடைத்தாய் மஹதாதி சமஷ்டி வ்யஷ்டி ரூப ஜகத்துக்குக் காரணமாய் உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்தியமாய்
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –கீதா -7-13- என்கிறபடியே பகவானுக்கு லீலோ பகரணமாய் -ஸ்வ ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு துரத்யயமாய் பகவானுக்கு ப்ரகார தயா சேஷமாய் -சதத பரிணாமியாய் இருக்கும்
ஆக விறே -விகார ஜநநீம் அஜ்ஞாம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம் -மாந்த்ரீக உபநிஷத் -3–என்றும்(அவ்யக்தம் மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் ஆகிய அஷ்ட)அசேதநா பரார்த்தா ச நித்யா சதத விக்ரியா -பரம ஸம்ஹிதா -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் இதினுடைய ஸ்வபாவங்களை பஹு ஸ ப்ரதிபாதித்தது-
இதனுடைய விகாரமாவது –
ஸூஷ்ம ரூபமாய் ஸ்தூல ரூபமாய் இருந்துள்ள த்வி விதமான ஸ்வரூப பரிணாமம்
அதில் ஸூஷ்ம பரிணாமம் நாம ரூப விபாக நிர்தேச அநர்ஹமாய் இருக்கும்
ஸ்தூல பரிணாமம் மஹதாதியான கார்யமாகையாலே நாம ரூப விபாக நிர்தேச அர்ஹமாய் இருக்கும்
இந்த மஹதாதி பரிணாமியாய் ஜகத் உத்பத்திக்கு உபயுக்தமாய் அறுவது ஸூஷ்ம பரிணாமம்
இந்த அவ்யக்தத்துக்கு ஸ்வரூப ப்ரயுக்தமான ஆகார விசேஷம் இத்தனை இறே
பரிணாமமாவது ஸூஷ்ம தசையோடு ஸ்தூல தசையோடு வாசியற உண்டான பூர்வ அவஸ்தா பரித்யாக பூர்வகமான அவஸ்தாந்தர ப்ராப்தி
அது ஸ்தூல தசையிலே வந்தவாறே கார்யம் என்று சொல்லப்படும்
அவஸ்தாந்தரா பத்தி ரேவ ஹி கார்யதா ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-என்று இறே ஸ்ரீ பாஷ்யகார வசனம்
அந்த அவ்யக்தம் குண ஸாம்யம் அநுத் ரிக்தம் அந்யூ நஞ்ச மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-34- என்று காரண தசையிலே ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயங்களாகிற ஸ்வ பாவங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று ந்யூநாதி ரேகங்கள் உண்டாதல் -க்ருத்ஸ் உத்ரேகம் உண்டாதல் செய்யாதே சம ஸ்வ பாவமாய் இருக்கும் –
குண ஸாம்யாத் ததஸ் தஸ்மாத் ஷேத்ரஞ்ஞாதிஷ்டி தான்மு நே -குண வ்யஞ்ஜன ஸம் பூதி சர்க்க காலே த்விஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -1-2-33- என்று
இப்படி குண ஸாம்யமுடைத்தாய் ஷேத்ரஞ்ஞானான பத்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும் வ்யக்த குணோந்மேஷ ஹேதுவாகையாலே குண வ்யஞ்ஜனம் என்று பேரான மஹத் தத்வம் உத்பன்னமாம்
அந்த மஹத் தத்வம் -ஸாத்விகோ ராஜஸஸ் ச ஏவ தாமஸஸ் ச த்ரிதா மஹாந் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-2- என்று ப்ரகாஸ ப்ரவ்ருத்தி மோஹோன்நேயமான சத்வ ரஜஸ் தமோ ரூப குணான்வயத்தாலே
சாத்த்விகம் (ப்ரகாஸ)ராஜஸம் (ப்ரவ்ருத்தி)தாமஸம் (மோஹ)என்று மூன்று வகையாய் இருக்கும் –
1-இதில் ஸாத்விக புத்தியாவது -ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்யாகார்யே பயாபயே –பந்த மோக்ஷஞ்ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ —கீதா 18-30- என்று
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளினுடையவும் கார்யா கார்யங்களினுடையவும் பயாபயங்களினுடையவும் பந்த மோஷங்களினுடையவும் யதாவத் வ்யவசாயம் -என்றும்
2- ராஜஸ புத்தியாவது -யயா தர்ம மதர்மஞ்ச கார்யஞ்சா கார்யமேவ ச -அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ –18-31-என்று
தர்மாதர்மங்களையும் கார்யா கார்யங்களையும் அந்யதாவாக அறுதியிடுகை என்றும்
3-தாமஸ புத்தியாவது -அதர்மம் தர்மமிதி யா மன்யதே தமஸா வ்ருதா ஸர்வார்த்தான் விபரீதாம்ஸ் ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ -18-32–என்று
அதர்மத்தைத் தர்மமாகவும் தர்மத்தை அதர்மமாகவும் -இப்படி ஸர்வார்த்தங்க ளையும் விபரீதங்களாகவும் நிஸ்ஸயிக்கை என்றும் கீதாச்சார்யன் கீத உபநிஷத்திலே புத்தி த்ரை வித்யத்தை அருளிச் செய்தான் இறே
இப்படி புத்தி லக்ஷணமான மஹானை ஸ்வ காரணமான ப்ரதான தத்த்வம் ஆவரிக்கும் -அங்குர உத்பாதகமான பீஜத்தை அதனுடைய த்வக்கு -தோல் -ஆவரித்து இருக்குமா போலே -அவ்யக்தத்தாலே ஆவ்ருத்தமான மஹத் தத்துவத்தில் நின்றும் அபிமான கார்ய உன்னேயமான அஹங்காரம் உத்பன்னமாம் –
இவ் வஹங்காரம் அபிமான ஹேதுவாகையாவது -தேஹாத்ம அபிமாநாதிகளான அதஸ் மிம்ஸ் தத் புத்தியை ஜநிப்பிக்கை
இவ் வஹங்காரம் தான் வைகாரிகஸ் தேஜஸஸ் ச பூதாதிஸ் சைவ தாமஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-35- என்று ஸாத்விக ராஜஸ தாமஸ ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும்
தைஜஸம் என்றும்
பூதாதி என்றும்
மூன்று வகையாய் இருக்கும்
ஏவம் விதமான அஹங்காரத்தை ஸ்வ காரணமான மஹத் தத்வம் ஆவரித்து இருக்கும்
குண க்ருதமான த்ரை வித்யத்தை யுடைத்தான மஹத் தத்துவத்தால் உண்டான ஆவரணம் இறே அஹங்கார த்ரை வித்யத்துக்கு ஹேது
இதில் வைகாரிகமாவது -ஸாத்விக -அஹங்காரமாகையாலே இதில் நின்றும் சத்த்வ கார்யமான லகுத்தவ ப்ரகாஸகாத்வங்களை உடைத்தான இந்த்ரியங்கள் உத்பன்னமாம்
ஸாத்விக அஹங்காரத்தில் நின்றும் –இத்யாதி கபாட –
இந்த்ரியங்களை -தைஜஸாநி இந்த்ரியாண்யாஹு தேவா வைகாரிகா தச –ஏகாதஸம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-49- என்று வைகாரிக -தேவாதிஷ்டிதங்களாகையாலே தேவ ஸப்த இந்த்ரி யங்கள் பதினொன்றும் தைஜஸமான ராஜஸ அஹங்கார கார்யமோ -வைகாரிகமான ஸாத்விக அஹங்கார கார்யமோ என்று மத பேதத்தாலே விகல்பித்து வைகாரிக கார்யங்கள் என்று ஸ்வ ஸித்தாந்தத்தாலே ஸ்ரீ பராசர பகவான் நிஸ்ஸயிக்கையாலே இந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்கார கார்யங்களாகையாலே நையாயிக மர்யாதையாலே பூத விசேஷ பரிணாமங்களும் அல்ல என்னும் இடம் ஸம் பிரதிபன்னம்
இவ் விந்த்ரியங்களுக்கு இதிஹாஸத்திலே பூத சர்க்கம் சொல்லுகிற இடம் -பாரதம் சாந்தி -291-10-11-பூதங்களால் உண்டான ஆப்யாயந மாத்ரத்தைப் பற்ற இந்த்ரியங்கள் தான் ஞான இந்த்ரியங்கள் என்றும் கர்ம இந்த்ரியங்கள் என்றும் இரண்டு
1- அதில் ஞான இந்த்ரியங்களாவன -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்கள் ஆகிற விஷய பஞ்சகத்தையும் ப்ரதி நியாமாய்க் கொண்டு க்ரஹிக்கிற ஸ்ரோத்ர -த்வக் -சஷு ர் -ஜிஹ்வா -கிராணங்கள் என்கிற ஐந்தும்
2-கர்ம இந்த்ரியங்களாவன -வசன -தான -கமன -மூத்ர -புரீஷ நிஸ் சரண ஹேதுவான வாக் -பாணி -பாத -பாயூ பஸ்தங்கள் என்கிற ஐந்தும் -ஸப்தாதி பஞ்சகத்தையம் அடைவே ஒட்டி யிருக்கும் –
ஸ்ரோத்ர க்ராஹ்யமான ஸப்த விஷயமாயும் -த்வக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும் -சஷுர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருதஹி ஹேதுவாயும் -ரஸநா விஷய ரஸாஸ்ரயமான ஜலத்தினுடைய நிஸ் சரண ஹேதுவாயும் -க்ராண விஷய கந்த ஆஸ்ரய பிருதிவி யம்சமான அந்நாதிகளில் ருஜீஷோத்ஸர்ஜ்ந ஹேதுவாயும் இருக்கும்
பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-
பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்
மனஸ் ஸூ உபய ஸஹ காரியாகையாலே ஞான இந்த்ரியமுமாய் கர்ம இந்த்ரியமுமாயும் இருக்கும் -உபயாத் மகம் மந -என்று இறே சொல்லுவது –
இந்திரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வ்யஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்
தேஷாம் து அவயவான் ஸூஷ்மான் ஷண்ணாம் அப்யமிதவ் ஜஸாம் -சன்னிவேஸ்ய ஆத்ம மாத்ரா ஸூ ஸர்வ பூதாநி நிர்மமே –மநு -1-16-என்று அணுக்களாகையாலே ஸூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்ம மாத்ரைகளிலே (தன் மாத்ரைகளிலே)பிரவேசிப்பித்து ஸர்வ பூதங்களையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டித்தான் என்று மனு வசனம் உண்டாகையாலே –
இதில் ஸூஷ்மான் -என்கையாலே -அணவஸ் ச -ப்ரஹ்ம ஸூத் -2-4-6- என்கிற ஸூத்ர மர்யாதையாலே இந்த்ரியங்கள் அணு என்றும்
அவயவான் -என்கையாலே இந்த்ரியங்கள் தோறும் வ்யக்தி பாஹுள்யம் உண்டு என்றும்
ஆத்ம மாத்ரைகளிலே கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத் ஸம்ஹாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத் க்ராம தீஸ்வர –க்ருஹீத் வைதாநி ஸம்யாதி வாயுர் கந்தாநி வாசயாத்–கீதை -15-8- என்கிறபடியே சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போதும் இந்த்ரியங்களைக் கிரஹித்து கொண்டு போம் என்று தோற்றுகிறது
ஷண்ணாம் -என்றும் மனஷ் ஷஷ்டாநி என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை -இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே (ருசி வாசனைகளை இவையே கொண்டு செல்லும்)
(ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6--இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –என்று பூர்வபக்ஷம்–அத்தை நிரசிக்கிறார்-அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –)
இனி பூதாதி ஸப்த வாஸ்யமான தாமஸ அஹங்காரத்தனின்றும் தன் மாத்ரா பஞ்சகமும் -தத் விசேஷமான ஆகாசாதி பூதங்களும் உத்பன்னமாம்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -ஆகாஸாத் வாயுர் -வாயோர் அக்னி -அக்னேர் ஆப அத்ப்ய பிருதிவீ -தைத்த ஆனந்த -1-2- என்று
பரமாத்மாவின் பக்கல் நின்றும் ஆகாசாதி பூதங்கள் க்ரமேண உத்பன்னமாம் என்று ஸ்ருதி சொல்லா நிற்க -தாமஸ அஹங்காரத்தினின்றும் பஞ்ச தன்மாத்திரைகளும் பூதங்களும் உத்பன்னலாம் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டவ் ப்ரக்ருதய ஷோடஸ விகாரா -என்று அவ்யக்த மஹத் அஹங்காரங்களும் தன் மாத்ராதி பஞ்சகமும் காரணமாகவும் இந்த்ரியங்கள் பதினொன்றும் பூத பஞ்சகங்களும் கார்யங்களாகவும் ஸ்ருதி சொல்லுகையாலும்
மூல ப்ரக்ருதிர் அவி க்ருதிர் மஹதாத்யா ப்ரக்ருதி விக்ருதயஸ் ஸப்த -ஷோடஸ கஸ் ச விகாரோ ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ -சாங்க்ய கௌமு -3-என்று சாங்க்யன் தத்வ விபாகம் சொல்லுகிற இடத்தில் மூல ப்ரக்ருதி ஒன்றின் கார்யாமன்றியிலே தான் எல்லாவற்றுக்கும் காரணமாய் இருக்கையாலே ப்ரக்ருதி என்றும் மஹதாதி சப்தகமும் ப்ரக்ருதி காரியமாய் ஒன்றுக்கு ஓன்று காரணமாயும் கார்யமாயும் உண்டாய் இருக்கையாலே ப்ரக்ருதி விக்ருதிகளாய் இருக்கும் என்றும்
புருஷன் ஒன்றுக்கு காரணமாய் இருத்தல் காரியமாய் இருத்தல் செய்யாமையாலே ப்ரக்ருதியும் அல்லன் விக்ருதியும் அல்லன் என்று சொல்லுகையாலும் இங்கு தன்மாத்ர உத்பத்தி ஒழிய பூத உத்பத்தி கூடாமையாலும் பூதங்களுக்கு தன் மாத்ரா பூர்வகத்வமும் அவற்றுக்கு அஹங்கார கார்யத்வமும் கொள்ள வேணும் இறே
ஆனால் பரமாத்மாவின் பக்கல் நின்றும் பூதங்கள் உத்பன்னமாம் என்று சொல்லுகிற ஸ்ருதிக்கு தாத்பர்யம் என் என்னில் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமாய் ஸச் ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே ஸகல ஜகத்துக்கும் உபாதானமாகையாலே ப்ரக்ருத்யாதி தத் தத் அவஸ்தா வஸ்திதனான பரமாத்மாவின் பக்கல் நின்றும் தன் மாத்ரா ஸஹிதமான பூத உத்பத்தியைச் சொல்லுகையிலே ஸ்ருதிக்கு தாத்பர்யமாகக் கடவது-
ஆகை யிறே -ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி -சாந்தோ -6-2-3- என்று சாந்தோக்யத்திலே காரண வஸ்துவினுடைய ஈக்ஷண அந்வயத்தைச் சொல்லுகிற இடத்தில் -தத் தேஜஸ் ஐக்ஷத -சாந்தோக் -6-2-2-4- என்றும் தா ஆப ஐஷந்த -6-3-2- என்றும் ததன்நமைக்ஷத -என்றும் தேஜோ பன்னங்களான பூதங்களுக்கு (தேஜஸ் அப்பு அன்னம்)ஈஷண அந்வயம் சொல்லிற்று -அநு ப்ரவேஸம் அடியாக தத் தச் சரீர விஸிஷ்டனான பரமாத்ம அந்வய முகத்தாலே இறே -அல்லது அசேதனங்களான இவற்றுக்கு ஸங்கல்ப ரூப ஞானம் ஸம் பாவிதம் அல்ல -ஆகையிறே
ஹந்தாஹமி மாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று இந்த அசித் தத்வங்களினுடைய நாம ரூப ஸித்தி அநு ப்ரவேஸ நிபந்தந மேயாகச் சொல்லிற்று
இங்குச் சொன்ன தேஜோ பன்ன மாத்ரங்கள் ஸ்ருத் யந்திரத்தில் சொன்ன ஆகாஸ வாயுக்களுக்கும் அவ் யக்த மஹத் அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்
தச குணித உத்தரம் ஆவரண ஸப்தகம் -ஒன்றுக்கு ஓன்று தச மடங்கு -ஏழு ஆவரணங்கள் -ஸப்த ஆவரணங்கள்-இமையோர் வாழும் தனி முட்டை -ஷீராப்தி ஆறாவது –
ஏவம் பூதமான தாமஸ அஹங்காரத்தின் நின்றும் ஆகாசத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையான ஸப்த தன் மாத்ரை பிறக்கும்
தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தன் மாத்ரம் தேந தன் மாத்ரதா ஸ்ம்ருதா –தன் மாத்ராண் யவிசேஷாணி அவிசேஷாஸ் ததோ ஹி தே ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாஸ் சா விஸேஷிண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-84-85- என்று அவ்வோ பூத விசேஷங்களினுடைய அவ்யக்தா விசேஷ குணோந் மேஷமான ஸூஷ்ம ஆகாஸத்துக்கு தன் மாத்ரம் என்று பெயர் –
தன் மாத்ராண் ய விசேஷாணி என்று இவற்றுக்கு ஸ்தூல அவஸ்தா பூதங்களான பூதங்களைப் போலே சாந்தத்வாதி விசேஷம் தோற்றாமையாலே இவற்றை அவிசேஷங்கள் என்று சொல்லக் கடவது
இந்த ஸப்த தன் மாத்திரத்தில் நின்றும் இதினுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த ஸப்த குணகமான ஆகாஸம் உத்பன்னமாம் -இந்த ஸப்த தன்மாத்ரையும் ஆகாஸத்தையும் பூதாதியான தாமஸ அஹங்காரம் ஆவரிக்கும் -இப்படி தாமஸ அஹங்கார ஆவ்ருதமான ஸ்தூல ஆகாஸ ஸஹ க்ருதமாய்க் கொண்டு விக்ருதமான ஸப்த தன் மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை உத்பன்னமாம் -இதில் நின்றும் ஸ்பர்ச குணமான வாயுவானது பிறக்கும் -இந்த ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவையும் ஸ்வ காரணமான ஸப்த தன்மாத்திரை ஆவரிக்கும் -ஸப்த தன் மாத்ராத்தாலே ஆவ்ருதமான வாயு ஸஹ க்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தன் மாத்திரத்தில் நின்றும் ரூப தன் மாத்ரம் உத்பன்னமாம் -இதில் நின்றும் ரூப குணமான தேஜஸ்ஸூ பிறக்கும் –வாயோர் அக்னி -தைத்த -1-2- என்று தேஜோ விசேஷத்தை ஸ்ருதி சொல்லிற்றே யாகிலும் தேஜஸ் ஸாமான்யத்துக்கும் உப லக்ஷணமாகவே கடவது -இந்த ரூப தன் மாத்ரையும் தேஜஸ்ஸையும் ஸ்வ காரணமான ஸ்பர்ச தன் மாத்திரை ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் தேஜஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரூப தன் மாத்ரையில் நின்றும் ரஸ தன் மாத்ரை பிறக்கும் -அதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் -இந்த ரஸ தன் மாத்ரையும் ஜலத்தையும் ஸ்வ காரணமான ரூப தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் அம்பஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரஸ தன் மாத்திரத்தில் நின்றும் கந்த தன் மாத்ரம் உத்பன்னமாம் -அதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வி பிறக்கும் -அந்த கந்த தன் மாத்ரையும் ப்ருதிவியையும் ஸ்வ காரணமான ரஸ தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் –
இப்படி உத்தர உத்தர தன் மாத்திரைகளுக்கு பூர்வ பூர்வ தன் மாத்ர ஆவ்ருதத்வமும் பூர்வ பூர்வ பூத ஸஹ காரத்வமும் சொல்லுகிற இது
ஆத்யாத் யஸ்ய குணாநேதான் ஆப்நோதி ச பரஸ்பர -மநு -1-20- என்று உத்தர உத்தர பூத குணங்களிலும் பூர்வ பூர்வ பூத குணங்கள் அநு வர்த்திக்கைக்காக
ஆகையால் ஆகாஸத்துக்கு ஸப்தம் ஒன்றுமே குணமாய்
வாயுவுக்கு ஸப்த ஸ்பர்சங்கள் இரண்டும் குணமாய்
தேஜஸ் ஸுக்கு ஸப்த ஸ்பர்ச ரூபங்கள் மூன்றும் குணமாய்
ஜலத்துக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்கும் குணமாய்
ப்ருதிவிக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ காந்தங்கள் ஐந்தும் குணமாய்ச் சொல்லப்பட்டது ஆய்த்து
ஆகாஸம் ஸப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் சாமாவிசத் -ரூபம் ததைவ விசத ஸப்த ஸ்பர்ச குணா வுபவ் –ஸப்த ஸ்பர்சஞ்ச ரூபஞ்ச ரஸ மாத்ரம் சாமாவிசத் தஸ்மாச் சதுர் குணாஹ் யாபோ -விசேஷாஸ் சேந்த்ரிய க்ரஹா -விஜ்ஜே யாஸ்து ரஸாத் மிகா –லிங்க -90-43-44-என்கிற புராணாந்தர வசனத்தாலும்
தேப்யஸ் தன்மாத்ரேப் யோ யதா சங்க்யமேகே த்வி த்ரி சது பஞ்சப்யோ பூதான் யாகாஸ அநில அநல ஸலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே -என்று இதில் அதி க்ருதனான சாங்க்ய வாசஸ்பதி வசனத்தாலும் பூர்வ பூர்வ தன் மாத்ரா ஆவ்ருதத்வம் அவஸ்யம் கொள்ள வேணும்
இப்படி உப பன்னங்களான மஹதாதி விசேஷாந்தமான பதார்த்தங்கள் அண்டமாகப் பரிணமிக்கும் அளவில் பரஸ்பர சங்கங்களானால் அல்லது அண்ட உத் பாதகங்கள் ஆக மாட்டாது
நாநா வீர்யா ப்ருதக் பூதா ததஸ்தே ஸம் ஹிதம் விநா நா ஸக்நுவந் பிரஜா-ஸ்ரஷ்டும் அஸமாகம்ய க்ருத்ஸ்ந ஸ -ஸமேத யாந்யோந்ய ஸம் யோகம் பரஸ்பர சமாஸ்ரயா -ஏக சங்காத லஷ்யாஸ் ச ஸம் ப்ராப்யைக்ய மஸேக்ஷத — மஹ தாத்யா விசேஷாந்தாஹ் யண்ட முத்பாத யந்திதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-52-53-54-என்கிறபடியே
சாந்தத்வ -கோரத்வ -மூடத்வங்களாலே நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் இருக்கிற இம் மஹதாதி பதார்த்தங்களை பரஸ்பர ஸம்ஹதி யாவது ஏது என்னில்
ஆகாஸாதி பூதங்களுக்கு புராணங்களிலே ஏவம் ஜாதேஷு பூதாநி ப்ரத்யேகம் ஸ்யுர்த் விதா தத –சதுர்த்தா பின்னமேகைகம் அர்த்த மர்த்தம் ததா ஸ்திதம் வ்யோம் நோர்த்தா பாகாஸ் ஸத்வாரோ வாயு தேஜஸ் பயோ புவாம் –அர்த்தாநி யாநி வாயோஸ் து வ்யோம தேஜஸ் பயோ புவாம் -என்று துடங்கி விபஜித்து பஞ்சீ கரணம் சொல்லப்பட்டது -அதாவது
ஆகாசாதி பூதங்கள் ஐந்தினையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி -அவற்றிலே ஒரு கூறை நாலு கூறாக்கி -அந்தக் கூறுகளை பூதாந்தரங்கள் நாலிலும் விபக்தர்த்தங்களிலே கூட்டி -ஸர்வ பூதங்களிலும் ஸர்வ பூதங்களும் உண்டாம்படி பண்ணுகை
இப்படி பஞ்சீ க்ருதமானாலும் அவிபக்தங்களான அர்த்தங்கள் ப்ரதானங்களாய் நிற்கையாலே ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்குக் குறையில்லை
இப் பஞ்சீ க்ருத பூதங்களோடே கூட மஹத் அஹங்காரங்களும் அண்ட உத்பாதகங்களாகச் சொல்லுகையாலே அவற்றினுடைய ஸம்மேளந ஸித்திக்காக சப்தீ கரணம் என்றும் சொல்லுவார்கள் –
(அனைத்து நதிகளும் கங்கையில் கலந்த பின்பும் கங்கை என்ற பெயரிலே ஓடும் -அதே போல் இவை அவற்றின் பெயராலே வ்யவஹாரம் பண்ணக் குறையில்லையே)
ஆனால் தாஸாம் த்ரி வ்ருதம் த்ரி வ்ருதம் ஏகைகாம் கரவாணி –சாந்தோ -6-3-3- என்று சாந்தோக்யத்திலே த்ரி வ்ருத் கரணத்தைச் சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜோ அப அந்ந தத்வ த்ரய மாத்ர உத்பத்தியைச் சொல்லிற்று ஆகையாலே அவ்வளவிலே பர்யவசித்தது -ஸ்ருத் யந்தர ஸித்தமான பூதாந்தர உத்பத்தியிலும் ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே இங்கும் ஸித்தம் என்று கொள்ள வேணும் -ஆகையாலே தேஜோ ஆபந்ந ஸ்ருஷ்டி தத்வாந்தரங்களுக்கும் உப லக்ஷணமானாப் போலே த்ரி வ்ருத்த கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம் என்றதாயிற்று
அண்டத்துக்குள்ளே மஹதாதி காரியங்களும் காண்கையாலே மஹதாதி பதார்த்தங்கள் எல்லாவற்றுக்கும் ஸம் மேளனம் அவர்ஜநீயம் -ஆகையாலே பூதேப்யோண்டம் மஹா புத்தே ப்ருஹத் ததுதகே ஸயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-55-என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் -அது உதகத்திலே கிடக்கும் –
அப ஏவ ஸ ஸர்ஜாதவ் தாஸூ வீர்யமபாஸ்ருஜத்–ததண்ட மபவத்தை மம் ஸஹஸ்ராம் ஸூ ஸம ப்ரபம் –மனு -1-8 என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னவிடம் பூதாந்தரத்துக்கும் உப லக்ஷணம் -அதாவது
பூர்வ பூதங்களோடே ஸம் ஸ்ருஷ்டமாய் பிருத்வியும் தன் அகவாயிலே லீனையாகக் கிடக்கிற ஜல தத்துவத்தில் நின்றும் அண்டம் உத்பன்னமாய் அதிலே கிடக்கும் என்று -என்றபடி
இந்த அண்டம் க்ரமேண பரிணமிக்குமோ -ஏக காலத்திலே பரிணமிக்குமோ என்னில் -ஒரோருப்படையாக -இட்டு அகமெடுக்குமா போலே க்ரமேண பரிணமிக்கை யன்றியே -தத் க்ரமேண விவ்ருத்தம் ஸத் ஜல புத் புத வத் சமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2–55- என்று நீர்க் குமிழி போலே ஏக காலத்திலே உத்பன்னமாம்
இப்படி அண்டம் உத்பன்னமாம் போது -அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்ய யுதாநி ச -ஈத்ருஸா நாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27- என்று புராணங்களிலே பரஸ்பர ஸத்ருசமாய்க் கொண்டு அஸங்கயாதமான அண்டங்கள் –
ஏக காலே அபி ஸ்ருஜ்யந்தே ஸம் ஹ்ரூயந்தே ச பூர்வ வத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-17- என்கிற படியே க்ரமத்தாலே தனித் தனியே உத்பத்தி விநாசங்கள் உண்டாகை யன்றியே யுகபதேவ ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை உடையவையாய் இருக்கும்
இவ் வண்டத்துக்குள்வாயிலே பரிணதங்களான ஆகாசாதி பூதங்களை அதிஷ்டித்து (14)லோகங்களை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் தேவாதி சதுர்வித பூத விபாகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் கர்ம வஸ்ய ஸமஸ்த சேதன ஆஸ்ரய சரீரனாகையாலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவானவன்(ஆதார ஆதேய பாவம் மட்டுமே
அப்ருதக் ஸித்த விசேஷணம் பரமாத்மா ஒருவன் இடமே
மூன்று லோகம் அழியும் பொழுது கீழ் 7 லோகங்களும் இந்த மூன்று லோகங்களும் நான்முகன் இடம் ஆஸ்ரயம் என்றவாறு)தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதா மஹ -மநு -1-9- என்கிறபடியே ஜகத் உத்பாதகரான ப்ரஜாதி ப்ரப்ருதிகளுக்கும் உத்பாதாகனாகையாலே பிதா மஹ ஸப்த வாச்யனாயக் கொண்டு வ்யஷ்டி ஸ்ருஷ்டி யர்த்தமாக பகவத் ஸங்கல்பத்தாலே உத்பன்னனாம்
இப்படி அண்ட உத்பன்னனான ப்ரஹ்மாவுக்கு பத்ம ஜத்வாதி சொல்லுகிற பிரமாணங்கள் ஆத்ய ஸ்ருஷ்டிகளில் உத்பத்தி பேத விவேக தையாலே யாகக் கடவது
இந்த ப்ரஹ்ம உத்பத்தி பர்யந்தையான மஹதாதி சமஷ்டி ஸ்ருஷ்டி ஸத்ய ஸங்கல்பனான ஸர்வேஸ்வரனுடைய பஹு ஸ்யாம் -சாந்தோ -6-3-2- என்கிற அவ்யவ ஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
ப்ரஹ்மோ பஞ்ஞமான வ்யஷ்டி ஸ்ருஷ்டி தத் அந்தர்யாமியான பரமாத்மாவினுடைய வ்யவஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
ஆகை யாலே –
தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11
ப்ரஹ்மணோ அஸ் ருஜத் ப்ரபு
மாம் த்வம் பூர்வம் அஜீஜந -உத்தர காண்டம் -104-4
என்று பகவத் ஸ்ருஷ்டனாக பிரமாணங்கள் சொல்லுகின்றன இறே
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
இதி தத்துவ நிரூபணே சமஷ்டி ஸ்ருஷ்ட்டி நிரூபணம் நாம த்விதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –
———————
த்ருதீய அதிகாரம்- – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
1-சதுர் தச புவந நிர்ணயம் -ஸப்த பாதாள நிரூபணம்
2-அநந்தஸ்ய பாதாளாதி தாரகத்வ கதநம்
3-தஸ்மாத் காலாக்நி ருத்ர உத்பத்தி கதநம்
4-பூ மண்டல ஸ்வரூப கதநம்
5- பூ மண்டல உபரி வர்த்தமாந மேரு ஸ்தான நிரூபணம்
6-மேரோ பார்ஸ்வஸ்த வர்ஷ பர்வத நாமாதி கதநம்
7-பாரத வர்ஷாதி நிரூபணம்
8- பாரத வர்ஷ ஸ்ரேஷ்டதாக கதநம்
9-பாரத வர்ஷ நவ பேதக கதநம்
10-ப்லஷ த்வீப வர்ண நம்
11-ஸால் மலித்வீப வர்ணநம்
12-குஸ த்வீப வர்ணநம்
13-கிரௌஞ்ச த்வீப வர்ணநம்
14-ஸாக த்வீப வர்ணநம்
15-புஷ்கர த்வீப வர்ணநம்
16-பஞ்சாஸத் கோடி பூ மண்டல நிர்ணயம்
17-யோஜநாதி சங்க்யா நிரூபணம்
இப்படி உத்பன்னரான ப்ரஹ்மாதி சேதனர்க்கு அந்தர்யாமியாய் ஹ்ருதயத்திலே நின்று ஸங்கல்ப ரூப ஞாநிதிகளை ஜநிப்பித்து ஸ்ருஷ்ட்யாதிகளிலே பிரவர்த்திகைக்கையாலே ஸர்வ ப்ரவ்ருத்திக்கும் ஹேது ஸர்வேஸ்வரனே என்னக் குறையில்லை
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோ ஹநஞ்ச –கீதா -15-15- என்று
ஸகலருக்கும் சரீரியாய்க் கொண்டு ஸர்வ காரியங்களுக்கும் ப்ரவரத்தகன் தானேயாக அருளிச் செய்தான் இறே
இவ் வண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் ஏது என்னில்
பத்தாத்மாக்களுடைய கர்மம் அடியாக போக்ய போக உபகரண போக ஸ்தானமாம் படி அண்டத்தை பரிணமிப்பிக்கை -அதாவது
தஸ்மிந் அண்டே ஸ பகவான் உஷித்வா பரி வத்ஸரம் -ஸ்வயமேவ ஆத்மநோ த்யாநாத் ததண்ட மகரோத் த்விதா –தாப்யாம் ஸ சகலாப் யாஞ்ச திவம் பூமிஞ்ச நிர்மமே -மத்யே வ்யோம திஸஸ் ஸ அஷ்டாவ் அபாம் ஸ்தாநஞ்ச ஸாஸ்வதம் -மநு -1- என்று
மநுவும் அண்டாந்தர் வர்த்தியான லோக விபாகத்தையும் ஆகாஸம் அஷ்ட திக்குகள் ஸமுத்ரங்கள் இவற்றினுடைய விபாகத்தையும் ஸ்ரஷ்டாவான பகவான் ஸ்ருஷ்ட்டித்தான் என்றான் இறே-
பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் ஏதும் தோளா அண்டம் திருமுடியா நின்றான் பக்கல் செல்ல கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
1-இவற்றில் போக்ய அநு ரூபமான ஸூக துக்க அநுபவத்துக்கு விஷயமாகையாலே போக்யம் என்பது சப்தாதிகளை
2-இவ்வநுப ரூப ஞானங்களுக்கு உபகரணமாகையாலே போக உபகரணம் என்பது இந்த்ரி யாதிகளை
3-இந்த போகத்துக்கு அதிகரணங்கள் ஆகையாலே போக ஸ்தாநங்கள் என்கிறது தேவாதி ஸரீரங்களையும் -சதுர் தச புவனங்களையும்
இஸ் சரீர விஸிஷ்ட பத்தாத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமான சதுர் தச புவனங்களாவன
பூமிக்குக் கீழ் அண்ட கபாலத்துக்கு மேலாக 83 100 50000 யோஜனை உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே
ஸப்ததிஸ் து ஸஹஸ்ராணாம் த்விஜ உச்சாராயோ அபி கத்யதே -தச ஸாஹஸ்ர மேகைகம் பாதாளம் முநி சத்தம –
அதலம் விதலஞ்சைவ நிதவஞ்ச கபஸ்திமத் மஹாக்யம் ஸூதலம் சாக்ர்யம் பாதலாஞ்சாபி ஸப்தமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-என்கிறபடியே
ஓரொன்று தனித்தனியே 16000 யோஜனத்தளவு உயர்த்தியையும் பரப்பையும் உடைத்தாய்
தைத்ய தாநவ பந்நக ஸூ பர்ணாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
ஸிதா க்ருஷ்ண அருணா பீதா சர்க்கராஸ் ஸைல காஞ்சநா -பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ரஸாத ஸோபிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-3-என்கிறபடியே
ஸூத்த வர்ணங்களாயும் -க்ருஷ்ண வர்ணங்களாயும் அருண வர்ணங்களாயும் பீத வர்ணங்களாயும் வாலுகா மயமான (கூழாங்கல்)சர்க்கரா ரூபங்களாயும் ஸைல ரூபமாயும் ஸூவர்ண மயமாயும் இருக்கிற ஸ்தல விசேஷங்களை உடையவையாய் விலக்ஷணமான மாளிகைகளாலேயும் ப்ரஸாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ஸ்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமாய்
1- அதலம் என்றும்
2- விதலம் என்றும்
3- நிதலம் என்றும்
4-கபஸ்தி மத் -என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
5-மஹாதலம் என்றும்
6- ஸூ தலம் என்றும்
7-பாதாலம் என்றும்
பேரை யுடைத்தான அதோலங்கள் ஏழாய் இருக்கும்
இந்த ஸப்த பாதாலங்களுக்குக் கீழே -30 000 யோஜனை அளவில்
பாதாலாநாம் அதஸ் சாஸ்தே விஷ்ணோர்யா தாமஸீ தநு -சேஷாக்யா தத் குணாந் வக்தும் ந ஸக்தா தைத்ய தாநவா யோ அநந்த பட்யதே ஸித்தை தேவ தேவர்ஷி பூஜித யஸ் ஸஹஸ்ர ஸிரா வ்யக்த ஸ்வஸ்திகா அமல பூஷண -பணா மணி ஸஹஸ்ரேண யஸ் ஸ வித்யோதயன் திச —-ஸ பிப்ரத் ஸேகரீ பூதம் அஸேக்ஷம் ஷிதி மண்டலம் –ஆஸ்தே பாதால மூலஸ்த –ஸேஷோ அசேஷா ஸூரார்ச்சித –ஸ்ரீ விஷ்ணு புரா -2-5–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
பாதாளே ப்யோப் யத ஸ்தாத் த்வாத்ரிம் ஸத் ஸஹஸ்ர யோஜநோ -(32000-)அநந்த -பாகவதம் -5 ஸ்கந்தம் -இவ் வாக்யம் ஸ்ரீ மத் பாகவதத்தில் காணவில்லை
தஸ்ய மூல தேஸே த்ரிம்ஸத் யோஜந ஸாஹஸ்ராந்தர ஆஸ்தே யா வை கலா பகவத தாமஸீ சமாக்யாதா நந்த – என்று 5-24-1- இருக்கின்றன
பாதாளாநாம் –இதி பூர்வோ தாஹ்ருதஸ் லோக வ்யாக்யானத்திலும் தஸ்ய இத்யாதி வாக்யத்தையே ஸ்ரீ விஷ்ணு சித்தரும் எடுத்து அருளினது –
இவ் வாக்கியத்தில் அதிக சங்க்யா தோஷமும் காண்கிறது -சரியானபடி கண்டு கொள்க என்று ஸ்ரீ பாகவதத்தில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனுடைய தாமஸ மூர்த்தியாய் அநந்த ஸப்த வாஸ்யனான சேஷனானவன் தன் ஆயிரம் பணாங்களாலும் பாதாள ஸஹிதமான அசேஷ பூதளத்தையும் ஒரு புஷ்ப மாலையைத் தரிக்குமா போலே அநாயாசேன தரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும்
கல்பாந்தே யஸ்ய வக்தேரேப்யோ விஷாநல ஸிகோஜ்வல – சங்கர்ஷணாத் மகனான காலாக்நி ருத்ரனானவன் த்ரைலோக்ய ஸம்ஹார அர்த்தமாக இந்த மஹா ஷேத்ரனுடைய முகத்தில் நின்றுமிறே உத்பன்னனாய் ஜகத்தை ஸம் ஹரிப்பது –
இது வரை கீழே உள்ள லோகங்களை விவரித்தார்
இப் பாதாளங்களுக்கு மேலே 70000 யோஜனம் அகலத்தை யுடைத்தாய் ஸப்த த்வீப சாகர பர்வதாதி விஸிஷ்டமாய் பாதாசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய் பத்மகாரமான பூ மண்டலம் இருக்கும்
யத் தத்தி கர்ணிகா மூலம் இதி ஸத் ஸம் ப்ரகீர்த்திதம் -தத் யோஜந ஸஹஸ்ராணாம் ஸப்த தீநாமத ஸ்ம்ருதம் -இதி வாயு புராண யுக்தே
இந்த பூ பத்மத்துக்கு கர்ணிகை போல் கனக மயமான மஹா மேரு பர்வதமாய் இருக்கும் – இம்மேரு பூமிக்கு மேலே 84000 யோஜநம் உயர்த்திய யுடைத்தாய் -பூமிக்கு உள்ளே 16000 புதைந்து ஆக ஒரு லக்ஷம் யோஜனமாய் நிற்கும் -முப்பத்து ஈராயிரம் யோஜனை பரப்பை யுடைத்தாய் 16000 யோஜனை அடிப்பரப்பை யுடைத்தாய் அச்சு வெல்லத்தை அடி மேல் பண்ணினாப் போலே சதுரஸ்ரமுமாய் இருக்கும் -இம்மேருவுக்கு தெற்கே நிஷதம் என்றும் ஹேம கூடம் என்றும் ஹிமவான் என்றும் மூன்று வர்ஷ பர்வதமாய் இருக்கும் –
மேருவுக்குக் கிழக்கே மால்யமான் என்றும் தெற்கே கந்த மாதநம் என்றும் வர்ஷ பர்வதங்களாய் இருக்கும் –
அதற்குத் தெற்குக் கடை எல்லை பாரத வர்ஷம் –
அதுக்கு அநந்தரம் கிம் புருஷ வர்ஷம்
அதற்கு அநந்தரம் ஹரி வர்ஷம்
மத்யமான மேருவைச் சூழ இலா வ்ருத வர்ஷம்
மேருவுக்கு வடக்கே இலா வ்ருதத்தை அண்டை கொண்டு ரம்ய வர்ஷம்
அதுக்கு அநந்தரம் ஹிரண்மய வர்ஷம்
அதுக்கு அநந்தரம் கடை எல்லை உத்தர குரு வர்ஷம்
மேருவுக்குக் கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேது மூல வர்ஷம்
என்று ஒன்பது வர்ஷமாய்
ஜம்பூ த்வீப ப்ருதிவீ நவ கண்ட மாய் இருக்கும் –
இவற்றிலே இலா வ்ருதம் பத்ராஸ்வம் கேது மூலம் ஒழிந்த ஆறு வருஷமும் ஓரொன்றும் ஒன்பதினாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் இருக்கும் –
மத்யமான இலா வ்ருதம் மேருவைச் சூழ நாலு திக்கும் 9000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் மேரு ஸ்தானத்தோடே ஆயாம விஸ்தாரம் 34000 யோஜனையாய் சதுரஸ்ரமுமாய் இருக்கும் –
கிழக்கு பத்ராஸ்ரவமும் மேற்கு கேது மூலமும் கீழ் மேல் முப்பத்தீராயிரம் யோஜனை நீளமாய் இருக்கும்
பத்ராஸமம் கேது மூலமுமான வர்ஷங்களில் வர்ஷ பர்வதமான மால்யவானும் கந்த மாதநமும் ஆயிரமாயிரம் யோஜனை உயர்த்தியையும் நீளத்தையும் உடைத்தாய் இருக்கும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் 34000 யோஜனை நீளத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
இதில் முதல் சொன்ன வர்ஷ பர்வதங்களின் நடுவாக மஹா மேருவை அணைந்த ஹேம கூடமும் ஸ்வேத பர்வதமும் 90000 –90000- யோஜனை நீளத்தை யுடையவையாய் இருக்கும்
இவ்வாறு வர்ஷ பர்வதங்களும் தனித்தனியே 2000 யோஜனை உயர்த்தியையும் பரப்பையும் யுடையவைகளாய் இருக்கும் –
இந்த மஹா மேருவில் நான்கு எல்லைகளிலும் 16000–16000-யோஜனை உயர்த்தியை யுடைத்தாய் இருக்கும்
பூர்வே து மந்தரஸ் தஸ்ய தஷிணே கந்த மாதந –விபுல பஸ்சிமே பார்ஸ்வே ஸூ பார்ஸ்வஸ் சோத்தரே ஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புரா -3-2-18- என்கிறபடியே
மந்த்ர பர்வதம் கிழக்காய் -கந்த மாதநம் தெற்காய் -விபுலம் மேற்காய் ஸூ பார்ஸ்வம் வடக்காய் இருக்கும்
இவை கீலம் போலே மஹா மேருவை எல்லை யறாமல் பற்றி நிற்கையாலே விஷ்கம்பங்கள் (தடுப்புக்களாய்)என்று மேரோ தாரகா கீலா விஷ்கம்பா –பேராய் இருக்கும்
இந்த பர்வதங்களின் மேலெ 1500 யோஜநம் உயர்த்திய யுடையவைகளாய்-அம் மலைத் தலைகளுக்குக் கோடித்த தண்டு போலே அலங்கார ரூபங்களாய் இருப்பனவான நாலு வ்ருக்ஷங்களாய் இருக்கும்
அவைகளில் கிழக்குத் திக்கிலது கதம்பம் -தெற்கு திக்கிலது ஜம்பு -மேற்கு திக்கிலது அரசு -வடக்குத் திக்கிலது ஆலை
இவைகளில் கிழக்கில் கதம்பையாவது ஸஹஸ்ரா லம்ப ஸாகா நிசயங்களாலும் மஹா ஸ்கந்தங்களாலும் உப ஸோபிதமாய் மஹா கும்ப ப்ரமாணங்களாய் விகசித கேஸரங்களாய் -ஸர்வ கால ஜங்களாய் -மஹா கந்தங்களான புஷ்ப வாஸனையாலே 1000 யோஜநம் பரிமிளிதமாய் பத்ராஸ்வ தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்
தெற்குத் திக்கிலான ஜம்பு வ்ருக்ஷமானது மஹாஸாகோப ஸோபிதமாய் ஸதா புஷ்ப் பலா கீர்ணமாய் ம்ருது ஸ்வாதுக்களாய் மஹா கஜ ப்ரமாணமான பழங்கள் மலைத் தலையில் விழுந்து உடைத்து சாறாய் ஆறாய் ஜம்பூ நதீ என்று பேராய மேருவைச் சூழ ப்ரவஹியா நிற்கும்
அதின் ரஸத்தை பாநம் பண்ணுகிற அத் தேச வாசிகளுக்கு -நஸ்வேதோ நச தவ் கந்த்யம் ந ஜரா நேந்த்ரியக்ஷய -என்றும்
வேர்ப்பும் -வியர்வையும் -தவ்ர் கந்த்யமும் ஜரையும் இந்த்ரிய க்ஷயமும் உண்டாகாது
அந்த ரசத்தாலே அந்தக் கரையில் ம்ருத்து ஸூத்த ஜாம்பூநதம் என்கிற பொன்னாய் ஸித்தாதிகளுக்கு பூஷணமாகா நிற்கும்
இந்த ஜம்பு வானது ஜம்பூ த்வீ பத்தினுடைய நாமத்துக்கு ஹேதுவாம் படி ப்ரதாநமாய் இருக்கும் –
மேற்கு திக்கிலான வ்ருக்ஷமானது -மஹாச்ச் ராய மஹாஸ்கந்தங்களை யுடைத்தாய் ஸர்வ காலீந மஹா கும்ப பிரமாண பலவத்தாய் கேது மூல தேசத்துக்கு கேது வ்ருஷமாய் இருக்கும்
உத்தர திக்கில் வட வ்ருஷமும் விபுலோச்ச் ராய ஸ்கந்தோப ஸோபிதமாய் ப்ரவாள ஸத்ருஸ மஹா கும்ப பிரமாண பலங்களை யுடைத்தாய் உத்தர குரு தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்
இந்த விஷ்கம்ப பர்வதங்கள் நாலுக்கும் புறம்பே -பூர்வம் சைத்ரரதம் நாம தக்ஷிணம் கந்த மாதநம் -வைப்பராஜம் பஸ்சிமே தத்வ துத்தரே நந்தநம் வநம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-25- என்கிறபடியே
கிழக்கே சைத்ரரதம் என்றும் -தெற்கே கந்த மாதநம் என்றும் மேற்கே வைப்ராஜம் என்றும் வடக்கே நந்த நவநம் என்றும் நாலு வனமாய் இருக்கும்
அதுக்குப் புறம்பாக -அருணோ தந்து பூர்வேண தஷிணே மாநஸம் ஸ்திதம் -சிதோதம் பஸ்சிமே மேரோ -மஹா பத்ரம் ததோத்தரே –லிங்க புரா -பு பூ 49-38- என்கிறபடியே
கிழக்கிலது அருணோதம் என்றும் தெற்கே மாநஸ ஸரஸ் என்றும் மேற்கே ஸிதோதம் என்றும் -வடக்கே மஹா பத்ரம் என்றும் நாலு சரஸ்ஸாய் இருக்கும்
அருணோத ஸர பூர்வம் தக்ஷிணம் மாநஸம் ஸ்ம்ருதம் -ஸிதோதம் பஸ்சிம ஸரோ மஹா பத்ரம் ததோத்தரம் – என்று லிங்க வாராஹாதி புராண பாடம் –
இதுக்குப் புறம்பே சிதாந்த குமுதஸ் சைவ கர வீரா சலோத்தம மஹா நிலோத குஞ்ஜாஸ் ச மாஷாக்யஸ் சாச லோத்தம -வீருங்கோ மணி ஸ்ருங்கஸ் ச ஸ பிந்துர் மந்தரஸ் ததா வேணுமாம் ச ஸ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வதா -லிங்க பு பூ -43-42-43–
சிதாம்பஸ் ச குமுத் யாம்ஸ் ச குரரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்க ப்ரமுகா மேரோ பூர்வத கேஸராஸவா இதி -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-27-
பாட சிதாந்தஸ் ச குரண்டஸ் ச குரரஸ் சாசலோத்தம விகாரோ மணி சைலஸ் ச வ்ருஷ வாம்ஸ் சாச லோத்தம – மஹா நீலோத ருசக ஸ பிந்துர் தர்து ரஸ் ததா -வேணுமாம்ஸ் ச ஸூ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வத -இதி லிங்க பாட -49-1-
சிதாந்தஸ் ச குமத்வாம்ஸ் ச குவரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்கோமணி ஸைலஸ் ச ருக்ஷவாம்ஸ் சாச லோத்தம —-ஸ பிந்துர் மந்தரஸ் ததா -இதி கௌர்ம புராண பாட -பூ -44-
சிதாந் தஞ்ச குமுஜ் ஐஸ் ச ஸூ வீரஸ் சா ச லோத்தம -வி கங்கோ மணி ஸீலஸ் ச வ்ருஷபஸ் சா ச லோத்தம –இதி வாயு புராண பாட -பூ -36-18-
அந்யத்ராபி பஹு தா பாடாந்தர முப லப்யதே நாம பேத மத்ரேண கோ அபி ந விரோத இதி பாதி ஏவம் அந்யத்ர அபி த்ரஷ்டவயம் -என்கிறபடியே
சிதாந்தம் முதலான இப் பர்வதங்கள் மேருவுக்குக் கிழக்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும்
மானஸ சரஸ்ஸுக்குப் புறம்பே -ஸைலஸ் த்ரி ஸிரஸஸ் சைவ சிகரஸ் சா ச லோத்தம கபிங்கஸ் ச பதங்கஸ் ச ருசகஸ் சைவ ஸாநுமாந் -தாம் ராபஸ் ச விசாலஸ் ச ததா ஸ்வேதோதரோ கிரி -ஸூ மூலோ வஸூ தாரஸ் ச ரத்ந தாரஸ் ச பர்வத -ஏக ஸ்ருங்கோ மஹா மூ ஸூலோ கஜஸைல பிஸாசக –பஞ்ச ஸைலஸ் ச கைலாஸோ ஹிமவாம்ஸ் சா ச லோத்தம –லிங்க புரா -49-46-47-48-வாயு ச பூ 36-22-24- என்கிறவை தெற்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும் –
ஸிதோ தத்துக்குப் புறம்பே கபில பிங்க லோ பத்ர ஸூரஸஸ் ச மஹா சல குமுதோ மது மாம்ஸ் சைவ அஞ்ஜநோ மகுடஸ் ததா -க்ருஷ்ணஸ் ச பாண்டரஸ் சைவ ஸஹஸ்ர சிகரஸ் ததா -பாரிஜாதஸ்ய சைலேந்திர ஸ்ரீ ஸ்ருங்கஸ் சா ச லோத்தம –லிங்க புரா பூ 49-50-51- என்கிற கேஸரபர்வதங்கள் மேருவுக்கு மேற்காய் இருக்கும்
மஹா பத்ரத்துக்குப் புறம்பே -சங்க கூடோ மஹா சைலோ வ்ருஷ போஹம் ஸ பர்வத நாகஸ் ச கபிலஸ் சைவ இந்த்ர சைலஸ் ச ஸா நுமாந் -நீல கண்டக ஸ்ருங்கஸ் ச சதசிருங்கஸ் ச பர்வத புஷ்கரோ மேக சைலஸ் ச விரஜஸ் சா ச லோத்தம -ஜாருதிஸ் ச த்ரி ஸ்ருங்கஸ் ச இத்யேத உத்தராஸ் ஸ்ம்ருதா -லிங்க புரா -49-54-55- என்கிற கேஸர பர்வதங்கள் மேருவுக்கு வடக்காய் இருக்கும் –
இவற்றில் நிஷதாதிகள் வர்ஷ பர்வதங்களாகச் செய்தேயும் கேஸரங்களிலும் அந்தர் பவிக்கும்-இவ்வர்ஷ பர்வதங்கள் அவ்வோ வர்ஷ பர்வதங்களுக்கு எல்லைகளாய் இருக்கும் -இதில் கிழக்கில் மால்யவானும் -மேற்கில் கந்த மாதனமுமாகிற வர்ஷ பர்வதங்கள் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை உடைத்தாய் இருக்கும்
பத்ராஸ்வமும் பாரதமும் கேது மூலமும் உத்தர குருவும் மர்யாதா சைலங்களுக்குப் புறம்பான இந்நாலு வர்க்ஷ பர்வதங்களும் பூ பத்மத்துக்கு சதுர் தளங்களாய் இருக்கும் மர்யாதா சைலங்களாவன -கீழை திக்கில் பத்ராஸ் வத்துக்கு மர்யாதைகளான வர்ஷ பர்வதமான மால்யவானோபாதி ஜடரமும் தேவ கூடமும் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை யுடைத்தாய் இருக்கும் -தெற்குத் திக்கில் கந்த மாதநமும் கைலாசமும் ஹிமவானோபாதி இரண்டு கடலுக்கு நடுவு கீழை எல்லை இரண்டு கடலையும் தட்டி-தாண்டி – 80000 யோஜநம் நீளமாய் இருக்கும் -மேலை திக்கில் நிஷதமும் பாரியாத்ரமும் வர்ஷ பர்வதமான கந்த மாத நத்தோபாதி ஆ நீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளமாய் இருக்கும் -இதில் கிழக்கு மேற்கு தென் வடக்கு நீளமான பர்வதங்கள் 34000 யோஜனமாய் இருக்கும் வடக்குத் திக்கில் மர்யாத சைலங்களான த்ரி ஸ்ருங்கமும் ஜாருதியும் கீழை மேலை இரண்டு கடலுக்கு நடுவு ஸ்ருங்க வானோடொத்த 80000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் தட்டி தாண்டி இருக்கும்
பத்ராஸ் வத்துக்கு கேது வ்ருக்ஷமான கதம்பத்தடியிலே ஹயக்ரீவ ரூபியாயும் -பாரத வருஷத்துக்கு கேது வ்ருஷகமான ஜம்புவின் அடியிலே கூர்ம ரூபியாயும் -கேது மூலத்துக்கு கேது வ்ருக்ஷமான பிப்பலத்தடியில் வராஹ ரூபமாகவும் உத்தர குருவுக்கு கேது வ்ருக்ஷமான ந்யக்ரோதத் தடியிலே மத்ஸ்ய ரூபமாயும் ஸர்வேஸ்வரன் ஸமாராதனம் கொண்டருளும் -அல்லாத வர்ஷங்களில் தத் தத் அநு ரூபமான ஸமஸ்த ரூபங்களாலும் ஸமாராதானம் கொண்டு அருளும்
ஏவம் பூதமான பூ பத்மத்துக்கு கர்ணிகாகாரமான மஹா மேருவின் தலையிலே 14000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் ப்ரஹ்மாவினுடைய படை வீடாய் இருக்கும் -இதுக்கு எட்டுத் திக்கிலும் லோக பாலகராய் இந்த்ராதிகளான எண்மருக்கும் படை வீடாய் இருக்கும் -இதில் ப்ரஹ்மாவின் படை வீட்டைச் சூழ திரி விக்ரமன் திருவடி விளக்கின தீர்த்தமான கங்கை விழுந்து நாலு திக்கிலும்
சிதை என்றும்
அலக நந்தை என்றும்
சஷு என்றும்
பத்ரை என்றும்
நாலு ஸ்ரோதஸ்ஸாய் ப்ரவஹிக்கும்
அதில் கீழைத் திக்கில் -சிதை மலைத் தலைகளால் ஆகாசத்தில் கிளம்பி பத்ராஸ் வத்திலே சென்று கடலிலே பிரவேசிக்கும்
தெற்கில் அலக நந்தை முன்னே த்ருவ பதத்தில் சென்று த்ரை லோக்யத்திலும் வந்து ஊர்தவே மந்தாகிநீ -என்றும் அதோ போகவதீ என்றும் -காம் கதேதி கங்கா என்றும் சொல்லப்பட்டு ப்ரவாஹ த்ரயத்தை யுடைத்தாய் த்ரிபதகையாய் ப்ரவஹித்து பூ லோகத்தில் ப்ரவாஹம் ருத்ரன் தலையிலே விழுந்து ஏழு வகையாய் ப்ரவஹித்து கீழே சகர புத்ரர்களையும் உத்தரிப்பித்துக் கடலிலே பிரவேசிக்கும்
மேலை திக்கில் சஷு வானது பர்வத சிகரங்களாலே கேது மூலத்தில் சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்
வடக்கில் பத்ரையானது பர்வதங்களாலே உத்தர குருவிலே சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்
இம் மஹா மேருவுக்குக் கீழை திக்கிலே கேஸர பர்வதங்களான சிதாந்த குமுத பர்வதங்களின் நடுவே 300 யோஜநம் நீளமாய் 100 யோஜனை அகலமான தொரு த்ரோணி சரச அமல பா நயமான ஸ்ரீ ஸரஸ்ஸாய் இருக்கும் – அது த்ரோண பாத்ர (சிவம் த்ரோணம் அளவுகோல்கள்)ப்ரமாணமான புண்டரீக ஷண்டங்களாலும் ஹம்ஸ காரண்ட வாதி பக்ஷி சங்கங்களாலும் விளங்கா நின்று கொண்டு ஸரோ மத்யத்திலே சத ஸஹஸ்ர தள பத்ம வந மத்யே கோடி தள யுக்த ஸ்வர்ண பங்கஜ கர்ணிகார் கூடையாய் ஸாஷாத் லஷ்மி இரா நிற்கும் -அந்த பில்வ வனம் 100 யோஜனை விஸ்தீர்ணமாய் 100 காதம் நீளமாய் ஸாகா ஸஹஸ்ர கலிதார்த்த க்ரோஸ பிரமாண (1 க்ரோசம் 2 மைல்)மஹா வ்ருஷ க்ஷண்ட மஹா கும்ப பிரமாண ஸூகந்தி ஸ்வாது பலவத்தாய் ஸ்ரீ வனம் என்று சொல்லப்படும் -அங்கேயே ஸ்ரீ யானவள் ஸித்த சங்க நிஷேவிதையாய் இருக்கும்
பின்னையும் வைகங்க மணி சைலாந்தரத்திலே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி ஸத ஆயாம யுக்த த்ரோணி விமல பங்கஜ (வெண் தாமரை)வன ஸோபிதமாய் இருக்கும் -தத் தீரத்தில் அதி மாத்ர ப்ரமாணமான ஸதா புஷ்ப பலவத்தாய் மஹாஸ் கந்தோப ஸோபி தார்த்த க்ரோஸோச் ச வ்ருஷ ஷண்டங்களின் நடுவே கஸ்யபனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்
பின்னையும் மஹா நீல குமுஜ்ஜ சைலாந்தரே பத்ம ஷண்டோப ஸோபிதமாய் ஸூக நதீ என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலும் பஞ்சா ஸத் யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதார்த்த க்ரோஸோச் சதாள வனமாய் இருக்கும் -ஐராவத தேவ சைலாந்தரே வ்ருஷ வீருத வர்ஜிதமாய் பாத மாத்ர பிரமாண ஸவிலா வ்ருதமாய் ஸஹஸ்ர யோஜந ஆயாம சத யோஜந விஸ்திருதைக சிலாதல பூமி -ஐராவத கஜஸ்ய க்ரீடா சிலாதலமாய் இருக்கும் –
மேருவுக்குத் தெற்கே கேஸர பர்வதங்களான த்ரிஸர பதங்க யோர் மத்யே –ஸிஸிர பதங்க -என்று வாயு பு பூ -38-2-வராஹ பு 80-1–ப்ரசன்னா ஸ்வாது சலிலமாய் பஹு தகம் -பஹுதகா நத்யோ வஹந்தி -என்று வராஹ பு -80-3-என்கிற நதீ ப்ரவஹிக்கும் –தத் தீரத்திலே–கோஸத்திலே -தத் தீரத்திலே சத யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதமாய் -எண்டு பாடம் காண்கிறது –வாராஹாதி புராணங்களில் சத யோஜந விஸ்த்ருதம் என்றே இருக்கிறது
சத் யோஜந விஸ்த்ருதமாய் ப்ருது ஷே போச்ச யவ்தும்பரா வனம் –ப்ருது ஷேபோச்ச சிகரை –இதி வாயு புராண -38-3- அநு சாரேண த்ருத இஷுஷேப- என்று வராஹாதி பு -80-1-
சர்வர்த்துஜ ப்ரவாள ஸத்ருச மஹா கும்ப பிரமாண பலோப ஸோபிதமாய் கர்த்தம ப்ரஜாபதிக்கு ஆஸ்ரமாய் இருக்கும் –
தாம்ராப பதங்க சைல யோரந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத ஆயாம யுக்தமாய் பால ஸூர்ய சங்காச ரக்தோத் பல ஸோபிதமாய் மஹத் ஸரஸ்ஸாய் இருக்கும் -அந்த ஸரோ மத்யே சத யோஜந உந்நதமாய் த்ரிம் ஸத் யோஜநம் விஸ்தீர்ணமாய் இருபத்தொரு கிரி சிகரத்திலே ரத்ன பிரகார தோரணோல் லசிதமான வித்யாதர புரமாய் இருக்கும்-
விசாகாசல ஸ்வேத பர்வத யோரந்தரே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோஜந ஆயாமமான ஸரஸ் தீரத்திலே மஹதாம்ர வனம் (மாந்தோட்டம்)-கநக சங்காஸாதி ஸூ கந்த மஹா கும்ப மாத்ர பலோப ஸோபிதமாய் இருக்கும் –
ஸூமுலாச லேந்த்ர வஸூதாரயோர் மத்யே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோனாயாதமாய் வில்வஸ்தவி என்கிற வனம் இருக்கும் என்று இப்படியும் ஒரு வாக்யம் இங்கிருக்க வேணும் என்று ஸூமுலஸ்யாச லேந்த் ரஸ்ய வஸூ தாரஸ்ய சாந்தரே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணே பஞ்சாஸத் யோஜநாயதே -வில் வஸ்தலீ நாம -என்று வராஹ புராணத்திலும் -அது -80-வாயு புராணத்திலும் -பூ 38-23- இருக்கையாலே தோற்றுகிறது
வஸூ தார ரத்நதாரயோர் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் -வராஹ புராணத்தில் அது -80- வஸூதார ரத்ந தாராயோர் மத்யே விம்சத் யோஐந விஸ்தீர்ணம் என்று பாடம் காண்கிறது -வாயு புராணாதிகளில் -பூ 38-27-த்ரிம் ஸத் யோஜனை என்றே பாதாம் – சத யோஜநா யாமமான ஸூ காந்தி கிம் ஸூக வனமாய் இருக்கும் -ஸார்வ காலீ ந ஸூ கந்த கிம் ஸூக வந புஷ்ப ஆமோதம் சத யோஜநம் வாஸியா நிற்கும் -அதிலே ஆதித்யனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்
இவ்விடத்தில் பஞ்ச கூடஸ்ய கைலாஸஸ்ய சாந்தரே ஸஹஸ்ர யோஜநா யாமம் விஸ்தீர்ணம் சத யோஜநம் ஹம்ஸ பாண்டூரம் ஷூத்ர ஸத் வைர நாத் ருஷ்யம் ஸ்வர்க்க ஸோபாந மிவ பூ மண்டலம் –
அத பஸ்சிமதி க்பாகே —-ஸூ பார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே சமந்தாத் யோஜந சதமேகம் பவ்ம சிலாதலம் நித்யதப்தம் துஸ் ஸ்பர்சம் -என்கிற வாராஹ புராண -அது 80- ப்ரகரண வாக்ய அநு சாரேண -சில வாக்யங்கள் வேணும் – தாள கோசங்களில் இல்லை -ஆகையால் புராண அநு சாரேண வாக்யங்களைச் சேர்த்துக் கொண்டு அநு சந்திக்கவும் –
மேருவுக்கு மேற்கே கேஸர பர்வதங்களான ஸூபார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே ஆயாம விஸ்தாரம் சத யோஜநம் வஹ்நி சந்தப்தஸ்தலம் துஸ் ஸ்பர்சமாய் இருக்கும் -தன் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணம் வஹ்நி மண்டலமாய் இருக்கும் -அதிலே லோக க்ஷய காரியான ஸம்வர்த்தக அக்னி இந்தநம் இல்லாதே ஜ்வலியா நிற்கும்
அநந்தரம் குமுதாஞ்ஜந யோர் மத்யே புண்ய ஹ்ரதம் என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலே ஸதா பலித பீத வர்ண மஹா பலாவ்ருத மாதுளங்க வனம் தச யோஜந விஸ்தீர்ணமாய் இருக்கும்
மாதுளங்க ஸ்தலீ தத்ர ஹ்யா யாமா தச யோஜநா -என்று வாயு புராணே -பூ 38-42- வாராஹேது -அது-80- அந்தரே ச சைல வரயோ குமுதாஞ்ஜந யோஸ் சத யோஜந விஸ்தீர்ணா மாதுலங்க கஸ்தலீ ஸர்வ ஸத்வா நாம கம்யா பீத வர்ணை பலைராவ்ருதா ஸாஸ்தலீ ஸோபதே -தத்ர ச புண்யோ ஹ்ரதஸ் ஸித்தை ருபேத ப்ருஹஸ் பதேஸ் தத் வனம் -இதை பாடம்
அதிலே ப்ருஹஸ்பதிக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –
பிஞ்சரம் கௌர சைலேந்தரே -அநேக சத யோஜந ஆயாம விஸ்த்ருத மஹாத் ரோணி ஸரஸ்ஸாய் இருக்கும் –பிஞ்சர கௌர யோரந்தரே ஸரோத்ரோண்யோ ஹ்யநேக சத யோஜநா யாதா –இதி வாராஹே -அது -80-
பங்கஜ க்ஷண்ட சம்யுக்தமானவதிலே விஷ்ண்வாயதந மாய் இருக்கும்
க்ருஷ்ண பாண்டர ஸைலாந்தரத்திலே வ்ருஷ வீருத் விவர் ஜிதமாய் த்ரிம்சத் யோஜந விஸ்தீர்ணமாய் நவத்யாதமான நிஷ் கம்பா தீர்க்கிகையாய் இருக்கும் -அதிலே பஞ்ச யோஜந விஸ்தீர்ணமான ந்யக்ரோதம் ஸரோ மத்யே நிற்கும் -க்ருஷ்ண பாண்டு ராயோரபி த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணம் நவத் யாயத யோஜநம் –இதி வாயு பு பூ 38-49-ஸூக்ல பாண்டு ராயோரபி இதி வாராஹபு -அது -80-அவ் வ்ருக்ஷத்தில் சந்த்ர ப்ரபனாய் ஸஹஸ்ர வதநன் என்கிற எம்பெருமான் யஷாதிகளாலே ஆராதிக்கப்படும்
தஸ் யாஸ் ச மத்யே பஞ்ச யோஜந ப்ரமாணோ ந்யக்ரோதோ வ்ருஷ தஸ்மிம் ஸ் சந்த்ர ஸேக ரோமா பதிர் நீல வாஸாஸ் ச தேவோ நிவஸதி யஷாதி பிரீட்யமாந -இதி வாராஹே -அது 80- வாயு புராணே ச மத்யே தஸ்யாஸ் ச பத்மின்யா பஞ்ச யோஜந மண்டல -ந்யக்ரோதோ விபுலஸ் கந்தோ ஹ்யநேகாரோஹ மண்டித -தத்ர சந்த்ர ப்ரப ஸ்ரீ மான் பூர்ண சந்த்ர நிபாநந ஸஹஸ்ர வதநோ தேவோ நீல வாஸாஸ் ஸூராரிஹா பத்ம மால்ய தரஸ் தல்யாம் மஹா பாகோ அபராஜித-இஜ்யதே யக்ஷ கந்தர்வை வித்யாதர கணைஸ் ததா தஸ்மிந் ஆயதநே ஸாஷாத் அநாதி நிதநோ ஹரி -பத்மோ பஹாரைர் விவிதை இஜ்யதே ஸித்த சாரணை -இதி -பூ 38-55-58–
ஸஹஸ்ர சிகர குமுதாந்தரத்திலே பஞ்சாஸத் யோஜந விஸ்த்ருதமாய் -இஷுஷே போச்சமான மது ஸ்ரவ பலோப ஸோபிதமான வனம் –பஞ்சாஸத் யோஜந ஆயாமம் விம்சத் யோஜந விஸ்த்ருதம் இஷுஷே போச்ச சிகரம் இதி வாராஹே –80- ததா ஸஹஸ்ர சிகர குமுதஸ் யாந்தரேண ச பஞ்சாஸத் யோஜநா யாமம் த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதம் –இஷு ஷே போச்ச சிகரம் –இதி வாயு பு பூ 38-60–சந்திரனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும் –
சந்த்ரஸ்ய மஹா நாஸ்ரம –இதி வாராஹே ஸூக்ரஸ்ய இதி வாயு பு-மேருவுக்கு வடக்கே கேஸர பர்வதங்களான சங்க கூட நிஷதங்களுக்கு நடுவே புருஸ் தலம் –புருஷஸ்தலீ இதி வாராஹே புருஷஸ்தலீ இதி வாயு பு – என்று பேரை யுடைத்தாய் அநேக யோஜந விஸ்த் ருதமாய் அத் யுச்சராய வ்ருஷ ஷண்டங்களை யுடைத்தாய் மஹோத்ரிக்த கஜங்களை யுடைத்தாய் இருக்கும் -கபிஞ்ஜல நாக சைல யோந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத யோஜநா யாதமாய் ஸ்வாது பல ஸம் புஷ்டத்ராஷா கர் ஜுர வனமாய் இருக்கும்
புஷ்க்ரமேக சைல யோரந்தரே சத யோஜனா யதமாய் ஷஷ்டி யோஜந விஸ்த்ருதமாய் தரு குல்ம லதாஹீநமாய் பாணி தல ப்ரக்யமான சிலா தலமாய்
இருக்கும் -அதனுடைய நாலு பார்ஸ்வத்திலும் மஹா விஸ்த்ருதமான நாலு சரஸ்ஸும் நாலு வனமுமாய் இருக்கும்
கேஸர மர்யாதவர்ஷ பர்வதங்களின் மேலே அஷ்ட வித தேவ ஜாதிகளுக்கும் படை வீடு களாய் இருக்கும் -இந்த பாரதம் ஒழிந்த எட்டு வர்ஷமும் பவ்மமான ஸ்வர்க்கங்கள் என்னலாம் படி போக பூமியாய் பாப காரிகளுக்கு ப்ரவேஸ யோக்யம் இன்றிக்கே அதி ஸயித ஸூக கரங்களாய் அநு பவிதாக்களான புருஷர்கள் 16000-பன்னீராயிரம் வயஸ்ஸுக்களில் இருந்து அநுபவிக்கலாம் படி ம்ருத்யு பயமற்று இருக்கும்
இவ் வர்ஷங்கள் தனித் தனியே ஸப்த குல பர்வதங்களும் நதிகளும் தேச விபாகங்களும் யுண்டாய் இருக்கும்
அப்படி யன்றி இந்த பாரத வர்ஷம் கர்ம பூமியாய்- ஸ்வர்க்க மோக்ஷ பலன்களுக்கு சாதன அநுஷ்டானம் பண்ணுகைக்கு ஸ்தலமுமாய் -நிஷித்த அநுஷ்டானங்களாலே நரக ப்ரவேசத்துக்கும் திர்யக் யோநி ஜாதிகளுக்கும் ஹேதுவாய் -அதிசயித புண்ய ஆர்ஜிதத்துக்கும் ஹேதுவான ஸ்தலமாகையாலே தேவாதிகளும் ஆசைப்படும் படி நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கும் –
அத்ர ஜன்ம சஹஸ்ராணாம் ஸஹஸ்ரை ரபி சத்தம -கதா சில் லபதே ஐந்து மாநுஷ்யம் புண்ய சஞ்சயாத் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-23- என்று ஆயிரம் கோடி ஜென்மம் புண்யத்தைத் திரட்டினால் இந்த தேசத்திலே ஒருக்கால் மநுஷ்யனாய்ப் பிறக்கப் பெறும் என்னும் படியாயும் -காயந்தி தேவாகில கீதகாநி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே ஸ்வர்க்காப வர்க்காஸ் பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷா ஸூரத்வாத் கர்மாண்ய ஸங்கல்பித தத் பலாநி சந்யஸ்ய விஷ்ணவ் பரமாத்ம ரூபே அவாபியதாம் கர்ம மஹீம நந்தே தஸ்மிந் லயம் யே த்வமலா ப்ரயாந்தி -ஜாநீம நைதத் க்வ தே மநுஷ்யா யே பாரதே நேந்த்ரிய விப்ர ஹீநா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-24-26- என்று
ஸ்வர்க்க வாசிகளான தேவர்களும் ஸ்வர்க்க மோஷங்கள் இரண்டையும் அடைகைக்கு மார்க்க பூதமான பாரத பூ பாகத்திலே தேவத்வத்தை விட்டுப் போய்ப் பிறக்கிறவர்கள் தன்யர் என்றும் –அந்த பாரதமாகிற கர்ம பூமியைப் பெற்று பல ஸங்கல்பங்களை ஒழிந்த கர்மங்களை பரமாத்மாவான விஷ்ணுவின் பக்கலிலே ஸமர்ப்பித்து நிர்மலனாய் அபரிச்சின்னனானவன் பக்கலிலே யாவர் சிலர் ஏகீ பாவத்தை அடைகிறார்கள் -அவர்கள் தன்யர் என்றும்- இந்த ஸ்வர்க்க ப்ரதமான கர்மம் லயித்து அவ் வளவிலே அவ் விடத்திலே தேஹ ஸம்பந்தத்தை நாம் அடைகிறோம் என்று இருக்கிலோமே -பாரத வர்ஷத்திலே ஜிதேந்தியராய்க் கொண்டு இருக்கிறார்கள் யாவர் சிலர் -அந்த மநுஷ்யர் தன்யர் இறே -என்றும் -அவர்கள் அங்கிருந்து பாடும்படியாயும் இறே இத் தேசத்தில் வைபவம் இருப்பது
இந்த பாரத வர்ஷம் நவ பேதமாய் இருக்கும் -அவையாவன –
1-இந்த்ர த்வீபம்
2-கஸேரு
3-தாம்ர பர்ணம்
4- கபஸ்தி மாந்
5- நாக த்வீபம்
6-சவும்யம்
7-கந்தர்வம்
8-வாருணம்
9- பாரதங்கள்
இவற்றில் பாரதம் ஒழிந்த எட்டும் கடலுக்கு உள்ளாய் தென் வடல் ஆயிரமாயிரம் யோஜனமாக பாரதம் கூட்டி சாகராந்தரிதங்களான த்வீபங்கள் ஒன்பதாய் இருக்கும் -இந்த பாரத வர்ஷம் -மஹேந்த்ரோ மலயஸ் ஸஹ்ய ஸூக்திமாந் ருஷ பர்வத விந்த்யஸ் ச பாரியாத் ரஸ்ச சப்தாத்ர குல பர்வதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-3- என்று மஹேந்த்ரம் முதலான ஏழு குல பர்வதத்தை யுடைத்தாய் இருக்கும்
அவைகளில் கங்கா -ஸிந்து – ஸரஸ்வதீ சதத்ரூ சந்த்ர பாகை முதலான ஆறுகள் ஹிமவத் பர்வதத்திலே பிறந்தன–வேகவதி முதலானவை ஸூக்திமாந் பர்வதத்திலே பிறந்தன -நர்மதை ஸூரஸை முதலானவை ருக்ஷ பர்வதத்திலே பிறந்தன
நர்மதா ஸூர ஸாத்யாஸ் ச நத்யோ விந்த்ய விநிர் கதா தாபீ பயோஷ்ணீ நிர் விந்த்யா ப்ரமுகா ருஷ ஸம்பவா என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -2-3-11-இருக்கையாலே அப்படியே இவ்விடத்திலும் பாடம் கொள்ள வேண்டும் –
தாபீ பயோஷ்ணீ முதலான ஆறுகள் விந்த்ய பர்வதத்தில் பிறந்தன கோதாவரீ பீமரதி முதலான நதிகள் ஸஹ்ய பர்வதத்திலே பிறந்தன -க்ருத மாலை தாம்ர பர்ணீ துடைக்கமான ஆறுகள் மலய பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -ருஷீகா குமாரை முதலான நதிகள் ஸ்ரீ ஸூக்திமத் பர்வதத்திலே பிறந்தன
இந்த பாரத வர்ஷத்திலே க்ருத -த்ரோதா -த்வாபர -கலி யுகங்களாகிற யுக பேதத்தால் யுண்டான வேறுபாடு உள்ளது -போக பூமி யாகையாலே அல்லாத எட்டு வர்ஷங்களுக்கு இவையில்லை -நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைய இந்த ஐம்பூ த்வீ பத்தை நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் வலயா காரமான லவண ஸமுத்ரம் ஆவரித்து இருக்கும் -இப்படி ஜம்பூ ப்லஷாஸ் ஸால் மலிஸ் ச குஸ கிரௌஞ்சவ்வ ததைவ ச -சாகஸ் ச புஷ்கரஸ் சேதி ஸப்த த்வீபா ப்ரகீர்த்திதா -கா பு பூ -45-4- என்று காருட புராணத்திலும்
ஜம்பூ ப்லஷா ஹ்வயவ் த்வீபவ் ஸால்ம விஸ் சாபரோ த்விஜ -குமஸ் ததா க்ரவஞ்ச ஸாக புஷ்கரஸ் சைவ சப்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5- என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்ட ஸப்த த்வீ பங்களையும் -ஏதே த்வீபாஸ் ஸமுத்ரைஸ் து ஸப்த ஸப்தபி ராவ்ருதா -லவணே ஷுஸாரா சர்ப்பிர் ததி துக்த ஜலைஸ் சமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-6- என்று சொல்லுகிறபடியே த்வீப சமங்களான லவணாதி ஸமுத்ரங்களும் ஸப்த த்வீ பங்களையும் ஆவரித்து இருக்கும் -அதில் ஜம்பூ த்வீபா வரணமான லவண சமுத்திரத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ப்லஷ த்வீ பம் ஆவரித்து இருக்கும் –
அந்த ப்லக்ஷ த்வீபமும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே
1-சாந்தா பயம் என்றும்
2-ஸஸிரம் என்றும்
3-ஸூ கதம் -ஸூமுகோதயம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
4-ஆனந்தம் என்றும்
5-சிவம் என்றும்
6-ஷேமகம் என்றும்
7-த்ருவம் என்றும் ஏழு வர்ஷமாய் இருக்கும் –
இவற்றில்
1- கோமேதம் என்றும்
2-சந்த்ரம் என்றும்
3- நார்த்தம் என்றும்
4- துந்துபி என்றும்
5- ஸோ மகம் என்றும்
6- ஸூநாவம் -ஸூமநா -இதை புராணம் -என்றும்
7-வைப்ராஜம் என்றும் ஏழு வர்ஷ பர்வதமாய் இருக்கும்
இப்பவாதங்களிலே பிறந்து சமுத்ர காமிநிகளான நதிகள்
1-அநு தப்தை-என்றும்
2- ஸிகி என்றும்
3- விபாயை என்றும்
4- த்ரிதிவை என்றும்
5-க்லமை என்றும்
6-அம்ருதை என்றும்
7- ஸூக்ருதை என்றும் பாப ஹரைகளான இவைகள் ஏழும் இருக்கும்
இவ் வேழு வர்ஷத்திலும்–யுக பேத வ்யவஸ்தைகள் இல்லை -ஸர்வ காலமும் த்ரேதா யுக ஸமானமாய் இருக்கும் -இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்களுக்கு ஆர்யர்கள் குரர்கள் விதேஸ்யர்கள் -விதம் ஸத்துக்கள் பாவிகள் என்று பேராய் இருக்கும் -இவர்களுக்கு யுக பேதங்களாலே வரும் ஹ்ராஸ வ்ருத்த் யவஸ்தைகளும் இல்லை
இந்த ப்லக்ஷ த்வீபம் தொடங்கி ஸாக த்வீபம் ஈறாக ஐந்து த்வீ பத்திலும் மனுஷ்யர் நோயற்று 5000 வயஸ்ஸு புகுருவர்கள் -வர்ணாஸ்ரம அநு ரூபமான தர்மங்களும் அவிகலமாக நடக்கும் -ஜம்பூ த்வீ பத்தில் ஜம்புவோ பாதி பிரமாணத்தை யுடைத்தாய் இருந்த ப்லக்ஷ த்வீ பத்தினுடைய மத்யத்திலே நிற்கும் -இந்த த்வீ பத்தில் ஸோம ரூபியான ஸர்வேஸ்வரன் அந்த ப்ராஹ்மணாதி களாலே ஆராதிக்கப்படா நிற்கும் -இந்த ப்லக்ஷ த்வீ பத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான இஷுரஸாத் மகமான ஸமுத்ரம் ஆவரித்த இருக்கும்
இந்த இஷுர சாத்மகமான ஸமுத்ரத்தை இதிலிரட்டு நாலு நூறாயிரம் பரப்பை உடைத்தான் ஸால் மலி த்வீ பம் ஆவரித்து இருக்கும் -அதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-ஸ்வேதம்
2-ஹரிதம் என்றும்
3-ஜீமுதம் என்றும்
4-ரோஹிதம் என்றும்
5-வைத்யுதம் என்றும்
6- மாநஸம் என்றும்
7- ஸூப்ரபம் என்றும் பெரி யுடையவையாய் இருக்கும்
இவற்றில் வர்ஷ பர்வதங்கள் ரத்ந உத்பத்தி ஸ்தா நமாய்க் கொண்டு
1-குமுதம்
2-உன்னரம்
3-பலாஹகம்
4- மஹவ்க்ஷதி ஸ்தானமான த்ரோணம் என்றும்
5- கங்கம் என்றும்
6- மஹிதம் என்றும்
7- ககுத்மாந் என்றும் ஏழுமாய் இருக்கும்
இவற்றில் ஆறுகளும்
1- யோநி என்றும்
2- தோயை என்றும்
3-வித்ருஷணை என்றும்
4- சந்த்ரை -என்றும்
5-ஸூக்லை என்றும்
6-விமோசநி என்றும்
7- நிவ்ருத்தி என்றும் ஏழாய் இருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -கபிலர்கள் என்றும்
அருணர் என்றும் பீதர் என்றும் கிருஷ்ணர் என்றும் பேராய் வாயு சரீரியான பகவானை அங்கே ஆராதிப்பர்கள்
இந்த ஸால் மலி த்வீ பம் என்கிற பேருக்கு ஹேதுவான ஸால் மலமாகிற வ்ருக்ஷம் முன்பு சொன்ன ஜம்பு ப்லஷங்களோ பாதி த்வீப நிர்வாஹக மாயிருக்கும் -இந்த ஸால் மலி த்வீ பம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான மதுர சாத்மகமான ஸமுத்ரத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும்
இந்தக் கடல் இதிலிரட்டியான எட்டு நூறாயிரம் யோஜநம் குஸ த்வீ பத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்
இதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன –
1-உத்பிதம் என்றும்
2-வேணுமான் -என்றும்
3-ஸ்வைரதம் -என்றும்
4- லம்ப நம் என்றும்
5-த்ருதி என்றும்
6-ப்ரபாகரம் என்றும்
7-கபிலம் என்றும் பேராய் இருக்கும்
இதில் வர்ஷாசலங்கள்
1-வித்ருமம் என்றும்
2-ஹேம சைலம் என்றும்
3-த்யுதிமான் என்றும்
4-புஷ்பவான் -என்றும்
5-குஸேஸயம் என்றும்
6-ஹரி என்றும்
7-மந்த்ரம் என்றும் ஏழாய் இருக்கும்
இதில் பிறந்த ஆறுகளும்
1-தூதபாபை என்றும்
2-சிவை என்றும்
3-பவித்ரை என்றும்
4-ஸூ மதி என்றும்
5-வித்யுதை என்றும்
6-அம்பை என்றும்
7-மஹீ என்றும் ஏழாய் இருக்கும்
இதை ப்ராஹ்மண-ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -தமிநர் என்றும் ஸூஷ்மிணர் என்றும் சைஹர் என்றும் மந்தேஹர் என்றும் பேராய் ப்ரஹ்ம ரூபியான ஸர்வேஸ்வரனை அந்த த்வீ பத்திலே தந்தாமுடைய கர்மா விதி பாரதந்ர்ய ரூபமான அதிகார ரஷார்த்தமாக ஆராதியா நிற்பர்கள் -இந்த குஸத்வீ பத்தினுடைய பேருக்கு நிர்வாஹகமான குசஸ்தம்பம் அந்தத்த்வீப மத்யத்திலே நிற்கும் -இந்த குசத்வீபாம் அத்தோபாதி பரப்பை யுடைத்தான நெய்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்
இந்த நெய்க் கடல் -இதிலிரட்டியான பதினாறு நூறாயிரம் பரப்பை யுடைத்தான கிரௌஞ்ச த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் – இதுவும் முன்பு போலே -ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-குஸலம் என்றும்
2-மநுகம் என்றும்
3-உஷ்ணம் என்றும்
4-ஸீவரம் என்றும்
5-அந்தகாரகம் என்றும்
6-முனி என்றும்
7-துந்துபி என்றும் பேராய் இருக்கும்
இதில் வர்ஷ பர்வதங்கள்
1-கிரௌஞ்சம் என்றும்
2-வாமனம் என்றும்
3-அந்த காரகம் என்றும்
4-ப்ரகாஸ கரமான ரத்ன சைலம் என்றும்
5-திவாவ்ருத் என்றும்
6-புண்டரீகவான் என்றும்
7-துந்துபி என்றும் ஏழாய் இருக்கும் –
இவற்றில் ஆறுகளும்
1-கௌரி என்றும்
2-குமுத்வதி என்றும்
3-ஸந்த்யை என்றும்
4-ராத்ரி என்றும்
5-மனோஜவை என்றும்
6-க்யாதி என்றும்
7-புண்டரீகை என்றும் ஏழாய் இருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -புஷ்கரர் என்றும் புஷ் கலர் என்றும் தன்யர் என்றும் திஷ்யர் என்றும் பேராய் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரனை யாகாதி கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள்
இந்த கிரௌஞ்ச த்வீ பாம் என்கிற பேருக்கு நிர்வாஹம் இதில் ப்ரதமமான வர்ஷ பர்வதமாயுள்ள கிரௌஞ்ச பர்வதம் தானேயாய் இருக்கும் -இந்த கிரௌஞ்ச த்வீ பாம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தயிர்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்
இந்தத் தயிர்க் கடல் இதிலிரடித்த 32 நூறாயிரம் யோஜனம் பரப்பை யுடைத்தான ஸாக த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் -இதுவும் ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-ஜலதம் என்றும்
2-குமாரம் என்றும்
3-ஸூ குமாரம் என்றும்
4-மரீ சகம் என்றும்
5-குஸூ மோதம் என்றும்
6-ஸம்மோதம் என்றும்
7- மஹா த்ருமம் என்றும் ஏழாயிருக்கும்
இதில் வர்ஷ பர்வதங்கள் -கிழக்கே
1-உதயகிரி என்றும்
2-ஜலதார கிரி என்றும்
3-ரைவதகம் என்றும்
4-ஸ்யாமம் என்றும்
5-அம்போகிரியான அஸ்த கிரி என்றும்
6-ஆம்பி கேயம் என்றும்
7-ரம்யம் என்றும் ஏழாயிருக்கும்
இவற்றில் ஆறுகள்
1-ஸூ குமாரி என்றும்
2-குமாரி என்றும்
3-நளினி என்றும்
4-வேணுகை என்றும்
5-இஷுமதி என்றும்
6- தேனுகை என்றும்
7-கபஸ்தி என்றும் ஏழாயிருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் வங்கர் என்றும் மா கதர் என்றும் மாநஸர் என்றும் மந்தகர் என்றும் பேராய்
ஸூர்ய ரூபியான ஸர்வேஸ்வரனைத் தம் தம்முடைய வர்ண அநுரூப கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள் – இவ்வர்ஷங்களிலே ஸ்வர்க்கத்திலும் புண்ய வசத்தாலே போந்த புருஷர்கள் பரஸ்பரம் ராக த்வேஷாதிகள் அற்று இந்த புண்ய நதிகளுடைய ஜலத்தை விநியோகம் செய்து கொண்டு நித்ய ஸூகி களாய் வர்த்திப்பார்கள்
இந்த சாக த்வீ பத்தினுடைய பேர்க்கு நிர்வாஹகமான சாக ஸ்தம்பமாகிற மஹா வ்ருக்ஷம் அந்த த்வீப மத்யே நிற்கும் -இந்த த்வீ பங்கள் ஆறிலும் யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஜம்பூ த்வீ பம் தொடங்கி ஒன்றுக்கு ஒன்று இரட்டியான த்வீ பங்களோ பாதி பர்வதங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்த நீளத்தையும் அகலத்தையும் உயர்த்தியையும் யுடைத்தாய் இரண்டு சமுத்ரங்களையும் பற்றி இருக்கும் -அதாவது
இரண்டு ஸமுத்ரத்துக்குள் நடுவு ஜம்பூ த்வீ பத்துக்கு ப்ரதாநங்களாய்க் கொண்டு நூறாயிரம் யோஜநம் கீழை மேலை நீளமும் இரண்டாயிரம் யோஜநம் உயர்த்தியையும் -அவ்வளவு பரப்பை யுமுடைத்தான நீல நிஷதங்களில் காட்டில் ப்லக்ஷ த்வீ பத்தில் வர்ஷ பர்வதங்கள் லவணேஷு ஸமுத்ரங்களுக்கு நடுவு இரண்டு நூறாயிரம் யோஜநா யாமத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் பற்றி நாலாயிரம் யோஜநம் உயர்த்தி யையும் அவ்வளவு விஸ் தாரத்தையும் யுடைத்தாய் இருக்கும்
இப்படி ஜம்பு ப்லக்ஷ மால் மலி குச கிரௌஞ்ச சாக பர்யந்தமாக யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று -இந்த சாக த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான ஷீராப்தி ஆவரித்து இருக்கும்
இந்த ஸாக த்வீ பத்துக்குள் அந்தர் பூதம் ஸ்வேத த்வீபம் -ஸாக த்வீபம் ஸமா வ்ருத்ய ஷீரோத சாகரஸ் ஸ்தித –ஸ்வேத த்வீபஸ் ச தந் மத்யே நாராயண பராயணா -என்று துடங்கி கூர்ம புராணத்தில் பூர்வ பாகத்தில் 48 வது அத்யாயத்தில் விஸ்தரேண ஸ்வேத த்வீப வர்ணநமும் தத்ரஸ்த புருஷர்களுடைய ரூபாதி வர்ணநமும் அவ் விடத்தில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரியா ஸார்த்தம் ஸ்ரீ மன் நாராயணனுடைய ஸ்வரூபாதி வர்ணநமும் சொல்லப் பட்டது இறே-
இந்த ஷீரார்ண வத்தை இதில் இரட்டித்து அறுபத்து நாலு நூறாயிரம் பரப்பை யுடைத்தான புஷ்கர த்வீ பம் ஆவரித்து இருக்கும் -இந்த புஷ்கர த்வீபம் நிர்வாஹக ராஜ பேதத்தாலே –
1- மஹா பீதம் என்றும்
2-தாடகீ ஸம்ஜ்ஞம் என்றும் -இரண்டு வர்ஷமாய் இருக்கும் –
இரண்டுக்கும் நடுவே மாநஸோத் தரம் என்று பேராய் 50000 யோஜநம் உயர்த்தியை யும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய்க் கொண்டு மதிள் இட்டால் போலே மண்டலமாகார மானதொரு வர்ஷ பர்வதமாய் இருக்கும் -இதில் மஹா பீத மலை புறம்பில் வலயமாய் இருக்கும் -தாடகீ உள்ளில் வவலயமா யிருக்கும் -இவற்றில் வர்த்திக்கிற புருஷர்கள் 16000 வயஸ் ஸு புகுருவர்கள் -ஆதி வ்யாதி களும் ராக த்வேஷாதி களும் அற்று இருப்பர்கள் -ஸர்வரும் உத் க்ருஷ்ட ராகையாலே அதம உத்தம விபாகம் இல்லை-ஸத்யம் ஒழிய நடவாமையாலே ஸத்யாந்ருத விபாகம் இல்லை -அவ் விடத்தில் பர்வதங்களும் நதிகளும் அபேக்ஷிதங்கள் இல்லை-
அவ் விடத்தில் மனுஷ்யர்கள் தேவர்களோடு ஒத்த வடிவை யுடையவர் களாய் இருப்பர்கள் -பவ்மமான ஸ்வர்க்கமாய்க் கொண்டு போக பூமியாய் இருக்கையாலே வர்ணாஸ்ரம ஆசார அபேக்ஷையும் பல சாதந தர்மார்ஜந அபேக்ஷை யும் அற்று யுத்தமமான தேசமாய் இருக்கும் இந்த புஷ் கரத்திலே ப்ரஹ்மா வுக்கு ஸ்தானமாய் புஷ்கரம் என்று பேராய் இருபத்தொரு ஆலயத்திலே பதினாயிரம் தளமாய் இருபத்தொரு தாமரைப் பூவின் மேலே ப்ரஹ்மா தேவா ஸூரராலே ஆராதிதனாய் இருக்கும் அந்த புஷ்கரம் இந்த த்வீ பத்தினுடைய பேருக்கு ஹேதுவாய் இருக்கும் -இந்த புஷ்கர த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தண்ணீர்க் கடல் ஆவரித்து இருக்கும்
இப்படி ஸப்த த்வீப ப்ரமாணமான ஸப்த ஸமுத்ரங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று –இந்த ஸமுத்ர ஜலங்களுக்கு சந்த்ர உதய அஸ்தமிதங்களில் வ்ருத்தி ஷயங்களாய் இருக்கும் -இப்படி ஸப்த த்வீப ஸமுத்ர ஸஹிதமான பூ மண்டலம் மேரு மத்யமாக இரு பக்கமும் (வடக்கும் தெற்கும் சேர்ந்து)ஐந்து கோடி ஏழு நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைத்தாய் இருக்கும் -இது மநுஷ்யாதி ஜனங்களுக்கு ஆவாஸ யோக்யமான பூ மண்டல பரிணாமம் இதுக்குப் புறம்பே மநுஷ்யாதி ஸஞ்சார யோக்யம் இன்றியிலே லோகாலோக பர்வதத்தளவும் கண்ணாடிப் புறம் போலே நிர்மலமாய் ஸ்வர்ண மயமாய் முன்பு சொன்ன பூ மண்டலத்துக்கு இரட்டியாய்- பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ஸ்தல விசேஷத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும் -இத்தைப் பதினாயிரம் யோஜநம் உயர்த்தியையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தான லோகாலோக பர்வதம் ஆவரித்து இருக்கும் -இதில் மஹா மேருவைத் தொடங்கி சக்ர வாளாத்ரி முடிவாகப் பன்னிரண்டரை கோடி பதினேழு நூறாயிரத்து அறு பதினாயிரம் அளவாய் இருக்கும் –
எங்கனே என்னில் -முன்பு லோக பரிமாணாகச் சொன்ன ஐந்து கோடி ஏழு நூறாயிரத்தில் மத்யமான மேருவுக்கு ஒரு பக்கம் இரண்டரை கோடி மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமும் -இதுக்குப் புறம்பான ஜன ஸூந்ய தர்ப்பண தேஸம் பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜனமும் சக்ர வாளாத்ரி பதினாயிரம் யோஜனமுமாய் பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் யோஜனமுமாய் இருக்கும் என்றதாயிற்று -இந்த சக்ர வாளத்ரிக்கு அப்பால் அண்ட கடாஹ பர்யந்தமாகப் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் குறைந்த பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் இருக்கும்
ஆக மஹா மேருவுக்கு ஒரு பக்கம் 25 கோடியாய் மற்ற பக்கமும் இப்படியாகையாலே ஆயாம விஸ்தாரங்கள் பஞ்சாஸத் கோடியாய் பூ பரி மண்டலம் -இதில் மும் மடங்கான 150 கோடி யோஜனம் ஆயாம விஸ்தாரமாய் இருக்கும் -இத்தை வராஹ புராணத்திலே பூ மண்டலந்து சத கோடி விஸ்தாரம் ச அண்ட கடாஹம் என்று மஹா மேருவைச் சூழ பஞ்சாஸத் கோடியாய் பூ மண்டலம் அடைய சத கோடி விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது
இப்படியே -ஸ்கந்த புராணத்தில் சிவ ரஹஸ்யத்திலும் விஸ்தரேண சொல்லப்பட்டது -கோடி த்வயம் த்ரி பஞ்சாஸத் லஷாணி ச தத பரம் -பஞ்சாஸச் ச ஸஹஸ்ராணி ஸப்த த்வீபாஸ் ஸ ஸாகரா –ததோ ஹிரண் மயீ பூமி தச கோட்யோ வராநநே தேவா நாம் க்ரீட நார்த்தாய லோகாலோகஸ் தத பரம் பர்வதோ வலயகாரோ யோஜநாயுத விஸ்த்ருத –தஸ்மாத் பாஹ்யம் தமோ கோரம் துஷ் ப்ரேஷம் ஜீவ வர்ஜிதம் -பஞ்ச த்ரிம் ஸத் ஸ்ம்ருதா கோட்யோ லஷாண்யே கோந விம்சதி ஸத்வாரிம் ஸத் ஸஹஸ்ராணி யோஜநாநாம் வராந நே -ஸப்த சாகர மாநம் து கர்த்தோதஸ் ததனந்தரம் -கோடி யோஜந மா யாநந்து கடாஹஸ் ஸம் வ்யவஸ்தித -என்று சொல்லுகையாலே
மேருவுக்கு ஒரு பக்கம் ஐம்பது கோடியாய்- மற்ற பக்கமும் அப்படியே ஆகையாலே -ஆக சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுகிற பக்ஷம் ஸாஸ்த்ரீயமான மாநாங்குளாதிகளைப் பற்ற லௌகிக மாநாங்குளம் அர்த்தாம்சமாகையாலேயும் ஹஸ்தமாகிற தச்ச முழத்தில் அவிதஸ்தி யாகிற லௌகிக ஹஸ்தம் அர்த்தாத்சமாய் அதில் இரட்டிப்பாலே சொல்லிற்றாம் இத்தனை
ஸாஸ்த்ரீ யாங்குள சித்தைர் யோஜனை பஞ்சாஸத் கோட்ய ஏவ லௌகிகாங்குளி ஸித்த யோஜனை சத கோட்யஸ்ஸ்யு –இதி ஸ்ரீ விஷ்ணு சித்தீய அநு ஸாரேண அவிரோதேந நேதவ்ய இத் யபிப்ராய —
பஞ்சஸாத் கோடியே ஸர்வத்ர அவிருத்தமாகக் கடவது -இதில் சக்ர வாளாத்ரிக்கு அவ் வருகு தாமஸ பூதங்கள் வர்த்திக்கும் தேசமாய் கோராந்த காரமுமாய் கர்த்தோத முமாய் இருக்கும் -அதுக்கு அவ் வருகு மஹா புருஷ ஸ்தானமாய் அண்ட கடாஹத்துக்கு நடுவே எங்கும் ஒக்கக் கீழ் மேல் எங்கும் சூழ்ந்து வைகுண்டாக்ய மஹா லோகங்களாய் இருக்கும்
இப்படி ஸ்ரீ பாகவதத்திலும் -10-8-9- வைதிக புத்ர ஆநயன வ்ருத்தாந்தம் -பார்க்கவும் –
ஹரி வம்சம் மூன்று ஸ்லோகத்திலும் வைதிக புத்ர ஆநயன ப்ரஸ்தாவத்திலே இந்த பகவஸ்லோகங்கள் வர்ணிக்கப் பட்டன
ஹரி வம்சே விஷ்ணு பர்வணி -115–11-12-13-ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்டவா நஸி- அஹம் ஸ பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸனாதனம் -ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்தா வ்யக்தா ச பாரத -தாம் ப்ரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரத சத்தம –ஸா சாங்க்யா நாம் கதி பார்த்த யோகி நாஞ்ச தத் பரம் பரமம் ப்ரஹ்ம ஸர்வம் விபஜதே ஜகத் — கோடி யோஜந மாநந்து கடாஹ ஸம் வ்யவஸ்தித -என்று அண்ட கடாஹம் ஒரு கோடி யோஜநம் அடிப்பத்தை (அகலத்தை தடிமனை)உடைத்ததாகச் சொல்லப்பட்டது
இப்படி அண்ட கடாஹத்துக்கு நடுவுள்ள பூ விஸ்தாரம் பஞ்சாஸத் கோடியானவோபாதி ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவுள்ள உயர்த்தியும் பஞ்சாஸத் கோடியாய் இருக்கும் –
யோஜனமாவது –
ஜால காந்த ப்ரவிஷ்டே அர்க்க ரஸ்மவ் த்ருஸ்யாத்ருசாஸநை –ஏதே அணவ இதி க்யாதாஸ்த -ஏவ பரமாணவ -தேப்ய பரதரம் நாஸ்தி பரமாணு கதஞ்சன -ஏஷாம் அஷ்ட குணோ ரேணுபிஸ் -ச அஷ்டபி பரைஸ் ரோமாக்ர இதி நிர் திஷ்டம் லிக்யா லோம பிர் அஷ்டபி -லிக்ய அஷ்ட குணிதா யூகா- யூகாஷ்ட குணிதா யவா -யவாஷ்ட குணிதம் யத் தன்மாநாங்குளம் உதா ஹ்ருதம் -ஸ்வஸ்ய தக்ஷிண ஹஸ்தஸ்ய மத்யமாங்குளி பர்வணா மத்யமேந மிதம் யத் தன்மாத்ராங்குள மிதி ஸ்ம்ருதம் ஹஸ்தோங்குளி விம்ஸத்யா சதுரஞ்சி தயா சதுஷ் கரோ தண்ட -தண்டா நாம் பஞ்ச சதம் கோஸம் ச த்வி குணம் அர்த்த கவ்யூதம் -தத் த்வி குணம் கவ்யூதம் த்வி குணம் யோஜநம் வித்யாத் -என்று சொல்லுகிறபடியே
ஜாலக ரந்தரத்திலே ஆதித்ய கிரணங்களிலே தோற்றுகிற த்ரச ரேணுகளுக்கு அணு என்று பேராய -அந்த பரமாணுக்கள் எட்டுக் கொண்டது ரேணுவாய் -ரேணு எட்டுக் கொண்டது மயிர் நுனியாய் -ரோமாக்ரம் எட்டுக் கொண்டது ஈராய் -ஈரு எட்டுக் கொண்டது பேனாய் -பேன் எட்டுக் கொண்டது நெல்லாய் -நெல் எட்டுக் கொண்டது மானாங்குளமாய் -மா நாங்குளம் இருபத்து நாலு கொண்டது ஹஸ்தம் என்று சொல்லப்பட்ட தச்ச முழமாய் – ஹஸ்தம் நாலு கொண்டது கோலாய் -கோல் 500 கொண்டது கோஸமாய் -கோஸம் இரண்டு கொண்டது அரத்த கவ்யோதியாய் -அது இரட்டித்தது கவ்யூதியாய்-கவ் யூதி இரட்டித்தது யோஜனம் என்கிற மாநாங்குள மர்யாதையாலும் புருஷனுடைய தக்ஷிண ஹஸ்தத்தில் மத்யமாங்குளி மத்யம பர்வத்தாலே பரிமிதமான மாத்ராங்குள மர்யாதையாலும் ஹஸ்த விதஸ்தி பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று அர்த்தாம்சமாய் இருக்கையாலும் பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ணை யான பூமியை சத கோடி ப்ரமாணை என்கிற வாராஹாதி வசனங்களுக்கு விரோதம் இல்லை
இதி தத்வ நிரூபணே ஸாதாரண பூ மண்டல நிரூபணம் நாம த்ருதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –———
சதுர்த்தாதிகாரம்— நரக நிரூபணம்
1- நரக நிரூபணம்
2-நரக ஸ்தாந நாமாதி நிரூபணம்
3-பிராயஸ் ஸித்த நிரூபணம்
4-அந்தரிக்ஷ லோகாதி நிரூபணம்
5-ஆதித்ய சந்த்ர நக்ஷத்ர புத ஸூக்ர அங்காரக ப்ருஹஸ்பதி ஸநி ஸப்த ரிஷி த்ருவாதி பத நிரூபணம்
6-பூர் புவஸ் ஸூவ ராதி லோக நிர்ணயம்
7-ஸத்ய லோக அந்தர்கத சதுர் முக ஸிவ விஷ்ணு லோக நிரூபணம்
8-அக்ருதக க்ருதக க்ருதாக்ருதக ஸப்தார்த்த நிரூபணம்
இப்படி புண்ய பாப அர்ஜநாதி களுக்கு யோக்யமான பூ மண்டல நிரூபணம் பண்ணிற்றாய் அநந்தரம் இவற்றினுடைய பல போக ஸ்தானம் நிரூபிக்க ப்படுகிறது -அது போக்தாவான சேதனனுக்கு வைராக்ய ஹேதுவாகையாலே முதல் பாப பல ரூபமான நரகங்கள் நிரூபிக்கப் படுகின்றன
இந்த நரகங்களுக்கு ஸ்தானம் -அந்தராள ஏவ த்ரி ஜகத்தியஸ் (க்ருதக -அக்ருதக -க்ருதக்ருதக என்று மூன்றும் -10-1-3-இவற்றுக்கு உள்ள)ச திசி தஷிணஸ் யாம் அதஸ்தாத் பூ மேருபரிஷ்டாச் ச அண்ட ஜலாஸ்யஸ்ய –பாகவதம் -5-26-5- என்று ஸ்ரீ பாகவதத்திலேயும்
ததஸ்து நரகா விப்ரா புவோதஸ் ஸலிஸ்ய ச பாபிநோ யேஷு பஸ்யந்தே தான் ஸ்ருணுஷ்வ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -கீழே அண்ட கடாஹத்தின் மேலான கர்ப்போதக ரூபமான ஜலாசயத்தின் மேலான பாதாளத்திலே நரக ஸ்தானங்களாய் இருக்கும் –
அவையாவன -ரௌரவஸ் ஸூகரோ ரோதஸ்தாலோ விஸஸநஸ் ததா மஹா ஜ்வாலஸ் தப்த கும்போ லவண உத விலோஹித ருதி ராம்போ வைதரணி க்ரிமிஸ க்ரிமி போஜன -அஸி பத்ர வனம் கிருஷ்ணோ லாலாபஷஸ் ச தாருண ததா பூத வஹ பாபோ- வஹ்நி ஜ்வாலோ ஹ்யதஸ் ஸிரா -சந்தம் ஸ க்ருஷ்ண ஸூத்ரஸ் ச தமஸ் சா வீசி ரேவ ச ஸ்வ போஜனஸ் சா ப்ரதிஷ்டோ ஹ்யவீசிஸ் ச ததா பர இத்யேவ மாதயஸ் சாந்யே நரகா ப்ரு ஸதாருணா யமஸ்ய விஷயே கோராஸ் சஸ்த்ர அக்நி பய தாயிந பதந்தி யேஷு புருஷா பாப கர்ம ரதாஸ்துயே –ஸ்ரீ விஷ்ணு புரா -2-6- என்று விஷ்ணு புராணத்திலும்
பூ மேரதஸ்தி தோ கோர உஷ்ணாத்மா ரௌரவோ மஹான் ஸூதாரணஸ் து ஸீதாத்மா தஸ்யாதஸ்தாத் தமஸ் ஸ்ம்ருத நிக்ருந்தந க்ருஷ்ண ஸூத்ரோ மோஹஸ் சாப்யதிதாருண அகோரஸ்து வத ப்ரோக்தோ நவ ஸ்தாநோ ப்ரதிஷ்டித -ஏகீ பூத சரீரஸ் ச விவேச் யோ அவீசிரேவ ச ஸூ கோரோ தாருணோ ரோத மஹா ரௌரவ ஏவ ச –வாயு உ 39-175-176- என்று வாயவ்யத்திலும் சொல்லுகிறபடியே நரகங்கள் அசங்க்யாதங்களாய் இருக்கும் –
பாகவதம் -5-26-தத்ர ஹைகே நரகா நேக விம்சதிம் கண யந்தி என்று தொடங்கி அஷ்டா விம்சதி நரக நாமாதிகளை விஸ்தாரமாகக் காணலாம்
இவற்றில் ரௌரவம் என்று பேராய் பரிதாப ரூபமான நரகத்திலே ஸாக்ஷி அறிந்து சொல்லாது இருக்குமவனும்- அந்யதாகச் சொல்லுமவனும் -கூழை ஸாக்ஷியும் தர்மாதி க்ருதனாய் வைத்து அஸம்யக் பாஷணம் பண்ணுமவனும் -பக்ஷ பாதியும் -அஸத்யவாதியும் ப்ரவேசிப்பார்கள்
கூட ஸாஷீ ததா ஸம்யக் பக்ஷ பாதேந யோ வதேத் -யஸ் சான்ய தந்ருதம் வக்தி ஸ நரோ யாதி ரௌரவம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-7-இத்யாதி ஸ்லோகங்களைப் பற்றியே மேலில் வாக்யங்கள் என்று கண்டு கொள்க –
இந்த ரௌரவ ஸூகரங்களாகிற நரகங்கள் ருருவும் ஸூ கரமுமாகிற மான் பன்றிகளைக் கொல்லும் ப்ரகாரத்திலே பீடிக்கை என்று ஸ்ரீ பாகவதத்திலே சொல்லப்பட்டது -5-26-11-
ப்ரூண ஹாவும் புர ஹந்தாவும் கோக்நனும் உச்ச்வாஸ நிரோதகனும் குழியைக் கல்லில் புதைக்கை யாகிற ரோதம் என்கிற க்ரூர நரகத்தை அடைவர்கள் -இதில் ப்ரூண ஹாவாகிறான் -கர்ப்ப வாஸம் பண்ணினவனாதல் -விஸிஷ்ட ப்ராஹ்மண ஹந்தாவாதல் -அதாவது -உப நீத மாத்ரோ ப்ரஹ்ம சாரீ வேதாநாம் கிஞ்சித் அதீத்ய ப்ராஹ்மண -ஏகாம் ஸாகாம் அதீத்ய ஸ்ரோத்ரிய -அங்காத் யாயீ ஹ்யநூசாந- கல்பாத் யாயீ ருஷி கல்ப -ஸூத்ர ப்ரவச நாத் யாயீ ப்ரூண –சதுர் வேத தரோ ருஷி -அத ஊர்த்வம் தேவா -என்று போதாயந பகவான் சொன்னபடியே
ப்ரூணனாகிறான்-சூத்ர ப்ரவசந அத் யாயியான விஸிஷ்ட ப்ராஹ்மணன் -ஸூராபனும் ப்ரஹ்ம ஹந்தாவும் ஸூவர்ணத்தை ஷோடஸ மாஷத்தளவு (16 உளுந்து அளவு)அபஹரித்தவனும் -குருதல்பகனும்-இவர்களோடு ஓக்க ஒரு ஸம்வத்ஸரம் வசித்தவனும் ஸூkara நரகத்திலே விழுவர்கள்
ராஜாவையும் வைஸ்யர்களையும் கொன்றவனும் குரு தல்பகனும் தாலமாகிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது மஹா ப்ரமாணமான பனை மரத்திலே ஏறவிட்டுத் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-10–ஸாத்வியான ஸ்திரீயை விற்றவனும் சிரைக் கூறு செய்யுமவனும் குதிரை விற்குமவனும் பக்த பரித்யாகியும் ஸ்வ ஸாகாமியும் ராஜ பட ஹந்தாவும் தப்த கும்பத்திலே விழுவர்கள் -அதாவது காய்ந்த எண்ணெய்க் குடத்திலே புகட்டு எரிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-
குருக்களை அவமதி பண்ணினவனும் வேதத்தை தூஷித்தவனும் -வேதத்தைக் கூலிக்கு விற்பவனும் மாதுளை ஸ்த்ரீ கமநம் பண்ணினவனும் லவணம் என்கிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது அக்னி மையமாக எரிகிற உப்பு மண்ணிலே புரட்டு சுடுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-12-13-
ஸதாசாரங்களாலே ஸித்தமான மர்யாதா தூஷகனும் -தேவ ப்ராஹ்மண குரு பித்ருக்கள் பக்கலிலே த்வேஷம் பண்ணினவனும் க்ரிமி பஷ்யத்திலே விழுவர்கள் -அதாவது ஸூ தீஷ்ண தம்ஷ்ட்ராஸ்ய ஜலூகாதி க்ரீமி கீடம் கடித்து அந்த தாமிரஸ்ர கூபத்திலே சுழற்றித் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-15-
பித்ரு வேத ஸூரரைப் புறம்பிட்டு பஞ்ச மஹா யஜ்ஞ பராங்முகனாய் முதலிலே தனக்கு என்னாக்கி உண்கிறவன் லாலாபக்ஷத்திலே விழுவார் -அதாவது காறி யுமிழ் எச்சிலை பஷிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-16- –
சிலுக்கோலான அம்புமுத் கரங்கள் பண்ணுமவனும் வாள் சொட்டை தொடக்கமான ஆயுதங்கள் பண்ணுமவனும் விசசனத்திலே விழுவர்கள் -அதாவது எரி எழக் காய்ந்து ஷுரப்ரங்களான ஆயுத கூபத்தில் விழுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-17-
அசத்தான பதார்த்தங்களை பரிக்ரஹித்தவர்கள் அதோ முகத்திலே விழுவர்கள் -அதாவது -தப்த்த ஸ்ருங்க லயா பத்தராய் அதோ முகோர்த்வ பாதராய் ஜ்வாலா ஸூராப கூபத்திலே நலிவு படுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-18–
சாஹஸியும் தனித்து ம்ருஷ்டான்ந யஜனம் பண்ணுமவனும் -அரக்கு மாம்ஸ ஷீர மத்வாதி ரஸ த்ரவ்யங்களையும் எள்ளுப் பூ விற்குமவனும் ப்ரயவஹத்திலே விழுவர்கள் -அதாவது கோர துர்க் கந்தா வஹமான சீயாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-20-
அல்லுப் பொரி விற்று யதேஷ்டமாகப் பானையோடே உண்ணுமவனும் -விஷத்தை இடுமவனும்- ராஜ காமியாம் படிக் கோள் சொல்லுமவனும்- ஸ்த்ரீ முகத்தாலே ஜீவித்தல் பர்வமன்றி இருக்க அபர்வத்திலே கார்யம் செய்யுமவனும்- பர்வத்திலே நிஷித்தமான தைல ஸ்த்ரீ மாம்ஸாதி ஸேவை பண்ணுமவனும் -அகங்களை நெருப்பு வைத்துச் சுடுமவனும் மித்ர வஞ்சகனும் பக்ஷி நிமித்தம் சொல்லுமவனும் பக்ஷி பிடித்து விற்று ஜீவிக்குமவனும் ஸ்ரம யாஜகனான ஷடங்கியும் இவர்கள் ருதி ராம்பத்திலே விழுவர்கள் -அதாவது பூய ஸோணித ஸம் பூர்ண அக்னி ஜ்வாலா ரூப கூபம் –ஸ்ரீ விஷ்ணு புரா 2-6-22-
தேன் கூண்டைக் கலக்குமவனும் க்ராமத்துக்குக் கேடு செய்யுமவனும் வைதரணியை அடைவர்கள் -அதாவது -அக்னி மயமான நெய்யாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-26-24-
தனத்தாலும் யவ்வனத்தாலும் மத்தராய் க்ராமஸீ மாதிகளை பேதித்தவர்களும் அஸூத்தரும் இந்த்ர ஜாலாதிகள் காட்டி ஜீவித்தல் ஸடராய் ஜீவித்தல் செய்யுமவர்களும் க்ருஷ்ணம் என்கிற நரகத்திலே விழுவார்கள்-அதாவது அக்னி மயமான கறுத்த இரும்பு முளைகளாலே செறிந்த தரையிலே நடக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-25-
கிடாய் வளர்ப்பாரும் ம்ருகம் பிடிப்பாரும் வ்ருஷச் சேதகரும் ப்ரஹ்மசாரியாய் இருந்து பகல் உறங்கி ஸ்வப்ன இந்த்ரிய பதனம் பிறந்தவனுக்கு ஸ்வ போஜனத்திலே விழுவர்கள் -அதாவது நாயாலே இழுப்புண்டு கடியுண்டு க்லேசிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா-2-6-29-
பர ஸ்த்ரீ கமனம் பண்ணுவாரும் அகம்யாகமநம் பண்ணுவாரும் எரி எழுகிற செம்பினாலே இயன்ற பாவையைக் கட்டி ஆலிங்கனம் பண்ணுவர்கள் –
இப்படி அபஷ்ய பக்ஷணம் -அபோஜ்ய போஜனம் -அபேய பாநம் -அயாஜ்ய யாஜனம் அஸத் பரிக்ரஹம் -பர தாரா அபி கமநம்- நீச பாபிஷ்ட ஸேவை -பர த்ர வ்யாபஹாரம் -ப்ராணி ஹிம்ஸை முதலானவை என்று காயிகமாகச் சொல்லுகிறவையும் –இவ்விடத்திற்கு அனுகுணமான வசனங்கள் -மநு ஸ்ம்ருதியில் -12-7- காண்க –
பாருஷ்யம் அன்ருதம் பை ஸூந்யம் -அசம்பத்த ப்ரலாபம் -விவாதம்- ஸ்ருதி விக்ரயம் -பராப வாதம் முதலானவை -மனு-12-6- என்று வாசகமாகச் சொல்லுகிறவையும்
பரோபதாபநம்- பராபி த்ரோஹம்- க்ரோதம்- காமம் -லோபம் -மோகம் -மதம் -மாத்சர்யம் அஹங்காரம் விததாபி நிவேசம்-மநு -12-5- என்று மாநஸமாகச் சொல்லுகிறவையும் தொடக்கமான த்ரிவித கரண தோஷங்களை ஆராய்ந்து யாத்ருச சரீரே யதவஸ்தா வஸ்திதானாய்ச் செய்கிறான் -தாத்ருஸ சரீர தத்வஸ்தா ரூபமாய் தஹந சேதன பேத நாதிகளிலும் விடாதே யாம்ய யாதனைகளை அனுபவிக்கைக்குக் உடலாக ஸூத்ருடமாய் இருபத்தொரு ஸரீரத்தை பரிக்ரஹிப்பித்து நரக யாதனைப் படுத்தும் -மநு- யாதிரு ஸேநது பாவேந யத் யத் கர்ம நிஷேவதே தாத்ருஸேந சரீரேண தத் தத் பலமுபாஸ் நுதே -12-18-
இத் தோஷங்களினுடைய யாதனை எங்கனே என்னில் -இவனை ஈர வளாலே அறுத்து உவடி தரையிலே புரட்டி ஜம்பீர ரஸ மய வாபியிலே அழுத்தி அக்னி மயமான தைலத் ரோணியிலே பொகட்டு எரித்தும் தீக்ஷண பர ஸூவினாலே சந்தி பந்தங்களிலே சேதிக்கப் பட்டு காகோலுக கங்க க்ருத் ரங்களுக்கும் பேய்க்கும் நாய்க்கும் சதை பறியுண்டு க்லேசிப்பித்தும் -அதுக்கும் மேலே அஸி பத்ரவனமாகிற வஜ்ர மய ஸிதாக்ரதாரா யுக்த -இலைக் கள்ளிக் காட்டிலே பட்ட விடமெங்கும் கண்டிக்கும் படி விட்டு எறிந்து கவணிலே வைத்து எறிந்தும் அத் யுச்சராய பர்வத சிகரத்திலும் ஸர்வ அவயவங்களும் சூர்ணித்தமாம் படி தலை கீழாய்த் தள்ளியும்
காஞ்ச காறாலும் -வறுத்த மணலிலும் இட்டுப் புரட்டுவது சந்தப்த கும்பத்திலே அறுத்துண்டு மூடி மஹா ஜ்வாலாக்னியாலே பசிப்பது-இப்படிக் கட்டுமது வெட்டுமது நெருக்குண்பது தள்ளுண்பதான நாநா வித நரகங்களிலே யாதனைப் படுவர்கள் -இந்நரகங்கள் தேஷாம் சங்க்யா ந வித்யதே -என்கிறபடியே அசங்க்யா தங்களாய் இருக்கும் -இனி மஹா பாதகங்களைப் பண்ணின புருஷர்களை இங்குச் சொன்னவை முதலாகக் கொண்டு அல்லாத வற்றிலும் பர்யாயேண ப்ரவேசித்து யாதனைப் படுவர்கள்
இப்படி வாங் மன காயங்களாலே வர்ணாஸ்ரம விருத்தமான துஷ் கர்மங்களைப் பண்ணி நரகத்திலே நின்று யாதனைப் படுவர்கள் -ஸ்வர்க்கத்திலே இருக்கும் தேவர்களை அந் நிலையிலே கண்டு தங்கள் துக்கத்துக்கு மிகவும் கிலேசியா நிற்பர்கள் -அந்த தேவர்களும் அதோ முகராய் கிலேசிக்கிற நரகங்களைக் கண்டு நாமும் புண்ய ஷயத்திலே இந்நரகங்களிலே வீழில் செய்வது என் -என்று -ஸ்வர்க்கோபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி –ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50-அஸந்தோக்ஷஸ் ச பவதி த்ருஷ்ட்வா தீப்தம் பரஸ்ஸ்ரியம் -என்கிறபடியே அங்கிருந்து பண்ணுகிற ஸூக அனுபவமும் நெஞ்சில் படாதே உண்டது உருக்காட்டாதே கிலேசியா நிற்பர்கள் –
பஹுன் வர்ஷ சதான் கோரான் நரகான் ப்ராப்ய தத் ஷயாத் சம்சாரான் ப்ரதிபத்யந்தே மஹா பாதகி நஸ்த்விமான் -மநு -12-54- என்கிறபடியே ஒவ்வொரு க்ஷணங்களிலே பண்ணின பாபங்களுக்கு பலமாக அநேகமாயிரம் ஸம்வத்சரங்கள் அதி கோரமான நரகங்களிலே ஐயோ என்பாரும் அன்றியே தனியே கிடந்து உழைந்து இந் நரகங்களிலே புக்த சேஷமான கர்மங்களை அநுபவிக்கைக்காக அங்கே அவ்வோ யோநி விசேஷங்களிலே வந்து பிறக்கும்படியும் இப்படிப் பிறக்கும் போது வாசிகை பசி ம்ருகதாம் மாநஸை அந்த்ய ஜாதிதாம் -சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -மநு -12-9- என்று வாசிகாபராதத்துக்கு பக்ஷி ம்ருகங்களாயும் மானஸா பராதத்துக்கு சண்டால மாதங்கனாயும் காயிகத்துக்கு வ்ருஷ குல்ம லதாதிகளாயும் பிறக்கும்படியும் எந்த கரணம் கொண்டு அபராதம் பண்ணினான் அந்தக் கரணத்தை குண்டிதமாக்கி விடும்
அதில்–ப்ரஹ்மஹத்யா பலமாக -ஸ்வ ஸூகர கரோஷ்ட்ராணாம் கோஜாவி ம்ருக பக்ஷிணாம் -சண்டால புல்க ஸாநாம் து ப்ரஹ்மஹா யோநி ம்ருச்சதி -மனு -12-55- என்று நாய் பன்றி
கழுதை ஒட்டகம் வஸூ ஆடு செம்பிலிமான் பக்ஷி சண்டாலர் தொடக்கமான யோனிகளிலே -க்ரமஸோ யாந்தி லோகேஸ்மின் -12-53- என்று அடைவே பிறக்கும் படியாகவும் –
க்ரிமி கீட பதங்காநாம் விட் புஜாம் சைவ பக்ஷிணாம் ஹிம்ஸ்ரா நாஞ்சைவ சத்வாநாம் ஸூராபோ ப்ராஹ்மணோ வ்ரஜேத் -12-56- என்று ஸூரா பாந பலமாக கிருமி கீட பதங்கா மேத்ய புக்கான பக்ஷிகள் மற்றும் ஹிம்ஸா செல்லமான பதார்த்தங்கள் தொடக்கமான யோனிகளிலே ஒரு தடவை பிறக்கை இன்றிக்கே மடித்து மடித்துப் பிறக்கும்படியும்
லூதாஹி சரடா நாம் ச திரஸ் சாம் ச அம்பு சாரிணாம் ஹிம்ஸ்ராணாம் ச பிஸாசாநாம் ஸ்தேயோ விப்ரஸ் ஸஹஸ்ரஸ -12-57-என்று பர த்ரவ்ய அபஹாரத்துக்கு பலமாக சிலந்தி பாம்பு ஹிம்ஸா சீல ஐந்து ஜலசர ஜந்துக்கள் பர பார்த்தகமான பேய்கள் தொடக்கமான யோனிகளிலே நாலு பத்து பர்யாயம் பிறகும் அளவன்றியிலே நாலாயிரம் பர்யாயம் மடித்து மடித்துப் பிறக்கும் படியும் –
த்ருண குல்ம லதா நாஞ்ச க்ரவ்யாதாம் தம்ஷ்ட்ரிணாம் அபி க்ரூர கர்ம ரதா நாஞ்ச சதாசோ குருதாபக -என்று குரு தல்பாகமான பாபத்துக்கு பலமாகப் புல்லு தூறு கொடி காயும் மாம்ஸாசிகளான ஸ்வாநாதி யோனிகளிலும் க்ரூர கர்மரதமான மனுஷ்ய யோனிகளிலும் பிறந்து சத ஸஹஸ்ர வாரம் கிலேசிக்கும் படியாகவும் –
ஸம் யோகம் பதிதைர் கத்வா பரஸ் யைவ ச யோஷிதாம் அபவ்ருத்யாபி விப்ரஸ்வம் பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா -12-60-என்று பதித ஸம் சர்க்க தோஷத்தாலே ப்ரஹ்ம ராக்ஷஸ யோனியிலே மடித்து மடித்துப் பிறக்கும்படியாகவும்
இப்படி -இந்த்ரியாணாம் ப்ரசங்கேந தர்மஸ்யாஸேவ மேந ச பாபாஸ் ஸம் யாந்தி ஸம்சாராந வித்வாம்ஸோ நராதமா -மனு 12-52-என்றும்
ஸ்வேப்ய ஸ்வேப்யஸ் து கர்மப்ய ஸ்யுத வர்ணா ஹ்யநாபதி பாபாஸ் ஸம் ஸ்துத்ய ஸம் ஸாராத் பரே ததாம் யாந்தி தஸ்யுஷு -12-70-என்றும்
யத்வா தத்வா பர த்ரவ்ய மப ஹ்ருதய பலான் நர அவஸ்யம் யாதி திர்யக்த்வம் ஜக்த்வா சைவாஹுதம் ஹவிஸ் -மனு -12–68-என்று
விஷயாதி பிரசங்கத்தாலும் தர்ம அனுஷ்டானத்தில் உபேக்ஷையாலும் ஆபத்தன்றியிலே இருக்க ஸ்வ தர்ம அனுஷ்டான பிரஸ் யுதியாலும் அந்த பாப அநு ரூபமாக ப்ராயச் சித்தங்களில் பராங்முகனாகையாலும் பாப யோனிகளிலே பிறந்து -அனந்த்ரம் பேய்களாக பிறந்து பின்னையும் சோரர்களாய் பிறப்பார்கள்
ஸ்த்ரி பார்யாஸ் த்வ முப யாந்தி தா -மனு -12-69- என்று ஸ்த்ரீகளாய் ஸுர்யாதி பாபத்தைப் பண்ணினவர்கள் ஸ்வ ஸூகராதி யோனிகளிலே பிறந்தவர்களுக்கு பார்யைகளாய்ப் பிறக்கும் படிகளையும் ஆராய்ந்து பிறந்த பிறந்த ஜென்மங்கள் தோறும் பிரிய வஸ்து வியோகத்தாலும் அப்ரிய வஸ்து சங்கத்தாலும் ஜரா பீடையாலும் வியாதி பீடையாலும் கிலேசிக்கும் படியும் -தோஷ த்ரய உத்ரேகத்தாலும் விகாரமான ரோக ஸஹஸ்ரத்தாலும் யம கிங்கரனுடைய பீடையாலும் புத்ராதி பரித்யாக ஹேதுவான புத்தி கிலேசங்களாலும் நிரவதிக துக்கங்களை அநுபவித்தது கிலேசிப்பார்கள்
நமனும் முற் கலனும் பேச நரகில் நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்து வீழ்ந் தளிய மாந்தர்
கவலை யுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.-12
காவலிற் புலனை வைத்துக் கலி தனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.-1-
இப்படி ஜகத்திலே சேதனர் கர்ம தாரதம்யம் அடியாக -ஸ்தாவரா க்ரிமி யோப் ஜாஸ்ச பக்ஷிண பசவோ நரா -தார்மிகா த்ரிதஸா தத்வத் மோக்ஷிணஸ் ச யதாக்ரமம் ஸஹஸ்ர பாக ப்ரதம த்விதீய அநு க்ரமாஸ் ததா -ஸர்வேப்யேதே மஹா பாக யாவன் முக்திம் ஸமாஸ்ரயா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-34-35-என்றும்
பூதாநாம் ப்ராணிந ஸ்ரேஷ்டா பராணிநாம் புத்தி ஜீவிந புத்தி மத் ஸூ நரா ஷ்ரேஷ்டா நரேஷு ப்ராஹ்மணாஸ் ஸ்ம்ருதா ப்ராஹ்மணே ஷு ச வித்வாம்ஸோ வித்வத் ஸூ க்ருத புத்தய க்ருத புத்தி ஷு கர்த்தார கர்த்ரு ஷு ப்ரஹ்ம வாதி ந ப்ரஹ்ம வித்ப்ய பரம் பூதம் ந கிஞ்சி திஹ வித்யதே -மனு -1-96-97- என்று
ஒன்றுக்கு ஓன்று ஸூஹ்ருத தாரதம்யத்தாலே பூர்வ பூர்வ ஜென்மங்களுக்கு உத்தர உத்தர ஜென்ம லாபம் துர் லபமாகையாலும் அந்த பூர்வ ஜென்ம ஸஹஸ்ர ஏக தேசத்திலே என்னலாம் படி ஸங்கோசித்துப் போருகையாலே முமுஷுத்வம் அத்யந்தம் துர் லபமாய் இருக்கும் –
இப்படி இருக்கிற ஆத்மாக்கள் அஸங்க்யாத ராகையாலே ஸ்வர்க்கத்தோடு நரகத்தோடு வாசி இல்லை -போக்தாக்களான ஆத்மாக் களுடைய ஆனந்தத் யத்துக்கு -ஆகை யிறே -யாவந்தோ ஜந்த வஸ் ஸ்வர்க்கே தாவந்தோ நரகௌகஸ -ஸ்ரீ விஹனு புரா 2-6-36- என்று சொல்லிற்று
இந்த பாபம் அடியான நரக பிரவேசம் பிராயச்சித்தம் பண்ணாத விமுகனுக்கு இறே -பிராயச்சித்தம் பண்ணினவனுக்கு நரகத்திலே ப்ரவேசிக்க வேண்டுவது இல்லை -அப்படியே பாபங்கள் தாரதம்யத்தை நிரூபித்து தாதாத்மிக பிராயச்சித்த விசேஷங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் இறே –
பாபே குரூணி குரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத் வித -ப்ராயச்சித்தாநி மைத்ரேய ஜகுஸ் ஸ்வாயம்பு வாதய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-38- என்று குருவான பாப விஷயமாக குரு ப்ராயச்சித்தங்களையும் அல்ப பாபத்துக்கு அல்ப பிராயச் சித்தங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் -அதாவது 1-புத்தி பூர்வகமாக 2-மஹா பாதகாதிகளைப் 3-பலகாலுமாய் வர்த்தித்த குரு பாதகத்திலே அவ்யவஹித கர்த்தாவினுடைய ப்ராணாந்தி காதியான ப்ராயச்சித்தங்கள் விதிக்கப் பட்டது –
அல்ப பாபமாவது -1-ஸக்ருத் க்ருதமாதல் -2-அஞ்ஞான க்ருதமாதல் 3-ப்ரகாசி தமாதல் அ4-நுமதி மாத்ரமாதல் தொடக்கமானவை -தத் விஷயமான அல்ப பிராயச்சித்த மாவது -ரஹஸ்ய ப்ராயச்சித்தம் –
அவ் விடத்திலே அஞ்ஞான க்ருதமான ப்ரஹ்ம ஹத்த்யாதி மஹா பாதகத்தில் (தசரதன் ரிஷி குமாரன் மேல் தெரியாமல் அம்பு விட்டது போல்)பிராயச்சித்தம் த்வாதஸ வார்ஷிகம் புத்தி பூர்வகத்தில் இரட்டி -அத்யந்தா வ்ருத்தியில் அதில் இரட்டி -இது சாஷாத்கார்த்தாவுக்கு
அனுக்ராஹகனுக்கும் இதில் ஓன்று முக்கால் -ப்ரயோஜகனுக்குப் பாதி -அனுமந்தாவுக்குக் காலே அரைக்கால் -ப்ரோத்ஸா ஹகனுக்குக் கால் -புத்தி பூவாக மஹா பாதகத்துக்குச் சொன்ன த்வாதஸ வார்ஷிகம் கர்த்தாவினுடைய ஸூத்த் யர்த்தம் -அதாவது கர்ம யோக்யத்வ ஸம் வியவஹார யோக்யத்வ காரணமல்லது நிரய நிவ்ருத்தகம் -நிவர்த்தகம் -அன்று –
புத்தி பூர்வ க்ருத்தங்களுக்கு ஸ்ம்ருதியில் சொன்ன ப்ராணாந்திக ப்ராயச்சித்தம் வ்யாவஹார யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -புத்தி பூர்வகத்தில் இரட்டித்த த்வாதஸ வார்ஷிகமும் வ்யவஹார்ய கரத்வமாம் இத்தனை -நரக நிவர்த்தகம் அன்று
யஸ் ஸக்ருத் பாபம் குர்யாத் ஹ்ரியதே தத்தபோ பரம் –என்று சுருதி சொன்ன படியே பாப ப்ரவ்ருத்தி ஸஜாதீய பாபாந்தர ப்ரவ்ருத்தியிலும் மூட்டும்படியாய் இருக்கும் -அதாவது கர்மத்துக்கு விஸஜாதீய கர்ம அயோக்யதா கரத்வமும் ஸஜாதீய கர்ம ப்ரவர்த்தகத்வமும் தத் அநுரூப பல ப்ரவர்த்தகத்வமும் என்று ஸக்தி த்ரயாத்வமும் உண்டு -அதில் பாவத்துக்கு விசஜாதீயமான புண்ய கரணத்துக்கு அயோக்யனாக்குகையும் அநிஷ்ட பல ப்ரதத்வமும் -ஸஜாதீய பாபாந்தரத்திலே ப்ரவர்த்திப்பிக்கையும் ஸ்வ பாவமாகையாலே ப்ராயச்சித்தங்கள் இவை மூன்று சக்தியையும் கழிக்க மாட்டாது
அதில் சிலவை விஜாதீயமான புண்ய கரண யோக்யதையைப் பிறப்பித்து ஸூத்தனாக்கும் -பிராணாந்த காதிகளான சில ப்ராயச்சித்தம் புண்ய கரண யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -பாபாந்தர ருசி ஜனகமான வாஸனா ரூப ஸக்தி விசேஷத்தைப் போக்க வல்லதொரு பிராயச்சித்தம் இல்லை இறே –
அது உள்ளது க்ருஷ்ண விஷயம் ஒன்றுக்குமே இறே -எங்கனே என்னில் -ஸூத்திர் பவதி ஸம் ஸ்ம்ருத்ய ஸ்நாதோ பவதி தர்சநாத் -ப்ரணிபாதேந ஸூத்தாத்மா த்ரய க்ருஷ்ணே மஹா குணா -என்று இறே மஹ ரிஷிகள் ஸ்மரித்தது-அதாவது -ஸ்மரண மாத்ரத்தாலே புண்ய கர்ம யோக்யதா ரூபையான ஸூத்தி பிறக்கும் – கண்ணிட்டு விக்ரஹத்தைக் கண்ட அளவே பர லோபம் பிறவாத ஸ்தாநம் உண்டாம் -திருவடிகளில் ப்ரணாமத்தாலே பாப வாஸனா நாஸம் பிறக்கும்படி அந்தக்கரண ஸூத்தி உண்டாம் என்று பகவத் விக்ரஹத்துக்கு இந்த மஹா குணம் மூன்றும் சொல்லப்பட்டது –
ஆகையால் -ப்ராயச்சித்தாநி அசேஷாணி தப கரமாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-39- என்று ஸ்ரீ பராசர பகவானும் குருகுல பூத ஸமஸ்த ப்ராயச்சித்தங்களும் ஒரு தட்டும் -தத் ப்ரதிநிதியான கிருஷ்ண அநு ஸ்மரணத்தை உத்க்ருஷ்டமாகவும் சொல்லிற்று –
இவ் விடத்தில் அநு ஸ்மரணமாவது-அநுர் நிஹீநார்த்தே -என்று சேஷத்வ அனுரூபமான அநு ஸ்மரணம் -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர என்று தாஸ்யத்தை ஸ்மர்த்தவ்யமாக விதித்தது இறே -இவ் விடத்தில் கிருஷ்ண ஸப்தம் -க்ருஷிர் பூ வாசகஸ் ஸப்தோ ணஸ் ச நிர்வ்ருதி வாசக -விஷ்ணுஸ் தத் பாவ யோகஸ் ச கிருஷ்ண இத்யபி விஸ்ருத -உத்யோக -69-5- என்று ஆனந்த ரூபத்துக்கு வாசகமாக நிர்வசிக்கப் படுகையாலே நிரதிசய ஆனந்த ஸ்வரூபனான கிருஷ்ணனைச் சொல்லுகிறது
ஸக்ருத் ஸ்ம்ருதோ அபி கோவிந்தோ ந்ரூணாம் ஜன்மஸ தார்ஜிதம் -பாப ராஸிம் மஹத் யாஸூ தூல ராஸி மிவாநல -என்று ஒருக்கால் ஸ்மரித்த மாத்ரத்திலே அநேக ஜென்ம ஆர்ஜித பாப ராஸி பஞ்சுப்பொரி போலே சுடும்
யதேஷீகா தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -சாந்தோ -5-24-3- என்று நெருப்பிலிட்ட பஞ்சு போலே பகவத் த்யான பரனுடைய ஸர்வ பாபங்களும் வெந்து போம் என்கிற பிரகாரத்தை ஸ்ருதியும் சொல்லிற்று இறே
இப்படி அதி மஹத்தாயும் அல்பங்களுமாயும் உள்ள ஸமஸ்த பாபங்களுக்கு அஞ்சி அநு தப்தனாய் தந் நிவர்த்தக ப்ராயச்சித்தங்களிலே அபிமுகனான வனுக்கு பாபாநாம் ஆனந்தயத்தாலே- ப்ராயச்சித்தங்களும் அசங்க்யா தங்களாகையாலே ஜென்ம சத ஸஹஸ்ரங்கள் கூடினாலும் பிராயச்சித்த அனுஷ்டானத்தாலே பாப நிவர்த்தகம் அஸக்யமாகையாலே இந்த ஸமஸ்த பாபங்களையும் ஸக்ருத் அநுஷ்டே யமாய் இருபத்தொரு ப்ராயச்சித்தத்தாலே போக்கிக் கொள்ளப் போகிறோமோ என்னும்படி பாகம் பிறந்தவனுக்கு விஹிதமானது இறே ஸ்ரீ கிருஷ்ண விஷயமான ஸக்ருத் ஸ்மரணம் –
எங்கனே என்னில் -க்ருதே பாபே அநுதாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ்யைகம் ஹரிஸம் ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-40- என்று பாப பயத்தால் பிறந்த அனுதாபத்தை அனுவர்த்தித்து பகவத் ஸ்மரணத்தையும் விதிக்கிற அளவில் ஏகம் என்று ஸக்ருத் கரணத்தையும் ஸம் ஸ்மரணம் என்று -ஸம் இத்யேகீ பாவே -என்கிறபடியே சரீராத்மா நிபந்தமான அப்ருதக் பாவ ஸ்மரணத்தையும் விதித்தது இறே –
இந்த ஸக்ருத் ஸ்மரணம் கேவலம் பாப க்ஷய அர்த்தமே யன்று-ஸ்வ அபி லஷித ஸமஸ்த புருஷார்த்த ப்ரதமமாய் இருக்கும் – ஆகை யிறே ப்ரஹ்லாதனும் -ஆயாஸ -ஸ்மரணே கோஸ்ய- ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -பாப க்ஷய ச பவதி -ஸ்மரதாம் தமஹர்நிகம் –ஸ்ரீ விஷ்ணு புரா -1-17-78- என்று உபதேசித்தது -அதாவது ஸ்மரண அநந்தரம் சோபனமான புருஷார்த்தகத்தை ஸர்வ காலமும் கூடா நிற்கும் -பிரதிபந்தகமான பாபம் ஸ்மரணத்தினுடைய ஆவர்த்தன மாத்திரத்திலே ஆதித்ய ஸந்நிதியில் அந்தகாரம் நசிக்குமா போலே ஸ்வயமேவ நஸியா நிற்கும் ––இதுக்கு தேச கால அதிகாரி நியதியும் இல்லை என்றபடி –
ஆகையிறே -ப்ராதர்நிஸி ததா ஸந்த்யா மத்யாஹ் நாதி ஷு ஸம் ஸ்மரந் நாராயணன் அவாப்நோதி ஸத்ய பாப ஷயான் நர-ஸ்ரீ விஷ்ணு புரா –2-6-41- என்று ஸ்ரீ பராசர பகவானும் சொன்னார் இறே
இந்த ஸ்மரணம் ஸர்வ பல ப்ரதமே யாகிலும் முமுஷுவுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் அளவில் ஸ்வர்க்க பிராப்தியும் ப்ராப்ய பிரதிபந்தகமாம் படி ஸ்வயமேவ ரஸியா நிற்கும்
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
விஷ்ணு ஸம் ஸ்மரணாத் ஷீண ஸமஸ்த க்லேச சஞ்சய -முக்திம் ப்ரயாதி ஸ்வர்க்காப்தி தஸ்யந்தராய மைத்ரேய தேவேந்த்ரத்வாதிகம் பலம் -ஸ்ரீ விஸ்ணு புரா -2-6–42-43-என்று ஸ்மர்தவ்ய விஷய ஸ்வாரஸ்ய ப்ரீதி நிபந்தமான ஜப அர்ச்சநாதி கைங்கர்ய விசேஷங்களிலே அத்யர்த்த ப்ரியத்வத்தாலே இந்த்ராதி பத்யமும் அந்தராயம் என்று சொல்லப்பட்டது –
இந்த ஸ்மரணம் –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்டப் ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்குமளவில் அநிச்சயா க்ருதமாகிலும் வஸ்து சாமர்த்யத்தாலே அவ்யபி சரிதமாய் இருக்கும் –
ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத -அநிச்சயாபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவக -ப்ருஹந் நார –11-99- என்று இச்சை இன்றியே ஸ்பர்சித்தாலும் அக்னி சுடுமா போலே ப்ரத் விஷ்டமான –(இவ் விடத்தில் சில வாக்கியங்கள் நஷ்டமானதாகக் காண்கிறன -அவை கோசாந்தரத்தில் காண்க) — நெஞ்சாலே நினைத்த ஸிஸூ பாலனுக்கு பலிக்கக் கண்டது இறே -இந்த ஸ்மரணம் கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் –
அவஸே நாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பதாகை -புமான் விமுச்யதே ஸத்யஸ் ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகைரிவ -ஸ்ரீ விஷ்ணு புரா -6–8-19
க்வ நாக ப்ருஷ்ட கமநம் புநரா வ்ருத்தி லக்ஷணம் க்வ ஜபோ வாஸூ தேவேதி முக்தி பீஜ மநுத்தமம்-ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-44-
ஸாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலந மேவ வா வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷாக ஹரம் வித்து -பாகவதம் -6-2–13-அஜோமில வ்யாக்யானம்
ஹத்யாயுதம் பாந ஸஹஸ்ர முக்ரம் குர்வங்க நாகோடி நிஷேவணஞ்ச ஸ்தேயாந்ய சங்க்யாநி ஹரே ப்ரியேண கோவிந்த நாம்நா நிஹதாநி ஸத்ய –
சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்த்தயேத் நா சவ்சம் கீர்த்தநே தஸ்ய ஸ பவித்ர கரோ யத –பாத்மோத்தர
பத்த பரிகரஸ் தேந மோஷாய கமநம் ப்ரதி ஸக்ருத் உச்சரிதம் யேந ஹரிரித் யஷர த்வயம் -காருட பூ 114-3-
நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வஸ வர்த்திநீ -ததா அபி நரகே கோரே பதந்தீஹ கிமத் புதம் –காருட -பூ 220-9
நாவாயில் உண்டே* ‘நமோ நாரணா’ என்று,*
ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* – மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்* வகைஉண்டே,* என்ஒருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்
ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ் ச பீதா கோரேஷு ச வ்யாதி ஷு வர்த்தமாநா -சங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்தது காஸ் ஸூகிநோ பவந்தி
ஏதாவதால மகா நிர் ஹரணாய பும்ஸாம் ஸங்கீர்த்த நம் பகவதோ குண கர்மநாம்நாம் –ஆக்ருஸ்ய புத்ரம் அகவான் யத ஜாமிளோபி நாராயணேதி ம்ரியமாண உபைதி முக்திம்
கதவான் பரமம் பதம் தத –பதம் யத் என்றும் -இயாய முக்திம் என்றும் பாதாம் – -என்றும்
இது முதலான பிரமாண சதங்களாலே
பகவன் நாம ஸங்கீர்த்தனமும் ஸகல அநிஷ்ட சாந்தி பூர்வகமாக ஸர்வ அதிசயித புருஷார்த்த ப்ரதமாகச் சொல்லப்பட்டது இறே -இப்படி க்ருத ப்ராயச்சித்தனாகையாலே ஷீண பாபனானவனுக்கு ஸ்வ அனுஷ்டித புண்ய தாரதம்ய அநு ரூபமாக அநு பாவ்யங்களாய் இறே ஊர்த்வ லோகங்கள் இருப்பது –
இவ்விடம் தொடங்கி மேல் வாக்யங்களுக்கு அநு குணமாக ஸ்ரீ விஷ்ணு புராண -2-7- வசனங்களைக் கண்டு கொள்வது
இதில் கீழ் யுக்தமான பூ மண்டலத்துக்கு மேலே ஆதித்ய பதத்தளவும் நூறாயிரம் யோஜநம் உயர்த்தியாய் ஸித்த கந்தர்வாதிகள் ஸஞ்சரிக்கும் தேசமான அந்தரிக்ஷ லோகமாய் இருக்கும்
யாவத் பிரமாணா ப்ருதிவீ விஸ்தார பரி மண்டலாத் நபஸ் தாவத் பிரமாணம் வை வ்யாப்தம் மண்டலாதோ த்விஜ-ஸ்ரீ விஷ்ணு புரா -2-9-4- என்று அந்தரிக்ஷ லோகமும் பூமியோ பாதி விஸ்தாரத்தையும் சுற்றுடைமையையும் யுடைத்தாய் இருக்கும்
அந்த ஆதித்ய மண்டலத்துக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே சந்த்ர பதமாய் இருக்கும் -அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே நக்ஷத்ர பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே புதனுடைய பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸூக்ர -வெள்ளி–பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே அங்காரக -செவ்வாய்–பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ப்ருஹஸ்பதி பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸநி பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸப்த ரிஷி மண்டலமாய் இருக்கும்
அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஜ்யோதிஸ் சக்ர கூடஸ்தமான த்ருவ பதமாய் இருக்கும்
ஆக பூமி அந்தரிக்ஷ ஸ்வர்க்கங்கள் மூன்றினுடைய உயர்த்தி சொல்லப்பட்டது –
அதில் பாதாசாரிகள் வர்த்திக்கும் தேசம் பூ லோகம்
பூமிக்கும் ஆதித்யனுக்கும் நடுவு புவர் லோகம்
ஆதித்யனுக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாலு நூறாயிரம் யோஜநம் உயர்த்தியை யுடைத்தாய் ஸாதிகாரர்களான க்ரஹ நக்ஷத்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர்க்க லோகமாய் இருக்கும்
இதுக்கும் மேலே -த்ருவ பத்துக்கும் மேலே – ஒரு கோடி யோஜனம் உயர்த்தியை யுடைத்தாய் -விநிவ்ருத்தாதி காராஸ்து மஹர் லோக நிவாஸிந –சைவ புராணே என்று நிவ்ருத்தி அதிகாரராய் அதிகார அபேக்ஷையை யுடையராய் கல்பாந்த ஸ்தாயிகளான இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேஸமாயுள்ள மஹர் லோகமாய் இருக்கும் –
அதுக்கும் மேலே இரண்டு கோடி யோஜநம் உயர்த்தியாய் ப்ரஹ்ம புத்ரர்களாகிற ஸநகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜனர் லோகமாய் இருக்கும் –
அதுக்கும் மேலே அதில் நாலு மடங்காம் படி எட்டு கோடி யோஜனம் உயர்தியான -உயர்த்தியை யுடைத்தாய் வைராஜாக்யரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான தபோ லோகமாய் இருக்கும் – என்று தத்வ த்ரய வ்யாக்யான அநு ரோதேந பாடம் இருந்தால் நலம்
இது விஷ்ணு புராண ஸ்லோகத்துக்கும் -2-7-14-சேரும் –
தபோ லோகம் ஓங்காராதி பரம ரிஷிகள் வர்த்திக்கும் தேசமாய் இருக்கும் –
அதுக்கும் மேலே அதில் ஆறு மடங்காய் நாற்பத்தெட்டு கோடி உயர்த்தியை யுடைய ஸத்ய லோகமாய் இருக்கும்
இப்படி இத்யாதி வாக்ய அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -2-7-14-காண்க –
இப்படி ஸ்வர்க்க பர்யந்தமாக ஏக கோடியுமாய் கீழ் மேல் மஹர் லோகம் தொடங்கி ஐம்பத்து ஒன்பது கோடியாய் அறுபது கோடி உச்சாராயம் என்பாரும்- ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அண்ட உச்ச்சராயம் ஐம்பது கோடியாய் -ஸூர் யாண்ட கோலயோர் மத்யே கோட் யஸ்ஸ்யு பஞ்ச விம்சதி -சைவ புராணே -என்கையாலே ஸூர்ய மண்டலத்துக்குக் கீழே 25 கோடியும் மேல் 25 கோடியுமாக 50 கோடியாய் இருக்கும் என்பாருமாய் இருக்கும் –அப்போது ஸூர்ய பதத்துக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாறு லக்ஷமும் மஹர் லோகம் ஒரு கோடியும் ஜனர் லோகம் இரண்டு கோடியும் தபோ லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 8 கோடியும் சத்ய லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 12 கோடியும் இந்த ஸத்ய லோகத்துக்கு மேற்பட நாலு லக்ஷம் குறைந்த இரண்டு கோடி அண்ட கடாஹ ஊர்த்தளவாக இருக்கும்
இனி ஸூர்யனுக்குக் கீழ் அண்டாத கடாஹத்து அளவும் அந்தரிக்ஷ லோகம் பூ லோகம் ஸப்த பாதாளங்கள் அநந்த ஸ்தானம் கார்ப்போதகம் அளவாகச் சொன்ன ஸங்க்யைகளை நீக்கி உள்மானம் என்று அவிரோதேந கொள்ளக் கடவது -இப்படி உத் ஸேதத்தை யுடைத்தான -இவ்விடத்திற்கு அனுகுணமாக -2-9-15–ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் காண்க –
சதுர் தச புவனத்திலும் ஊர்த்வ லோகமான ஸத்ய லோகத்திலே -தேஷாமேஷாம் கேசந ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யான்யே சந்தி தத்ரைவ லோகா விஷ்ணோ ரன்யே சந்தி லோகா விஸாலாஸ் தாம் ஸ்தான் லோகாம்ஸ் தாநு பாஸ்ய வ்ரஜந்தி -என்று அம்ச பேதத்தாலே சில ப்ரஹ்ம லோகங்களாய் -சில சிவ லோகங்களாய் -சில விஷ்ணு லோகங்களாய் -அவ் வவரை உபாஸித்தவர்களுக்கு ப்ராப்யங்களாய் இருக்கும் –
இந்த சத்ய லோக வர்த்திகள் -வேதாந்த விஞ்ஞாந ஸூநிஸ் சிதார்த்தா ஸந்யாஸ யோகாத் யதயஸ் ஸூத்த ஸத்வா – தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரி முச்யந்தி ஸர்வே -தைத்த ஆனந்த -6-10-22- என்றும்
ப்ரஹ்மணா ஸஹ தே ஸர்வே ஸம் ப்ராப்தே ப்ரதி சஞ்சரே -பரஸ் யாந்தே க்ருதாத்மாந பிரவிசந்தி பரம் பதம் -கூர்ம பு பூ 12-269- என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறபடியே பரமான ஸம்ஹார காலம் வந்தவாறே ப்ரஹ்மாவோடே கூடி மோக்ஷத்தை பிராபிப்பர்கள்
ஆப்ரஹ்ம புவநால் லோகா புநரா வ்ருத்தி நோர்ஜூந -கீதை -8-16- என்று ப்ரஹ்ம லோகத்திலே போனவர்களுடைய ஆவ்ருத்தி வசனம் -ப்ராஹ்மம் ஸந்யாஸி நாம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-6-37- இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ணாஸ்ரமாதி தர்ம சர்யையாலே ப்ரஹ்ம லோக பிராப்தி பண்ணின அவித்வத் விஷயம் யோகாதி சயத்தாலே பிராபித்த வித்வத் விஷயம் அன்று என்று கொள்ள வேணும்
இந்த லோகங்களில் -ஜனஸ் தபஸ் ஸத்யம் என்று சொல்லப்பட்ட ஊர்த்வ லோகங்கள் மூன்றும் ஆதி ஸ்ருஷ்டி தொடங்கி ப்ரஹ்மாவினுடைய ஆயுரவஸாநத்தளவும் நிற்கையாலே நடுவு அழிவு வந்து ஸ்ருஷ்டிக்க வேண்டாமையாலே அக்ருதகம் என்று பேராய் இருக்கும் -இதுக்கு அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு புரா -7-7-19-21-ல் காணலாம்
கீழ் பூம் யந்தரிக்ஷ ஸ்வர்க்க ரூபமான த்ரை லோக்யமும் (இந்த மூன்றும் கீழ் உள்ள ஏழும்)ப்ரஹ்மாவினுடைய அஹரவஸா நத்திலே ஸம் ஹ்ருதமாயும் கல்பாதிகளிலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டும் இப்படி ப்ரஹ்மாவினுடைய திநே திநே ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்கள் உண்டாகையாலே க்ருதகம் என்று பேராய் இருக்கும் –
நடுவில் மஹர் லோகமானது த்ரை லோக்ய ஸம்ஹாரத்தில் -யாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந –பாடாந்தரம் கோஸாந்தரங்களில் காண்க -த்ரி லோக்யாம் தஹ்யமா நாயாம் கஸ்த்யா சங்கர்ஷணாக்னிநா யாந்த் யூஷ்மணா மஹா லோகாத் ஜனம் ப்ருக்வா தயோர்த்திதா -என்கிற ஸூக வசனத்தில் இவ் வர்த்தம் காண்க -என்கிறபடியே தாபாதிகள் பொறுக்க மாட்டாதே மஹர் லோகத்தார் குடி வாங்கி ஜனர் லோகத்தே குடி புகுருகையாலே லோகம் ஸூன்யமாய் கல்பாதிகள் தோறும் குடி புகுருகையாலே க்ருதா க்ருதங்களுக்கு நடுவு என்றிட்டு க்ருதாக்ருதம் என்று பேராய் இருக்கும் –
இந்த த்ரை லோக்யம் இஜ்யா ரூபமான கர்ம அநுஷ்டான ஸ்தானமுமாய் இஜ்யா பல போக ஸ்தானமுமாய் இருக்கும்
அல்லாத லோகங்கள் யோக ஜனித் புண்யாதிஸயத்தினுடைய பல போகத்துக்கு ஸ்தானங்களாய் இருக்கும்
இதி தத்வ நிரூபநீ போக பூமி நிரூபணம் நாம சதுர்த்த அதிகாரம் ஸம் பூர்ணம் –
——-
பஞ்சம அதிகாரம்— ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
1-ஸம்ஹார நிரூபணம்
2-நித்ய நைமித்திக ப்ராக்ருதாத் யந்திக ப்ரளய ஸ்வரூப நிரூபணம்
3-ஸம்ஹார ப்ரகார நிரூபணம்
4-சதுர் முக க்ருத பத்தாத்ம ஸ்ருஷ்டி நிரூபணம்
5-அணிமாத் யஷ்ட ஐஸ்வர ஸ்வரூப நிரூபணம்
6-த்வாதஸாதித்ய நாம நிரூபணம்
7-ஆதித்யாதி ஸப்த கண நாம க்ருத்ய நிரூபணம்
8- த்வாதஸ மாஸேஷு த்வாதஸாதித்யாதி ஸப்த கண பரி ப்ரமண நிரூபணம்
9-ஆதித்ய மண்டலாதிஷ்டித புருஷ அந்தர்யாமி -ஸ்ரீ மன் நாராயண ஸ்வரூப நிரூபணம்
——–
ஸம்ஹாரம் இருக்கும் படி எங்கனே என்னில்
1-நித்யம் என்றும்
2-நைமித்திகம் என்றும்
3-ப்ராக்ருதம் என்றும்
4-ஆத்யந்திகம் என்றும் நாலு வகைப்பட்டு இருக்கும்
ஸம்ஹாரப் ப்ரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-3-4-
அதில் 1-நித்யமாவது -உத்பன்ன சேதனருக்கு யமாதிகளால் வருகிற சரீர வியோகம்
2-நைமித்தகமாவது – ப்ரஹ்மாவினுடைய ராத்ரிகள் தோறும் உண்டாகிற த்ரை லோக்ய விநாஸம்
3- ப்ராக்ருதமாவது -ப்ரஹ்மாவினுடைய ஆயுர் அவஸா நத்திலே ப்ரக்ருதி பர்யந்தமாக உண்டாகும் விநாஸம்
4-ஆத்யந்திகமாவது -உத்பன்னமான அவித்யாதிகளோடே கூட புனர் உத்பத்தி வாராதபடி உண்டாகும் சரீர விநாஸம்
இதில் பிரகிருதி நாஸ பர்யந்தமான ஸம்ஹாரம் ப்ராக்ருத ஸம்ஹாரமாகையால் -அது கீழ்ச் சொன்ன உத்பத்தி கிரமத்துக்கு உடலாகையாலே அறிய வேணும் –
அப்யவ பூர்விகையாய் இறே ஸ்ருஷ்டி இருப்பது –
இதில் முதல் நைமித்திக ஸம்ஹார க்ரமத்திலே நூறு வர்ஷம் அநா வருஷ்டியாய்க் கிடக்கும்
அனந்தரம் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரன் -1-ஸூஷும்நோ 2-ஹரி கேஸஸ் ச 3-விஸ்வ கர்மா ததைவ ச 4-விஸ்வஸ்ய 5-ஸாஸ்வதா 6-ஸம்யத் வஸூரர் வாக்வ 7-வஸூஸ் ததா –கூர்ம பு பூ 42-3- என்று சொல்லுகிற ஸூஷும் நாதிகளான ஆதித்ய கிரணங்கள் ஏழிலும் பிரவேசித்து நின்று- பூமியிலும் ப்ராணிகளுடைய சரீரங்களிலும் உண்டான நீர்ப் பசையை அறுக்கும் -இப்படி லோகத்திலே துவட்டித்த நீர் கனத்தாலே அதிசயித்த தேஜஸ்ஸை யுடைத்தான இந்த ஏழு ஆதித்ய கிரணங்களிலும்
1-ஆரோகன் என்றும்
2-ப்ராஜன் என்றும்
3-படரன் என்றும்
4-பதங்கன் என்றும்
5- ஸ்வ வர்ணன் என்றும்
6- ஜ்யோதிஷ்மான் என்றும்
7-விபாஸன் என்றும்
ஆரோகோப்ராஜ படர பதங்க ஸ்வ வர்ணரோ ஜ்யோதி ஷீமான் விபாஸ -இதி ஸப்த ஸூர்யோ இதி ஸ்ருதே –யஜுஸ் ஆ -1-7-1-என்கிற பேர்களை யுடைத்ததாய்க் கொண்டு ஏழு ஆதித்யர்களாய் பரிணமிக்கும்
அவ் வேழும் இவ் வேழு லோகங்களையும் காறு காலில் பொறி கூறுபட்டது படுத்தித் தீயப் பண்ணும் –
இப்படித் தீய்கையாலே லோகத்தில் உண்டான மலைகளும் சுண்ணாம்புக் கல் போலே வெந்து நீராய் -நீறாய் -(பஸ்மமாய்-) வ்ருஷ குல்மாதிகளும் வெந்து சாம்பலாய் பூ மண்டலம் அடைய ஒரு துரும்பு காண ஒண்ணாத படி ஆமை முதுகு போலே கிடக்கும்
இப்படி இவ் வாதித்யர்களாலே இந்த லோகத்தில் நெய்ப்பு நீர்ப் பசையும் அற்றவளவிலே ஈஸ்வரன் காலாக்கினி ருத்ர ரூபத்தைத் தரித்துக் கொண்டு பாதாள கதனான அநந்தன் முகத்திலும் குதித்து வைக்கோல் போரை அடியே தொடங்கிச் சுட்டுக் கொண்டு ஏறுமா போலே பாதாளம் தொடங்கி லோகங்களை அடைவிலே சுட்டுக் கொண்டு எரித்த அநந்தரம் முக நிஸ் வாசத்தாலே புஷ்கலா வர்த்தங்களான மேகங்களை ஸ்ருஷ்டிக்கும் -அம் மேகங்கள் ஆகாஸம் அடைய இடமடையும் படி மின்னலும் இடியுமாய் நூறு வர்ஷம் வர்ஷிக்கும் -அவ் வர்ஷ ஜலத்தால் எரிகிற நெருப்பும் அவிந்து லோகமடைய வெள்ளம் கோக்கும் -அநந்தரம் இப்படி வர்ஷிக்கிற மேகங்கள் அடையப் பாரிப் பரந்து போம்படி பகவன் முக நிஸ் வாசமாகிற காற்று நூறு வர்ஷம் ப்ரஹ்மாண்ட மடையக் குலுங்கும்படி அடிக்கும் -ஆன பின்பு நிரம்பி நிற்கிற ஜல தத்வம் அண்டாந்தர வர்த்தியான பூமியினுடைய பூமித்வ வ்யவஸ்தாபகமான கந்த குணத்தை க்ரஸிக்கும் -அக் கந்தையான பூமி ஜல தத்வமாயே விடும் –(குடம் உடைய மண் ஆகுமா போல் காரியப் பொருள் காரணப் பொருளாகவே ஆகி விடுமா போல்)
அந்த ஜலத்தினுடைய ரஸாத் மகமான குணத்தை தேஜஸ்ஸு க்ரஸிக்கும் -அந்த ரஸமான ஜலம் தேஜஸ்ஸாயே விடும் -அந்த தேஜஸ்ஸினுடைய ரூப குணத்தை வாயு க்ரஸிக்கும் பின்பு அந்த தேஜஸ்ஸு வாயுவாயே விடும் -வாயு குணமான ஸ்பர்சத்தை ஆகாசம் க்ரஸிக்கும் -பின்பு அந்த வாயு ஆகாசமாயே விடும் -ஆகாஸ குணமான ஸப்தத்தை பூதாதி க்ரஸிக்கும் -பின்பும் ஆகாஸமும் இந்த்ரியங்களும் ஒருக்காலே அஹங்காரத்திலே லயிக்கும் -அஹங்காரம் மஹானிலே லயிக்கும்
உர்வீ மஹாம்ஸ் ச ஜகத ப்ராந்தே அந்தர் பாஹ்யதஸ் ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-29- என்று அண்டத்துக்கு உள் வாயோடு புற வாயோடு வாசியற ஒரு ப்ராந்தத்திலே ப்ருதிவியும் ஒரு ப்ராந்தத்திலே மஹானும் என்று சொல்லுகையாலே -இதற்கு அநு குணமாக -6-4-29- விஷ்ணு சித்தீயத்திலே காண்க
–உள் வாயில் ப்ரதம கோடியான–பிருத்வி தொடங்கி சரம கோடியான மஹான் அளவும் செல்ல இவ் வண்டமான கார்யம் இப்படி அழிந்து ஆவரண ஜலமே சேஷித்து நிற்கும்
இஜ் ஜலம் தொடக்கமான ஆறு ஆவரணமும் ஒன்றிலே ஓன்று லயித்து ப்ரக்ருதியே சேஷிக்கும் -அந்த ப்ரக்ருதி தானும் புருஷ சமஷ்டி யாத்மகமான அக்ஷர அவஸ்தையை பஜித்து- தத் அவஸ்தமான ப்ரக்ருதியும் புருஷனும் -ஆஸீதிதம் தமோ பூதம் அப்ரஞ்ஞாதம லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்தமிவ ஸர்வத–மநு -1-5- என்கிறபடியே அநிர்த் தாரணீயமாகச் சொல்லப் படுகிற ஒரு அவஸ்தையை அடைந்து -ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வ ரூபிணீ புருஷஸ் சாப் யுபாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39- என்கிறபடியே தமோ வஸ்தரான ப்ரதான புருஷர்கள் இருவரும் பரமாத்மாவின் பக்கலிலே விபாக அநர்ஹ தஸா பத்தி லக்ஷண லயத்தை அடைந்து கிடப்பர்கள்-இப்படி பரமாத்மாவையே அடைந்து ப்ரக்ருதி புருஷாதி சகல விகல்ப ஸூன்யமாய்க் கொண்டு பரார்த்த காலம் கிடக்கும் -இது பிராகிருத ஸம்ஹார ப்ரகாரம்
இப்படி பகவாதாத்மகனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டமான லோகங்களில் கர்ம பல பேத ஸ்தானமாக நாநா வித சரீர பரிக்ரஹரம் பண்ணி உத் பன்னரான பத்தாத்மாக்களுடைய ஸ்ருஷ்டி ப்ரகாரம் நிரூபிக்கப் படுகிறது–ஸ்ருஷ்டி பிரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5- காண்க –
அதில் ஸ்ருஷ்டியிலே உபக்ரமித்த ப்ரஹ்மாவுக்கு அபுத்தி பூர்வக -விஷேத்யாந ரஹித -தமஸ் ப்ரசுரமாய் குல் மதியான (புதர் தொடக்கமான)சர்க்கம் முந்துற உண்டாயிற்று -இது தான் 1-தமஸ்ஸு 2-மோஹம் 3-மஹா மோஹம் 4-தாமிஸ்ரம் 5-அந்த தாமிஸ்ரம் என்று பஞ்ச ப்ரகாரமான அவித்யா ரூபமாய் இருக்கும் –
வ்ருஷாதிகளுக்கு ஸப்தாதி பாஹ்ய ப்ரகாஸமும் ஸூக துக்காத் யந்த ப்ரகாசமுமாகிற ப்ரக்ருஷ்ட விஞ்ஞாநம் இன்றியே ஜலாத் யாதாநம் ஷத பங்க ஸம் ரோஹணம் -தோஹதாதி ஸம் பர்க்கங்களுக்கு வேண்டுமதுவே யாம்படி இருக்கும் -மஹீருஹாதி களுக்கு கிஞ்சித் ஞாத்ருத்வம் இறே உள்ளது -ஆகை யிறே -அந்தஸ் ஸம்ஜ்ஞா பவந்த்யேதே ஸூக துக்க ஸமன்விதா -என்று சொல்லப்பட்டது -இதற்குச் சொன்ன பஞ்ச ப்ரகாரத்வம் ஆவது -வ்ருக்ஷம் -குல்மம் – லதை வீருத் த்ருணம் என்று அஞ்சு வகையாய் இருக்கும் –
வ்ருக்ஷமாவது -உள் காள் புண்டான மரங்கள்
குல்மமாவது -தூறுகள்
லதையாவது -கொடிகள்
வீருத்தாவது -பற்றமான பூண்டுகள்
த்ருணமாவது -உள் ஈரம் இல்லாதவைகள்
இந்த வ்ருஷாதி சர்க்கம் திர்யக் ஸ்ருஷ்ட்யாதி களுக்கு முன்பாகையாலே முக்ய சர்க்கம் என்று சொல்லப்படும்
அபுத்தி பூர்வகம் என்றும் சொல்லப் படுகையாலே ப்ரஹ்மாவினுடைய ஸ்ரஷ்டத்வம் பகவத் ஸங்கல்ப அதீனம் என்றும் இந்த சர்க்கத்தினுடைய தமஸ் பிராஸுர்யத்துக்கு இதுவே ஹேது என்றும் தோன்றுகிறது –
இந்த தமோ மோஹாதிகள் அஞ்ஞாந பேதமாய் பத்த சேதனர் எல்லாருக்கும் உண்டாய் இருக்கும் -எங்கனே என்னில்
1- ப்ரக்ருதி மஹத் அஹங்கார மாத்ரா பஞ்ச காத்மகமான அஷ்ட பேத கர்ப்பமாய் இருந்துள்ள அநாத்மாவில் ஆத்ம புத்தி தமஸ்ஸு
2-அணிமாத்ய ஐஸ்வர்ய லாபத்தில் மமத்வம் மோஹம்
3-திவ்ய மானுஷ பேதத்தாலே தஸதா பின்னமான ஸப் தாதிகளில் ராகம் -மஹா மோஹம்
4- இந்த அஷ்ட ஐஸ்வர்ய தச விஷயங்களுக்கு பரரால் விரோதம் வந்தால் பிறக்கும் க்ரோதம் -தாமிஸ்ரம்
5- இவற்றினுடைய போகத்தில் நடுவே விநாஸம் வருகிறதோ என்கிற பயம் -அந்த தாமிஸ்ரம்
இவை யதார்த்த ஞான விரோதிகள் –
இவை ஐந்தையும் -அவித்யை -அஸ்மிதை -ராகம் -த்வேஷம் -அபி நிவேசம் -என்று சொல்லப்பட்ட கிலேச பஞ்சகமாகவும் சொல்லுவார்கள்
யோக ஸூத்ர காரர்கள் சொல்லுவார்கள் என்றபடி – அவித்யாஸ்மிதா ராக த்வேஷாபி நிவேசா பஞ்ச கிலேசா இதி ஸூத்ரம் –
இந்த பஞ்ச பர்வையான 1-அவித்யையில் தமஸ்ஸு எட்டு வகையும் 2-மோஹம் எட்டு வகையும் 3-மஹா மோஹம் பத்து வகையும் 4-தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் 5-அந்த தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் -ஆக ஐம்பத்து இரண்டு பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் -என்று சாங்க்யத்திலே சொல்லப்பட்டது
அணிமாத் யஷ்ட ஐஸ்வர்யமாவன -அணிமா மஹிமா சைவ கரிமா லகிமா ததா ஈஸத் வஞ்ச வஸித் வஞ்ச பிராப்தி ப்ராகாம்ய மேவ ச -லிங்க பு பூ -88-9- என்கிறபடியே யோக பலமாய்க் கொண்டு முமுஷுவுக்கு மோக்ஷ ப்ரதிபந்தகமாய் வரும் ஐஸ்வர்ய விசேஷங்கள்
இதில் 1-அணிமா வாவது -அத்யந்தம் அணுவான பதார்த்தங்களை உள்ளே யுள்ள அடங்க வல்லனாம்படி தன் சரீரத்தைச் சிறுக்குகை
2- மஹிமா வாவது – சதுர்த் தச புவனங்களையும் வியாபிக்கும் படி தன் சரீரத்தைப் பெருக்குகை
3- கரிமா வாவது புவநோத்தரண க்ஷமமான அதிசய சக்திகளாலும் சலிக்க ஒண்ணாத கனத்தை உடையனாகை
4-லகிமா வாவது -நிலா வெய்யில் தொடக்கமான ஸ்வச்ச பதார்த்தங்களும் தன்னைத் தரிக்கும் படி கன சரீரத்தை நொய்த்தாக்குகை
5-ஈஸத்வமாவது -அப்ரதிஹதமான ஸ்வச் சந்த ப்ரவ்ருத்தியை உடையனாகை
6-வஸித்வமாவது -ஜனன மரணாதி களும் ஸ்வ அதீனமாகை
7-பிராப்தி யாவது அதீத அநாகத தூரஸ்தமான விஷயங்களையும் ப்ரத்யஷித்து பிராபிக்கை
8-ப்ராகாம்ய மாவது -யத்ர காம அவஸா யித்வமாகையாலே தன் அபிமத விஷயங்கள் துர்லபங்களே யாகிலும் தான் நினைத்த படியே பர காய ப்ரவேசத்தாலே யாதல் -சாயாநு ப்ரவேசத்தாலே யாதல் -தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தாலே அதிஷ்டித்து அநு பவிக்கை
லிங்க புரா பூ 88-10-
இந்த தமோ மோஹாதி பேத பஞ்சகம் நக -ஸ்தாவர சர்க்கத்தில் (நக -மலை)வந்தால் வ்ருஷாதியான வஸ்து பேதத்துக்கு ஸூசகமாய் இருக்கும்
இந்த நக சர்க்கம் கர்மாதிகாரத்தை உடைத்தல்லாமையாலே சம்சார ப்ரவ்ருத்திக்கு யோக்யமல்ல என்று நினைத்து பின்னையும் சர்க்காந்தரத்தில் வந்தால் உபக்ரமித்த ஸ்ரஷ்டாவானவன் த்யானம் பண்ணின அளவிலே பஸ்வாதியான திர்யக் ஸரோதஸ் ஸானது உத் பன்னமாயிற்று – திர்யக்க்காக ஸஞ்சரிக்கையாலே திர்யக் ஸ்ரோதஸ் என்று பேராகிறது –
அந்த பஸ்வாதிகள் தமஸ் ப்ரசுரங்களாய் -அத்தாலே ஸம்யக் அநுபவ ஞானம் இன்றியிலே இருக்கச் செய்தே ஸம்யக் ஞான அபிமானிகளாய் அவிவேகிகளாய் ஸாஸ்த்ர வஸ்யம் இல்லாமையாலே மாத்ருகமநாதி துர் மார்க்க ப்ரவ்ருத்தங்களாய் ஸூக துக்காத் யநுபவத்தாலே அந்த ப்ரகாஸ யுக்தங்களாய்
அஹங்க்ருதா அஹம் மாநா -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5-11- என்று கர்விதங்களுமாய் -தேஹாத்ம அபிமானிகளுமாய் ஸ்வ பர ஸ்வரூப ஞானம் இல்லாதபடி ஆவ்ருத சித்தங்களுமாய் -அஷ்டா விம்சத்வதத்தை யுடையவையாய் இருக்கும்
அஷ்டா விம்சத் வதமாவது
ஏகாதஸ இந்த்ரிய வதா மதா-இந்த பங்க்திக்கு அனுகுணமாக ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -1-5-11- காண்க – வாயு புராணத்திலும் பூ -6-42-சொல்லுகிறபடியே
இந்த்ரிய வைகல்யம் பதினொன்றும்
அம்பாதி துஷ்டிகள் ஒன்பதும்
தாரகாதி ஸித்திகள் எட்டும்
ஆக அஷ்டா விம்சத் வதம் என்று சொல்லப்படும்
இவற்றில் இந்த்ரிய வைகல்யமாவது -பதிரத்வமும் -த்வக் தோஷமும் -ஆந்த்யமும் வைரஸ்யமும் -நாஸாத்வம்ஸமம் ஞான இந்த்ரிய வைகல்யம்
மூகத்வமும்- குணித்வமும் -பங்குத்வமும்- க்லீபத்வமும் -யூதா வர்த்தத்வமும் கர்ம இந்த்ரிய வைகல்யம்
ஜடத்வம் மநோ வைகல்யம்
அம்பாதி நவ துஷ்டிகளுக்கும் தாரகாத் யஷ்ட ஸித்திகளுக்கும் வைகல்யம் புத்தி வதம் என்று பேராய் பதினேழு படியாய் இருக்கும் -இது திர்யக்குகளுக்கும் மனுஷ்யாதிகளுக்கும் பிரதான்யமாய் இருக்கும்
இதில் நவ துஷ்டிகளாவது -அம்பை ஸலிலை ஆபை வ்ருஷ்டி ஸூதாரை ஸூபாரை ஸூநேத்ரை மாரீசிகை யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்
அதில் அஷ்ட வித ப்ரக்ருதி பரிணாம விசேஷத்தாலே -சித்த லயத்தில் நீண்டும் முக்தனாகா நின்றேன்- த்யானத்தாலே என்ன பிரயோஜனம் என்கிற துஷ்டிக்கு அம்பை என்று பெயர்
ஸன்யாஸ வேஷோபாதாந மாத்ரத்தாலே க்ருதார்த்தனாகா நின்றேன் என்கிற துஷ்டிக்கு ஸலிலை என்று பேர்
காலாந்தரத்திலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு ஆபை என்று பேர்
பாக்ய வசத்தாலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு வ்ருஷ்டி என்று பேர்
இவை நாலும் ஆத்யாத்மிகங்களாய்க் கொண்டு 1-ப்ரக்ருதி 2-உபாதானம் 3-காலம் 4-பாக்யம் என்கிற காம்யாந்தரங்களை யுடையவையாய் இருக்கும்
அர்த்தத்தினுடைய ஆர்ஜனத்திலும் -ரக்ஷணத்திலும் -ஷயத்திலும் கிலேச தர்சனத்தாலே மீண்டு இருக்கிற துஷ்டிகளுக்கு ஸூதாரை –ஸூபாரை ஸூநேத்ரை என்று பேர்களாய் இருக்கும்
ஸப்தாதி விஷய போகத்தில் திருப்தி பிறவாதே தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு மாரீசிகை என்று பேர்
விஷய போகத்தில் திருஷ்ணை கழியாது ஒழிந்தால் பாபாதி தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்
அஷ்ட ஸித்திகளில் அநு பதிஷ்டமான அர்த்தத்தைப் பற்ற புத்தியால் உண்டான ஊஹம் ஸ்தாராக்யையான ஸித்தி –ப்ராசங்கிக்கமான ஸப்த ஸ்ரவணத்தாலே யாதல்- லோக யாத்ரா தர்சனத்தாலே யாதல் -அர்த்த ஞானம் பிறக்கை ஸூதாராக்யையான ஸித்தி –
குரு உபதேசத்தாலே எதிலும் அதிகமான அர்த்த ஞானம் பிறக்கை தாராயந்த்யாக்யையான ஸித்தி
ஆத்யாத்மிக ஆதி பவ்திக ஆதி தைவீக ரூப தாப த்ரய ஜய லாபத்தாலே மூன்று வகைப்பட்ட மோத -பிரமுதித மோதமாநாக்யைகளான ஸித்திகள்
–இவ் விடத்தில் ஆத்யாத்மிக தாபத்துக்கு ஆயுர் வேதத்தாலே ஜயம்
ஆதி பவ்திகத்துக்கு லௌகிகங்களான தத் தத் அநு ரூப உபாய விஷயங்களாலே ஜெயம்
ஆதி தைவிகமான சீதோஷ்ண வாதாதிகளுக்கு ப்ரதிஸ்ர யாச்சாத ந சய்யா கௌதுக மங்களா சரணாதிகளாலே ஜயம்
ஆதி தைவிகஸ்ய ப்ரதிஸ்ர யோசிச்சாந ப்ரதிஷ்டாதாந சய்யா கௌதுக மங்களா சரணாதி நா ஜய –இதிஹி -1-5-11- விஷ்ணு சித்தீய வாக்யம்
மித்ர யோக வசத்தாலே -அர்த்த ஸித்தி உண்டாகை அதிக மாக்யையான ஸித்தி
வித்வத்த பஸ்விஜந ஸூஸ் ரூஷையாலே லப்யையான அர்த்த ஸித்தி ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்தி
ஆக தாராக்யை-ஸூ தாராக்யை-தார யந்த்யாக்யை -மோதாக்யை -பிரமுதி தாக்யை -மோதமாநாக்யை -அதிகமாக்யை -ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்திகள் எட்டும்
அம்பாதி நவ துஷ்டியும்
புத்தி விபர்யாஸ ஜனிதங்களாய்க் கொண்டு புத்தி வதாத்மிகங்களான இவை பதினேழும்
இந்த்ரிய அசக்திகள் பதினொன்றும்
மோஷாந்தராயங்களாக சாங்க்யத்திலே சொல்லப்பட்டது
ஏகாதஸ இந்த்ரிய வதாஸ் ஸஹ புத்தி வதைர ஸக்தி ருத்திஷ்டா -ஸப்த தச தாது புத்தேர் விபர்ய யாத் துஷ்டி ஸித்தீ நாம்
ஆத்யாத்மிகாஸ் ச தஸ்ர -ப்ரக்ருத் யுபாதாந கால பாக்யாக்யா–பாஹ்யா விஷயோ பரமா பஞ்ச நவ துஷ்டயோர் அபி ஹிதா -யூஹஸ் சப்தா அத்யயனம் துக்க விகாதாஸ் த்ரயஸ் ஸூஹ்ருத் பிராப்தி -தாநஞ்ச ஸித்தய அஷ்டவ் ஸித்தே பூர்வோங்குஸஸ்த்ரி வித -என்று ஸித்தே மோக்ஷஸ்ய -அங்குஸ அந்தராய த்ரிவித விபர்யாய ஸக்தி துஷ்டிரிதி
இப்படி அஷ்டா விம்சத் வதாத்மகமான திர்யக் சர்க்கம் ஸ்ருஷ்ட்யாதி ஜகத் ப்ரவ்ருத்தி ஹேது அல்லாமையாலே பின்னையும் ஸ்ருஷ்ட் யுன்முகனான ப்ரஹ்மாவினுடைய த்யான ரூப ஸங்கல்பத்தாலே யூர்த்வ ஸ்ரோதஸ் ஸப்த வாஸ்யமான தேவ சர்க்கம் உண்டாயிற்று
அநிமிஷ த்ருக்களாய் ஊர்த்வ ஸஞ்சார யுக்த ராகையாலே ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்கள் என்கிறது –
அந்த தேவர்களாகிறார் -ஸத்வ உத்ரிக்தராய் ஸூக ப்ரீதி பஹுளராய் -உள்ளோடு புறம்போடு வாசியற ஞாநாதி ரோதநம் இன்றியே ஸர்வதா ஸந்துஷ்ட சித்தராய் இருப்பார்கள் -அவர்களும் ஜகத் ப்ரவ்ருத்தி நிரபேஷராய் இருக்கையாலே கீழ்ச் சொன்ன முக்யமான நக சர்க்கம் (ஸ்தாவர ஸ்ருஷ்டி)திர்யக் சர்க்கங்களோடு வாசியற அஸாதகமாக நினைத்து குண த்ரய விசிஷ்டராகையாலே ப்ரகாஸ ப்ரவ்ருத்தியாதி சீலரான மநுஷ்யர்களை ஸ்ருஷ்ட்டித்தான் -இந்த மனுஷ்ய சர்க்கம் -தேவ சர்க்கத்துக்குக் கீழாய் இருக்கையாலே அர்வாக்ஸ் ரோதஸ் என்று பேராய் இருக்கும் –
இப்படி ஸ்தாவ ராதிகளான நாலு ஸ்ருஷ்டிகளும் அந்விதங்களாய்க் கொண்டு கீழ்ச் சொன்ன ஸக்தி வதாதிகளான அநுக்ரஹ ஸ்ருஷ்டிகளோடே கூடி இருக்கும் –
1-மஹதாதி ஸ்ருஷ்டியும் 2-தன் மாத்ராதி பூத ஸ்ருஷ்டியும் -3-இந்த்ரிய ஸ்ருஷ்டியும் என்று ப்ராக்ருத ஸ்ருஷ்டி மூன்றாய்– (ப்ரக்ருதி ஸ்ருஷ்ட்டியையும் சேர்த்து நான்காய்)ஸ்தாவராதிகளான நாலாயிருந்த அநுக்ரஹம் கூடி எட்டு ஸ்ருஷ்டிகளாய் இருக்கும் –
இது தான் அஷ்டம அநுக்ரஹஸ் சர்க்க ஸ சதுர்தா வ்யவஸ்தித -விபர்யயேண அசக்த்யா ச ஸித்தயா துஷ்ட்யா ததைவ ச -ஸ்தாவரேஷு விபர்யாசாத் திர்யக்யோ நிஷ்வ ஸக்தித -ஸித்த்யாத்மநா மனுஷ்யேஷு துஷ்ட்யா தேவேஷு க்ருத்ஸ் ந ஸ -என்று வாயவ்யத்திலே சொல்லுகிறபடியே ஸ்தாவர ஜாதியில் இந்த இந்த்ரியாதிகளுடைய ஸ்வரூப விபர்யாசத்தாலும் -திர்யக் ஜாதியில் ஸக்தி குண்ட நத்தாலும் -மநுஷ்ய ஜாதியில் ஸித்தி ரூபத்தாலும் -தேவ ஜாதியில் துஷ்டி ரூபத்தாலும் தத் தத் ஸ்வ பாவ அநுக்ரஹ ரூபம் என்றதாயிற்று
ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்களான தேவர்கள் ஆகிறார் -ஸநகாதி பரம யோகிகளும் நவ ப்ரஹ்மாக்களும் முதலானாரும் -இன்னமும் ஊர்த்வ லோக வாசிகளான தேவ வர்க்கங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களாகிறார் –ஏகாதஸ ருத்ரர்களும்- (திருநாம்கூர் 11 திவ்ய தேசங்களும் இந்த 11 ருத்ரர்களுக்கு)த்வாதஸ ஆதித்யர்களும் (துவாதச ஆதித்ய சீலம் பிருந்தாவனத்தில் உண்டு -பிரச்சந்தன தீர்த்தம் வியாவை தீர்த்த குளமும் உண்டு)-அஷ்ட வஸூக்களும் அஸ்விநீ தேவதைகளும்(குதிரைமுக வைத்தியர்கள் -இந்திரன் பிரஜாபதி இருவரும் என்றும் பிரமாணம்) என்று சொல்லப்பட்டு இருக்கிற த்ரயஸ் த்ரிம்ஸத் கோடி நிர்வாஹகமான தேவதா வர்க்கங்கள்
ஏதே த்ரயஸ்ரிம் சத்தேவா இதி – கதமேந த்ரயஸ் த்ரிம் ஸதித் யஷ்டவ் வஸவ ஏகாதஸ ருத்ரா த்வாதஸாதித்யா த ஏக த்ரிம் ஸத் இந்த்ரஸ் சைவ பதிஸ் ச த்ரயஸ் த்ரிம்ஸா விதி –இதி ப்ருஹதாரண்யக ஸ்ருதி -5-9-2-
இவர்களில் த்வாதஸ ஆதித்யர்கள் ஆகிறார் -தாதார்யமா ச மித்ரஸ் ச வருணஸ் ச இந்த்ர ஏவ ச -விவஸ்வாம்ஸ் த்வத பூஷா ச பர்ஜன்யஸ் சாம்ஸ ஏவ ச -பகஸ் த்வஷ்டா ச விஷ்ணுஸ் ச ஆதித்யா த்வாதஸ ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புரா -1-15-131-
ஸர்வ புராணங்களிலும் பாட வ்யத்யாஸம் காண்கிறது என்று செல்லப்பட்டவர்கள்
ஸ ரதோ அதிஷ்டிதோ தேவை ராதித்யை ருஷிபிஸ் ததா -கந்தர் வைரப் ஸரோபிஸ் ச க்ராமணீ ஸர்வ ராக்ஷசை –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-2- என்கிறபடியே
தந்தாமை அநு வர்த்திப்பார் ஆதித்யர்கள் -ஸப்த ரிஷிகள் -கந்தர்வர்கள் -அப்சரஸ் ஸுக்கள் -யக்ஷர்கள் -சர்ப்பங்கள் -ராக்ஷசர்களாகிற ஏழு வர்க்கத்தோடு கூடி அம்மண்டலத்துக்கு வாசஸ் ஸ்தானமான ரதத்திலே இருப்பார்கள்
இவர்களில் -புலஸ்த்ய புலஹஸ் சாத்ரி வஸிஷ்டோ அதாங்கிரா ப்ருகு கௌதமஸ் ச பரத்வாஜ காஸ்யப க்ருதுரேவ ச ஜமதக்நி கௌசிகஸ் ச முநயோ ப்ரஹ்ம வாதிந ஸ்துவந்தி தேவம் விவிதை சந்தோபிஸ் தே யதாக்ரமம் –கூர்ம பு பூ -4-1-5- என்று பன்னிரண்டு ருஷிகளும் வேதாத்யயந பரராய்க் கொண்டு ஸ்துதிப்பார்கள்
தும்புரு நாரதோ ஹாஹா ஹுஹுர் விச்வா வஸூஸ் ததா -உக்ரேஸேநோ வஸூ ருசிர் விச்வாவ ஸூரதாபர -சித்ரஸேநஸ் ததோர்ணாயுர்த்ரு தராஷ்ட்ரோ த்விஜோத்தமா ஸூர்ய வர்ச்சா த்வாத ஸைதே கந்தர்வா காயதாம் வரா –கூர்ம பு பூ -41-12-13- என்று
பன்னிரண்டு கந்தர்வர்களும் காந பரராய் இருப்பார்கள்
க்ருதஸ்தலாஸ் ஸரோவர்யா ததான்யா புஞ்ஜிகஸ்தலா மேனகா ஸஹ ஜன்யா ச ப்ரம்லோசாபி த்விஜோத்தமா அநும்லோ ச க்ருதாசீ ச விச்வாசீ சோர்வஸீ ததா -அன்யா ச பூர்வ சித்திஸ் ஸ்யாத் அன்யா சைவ திலோத் தமா -கூர் பு பூ 41-14-15- என்று
சொல்லப்பட்ட அப்சரஸ் ஸுக்களும் ந்ருத்த பரராய் இருப்பார்கள்
ரதஜிச் ச ரதவ்ஜாஸ் ச க்ராமணீஸ் ச ரதஸ்வந -சித்ரஸ் ஸ்ரோதா பூரணஸ் ச ஸூஷேணஸ் ஸேந ஜித் ததா -தார்ஷ்யஸ் சாரிஷ்ட நேமிஸ் ச ருதஜித் ஸத்ய ஜித்ததா -கூர்ம பு பூ 41-6- என்கிற பன்னிரண்டு யக்ஷர்களும் குதிரை பிடித்து ஸேவிப்பர்கள்
வாஸூகி கச்ச வீரஸ் ச தக்ஷக ஸர்ப்ப புங்கவ ஏலா பத்ரஸ் சங்க பால ததைராவத ஸம்ஜ்ஞக தனஞ்சயோ மஹா பத்மஸ் ததா கார்க்கோடகோ த்விஜ -கம்ப லோஸ்வ தரஸ் சைவ வஹந்த்யேநம் யதா க்ரமம் -கூர்ம பு பூ 41-10-11- என்று
பன்னிரண்டு நாகங்களும் தேரை நடத்துவார்கள்
அத ஹேதி ப்ரஹேதிஸ் ச பவ்ருஷேயோ வதஸ் ததா சர்ப்போ வ்யாக்ரஸ் ததா பஞ்ச வாதோ வித்யுத் திவாகர -ப்ரஹ்மோ பேதஸ் ச விப் ரேந்திர யஜ்ஜோ பேதஸ் ச ராஷஸா –கூர்ம -பு பூ 41–42- என்கிற பன்னிரண்டு ராக்ஷஸர்களை அநு சரராய் இருப்பார்கள்
இப்படி ஆதித்யாதி ஸப்த கணங்களும் சைத்ராதியான பன்னிரண்டு மாஸங்கள் தோறும் மாறி மாறி பர்யாயேண நிர்வஹித்துப் போருவார்கள்
(ஆட்டுமுக நக்ஷத்ர மண்டலம் மேஷ ராசி-இதுவே ஸூர்யன் மேஷ ராசியில் நுழைகிறான் என்கிறது-சித்திரை மது மாஸம் -வைகாசி மாதவ மாதம்-கேசவ மார்கழி -தாமோதர மாசம் கார்த்திகை -வடக்கில் சொல்வர்)
அதில் -தாதா க்ருதஸ் தலா சைவ புலஸ்த்யோ வாஸூகிஸ் ததா ரத ப்ருத் க்ராமணீர் ஹேதிஸ் தும்புருஸ் சைவ சப்தம ஏதே வஸந்தி வை சைத்ரே மது மாஸே ஸதைவ ஹி –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-3- என்கிறபடியே
தாதா என்கிற ஆதித்யனும் க்ருதஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் புலஸ்த்யன் என்கிற ரிஷியும் வாஸூகி என்கிற சர்ப்பமும் ரதப்ருத் என்கிற யக்ஷனும் ஹேதி என்கிற ராக்ஷஸனும் தும்புரு என்கிற கந்தர்வனும் ஆகிற ஏழு பேரும் சைத்ரமாகிற மது மாஸத்தில் எப்போதும் வசிப்பர்கள்
மதுஸ் ச மாதவஸ் ச வா சந்திகா வ்ருதூ -ஸூக்ரஸ் ச ஸூதிஸ் ச க்ரைஷ்மா வ்ருதூ- நபஸ் ச தபஸ் யஸ்ய ஸைஸி ராவ்ருதூ என்கிற ஸ்ருதியை -யஜுர் -4-4-11-29- உட்க்கொண்டு மது மாஸம் இத்யாதி
அர்யமா புலஹஸ் சைவ ரதவ்ஜா புஞ்ஜிகஸ் தலா ப்ரஹேதி கச்ச வீரஸ் ச நாரதஸ் ச ரதே ரவே -மாதவே நிவசந்த்யேன –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-5- என்கிறபடியே
அர்யமா என்கிற ஆதித்யனும் புலஹன் என்கிற ருஷியும் ரதவ்ஜா என்கிற யக்ஷனும் புஞ்ஜிகஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் ப்ரஹேதி என்கிற ராக்ஷஸனும் கச்ச வீரன் என்கிற சர்ப்பமும் நாரதன் என்கிற கந்தர்வனும் ஆகிய எழுவரும் வைகாஸி மாசமாகிற மாதவ மாஸத்திலே வசிப்பர்கள்
மித்ரோத்ரிஸ் தக்ஷகோ ரக்ஷ பவ்ருஷேயோ அத மேநகா ஹாஹாரதஸ்வ நஸ் சைவ மைத்ரே யைதே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-7- என்கிறபடியே
மித்ரன் என்கிற ஆதித்யனும் அத்ரி என்கிற ருஷியும் தக்ஷகன் என்கிற சர்ப்பமும் பவ்ருஷேயன் என்கிற ராக்ஷஸனும் மேநகை என்கிற அப்சரஸும் ஹாஹா என்கிற கந்தர்வனும் ரதஸ்வநன் என்கிற யஷனுமாகிற எழுவரும் ஆனி என்கிற ஸூசி மாஸத்திலே வஸிப்பர்கள்
வ்ருணோ வஸிஷ்டோ ரம்பா ச ஸஹ ஜன்யா ஹுஹுவத ரதசித்ரஸ் ததாஸ் வாஸோ வஸந்த் யாஷாட ஸம்ஜ்ஞகே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-8- என்கிறபடியே
வருணன் என்கிற ஆதித்யனும் வஸிஷ்டன் என்கிற ருஷியும் ஸஹ ஜன்யை என்கிற ரம்பையாகிற அப்சரஸ்ஸும் ஹுஹு என்கிற கந்தர்வனும் வதன் என்கிற ராக்ஷஸனும் அஸ் வாஸன் என்கிற சர்ப்பமும் ஆகிற எழுவரும் ஆடியாகிற ஸூக்ர மாஸத்திலே வசிப்பார்கள்
இந்த்ரோ விஸ்வாவஸூஸ் ஸ்ரோதா ஏலா புத்ரஸ் ததாங்கிரா ப்ரம்லோசா ச நபஸ்யதே ஸர்ப்பஸ் சார்க்கே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-9- என்கிறபடியே
இந்த்ரன் என்கிற ஆதித்யனும் விஸ்வா வஸூ என்கிற கந்தர்வனும் ஸ்ரோதா என்கிற யக்ஷனும் ஏலா புத்ரன் என்கிற சர்ப்பமும் அங்கிரா என்கிற ருஷியும் ப்ரம் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சர்ப்பன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் ஆவணியாகிற நபோ மாஸத்திலே வசிப்பார்கள்
விவஸ்வாநுக்ரஸே நஸ் ச ப்ருகு ராபூரணஸ் ததா -அநும் லோசா சங்க பாலோ வ்யாக்ரோ பாத்ர பதே ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-1-10- என்கிறபடியே
விவஸ்வான் என்கிற ஆதித்யனும் உக்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் ப்ருகு என்கிற ருஷியும் ஆபூரணன் என்கிற யக்ஷனும் அநும் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சங்க பாலன் என்கிற சர்ப்பமும் வ்யாக்ரன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் புரட்டாசி யாகிற நபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்
பூஷா வஸூ ருசிர் வாதோ கௌதமோ அத தனஞ்ஜய ஸூ ஷேணஸ் ச க்ருதாஸீ ச வஸந்த் யாஸ்வ யுஜேரதே-ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-11-என்கிறபடியே
பூஷா என்கிற ஆதித்யனும் -வஸூ ருசி என்கிற கந்தர்வனும் வாதன் என்கிற ராக்ஷஸனும் கௌதமன் என்கிற ருஷியும் தனஞ்சயன் என்கிற சர்ப்பமும் ஸூஷேணன் என்கிற யக்ஷனும் க்ருதாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் ஐப்பசி மாசமாகிற இஷ மாஸத்தில் வசிப்பர்கள்
விஸ்வா வஸூர் பரத்வாஜ பர் ஜன்யை ராவதவ் ததா விஸ்வாஸீ ஸேநஜிச் சாப கார்த்திகே ச அதி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-12-என்கிறபடியே
விஸ்வா வஸூ என்கிற ஆதித்யனும் -பர்ஜன்யன் என்கிற கந்தர்வனும் ஆபன் என்கிற ராக்ஷஸனும் பரத்வாஜன் என்கிற ருஷியும் இராவதன் என்கிற சர்ப்பமும் ஸேநஜித் என்கிற யக்ஷனும் விஸ்வாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் கார்த்திகை மாசமாகிற ஊர்ஜத்திலே வசிப்பர்கள்
அம்ச காஸ்யப தார்ஷ் யாஸ்து மஹா பத்மஸ் ததோர் வஸீ சித்ரஸே
நஸ் ததா வித்யுந் மார்க்க ஷீர்ஷாதி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-13-என்கிறபடியே
அம்சன் என்கிற ஆதித்யனும் -சித்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் வித்யுத் என்கிற ராக்ஷஸனும் காஸ்யபன் என்கிற ருஷியும் மஹா பத்மன் என்கிற சர்ப்பமும் தார்ஷ்யன் என்கிற யக்ஷனும் ஊர்வசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மார்கழி மாசமாகிற ஸஹோ மாஸத்திலே வசிப்பர்கள்
க்ரதுர் பகஸ் ததோர்ணா யுஸ் பூர்ஜ கார்க்கோடகஸ் ததா அரிஷ்ட நேமிஸ் சைவான்யா பூர்வ சித்திர் வராப்ஸரா பவ்ஷ்மாஸே வஸந்த்யேதே ஸப்த
பாஸ்கர மண்டலே ஷ்ய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-14-என்கிறபடியே
பகன் என்கிற ஆதித்யனும் -ஊர்ணாயு என்கிற கந்தர்வனும் ஸ்பூர்ஜன் என்கிற ராக்ஷஸனும் க்ரது என்கிற ருஷியும் கார்க்கோடகன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் பூர்வ ஸித்தி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் தை மாசமாகிற
பவ்ஷ்ய மாஸத்திலே –ஸஹஸ்ய மாஸத்திலே இதி பாரதம் – வசிப்பர்கள்
(குரு புஷ்ய உத்சவம் -பூசம் பரதனுக்கு நக்ஷத்ரம் -ராமானுர் திவ்ய மங்கள விக்ரஹ பிரதிஷடை)
த்வஷ்டா ச ஜமதக்நிஸ் ச கம்ப லஸ் ச திலோத்தமா ப்ரஹ்மோபேதோத ரதஜித் த்ருதராஷ்ட் ரஸ் ச சப்தம மாக மாஸே வஸந்த்யேதே ஸப்த மைத்ரேய பாஸ்கரே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-16-என்கிறபடியே
த்வஷ்டா என்கிற ஆதித்யனும் –த்ருதராஷ்ட்ரன் என்கிற கந்தர்வனும் ப்ரஹ்மோ பேதன் என்கிற ராக்ஷஸனும் ஜமதக்நி என்கிற ருஷியும் கம்பளன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் திலோத்தமை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மாசி மாசமாகிற
தபோ மாஸத்திலே வசிப்பர்கள்
விஷ்ணுரஸ்வதரோ ரம்பா ஸூர்ய வர்ச்சாஸ் ச ஸத்யஜித் விச்வா மித்ரஸ் ததா ரஷோ யஜ் ஜோ பேதோ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-18–என்கிறபடியே
விஷ்ணு என்கிற ஆதித்யனும் –ஸூர்ய வர்ச்சஸ் என்கிற கந்தர்வனும் யஜ்ஜோ பேதன் என்கிற ராக்ஷஸனும் விஸ்வாமித்ரன் என்கிற ருஷியும் அஸ்வதரன் என்கிற சர்ப்பமும் ஸத்ய ஜித் என்கிற யக்ஷனும் ரம்பை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் பங்குனி மாசமாகிற தபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்
மாஸேஷ்வேதேஷு மைத்ரேய வஸந்த்யேதே த்ரி ஸப்தகா ஸவிதுர் மண்டலே ப்ரஹ்மன் விஷ்ணு சக்த்யுப ப்ரும்ஹிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-19–என்கிறபடியே
இம் மாஸங்கள் தோறும் இவ் வாதித்யாதி ஸப்த கணங்களும் பகவச் சக்தியாலே உப ப்ரும்ஹிதராய்க் கொண்டு த்ரயீ மயமாய் பகவச் சக்தி மயமாயுள்ள ஆதித்ய மண்டலத்தை ஆஸ்ரயித்து இருப்பர்கள் -அதில் ஆதித்யன் மண்டலாதி பதியாய்க் கொண்டு ப்ரதானனாய் இருப்பன்
அல்லாதார் அவனை அநு சரித்து இருப்பர்கள் -அவ் வாதித்யனுடைய ஹ்ருதயத்திலே உபாஸ்யனாய்க் கொண்டு
வித்யா சஹாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் ஸநாதநம் கபிலம் ப்ராஹூ ராசார்யாஸ் சாங்க்யயோக விசக்ஷநா -மோ -347-69–352-30- என்று
செய்யாளான வித்யா ஸப்த வாஸ்யையான லஷ்மியோடே கூடி ஹிரண்மய விக்ரஹ விஸிஷ்டனாய் மத்யஸ்த நீல தோயத வித் யுல்லேகா பாஸ்வர காந்தியாலும் அத்தை முட்டாக்கிடுகிற லோஹித வர்ண ஸூதர்ஸந காந்தியாலும் காபிலச் சாயமாய் இருக்கையாலே கபிலன் என்று சொல்லப்பட்ட என்னை ஆதித்ய மண்டல மத்யஸ்தனாக சாங்க்ய யோக வித்தமர்கள் சொல்லுவார்கள் என்று பகவத் வசனம் உண்டாகையாலே ஸூர்ய அந்தராத்மாவாய் ஸ்ரீய பதி எழுந்து அருளி இருக்கும்
இதி தத்த்வ நிரூபணே தேவாதி நிரூபணம் நாம பஞ்சம அதிகாரம் ஸம் பூர்ணம் –
———-
ஷஷ்டாதிகாரம்–கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
1-ஆதித்ய ரத பரிமணாதி நிரூபணம்
2-ஸம்வத்ஸர பரிவத்ராதி நிரூபணம்
3-சாந்த்ரஸாவந ஸுவ்ர நக்ஷத்ர ரூப சதுர்வித ஸம்வத்ஸர பேத நிரூபணம்
4- ஸோம ரத நிரூபணம்
5-புத ரத நிரூபணம்
6-ஸூக்ர ரத நிரூபணம்
7-பவ்ம ரத நிரூபணம்
8-ப்ருஹஸ்பதி ரத நிரூபணம்
9-ஸநி ரத நிரூபணம்
10-ராஹு ரத நிரூபணம்
11-கேது ரத நிரூபணம்
12-ஆதித்யாதீ நாம் ஸஞ்சார நிரூபணம்
13-சாதுர் வர்ண்ய க்ரம ஸ்ருஷ்ட்யாதி நிரூபணம்
14-ப்ராஹ்மணாதி க்ருத்ய நிரூபணம்
15- கால ஸ்வரூப நிரூபணம்
16-ஸப்த ரிஷி -அஷ்ட வஸூ -ஏகாதஸ ருத்ர -சதுர் தச மநு -சதுர் தச இந்த்ர திக் பாலகாநாம் நாம நிரூபணம்
17-யுகாதி ஸித்தி நிரூபணம்
18-யுகாதி தர்ம நிரூபணம்
19-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ரூப த்ரிவித காரணத்வமபி பரமாத்மந இத்யர்த்த நிரூபணம்
———
ஏவம் பூதனான மண்டல வியாப்தமான ரதாம்சம் ஒன்பதினாயிரம் யோஜனமாய்
கந்தர்வாதி பரிவாராதிஷ்டிதமான அம்சம் ஆயிரம் யோஜனமாய்
ஆயாம விஸ்தாரங்கள் பதினாயிரம் யோஜனம் நீளத்தையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் ருக்கும் என்று புராணங்களிலே
யோஜநாநாம் ஸஹஸ்ராணி பாஸ்கரஸ்ய ரதோநவ -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-2- என்றும்
தச யோஜந ஸாஹஸ்ரோ விஸ்தாரயாமதோ ரத -வாயு பு பூ -5-5- என்றும் சொல்லப்பட்டது இறே
ஏற் கால் -18 நாழிகை பகல் 12 நாழிகை இரவு –சித்திரை மாதம்-மாற்றி அடுத்த ஆறு மாசங்களில்
இத் தேரினுடைய ஈஷா தண்டமான பாரானாது -ஈஷா தாண்டஸ் ததை வாஸ்ய த்வி குணோ முநி சத்தம என்று
இதில் இரட்டிப்பாய் 20000 யோஜனமாய் இருக்கும்
இது எல்லாம் தேஜோ மயமாகையாலே தூரத்திலே மண்டல ஆகாரமாய்த் தோன்றும்
இத் தேரினுடைய அச்சு ஒன்றைக் கோடி எழு நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமாய்
மேரு தொடங்கி மாநஸோரத்தத்தளவும் நீளத்தை யுடைத்தாய் மகாஷம் என்று பேராய் -பூமிக்கு மேல் 84000 யோஜனமான மஹா மேருவுக்கு மேலே 16000 யோஜனத்தளவும் ஒரு தலைப்பும் மற்றைத் தலைப்பு புஷ்கரத்வீப மத்யத்திலே 50000 யோஜனம் உயர்த்தியை யுடைத்தான மாநஸோத்தர ஸைலத்துக்கு மேலே 50000 யோஜனத்து அளவிலேயாய் அத் தலையிலே கால சக்ர மயமான வேக சக்ரம் கோப்புண்டு இரண்டு தலையும் வாயு பாச பத்தமாய் மேல் த்ருவன் பக்கலிலே துவக்குண்டு இருக்கும்
ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-3- ல் இவ் வினிடத்துக்கு அநு குணமாகக் காண்க
இதனுடைய ஹ்ரஸ் வாஷமமும் யுகமும் தனித் தனியே 45000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் த்ருவ கதமான வாயு பாஸங்களிலே இரண்டு தலையும் பத்தங்களாய் இருக்கும்
இவ் வாதித்யனுக்கு இடமான யுகத்திலே
காயத்ரி
ப்ருஹதி
உஷ்ணிக்
ஜகதி
த்ரிஷ்டுப்
அனுஷ்டுப்
பங்க்தி -என்கிற ஸப்த சந்தஸ்ஸுக்களும் பச்சைக் குதிரைகள் ஏழாய்க் கொண்டு ரதத்தை வஹிக்கும்(புரவி ஏழு ஒரு காலுடைய தேர்)ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம் -யஜோர் ஆற -3-11- ருக்வேத -2-3-14-1-22-164-2-என்னக் கடவது இறே
ஆகில் ஏகோ அஸ்வோ வஹதி ஸப்த நாம – அதர்வ வேத -2-3-14–என்கிற ஸ்ருதியோடே விரோதியாதோ என்னில்
வேத ரூபமான ஹரி ரதஸ்வம் ஸப்த ஸந்தோ மயமான ஏழு ரூபத்தையும் ரூப அநு குணமான ஏழு பேரை யுடைத்தாய் ரதத்தை வஹிக்கும் என்று வஸ்து ஐக்யத்தைச் சொல்லிற்று இங்கு
ஸப்த யுஞ்ஜந்தி என்கிற ஸ்ருதி வ்யக்தி பின்னத்தைச் சொல்லிற்று -ஆகையால் விரோதம் இல்லை
(வடக்கு ராசி ஆறு
தெற்கு ராசி ஆறு
பூ மத்திய ரேகையில் இருந்து கடக்க ரேகை வரை வடக்கே செல்வதும்
மகர ரேகை வரை தெற்கே செல்வதும் உண்டு
12 ராசி -27 நக்ஷத்திரங்கள் -ஒரு ராசிக்கு இரண்டேகால் நக்ஷத்திரங்கள்-கால பேதம் -உஜ்ஜயின் திரும்பும் இடத்தில் -அங்கு இருந்து தான் விக்ரமாதித்யன் இருந்து –கடகரேகை – ஜ்யோதிஷம் கணித்தார்-)
இந்த மஹா ரதத்த்திலே -ஆதித்யனுடைய தக்ஷிண உத்தராயண கதிக்கு உறுப்பாக நூற்று எண்பத்து மூன்று ரேகையாய் அதுக்கு மேலே ஹ்ரஸ்வாக்ஷ பத்தமான ரதமாய்
அது வாயு பாஸ பத்தமாய்க் கொண்டு த்ருவ கதமாகையாலே மேருவுக்கு ஆஸந்நமாம்படி த்ருவன் ஆகர்ஷிக்கும்
தஷிணாயநத்தில் விப்ரக்ருஷ்ட மாம்படி பாஸத்தை நெகிழ விடும் -அதில் தை மாஸம் ப்ரதம திநம் தொடங்கி மாசி பங்குனி மூன்று மாஸமும் நித்யம் ஒரு வீதியாக வடக்கே போய்
சித்திரை மாஸம் ப்ரதம தினத்திலே வைஷு வதீ யாகிற வீதியிலே சென்று
மேலும் நித்யம் ஒரு வீதியாகச் சித்திரை வைகாசி ஆனி அளவும் வடக்கே போய்
ஆடி முதலாக தக்ஷிண யநத்திலும் ஆடி ஆவணி புரட்டாசி அளவும் நடந்து
ஐப்பசியிலும் விஷு வாகிற மத்ய வீதியிலே வந்து மார்கழி மாச முடிவாக தக்ஷிண காஷ்டையிலே நடக்கும்
இப்படி மஹா மேருவை ப்ரதக்ஷிணம் வருமளவில் உத்தராயணத்தில் ப்ரதம தின ஸம்பந்தமாய் இருக்கும் -தஷிணாயநத்தில் தூரத்வ அநு ரூபமாக ஸீக்ர கதியாய் இருக்கும்
இப்படி வருகிற ஆதித்யனுக்கு தேச பேதேந வருகிற தர்சன அதர்சனங்கள் ஒழிய உதய அஸ்தமயங்கள் ஒருக்காலும் இல்லை –அதாவது
மேருவுக்குக் கிழக்கே -மத்யாஹ்நமாம் அளவில் தெற்குத்தைக்கு உதயமாம் – (ஜப்பான் போன்ற இடம் மேருவுக்கு கிழக்கே-நாம் இருப்பது மேருவுக்கு தெற்கு)தெற்குத்திக்கு மத்யாஹ்நமாம் அளவில் கிழக்குத்தைக்கு அஸ்தனமாம் -மேற்குத்தைக்கு உதயமாய் தெற்குத்தைக்கு அஸ்தமயமாம் அளவில் கிழக்குத்தைக்கு அர்த்த ராத்ரியாம் -மேற்குத்தைக்கு மத்யாஹ்நமாம் –
இப்படி திக்குகள் எல்லாவற்றிலும் கண்டு கொள்வது –
இந்த ரதத்தில் மஹாஷத்தில் கோப்புண்ட ஏக சக்ரம் கால சக்ரமான படி என் என்னில்
த்ரி நாபி மதி சஞ்சாரே ஷண்ணேமிந் யக்ஷயாத்மகே -ஸம்வத்ஸரமயே க்ருத்ஸ்னம் கால சக்ரே ப்ரதிஷ்டிதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-4- என்கிறபடியே
சாதுர்மாஸ்ய த்ரயாத்மகமான –(இங்குத்தைக்குத் தகுதியான அர்த்தங்களை -2-8-4-ஸ்ரீ விஷ்ணு ஸித்தீயத்திலே காண்க )-நாபியை உடைத்தாய்
ஸம்வத்ஸரம் –
பரி வத்ஸரம் –
இதா வத்ஸரம் –
அநு வத்ஸரம் –
இத் வத்ஸரம் என்று சொல்லப்பட்ட ஐந்து வத்ஸரத்தையும் அரங்களாக யுடைத்தாய்
வஸந்த
க்ரீஷ்ம
வர்ஷ
ஸரத்
ஹேமந்த
ஸிஸி ரங்களாகிற ஷட் ருதுக்களையும் ஆறு நேமியாக யுடைத்தாய்
ப்ரவாஹ பரி வ்ருத்தியாலே அக்ஷய ரூபமாய் இருக்கிற கால சக்ரத்திலே ஸர்வமும் ப்ரதிஷ்டித மாகையாலே இந்த சக்ராத்மாவும் உபாஸ்யம் என்றபடி
இந்த பஞ்ச விதமான வத்சரங்களாவன -யதா மாகஸ்ய ஸூக் வஸ்ய ப்ரதி பச்சோத்தரா யணம் -ஸஹோயம் ஸ்ரவிஷ்டாபிஸ் ஸோமார்க்கவ் பிரதிபத்யத -ப்ரதமஸ் ஸோக்நி தைவத்யோ நாம்நா ஸம்வத்ஸரஸ் ஸ்ம்ருத -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் -)என்று
யாதொரு போது மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ப்ரதமை ஸ்ரவிஷ்டா நக்ஷத்ரங்களோடே கூடி நிற்கும் –
சந்த்ர ஆதித்ய ஸமவாயம் உண்டாகிறது -அது முதலான அக்னி தைவத்யமான ஸம்வத்சரம் என்று பேராய் இருக்கும் (முதல் 12 ஆண்டுகள்)
யதா மாகஸ்யஸூக்லஸ்ய த்ரயோதஸ் யாமுதக்ரவி –யுக்தே சந்த்ரமஸா ரௌத்ரே வாஸநம் ப்ரதிபத்யதே -த்வீ தீய்யஸ் ஸோ அர்க்கதை வத்ய(த்விதீய ஸோமதைவத்ய -இதி விஷ்ணு சித்தீயே -2-8-72- பாடோ த்ருஸ்யதே )ப்ரோச்யதே பரிவத்ஸர -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் ) என்று
யாதொரு போது மாக மாஸத்தில் த்ரயோதசியிலே திருவாதிரை சந்த்ர மாவோடே கூடின அளவிலே ஆதித்யன் அவ்விடத்தை அடையும் – அது ஆத்யதைவமான த்விதீயமான பரிவத்சரம் என்று பேராய் இருக்கும்
ஸூக்லே -க்ருஷ்ணே இதி ச பார -மாகஸ்ய தஸமீம் வாஸ வாதவ் திவாகரே சந்த்ராத்ருதீயம் ஸம் பிராஹு ரிதா வத்சரகம் புதா -( வ்ரு கா )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் தசமியிலே ஆதித்யன் அவ்விடத்திலேயாம் –
அது கூடுங்கால் சந்த்ர தைவத்யமாய் த்ருதீயமான இதா வத்சரமாகச் சொல்லா நின்றார்கள் –
ஸப்தமீ மாக ஸூக் லஸ்ய வாஸ வாதவ் திவாகரே சதுர்த்த மிந்த்ரதைவத்யம் தமாஹுரநு வத்ஸரம் -(வ்ரு க )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ஸப்தமியிலே ஆதித்யன் -அவ்விடம் முதலானதிலே கூடி யுள்ள விதத்தில் இந்த்ரதைவத்யமாய் சதுர்த்தமான அநு வத்ஸரம் என்று சொல்லா நின்றார்கள்
யத் யுத்தராயணம் க்ருஷ்ணே சதுர்த்யாம் ஸ்ரவஸோ பவேத்- இத்வத்ஸரஸ் ஸ விஜ்ஜேய பஞ்சமோ ம்ருத் யுதைவத -மாக மாஸத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தியில் ஆதித்யன் ஸ்ர விஷ்டாதி நக்ஷத்ரங்களிலே நிற்கிறான் -அது ம்ருத்யு தைவத்யமாய் பஞ்சமமான இத் வத்சரமாக அறியப்படும் –
இப்படி பஞ்சவிதமான இவ்வத்சரங்கள் –
சாந்த்ரம் என்றும்
ஸாவநம் என்றும்
ஸவ்ரம் என்றும்
நாஷத்ரம் என்றும் சதுர் விதமாயும் இருக்கும்
தர்ஸாத் தர்ஸஸ் சாந்த்ரஸ் த்ரிம் ஸத் திவஸஸ்து ஸாவநோ மாச ஸுவ்ரோர்க் கராஸி போகான் நாஷத்ரஸ் சேந்து மண்டலாத் கதித -என்கிறபடியே
அமாவாஸ்யை தொடங்கி மேல் அமாவாஸ்யை அளவும் செல்ல ஸாந்த்ர மாஸம்(27 நாள் கணக்கு-இதனால் அதிக மாசம் மூன்று வருஷங்களுக்கு ஒரு தடவை வைப்பார்கள்)
முப்பது நாள் ஸாவந மாஸம்
ஆதித்யனுடைய ராஸி போகம் ஸுவ்ர மாஸம்
அஸ்வின்யாதி ரேவத் யந்தமான சந்த்ர பரிவ்ருத்தி நாஷத்ரமான மாஸம்
ஏவம் விதமான பரிகணிதங்களாலே பரிகணி தங்களான வத்ஸரம் அஞ்சு படியாகச் சென்றால் ஏக காலத்திலே ஏகோத் யோகத்திலே முடியும் காலத்துக்கு யுக விபாகம் என்று பேராய் இருக்கும்
(இவ்வாறு ஐந்து பன்னிரண்டு ஸம்வத்சரங்கள் சேர்ந்து அறுபது ஸம்வத்சரங்களாய் மீண்டும் மீண்டும் வரும் என்றதாயிற்று)
ஸோமனுடைய ரதம் -மூன்று சக்ர யுக்தமாய் -குதிரைகள் வெளுத்து குந்தா பங்களாய் வாரி கர்ப்ப ஸமுத் பவங்களாய் -பத்தாய் இரண்டருகும் பூண்டு த்ருவனை ஆதாரமாக உடையவையாய் இருக்கும் -ஸ்ரீ விஷ்ணு பு -2-12-
இந்த சந்திரனுக்கு க்ஷய வ்ருத்திகளில் வந்தால் பூர்வ பக்ஷத்தில் பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் ஆதித்யனால் சங்க்ருஹீதமாய் அம்ருதமயமான பதினாலு களையும் -தேவர்கள் -ப்ரதமாம் பிபதே வஹ்நிர்த்விதீயாம் பிபதே ரவி -என்கிற அடைவிலே புஜிப்பார்கள்
அவசிஷ்டமான ஏக கலையோடே ஆதித்யனைக் கிட்டி அமை என்கிற ரஸ்மியிலே வசிக்கையாலே அமாவாஸ்யை என்று பேராகிறது
அமாவாஸ்யையில் ஆஹா ராத்ரத்திலே சந்திரன் பூர்வம் அப்பிலே ப்ரவேசித்து அநந்தரம் வீருத் ப்ரமுகமான வ்ருஷாதிகளிலே ப்ரவேசித்து -பின்னை ஆதித்யனைக் கிட்டுகையாலே அமாவாஸ்யையில் வ்ருஷாதிகளுடைய சேத நாதிகள் பண்ணும் இடத்தில் ப்ரஹ்ம ஹத்யா சமம் என்று சொல்லப்பட்டது –
புதனுடைய தேர் -வாய் வக்னி ஸம் பூதமாய் பொற் குன்று நிறத்தை யுடைய எட்டுக் குதிரையோடே கூடி இருக்கும்
ஸூக்ரனுடைய தேர் -பூ சம்பவங்களாய் இருக்கிற வெளுத்த நிறத்தை யுடைய எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்
செவ்வாயினுடைய தேர் -அக்னி சம்பவங்களாய் சிவந்த குதிரைகள் எட்டுக்களோடே கூடி இருக்கும்
காஞ்சன மயமான வெளுப்பு நிறத்தை உடைத்தான எட்டுக் குதிரைகளை யுடைத்தான தேரிலே ப்ருஹஸ்பதி இருக்கும்
ஆகாஸ சம்பவங்களாய் கிருஷ்ண வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடின தேரிலே ஸநை சரன் மெள்ள நடவா நிற்கும்
ராஹுவினுடைய தேர் கறுத்த குதிரை எட்டு பூண்டு நடவா நிற்கும்
கேதுவினுடைய தேர் சித்ர வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்
கிரஹண காலத்திலே ராஹு வானவன் தான் நிற்கிற த்ருதீய ஸ்தானத்திலும் கீழே போந்து ப்ரதிபத் பர்வ சந்நிதியிலே தூ சரமான சந்த்ராதித்யர்களை பூசாயை யாகிற தமஸ்ஸாலே உப ப்ரும்ஹிதனாய் திரோதானம் பண்ணும்
இது கேதுவுக்கும் ஒக்கும் இறே
இவர்களில் ஆதித்யனும் புதனும் ஸூக்ரனும் மேற்கே ராசியை ஒரு மாஸத்திலே சஞ்சரிப்பர்கள்
சந்த்ரன் இரண்டே கால் நாளிலே ஸஞ்சரிக்கும் –
செவ்வாய் ஒன்றரை மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
ப்ருஹஸ்பதி ஒரு வத்சரத்திலே ஸஞ்சரிக்கும்
ஸநைஸ் சரன் இரண்டரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
ராஹு ஒன்றரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
கேது இருபது மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் ஸப்தம ராஸியிலே இருப்பர்கள்
இந்த கிரஹங்கள் எல்லாம் ப்ரத்யங் முகமாய்க் கொண்டு மேருவை ப்ரதக்ஷிணமாய் வரச் செய்தே ராஸி போகத்தில் ப்ராங்முகராய்க் கொண்டு பிற் காலித்து புஜியா நிற்பர்கள் –
ஆகையால் நக்ஷத்ர மண்டலத்துக்கு ப்ரத்யக் கதி ஒழிய ப்ராக் கதி ஒருக்காலும் இல்லை
இப்படி ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரமான ஜ்யோதிர் மண்டலம் எல்லாம் தனித் தனியே வாயுபாஸ பத்தங்களாய்க் கொண்டு ஸிம்ஸூமார ப்ரஜாபதி புச்சஸ்திதனான த்ருவனை ஆதாரமாக யுடைத்தாய் பரி ப்ரமியா நிற்கும்
அந்த ஸிம்ஸூமார ப்ரஜாபதிக்கு ஆதாரம் -த்யவ்ஸ் ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திஸோ பூர் மஹோததி –வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந -பாரத ஆநு -149-121- என்று வாஸூ தேவஸ்ய வீர்யேண -என்கையாலே ஸங்கல்ப ரூப ஞாந விஸிஷ்டனான தத் அந்தர்யாமியான நாராயணானேயாய் இருக்கும் –
இந்த வாயு பாஸங்கள் -மேகங்களும் அர்க்கனும் இந்திரனும் நக்ஷத்ரங்களும் க்ரஹங்களும் ஸப்த ரிஷிகளும் த்ருவனுமாகிற ஏழு ஆஸ்ரயத்தையும் பற்றி
ஆவஹ ப்ரவஹஸ் சைவ ததைவ அநுவஹ பர -ஸம்வஹோ விவஹஸ் சைவ ததூர்த்வம் ஸ்யாத் பரோவஹ -ததா பரிவஹஸ் சோர்த்வம் வாயோர்வை ஸப்த நேமய -கூர்ம பு பூ -40-6- என்கிறபடியே
ஆவஹம் -என்றும்
ப்ரவஹம் என்றும்
அநு வஹம் என்றும்
ஸம் வஹம் என்றும்
விவஹம் என்றும்
பரோ வஹம் என்றும்
பரி வஹம் என்றும் வாயு நேமிகள் ஏழு வகையாய் இருக்கும்
இவை தன்னாலே பத்தங்களான ஸப்த பதார்த்தங்களுக்கும் ஆதார பூதனான த்ருவனுக்கும் ஆதாரமான ஸிம்ஸு மாரனுக்கும் ஆதார பூதன் நாரங்களுக்கு எல்லாம் அயநமான நாராயணனே என்றதாயிற்று
ஏவம் பூதரான தேவர்களை ஆராதித்து வர்ஷாதி ஸித்தியாலே ஸஸ்ய ஸம்ருத்தியைப் பெற்று யஜ்ஞாதி கர்மங்களைப் பண்ணுகைக்கு உறுப்பாக
ஸஹ யஜ்ஞ ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோ வாச ப்ரஜாபதி -அநேந ப்ரஸவிஷ்யத்வம் ஏஷாவோஸ் த்விஷ்ட காம துக் தேவான் பாவ யதாநேந தே தேவா பாவயந்து வ -பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத –கீதை -3- என்றும்
அஃனவ் ப்ராஸ்தாஹுதிஸ் ஸம்யகாதித்ய முபதிஷ்டதே – ஆதித்யாஜ் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர் அன்னம் தத ப்ரஜா –ப்ரஹ்ம பு -29-4- என்றும் சொல்லுகிறபடியே
யஜ்ஞாத் யாராதிதரான ஆதித்யாதி தேவர்களாலே வ்ருஷ்டி ஸஸ்ய ப்ரஜா வ்ருத்திகளானவை ப்ரதிபாதிக்கப்படா நின்றது இறே
ஆகையால் -சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ -கீதை -4-13- என்கிறபடியே
யஜ்ஞாத் யநுஷ்டான நிஷ்பத்தி பிறக்கைக்காக சாதுர் வர்ண் யமானது ஸர்வ ஸ்ரஷ்டாவான ஸர்வேஸ்வரனாலே முக பாஹுருபாத ஜாதரான ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ர விபாகத்தாலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது
(முகம் ப்ராஹ்மணர்
தோள்கள் க்ஷத்ரியர்
கைகள் வைஸ்யர்
திருவடி ஸூத்ரர் )
ப்ராஹ்மணர் ஆகிறார் –
அத்யயனம்
அத்யாபநம்
யஜநம்
யாஜநம்
தானம்
ப்ரதி க்ரஹம் -என்கிற ஷட் கர்மத்துக்கும் கடவராய்
தபோ தமஸ் ஸமஸ் சவ்சம் ஷாந்திர் ஆர்ஜவமேவச ஞான விஞ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்
என்கிற ஸ்வபாவஜ கர்ம நிரதராய் இருப்பர்கள்(ஆறு தொழில் அந்தணர்)
ஷத்ரியர் ஆகிறார்
அத்யயன
யஜன
தானங்கள் ஆகிற த்ரி கர்மத்துக்கும் கடவராய்
ப்ரஜா பாலந தத் பரராய்
சவ்ர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் தாநமீஸ்வர பாவஸ் ச ஷாத்ரம் கர்ம ஸ்வ பாவஜம் –கீதை -18-42-43- என்கிற
ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்
வைஸ்யர் ஆகிறார்
அத்யயநாதி கர்ம த்ரயத்துக்கும் அதிகாரிகளாய்
க்ருஷி கோ ரக்ஷ வாணிஜ் யங்களாகிற ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்
ஸூத்ரராகிறார்
இந்த வர்ண த்ரய ஸூஸ்ருஷை பண்ணுகையே ஸ்வா பாவிக கர்மமாக யுடையராய் இருப்பார்கள்
இவர்கள் வர்ணாஸ்ரம அநு ரூபமான கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் இடத்தில் -காலேஹ்நி கர்ம சோஸ்யதே -என்கிறபடியே கர்ம அனுஷ்டானம் காலாதீனம் ஆகையால் -கால ஸ்வரூபம் நிரூபணீயம் –
காலமாவது -அநாதிர் பகவான் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே -அவிச்சிந்நாஸ் ததஸ்த்வேதே சர்க்க ஸ்தித் யந்த ஸம்யாமா –தைத்த-நா -6-1-8-என்கிறபடியே
ஸர்வேஸ்வரனுடைய ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு பரிகர பூதமாய்
உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்யமாய்
கலா முஹுர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ -விஷ்ணு பு -1-2-26- இத்யாதி ஸ்ருதி மர்யாதையாலே
கலா முஹுர்த்தாதி மயமான அவயவ விபாகத்தை யுடைத்தாய் இருபதொரு அசித் விசேஷமாய் இருக்கும்
அதில் –காஷ்டா பஞ்சத ஸாக்யாதா -நிமேஷா முநி சத்தம காஷ்டா த்ரிம் ஸத் கலாத்ரிம்ஸத் கலா மவ்ஹுர்த்திகோ விதி -தாவத் ஸங்க்யைர் அஹோ ராத்ரம் முஹுர்த்தைர் மாநுஷம் ஸ்ம்ருதம் – அஹோ ராத்ராணி தாவந்தி மாஸ பக்ஷ த்வயாத்மக -தைஷ் ஷட்பிர் அயனம் வர்ஷம் த்வே அயநே தஷிணோத்தரே அயனம் தக்ஷிணம் ராத்ரி -தேவாநாம் உத்தரம் திநம் – திவ்யைர் வர்ஷ ஸஹஸ்ரைஸ் து க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞகம் -சதுர் யுகம் த்வாதஸபி ஸ்தத் விபாகம் நிபோதமே -ஸத்வாரி த்ரீணி த்வே ஸைகம் க்ருதாதி ஷு யதாக்ரமம் திவ்யாப்தாநாம் ஸஹஸ்ராணி யுகேஷ்வாஹு புராவித -தத் ப்ரமாணைஸ் சதைஸ் சந்த்யா பூர்வா தத்ராபிதீயதே -ஸந்த்யாம் ஸஸ்சாபி தத் துல்யோ யுக ஸ்யா நந்தரோ ஹி ஸ -ஸந்த்யா ஸந்த்யாம் ஸயோரந்தர்ய காலோ முநி சத்தம
யுகாக் யஸ்ஸது விஜ்ஜேய க்ருதத்ரேதாதி ஸம்ஜ்ஜித -க்ருதம் த்ரேதா த்வாபரஸ் ச கலிஸ் சேதி சதுர்யுகம் ப்ரோச்யதே தத் ஸஹஸ்ரஞ்ச ப்ரஹ்மணோ திவஸம் முநே ப்ரஹ்மணோ திவஸே ப்ரஹ்மன் மந வஸ்து சதுர் தச -பவந்தி பரிணாமஞ்ச தேஷாம் கால க்ருதம் ஸ்ருணு – ஸப்தர்க்ஷயஸ் ஸூராஸ் சக்ரோ மநுஸ் தத் ஸூநவோ ந்ருபா –ஏக காலே ஹி ஸ்ருஜ்யந்தே ஸம்ஹ்ரி யந்தே ச பூர்வவத் சதுர் யுகாணாம் சங்க்யாதா ஸாதிகாஹ்யேக ஸப்ததி –மந்வந்தரம் மநோ கால ஸூராதீ நாஞ்ச சத்தம -அஷ்டவ் சத ஸஹஸ்ராணி திவ்யயா சங்க்யா ஸ்ம்ருதம் -த்விபஞ்சா ஸத் ததான்யாநி சஹஸ்ராண்யதிகாநி து -த்ரிம் ஸத் கோட் யஸ்து ஸம் பூர்ணாஸ் சங்க்யாதாஸ் சங்க்யயா த்விஜ -ஸப்த ஷஷ்ட்டிஸ் ததான்யாநி நியுதாநி மஹாமுநே -விம்சதிஸ் ச ஸஹஸ்ராணி காலோயமதிகம் விநா மந்வந்த்ரஸ்ய சங்க்யேயாம் மானுஷை வத்ஸரை த்விஜ -சதுர்தச குணோஹ்யேஷா காலோ ப்ராஹ்மஹ ஸ்ம்ருதம் ப்ராஹ்மோ நைமித்திகோ நாம தஸ்யாந்தே ப்ரதி சஞ்சர -ததா ஹி தஹ்யதே ஸர்வம் த்ரை லோக்யம் பூர் புவாதி கம் ஜநம் ப்ரயாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந -ஏகார்ணவே து த்ரை லோக்யே ப்ரஹ்மா நாராயணாத்மக போகி ஸய்யாக தஸ்ஸேதே த்ரை லோக்ய க்ராஸ ப்ரும்ஹி -ஜனஸ்தைர்யோகி பிர் தேவஸ் சிந்த்யமாநோப்ஜ சம்பவ -தத் பிரமணாம் ஹி தாம் ராத்ரிம் ததந்தே ஸ்ருஜதே புந -ஏவஞ்ச ப்ரஹ்மணோ வர்ஷம் ஏவம் வர்ஷ சதம் து தத் -சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத்மந -ஸ்ரீ விஷ்ணு பு -1-3- என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பதினைந்து நிமேஷம் கொண்டது காஷ்டையாய்
முப்பது காஷ்டை கொண்டது கலையாய்
முப்பது கலை கொண்டது முஹூர்த்தமாய்
முப்பது முஹூர்த்தம் கொண்டது மானுஷ்யமான அஹோ ராத்ரமாய்
முப்பது அஹோ ராத்ரம் கொண்டது பக்ஷ த்வயாத்மகமான மாஸமாய்
ஆறு மாஸம் கொண்டது அயனமாய்
தக்ஷிண உத்தரமான அயனம் இரண்டு கொண்டது வர்ஷமாய்
இந்த தஷிணாயனம் தேவர்களுக்கு ராத்ரியாய்
உத்தராயணம் பகலாய்
ஸம்வத்ஸரம் தேவர்களுக்கு நாளாய் இருக்கும்
இப்படி முந்நூற்று அறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வத்சரமாய்–தேவ வத்சரம் பன்னீராயிரம் கொண்டது க்ருத த்ரேதா த்வாபர கலி யுகம் என்று சொல்லப்பட்ட சதுர் யுகமாய் இருக்கும்
இதில் நாலாயிரம் தேவ ஸம்வத்ஸரம் க்ருத யுகமாய் இருக்கும்
மூவாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்ரேத யுகமாய் இருக்கும்
இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்வாபர யுகமாய் இருக்கும்
ஆயிரம் தேவ வத்ஸரம் கலியுகமாய் இருக்கும்
நிற்கிற இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரமும் -க்ருத த்ரேதாதி கணக்கிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமாயும் பிரியும்
இதில் க்ருத யுகத்திலே பூர்வ உத்தரங்களிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமுமாயும் தேவ ஸம்வத்ஸரம் நானூறு நானூறு கழியும்
த்ரேதையில் பூர்வ உத்தரங்களில் முந்நூறு முந்நூறு கழியும்
த்வாபரத்தில் பூர்வ உத்தரங்களில் இருநூறு இரு நூறு கழியும் கலி யுகத்தில் பூர்வ உத்தரங்களில் நூறு நூறு கழியும்
இப்படி விபக்தமான சதுர் யுகங்கள் ஆயிரம் ப்ரஹ்மாவினுடைய ஒரு பகலாய் இருக்கும்
இந்த ஒரு பகலிலே பதினாலு மந்வந்தரமாய் –
மந்வந்தரம் தோறும் –
ஸப்த ரிஷிகள்
அஷ்ட வஸூக்கள்
ஏகாதஸ ருத்ரர்கள்
த்வாதஸ ஆதித்யர்கள்
அஸ்வின தேவதைகள் என்கிற த்ரயஸ்த்ரிம்ஸமும்(முப்பத்து மூவரும்)
சதுர் தச மநுக்கள்
சதுர்தச இந்த்ராதி திக் பாலரும்
கல்பாதியிலே ஸ்ருஷ்டருமாய்
கல்பாந்தே ஸம் ஹ்ருதருமாய்க் கொண்டு போருவர்கள்
இவர்களில் ஸப்த ரிஷிகள் ஆகிறார்
அத்ரி
ப்ருகு
வஸிஷ்ட
அகஸ்த்ய
அங்கிரச
கௌதம
பரத்வாஜர் என்று சொல்லப் பட்டவர்கள்
ஒவ்வொரு மந்வந்தரத்தில் ஸப்த ரிஷிகள் பேதிப்பர்கள் என்று அறியவும்
இவை ஸ்ரீ விஷ்ணு பு -3-1-ல் காணலாம்
அஷ்ட வஸூக்கள் ஆகிறார்
ஆபோ
த்ருவன்
ஸோமன்
தரன்
அநிலன்
அநலன்
ப்ரத் யூஷன்
ப்ரபாஸன்–என்று செல்லப்பட்டவர்கள்
ஏகாதஸ ருத்ரர்கள் ஆகிறார்
ஹரன்
பஹு ரூபன்
த்ர்யம்பகன்
அபராஜிதன் வ்ருஷாகபி
சம்பு
கபர்தீ
ரைவதன்
ம்ருக வ்யாதன்
சர்வன்
கபாலீ -என்று செல்லப்பட்டவர்கள்
ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ர்யம்ப கஸ் ச அபராஜித வ்ருஷாகபிஸ் ச சம்புஸ் ச கபர்தீ ரைவதஸ் ததா ம்ருக வ்யாதஸ் ச ஸர்வஸ் ச கபாலீ ச மஹா முநே ஏகாதஸைதே கதிதா ருத்ராஸ் த்ரி புவநேஸ்வரா –இதி ஸ்ரீ விஷ்ணு புராணே பாட
வ்ருஷாகபி சங்கரஸ் ச இதை ப்ராமாணத் திரட்டில் –1-5-3- –
பாரதம் புராணாந்தரங்களில் நாம பேதம் காண்கிறன
மாத்ஸ்யத்தில் -அ -5- அஜைக பாதஹிர் புத்ன்ய -விரூபாஷோ அத ரைவத ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ரயம்பகஸ் ச ஸூரேஸ்வர -சாவித்ரஸ் ச ஜயந்தஸ் ச பிநாகீ ச அபராஜித ஏதே ருத்ராஸ் ஸமாக்யாதா ஏகாதஸ கணேஸ்வரா -என்று காண்கிறன
கல்ப பேதேந நாம பேத பரன்களாக இவைகளைக் கண்டு கொள்வது
ஸ்ரீ விஷ்ணு பு-3-1-ல் காண்க
த்வாதஸ ஆதித்யர்கள் கீழே சொல்லப்பட்டது
இனிப் பதினாலு மனுக்கள் ஆகிறார்
ஸ்வயம்புவன்
ஸ்வாரோ சிஷன்
உத்தமன்
தாபசன் -தாமஸன் என்று புராணத்தில் பாடம்
ரைவதன்
சாஷுஸன்
வைவஸ்வதன்
ஸாவர்ணிகன்
தஷஸா வர்ணிகள்
ப்ரஹ்ம சா வர்ணிகள்
தர்ம ஸா வர்ணிகன்
ருத்ர ஸா வர்ணிகன்
ரோசமாநன்
பவ்மன் என்று செல்லப்பட்டவர்கள்
சதுர்தச இந்த்ரராகிறார்
ஸஸீ பதி
விபஸ்சித்
ஸூசாந்தி
ஸிபி
விபு
மநோஜவ
புரந்தர
விரோசந ஸூதபலி
மஹா வீர்ய
சாந்தி
வைவ்ருஷா
ருதுதாமா
திவஸ்பதி
ஸூசி -என்று செல்லப்பட்டவர்கள்
திக் பாலகர்கள் ப்ரஸித்தம் இறே
இந்த்ர அக்னி
யம நைர்ருத
வருண வாயு
குபேர ஈஸாந-என்று செல்லப்பட்டவர்கள் திக் பாலர்கள் என்று அறியவும்
ஒரு மந்வந்தரம் எழுபத்து ஒன்றே சிலவான சதுர் யுகமாய் இருக்கும் -1000 வகுத்தல் 14
அது தேவ ஸம்வத்ஸரம் என்று நூறாயிரத்து ஐம்பத்து ரீராயிரமாய் இருக்கும்
இது மானுஷ ஸம்வத்சரத்தில் முப்பது கோடியே அறுபத்து ஏழாயிரமும் இருபதினாயிரமும் அதிக அம்சம் இருபதினாயிரமுமாக முப்பது கோடியும் லக்ஷத்து ஏழாயிரமுமாய் இருக்கும்
இது ஒரு மந்வந்தரமாய் இருக்கும்
இப்படி பர்யாயமான மன்வந்தரம் பதினாலு ப்ரஹ்மாவுக்கு ஒரு பகலாய் –
அவ் வஹர் அவசாநத்திலே பூர் புவஸ் ஸூவ என்கிற த்ரி ஜகத் ப்ரளயமாய் இருக்கும்
பின்னை சதுர் யுக ஸஹஸ்ர ஆவ்ருத்தி காலம் அளவாக ராத்ரியாய்
ததந்தே ஸ்ருஷ்டியாய் இருக்கும்
இப்படியான அஹோ ராத்ரத்தாலே ப்ரஹ்மாவுக்கு பரம ஆயுஸ்ஸு வர்ஷ சதமாய் இருக்கும்
இப்படிச் சொன்ன சதுர் யுகங்களில் வைத்துக் கொண்டு க்ருத யுகத்திலே
க்ருதே து மிதுன உத்பத்தி ஸித்திஸ் சாபி ரஸோல்லஸா ஸக்ருத் வ்ருஷ்டி மயீ சான்யா க்ரஹ வ்ருஷாத் மிகா பரா பஸ்சாத் ஸங்கல்ப ஸித்திஸ் ச கல்ப வ்ருஷாத்மிகா பரா –
ப்ரகாம வ்ருஷ்டிஸ் சாக்ருஷ்ட பஸ்ய ஸித்திஸ் ததாஷ்டமீ -லிங்க பு -பூ 39-14-15—கௌர்மே ச பூ 28-21-22-முத்ரித புராணே கோஸே து கிஞ்சித் அந்யதா பட்யதே –என்கிறபடியே
ரஸோல்லாஸாதி யான -எல்லாக் கோசங்களிலும் ரஸோல்லாஸாதி -என்று தொடங்கிக் காண்கிறது ஸ்லோக பாட அநு குணமாகக் காணவில்லை
அஷ்ட ஸித்தியும் ஸ்வத ஏவ ஸம்பவியா நிற்கும்
அதில் ரஸோல்லாஸை யாவது
யோக அப்யாஸத்தாலே தன்னுடைய மூர்த்தாவில் சந்த்ர மண்டலம் உருகி ஒழுகின அம்ருதத்தாலே திருப்தி பிறந்து தாஹாதிகள் அற்று இருக்கை
மிதுன உத்பத்தி யாவது
ஸ்த்ரீ நிரபேஷமாக ஸூகம் பிறக்கை
ஸக்ருத் வ்ருஷ்டி மயியாவது
ஒருக்கால் வர்ஷிக்க ஸஸ்யங்கள் உண்டாகை
க்ரஹ வ்ருஷாத்மிகை யாவது
தன்னுடைய இச்சையால் க்ரஹத்தில் வருஷங்கள் உண்டாகை
ஸங்கல்ப ஸித்தி யாவது
தான் நினைத்த போதே அபிமதம் ஸித்திக்கை
கல்ப வ்ருஷாத்மிகை யாவது
பரத்வாஜனைப் போலே நினைத்தது எல்லாம் உண்டாகை
ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டத்தில் காண்கிறோம்
ப்ரகாம வ்ருஷ்டியாவது
வேண்டும் அளவிலே கநக்க வர்ஷிக்கை
அக்ருஷ்ட பஸ்ய ஸித்தியாவது
க்ருஷி பண்ணாமல் விளைகை
இப்படி அயத்ன லப்யங்களான இந்த ஸித்திகள் யுகாந்தரங்களில் ஸ்வ யத்னத்தாலே ஸாதித்துக் கொள்ளப்படும்
இதில் -த்யாயன் க்ருதே யஜன் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயன் -யதாப்னோதி ததாப்னோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு பு -6-2-17 என்று
யுகாந்தரங்களில் யாகாதிகளாலே லபிக்கும் பலத்தை கலி யுகத்தில் ஸங்கீர்த்தன மாத்ரத்தாலே லபிக்கும்
இப்படி நிஜமான மாநத்தாலே பரிகணிதமான த்வி பரார்த்த கால வர்த்தியான சதுர் முகனை சரீரமாகக் கொண்டு ஸ்ருஷ்டியைப் ப்ரவர்த்திப்பித்தும்
ஸ்வேந ரூபேண ரக்ஷணத்தைப் பண்ணியும்
ருத்ர ரூபியாய் ஸம்ஹரித்தும்
ஸகல ஜகத்தையும் ஸர்வேஸ்வரன் தானே லீலைக ப்ரயோஜனமாய்க் கொண்டு நிர்வஹிக்கும் என்னும் இடம்
அப்ரமேயா அநியோஜ்யஸ் ச யத்ர காம கமோ வஸீ மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ-சபா பர் -61-31-
அப்ரமேயத்வம் -பரிபூர்ணத்வம் -அநியோஜயத்வம்-அநிதர சேதன ப்ரேர் யத்வம் -யத்ர காமகம இத்யநேந வாயூதகாதி ப்ரேரணாதீநா அபுத்தி பூர்வகஸ் பந்தாதி சேஷ்டாவ்யாவ்ருத்தி -ஸ்வேச்சா க்ருத ப்ரவ்ருத்தி விகாத வ்யுதா ஸோ வா –ஸ்வா தீந லீலோப கரணத்வம்
வஸீ ஸப்தார்த்த –விஸ்வம் –வஸம் -யஸ்ய ஸ வஸீ —
இந்த்ரிய பராதீன சேஷ்டா வ்யாவ்ருத்த் யர்த்தோ வா வஸீ ஸப்த -பாலக த்ருஷ்டாந்தேந -லீலாயா -ப்ரயோஜனாந்தர நைர பேஷ்யம் -அபி ப்ரேதம்
அநேந ராஜ்ஞாம் பண பந்த பூர்வக த்யூதாதி வ்யாவ்ருத்தி கார்ய வர்க்க அபேஷயா பகவன் மஹிம்நோ விபுல தரத்வம் -க்ரீட நகை -இத்யேநேந பலிதம்
இத்யஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ வர்ணித ஸ்ருத ப்ரகாசிகாயாம் மங்கள ஸ்லோக வ்யாக்யாந அவஸரே
ஸ்ருஷ்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் -ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு பு -1-2-66–அஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ பாஷ்ய காரேண வேதார்த்த ஸங்க்ரஹே வர்ணித தத்ர த்ரஷ்டவ்ய-என்று இத்யாதியாலே சொல்லப்பட்டது இறே
ஆனால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு தஷாதிகளை கர்த்தாக்களாகச் சொல்லுவான் என் என்னில்
ப்ரஹ்மா தஷாதய காலஸ் ததைவ அகில ஜந்தவ -விபூதயோ ஹரே ரேதா ஜகதஸ் ஸ்ருஷ்டி ஹேதவ -விஷ்ணுர் மன்வாதய -கால ஸர்வ பூதாநி ச த்விஜ -ஸ்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய -ருத்ர காலாந்த காத் யாஸ் ச ஸமஸ்தாஸ் சைவ ஜந்தவ சதுர்தா பிரளயாயைதா ஜநார்த்தன விபூதய –ஸ்ரீ விஷ்ணு பு -1-22- என்கிற படியே
பகவத் விபூதித்வேந ஸ்ருஷ்ட் யாத் யன்வயமாகக் கடவது
இவ் விடத்தில் விஷ்ணுத்வமாவது
ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாம் அஹம் –ஸ்ரீ கீதை 10-31- என்கிற இடத்தில் போலே அவதார ரூபேண விபூதியாக விவஷிதம்
இதி தத்வ நிரூபணே வர்ண நிரூபணம் நாம ஷஷ்ட்டி அதிகாரம் ஸம் பூர்ணம்
———–
ஸப்தம அதிகாரம் – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்
1-நியந்த்ருத்வ நிரூபணம்
2-ஈஸ்வரா நங்கீகாரே தோஷ நிரூபணம்
3-காரண வாக்யஸ்த ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் விசேஷ ஸப்த பர்யவஸாந நிரூபணம்
4-இந்த்ர அக்னி யாதித்ய சந்த்ர வைஸ்ரவண யம வருண வாயு ப்ரப்ருதி தேவதா ஸமூஹஸ்ய காரணத்வாத் யஸம்பவ நிரூபணம்
5- ருத்ர ஜகத் காரணத்வ மத நிரூபணம் -ருத்ரஸ்ய ஸ்வே தாஸ்வர உப நிஷத் ப்ரதிபாத்யத்வம்
6-தஸ்ய சாந்தோக்ய தஹர வித்யா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
7-தஸ்ய ப்ருஹதாரண்யக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
8-தஸ்ய அதர்வண ஸிகா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
10- தஸ்ய தைத்ரீய ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
11- தஸ்ய அதர்வ ஸிர உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
12- சதுர்முக காரணத்வ மத நிரூபணம்
13- தஸ்ய அம்பஸ்யநுவாக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
14- தஸ்ய முக்த ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
15-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸப்தவத் ஸிவாதி ஸப்தாநாம் ஸாதாரணத்வ ஸமர்த்தநம்
16- ருத்ரஸ்ய ஜன்யத்வ ப்ரதிபாதநம்
17-நாராயண பரத்வ சமர்த்தந ஆரம்ப
18-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் நாராயண ஸப்த பர்யவஸாந சமர்த்தனம்
19-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் இதி வாக்யார்த்த விசார
20-நாராயணஸ்ய மோக்ஷ ப்ரதத்வாதி நிரூபணம்
21-தஸ்ய நாராயண உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
22-தஸ்ய மஹா உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
23-தஸ்ய ஸ்வேதாஸ்வதர உப நிஷத் கடித சிவ ஸப்த வாஸ்யத்வ ஸமர்த்தனம்
24- சதுர்முக ருத்ரயோ நாராயண ஜன்யத்வ ஸம்ஹார்யத்வாதி நிரூபண முகேந காரணத்வாபாவ ஸமர்த்தனம்
25-காரண வாக்ய கடித ஹிரண்ய கர்ப்பாதி ஸப்த நாமபி பரமாத்ம பரத்வ ஸமர்த்தனம்
26-ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்ததாக்ரே இத்யஸ்ய பரமாத்ம பரதயா அர்த்த வர்ணனம்
27-அம்பஸ்யபாரே -இத்யனுவாகஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
28-புருஷ ஸூக்தஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
29-தாதா யதா பூர்வம் -என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
30-ப்ரஜாபதேஸ் ஸபாம் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
31-தத் ஸ்வயம் பூர் பகவான் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
32-நாராயண அநு வாக ப்ரதிபாத்ய நிரூபணம்
33-நாராயண பரம் இத்யாதியில் சொல்லும் பஞ்சமீ ஸமா ஸகண்டநம்
34-த்ருஷ்டாந்த ப்ரதர்சன பூர்வகம் நியாய விரோத ப்ரதர்சன பூர்வகஞ்ச தத் வாக்யார்த்த நிரூபணம்
35-த்ருஷ்டாந்தரங்களைக் கொண்டு பூர்வ யுக்த சமர்தன பூர்வக நிகமனம்
36-ஸ்வேதாஸ்வ தரஸ்த -ததோ யதுத்தரதரம் இத்யாதி வாக்ய கத சங்கா நிராகரணம்
37-உபக்ரமாதி கரண நியாய நிரூபணமும் தத் ஸமன்வயமும்
38-பூர்வ யுக்த -ததோ யதுத்தர தரம் இத்யாதி வாக்யத்தில் சங்காந்தரமும் தத் சமதானமம்
39-தத்ரைவ ஹேத்வந்தரங்கள்
40-தத் ப்ரகரணகத-ஸர்வாநநஸிரோக்ரீவ -இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
41-அத யதிதமஸ்மிந் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
42-யுக்த அர்த்தத்தில் வாக்யகார ஸம்வாதம்
43-துல்ய ந்யாயாத் -தஹ்ரம் விபாப்மம் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
44-யத் வேதாதவ் இத்யாதி ஸ்ருத்யர்த்த வர்ணனம்
45- காரணந்து த்யேய =இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
46-பரமே வ்யோமன் -என்கிற இடத்தில் பரம வ்யோம ஸப்தத்துக்கு பரமபத வாசகத்வாபாவ நிராகரணம்
47-அஹமேவ ப்ரதம மாஸம் -இத்யாதி ஸ்ருதிக்கு பாவமும் அதுக்கு த்ருஷ்டாந்தங்களும்
48-இதுக்கு ஸூத்ரகார ஸம்வாதம்
49-இதுக்கு மஹா பாரதத்தில் ஸம்வாதம்
50-அதர்வ ஸிரோத்வி தீய கண்டஸ்த -யோவை ருத்ர -இத்யாதிக்கு ருத்ர பரத்வாபாவோப பாதநம்
51- அதர்வ ஸிரோத்ருதீய சதுர்த்த கண்டஸ்த -ஸ ஓங்காரோ ய ஓங்கார -இத்யாதிக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
52-அதர்வ ஸிரோ பஞ்சம கண்டத்துக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
53-இதுக்கு த்ருஷ்டாந்தம்
54-ததுக்த பஸ்மஸ்பர்ஸ விதிக்கு பாஸூ பத விரத மாத்ரார்த் தத்வம்
55-விஸ்வாதி கோ ருத்ரோ மஹர்ஷி -இத்யாதிக்குத் தாத்பர்யம்
56-ஸ்ரீ ருத்ராதிகளுக்கு ருத்ர ஐஸ்வர்ய பரத்வாபாவ ஸமர்த்தனம்
57-ஏக ஏவ ருத்ர -இத்யாதிக்கு தாத்பர்யம்
58-ஸ்ருத் யந்தரங்களில் யுக்த ந்யாயாதிதேஸம்
59-ஸ்ருத் அநுஸாரி புராணங்களை ப்ராமாண்யமும் தத் இதரங்களுக்கு அப்ராமாண்யமும்
60-நாராயண பர புராணாதிகளுக்கு ஸாத்விகத்வாத் ப்ராமாண்யமும் -தத் இத்தரங்களுக்கு தத் அபாவாத் அப்ராமாண்யமும்
61-வக்தவ்ய அம்ஸாநுக்தியால் வந்த ந்யூனதைக்கு பரிஹாரம்
62-ப்ரபந்தார்த்த நிகமனம்
————
ஏவம் பூதமான சேதன அசேதன பிரபஞ்சத்துக்கு நியந்தாவாக
க்ஷரம் ப்ரதானம் -அம்ருத அக்ஷரம் ஹர– (அபஹரித்து உண்ணும் ஜீவாத்மா) ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ் -1-10–
ஹர –ஜீவ -அம்ருத அக்ஷரம் ஹர இதி -போக்தா நிர் திஸ்யதே –ப்ரதாநம் ஆத்மநோ போக்யத்வேந ஹரதீதி ஹர -இதி ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-
தேவ ஏக -அத்விதீயோ நாராயண –திவ்யோ தேவ ஏகோ நாராயண -இதி ஸுபாலிக ஸ்ருதே
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -ஸ்வேதா -6–16-
குணேஸ -குணா -ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
தேஷாம் -ஈஸ -நியந்தா இத்யர்த்த -என்று வேதாந்தங்களிலே ப்ரதிபாதிக்கப் பட்டு
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம்-தைத்த -6-11-3
பதித்வம் -சேஷித்வம் -சேஷித்வம் பதித்வம் -இதி கீதா பாஷ்யம் -3-30-
பா -ரக்ஷண -இதி தாதோர் நிஷ் பந்நத்வாத் பதி ஸப்தோ -ரஷா -வாஸீ -நது சேஷி வாஸீ – இதி ந வாஸ்யம் -சேஷிணி ரூடத்வாத் (ப்ரஸித்த ரூடி அர்த்தம்)அந்யதா கமேர் டோ இதி டோ ப்ரத்ய யாந்த -கமி தாதோர் நிஷ் பந் நத்வாத் கோ ஸப் தஸ்ய மானுஷ்யாதி வாசகத்வ ப்ரசங்க -கதி மத்ஸூ ஸர்வேஷு ப்ரயோக அபாவாத் -அத பதி ஸப்த சேஷிணி ரூட இதி -என்று விஸ்வத்துக்குப் பதியாகவும்
(பதி ரக்ஷணமா சேஷியா -விசாரம் -திருப்பல்லாண்டு -வயசான தந்தைக்கு பிள்ளை ரக்ஷணமாய் இருந்தாலும் சேஷி ஆகமாட்டான் அன்றோ)
ஆத்மேஸ்வரம் -தைத் -6-11-3- என்று தனக்குத் தானே ஈஸ்வரனாகவும்
ந தஸ்ய ஈஸே கஸ்ஸன-தைத்த -6-1-10-என்று-அவனுக்கு நியாந்தாக்களாய் இருப்பார் ஒருவரும் இல்லையாகவும்
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே –ஸ்வேதா -6-8- என்று-அவனுக்கு ஓத்தாரும் இல்லை மிக்காரும் இல்லையாகவும்(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -)
ஸ காரணம் கரணாதிப அதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ந ஜநித ச அதிப –ஸ்வே -6-9-
கரணாநாம் -ஸ்ரோத்ராதீ மாம் அதி பா ஜீவா தேஷாமதிப ஸர்வோ பாஸ்யத்வ ஸர்வ சேஷித்வ மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வ விஸிஷ்ட நாராயண இத்யர்த்த -என்று
ஸமஸ்த வஸ்துக்களினுடைய உத்பத்திக்குக் காரணமுமாகவும்
கரணாதிப ஸப்த வாஸ்யனான ஷேத்ரஞ்ஞனுக்கு அதிபனாகவும் -தனக்கு ஜனகரும் -அதிகரும் இல்லையாகவும்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்- தம் தேவதாநாம் பரமம் ச தைவதம் -பதிம் பதீநாம் -பரமம் பரஸ்தாத்- விதமா தேவம் புவநேஸ மீட்யம்–ஸ்வேதா -6-7-
மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வம் நாராயணஸ் யைவேதி வஹ்யதே -என்று
நியாந்தாக்களுக்கு எல்லாம் பரம உபாஸ்யனாகவும் -சேஷிக்களுக்கு எல்லாம் பரம சேஷியாகவும் -உப நிஷத்துக்களிலே ஓதப்பட்டு ஸர்வ லோக நியந்தாவான ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன்
அவன் இவ் வசித் ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு பந்த நிவ்ருத்த் யர்த்தமாக ஞாதவ்யனாகையாலே அவனுடைய யாதாத்ம்யமும் நிரூபணீயம்(பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் அறிய வேண்டுமே)
(ஸ்வேதாஸ்வர உபநிஷத் வாக்யங்கள் பிறரையும் பரனாகச் சொல்லும் படி அமைந்துள்ளதால்-வேதார்த்த ஸங்க்ரஹத்தில் அவற்றை எடுத்து விளக்கி உள்ளார் -அதே போல் இங்கு இவரும் இவற்றை எடுத்து விளக்குகிறார்)
ஏவம் பூதனாய் இருப்பானோர் ஈஸ்வரனைக் கொள்ளாத போது -இந்த ஷேத்ரஞ்ஞனானவன் இப்படி ஸூக துக்க அநுபவம் பண்ணக் கூடாது –எங்கனே என்னில்
நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் -ஸ்வேதா -6-13- கட -2-5-13- என்று
நித்யராய்
சைதன்ய குணகராய்
அசங்கயாதரான ஆத்மாக்களுக்கு–நித்யனாய் -சைதன்ய குணகனாய் -அத்விதீயனாய் இருப்பான் ஒருவன் அபிமதங்களைக் கொடா நிற்கும் என்று சொல்லுகையாலும் -துக்காத் யநுபவத்தில் வந்தால் அவற்றுக்கு ஹேதுவான அவித்யா கர்ம தேஹாதிகள் அசேதனங்களாகையாலே சேதன அதிஷ்டாநம் இல்லாத போது -புருஷா அநதிஷ்டிதமான வாஸ்யாதி கரணங்கள் ரத நிர்மாணத்துக்கு ஷமம் அல்லாதவோபாதி -அநுபவிப்பிக்க மாட்டாது -அநு பவிக்கிற சேதனன் தான் ஸூக அனுபவ ஸ்ரத்தை உண்டாகிலும் தன் மூலமான ஹேதுக்களை அறிந்து அதிஷ்டிக்க வேண்டும் –அதுக்கு யோக்யதையை உடையனாக இரான்
சேதனர்கள் தந்தாமுடைய கர்மாதிகளையும் அறியாது இருக்கப் பிறருடைய கர்மாதிகளையும் அறிந்து அதிஷ்டிக்கைக்கு யோக்யர் அல்லர்
ஆகையால் இவர்களுடைய கர்மாதிகளையும் அறிகைக்கு ஸர்வஞ்ஞனுமாய் -அறிந்தபடியே அதிஷ்டிப்பித்து அனுபவிப்பைக்கு ஸர்வ சக்தனுமாய் -இச் சேதனனுடைய விதி நிஷேத (அநுஷ்டான–அநநுஷ்டான)அநு வர்த்தந அதிவர்த்தநங்களில் அநுக்ரஹ நிக்ரஹங்களைப் பண்ணும்படி நியாந்தாவுமாய் –
தத் தத் ஆகார புண்ய பாப கர்மங்களுக்கு பலமான ஸூக துக்கங்களைக் கொடுக்கைக்குக் கீழ்ச் சொன்ன அசேதன ஜாதீயனும் இன்றியே உபய விலக்ஷணனாய் இருப்பானோர் ஈஸ்வரன் உண்டு என்று கொள்ள வேணும்
ஆகை இறே -போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோதம் த்ரி விதம் ஸர்வ மேதத் –ஸ்வே -1-12- என்று
போக்த்ரு போக்ய ப்ரேரயித்ரு ரூபமான சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயாத்மகமாக ஜகத்தை உபநிஷத் பாகத்திலே ஓதப்பட்டது
இந்த நியந்த்ருத்வ விஸிஷ்டமான ப்ரஹ்மத்தை -காரணம் து த்யேய – அதர்வஸிகோப -என்று ஜகத் காரண தயா ஜிஜ்ஞாஸ்யமாக உப நிஷத்திலே ஒதுகையாலே
காரண வாக்யங்களில் ஸத் ப்ரஹ்மாத் மாதி ஸப்தங்களாலே சொல்லப்பட்ட வஸ்து இது விறே என்று நிஸ்ஸயிக்கப் படும்
எங்கனே எனில்
(ப்ரஹ்ம ஸத் ஆத்மா -பொதுவான சொற்கள்
என் மூல காரணம் -ஸ்ருஷ்டி ப்ரகரணம்
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் ப்ரதிஜ்ஜை
சத்தாகவும் பெரியதாகவும் -ஆத்மா சேதனமாகவும் இருக்க வேண்டுமே
கூரத்தாழ்வான் பஞ்ச ஸ்தவத்திலும் இவற்றைக் காட்ட அருளுகிறார்)
சாந்தோக்யத்திலே -ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -6-2-1- என்று
பிருஹத் அப்ருஹத் சாதாரணமான ஸச் சப்தத்தாலே சொல்லப்பட்ட காரண வஸ்துவானது
வாஜஸ நேயத்திலே -ப்ரஹ்ம வா இதமே வாக்ர ஆஸீத் -ப்ரு -3-4-9- என்று ப்ருஹத்த்வைகாந்தமான ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்பட்டது
அவ் விடத்திலே ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே காரண வாக்யங்கள் எல்லாவற்றுக்கும் ஏக விஷயத்வம் வேண்டுகையாலே பஸூ மால பேத – சதபத ப்ரா -6-1-2-14-13- என்று சாமான்யமான பஸூ ஸப்தம் -சாகோ வா மந்த்ர வர்ணாத்-என்கிற ஸூத்ரத்தில் விசேஷ உபஸ்தாபகமான சாக பஸூ விலே பர்ய வசிக்குமாப் போலே இங்கும் ஸாமான்யமான ஸச் ஸப்த வாஸ்யம் என்று நிஸ்ஸயிக்கப் படுகிறது
ஏகம் வா ஸம்யோக ரூப சோதநாக்யா விசேஷாத் -என்று பூர்வ மீமாம்ஸை யில் -2-4-9- சொன்ன சாகாந்தர அதிகரண ந்யாயத்தாலே என்றபடி
ப்ரதீயதே யத் தத் ப்ரத்யயம் ப்ரதீயமாநம் இத் யர்த்த –ஸர்வ ஸாகா ஸூ ப்ரத்யயம் ஸர்வ ஸாகா ப்ரத்யயம் -தத்ர த்ருஷ்டோ ந்யாய ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாய என்று விக்ரஹம் கண்டு கொள்வது –
(அஞ்ஞானம் அறிவிக்கும் வேதம் மீண்டும் மீண்டும் சொல்வதால் வேறே வேறே கர்மங்களை சொல்லுகின்றனவா அல்லது வேறே வேறே பலன்களை சொன்னவையாஅல்லது வேறே வேறு அதிகாரிகளுக்குச் சொன்னவையா-ஒரே குணம் சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் இருப்பதாக பொதுத் தன்மை
சமாக்யா சோதனா பொது போல் இங்கும்-ஆகவே ஒருவரையே சொன்னதாக)
இந்த ப்ரஹ்ம ஸப்தம் தான் -மம யோநிர் மஹத் ப்ரஹ்மா -கீதை -14-3- என்றும் தத் ஞானம் ப்ரஹ்ம ஸம்ஜிதம் -என்றும்
சித் அசித் ஸாதாரணமாகையாலே -ஐத ரேயத்திலே ஆத்மா வா இதமேக ஏவ அக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் -ஐதரேய -1-1-1-என்று சேதநைக அசாதாரணமான ஆத்ம ஸப்தத்தாலே விசேஷித்தது
இந்த ஆத்மாக்களில் ஜகத் காரண பூதர் ஆர் என்று விசேஷா காங்ஷையிலே –
அந்த விசேஷமாவது –ஸர்வம் ததிந்த்ர தேவஸே –ஸாம -2-1-4-2—விஸ்வஸ் மாதிந்த்ர உத்தர இத்யாதிகளாலே சர்வோத்தரனாய்ச் சொல்லப்படுகிற இந்த்ரனோ=
தமக்நேந்த்ரே வ்ருஷபஸ் ஸதாமஸி த்வம் விஷ்ணுருரு காயோ நமஸ்ய-த்வம் ப்ரஹ்மா ரயிவித் ப்ரஹ்மணஸ் பதே த்வம் விதத்தாஸ் ஸச ஸே புரந்த்ரிய -என்றும்
த்வம் அக்நே ருத்ரோ அஸூரோ மஹோதிவ -யஜுர் காடகே -2-2-என்றும்
இத்யாதிகளிலே ஸர்வாத்மகனாய்ச் சொல்லப்படுகிற அக்னியோ–
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி -யஜுர் ஸம் -1-5-24
சித்ரந் தேவாநாம் உதகாதநீ கஞ்சா ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே ராப்ராத் யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்து ஷஸ்ச -யஜுர் 1-4-43
ஹம்ஸஸ் ஸூசிஷத் -யஜுர் -4-2-1-5-இத்யாதிகளிலே உபாஸ்யனாக ஓதப்படுகிற ஆதித்யனோ–
ஸோம பவதே ஜனிதா மதீநாம் ஜனிதா திவோ ஜனிதா ப்ருதிவ்யா ஜனிதா அக்னேர் ஜனிதா ஸூர்யஸ்ய ஜனிதா இந்த்ரஸ்ய ஜனிதோத விஷ்ணோ -சாம -6-1-4-5
ஏவமாதிகளிலே ஸர்வ உத்பாதகனாய்ச் சொல்லப்படுகிற சந்திரனோ-
ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே நமோ வயம் வைஸ்ரவணாய ததாது யஜுர் ஆர -1-21-
இத்யாதிகளிலே ஸர்வ பல பிரதனாகச் சொல்லப்படுகிற வைஸ்வரணோ-
யோஸ்ய க்ருஷ்ட்ய ஜகத பார்த்தி வஸ்ய ஏக இத்வசீயமம் பங்க்யஸ்ரவோ காயயோ ராஜாந பரோத்த்ய யமம் காய பங்க்யஸ்ரவோ யோ ராஜாந் அபரோத்த்ய-யஜுர் -ஆ -6-5-12-1-2-3-
இத்யாதிகளில் உத்க்ருஷ்டனாக ஓதப்படுகிற யமனோ-
இமம் மே வருண ஸ்ருதீ ஹவமத்யாச ம்ருடய த்வாமவஸ்யு ராசகே தத் வாயாமி ப்ரஹ்மணா வந்த மாநஸ் ததா ஸாஸ்தே யஜமானோ ஹவிர்பிரஹேட மானோ வருணே ஹபோத் யுரு ஸம் ஸமான ஆயுர் ப்ரமோஷீ -யஜுர்
இத்யாதிகளில் ஆராத்யனாகச் சொல்லப்படுகிற வருணனோ–
இன்னமும் பிரதேசாந்தங்களிலே உத்க்ருஷ்டராக ஓதப்படுகிற வாயு முதலான தேவதா விசேஷங்களோ என்னில்
அவர்களாக மாட்டார்கள் -எங்கனே என்னில்
ப்ரஹ்மாவினுடைய பக்கலிலே மந்வந்தரம் தோறும் பதினாலு பர்யாயம் பதங்கள் இட்டு மாறும்படியாய்-அவ்வோ காலங்களிலே ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்கு கர்மீ பவிப்பாருமாய்
பீஷாஸ் மாத் வாத பவதி -பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத் அக்னிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம -தைத்ரயம் -என்று
தங்களை ஒழிந்தானோர் ஈஸ்வரனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சி வர்த்திப்பாருமாய் -அவனை ஆராதித்து பதம் பெற்றாருமாய் -சாஸ்திரத்தினுடைய அநு வர்த்த நத்திலும் புண்ய பாபங்களைப் பெற்று- தத் தத் பலமான ஸூக துக்கங்களை அநுபவிப்பாருமாய் -பரிச்சின்ன விபூதிகராய்ச சொல்லிப் போருகையாலே
இப்படி அஸ்மாதாதிகளோ பாதி ஸர்வ சாதாரணமான ஸ்வ பாவங்களை உடைய –
இந்த்ர -யம -வருண -குபேராதிகள் ஈஸ்வரத்வ சங்கைக்குக் கூட அர்ஹர் அல்லர்
ருத்ர ஜகத் காரணத்வ வாத ஆரம்ப
இப்படி ஸ்வேதாஸ்வர உபநிஷத்திலே -யதா தமஸ் தந் ந திவா ந ராத்ரிர் ந ஸந் ந ச அஸச் சிவா ஏவ கேவல -என்றும்-தத் அக்ஷரம் தத் ஸவிதுர் வரேண்யம் ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -4-18- என்கிற இத்தாலே
அந்தக் காரண விசேஷம் சிவன் என்று புத்தி பண்ணப்படா நின்றது
ஸத் ப்ரஹமாத்மாதி சாமான்ய சப்தங்களுக்கு விசேஷ ஸப்த ஸா பேஷத்வம் உண்டாகையாலே ஸர்வ நிஷேத பூர்வக அவதாரண கடித சிவ ஸப்தத்திலே அவைகள் பர்யவசிக்கின்றன (சிவா ஏவ கேவல)-இதி தேஷாம் அபிப்ராய
(நம் பூர்வர்கள் இவ்வாறு பூர்வ பக்ஷ விளக்கம் அருளிச் செய்தபின்பே ஸித்தாந்த நிர்ணயம் பண்ணி அருள்வார்கள்)
அங்கன் அன்றியே -ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -என்று மஹா உப நிஷத்திலே சொல்லப்பட்ட நாராயணன் அந்த விசேஷமானாலோ என்னில்
இவ் வுப நிஷத் வாக்யம் -ஹவை -என்கிற ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அனுவாத ரூபமாய் இருக்கையாலே (அனுவாத வாக்கியம் என்றாலே முன்பு புரோ விதி வாக்கியம் உண்டாய் இருக்க வேண்டும் அன்றோ-இந்த வாதத்தால் ஆஹாஸ ப்ராண ஸப்தம் காரணமாக மாட்டாது என்று நிர்த்தேசித்ததை த்ருஷ்டாந்தமாகக் காட்டுகிறார்) ஸ்வயம் விசேக்ஷ உபஸ்தாபநம் பண்ண மாட்டாது -எங்கனே என்னில்
சாந்தோக்யத்தில் -ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத் யந்தே -1-9-1-
ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விசந்தி பிராண மப்யுஜ்ஜி ஹதே –1-11-5- என்று(ஸ்ருஷ்டிக்கப்படுவதையும் லயிக்கும் படியையும் காட்ட இரண்டு பிரமாணங்கள்)
இவ் வாக்கியங்கள் இரண்டுக்கும் -ஹவை -என்கிற ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே யாதொருபடி அநு வாதத்வம் உண்டாயிற்று
ஆஹாஸஸ் தல் லிங்காத் -அத ஏவ ப்ராண -ப்ரஹ்ம ஸூத் 1-2-23-24-என்கிற அதிகரணங்களிலே
ஸர்வாணி ஹ வா என்கிற வாக்யத்துக்கு அநு வாதத்வம் ஸ்தாபிக்கப் பட்டதாகையாலே அநு வாதத்வம் உண்டாயிற்று -இத் யுக்தம்
அப்படியே இங்கும் ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே அநு வாதமாகையாலே ஆகாஸ ப்ராண ஸப்தங்களோ பாதி நாராயண ஸப்தமும் அநுவாத லிங்க ரஹிதமான- ஏவ காராத் யுபாதாந லிங்க விஸிஷ்டமாயுள்ள -சிவ பரமாக ப்ராப்தம் ஆகையால் ருத்ரனே ஜகத் காரணம் என்று நிச்சயிக்கப் படுகிறது-
ஆகையாலே மோக்ஷ ப்ரதத்வமும் அவனுக்கே என்று அர்த்த சித்தம்(ஜகத் காரணம் யாரோ அவனுக்கே மோக்ஷ பிரதத்வம் -அனுமானத்தால் அர்த்த சித்தம்)
எங்கனே என்னில்
யதோ வா இமாநி பூதாநி -தைத்ரியம் – இத்யாதியாலே
1-ஜகத் காரண பூதனும் -2-முமுஷு உபாஸ்யனும் -3-மோக்ஷ ப்ரதனும் -என்று சொல்லப்படுகையாலே
இன்னமும் ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் ஸ்வேதாஸ்வர உப நிஷத்திலே நேரே சொல்லப்படா நின்றது
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் (இந்த மஹானை நான் அறிகிறேன்)ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி நான்ய பந்தா வித்யதேயநாய –யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கிஞ்சித் -வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் ததோ யதுத்தர தரம் ததரூபமநா மயம் -ய ஏதத் விதுரம்ரு தாஸ்தே பவந்தி- அதே தரே துக்க மேவாநு யந்தி -ஸர்வாநந ஸிரோக்ரீவ ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச பகவான் -தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ –ஸ்வேதா -3- என்று
வ்யாபகனான பரம புருஷனில் காட்டில் உத்தரமாய் இருபத்தொரு தத்வத்தைச் சொல்லி -அதினுடைய ஞான அஞ்ஞானங்களாலே மோக்ஷ ஸம்ஹாரங்களாகவும் சொல்லி -அத் தத்வம் ஸர்வ வ்யாபியான ஸிவன் என்று நிகமித்தது
அப்படியே சாந்தோக்ய தஹர வித்யையிலும் -அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர அஸ்மிந் நந்தர ஆகாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் தத் அந்வேஷ்டவ் யந் தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று இத்தாலே
ஹ்ருதய புண்டரீக மத்ய வர்த்தியான ஆகாஸ ஸப்த வாஸ்யமாக ஒரு வஸ்துவை நிர்தேசித்து -அதுக்குள்ளே இருக்கிற வஸ்து முமுஷுக்களுக்கு அன்வேஷ்டவ்யம் என்று சொல்லப்படா நின்றது
இவ் விடத்தில் ஆகாஸ ஸப்தம் -தத் ப்ரகரண உப ஸம்ஹாரத்திலே -ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யத் அந்தரா தத் ப்ரஹ்ம -8-14-1- என்று
நாம ரூப நிர்வோட்ருத்வ ஸ்ருதியாலே புருஷ ஸூக்தத்திலே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -என்று
நாம ரூப நிர் வாஹகனாகச் சொல்லப்பட்ட பரம புருஷனுக்கு வாசகமாகையாலே அந்த ஆகாஸ ஸப்த வாஸ்யனான பரம புருஷனுக்கு அந்தர் வர்த்தியாய் இருபத்தொரு வஸ்து முமுஷுக்களுக்கு உபாஸ்யம் என்று இவ் வாக்கியத்திலே தோன்றா நின்றது
தைத்ய தஹர வித்யையிலே -தஹ்ரம் விபாப்மம் வர வேஸ்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்ய ஸம்ஸ்தம் –தத்ராபி தஹ்ரம் ககநம் விசோகஸ் தஸ்மிந் யதன்தஸ்தது பாஸி தவ்யம்- யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தோ- வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ்ச மஹேஸ்வர -6-10- என்று
சாந்தோக்ய வாக்கியத்தில் போலே ஹ்ருதய அந்தர் வர்த்தியாயும் உபாஸ்ய ஆதாரமாகவும் ஆகாஸ ஸப்த பர்யாயமான ககந ஸப்தத்தாலே பரம புருஷனை நிர்தேசித்து ததாதேயமாய் இருபத்தொரு வஸ்துவை உபாஸ்யமாகச் சொல்லி -அந்த விஷயம் -யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர என்று மஹேஸ்வரனாக நிஷ்கர்ஷிக்கப் படா நின்றது –
அப்படியே ப்ருஹதாரண்யகத்தில் -யஸ் ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாசஸ் -தஸ்மிஞ் சேதே ஸர்வஸ்ய வஸீ– ஸர்வஸ் யேஸாந -6-4-22- என்று ஹ்ருதய மத்யஸ்தமாக ஆகாஸ ஸப்தத்தாலே சாந்தோக்யத்தில் போலே பரம புருஷனைச் சொல்லி- தத் அந்தர் வர்த்தியாக ஈஸாநன் ப்ரதிபாதிக்கப் படா நின்றான்
அப்படியே அதர்வ சிகையிலே -காரணந்து த்யேய ஸர்வ ஐஸ்வர்ய ஸம்பன்னஸ் ஸர்வேஸ்வர சம்பு ராகாஸ மத்யே த்யேய -என்று ஹ்ருதய மத்யஸ்தமான ஆகாஸ வர்த்தியாகக் கொண்டு உபாஸ்யமான வஸ்துவை சம்பு ஸப்தத்தாலே விசேஷித்து -சிவ ஏகோ த்யேய -சிவங்கரஸ் ஸர்வம் அந்யத் பரித்யஜ்ய -என்று அந்த ஷம்புவை சிவ ஸப்தத்தாலே நிகமியா நின்றது
அப்படியே தைத்ரியத்திலும் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி –1-1-2- என்று
குஹா ஸப்த நிர் திஷ்டமான ஹ்ருதய அந்தர் வர்த்தியாய் -உபாஸ்யமான ப்ரஹ்மத்துக்கு ஆதாரமுமாக -ப்ரஸித்த ஆகாஸ வ்யாவர்த்தகமான- பர ஸப்த விசேஷிதமாய் இருக்கிற வ்யோம ஸப்தத்தாலே புருஷோத்தமனைச் சொல்லி -அவன் பக்கலிலே இருக்கிற ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான உபாஸ்ய வஸ்து -முன்பு சொன்ன அநேக ஸ்ருதிகளோடு உண்டான ஐகார்த் யத்தாலே சிவன் என்று அறுதி இடப்படா நின்றது
காமாத் யதிகரணத்தில் ஸர்வே வேதாந்த படித தஹர வித்யை களுக்கு ஐக்யம் சொல்லி இருக்கையாலே ஸர்வ ஸ்ருதிகளுக்கு ஐகார்த்யம் ஸித்தம் என்று கருத்து
ஆகையாலே நாராயணனுக்கு பரனாய் தத் அந்தர் வார்த்தியான உபாஸ்யன் சிவனே என்னும் இடம் ஸர்வ ஸ்ருதிகளிலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது என்னும் இடம் நிஸ்ஸயிக்கப் பட்டதாகிறது
இப்படியே அதர்வ சிரஸ்ஸில் ப்ரதம கண்டத்திலே -தேவா ஹ வை ஸ்வர்க்கம் லோக மகமந் -தே தேவா ருத்ரம் அப்ருச்சன்–கோபவா நிதி ஸோ அப்ரவீத் -அஹமேக ப்ரதம மாஸம் -வர்த்தாமி ச பவிஷ்யாமி ச -நான்ய கஸ்ஸின் மத்தோ வ்யதிரிக்த -என்று
முதலான வாக்யத்தாலே தேவர்களாலே ப்ருஷ்டனான ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தைப் பரக்கச் சொன்னான்
அநந்தரம் தேவர்கள் அத்தை எடுத்து ருத்ரனை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று தொடங்கி
ததோ தேவா ருத்ரம் நாபஸ்யன் தே தேவா ருத்ரம் த்யாயந்தி -ததோ தேவா ஊர்த்வ பாஹவ ஸ்துந் வந்தி என்கிற ஸ்ருதி அர்த்த அநு வாதம்
த்விதீய கண்டத்திலே -யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா -தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச விஷ்ணுஸ் தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச மஹேஸ்வரஸ் தஸ்மை வை நமோ நம –
யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா பூர் புவஸ் ஸூவஸ் தஸ்மை வை நமோ நம -இதி பாரதம் -என்று முதலான
வாக்யத்தாலே ருத்ரனுடைய ஸர்வ ஐஸ்வர்யமானது ஸூ வ்யக்தமாகச் சொல்லப்பட்டது
த்ருதீய சதுர்த்த கண்டங்களிலே -ஸ ஏகோ ருத்ரஸ்ய ஈஸாந ஸ பகவான் ஸ மஹேஸ்வர ஸ மஹாதேவ -இதி தத் அசாதாரணாநேக நாம நிர்தேச தந் நிர்வசன முகத்தாலே ருத்ரனுடைய ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கப் படுகிறது
த்ருதீயேதி –இவ் விடத்தில் அதர்வ சிரஸ்ஸை ஐந்து கண்டமாகவே திரு வுள்ளம் பற்றி இருக்கிறதாகத் தோற்றுகிறது -தத்வ சேகர- ஸ்ருத ப்ரகாசிக -அதர்வ ஸிகா விலாஸாதிகளில் ஆறு கண்டமாகத் திருவுள்ளம் பற்றி வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள்
அநேக தத்வ நிரூபண கோசங்களில் ஐந்து கண்டமாகவே தோற்றுகையால் பரிஷ்கரிக்க சாமர்த்தியம் உடையோமாகிறிலோம்
தேவா ஹ வை –தொடங்கி ஸ்வேந தேஜசா பர்யந்தம் பிரதம கண்டம்
ததோ தேவா ஆரப்ய –யச்ச ஸத்யம் தஸ்மை நமோ நம -இத்யந்தம் த்விதீய கண்டம்
ஓமாதவ் மத்யே -தொடங்கி பாதோய உத்தர –பர்யந்தம் த்ருதீய கண்டம்
ஸ ஓங்கார -தொடங்கி -மஹா தேவ -பர்யந்தம் சதுர்த்த கண்டம்
ததேகஸ்மாதுச்யதே –தொடங்கி – தஸ்மா துச்யதே மஹா தேவ – பர்யந்தம் பஞ்சம கண்டம்
ததே தத் ருத்ர சரிதம் தொடங்கி ஸத்ய மித் யுப நிஷத் -இத்யந்தம் ஷஷ்ட கண்டம்
இவ்வர்த்தம் ஸர்வ வ்யாக்யாநாதி கரண -1-4-29- ஸ்ருத பிரகாசிகையில் ஸ்பஷ்டம்
அஸ்மதீய தத்வ சேகரப்படிப் பணியில் விசதமாகக் காண்க
அப்படியே பஞ்சம கண்டத்திலே -ததேதத் ருத்ர சரிதம் -ஏஷோ ஹ தேவ ப்ரதி ஸோநு ஸர்வா –பூர்வோ ஹி ஜாதஸ் ஸ உ கர்ப்பே அந்த -ஸ ஏவ ஜாதஸ்ஸ ஐநிஷ்யமாண -ப்ரத்யஞ்ஜ நாஸ்திஷ்டதி விஸ்வதோமுக —ததேதத் உபாஸி தவ்யம் -என்று தொடங்கி
வாலாக்ர மாத்ரம் ஹ்ருதயஸ்ய மத்யே விஸ் வந்தேவம் ஜாத வேதம் வரேண்யம்-தாமத்மஸ்தம் யேநு பஸ்யந்தி தீராஸ் -தேஷாம் சாந்திஸ் ஸாஸ்வதீ நேதரேஷாம் என்று
ஹ்ருதய மத்ய வர்த்தியான ருத்ரனுடைய உபாஸனத்தை மோக்ஷ பலமாகச் சொல்லி –
வ்ரதம் ஏதத் பாஸு பதம் -என்று தொடங்கி
அக்னிரித்யாதி நா பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ் யங்காநி ஸம்ஸ் ப்ருஸேத் –தஸ்மாத் வ்ரதமேதத் பாஸு பதம் -ப ஸு பாஸ விமோஷாயா – என்றதும் அங்கமாக சமந்த்ரகமான ஸர்வாங்க பஸ்ம ஸ்பர்ஸ லக்ஷணமான பாஸு பத வ்ரதமும் சொல்லப்பட்டது இறே
இப்படி ருத்ரனுடைய சர்வஸ்மாத் பரத்வம் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சத ப்ரஸித்தமாயுள்ள விடத்தில் பவ்ருஷேய வசஸ் ஸுக்களான புராணாதிகள் தத் அநு குணமாக நயிப்பிக்க வேண்டுகையாலே அந்த ஸ்ருதிகளோடே அநு குணங்களான இதிஹாஸ புராணாதிகள் ப்ரமாணங்களாய் -அத்தை உப ப்ரும் ஹிக்கின்றவாகக் கடவன-
அல்லாத ப்ராபத்யாதி ஸ்ம்ருதிகளும்- ஸ்ரீ விஷ்ணு புராணாதி புராணங்களும்- ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதத்தாலே- விரோதேத் வநபேஷம் ஸ்யாத் –பூ மீ -1-3-3-
விருதே த்வ நபேஷம் ஸ்யாத் அஸதிஹ் யநுமாநம் – ப்ரத்யக்ஷ ஸ்ருதி விருத்தம் ஸ்ம்ருதி வசனமநபேஷ்யம் – அநாதரணீயம் -ஸ்ம்ருதேரபி ஸ்ருதி மூலத்வ அநு மாநாத் ஆதரணீயத்வம் இத்யத்ராஹ –அஸ்தி ஹ்யநுமாநமிதி அசதி -ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதே ஹி ஸ்ம்ருதி மூல ஸ்ருத் யநுமாநம் இத்யர்த்த –இதை ஸ்ருத பிரகாசிகாயாம் -2-1-1-அஸ்யார்த்த உக்த -என்கிற நியாயத்தாலே அநாதரணீ யங்களாகக் கடவன-
மனுவும் -யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய –தாஸ் ஸர்வா நிஷ் பலா -ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா –மநு -1-2-95- என்று
வேத விருத்த ஸ்ம்ருதியாதிகள் த்யாஜ்யமாகச் சொன்னான் இறே –
ஆகையால் சிவனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று ஸோப ப்ரும்ஹண ஸ்ருதி சத ஸித்தம் என்றதாயிற்று –
————-
சதுர் முக காரணத்வ வாத ஆரம்ப
இவ் விடத்திலே சதுர் முகனான ஹிரண்ய கர்ப்பனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று சிலர் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினார்கள் எங்கனே என்னில்
காரண வாக்ய கதங்களான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம -ஸப்தங்கள் சாதாரண ஸப்தங்களாகையாலே -சேதன விசேஷ பர்யவஸாநத்தை அபேக்ஷித்தால்
ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்–ருக் 8ம் அஷ்டகம் 7 அத்யாயம் -வர்க்க –10 ம் மண்டலம் -10 அநு –121 சூத்ரே 1ம் வாக்கியம் -என்று
துல்ய ப்ரகரணஸ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்தாலே சொல்லப்பட்ட சதுர்முகனாகிற விசேஷத்திலே பர்யவஸியா நின்றது
அப்படியே -அம்பஸ் ய பாரே -தைத்த -6-1-1- என்கிற அநுவாகத்திலே -யஸ்மின் நிதம் சஞ்ச விசைதி ஸர்வம் –யத ப்ரஸூதா ஜகத ப்ரஸூதீ –ந தஸ்யேஸே கஸ்ஸன– தஸ்ய நாம மஹத் யஸ — ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம் –ஹ்ருதா மநீஷா மநஸாபி க்லுப்தோ ய ஏநம் விதுரம்ரு தாஸ்தே பவந்தி –தைத்த -6-1-2-4-10-11- என்று ஜகத் காரணமாகவும் மோக்ஷ ப்ரதனாகவும் ஒரு புருஷனைச் சொல்லி பின்பு
அத்ப்யஸ் ஸம் பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் –தைத்த -6-1-12- என்று
முன்பு சொன்ன வாக்யத்தோடே ஏக வாக்கியமாக -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகத்தையும்
ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே -என்கிற எட்டு ருக்கையும் உதா ஹரித்துக் கூட்டுகையாலே ஜகத் காரண பூதனாய் -அநந்ய ஈஸ்வரனாய் -மோக்ஷ ப்ரதனாக முன்பு சொல்லப்பட்ட புருஷன் ஹிரண்ய கர்ப்பன் என்று ஸ்பஷ்டமாயிற்று
ஆகில் -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகமும் -பூர்வ உக்தத்தோடு ஏக வாக்யமாகையாலே -ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் –என்கிற ஸ்ரீ யபதித்வ லிங்கம் முன்பு சொன்ன புருஷன் நாராயணன் என்று காட்டாதோ என்னில் -(ஸ்ருதி சொல்லே -அடுத்து லிங்கம்-அடையாளம் சொல் இல்லாமல் – -வாக்கியம் -பிரகரணம் -ஸ்தானம் -சமாக்கியம் -ஆறு படிகள் -முதலில் சொன்னதே பிரபலம்-கையால் எடுத்து ஆஹுதி கொடு -கரண்டியால் எடுத்து -கத்தியால் எடுத்து -மூன்றும் -அன்னம் நெய் வஸ்து சாமர்த்தியம் -சொல் இல்லாத இடத்தில் கொள்ளலாம்) லிங்கத்தில் காட்டில் ஸ்ருதி ப்ரபலை யாகையாலே ஸ்ரீயபதித்வ லிங்கத்தில் காட்டில் ஹிரண்ய கர்ப்ப ஸப்த ரூடையான ஸ்ருதி தானே விசேஷத்தை நிரபேஷமாகக் காட்டவற்று
ஏக பத ஸாமர்த்யம் ஸ்ருதி வஸ்து ஸாமர்த்யம் லிங்கம் -என்று இறே மீமாம்சகர் நிஷ்கர்ஷித்தது
ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் -தைத் -6-1- என்று ஜகத் ஸ்ரஷ்டாவை ஹிரண்ய கர்ப்ப பர்யாயமான தாத்ரு ஸப்தத்தாலே சொல்லிற்று இறே
ப்ரஜாபதி ப்ரஜா அஸ்ருஜத -தைத்த ப்ரா -1-4-2- என்று முதலான காரண விஷய ஸ்ருதிகளும் ப்ரஜாபதியையே காரணமாகி சொல்லா நின்றன
ப்ரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1-என்று சாந்தோக்ய -தஹர வித்யையிலே பிராஜா பத்ய ஸ்தாநத்தை முக்த ப்ராப்யமாகச் சொல்லிற்று இறே
ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம ஸப்தங்கள்
சிவ சம்பு மஹேஸ்வராதி ஸப்த வாஸ்யமான வஸ்து விசேஷத்திலே பர்யவசிக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது அன்றோ -என்னில்
அது சொன்னாலும் விஷயமாக மாட்டாது – எங்கனே என்னில்
ஸத் ப்ரஹ்ம ஆத்ம ஸப்தங்களோ பாதி ஸிவாதி சப்தங்களும் சாதாரணங்கள் ஆகையாலே
அப்படி ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சாதாரணம் அல்ல
ஸிவாதி ஸப்தம் சாதாரணமான படி எங்கனே என்னில்
சிவமஸ்து ஸர்வ ஜகதாம்(உலகு எங்கும் மங்களம் ஏற்படட்டும்) -என்றும்
ஸிவா நஸ் சந்து பந்தாந —
சிவம் கர்மாஸ்து என்றும்
சிவா ருதவஸ் சந்து -என்றும்
சிவா நஸ் சந்தமா பவ -அதர்வ 7-17-68-என்றும்
சிவஸ் சிவா நாம சிவோ அஸிவா நாம் -உத்யோக பர் -42-6- என்றும்
யோவஸ் சிவ தமோ ரஸ -தைத் -6- என்றும்
லோக வேதங்களிலே ஸூத்தி மங்கள்யா குண யோகத்தால் அநேக வஸ்துக்களிலே சிவ சப்தம் ப்ரயோகிக்கக் காணப் படா நின்றது –
இப்படி சம்பு ஸப்தமும் –சம்புஸ் ஸ்வயம்பூர் த்ருஹிண -என்று ப்ரஹ்மாவின் விஷயமாகவும் காணப்படா நின்றது(காம க்ரோதங்களையும் துஷ்டர்களை அழிப்பதால்)
மஹேஸ்வர ஸப்தமும் மஹான் ஈஸ்வர என்கிற அவயவ ஸக்தியாலே ராஜாதிகளிலேயும் பிரயோகிக்கப் படா நின்றது
இனி ருத்ர ஸப்தமும் -ருத்ரோ வா ஏஷ யதக்னி-யஜுக்கே அஷ் -2-3-
வீரான்மா நோ ருத்ர பம்மிதோவதீ ஹவிஷ் மந்தோ நமஸா விதேம தே -யஜுர் ஸம் -4-5-10-23- என்று க்ரவ்ர்யாதி குண யோகத்தாலே அக்னி யாதிகளிலும் பிரயோகம் காணப்படா நின்றது
இப்படி ஹிரண்ய கர்ப்ப சப்தத்துக்கு சதுர்முகனை ஒழிய வேறு ஒருவர் இடத்தில் காணப்பட்டது இல்லை
அப்போது இறே ஸிவாதி ஸப்தங்களோ பாதி ஸாதாரணம் என்னாலாவது
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் – கட உப -1-1-1- இத்யாதி வாக்கியங்கள் ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அநுவாதமாகையாலே விசேஷ உப ஸ்தாபகம் அன்று என்று முன்பே சொல்லப்பட்டது
ஆகையாலே -ப்ருகுடீ குடிலாத் தஸ்ய லலாடாத் க்ரோத தீ பி தாத் ஸமுத் பன்னஸ் ததா ருத்ர –மத்யாஹ் நார்க்க சம ப்ரப –
அர்த்த நாரீ தர வபு ப்ரஸண்டோதி சரிரவான் -ஸ்ரீ விஷ்ணு பு -1-7-12 என்கிறபடியே
அர்த்த நாரீதர சரீரியான ருத்ரனுக்கும் உத்பாதகனான ஹிரண்ய கர்ப்பமே முமுஷு உபாஸ்யமான பர ப்ரஹ்மம் என்று வேதாந்தங்கள் ப்ரதிபாதிக்கின்றன என்னும் இடம் ஸித்தம்
புராணங்களும் ப்ரஹ்ம பரத்வ ப்ரதி பாதக ஸ்ருதிகளை உப ப்ரும்ஹிக்கிறவையே பிரமாணங்கள் –அல்லாதவை ஸ்ருதி விரோதத்தாலே உபேஷணீ யங்கள்
ஆகை இறே மநுவும் ததஸ் ஸ்வயம் பூர் பகவான் -11-6- என்று ஸ்வயம்பு சப்ததத்தாலே ஜகத் காரணத்தைச் சொல்லிற்று
ஸ்வயம்பு ஸப்தம் -சதுர்முகனுக்கு பர்யாய பதம் என்னும் இடம் ப்ரஸித்தம்
ஆகையாலே சதுர்முகனே பர ப்ரஹ்மமாக ஸ உப ப்ரும்ஹணமான வேதாந்தத்தில் ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்னும் இடம் ப்ரஸித்தம் என்றதாயிற்று –
——————-
அத ஸித்தாந்த ஸ்தாபநம்-இவ் விடத்தில் பரிஹாரமான ஸித்தாந்தம்
நாராயண ஸப்த வாஸ்யமான வஸ்துவே பர ப்ரஹ்மமாகக் கடவது
காரண வாக்கியங்களில் இவனையே காரணமாகச் சொல்லுகையாலும்
மோக்ஷ பிரகரணங்களில் இவனையே மோக்ஷ பிரதனாகவும் முக்த ப்ராப்யனாகவும் சொல்லுகையாலும்
எங்கனே என்னில்
காரண வாக்கியங்களில் சாதாரணமான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மாதி ஸப்தங்கள் விசேஷ பர்யவஸாந ஆகாங்ஷங்களாய்க் கொண்டு
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஆபோ ந அக்னிர் ந சோமோ ந ஸூர்ய- ஸ ஏகாகீ ந ரமேத- தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய -ஏகா கந்யா (கந்யா-மநஸ் –ப்ரகாசகத்வாத் –கந தீப்தவ் இதி தாது -இதி ஸ்ருத ப்ர-4-4-17) தச இந்த்ரியாணி —-ஜாயந்தே –மஹா உப -1-1-1 இத்யாரப்ய
அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -தா இமா ஆபாச தத் தேஜோ ஹிரண்மய மண்டலபவத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜயதே –1-2-1-
அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -ஸ்வேதாத் புத்புதம பவத் புத் புதாத் த்ர்யஷ ஸூல பாணி புருஷோ ஜாயதே -1-3-1- என்று
முதலான மஹா உபநிஷத்தாலே காட்டப்பட்ட நாராயணனாகிற விசேஷத்திலே பர்யவசியா நின்றன –
இந்த வாக்யம் அநுவாத ரூபம் என்று முன்பே சொல்லப்பட்டதன்றோ என்னில் -அப்படி யன்று -பின்னை எங்கனே என்னில்
ஸாஸ்த்ரமானது அப்ராப்த ப்ராபகமாய் இருக்கும் -(அறியாதது அறிவித்த அத்தா போல்)அதாவது இவ் விடத்தில் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் பிரமாணாந்தரங்களால்(பிரத்யஷத்தாலும் அனுமானத்தாலும்) ப்ராப்தம் அன்று -ஆகாஸ ப்ராணாதி களோபாதி ப்ரஸித்த வந் நிர்தேசம் அன்று –ப்ரஸித்த வந் நிர்தேசம் அநுவாத ஸூசகமன்றோ என்னில்
ஸர்வாணி ஹா வா இமாநி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத் யந்தே –சாந்தோ -1-9-1-என்கிற இடத்தில் ஹ வை என்கிற ப்ரஸித்த வந் நிர்தேச மாத்ரம் -அநுவாத ஸூசகம் அன்று
யதாக் நேயோஷ்டாகபால -யஜுர் -2-5-2-
உபரி ஹி தேவேப்யோ தாரயதி-என்று முதலான வாக்யங்களிலும் -அப்போது அனுவாதத்வம் ப்ரசங்கிக்கும் –(ஸமித் -கரண்டி எங்கே பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஸ்ருதி-திருஷ்ட அக்னி ஹோத்த்ரம் -சரீரமே சாதனம் இவர்களுக்கு -பிரதிபத்தி கர்மா
சமித்தை கரண்டிக்கு கீழே வைத்து செல்ல வேணும்
தேவர்களுக்கு மேலே அன்றோ -ஹி -சமித்தைப் பிடிக்கிறான்
விதி வாக்யமே இது தான் -அனுவாதம் அல்லவே)
அவ் விடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் – வசநாநி த் வபூர்வத்வாத் –பூ மீ -3-5-21-என்றும்
விதிஸ் து தாரணே அபூர்வத்வாத் –பூ மீ -3-4-15- என்றும் பூர்வ மீமாம்ஸா ஸூத்ரங்களாலே விதித்வம் ஸமர்த்திக்கையாலே ஸித்தம்
ஸர்வாணி ஹ வா -இத்யாதி வாக்யங்களால் ஆகாஸ ப்ராணங்களுக்கு ப்ரமாணாந்தரங்களாலே -கார்யத்வ -ஹேயத்வங்கள் ஸம் பிரதிபன்னங்கள் ஆகையாலே இவற்றுக்கு
பரம காரணத்வம் -ப்ராப்யத்வம் -தத் அநு குண கல்யாண குண யோகத்வம் இவற்றினுடைய ப்ரதிபாதனம் கூடாமையாலே -உபக்ரமத்திலே லோக கதியாக ப்ரதீதமான பரத்வமே -ஆகாஸ ப்ராணங்களாக பரத்வ விஸிஷ்ட லிங்கங்களாகையாலே -தத் தச் ஸப்த வாஸ்யங்களாக -சாரீரக மீமாம்ஸா ஸூத்ரங்களாலே -11-22-23-அநுவாதமாக ப்ரதிபாதிக்கப் பட்டதாயிற்று
ப்ரஸித்த வந் நிர்தேசத்வம் அநுவாதத்துக்கு ஹேதுவாகச் சொல்லப் பட்டது என்றதாயிற்று
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -மஹா -1-1-1- என்கிற மஹா உப நிஷத்தில் -நாராயணனையே பரம காரணனாகச் சொல்லி -தத் வ்யதிரிக்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஸம் ப்ரதிபந்தங்களான கார்யாந்தரங்களோ பாதி நாராயணனாலே ஸ்ருஜ்யராகவும் -ஸம்ஹார்யராகவும் சொல்லுகையாலே -வேறு ஒரு வஸ்து காரணமாக விதிக்கப் படுகிறது என்கிற ப்ரசங்கமே இல்லை
ப்ரஹ்மா விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே -அதர்வசிகா என்கிற இடத்தில் விஷ்ணு உத்பத்தி கார்யத்வா பாதகம் அன்று –
உபேந்த்ர – ராம – கிருஷ்ணாத் அவதாரங்களோபாதி ஜகத் ரக்ஷண அர்த்தமாக ப்ரஹ்ம ஈஸ மத்ய கதமான அவதார விசேஷமாக பிரமாண ஸித்தம்
ஆகையால் இவ் வாக்யத்துக்கு அப்ரமாணத்வம் இல்லை என்று இந்த வாக்யத்தில் சொல்லுகிற விசேஷமான நாராயணன் பக்கலிலே ஸதாதி ஸப்தங்களுக்கு பர்யவஸாநம் யுக்தம்
இந்த வாக்யம் அநுவாதமானாலும் அநுவாத லிங்க ரஹிதமாக நாராயணத்வத்தைச் சொல்லுகிற ஸ்ருதி அர்த்தத்தை அநுவதிக்கக் குறையில்லை
அதில் ஸூபால உப நிஷத்திலலே
கிம் ததாஸீத் நைவேஹா மிஞ்ச நாக்ர ஆஸீத் -அமூல மநாதாரா இமா ப்ரஜா- ப்ரஜாயந்தே திவ்யோ தேவ ஏகோ நாராயண என்றும்
புருஷ ஸூக்தத்திலும்
தஸ்மாத் விராட ஜாயத – விராஜோ அதி பூருஷ -என்றும்
இத்யாதியாலே நாராயண காரணத்வத்தைச் சொல்லி
கட வல்ல்யாதிகளும் அவனுடைய மோக்ஷ பிரதத்வத்தையும் சொல்லுகையாலே
ஜகத் காரணத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்கும் –
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -தைத் -1-1-
அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -ததோ வை சத ஜாயத ததாத்மாநம் ஸ்வய மகுருத – தஸ்மாத் தத் ஸூஹ்ருதம் உச்யத இதி -யத்வை தத் ஸூஹ்ருதம் ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி –தைத் -7-1-
இத்யாதி வாக்யங்களிலே ஜகத் காரணமே இறே -மோக்ஷ ப்ரதமாகவும் -முக்த ப்ராப்யமாகவும் ப்ரதிபாதிக்கப் படுகிறது
ஆகையாலே மஹா உபநிஷத் வாக்கியம் அநுவாதமாம் இடத்திலும் -தேவதாந்தர காரணத்வத்தை அநுவதிக்கிற பிரசங்கமே இல்லை
ப்ரஸித்த வந் நிர்தேசம் உண்டானாலும் -அபூர்வ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கும் இடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப்பட்டது
இப்படி நாராயண உபநிஷத்திலும்
அத புருஷோ ஹ வை நாராயணோ அகாமயத- ப்ரஜாஸ் ஸ்ருஜேயமிதி -அதாப ஸ சர்ஜ —நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –நாராயணாத் ருத்ரோ ஜாயதே –நாராயணாத் இந்த்ரோ ஜாயதே- நாராயணாத் ப்ரஜா ப்ரஜாயந்தே –நாராயணாத் த்வாதஸ ஆதித்யா ஏகாதஸ ருத்ரா வஸவ ப்ரஜாபத யஸ்ச ஸர்வே தேவாஸ் ஸமுத் பத்யந்தே -ஸர்வே லோகாஸ் ஸர்வாணி ச பூதாநி நாராயணா தேவ ஸமுத்பத்யந்தே -நாராயணே ப்ரலீ யந்தே -என்று நாராயணனையே ஸர்வ காரணமாகவும் சொல்லிற்று
மஹா உப நிஷத்திலும்
ஸர்வஸ் யாயதநம் ஹரிம் -என்று தொடங்கி
யந் நாபி பத்மாத் அபவந் மஹாத்மா ப்ரஜாபதிர் விஸ்வஸ்ருக் விஸ்வ ரூப -தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நாந்ய பந்தா வித்யதே அயநாய -என்று
ஸகல ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் காரணமாக- நாராயண பர்யாய பதமான ஹரி ஸப்தத்தாலே நாராயணனைச் சொல்லுகையாலே- காரண வாக்யங்கள் எல்லா வற்றிலும் நாராயணனே பரனாக ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்றதாயிற்று
ஆகையாலே -ந சத் ந அசத் சாச் சிவ ஏவ கேவல -ஸ்வே -4-18- என்கிற இடத்தில் சிவ ஸப்தம் அர்வாசீந சிவனுக்கு வாசகம் அன்றியிலே– ஸூத்த மங்கள்ய குண யுக்தமான அநேக அர்த்தங்களிலும் ப்ரயோகம் காண்கையாலே- பவித்ராணாம் பவித்ரனாய் -மங்களா நாம் மங்களனான – ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -தைத் -6-11-3- என்று நாராயண அநுவாகத்திலே சொன்ன ஸாஸ்வத சிவனான நாராயணனுக்கே வாசகமாம் இத்தனை-
இப்படி நாராயண சப்தத்துக்கு வ்யக்த்யந்தரத்தில் ப்ரயோகம் கண்டது இல்லை இறே-
இப்படி பஹு உப நிஷத்திலும் -பஹு ஸ அப்யஸ்யமாந நாராயண ஸப்த வாஸ்யனே -பரம காரண தயா நிர்ணீதனாகையாலே -க்வாசித் கதமாய் வ்யக்த்யந்த்ர ப்ரயோகத்தாலே ஸாவகாஸமான சிவ ஸப்தம் நாராயண வாசகமாகை யாலே யுக்தம் என்றதாயிற்று
இன்னமும் ஆகாஸ பிராணாதி களோபாதி
ந ப்ரஹ்மா நேஸாந -மஹா உப -1-1-
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே- நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண உப-1
த்ர்யக்ஷ ஸூல பாணி -புருஷோ ஜாயதே -மஹா உப -1-3-
யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேஷ ந்ரும்ண
இத்யாதிகளிலே ஸ்ருஷ்டி ஸம்ஹார கர்ம பாவத்தையும்
அஸ்ய தேவஸ்ய மீடுஷோ வயோ விஷ்ணோர் அக்ஷஸ்ய அவப்ருதே ஹவிர்பிர் விதேஹி ருத்ரோ ருத்ரியம் மஹத்வம் -என்று பஹ்வ்ருச ஸ்ருதியிலே ருத்ரனுக்கு பகவத் ஸமாராதநத்தாலே ஸ்வ மஹிம ப்ராப்தியையும் சொல்லுகையாலே அர்வாசீந சிவனுக்கு பரம காரணத்வம் அநுப பன்னம் என்றதாயிற்று-
இப்படியே காரண வாக்ய கதமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சதுர்முகனை பரம காரணமாக ப்ரதிபாதிக்க மாட்டாது -எங்கனே என்னில்
கார்யதயா ஸம் பிரதி பன்னனான ஹிரண்ய கர்ப்பனுக்கு பரம காரணத்வம் கூடாமையாலே
தா இமே ஆபஸ் தத் தேஜோ ஹிரண்ய மய மண்டமபவத் தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ ஜாயத -மஹா உப -1-2-
ஆப ஏவ ஸ சர்ஜா தவ் தாஸு வீர்யமபாஸ்ருஜத் -ததண்டம பவத் ஹைமம் ஸஹஸ்ராம்ஸு சம ப்ரபம் -தஸ்மிந் ஜஜ்ஜெ ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதாமஹ -மநு -1-8-9- என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே சொல்லுகிறபடியே
ஹிரண்ய மஸ்ய கர்ப்போ பூத் -லிங்க பு -பூ 70-106—வாயு பு பூ 5-42- என்கிற
வ்யுத்பத்தி ப்ரகாசத்தாலே ஹிரண்மயமான அண்டம் இவனுக்கு உத்பத்தி ஸ்தானம் என்று தோன்றுகையாலே இவனுடைய கார்யத்வம் ஸித்தம் என்றதாயிற்று-
ஸ பிரஜாபதி ரேக புஷ்கரபர்ணே ஸமபவத்-ந்ரு தாபா வீரயோப -பூ 1-1-ப்ருஹ்ஜ்ஜா பால் யுப -1-1-
விராஜோ அதி புருஷ -ருக் வேத -8-4-17-10-7
ப்ரஹ்மாணம ஸ்ருஜத் ப்ரபு
மாம் த்வம் பூர்வமஜீ ஜந – உத்தர ரா -104-4-
தத் விஸ் ருஷ்டஸ் ஸ புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11-என்று
முதலான ப்ரமாணங்களும் சதுர் முகனுடைய கார்யத்வ ப்ரதிபாதகங்களாய் இருக்கும்
ஆகையால் -ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் -யஜுர் – ஸம் -4-2-34-என்கிற
வாக்யத்துக்குப் பொருள் – ஹிரண்ய கர்ப்பன் ஸ்வ கார்யமான ஸ்ருஷ்டிக்கு பூர்வ பாவியாய் -ஸ்வ ஸ்ருஷ்டங்களான பூதங்களுக்கு பதியுமாய் இருக்கும் என்றதாயிற்று-ஜாத பதிர் ஆஸீத் என்கையாலே இவனுடைய பதித்வம் ப்ரதமஜத்வ ரூப நிபந்தன மாகையாலே ஒவ்பாதிகம் என்று தோற்றுகிறது
(பிரஜாபதி -முதலில் பிறந்தவன் என்பதால் பெற்ற பெயர்)
ஆகையாலே இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் பரம காரண விஷயமான போது -ஹித ரமணீய கர்ப்பத்வாத் ஹிரண்ய கர்ப்ப -என்று உபாய உபேய மான ஸ்வரூபத்தை யுடையவன் என்கிற அவயவ ஸக்தியாலே யாதல் – ஹிரண்ய கர்ப்ப சரீரியான பரமாத்மாவின் பக்கல் பர்யவசான வ்ருத்தியாலே யாதல் – ஸர்வ காரண பூதனான நாராயணனுக்கே வாசகமாகக் கடவது
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே(கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்) -என்கிற அநுவாகத்தில் –
யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி –
ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி-என்று
ஸமுத்ர ஸாயித்வ-வித்யுத் வர்ண புருஷத்வங்களாகிற லிங்கங்களாலே- நாராயண ஸப்த வாஸ்யனான பரம புருஷனைச் சொல்லி
ந தஸ்யேஸே கஸ்சந தஸ்ய நாம மஹத் யஸ –ய ஏவம் விதுரம்ருதாஸ்தே பவந்தி -என்று
இவனுக்கே அநந்ய ஈஸ்வரத்வத்தையும் -மோக்ஷ ப்ரதத்வத்தையும் சொல்லி
அத்ப்யஸ் சம்பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் -என்று
பூர்வ உக்தத்தோடு ஏக வாக்கியமாக
ஹிரண்ய கர்ப்ப -இத்யாதி ருகஷ்ட கத்தையும் உதா ஹரித்துச் சொல்லுகிற வாக்யமானது இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு நாராயண பரத்வத்தை அடைவிப்பியா நின்றது –
இன்னமும் இந்த ஹிரண்ய கர்ப்ப வாக்யத்தோடே
அத்ப்யஸ் ஸம்பூத -என்கிற அநுவாகத்துக்கும் ஏக வாக்யத்வம் உண்டாகையாலே
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் -என்று அங்குச் சொல்லுகிற ஸ்ரீயபதித்வத்தாலும்
புருஷ ஸூக்த ப்ரகரணத்தவத்தாலும்
நாராயண விஷயத்வம் நிஸ்சிதமாகையால் இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் நாராயண பரம் என்று அறியப்படும்
ஸ்ரவ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் லிங்கமான ஸ்ரீ ய பதித்வத்தில் காட்டில் ப்ரபலமாய்க் கொன்டு சதுர் முக வாசகம் என்கிற விடம் அநுப பன்னம்
காரண விஷய ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு கார்ய பூத சதுர் முக பரத்வம் கூடாமையாலே ஸ்ருதி அசித்தை யாகையாலும்(பொய்யாகி விடுமே )- ஏக பத ஸாமர்த்ய ரூபமான ப்ராமாண்யம் -அக்னிநா சிஞ்சேத் (அக்னியாலே நனை -காரணத்தைச் சொல்லி கார்யம் தண்ணீரால் நனை-தேவ லோக பசுக்கள் தலை கீழ் நடக்கும் அர்த்த வாதம் அங்கு )-இத்யாதி வாக்கியங்களில் போலே அநுப பன்ன அர்த்தங்களில் ஸம்பவியாமையாலும்- ஸ்ருதிக்கு ப்ராபல்யம் சொல்ல ஒண்ணாது –
புருஷ ஸூக்தம் நாராயண பரம் என்னுமிடம் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட
ஸஹஸ்ர ஸீர்க்ஷ –விஸ்வாக்ஷ –புருஷ இத்யாதி லக்ஷணமான புருஷ ஸூக்தாதி லஷிதமான –நாராயண அநு வாகாதி — என்று பாடமாகில் நலம் -தாள கோசங்களில் புருஷ ஸூக்தாதி -என்றே காண்கிறது
1-ப்ரத்யபிஜ் ஞாநத்தாலே ஸித்தம் என்று லிங்க பூயஸ்த்வாத் -3-3-44- என்கிற வேதாந்த அதி கரணத்திலே ப்ரஸித்தம் இறே
2-அதர்வண வேதத்தில் அஷ்டாதஸ மஹா சாந்தி ப்ரகரணத்திலே — வைஷ்ணவ்யாம் புருஷ ஸூக்த மீதம் -என்று
வைஷ்ணவியான மஹா சாந்தியிலே புருஷ ஸூக்தத்தை விநியோகிக்கையாலே இதினுடைய விஷ்ணு விஷயத்வம் ப்ரதீத மாயிற்று
3-இந்த வாக்யத்துக்கு உத்தர நாராயண அநு வாகத்திலே சொல்லப்பட்ட லஷ்மீ பதித்வ லிங்கத்தாலும்
4-புருஷஸ்ய ஹரே ஸூக்தம் -என்கிற ஸ்ம்ருதி வசனத்தாலும்
5-கல்ப ஸூத்ரங்களிலும் புருஷம் நாராயணம் -என்று (புருஷ இத் யுபஹிதாம் புருஷேண நாராயணனை யஜமான உப திஷ்டதே –ஸஹஸ்ர சீர்ஷா புருஷ இதி புருஷேண நாராயணேந பராஞ்சோநு ஸம் சந்தி -இதி போதாயந ஆபஸ்தம்ப கல்ப ஸூத்ரே ) என்று
இரண்டு அநுவாகத்தையும் சொல்லுகையாலும் நாராயண பரம் என்னும் இடம் நிஸ்ஸயம்
உக்த ந்யாயத்தாலே -தாதா யதா பூர்வ மகல்பயத் -தைத்த -6-1- என்கிற இடத்தில் தாத்ரு ஸப்தம் பரம காரணத்வத்தில் பகவத் விஷயமாகவும்
அவாந்தர காரணத்வத்தில் சதுர் முக விஷயமாயும் இருக்கும்
பிரஜாபதி ஸப்தமும் அப்படியே
பிரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1- என்று
முக்த ப்ராப்யத்வம் சொல்லுகிற விடம் சதுர் முக பரமன்று –
கட வல்லி நாராயண அநுவாகம் தொடக்கமான அநேக உப நிஷத்துக்களிலே நாராயணனையே முக்த ப்ராப்யனாகச் சொல்லுகையாலும்
பகவத் பர தயா நிர்ணீ தவ்யமான தஹர வித்யாகதமான இந்த வாக்யத்துக்கு தத் பரதை யுக்தமாகையாலும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -4-3-14-ப்ரஹ்ம ஸூத் -என்று
சதுர்முகனுடைய முக்த ப்ராப்யத்வம் வேதாந்த விருத்தமாகையாலும்
இந்த ப்ரஜாபதி ஸப்தம் அவயவ ஸக்தியாலே ஸர்வ சேஷியான நாராயணனையே சொல்லுகிறதாகக் கடவது-
தத ஸ்வயம் பூர் பகவான் -மநு -1-6- என்கிற இடத்தில் ஸ்வயம்பு ஸப்தம் நாராயண பரமாகக் கடவது
அநந்தரத்தில் -தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ் ஸ்ம்ருத -மநு -1-10- என்று அவனை நாராயணனாகச் சொல்லி
தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -என்று அவனாலே ஸ்ருஷ்டனாக ப்ரஹ்மாவைச் சொல்லுகையாலே
நாராயணனே பரம காரண பூதன் -சதுர் முகன் அல்லன் -என்றதாயிற்று
நாராயண அநுவாகமானது – ஸஹஸ்ர ஸீர்க்ஷம் தேவம் -6-11-1- என்று தொடங்கி –
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர பரம ஸ்வராட் -6-11-1-என்று முடிவாக ஸர்வ சாகைகளிலும் பரத்வ ப்ரதிபாதகமாக ப்ரஸித்தமான தேவ -சம்பு -அக்ஷர -ப்ரபு -பதி -சிவ -அச்யுத -ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு-ப்ரஜாபதி -ஸ்வயம் பூ -விஸ்வாத்ம -பரம் ப்ரஹ்ம -பர தத்வ -பரஞ்ஜ்யோதி -பரமாத்ம – ப்ரப்ருதிகளான ஸப்தங்களாலே நியாய நிரபேஷமாக நாராயண ஸாமாநாதி கரண்யத்தாலே கண்டோக்தி பண்ணி -பரத்வேந சங்க நீயரான பிரம்மா ஸிவர்களுக்கு தத் விபூதித் வத்தையும் சொல்லி நிகமித்தது
இப்படி ஸர்வ வேதாந்த நிகமன பூமியான இந்த அநுவாகம் உபாஸந விசேஷ விதி பரமாத்ரமும் அன்று – ப்ரக்ருதமான தஹர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பர மாத்ரமும் அன்று -ஸர்வ பர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பரம் என்று வேதாந்தத்திலே –(ப்ரஹ்ம ஸூத் -3-3-44–சாரீரிக மீமாம்ஸாயாம் லிங்க பூயஸ்த்வாதி கரணே அயமர்த்தஸ் ஸமர்த்தித )– நிர்ணயிக்கப் பட்டது-
நாராயண பரம் ப்ரஹ்ம –நாராயண பரோ ஜ்யோதி –தைத் -6-11-4-3- என்கிற இடத்தில் பஞ்சமீ ஸமாஸ சங்கையாலே (நாராயணனைக் காட்டிலும் என்ற சங்கை)நாராயணாத் பரமாய் இருபத்தொரு வஸ்து என்று சொல்லுகிற விடம் அயுக்தம்
1-தத்வம் நாராயண பர -இத்யாதிகளிலே வ்யஸ்தமான ப்ரயோகம் காண்கையாலும்
2-அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித —
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்தர –இத்யாதிகளிலே நாராயணனே ஸர்வ ஸ்மாத் பரன் -அல்லாதார் அவனுக்கு விபூதி பூதர் என்று தோற்றுகையாலும்
இவ் விடத்தில் ப்ரதமா விபக்தி -ஸூபாம் ஸூலுக் -பாணிநி ஸூ -7-11-39-இத்யாதி ஸூத்ரத்தாலே ( லுப்த்தை என்கிற விபாக நிர்தேசத்தாலே இந்த ஸம்சயத்தை நிவர்த்திப்பித்து ஸமாஸத்திலும் அப்படியாய்க் கிடக்கிறதாகக் கடவது ) லுப்த்தையாய்க் கிடக்கிறதாகக் கடவது-
மஹா உப நிஷத்திலும் -நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பாரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர -என்று வ்யக்தமாகக் கிடக்கிறது –
நிஷாத ஸ்தபதி ந்யாயத்தாலே பஞ்சமீ ஸமாஸத்தில் காட்டில் ஸாமாநாதி கரண்ய ஸமாஸம் யுக்தம்
(நிஷாத ஸ்த பதீதி –ஸ்த பதிர் நிஷாதஸ் ஸ்யாத் ஸப்த ஸாமர்த்யாத் –இதி ஸூத்ரம் பூர்வ மீமாம்ஸா ஷஷ்டாத்யாய கதம் -6-1-51–ஏதயா நிஷாத ஸ்த பதிம் யாஜயேத் -இதி ஸ்ருதி தஸ்ய விஷய தத்ர நிஷாதாநாம் ஸ்தபதிரிதி விக்ரஹேண -நிஷாத அபின்ன ஸ்தபதி ப்ரதீயதே வா-சம்பந்தி ஸ்தபதி ப்ரதீயதே வா -இதி ஸம்ஸய ஷஷ்டீ தத் புருஷாஸ்ரயணே ஸ்த பதேஸ் சமர்த்தத்வாத் -வித்வத்வாத் -அக்னி மத்வாச்ச யஜ்ஞாத் யநுஷ்டானம் யுஜ்யத இதி பூர்வ பக்ஷ -ஸித்தாந்தஸ்து -ததாஸதி ஸ்ருதி கத நிஷாத பதஸ்ய லக்ஷணா பத்த்யா கர்ம தாரய பக்ஷ ஏவ ஆஸ்ரயணீய -இதி தாத்ருஸ ந்யாயேத் யர்த்த )
(நிஷாத ஸ்த பதீதி -நிஷாதர்களுக்குத் தலைவன் என்றும் நிஷாதரனாகவும் தலைவனாகவும் என்றும்
ராஜ சேவகன் -ராஜா சேவகன் -ராஜாவினுடைய சேவகன்-இருவரும் வேறுபட்டவர் அல்லர் அபேத அந்வயம்-
தத் புருஷ ஸமாஸம் -ராஜா என்பதற்கு ராஜாவினுடையவனான -லக்ஷணையால் கொள்கிறோம்
நேர் பொருள் சொல்ல முடியாமல் லக்ஷணையால் சொல்கிறோம்)
ஆகையாலே இந்த அநுவாகத்தில் ஸர்வ வேதாந்தங்களிலும் 1-முமுஷுபாஸ்ய மாகவும் -2-முக்த ப்ராப்யமாகவும்- 3-ஜகத் காரணமாகவும்- 4-ஜகத் அந்தராத்மாவாகவும் ப்ரஸித்தமாய் -ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம–தத்வம் ஜ்யோதி-ஆதி ஸாமான்ய ஸப்தத்தாலே நிர் திஷ்டமான வஸ்துவை தத் ப்ரத்யபிஜ் ஞாபகமான அவ்வோ ஸப்தங்களாலே அநுவதித்து அந்த வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது என்றதாயிற்று –
ஜூஹ்வா ஜூஹோதி என்று ஹோம சாதனதயா விஹிதமான ஜூஹு வுக்கு(மரப் பாத்திரம் -யாக அங்கம்) -யஸ்ய பர்ண மயீ ஜூஹுர் பவதி (அப் பாத்திரம் இலையாகவே இருக்கும்)-என்று ஜூஹு ஸப்தத்தாலே அநு வதித்து பர்ண மயத்வ விதாநம் பண்ணினாப் போலே
இப்படி மைத்ராயணீய உப நிஷத்திலும்
தத் ஸவிதுர் வரேண்யம் த்ருவம் அசலம் அம்ருதம் விஷ்ணு ஸம்ஜ்ஞம் ஸர்வ ஆதாரம் தாம -என்று
த்ருவத்வ -அசலத்வ -அம்ருதத்வ -ஸர்வாதாரத்வ விசிஷ்டமாக ஸர்வ வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மம் விஷ்ணு ஸம்ஜ்ஞமாக விசேஷிக்கப் பட்டது
கட வல்ல் யாதி யிலும் -ஸர்வே வேதா யத் பதமாம நந்தி -என்று தொடங்கி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி -என்று சொல்லி
ஸோத் வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் –கட -1-3-9- என்று
ஸர்வ வேதாந்த ப்ரதிபாத்யமாய் -முக்த ப்ராப்யமான வஸ்து வைஷ்ணவமான பதம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டது
ஆகையால் நாராயணனே மோக்ஷ ப்ரதனும் -முக்த ப்ராப்யனும் -பர தத்வமும் என்று ஸர்வ வேதாந்த ஸித்தம் என்றதாயிற்று-
இனி ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலே -ததோ யதுத்தர தரம் –3-10-என்று தொடங்கி ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வம் சொல்லுகிறது என்கிற விடம் அநுப பன்னம்- உப க்ரமத்தோடு சேராமையாலே
உபக்ரமத்தில் -வேதாஹம் ஏதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனைச் சொல்லி –தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேதி நான்ய பந்தா வித்யதே அயநாய -என்று
தத் வேதநமே மோக்ஷ ஹேது -வேறு ஓன்று அன்று -என்கிற அர்த்தத்தினுடைய ப்ரதிஜ்ஜை பண்ணப்பட்டது
அநந்தரம் அத்தை உப பாதிக்கைக்காக -யஸ்மாத் பரம் நா பரமாஸ்தி கிஞ்சித் -யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்ஸித் -வ்ருஷ இவ ஸ்தப்தோதி விதிஷ்டத் யேக- தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -ஸ்வேதாஸ் –3-9- என்று
யாவன் ஒருவனில் காட்டில் வேறு பரமாய் இருபத்தொரு வஸ்துவில்லை – மஹத் தரமாய் இருபத்தொரு வஸ்து இல்லை
நிஸ் தரங்க அர்ணவோபமனான பரமபத நிலயனாலே இந்த விஸ்வம் வ்யாப்தமாய் இருக்கும் என்று கொண்டு-nஸர்வ ஸ்மாத் பரனான பரம புருஷனைச் சொல்லி
ததோ யதுத்தர தரம் என்று அவனில் காட்டில் உத்க்ருஷ்டமாய் இருபத்தொரு வஸ்து உண்டு என்கை உபக்ரமத்தோடு சேராது
ஸேயம் ஸ்ருதி பரமாத்ம பர தயா பார்க்கவஸ் ஸ்ம்ருத்யாதிஷு மஹர்ஷிபி ருப ப்ரும்ஹிதா -ததாஹி -யஸ்மாத் பர தரம் நாஸ்தி புருஷாத் பரமேஷ்டிந- ந ஜ்யா யோஸ்தி ந சாணீயா ஸ து நாராயணோ ஹரி -யேநேதா மகிலம் பூர்ணம் புருஷேண மஹவ்ஜசா -ஸ து நாராயணோ தேவ -இதீயம் வைதிகீ ஸ்ருதி இதி அத்ர வக்தவ்யம் ஸர்வமபி தத்வ ஸேகரடிப் பண்யாம் ப்ரபஞ்சிதம் தத்ர த்ரஷ்டவ்யமிதி உபக்ரம அநு குணமாக உப ஸம் ஹாரம் -என்று சொல்லுகை உபக்ரமாதி கரண ஸித்தம்
(ததோ யதுத்தர தரம்-ஆகையால் என்றும் அதை விட என்றும் -இரண்டு
அத்தைக் காட்டிலும் மிக உயர்ந்தது என்றும் அதனால் மிக உயர்ந்ததாக -என்றும் கொள்ளலாமே)
(நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் இனிதோ நீ அருளும் வைகுந்தம் என்னும் வான்-
கல்யாண குணங்களே அவனைக் காட்டிலும் அம்ருத மாயம்
குணங்கள் மூலம் உபாசனம் ஸ்வரூப உபாசனத்தை விட உயர்ந்தது என்றதாயிற்று)
(உபக்ரமாதி கரணமிதி -பூர்வ மீமாம்ஸா த்ருதீயாத்யாய ப்ரதமாதி கரணம் -3-3-1-கைஸ்சித் வேத தர்மதாதி கரணம் இத்யபி பட்யதே–தததிகரணே ஹி -ப்ரஜாபதிர் வா இதமக்ர ஆஸீத் -ஸ தபோதப்யதா–தஸ்மாத் தபஸ் தேபா நாத் த்ரயோ வேதா அஜாயந்த -அக்நிர் வாயுர் ஆதித்யஸ்தே தபோதப்யந்த -தேப் யஸ்தேபா நேபியஸ் த்ரயோ வேதா (தேவா பாட பேதம் சிறக்கும்)அஜா எந்த அக்னே ருக் வேதோ -வாயோர் யஜுர் வேத- ஆதித்யாத் சாம வேத இத் யுபக்ரம்ய ஸ்ரூயதே –தஸ்மா துச்சை ருசா க்ரியதே உபாம்ஸு யஜுஷா உச்சைஸ் ஸாம்நா இதி அத்ர ஸம்ஸய –(அநுபூத விரோதம் –பொருந்தாதது இன்னும் உருவாக வில்லை -உப ஸம்ஹாரத்தில் விரோதம் வந்தால் -உபக்ரமத்துக்குத் தக்கபடி மேல் கொண்டு அர்த்த சொல்லலாம்
வேறே சாகைகளுக்கு விரோதம் வாராமல் இருந்தால் அப்படிக் கொள்ளலாம்
இந்த்ரன் மாம் உபாஸ்வ உபக்ரமத்தில்
மேல் பர ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லி அவனை உபாஸிக்கச் சொல்லும் பொழுது
உபக்ரமத்தில் மாம் -என்னை அந்தராத்மாவாகக் கொண்ட நாராயணன் அர்த்தம் கொள்ளுகிறோம் -அன்றோ
இங்கு ருக்கை சொல்லும் போது உச்ச சுவரத்தாலும் யஜுஸ் முனு முனு குரலிலும் சாமத்தை மீண்டும் உச்ச ஸ்வரம்
அபிக்கு வேத சப்தம் இல்லாமல் –
ருக் யஜுர் சாம மந்த்ரம் என்று கொள்ள வேண்டுமா
ருக் வேதத்தை -யஜுர்வ்தாத்தை சாம வேதத்தைச் சொல்ல வேண்டுமே சங்கை
ருக் வேதத்தில் மூன்று மந்திரங்களும் உண்டே -)தத்ர கிம் உச்சைஷ்ட் வாதய ருகாதி தர்மா உத வேத தர்மா இதி -உபக்ரமே வேத ஸப்த ஸ்ரவணாத்-உப ஸம்ஹாரே ச ருகாதி ஸப்த ஸ்ரவணாத்-வேத சப்தஸ்ய ஹி மந்த்ர ப்ராஹ்மண சமுதாயத்வா வச்சிந்நே ஸக்தி (வேதம் ரூக்கின் சமுதாயத்தைச் சொல்லும்)-ந து ஏகை கஸ்மின் மந்த்ர வாக்யே- ப்ராஹ்மண வாக்யே வா -ததா ஸதி மந்த்ராதி ரூப ஏக த்வி -த்ரி வாக்ய -அத்யயநேபி – வேதாநதீத்ய வேதவ் வா வேதம் வாபி யதாக்ரமம் -இதி ஸாஸ்த்ராநுஷ்டாந பிரசங்காத் –பாத வ்யவஸ்தாவத் மந்த்ரத்வா வச்சிந்நே ருக் சப்தஸ்ய மந்த்ரத்வ ஸமாநாதி கரண கீதித்வா வச்சிந்நே ஸாம சப்தஸ்ய ருக் ஸாம பின்ன மந்த்ரத்வாவச்சிந்நே ச யஜுஸ் சப்தஸ்ய ஸக்தி –-(ருக் ஸப்தம் -பாதம் ஒரே மாதிரி எழுத்து -கட்டளை இருக்கும்
ஸாம சப்தம் -யஜுர் ஸப்தம் -இதுக்கு இந்த கட்டளைகள் இருக்காது)தேஷாம் ம்ருக் யத்ரார்த்த வஸேந பாத வ்யவஸ்தா –கீதுஷு ஸாமாக்யா ஸேஷி யஜுஸ் ஸப்த –இத்யாதி ஸூத்ர த்ரயேண ததா வ்யவஸ்தாபநாத் -அத்ர உபக்ரம உப ஸம்ஹார யோர் விரோதாத் த்வயோ ரவிரோதே வர்ணநீயே உப ஸம்ஹாரஸ்ய விதித்வேன் ப்ரபலத்வாத் தத் அநு ரோதேந உபக்ரமஸ்தவேத பதஸ்யாபி ததேகதே ஸ ருகாதி மந்த்ர பரத்வம் இதி பூர்வ பக்ஷே –உபக்ரமஸ் யாநுத் பூத விரோதித்வேந ப்ரபலத்வாத் உபக்ரமகத வேத பதாநுஸாரேந உப சம்ஹாரஸ் ருகாதி பதா நாமேவ ருக் வேதாதவ் லக்ஷணேதி ஸித்தாந்திதம் ஏதத் அதி கரணார்த்தம் ஸங்க்ரஹேண பிரதிபாதயாத்தி
எங்கனே என்னில்(லக்ஷனையால் ருக் மந்த்ரம் சொல்லாமல் வேதத்தைச் சொல்லுகிறது என்றே கொள்ள வேண்டு இது ஸித்தாந்தம்)
உபக்ரமாதி கரணத்தில் உப ஸம்ஹாரத்தில் காட்டில் உபக்ரமம் ப்ரபலமாகச் சொல்லப்பட்டது இறே -எங்கனே என்னில்
உச்சை ருசா க்ரியதே -உச்சைஸ் ஸாம்நா உபாம்ஸூ யஜுஷா -என்று
உச்சைஷ்ட் வாதியானது ருகாதியான மந்த்ர மாத்ரத்துக்குத் தர்மமோ -தத் தன் மந்த்ர பிராயமான வேத தர்மமோ என்று சம்சயித்து- மந்திரத்துக்கு வாசகமான ருகாதி ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே மந்த்ர தர்மத்வத்தைச் சொல்லி -உபக்ரம வேத ஸப்தம் -வேதயதீதி வேத -என்கிற வ்யுத்பத்தியால் அநுஷ்டே யார்த்த ப்ரகாசகமாய்க் கொண்டு மந்த்ர பரமாகக் கடவது –
வேத ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே வேத தர்மமாகச் சொல்லில் ருகாதி பதங்களுக்கு லாஷணிகத்வம் ப்ரசங்கிக்கும்
ஆகையாலே–உச்சைஷ்ட்வாதி மந்த்ர மாத்ர தர்மம் என்று பூர்வ பக்ஷமாக -மந்த்ர ப்ராஹ்மண ஸமுதாய ரூபமான வேத தர்மத்வமே உச்சைஷ்ட்வாதிகளுக்கு உபக்ரம ஸ்வாரஸ் யத்தாலே யுக்தம் -எங்கனே என்னில்
உபக்ரமமானது அநுத் பூத விரோதியாகையாலே சரம பாவியான உப சம்ஹாரத்தில் காட்டில் பலவான் -யாதொருபடி அக்னியின் அனுஷ்ணத்வ ப்ரதிபாதகமான அநு மானத்தில் காட்டில் அக்னியினுடைய ஒவ்ஷ்ண்ய க்ராஹியான ப்ரத்யக்ஷம் பலவத்து -யாதொரு படி அநுத் பூத விரோதியான ஸ்ருத் யாதிகளில் பூர்வ பூர்வங்கள் உத்தர உத்தரங்களில் காட்டில் பிரபலங்கள்
(ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தாந ஸமாக்யாநாம் சமவாயே பாரதவ்ர் பல்யம் அர்த்த விப்ரகர்ஷாத் -இதி பூர்வ மீமாம்ஸா ஸூத்ரே -3-3-14- அயமர்த்தோ த்ரஷ்டவ்ய)
அப்படியே பலவானான உபக்ரமத்தினுடைய ஸ்வாரஸ்ய அநு குணமாக துர் பலமான உப ஸம்ஹாரத்தினுடைய பாக்தத்வம் யுக்தம் -என்று கொண்டு உச்சைஷ்ட் வாதிகள் வேத தர்மங்கள் என்று ஸித்தாந்திக்கப் பட்டது
ஆகையால் உபக்ரம விரோதம் உண்டாகையாலே
ததோ யதுத் தர தரம் -என்கிற உப ஸம்ஹார வாக்யமானது உபக்ரம கதனான பரம புருஷனை ஒழிய வஸ்த்வந்தரத்தை ப்ரதிபாதிக்க மாட்டாது
கோபலீ வர்த்த ந்யாயத்தாலே ஸாமான்ய ஸப்தத்துக்கு விசேஷ ஸந்நிதியில் அர்த்த ஸங்கோசம் உண்டாகையாலே (கோ ஆநய பலி ஆநய -பெண் மாடு காளை மாவு இரண்டுக்கும் கோ -பின் சொல்லியதால் பெண் மாட்டையே குறிக்கும் -அர்த்த சங்கோசம் உளது கோ -இல்லாதது பலீ சப்தம்)இவ் விடத்தில்
ததோ யதுத் தர தரம் —தஸ்மாத் ஸர்வ கத தஸ் ஸிவ –ஸ்வேதாஸ் -3-11- என்கிற விசேஷ ஸந்நிதியில்
நான்ய பந்தா வித்யதே அயனாய யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -ஸ்வேதாஸ் -3-9- என்று ஸர்வ விஷயமாகத் தோற்றுகிற ஸாமான்யத்துக்கு- அர்த்த ஸங்கோசம் பிறந்து -பரம புருஷனைக் காட்டில் வ்யதிரிக்தனைச் சொன்னாலோ என்னில்
அது கூடாது –
பதாந்தரத்தினுடைய வையர்த்த பரிஹார அர்த்தமாக பதாந்தரத்துக்கு அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டா
ததோ யதுத் தர தரம் என்கிறதுக்கு வையர்த்ய ப்ரசங்கமும் இல்லை -கீழ் ப்ரதிஜ்ஞாதமான அர்த்தத்தை தத என்று ஸ ஹேதுகமாக நிகமிக்கையாலே(ஆகையால் -ஹேதுக்களைச் சொல்லி கல்யாண குணங்களையே உபாஸிக்கச் சொல்லிற்று என்று சித்தாந்தம்)
இன்னமும் -ஸர்வ கத ஸிவ என்று சொல்லி
மஹாந் ப்ரபுர்வை புருஷஸ் ஸத்வஸ்யைக்ஷ ப்ரவர்த்தக -ஸ்வே -3-12- என்று மோக்ஷ உப யோகியான ஸத்வத்துக்கு ப்ரவர்த்தகமான மஹா புருஷனை ப்ரத்யபிஜ்ஜை பண்ணி வைக்கிறது(ஏஷ சாராய சப்தம் முன்பு சொன்ன சிவ -சப்தத்தைக் குறிக்கும்
அது -என்று சொல்லி ஒன்றைக் காட்டி-அவரோ நீர் –அவர் ஸ்ம்ருதி
நீர் ப்ரத்யக்ஷம்
அவரோ நீர் ப்ரத்யபிஜ்ஜை)
இன்னமும் -அதயோ ஹ வை கலு வாஸ்ய ராஜ ஸாம்ஸ்ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ப்ரஹ்மா -அதயோ ஹ வை கலு வாஸ்ய ஸாத்விகாம்ஸஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் விஷ்ணு -அதயோ ஹ வை கலு வாஸ்ய தாமஸ ஆம்ஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ருத்ர -4 வது ப்ரபாடக கண்டம் –என்று மைத்ராயணீய உப நிஷத்திலும்
ஸத்வ ப்ரவர்த்தகம் விஷ்ணும் – ஸர்வ பூத குஹாஸயம் என்று ஸ்ம்ருதியிலும் விஷ்ணுவுக்கு ஸத்வ ப்ரவர்த்தகத்வம் ஓதப்படா நின்றது
இவ் விடத்தில்
ஸர்வாநந ஸிரோ க்ரீவஸ் -ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச -பகவான் தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ -ஸ்வே -3-11 என்கிற சப்தங்கள்
புருஷ ஸூக்த நாராயண அநு வாக்கங்களில் பரம புருஷனுக்கு அசாதாரணமான- ஸஹஸ்ர ஸீர்ஷத்வ –ஸர்வ அந்தராத்மத்வ – ஸர்வ வ்யாபித்வ -ஸாஸ்வத ஸூத்தி மாங்கள்யாதி குண யோகங்களை ப்ரத்யபிஜ்ஜை பண்ணா நின்றது
ஆகையால் இந்த ப்ரகரணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப் படுகிறான் -என்றதாயிற்று-(அந்தராத்மா =உருவத்துடன் -அந்தர்யாமீ -நியமிப்பவன்-ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -நாராராயணனே)
இன்னமும் -சாந்தோக்ய தஹர வித்யையிலே –
அத யதித மஸ்மிந் ப்ரஹ்ம புரே –8-1-1- இத்யாதியாலே நாம ரூப நிர்வோட் ருத்வ விசேஷிதமான ஆகாஸ ஸப்தத்தாலே பரம புருஷனைச் சொல்லி
தஸ்மிந் யதந்த –8-1-2- என்று
தத் அந்தர் வர்த்தியானதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லப்படுகிறது என்றதுவும்
அஸ்ரோத்ரியனுடைய ஆசா மாத்ர விலஸிதம் –(ஸாஸ்த்ரம் தெரியாதவன் ஆசைக்காகப் பேசுவது போல்)
அந்த ஸ்ருதி தானே இத்தை ப்ரஸந பூர்வகமாக பரிஹரிக்கையாலே
தஹரோஸ்மிந் நந்தர ஆகாஸஸ் -தஸ்மிந் யத் அந்தஸ் -ததன்வேஷ்டவ்யம் -தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று சொல்லி
கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ் டவ்யம் -யத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-2-என்று சோத்யம் பண்ணி
தத் பரிஜிஹீர் ஷையாலே
யாவான்வாய மாகாஸஸ் தாவாநேஷோந்தர் ஹ்ருதய ஆகாஸ உபே அஸ்மின் த்யாவா ப்ருதிவீ அந்தரேவ ஸமாஹிதே -உபாவக்நிஸ் ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம ஸாவுபவ் -வித்யுந் நக்ஷத்ராணி -யச்சாந்யே ஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் ததஸ்மிந் ஸமாஹிதம்—–நாஸ்ய ஜரயை தஜ் ஜீர்யதி -ந வதே நாஸ்ய-ஹந்யதே ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் -சாந்தோக் -8–1-3-5- என்று கொண்டு ப்ராக்ருதமான தஹர ஆகாஸத்துக்கு அதி மஹத்த்வ ஸர்வ ஆதாரதவாதியைச் சொல்லி
அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா -8-1-5- என்று
தத் அந்தர் வர்த்திகளாய்க் கொண்டு உபாஸ்யங்களாகச் சொல்லப்பட்டவை காமங்கள் (காமங்கள் -கல்யாண குணங்கள்)என்று பரிக்ரஹித்து
மேல் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விஸோகோ விஜிகத்ஸோ அபிபாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப –8-1-5- என்று
தகர ஆகாஸ நிர் திஷ்ட பரமாத்மா -தத் அந்தர் வர்த்தியாய் இருக்கிறது
காம் யந்த இதி காமா -(விரும்பப் படுபவையே குணங்கள் காமங்கள்)என்று கல்யாண குணங்களாய்
அபஹத பாப்மத்வாதியான குண அஷ்டகம் என்று சொல்லி
ய இஹாத்மா நமநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ஸ்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –8-1-6–என்று
ஏதத் குண அஷ்டக விஸிஷ்டனான பரமாத்மாவினுடைய உபாஸனமும்- தத் பலமும் சொல்லப்பட்டது
இது வாக்ய காரராலேயும்
தஸ்மிந் யத் அந்தரிதி காம வ்யபதேஸ -என்று சொல்லப்படுகையாலே
தஸ்மிந் யத் அந்த -என்றது
கல்யாண குண ஜாதம் என்றதாயிற்று
தைத்ரீயத்திலே
தஹ்ரம் விபாப்மம் -6-10-23- இத்யாதியாலே
பரம புருஷாந்தர வர்த்தியாய் இருபதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லி
அதினுடைய விசேஷ ஜிஜ்ஞாஸை உண்டாய் உள்ள வளவில்
ய பரஸ் ஸ மஹேஸ்வர -6-10–24- என்று
விசேஷ நிர்ணயம் பண்ணப்படுகிறது என்றதும் இத்தாலே ப்ரத்யுக்தம்
(ஸர்வ வேதாந்த படித தஹர வித்யாயா ஐக்யம் சாரீரக மீமாம்ஸா யாம்
காமாதீ தரத்ர தத்ர சாயதநாதிப்ய -3-3-38- இத்யஸ்மிந் நதி கரணே ஸமர்த்திதம் –
ததபி ப்ரேத்ய –இத்தாலே ப்ரத்யுக்தம் இத்யுக்தம் )
யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தா -வேதாந்ததே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய- ய பரஸ்ச மஹேஸ்வர -6-10-24 -என்றது
வேதத்துக்கு முதலாக யாதொரு ப்ரணவ ரூப ஸ்வரூபமானது சொல்லப்பட்டது -அது வேதாந்தத்திலும் உத் கீத ப்ரகரணங்களிலே சொல்லப்பட்டது
அந்த ஸ்வரத்தினுடைய முதலில் எல்லா வாசகங்களுக்கும் ப்ரக்ருதி பூதமான ஆகாரத்துக்கு வாஸ்யனானவன் யாவன் ஒருவன் அவன் மஹேஸ்வரன்
அகாரோ விஷ்ணு வாசக –
அ இதி ப்ரஹ்ம -ருக் வேத ஆர
அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதம அபிதாநம்
அக்ஷராணாம் அகாரோஸ்மி -கீதா -10-என்று
அகார வாஸ்யனான நாராயணனே மஹேஸ்வர ஸப்த வாஸ்யன் என்றதாயிற்று
(அஸ்யா ஸ்ருதே பாத்மோத்தரே-அ -226-ஸ்ரீமன் நாராயண பரத்வேந உப ப்ரும்ஹிதத்வாத் ததபி ப்ரேத்ய–(அகார வாஸ்யனான –என்றதாயிற்று –இத்யநுக்ருஹீதம்)
ததாஹி பார்வதீம் ப்ரதி ஸர்வஜ்ஜோ ருத்ர –
யோ வேதாதவ் —ஸ மஹேஸ்வர -யோஸா வகார வாஸ்யோவை விஷ்ணுர் நாராயணோ ஹரி -ஸ ஏவ புருஷோ நித்ய பரமாத்மா மஹேஸ்வர -தஸ்யாம்ஸ பூதம் ஐஸ்வர்யம் யஸ்மின் கஸ்மின் ஹி வர்த்ததே -தஸ்மிந் ஈஸ்வர ஸப்தாதி ப்ரோச்யதே முநிபிஸ் ததா–நிருபாதீஸ் வரத்வம் து வாஸூ தேவ ப்ரதிஷ்டிதம் -ஆத்மேஸ்வர இதி ப்ரோக்தோ வேதவாதைஸ் ஸநாதநை –தஸ்மான் மஹேஸ்வரத்வம் து வாஸூ தேவே ப்ரதிஷ்டிதம்-அசவ் த்ரிபாத் விபூதேஸ் து லீலாயா அபி சேஸ்வர விபூதி த்வயம் ஐஸ்வர்யம்- தஸ்யைவ சகலாத்மந ஸ்ரீ பூ நீளா பதிர்யோசவ் ஈஸ்வரஸ் ஸ உதாஹ்ருத–தஸ்மான் மஹேஸ்வரத் வந்து வாஸூதேவே ப்ரதிஷ்டிதம்-இதி )
மஹேஸ்வர ஸப்தமும் அவயவ வ்யுத்பத்தியாலே ராஜாதிகளிலும் ப்ரஸித்தம் என்று முன்பே சொன்னோம்
அதர்வ சிகையிலே
காரணம் து த்யேய –இத்யாதியாலே
பரம புருஷ அந்தர் வர்த்தியாய் -சம்பு ஸிவாதி நாமகனான ருத்ரனுக்கு உபாஸ்யத்வம் தோன்றுகிறது என்றதுவும் யுக்த ரீதியாலே நிரஸ்தம்
இந்த ஆகாஸ ஸப்தம் ஹ்ருதய ஆகாஸ வாஸி யாகையாலே பரம புருஷ பரமாக மாட்டாமையாலும் -தத் அந்தர் வர்த்திக்கு காரணத்வாதியான பகவத் அஸாதாரண குணங்களைக் கொள்ளுகையாலும்-
சம்பு ஸிவாதி ஸப்தங்களுக்கு ருத்ரனை ஒழியவும் லோக வேதங்களிலே ப்ரஸித்தி உண்டாகையாலும்
விஸ்வாக்ஷம் விஸ்வ ஸம்புவம் –ஸாஸ்வதம் சிவம் அச் யுதம் –தைத்-6-11-1-3 என்று
நாராயணன் பக்கலிலும் பிரயோகம் காண்கையாலும் இவ் விடத்தில் நாராயணனே த்யேயன் என்றதாயிற்று
இன்னமும்
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –அதர்வ ஸிகா -என்கிற இடமும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -ஸ்வே -6-18-
ஸ ப்ரஜாபதிரேக புஷ்கர பர்ணே சம பவத் – ந்ருஸிம்ஹதாபபூ 1-1
யன் நாபி பத்மாத் அபவன் மஹாத்மா ப்ரஜாபதி
தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ அஜாயதே -மஹா உப -1-2-
யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேக்ஷ ந்ரும்ண
அதவா இதம் தர்ஹி ப்ரஜாபதவ் ஹர ஆஸீத்
த்ர்யக்ஷ ஸூல பாணி புருஷ அஜாயதே -மஹா உப -1-3-
விரூபாஷாய -ப்ரஹ்மண புத்ராய- ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
தத் விஸ்ருஷ்டஸ் -ஸ புருஷ லோகே ப்ரஹமேதி கீர்த்யதே –தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதாமஹ -மனு-1-11-9-
ருத்ர சர்க்கம் ப்ரவஹ்யாமி -ஸ்ரீ விஷ்ணு பு -1-8-2-
ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் ப்ரஸாத க்ரோதஜவ் ஹரே –ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகவ் -மோக்ஷ பர் -389-18
க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம் –ஆவான் தவாங்கே ஸம் பூதவ் தஸ்மாத் கேஸவ நாமவான் -ஹரி வம்சே –131-48
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத் அந்தர் வ்யவஸ்திதா -ப்ராணிந கர்ம ஜெனித ஸம்ஸார வச வர்த்தி ந -வி த 104-23-இத்யாதிகளாலே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு கர்ம நிமித்த ஸ்ருஜ்யத்வ லக்ஷணையான உத்பத்தி ப்ரஸித்தியாலும்
ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந -யஜுர் தாய் ப்ரா -3-6–1-3
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -முண்டக -3
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-84
ஸம்பவாமி யுகே யுகே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -ஏவம் யோ வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -4-என்று
ஜகத் உபகார அர்த்தமாக பரம புருஷனுக்கு இச்சா ஜென்மம் உண்டாகையாலும்(பல பிறப்பால் ஒளி வரும் ஜென்மம் இவனுக்கே)
ஸாஷான் நாராயணோ தேவ ஸர்வ பூதேஸ்வரேஸ்வர –ரஷார்த்தம் ஸர்வ லோகாநாம் விஷ்ணுத்வம் உப ஜிக்மிவான் -உத்தர ராமாயணே -என்கையாலும்
உபேந்திர ராம கிருஷ்ணாத் யவதாரங்கள் போலே ப்ரஹ்ம ருத்ர மத்ய வர்த்தியான விஷ்ணுத்வம் உண்டாகையாலும் யுக்தம் –
இவ் விடத்தில் த்யேயத்துக்கு விரோதமான வாக்யத்திலே இது சொன்னது -த்யேயத்வ உப யோகி ஸுலப்ய ப்ரதர்சந அர்த்தமாகையாலே
இன்னமும்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத்ரி -ஆ -1-1- என்கிற இடத்தில்
பரம வ்யோம ஸப்தம் பரம பதத்தைக் காட்டுகிறதன்று என்கிற இடம் அசாரம்(பரமபதத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்ட நாதனை விட-தனது ஹிருதய வ்யோமம் -அடியார் உள்ளமே அவனுக்கு பரம வ்யோமம் –இங்கேயே இருந்து அனுபவித்து ஆனந்தம் -ஆனால் இது அசாரம் -1000 தூண்கள் உள்ள ஆயிரம் கால் மண்டபத்துக்குள் இத்யாதிகள்-)
ராஜாநாவநபி த்ருஹவ் த்ருவே ஸதஸ் யுத்தமே ஸஹஸ்ரஸ் தூணே ஆஸாதே -என்றும்
சாமான்ய அபி யுக்தே தூரே -அந்தே த்ருவே பதே தஸ்தது ஜாக ரூகே -என்றும்
ததஷரே பரமே வ்யோமன் -தைத் -6-1-2-
யோ அஸ்யாத் யக்ஷ பரமே வ்யோமன் -யஜுர் அஷ் -2-8-2-
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் தைத் -6-1-1-
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ் கலம் – தச் சுக்லம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்ம வைத்தோ விது -முண்டக -32-9–என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந –ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை – பாரதம் அர -163-19-என்றும்
ஏகாந்தி நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகி நோ ஹி யே -தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் -யத்வை பஸ்யந்தி ஸூரய –ஸ்ரீ விஷ்ணு பு -1-6-39-என்றும்
அண்ட கோஸாத் ஸாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்தி தோஹம் பரமே வ்யோம்நீ அப்ராக்ருத சரீரவான் -என்றும்
இப்படி பஹு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண சத ப்ரமாணத்தாலே ஸித்த பர லோகத்தைச் சொல்லுகிறதாகையாலே-
இன்னமும் அதர்வ சிரஸ்ஸிலே பிரதம கண்டத்தில் ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தை கோஷித்ததும்
ஸோந்தரா தந்தரம் ப்ராவிஸத் –அதர்வ -1–என்கிற வாக்யத்தாலே
பரமாத்மா அநு ப்ரவேசத்தாலே என்றதாயிற்று -எங்கனே என்னில்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் ப்ரதர்தந வித்யையிலே –
ப்ரதர்த நோ ஹ வை தைவோதா ஸிரிந்த்ரஸ்ய ப்ரியம் தாமோபஜகாம -3-1- என்று கொண்டு
த்வமேவ மே வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே –3-1- என்று
மோக்ஷ உபாயத்தை ப்ரஸ்னம் பண்ணின ப்ரதர்சனனுக்கு
மாமேவ விஜாநீஹி –ப்ராணோஸ்மி- ப்ரஞ்ஞாத்மா- தம் மாம் ஆயுர் அம்ருதமித் யுபாஸ்வ –3-1-2- என்று
இந்த்ரன் தன் அந்தராத்மாவினுடைய உபாஸநம் மோக்ஷ சாதனம் என்று உபதேஸித்தான்-
இன்னமும் -ஸ்ருத்யந்தரத்திலே
தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாம தேவ ப்ரதி பேதே –அஹம் மநு ரபவம் -ஸூர்யஸ் ச
-அஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர -இத்யாதியாலே
ப்ரஹ்மத்துக்கு ஸர்வ அந்தராத்மத்தையையும்-ஸர்வ ஸப்தங்களுக்கும் தத் பர்யவஸாயி த்வத்தையும் சொல்லி
யஸ் யாத்மா ஸரீரம் –யஸ்ய ப்ருதிவீ சரீரம்–ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும்
ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –என்று தொடங்கி
அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூப வ்யாகரவாணி -என்றும்
ஸோகாமயத பஹுஸ்யாம் –என்று தொடங்கி தத் அநு ப்ரவஸ்ய ஸச் ச த்யச்சா பவத் –ப்ரும்ஹ உப -3-4-10- இத்யாதி
ஸ்ருதி ஸித்தமான ஸமாதியாலே ஸாஷாத் கரித்த வாம தேவன் -அஹம் -ஸப்தத்தாலே தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவைச் சொல்லி
தத் ஸாமா நாதி கரண்யத்தாலே மனுஷ்யாதிகளையும் வ்யபதேஸித்தான் இறே(ஐக்யம் -அனைவருக்குள்ளும் ப்ரஹ்மமே சொல்வதில் அல் வழக்கு ஒன்றும் இல்லை -ஏக -நாராயணன் -ஒருவன்
அங்கு சென்று அவனுடன் ஒன்றும் என்று சொல்லும் அல்லலை ஒழித்தான் ராமானுஜன்)
ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானும்
ஸர்வ கத்வாத் -அநந்தஸ்ய ஸ ஏவாஹ மவஸ்தி த –மத்தஸ் ஸர்வம் அஹம் சர்வம் மயி ஸர்வம் ஸநாதநே –ஸ்ரீ விஷ்ணு பு -1-19–85-என்றான் இறே
இது எல்லாம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா து உபதேஸோ வாம தேவ வத் -ப்ரஹ்ம ஸூ -1-1-30- என்று ஸூத்ர காரராலே நிர்ணயிக்கப் பட்டது இறே
(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்)
ஸ்ரீ மஹா பாரதத்திலும்
விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவ்ஸ்ய அமித தேஜஸ –தஸ்மாத் தநுர் ஜ்யா ஸம் ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர -என்றும்
பின்னும் அந்த மஹா பாரதத்திலே ப்ரஹ்ம ருத்ர ஸம்வாதத்திலே
த்வாந்தராத்மா -மம ச யே ச அந்யே தேஹி ஸம்ஜ்ஞக –ஸர்வேஷாம் ஸாஷி பூதோசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் – மோக்ஷ -352-4 என்றும் சொல்லுகிற ப்ரமாணங்களாலே விஷ்ணுவுக்கு ருத்ராந்தராத்மத்வம் ஸூ ப்ரஸித்தம்
இனி த்விதீய கண்டத்தில்
யோவை ருத்ரஸ் ஸ பகவான் -இத்யாதி வசனமும் ருத்ர வாக்ய அநு வாதமாகையாலும்
தத்ர பூஜ்ய பதார்த்த உக்தி பரிபாஷா ஸமன்வித –சப்தோயம் நோபசாரேண ஹ்யன்யத்ர ஹ்யுப சாரத –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-77 -என்று
பரம புருஷ அசாதாரணமான பகவச் ஸப்தத்தாலும் ருத்ர ஐஸ்வர்ய பரம் அன்று என்று ஸித்தம்-
மூன்று நாலாம் கண்டங்களிலும்
ஸ ஓங்காராய ஓங்காரஸ் ஸ ப்ரணவோ யஸ் ப்ரணவ -என்று
ஓங்காராதி மஹா தேவ அந்தமான் ப்ரணவ நாம நிர்தேச தந் நிர்வசன பரதையாலும்
இவ் வாக்கியத்திலும் பகவத் ஸப்த ஸாமாநாதி கரண்யத்தாலும்
பகவத் பரத்வமே யுக்தம்(பிரகர்ஷமாக இத்தால் ஸ்துதிக்கப்படுகிறவன் அகார வாஸ்யனான -ஸ்த்வயம் ஸ்துதி இரண்டுமே பிரணவம்)
பஞ்சம கண்டத்தில் ருத்ர உபாஸநம் மோக்ஷ சாதந தயா ஸித்தம் என்றது யுக்த ரீதியாலே
மோக்ஷம் இச்சேத் ஜநார்த்தநாத் – மாத்ஸ்யபு -67-41 என்ற பகவத் உபா ஸநம் என்று அவஸேயம்(நிச்சயிக்கப் பட வேண்டும் -மார்கண்டேனயனும் கரியே
ஆரோக்யம் பாஸ்கரன் ஞானம் ருத்ரன் –இங்கு ருத்ரன் -நாராயண உபாசனமே)
சாந்தோக்ய மது வித்யையிலே
அசவ் வா ஆதிதியோ தேவ மது –3-1-1- இத்யாதியாலே
வஸ்வாதி தேவதைகளுக்கு போக்யனான ஆதித்யனுடைய உபாஸநம் மோக்ஷ சாதநம் என்று விதித்தது -அந்த ஆதித்யனுக்கு அந்தர் யாமியான பரமாத்ம உபாஸந பரம் என்று
மத்வாதிஷ்வ ஸம்பவாத் –ப்ரஹ்ம ஸூத் -1-3-31 என்கிற அதிகரணத்திலே யாதொருபடி நிர்ணீதம் ஆயிற்று -இங்கும் அப்படியேயாகக் குறையில்லை(வஸூ ருத்ர ஆதித்யர்களைக் குறித்து உபாஸனம் -அவர்களுக்கும் மது உபாஸனம் விதிக்கிறதே-அந்தராத்மா உபாசனமே)
இன்னமும் இவ் விடத்திலே உபாஸந அங்கமாகச் சொன்ன பஸ்ம ஸ்பர்ச விதியும் ஸர்வ உபாஸந விஷயமன்று –பாஸூபத விரத அங்கம் என்று சொன்னபடி
சவ்த்ராமணீ சேஷமான ஸூ ராக்ரஹத்துக்கு ஸர்வ க்ரது விஷயத்வம் இல்லாதப் போலே-(ஸூத்ராமா -இந்திரனுக்கு இந்தப்பெயர் -மூன்று கும்ப கள்ளும் மூன்று கும்ப பாலும் -கண்டு வருவது அங்கு அங்கம்)
அணோர் அணீயான் -தைத்து -6- என்கிற அநு வாகத்தில்
யோ வை தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி -ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத ஜாயாமாநம் ஸ நோ தேவ ஸூபயா ஸ்ம்ருத்யோ ஸம்யு நக்து -என்றது
ஈஸ்வராத் ஞானம் இச்சேத் -என்கையாலே
பகவத் உபாஸந உப யோகியான உபகாரகத்வம் சொல்லிற்று
மஹா பாரதத்தில் உமா மஹேஸ்வர ஸம்வாதத்திலே
உபாஸ்யோயம் ஸதா விப்ரா உபாயோஸ்மின் ஹரேஸ் ஸ்ம்ருதவ் -ஹரி வம்ச -133-18- என்கையாலே
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாயமாநம் -தைத் -6-என்றதுவும்
ருஷி யாகையாலே யோக ப்ரபாவத்தாலே ஹிரண்ய கர்ப்பனுடைய ஜந்ம -தர்சித்வம் – ஞாந கோசரம் அல்லது -சஷுர் கோசரம் அன்று -ஹிரண்ய கர்ப்பாத் ப்ராகவ ஸ்திதி இவனுக்கு இல்லை இறே-
(தந்தை பிறப்பைப் பார்த்தவன் –மோக்ஷ பிரதன் நல்ல எண்ணம் -ஞானம் வளர்ப்பவன் -ருத்ரன் -பஸ்யதே-மனக்கண்ணால் தியானத்தால் பார்த்தவன்
ஸ்ரீ ருத்ராதிகளும் ருத்ர ஐஸ்வர்ய பரமன்று – ஜகத் காரணத்வ -மோக்ஷ ப்ரதத்வாதிகளான ஸர்வேஸ்வரனுடைய அசாதாரண தர்மத்தாலும் -அக்னி சயனத்திலே அர்த்தாந்தர பரமாக விநியோகிக்கையாலும் -பூர்வ யுக்தமான அநந்ய பரங்களான அநேக ஸ்ருதி விரோதம் வருகையாலும்
இத்தால் பஞ்ச ப்ரஹ்மாதி மந்த்ரங்களுக்கும் ருத்ர வைபவ பரத்வம் இல்லை
(தண்டிலம் ஹோம குண்டம் -வேறே வேறே வடிவில் வைப்பார்கள்
செங்கற்களைக் கொண்டு கட்டும் பொழுது ருத்ரம் வாசிக்கச் சொல்லி
யாகம் சபலமாக வேறே வித அர்த்தங்கள் சொல்லுவார்கள்)
(பஞ்ச ப்ரஹ்மாக்ய மந்த்ரமாவது
சத்யோ ஜாதம் -இத்யாரப்ய-ஸதா ஸிவோம் -இத்யந்தமான ஸ்ருதிகள்
நாராயண அநுவாக ஸமாக்ய அந்தர் கதத்வத்தாலே நாராயண பரத்வம் இதுக்கு ஸித்தம் என்று விஸ்தரேண தத்வ சேகர அடிப்பணியில் -குறிப்பில்–சொல்லப்பட்டது
ஸ்காந்த புராணத்தில் நிர்வாண கண்டத்தில் ராம கீதையில் இந்த ஸ்ருதியை பரமாத்ம விஷய மாகவும் உப ப்ரும்ஹித் தார்கள்
ப்ரவ்ருத்திஸ் ச ப்ரதிஷ்டா ச வித்யா சாந்திஸ் ததோத்தமா சாந்த்யதீதா பரா ஸூஷ்மா ஸமாநா சோந்மநா ததா –ஸீதா விலஸிதம் ஸர்வம் நாநாகாரேண த்ருஸ்யதே -ததாநுக்ர ஹர சக்த்யாவ- த்வதை க்ய லப்யதே –ஸத்யோஜாத ப்ரவ்ருத்தேஸ் த்வம் ஈஷ்டே நக்ஷத்ர ரஷக (சந்திரன்)வாமதேவ ப்ரதிஷ்டாய வாஸநாதருமாஸ்ரித -வித்யாநா மப்ய கோராஸ் த்வம் தேஜஸாம் நிதிரக்ஷய –ப்ரணாந்தத் புருஷஸ் சாந்தைஸ் தத் ராஸாம் யாத்ர வாஹக ஈசாநஸ் சாந்த்ய தீதாயா வ்யாபகோ வ்யோம விக்ரஹ -விஷ்ணுஸ் ச ஸமநா யாந்த்வம் உந்மநாயாம் நிரஞ்ஜந )
ஸர்வோவை ருத்ர -தைத் -நா -6-என்றதும்
ப்ராஹ்மணோ வை ஸர்வா தேவதா என்றும்
ஆபோ வா இதம் சர்வம் என்றும்
இத்யாதி போலே ஆகக் கடவது-
ஏக ஏவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -ஸ்வே -3-2- என்றும்
யஜ்ஞ அம்சமான பாக்த்வ -பரத்வ -பரம் -பரத்வ பரமன்று
ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் ஸ இந்த்ரஸ் ஸ அக்ஷர பரமஸ்வராட் -என்கிறவிடம்
யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய ய பத்ம பூ –(புநஸ் த்ரை லோக்யதாத் ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூஸ்ரும -இதிஹாஸ சமுச்சயே -114-8-என்றும்
மஹா தேவஸ் ஸர்வ மேதே மஹாத்மா ஹுத்வ ஆத்மாநம் தேவ தேவோ பபூவ –ராஜதர்ம -20-12-
இத்யாதிகளாலே ஸ்ருஜ்யத்வ -ஸ்ரஷ்ட் ருத்வ -அர்ச்ச கத்வ -அர்ச் யத்வாதி பேதம் தத் அந்தர் வர்த்தித்வ நிபந்தனம் என்றதாயிற்று
ஏவம் விதங்களான ஸ்ருத் யந்தரங்களும் யுக்த ரீதியாலே நிர்வாஹ்யங்கள்
ஆகையாலே ஸகல வேதாந்தங்களும் நாராயணனையே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கிறான் -ப்ரஹ்ம ருத்ரர்களை அன்று என்று ஸித்தம்
ஆகையால் இப்படி ப்ரத்யக்ஷ ஸ்ருதி சதங்களினாலே நாராயணனுக்கே பரத்வம் தோற்றுகையாலே -பவ்ரு ஷேயங்களான புராண இதிஹாஸாதி களுக்கும் தத் அநுரோதேந ப்ராமாண்யம் உண்டாகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளும் உபாதேயங்கள் -ததிதரங்கள் அநு பாதேயங்கள் இறே
கிஞ்ச
நாராயண பரங்களான புராண இதிஹாஸாதிகளுக்கு ஸத்வ மூலத்வாத் ப்ராமாண்யம் உண்டு
தத் அந்யங்களான புராண விசேஷ வசனங்களுக்கு ரஜஸ் தமஸ் ஸங்கீர்ண தயா அப்ராமாண்யம் ஸித்தம் இறே
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டம் ச யாஸ்ச அன்யா தேவதாஸ் ஸ்ம்ருதா -ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –(தஸ்மாத் இதி ச பாடோ த்ருஸ்யதே –மோக்ஷ தர்மம் -350-36 என்று இத்யாதி பிரமாண சதங்கள் எல்லாம் (ராமானுஜர் சாதித்து அருளிய)வேதார்த்த ஸங்க்ரஹ -(ஆளவந்தார் சாதித்து அருளிய மஹா)புருஷ நிர்ண யாதி ப்ரபந்தங்களிலே ஸூ வ்யக்த மாகக் கண்டு கொள்வது
ஆகையாலே ஸ்ரீ மன் நாராயணனே
ஜகத் காரண பூதன்
ஸர்வ ஸ்மாத் பரண்
முமுஷு உபாஸ்யன்
மோக்ஷ ப்ரதன்
முக்த ப்ராப்யன் -என்று ஸித்தமாய் நின்றது
இதி தத்வ நிரூபணே பரதத்வ நிர்ணயோ நாம சப்தம அதிகாரம் ஸம் பூர்ணம்
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த் ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம்
ஸ்ரீ தத்வ நிரூபண பிரபந்தம் ஸமாப்தம்
—————————————————————-
27 தத்துவங்களின் வ்யஷ்டி ஸ்ருஷ்டி
மூலப்ரக்ருதி -அவ்யக்தம் -ப்ரதாநம் -முக்குணங்கள் வெளிப்படாத நிலை –
மஹான் -முக்குணங்கள் வெளிப்படும் நிலை
அஹங்காரம்-வெளிப்பட்ட முக்குணங்கள் பயன்படும் நிலை
ஸாத்விக அஹங்காரம் -வைகாரிகம்
ராஜஸ அஹங்காரம் -தைஜஸம்
தாமஸ அஹங்காரம் -பூதாதி
ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து வாக் பாணி பாதம் பாயு உபஸ்தம் ஆகிற கர்ம -ப்ரவ்ருத்தி -இந்தியர்களும்
செவி தோல் கண் நாவு நாசி மனம் ஆகிற ஞான இந்திரியங்களும் உண்டாகின்றன
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தம் ஆகிற பஞ்ச தன்மாத்திரங்களும்–அவை மூலமாக ஆகாஸம் வாயு தேயு அப்பு ப்ருத்வீ -அதாவது விண் கால் தீ நீர் நிலம் ஆகிற பஞ்ச பூதங்களும் உண்டாகின்றன
ராஜஸ அஹங்காரம் இவை இரண்டுக்கும் உதவி செய்கிறது
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply