ஸ்ரீ வேத வியாஸ பகவான் அருளிச் செய்த ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் —

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ இளைய பெருமாளுக்கு உபதேசம்

வேத வியாசரின் பிரம்மாண்ட 61வது அத்தியாயத்தில் பரமசிவனும் அம்பாள் பார்வதியும் பேசிக்கொள்கிறார்கள்
( இதை நாரதருக்கு பிரம்மா சொல்லியிருக்கிறார்) இந்த பகுதி தான் அத்யாத்ம ராமாயணம் ஆகும்.

வால்மீகி ராமாயணம் 7 காண்டங்கள். 24000 ஸ்லோகங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்குப் பின் முதல் எழுத்து காயத்ரி மந்த்ரத்தில் இருந்து வரும்.

வேத வியாசரின்  அத்யாத்ம   ராமாயணம்  6 காண்டங்கள்,  கிட்டத்தட்ட 4000  ஸ்லோகங்கள்  கொண்டது.

ராவண வதத்துக்குப் பிறகு மாய சீதை தான் அக்னி ப்ரவேசம் செய்கிறாள் – வியாசர்.
உண்மையான சீதை தான் அவ்வாறு செய்தது – வால்மீகி.

லக்ஷ்மனனுக்குத் தெரியாமல், ”சீதா, ராவணன் வருவான், உன்னைக் கடத்துவான்.
எனவே உன்னை அக்னியிடம் ஒப்படைத்து ஜாக்ரதையாக பிறகு பெற்றுக் கொள்கிறேன்
அதுவரை உன்னைப் போன்று இப்போது முதல் ஒரு மாய சீதா உருவாக்கி ராவணன் தூக்கிச் செல்ல வைக்கிறேன்.
பிறகு ராவண வதம் முடிந்து மாய சீதாவை அக்னியில் பிரவேசிக்க வைத்து உன்னை மீட்டுக் கொள்வோம். –
ராமன் – சீதாவின் இந்த ஒப்பந்தம் வியாசர் சொல்கிறார்.

—————

ஸ்ரீ ராமகீதாமாகாத்மியம்‌,

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் மாகாத்மியம்‌ (பெருமை) முழுவதனையும்‌ ஸ்ரீ சங்கரன்‌ அறிவார்‌.
௮தில் பாதி பார்வதி தேவி யார்‌ அறிவர்‌. முனிவரே !-௮தில் பாதி யான்‌ ௮றிவேன்‌.

எந்த மாகாத்மியத்தை யறிதலால்‌ உலகத்தினர்‌ அக்‌ கணமே சித்த சுத்தியை அடைவரோ, ௮தனை யுனக்குச்‌
சிறிது சொல்லுகிறேன்-முழுவதும்‌ சொல்லக் கூடிய தன்று

நாரதரே! ஸ்ரீ ராம கீதை எந்தப்‌ பாபத்தைக்‌ கெடுக்‌கிறதோ அந்தப் பாபம் உலகில் ஓர் இடத்திலும் ஒரு போதும்
தீர்த்தம் முதலியவற்றால் போக்க முடியாது-
ஸ்ரீ ராம கீதையினால் கெடாத பாபத்தை உலகில் எங்கும் காண முடியாது

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியினால் உபநிஷத் ஆர்ணவம் கடைந்து உண்டு பண்ணப் பட்டது
ஸ்ரீ லஷ்மணனுக்கு உகந்து உபதேசிக்கப்பட்டது
இந்த ஸ்ரீ ராம கீதா அம்ருதத்தைப் பருகின புருஷன் அமரன் ஆகிறான் –

ஸ்ரீ பரசு ராமர் கார்த்த வீர்ய அர்ஜுனனைக் கொல்ல வில் வித்யையை பழகுவதற்கு முன்
ஸ்ரீ ராம கீதையை ஸ்ரவணம் செய்து கிரஹித்து படித்து ஸ்ரீ நாராயணனின் கலையைப் பெற்றார்

ப்ரஹ்மஹத்தி பாபங்களையும் போக்கும் சக்தி இதற்கு உண்டு

இத்தால் ஸாயுஜ்யமும் அடையலாம்

——————

ஆகாசத்தில்‌ மூன்று விதமான பேதம்‌ காணப்படுகிறது.
அதாவது ஒரு தடாகத்தை வியாபித்திருக்கிற ஆகாசம்‌ (1) மஹா ஆகாசம்‌,
அதற்குள்‌ ௮டங்கி யிருக்கிற ஆசாசம்‌ (2) அவிச்சின்ன ஆகாசம்
அதில்‌ பிரதிபலித்திருக்கிற ஆகாசம்‌ (3) பிரதிபிம்ப ஆகாசம்‌
என்னும் இம்மூன்று வித பேதங்களும்‌ ஆகாயத்தில் காணப் படுகின்றன,
பிரமத்திலும்‌, ஆபாஸம்‌, ௮விச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம் -என்னும் மூன்று வித பேதங்களும் உண்டே –
ஆபாஸ மென்பது பொய்பான புத்தி, ௮து அவித்தை (அஞ ஞானத்தின் காரியம்‌.
௮.து-விச்சின்னம்‌ (வேறுபட்டது) இல்‌லாதது. அஞ்ஞானத்தால்‌ விச்சின்னம்‌ ஏற்படுகிறது,
ஞானம்‌ ஏற்பட்டால்‌, அவிச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம்‌, இவை இரண்டும்‌ ஒன்றென்றும்‌,
ஆபாஸமாகிய அவித்தை தன்‌ காரியங்களுடன்‌ நசிக்கும் என்றும்‌ ௮றியக் கூடும்‌,

ரிக்‌ வேதத்தில்‌ அபாத்திரிய உபநிஷத்தில் –ப்ரக்ஞானம் ப்ரஹ்மம் என்னும்‌ வாக்கியமும்‌,
யஜுர்‌ வேதத்தில்‌ தைத்தரிய உபநிஷத்தில் அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி என்னும்‌ வாக்கியமும்‌,
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபநிஷத்தில் தத்துவமஸி என்னும்‌ வாக்யமும்‌,
அதர்வண வேதத்தில்‌ மாண்டோக்ய உபநிஷத்தில்‌ அயமாத்மா ப்ரஹ்மம் ப்ரஹ்மம் என்‌னும்‌ வாக்யமும்‌ உண்டே –

ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள். அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள். அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களை
ஸ்ரவணம் (1)
மனனம் (2)
நிதித்யாசனம் (தெளிதல்) (3)
நிட்டை கூடுதல் (4) என்று
ஸ்ரீ கீதை கூறுகின்றது.-

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஸத்யம்
நித்யம்
பூர்ணம்
ஏகம்
பரமார்த்தம்
பர ப்ரஹ்மம்
கூடஸ்தர்
பரஞ்சோதி -பர்யாய பதங்கள் –

ஸ்ரீ ராம ஹ்ருதயமே இந்த உபநிஷத் வாக்கியங்களின் தாத்பர்யம்

நியந்த்ரு நியாம்ய பாவம்-
சேஷி சேஷ பாவம்-
சரீர ஆத்ம பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -உணர வேண்டுமே –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading