ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதயம்– நாடகம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

சுவாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்)
மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம்.
இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன.
அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே,
தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது,
அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி
அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற
புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும்,
சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும்
கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

———————-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||–சங்கல்ப சூர்யோதயம்-

வேதம் முழங்கும் தன் திருநாவில் நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால் சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதாஸ் த்ரயீமுகரைர் முகை
வர தனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபி ஜனஸ்ய வஶம் வதம்
மதன கதனைர் ந க்லிஶ்யந்தே யதீஶ்வர ஸம்ஶ்ரயா: ||–யதிராஜ சப்ததி–45-

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதையான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது –
பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –
பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

————-

பத்து காட்சிகள் கொண்ட நாடகம்
சம்சாரத்தில் மாறி மாறி பிறந்து உழன்று உள்ளவர்கள் அத்தை விடுத்து மோக்ஷம் பெறுவதை உணர்த்துவதே
இதன் மையக் கருத்தாகும்–
இரண்டு கதா பாத்திரங்கள் – -விவேகன் என்றும் மஹா மோகன் என்றும் இரண்டு அரசர்கள் –
ஜீவாத்மாக்களைக் காத்து மோக்ஷம் பெற்றுத்தருவதை குறிக் கோளாக விவேகனும் பரிவாரங்களும் இருக்க
சம்சாரத்தில் மூழ்கும்படி செய்வதையே குறிக் கோளாக மஹா மோகனும் அவனது பரிவாரங்களும் இருக்கும்

கதா பாத்திரங்கள் –
விவேக அணி
விவேகன் -அரசன் -நல்லது தீயது பிரித்து அறியக் கூடிய ஞானம்
ஸூ மதி –விவேகனின் மனைவி
சமன் தமன் ஸ்வாத்யாயன் தோஷ -விவேகனின் மந்திரிகள்
விவசாயன் -விவேகனின் சேனாதிபதி -ஜீவாத்மாக்கள் முயற்சி
தர்க்கன் -விவேகனின் தேரோட்டி
ஸம்ஸ்காரன் -விவேகனின் சில்பி
அநுபவன் -ஸம்ஸ்காரனின் தந்தை
ஸங்கல்பன்/ விஷ்ணு பக்தி –பகவானுடைய பரிவா ரங்கள்-
சித்தாந்தி -ஆச்சார்யர் -பகவத் ராமானுஜர்
வாதம் -சிஷ்யன் -ஸ்வாமி தேசிகன்
நாரதன் -தும்புரு -மைத்ரி -கருணை -முதிதா –ஸூ மதியின் தோழிகள்
ஷாந்தி விரக்தி ஜூகுப்ஸை திதிஷை துஷ்டி–ஸூ மதியின் பணிப்பெண்கள் –

மஹா மோஹன் அணியினர் –
மஹா மோஹன்–அரசன் -அஞ்ஞானம் மற்றும் மயக்கம் உண்டாக்குபவன்
துர்மதி -மஹா மோகனின் மனைவி
காமன் க்ரோதன் -படைத்தளபதிகள் –
ராகன் த்வேஷன் டம்பன் லோபன் தரப்பன் -கர்வன் -ஸ்தம்பம் -மந்திரிகள் -சிலரை சிஷ்யர்கள் என்றும் கூறுவர்
சம்வ்ருத்தி சத்யன் -தூதுவன்
வசந்தன் -காமனின் நண்பன்
அபி நிவேசன் -பொருளாதாரன்
திருஷ்ணை ஆசை லோபனின் மனைவி
குஹனை -வஞ்சனை -டம்பனின் மனைவி
அஸூயை பொறாமை -தர்ப்பனின் மனைவி
துர்வாசன் -அபிநிவேசனின் மனைவி
விக்னன் ஒற்றன்
மனன் மத்சரன் -ஆலோசகர்கள்
ஸ்ருங்காரன் -காமனின் சிஷ்யன்
ப்ரமன்-நண்பன் –

——-

413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ராமாவதாரத்தின் மூலம் ஸ்ரீராமன்
நமக்கு உணர்த்தும் வேதாந்த தத்துவத்தை சுவாமி வேதாந்த தேசிகன்,
சங்கல்ப சூரியோதயம் என்னும் காவியத்தில் தெரிவிக்கிறார்:

“தர்ப்போதக்ர தசேந்த்ரியானன மனோ நக்தஞ்சராதிஷ்டிதே
தேஹேஸ்மின் பவஸிந்துனா பரிகதே தீனாம் தசாம் ஆஸ்தித:
அத்யத்வே ஹநுமத் ஸமேன குருணா ப்ரக்யாபிதார்த்த புமான்
லங்காருத்த விதேஹ ராஜ தனயா ந்யாயேன லாலப்யதே”

ராமன் தான் பரமாத்மா.
மகாலட்சுமியின் அம்சமான சீதாதேவி பிறவிப் பிணியில் சுழலும் ஜீவாத்மாவின் பாத்திரத்தை ஏறிட்டுக்கொள்கிறாள்.
கடல்சூழ்ந்த இலங்கையே பிறவிப் பெருங்கடல். அசோக வனமே நம் உடல்.
சீதை என்னும் ஜீவாத்மாவை ராமன் என்னும் பரமாத்மாவிடம் இருந்து பிரித்து,
பிறவிப் பிணியாகிய இலங்கையில் உடலாகிய அசோகவனத்தில் ராவணன் சிறைவைத்துள்ளான்.
இந்த ராவணன்தான் நம் மனமும் பத்து இந்திரியங்களும்
மனதுக்குப் பத்து இந்திரியங்கள் தலைபோன்றவை.
மெய், வாய், கண், மூக்கு, செவி, நாக்கு, கை, கால், மலத்துவாரம், ஜலத்துவாரம் ஆகிய பத்து இந்திரியங்களோடு
கூடிய மனமே பத்து தலைகொண்ட ராவணன் ஆவான்.
இந்த மனமும் புலன்களும் சேர்ந்து தான் ஜீவாத்மாவைப் பிறவித்துயரில் அழுத்தி
இறைவனை அடையவிடாமல் தடுக்கின்றன. இந்த மனம், புலன்களை மூன்று குணங்கள் பாதிக்கின்றன.

சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகியவையே அந்த மூன்று குணங்கள்.
சத்துவ குணமே சாந்தமான விபீஷணன். ரஜோகுணம் தான் காமம், கோபம் நிறைந்த சூர்ப்பணகை.
தமோ குணம் தான் சோம்பலில் ஆழ்ந்த கும்பகர்ணன். ராவணன் என்னும் மனமும் புலன்களும் விபீஷணனாகிய
சத்துவ குணத்தை விரட்டிவிட்டு, சூர்ப்பணகை கும்பகர்ணனாகிய ரஜோகுணம், தமோகுணம் ஆகியவற்றைத்
தன்னுடன் வைத்துக்கொள்வதாலே, ஜீவாத்மாவாகிய சீதை மேலும் துன்புறுகிறது.

இந்நிலையில், பரமாத்மாவாகிய ராமனை அடைய வேண்டும் என்று ஜீவாத்மாவாகிய சீதை தவிக்கும்போது,
பரமாத்மாவான ராமன், ஆஞ்ஜநேயரை அனுப்பி வைக்கிறார். அந்த ஆஞ்ஜநேயர் தான் குரு,
ஆசார்யன். இறைவன் எல்லாச் சமயங்களிலும் நேராக வருவதில்லை, குருவை அனுப்பிவைத்து,
குருவருளின் மூலம் திருவருள் நமக்குக் கிட்டும்படிச் செய்கிறான்.
ஆஞ்ஜநேயர் சீதையைக் கண்டுபிடித்து, ராமாயணம் பாடியது போல்,
ஆசார்யன் ஜீவாத்மாவுக்கு இறைவனின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார்.

ஆஞ்ஜநேயர், ராமனின் முத்திரை மோதிரத்தைச் சீதைக்கு வழங்கியது போல்,
ஆசார்யன் சீடனாகிய ஜீவாத்மாவுக்கு இறைவனின் சங்கு சக்கர முத்திரைகளைத் தோளில் பொறிக்கிறார்.
நிறைவாக, அனுமன் இலங்கையை எரித்தது போல், பிறவிப் பிணியையே எரிக்கிறார் ஆசார்யன்.
அதன்பின் ராமனைத் தன் தோளில் சுமந்தபடி இலங்கைக்கு அனுமன் அழைத்து வந்ததுபோல்,
நம்மைக் காக்கும் பொருட்டு இறையருளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் ஆசார்யன்.

அனுமனின் துணையோடு ராமன் இலங்கையில் உள்ள மொத்த அரக்கர்களையும் அழித்தது போல்,
ஆசார்யன் துணையோடு இறைவன் ஞானம் என்னும் அம்பை எய்து நமது மொத்தப் பாபங்களையும் அழித்து விடுகிறான்.
அனுமன் சீதா-ராமர்களை இணைத்து வைத்தது போல், ஆசார்யன் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார்.

இதே கருத்தை ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையில் உள்ளது.

“தசேந்த்ரியானனம் கோரம் யோ மனோ ரஜனீசரம்
விவேக சர ஜாலேன சமம் நயதி யோகினாம்”-என்ற ஸ்லோகம் தெரிவிக்கிறது.

இப்படி ஆத்மாவுக்கு எதிரிகளாக இருக்கும் பாபங்களையும், தறிகெட்டு ஓடும் புலன்களையும்
ஞானம் என்னும் அம்பால் வீழ்த்தி வெல்வதால், ஸ்ரீராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘சத்ரு’ என்றால் எதிரி. ‘சத்ருக்ன:’ என்றால் எதிரிகளை அழிப்பவர்.
தறிகெட்டு ஓடும் மனம், புலன்கள் மற்றும் பாபங்களாகிய எதிரிகளை அழிப்பதால் ராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 413-வது திருநாமம்.
[ராமனின் தம்பிக்கு சத்ருக்னன் என்ற திருப்பெயர் இருப்பதற்கான காரணம் வேறு, அதை இத்துடன் குழப்பிக் கொள்ளலாகாது.]
“சத்ருக் னாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்துப் பாபங்களையும் ஸ்ரீராமன் போக்கி அருள்வான்.

—————

ராகவ ஸிம்ஹனையும் அவன் தலைநகராக அரசாண்ட அயோத்தியையும்,
சுவாமி தேசிகன் ஸங்கல்ப சூர்யோதயத்தில் போற்றிய வழியில் நாமும் போற்றி துதிப்போம்.
சுவாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.

“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை
(அயோத்திக்கு மற்றோரு பெயர்) மஹாராஜர் காணலாம்.
ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்தி மாநகரம். இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும்.
அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன. அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும்.
ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே, தன் அவதாரத்தை பூர்த்தி செய்து கொண்டு
ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது, அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது.
மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி அயோத்தி மாநகரம்,
ரகு வம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.

மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால்,
மேன் மேலும் வளருகிற புகழையுடையவன் ராமன்.
இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும், சாபத்தையே ஆயுதமாகவுடைய
கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும் கெட்ட தசையை போக்கடிக்கும்
திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

————————

வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –
இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

——-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதன கதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||

வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

இவ்வாறு மூன்று பெரும் தெய்வங்களே மன்மதனிடம் ஆட்பட்டிருக்கும்போது,
சாதாரணர்கள் என்ன ஆவார்கள் என்று இங்கே போட்ட விடுகதைக்கு இன்னொரு நூலில் விடை தருகிறார் கவிஞர்.
வேதாந்த தேசிகன் தன் முதன்மை குரு, ராமானுஜரின் பெயரில் எழுதிய இன்னொரு நூல், யதிராஜ சப்ததி.
இதில் ராமானுஜரைப் பற்றி எழுபத்தி நான்கு பாக்கள் உள்ளன.
இந்த நூலில் இதே கவிதையைக் கொடுத்து, கடைசி வரியை மட்டும் மாற்றி விடுகிறார்

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

நான் முகன் நான்கு முகங்களாலும் சரஸ்வதியை பார்த்துக் கொண்டே உள்ளான்
சிவனின் இடப் பகுதி முழுவதும் பெண்ணாகவே உள்ளது –
ஸ்ரீ கிருஷ்ணனும் கோபிகள் வசம் -ஆனால் யதிராஜரை அடைந்தவர்கள் இது
போன்ற காம வலைகளில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் –

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –
தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை –
முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் –
வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –
அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வி யா வர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆன் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்
வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி
சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூ க்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் –
யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார்.
ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.

இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார்.
ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

ஸங்கல்பஸூர்யோத ஐந்தாவது அங்கத்தில் அஸூயா தேவி யென்பவள் வந்து கூறுகிற வார்த்தையை
ஆசிரியர் அழகாக எடுத்து இயம்பியுள்ளார்.
விவேக சக்ரவர்த்திக்கு மஹா மோஹ மஹாராஜன் பகைவன்; இவனுடைய மனைவிக்கு துர்மதி யென்று பெயர்;
அவளுடைய தோழி தான் அஸுயை யென்பவள். அவள் கூறுகின்றாள் –
*மயி தத்தாவதாநாயாம் விச்வதோஷாபஹாரிணா, ந சக்ய மீச்வரேணாபி நிரவத்யேந வர்த்திதும்* என்று.

(இதன் பொருள்) {‘அஸூயை யென்கிற) நான் உஷாராக இருந்தேனாகில்
ஒன்றான ஸர்வாஶ்வரனாலும் குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைக்க முடியாது என்பதாம்.

இதற்கு மேல் “நிரவதி குணக்ராமே ராமே” என்று தொடங்கி
அருமையான் ஶ்லோகமொன்று அந்த அஸூயா தேவியினால் சொல்லப்பட்டுள்ளது:

(அதன் கருத்து) குற்‍றம் என்பது லவலேசமும் காணமுடியாமலும்,
அநந்த கல்யாண குண ஸமூஹமே வடிவெடுத்துமிருந்த ஸ்ரீராமபிரானிடத்திலும் நாளைக்கும் பலவகைக் குற்‍றங்களைக்
கூசாமல் கூறி வருகின்ற இவ்வுலகத்தவர், மற்‍றையோரிடத்தில் எப்படி வெறுமனே யிருப்பார்கள்?
குணக் கடலான எம்பெருமானே படுகிறபாடு அதுவானால் ஏதோ ஒன்றிரண்டு குணங்களையும்
பல்லாயிரக் கணக்கான குற்‍றங்களையுமுடைய மற்‍றையோர் எப்பாடு படவேண்டும்! – என்பதாம்.

———–

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
“கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:” என்று பாடியிருக்கிறீரே !

திருவேங்கடமுடையான் தயா விஷயத்திலும் “அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்” என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார்.
ஆளவந்தார் சதுஸ்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை “அபிஷ்டௌதிஸ்துத்யாம்” என்று
அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ்,
அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா?
தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும்
(விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே

வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும்,
மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும்.

————

‘ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா’ என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில்
பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading