ஸ்ரீ ஸூக்தம்
ஓம் ||
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜத ஸ்ர’ஜாம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |–1-
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண-ரஜ-தஸ்ரஜாம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரத ஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம்…
மே ஆவஹ -என்னிடம் எழுந்து அருளச் செய்வாயாக
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,–மானைப் போன்றவள்- பக்தி வைத்து கட்டிப் போடலாம் -தானே கட்டுண்ணப்பண்ணும் பெரு மாயமுள்ளவள்-
——-
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||–2-
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மநப-காமிநீம் யஸ்யாம்
ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷானஹம்
ஜாத’வேதோ -அக்னி தேவதையே
ஹிர’ண்யம் -பொன்னையும்
காம் -பசுக்களையும்
அஶ்வம்-குதிரைகளையும்
புரு’ஷான் -உறவினரையும்
அஹம் விந்தேயம் -நான் பெறுவேனோ
தாம் -அந்த ஸ்ரீ லஷ்மியை
ம ஆவ’ஹ -என்னிடம் எழுந்து அருள்ச செய்வாயாக
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் யஸ்யாம் -அந்த மஹா லஷ்மியை-என்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் படி செய்வாயாக –
————-
அஶ்வ பூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||–3-
அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீ- முபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்
அஶ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்
ர’த மத்யாம் -நடுவில் ரதங்களும்
ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் -களிறுகளின் பிளிறல் களை தனக்கு அறிகுறியாகக்கொண்ட வளுமான
ஶ்ரியம்’ தேவீம் -மனதுக்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை
உப’ஹ்வயே -அழைக்கின்றேன்
ஶ்ரீர்மா தேவீர் ஜு’ஷதாம் –ஸ்ரீ தேவியே அடியேனை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் செய்து அருளுவாயாக –
————-
காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–4-
காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோப ஹ்வயே ஸ்ரியம்
ஸ்மிதாம் -மந்தஹாஸம் தவழ்பவள்
ஹிர’ண்ய ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் திகழ்பவளும்
ஆர்த்ராம்-கருணை நிறைந்தவளும்
ஜ்வலம்’தீம் -தேஜஸ் மிக்கவளும்
த்ருப்தாம் -மனம் நிறைந்து இருப்பவளும்
தர்பயம்’தீம் -தன்னை ஸ்துதிப்போர்க்கு ஆனந்தம் ஊட்டுபவளும்
பத்மே ஸ்திதாம் -தாமரையில் நிலை பெற்றவளும்
பத்ம வ’ர்ணாம் -தாமரை நிறத்தவளும்
காம் -யாரோ
தாம் ஶ்ரியம் -அந்த மனத்துக்கு உகந்த ஸ்ரீ லஷ்மியை
இஹ-இங்கே
உ ப’ஹ்வயே -வேண்டுகிறேன் –
——
சந்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே அலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்ரு’ணே ||–4-
சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே
லோகே -உலகோர்க்கு
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்
ப்ர’பாஸாம் -பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும்
யஶஸா ஜ்வலம்’தீம் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும்
ஶ்ரியம்’ தேவஜு’ஷ்டாம் -தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும்
உதாராம்–வண்மை மிக்கவளும்
தாம் பத்மினீ’ம் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும்
ஈம் -ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்
தாம் ஸ்ரீ யம் -அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை
ஶர’ணமஹம் ப்ரப’த்யே–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன்
த்வாம் வ்ரு’ணே –உன்னை வேண்டுகிறேன்
அலக்ஷ்மீர் மே நஶ்யதாம் -என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும் –
————
ஆதித்யவ’ர்ணே தபஸோஉதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோஉத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||–5-
ஆதித்ய-வர்ணே தபஸோ திஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ரு÷க்ஷõத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:
ஆதித்ய-வர்ணே -ஸூர்யனின் நிறத்தவளே
தவ தபஸோ-உன்னுடைய அருளாலே
வனஸ்பதி பில்வ: வ்ருக்ஷ அ திஜாதோ – கான தலைவனான வில்வ மரம் உண்டாயிற்று
தஸ்ய பலானி -அதே போல் உனது அருளின் பலத்தாலேயே
மாயா அந்தராயாஸ்-அறியாமையாகிய உள் இருட்டையும்
பாஹ்யா அலக்ஷ்மீ:–வெளியில் உள்ள அமங்களங்களையும் அழிக்கட்டும் –
———–
உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோஉஸ்மி’ ராஷ்ட்ரேஉஸ்மின் கீர்திம்ரு’த்திம் ததாது’ மே ||–6-
உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச மணினா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே-ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே
தேவஸக: -செல்வத்துக்குத் தலைவனான குபேரனும்
கீர்த்திஸ்ச –புகழின் தேவனும்
மணினா ஸஹ –என்னை நாடி வர வேண்டும்
அஸ்மின் ராஷ்ட்ரே-இந்த நாட்டிலே
ப்ராதுர் பூத அஸ்மின் -அடியேன் பிறந்திருக்கிறேன்
கீர்த்திம் ருதிம் ததாது மே-அடியேனுக்கு பெருமையையும் செல்வமும் வழங்கி அருள்வாய்
———-
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்ருத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்ருஹாத் ||-7-
க்ஷúத்-பிபாஸா மலாம் ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்–7-
க்ஷúத்-பிபாஸா மலாம் -பசியினாலும் தாகத்தினாலலும் இளைத்து
ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் யஹம்-செல்வத்தினில் இருந்து விலகிய மூதேவியை நான்
மே க்ருஹாத்-நாஸயாம்-எனது இல்லத்தில் இருந்து விலக்குகிறேன்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத -அனைத்து ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருளுக –
———
கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–8-
கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் தாமி-ஹோபஹ்வயே ஸ்ரியம்
கந்த-த்வாராம் -பரிமளமே வடிவானவளும்
துராதர்ஷாம் -வெல்ல முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நித்ய வலிமை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் -அனைவருக்கும் ஸர்வேஸ்வரியுமான
தாம் -அந்த மஹா லஷ்மியை
இஹ உபஹ்வயே -இங்கே எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் –
———-
மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||–9-
மனஸ: காம-மாகூதிம் வாச: ஸத்யமஸீமஹி
பஸூனாம் ரூப மன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஸ:
ஸ்ரீ:
மனஸ: காமம் -மனதில் எழும் ஆசைகளையும்
ஆகூதிம் -தர்மத்துக்கு முரண் ஆகாத மகிழிச்சிகளையும்
வாச: ஸத்யம் -வாக்கில் உண்மையையும்
பஸூனாம் ரூப மன்னஸ்ய -பசுக்களாலும் அழகாலும் அன்னத்தாலும் வரும் மகிழ்ச்சிகளை
அஸீமஹி -அனுபவிக்க வேண்டும் படி அருள வேண்டும்
மயி ஸ்ரயதாம் யஸ:-எனக்கு பெருமை உண்டாகும் படி அருள வேண்டும்
——–
கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||–10-
கர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம-மாலிநீம்
கர்தமேன ப்ரஜா பூதா கர்தம -கர்தம முனிவரே உமக்கு மகளாகத் தோன்றிய மஹா லஷ்மீ தேவி
மயி ஸம்பவ-என்னிடம் தோன்ற வேண்டும்
பத்ம-மாலிநீம்-தாமரை மாலை அணிந்தவளும்
ஸ்ரியம் மாதரம் -அன்னையான ஸ்ரீ தேவி
மே குலே வாஸய-என்னுடைய குலத்திலே தங்கச் செய்து அருள வேண்டும் –
———-
ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||–11-
ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி-சதேவீம் மாதர ஸ்ரியம் வாஸய மே-குலே
சிக்லீத -மஹா லஷ்மியின் திருமகனான சிக்லீதர முனிவரே
ஆப: -தண்ணீர்
ஸ்ருஜந்து ஸ்நிக்தானி -சிறந்த உணவுப் பொருள்களை விளைக்கட்டும்
வஸ மே க்ருஹே-எனது இல்லத்தில் வசிக்க வேண்டும்
ச-மேலும்
தேவீம் மாதர ஸ்ரியம் -உலகுக்கும் உனக்கும் அன்னையான ஸ்ரீ தேவி
நிவாஸய மே-குலே-என்னுடைய குலத்திலே எப்பொழுதும் நித்ய வாஸம் செய்து அருள வேண்டும் –
———
ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–12-
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
ஜாதவேதோ -அக்னி தேவனே –
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
புஷ்கரிணீம் -தாமரைத் தடாகத்தில் வசிப்பவளும்
புஷ்டிம் -உணவூட்டி அனைவரையும் வளர்க்கும் தாயானவளும்
ஸுவர்ணாம் -பசும் பொன் நிறம் உடையவளும்
ஹேமமாலினீம்-பொன் மாலை அணிந்தவளும்
ஸூர்யாம் -பகலவன் போல் தேஜஸ்ஸூ மிக்கவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்
லக்ஷ்மீம் ம ஆவஹ-ஸ்ரீ மஹா லஷ்மியை என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும்
————
ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–13-
ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
ஜாதவேதோ -அக்னி தேவனே
ய:
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரம் உள்ளவளும்
யஷ்டிம் -தர்மம் நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்
பத்மமாலினீம் –தாமரை மாலை அணிந்தவளும்
சந்த்ராம்-நிலவைப் போன்றவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளுமான
லக்ஷ்மீம் -ஸ்ரீ தேவியை
ம ஆவஹ-என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும் –
————
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோஉஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||–14-
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம் புருஷானஹம்
ஜாதவேதோ-அக்னி தேவனே
யஸ்யாம் -யாரால்
ப்ரபூதம்-அளவிட முடியாத
ஹிரண்யம் -பொன்னும்
காவோ -பசுக்களும்
தாஸ்ய-பணிப்பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான-பணியாட்களும்
அஹம்-நான்
விந்தேயம் -பெறுவேனோ
தாம் ம லக்ஷ்மீ- -அந்த ஸ்ரீ தேவியை
அனபகாமினீம் ம ஆவஹ-என்னிடம் இருந்து விலகாது இருக்குமாறு செய்து அருள வேண்டும் –
————
ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி |
தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||–15-
ஸ்ரீ மஹா லஷ்மியை அறிந்து கொள்வோம்
திருமாலின் கேள்வியைத் தியானிப்போம்
அந்த திருமகள் நம்மைத் தூண்டி அருளுவாளாக –
————
பல ஸ்ருதிகள் –
ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம்
ஸூக்தம் பஞ்சதஸர்சம் ச ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்
பத்மாநனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம – ஸம்பவே தன்மே
பஜஸி பத்மாக்ஷீ யேந ஸெளக்யம் லபாம்யஹம்
அஸ்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே தனம்-மே
ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஸ்ச தேஹி மே
பத்மாநனே பத்ம-விபத்ம-பத்ரே பத்ம-ப்ரியே பத்ம-தலாயதாக்ஷி
விஸ்வ-ப்ரியே விஸ்வ மனோ-நுகூலே த்வத்பாத – பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
புத்ர-பௌத்ர-தனம் தான்யம் ஹஸ்த்-யஸ்வாதிகவே-ரதம்
ப்ரஜானாம் பவஸீ மாதா ஆயுஷ்மந்தம் கரோது மே
தன-மக்நிர்-தனம் வாயும்-தனம் ஸூர்யோ-தனம் வஸு: தனம்
இந்த்ரோ ப்ருஹஸ்பதிர்-வருணம் தனமஸ்து தே
வைநதேய ஸோமம் பிப ஸோமம் பிபது வ்ருத்ரஹா ஸோமம்
தனஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது ஸோமிந:
ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபா மதி:
பவந்தி க்ருத-புண்யானாம் பக்தானாம் ஸ்ரீஸுக்தம் ஜபேத்:
ஸரஸிஜ-நிலயே ஸரோஜ-ஹஸ்தே தவலதராம்ஸுக-கந்தமால்ய-
ஸோபே பகவதி-ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன-பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம்யச்யுத-வல்லபாம்
மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு-பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாம்
மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ர-பத்ன்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்
ஸ்ரீர்-வர்சஸ்வ-மாயுஷ்ய-மாரோக்ய-மாவிதாச்-சே
õபமாநாம்- மஹீயதே தான்யம் தனம் பஸும்
பஹுபுத்ர-லாபம் ஸத-ஸம்வத்ஸரம் தீர்கமாயு:
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” |
தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||
ஓம் ஷாந்தி ஃ ஷாந்தி ஃஷாந்தி ஃ’ ||
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply