பாடம் -13-ஸத்வம் -ரஜஸ் -தமஸ்
ஸத்த்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:
நிபத்நந்தி மஹா பாஹோ தேஹே தேஹிநமவ்யயம் -ஸ்ரீ பகவத்கீதை-14-5-
மஹாபாஹோ-பெருந்தோளாய்,
ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள்,
ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன,
தேஹே-இவை உடம்பில்,
அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப்,
நிபத்நந்தி-பிணைக்கின்றன.
சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய்,
இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.
ஸத்வம் -ரஜஸ் -தமஸ் -என்ற முக்குணங்களும் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் அசேதனப் பொருளில் இருந்து உண்டாகக் கூடியவை –
அவை ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தின் தன்மைகளே -இவை மூன்றும் சம்சாரத்தில் உடலோடு இருக்கும் ஜீவாத்மாவை உடலோடு காட்டுகின்றன -அதாவது
மேலும் மேலும் சம்சாரத்தில்பிறவிகளை எடுக்க வைத்து சம்சாரத்திலேயே கட்டுப்படுத்துகின்றன –
சத்வம் லகு ப்ரகாசகம் இஷ்டம் -மேல் நோக்கி செல்லும் நெருப்பு வாயுவில் இவை இருக்கும் –
லகுத்த்வம் -உண்டே இவற்றுக்கு -அறிவை ஏற்படுத்தும் -நியாய சாஸ்திரம் சொல்லும்
வேதாந்த வ்ருத்தமானவையாக இருந்தால் இவையும் உபா தேயம்
ஸத்வ குணமானது லகு -லேசாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும் –
அதனால் நம்முடைய இந்திரியங்கள் எளிதில் வெளியே சென்று பொருள்களை கிரஹித்து வர முடியும்
அதனால் ஸத்வ குணம் -ப்ரகாஸகம் -ஞானத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது
உபஷடம்பகம் சலம் -ரஜஸ் -உத்ஸாகம் பண்ண வைக்கும்
ரஜஸ் குணமானது -சலம் -எப்பொழுதும் நிலையாக நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையைக் கொடுக்கிறது –
இதனால் இது உபஷ்டம்பகம் -ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் ஊக்குவித்து அதனதன் கார்யங்களை செய்விக்கிறது –
குரு வரணகம் ஏவ தமஸ் -குருத்வம் -24 குணங்களில் ஒன்றாக நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் –
ஆவரணம் மூடி -மறைக்க தடுக்கக் கூடியவை –
மனஸ் பாரமாய் இருக்கு சொல்வது போல் களைப்பு போன்றவற்றை சொல்லும் -எடை கூடுவதை சொல்ல வில்லை –
தமோ குணம் -குரு -பாரமாய் இருக்கும் தன்மையைக் கொடுக்கும்
அதனால் வரணகம் -இந்திரியங்கள் எளிதில் வெளியே செல்ல விடாமல் தடுத்து மூடி விடும் –
முரண்பட்ட ஸ்வ பாவங்கள் -மூன்றுக்கும் -ப்ரதீப வச்ச அர்த்ததோ வ்ருத்தி –
புருஷார்த்தம் குறித்து மூன்றும் செயல்படும் -இதுக்கு த்ருஷ்டாந்தம் –
த்ரி -எண்ணெய் -நெருப்பு
வாதம் -பித்தம் -ஸ்லேஷ்மம் -போல்
இம் மூன்று குணங்களும் வேறுபட்டாலும் சேர்ந்தே செயல்படுகின்றன –
பிரகாசம் -பிரவிருத்தி -நியமனம் இம்மூன்றும் முறையே ஸத்வ -ரஜோ -தமோ -குண கார்யங்கள்
முக் குணங்கள் செயல்பாடு
ப்ரீதி -என்கிற ஸூகத்துக்குக் காரணம் ஸத்வம்
அப்ரீதி என்கிற துக்கத்துக்கு காரணம் ரஜஸ்
விஷாதம் என்கிற மயக்கத்திற்கு காரணம் தமஸ்
ஸத்வ குணம் அறிவை உண்டாக்கும்
ரஜோ குணம் செயலை உண்டாக்கும்
தமோ குணம் அவற்றைக் கட்டுப்படுத்தும்
அந்யோன்ய அபிபவ வ்ருத்ய –
இவற்றில் ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டு குணங்களையும்
அழுத்திக் கொண்டு -அபி பவம் -செய்து தான் வளரும்
அந்யோன்ய ஆஸ்ரய ஜனன வ்ருத்ய –
ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டின் செயலை எதிர்பார்த்துத் தான் தன் கார்யத்தைச் செய்யும்
ஸத்வ குணம் அறிவை ஏற்படுத்த வேண்டும் என்றால் ரஜோ குணத்தால் உந்தப்பட வேண்டும்
அதே போல் தான் தமோ குணமும் -ரஜோ குணத்தின் காரியமே மற்ற இரண்டின் குணங்களை ஊக்குவிப்பது என்கிறபடியால்
அது மற்ற இரண்டின் குணங்களை எதிர்பார்க்கிறது –
அந்யோன்ய மிதுன வ்ருத்ய –
பிரக்ருதியிலும் அதன் காரியங்களிலும் இந்த முக் குணங்கள் என்றுமே பிரியாமல் சேர்ந்தே இருக்கும் –
சாங்க்ய மத காரிகை இது
விட்டுப்பிரியாமல் இருப்பது இங்கே பிராகிருத மண்டலத்தில் தானே
அவர்கள் நித்ய விபூதியை ஒத்துக் கொள்வது இல்லை
ஆகவே நாம் இவற்றை லீலா விபூதிக்கே கொள்ள வேண்டும் –
முக் குணங்களால் நாம் கட்டுப்படுத்தல்
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம் அநாமயம்
ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக–14-6-
அநக-பாவமற்றவனே,
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது,
அநாமயம்-நோவற்றது,ரோகங்கள் வாராமல் தடுக்கும் –
ந சத்வாத் ஆரோக்யம் -தேசிகன்
ஸுக ஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும்,
ஜ்ஞாந ஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும்,
பத்நாதி-கட்டுப்படுத்துவது.
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது
இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
சத்வ குணமானது –
குற்றம் கலக்கம் அற்றபடியால் ப்ரகாஸம் என்கிற அறிவை ஏற்படுத்துகிறது — உடலில் நோய்கள் வராமல் தடுக்கிறது
அது மேலும் மேலும் அறிவையும் ஸூகத்தையும் அடைய வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி –
அதற்காக பல செயல்களில் ஈடுபட வைத்தும் -அதன் மூலம் நம்மை உடலோடு கட்டுகிறது –
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்
தந்நி பத்நாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநம்–14-7-
கௌந்தேய-குந்தி மகனே,
ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம்,
த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள்,
தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால்,
நிபத்நாதி-கட்டுகிறது.
ராகம் த்ருஷ்ணா சங்கம் -மூன்றும் -இந்த ஸ்லோகத்தில் ஆசைக்கு பத பிரயோகம் –
ஆண் பெண் சேர்க்கை ஆசை ராகம்
த்ருஷ்ணா -பொருள்களின் மேல் ஆசை -அவர்களுக்கு பிடித்தவற்றின் மேல் -கண்டு –ஐம்கருவி இன்பம்
சங்கம் -அபிமானத்தால் வரும் ஆசை
ரஜோ குணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்தி மகனே,
அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.
ரஜோ குணம் ராகம் எனப்படும் காம ஸூகத்தில் இருந்து தோன்றுகிறது –
உலக விஷயங்களில் -த்ருஷ்ணா -ஆசை -மற்றும்
நம்முடையவர்களாக அபிமானிக்கப்பட்ட மக்கள் இடம் உண்டான ஆசை-சங்கம் -என்ற இரண்டையும் இது ஏற்படுத்துகிறது –
அதற்காக நம்மை செயல்களில் ஈடுபடுத்தி -அதன் மூலமே நம்மை உடலோடு கட்டுகிறது –
தமஸ்த்வ அஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வ தேஹிநாம்
ப்ரமாதா லஸ்ய நித்ராபிஸ் தந்நி பத்நாதி பாரத–14-8-
பாரத-பாரதா!
ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ,
அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்,
தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப் படுத்துகிறது.
தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது.
தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!
தமோ குணம் அஞ்ஞானம் என்கிற அறிவின்மையால் தோன்றுகிறது -அது மேலும் மயக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது –
கவனம் இன்மை -பிரமாதம் -சோம்பேறித்தனம் -ஆலஸ்யம் -தூக்கம் -நித்ரா –
ஆகிய இவற்றின் மூலம் நம்மைக் – கட்டுப் படுத்துகிறது
ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச-14-17-
ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது,
ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும்,
தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும்,
அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும்,
மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
ஸத்வ குணத்தில் இருந்து அறிவும்
ரஜோ குணத்தில் இருந்து பேராசையும்
தமோ குணத்தில் இருந்து கவனம் இன்மை -மயக்கம் -அறிவின்மை -ஆகிடாவையும் தோன்றுகின்றன –
மூன்று குணங்களும் ஏதோ ஒரு வகையில் நம்மை சம்சாரத்தில் கட்டுப் படுத்து கின்றன –
முக்குணங்களைப் புரிந்து கொள்ளுதல் –
ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மந்யதே–3-27-
ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
தத்த்வ வித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே-3-28-
து மஹா பாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.
குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மை யறிந்தோன், குணங்கள்
குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
இப்படி பிரகிருதியின் தன்மைகளான இந்த முக் குணங்களும் நம்மை எத்தனையோ செயல்களில் ஈடுபடுத்துகின்றன –
ஜீவாத்மா இயற்கையாகவே மிகத் தூய்மை யானவர் -குறைகள் அற்றவர் –
அவர்க்கு பசி தாகம் துக்கம் வியாதி கிழட்டுத்தன்மை முதலான அனைத்துமே இந்த உடலோடு தொடர்பு உள்ள படியால் தான் ஏற்படுகின்றது –
அதற்காக நாம் உண்ணுதல் -உறங்குதல் -சம்பாதித்தல் -தர்ம கார்யங்களைச் செய்தல் போன்ற எத்தனையோ செயல்களைச் செய்கிறோம் –
ஆனால் இவை நமக்கு இயற்கையானவை அல்ல -பிரகிருதியின் தொடர்பால் தவிர்க்க முடியாமல் வந்து சேர்ந்தவை என்று புரிந்து கொள்ள வேண்டும் –
இது புரிந்து விட்டால் அந்தச்செயல்களில் பற்று இல்லாமல் நாம் வாழலாம் –
ஆனால் நானே தான் உடல் என்று தவறாக நினைத்தால் அதற்கு அஹங்காரம் என்று பெயர் –
அப்படி ஒரு மயக்கத்தில் இருக்கும் ஆத்மா இந்த முக்குணங்கள் தன்னுடைய இயற்கையான குணங்கள் என்று நினைத்து –
அவற்றால் தான் செய்யும் செயல்கள் தான் தன்னுடைய இயற்கையான செயல்கள் என்று நினைத்து –
எனவே தானே அவற்றைச் செய்கிறேன் என்று தவறாக நினைத்து விடுகிறான்
எவன் முக்குணங்களைப் பற்றிய உண்மையை அறிகிறானோ அவன் -குணங்கள் தான் இந்தச் செயல்களைச் செய்கின்றன –
இதில் நான் செய்ய என்ன உள்ளது என்று பற்று அற்று இருந்து முக்தி அடைகிறான் –
முக்குணங்களைக் கட்டுப்படுத்துதல் –
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர் யோக÷க்ஷம ஆத்மவாந்–2-45-
வேதா-வேதங்கள்,
த்ரை குண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரை குண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர் த்வந்த்வ-இருமைகளற்று,
நித்ய ஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.
மூன்று குணங்களுக்குட்பட்டன வற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக.
இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.
முக் குணத்தில் இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று
வேதங்கள் அனைவருக்கும் பொதுவானது –
ஸத்வ குணம் அதிகமாக இருப்பவர்கள் ஆசைப்படுவதையும் வேதம் உபதேசிக்கும் –
ரஜோ குணம் மிகுதியாக இருப்பவர்களுக்காகவும் பல செயல்களை உபதேசிக்கும் –
தமோ குணம் மிக்கவர்களுக்கும் உபதேசிக்கும் –
அனைவரையும் ஆஸ்திகர்கள் ஆக்கிப் படிப்படியாகப் பக்தர்கள் ஆக்குவதே வேதத்தின் நோக்கமாகும்
ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவை என்ற ஒரே காரணத்துக்காக நாம் அந்தக் கர்மங்கள் அனைத்தையுமே செய்யத் தேவையில்லை –
நாம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் குறைத்து – ஸத்வ குணத்தையே வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் –
அது தான் நமது உஜ்ஜீவனத்துக்கு வழி வகுக்கும் –
———–
பாடம் –14- ஸ்ருஷ்ட்டி –படைப்பு –
ஸ்ருஷ்டியின் தொடக்கம்
ப்ரக்ருதி என்ற த்ரவ்யம் முக்குணங்களை உடையது என்று பார்த்தோம் –
அந்தப் பிரக்ருதியைக் கொண்டு தான் உலகம் படைக்கப் படுகிறது -மண்ணைக் கொண்டு குடம் செய்வது போலே –
ஆனால் பிரக்ருதிக்கும் இவ்வுலகுக்கு வேறுபாடு உண்டு –
இவ்வுலகத்தில் உள்ள பொருள்களில் ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ என்ற இவை ஏற்றத் தாழ்வுகளோடே இருக்கும்
ஆனால் பிரகிருதி என்ற பொருளில் முக்குணங்களும் சமமான நிலையில் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கும்
பிரளய காலத்தில் அந்த ப்ரக்ருதி என்ற பொருள் மட்டும் தான் இருக்கும் -நாம் இப்போது பார்க்கும் பொருள்கள் அனைத்துமே
தன் தன் காரணப் பொருளில் ஒன்றாக கடைசியாக ப்ரக்ருதி என்ற நிலையில் தான் மிஞ்சி நிற்கும் –
பிரளய காலம் முடிந்து ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கும் பொழுது முதலில் ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தில்
குணங்கள் மாறுபட்டு ஏற்றத் தாழ்வுகள் அடைகின்றன -இந்த நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர் –
மேலே மேலே உலகம் முழுவதும் உண்டாவதற்கு முன்னால் அக்கார்யத்தை எதிர் நோக்கித் தயாராக இருக்கும்
பொருள் தான் அவ்யக்தம் என்று பொருள் -கார்ய உன்முக அவஸ்தை –
மஹான் என்ற தத்வம்
அடுத்து அவ்யக்தத்தில் இருந்து முதலில் மஹான் என்ற தத்வம் படைக்கப்படுகிறது -இதற்கு புத்தி தத்வம் என்ற பெயரும் உண்டு –
பிரகிருதி அவ்யக்தமாகி -அவ்யக்தம் மஹானாக ஆகும் பொழுது அந்த அந்தப்பொருள் முழுவதுமாக மாறி விடாது –
ஒரு பகுதியே மஹான் என்ற நிலையை அடையும் என்று கருத்தில் கொள்ள வேண்டும் –
எனவே அவ்யக்தம் என்ற பொருளை சுற்றிலும் மூடிக் கொண்டு ப்ரக்ருதி என்ற தத்வம் இப்பொழுதும் உள்ளது –
மஹான் என்ற தத்துவத்தை சுற்றிலும் மூடிக் கொண்டு தான் அவ்யக்தம் என்கிற தத்வம் உள்ளது –
உலகில் முதலில் ஒரு பொருளை அறிகிறோம் -இதற்கு ஆலோசநம் -என்று பெயர்
அடுத்து இது என்னுடையது -நான் இத்தை அடைய வேண்டும் -என்ற எண்ணம் ஏற்படுகிறது -இதற்கு அபிமானம் என்று பெயர்
கடைசியாக இந்தப் பொருளை அடைய நான் இந்தச் செயலைச் செய்யப் போகிறேன் என்ற உறுதி பிறக்கும் -இதற்கு அத்யவசாயம் என்று பெயர் –
நம் மனதைக் கொண்டு நாம் அத்யவசாயத்தை -உறுதியை -எடுக்க வேண்டும் என்றால் -அதற்கு இந்த மஹான் உதவுகிறது –
பொருளை மனசால் அறிந்து கொள்வது -முதல் நிலை –
அதிக்ருதி -அபிமானம் -இத்தை அடைய -அதிகார ஞானம் -அடுத்த நிலை –
இத்தை அடைய அத்யவசாயம் உறுதி -கண்டிப்பாக செய்வது -மஹான் புத்தி தத்வம் இதுக்கு துணையாகிறது –
மஹான் செய்யும் செயல்கள்
மஹான் என்ற தத்வத்தை சாத்வீகம் ராஜஸம் தாமஸம் என்ற பாகுபாடு உண்டு -சாத்வீகமான பகுதியின் தன்மைகள்
தர்ம -நாம் தர்மம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் உதவுகிறது
ஞானம் -ஜீவாத்மா வேறு ப்ரக்ருதி வேறு என்ற பகுத்தறிவை ஏற்படுத்த உதவுகிறது
விராகம் -உலக விஷயங்களில் பற்றின்மை -வைராக்யம் -ஏற்பட உதவுகின்றது –
ஐஸ்வர்யம் –யமம் நியமம் ஆசனம் இத்யாதி அஷ்ட-கொண்டு அடையும் அஷ்ட மஹா ஸித்திகளையும் நாம் பெற உதவுகிறது -அவை
அணிமா -மிகச் சிறியதாக ஆகும் சக்தி –
லகுமா -மிகச் லேசாக ஆகும் சக்தி
மஹிமா -மிகப் பெரியதாக ஆகும் சக்தி
பிராப்தி -எவ்விடத்தையும் அடையும் சக்தி
ப்ராகம்யம் -கல் சுவர் முதலானவற்றில் மோதாமை
வஸித்வம் -உலகப் பொருள்களை இயக்குவது
ஈஸித்வம் -உலகப் பொருள்களைப் படைத்து அழிப்பது
காம அவாஸாயித்வம் –நினைத்தத்தை எல்லாம் ஸாதித்தல் -ஸத்ய ஸங்கல்பத்வம் என்று வேதாந்தம் சொல்வது இத்தையே –
தாமஸமான பகுதி இதற்கு முரண்பட்ட தன்மைகள் அனைத்தையும் கொண்டு இருக்கும்
அஹங்காரம் என்ற தத்வம்
மஹான் என்பதில் இருந்து அஹங்காரம் என்ற தத்வம் உண்டாகிறது —
ஆவரணம் என்று இத்தையே சொல்லும் -ஒரு பகுதி தான் மாறும் -ஆவரணம் என்று மூடி போல் –
அஹங்காரம் -கர்வம் -நான் என்கிற புத்தி -அறிவுக்கு இலக்கு -அஞ்ஞானம் என்றும் உண்டு –
இங்கு ஒரு த்ரவ்யத்தைக் குறிக்கிறது
அதின் முக்கியமான செயல் கீழ் சொல்லப்பட்ட அபிமானம் என்கிற புத்தியை ஏற்படுத்த இது -உதவும்
உடலையே ஆத்மா என்று நினைத்தல் -ஆத்மாவை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்தல் போன்ற
தவறான புரிதல்களும் இந்த அஹங்காரம் காரணம் ஆகும் –
இந்த அஹங்காரமும் ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்ற மூவகைப்படும் –
சாத்வீகமான அஹங்காரத்துக்கு -வைகாரிகம் -என்று பெயர் -அதில் இருந்து தான் -11- இந்திரியங்களும் தோன்றுகின்றன –
ராஜஸமான அஹங்காரத்துக்கு தைஜஸம் என்று பெயர் -இதற்கு தனியாக எந்த செயலும் கிடையாது –
ஸாத்விக அஹங்காரமும் தாமஸ அஹங்காரமும் தங்கள் தங்கள் செயல்களை செய்வதற்கு உதவுவதே இதன் வேலை –
தாமஸமான அஹங்காரத்துக்கு பூதாதி என்று பெயர் -அதில் இருந்து தான் ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் தோன்றுகின்றன –
நியாய மதம் படி-ஐந்து பூதங்களில் இருந்து தோன்றும் –பவ்திகம் இவை என்பர் -ஆனால் நாம்
வேதாந்தத்தில் அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை இவை என்கிறோம் –
இந்திரியங்கள்
ஞான இந்திரியங்கள் -அறிவை ஏற்படுத்தும் புலன்கள் -அவை
சஷுஸ் -நிறத்தைக் காண கண்ணில் உள்ளது
க்ராணம்-மணத்தை அறிய மூக்கில் உள்ளது
ரஸனம் -சுவையை அறிய நாக்கில் உள்ளது
த்வக் -ஸ்பர்சத்தை அறிய தோலில் உள்ளது
ஸ்ரோத்ரம் -ஒலியை அறிய காதில் உள்ளது
கர்ம இந்திரியங்கள் -செயல்கள் செய்வதற்கான புலன்கள் அவை –
வாக் -பேசுவதற்கான இந்திரியம் நாக்கில் உள்ளது
பாணி -பொருள்களைக் கையாள கைகளில் உள்ளது
பாதம் -எங்கும் திரிய கால்களில் உள்ளது
பாயு -மலம் கழிக்கும் இந்திரியம்
உபஸ்தம் -ஜலம் கழிக்கும் இந்திரியம்
மனது -மேல் சொன்ன இந்திரியங்களை எல்லாம் இயக்கும் புலன் –சிந்திப்பதற்கும் -ஆசைப்படுவதற்கும் -முடிவு எடுக்கவும் உதவுகிறது
மனதையே -புத்திக்கு எட்டுகிறது என்றும் -அஹங்காரம் -நான் என்ற நினைவு -சித்தம் -என்றும் சொல்லுகிறோம்
வெவ்வேறே வகார்யங்களை செய்வதால்
ஆலோசனை சிந்தனம் -சித்தம்
அபிமானிக்கும் பொழுது அஹங்காரம் என்கிறோம் – அகங்கார த்ரவ்யம் தத்வம் துணை கொண்டு
அத்யவசாயம் செய்யும் பொழுது மஹான் துணை கொண்டு முயடிவு எடுக்கும் பொழுது புத்தி
மனசு சஞ்சலம் -புத்தி உறுதி -புத்திமான் -மனோவான் சொல்லுவது இல்லையே –
இந்திரியங்கள் அனைத்துமே அணுவானவை -நுண்ணியவை -கண்ணுக்குத் தெரிய மாட்டா –
ஒரு ஜீவன் ஒரு சரீரத்தில் இருந்து மற்ற ஒரு சரீரத்துக்கு போகும் பொழுது –
இந்த 11 இந்திரியங்களை அழைத்துக் கொண்டு செல்கிறான் என்று வேதம் கூறுகிறது –
பிராண வாயு -இந்திரியங்கள் -இவை அனைத்தும் ஜீவாத்மா உடனே செல்லும் -வாயு மணத்தை எடுத்துச் செல்லுமா போல் –
பிரகிருதி -கார்யம் -மூல பிரகிருதி -அவிக்ருதி
பிரகிருதி விக்ருதிகள் ஏழு -காரணமாயும் காரியமாகவும் -மஹான் -அஹங்காரம் -தன்மாத்ரங்கள் -இவை நாடு நிலை
விக்ருதி – -16–ஷோடச -விகாரம் மட்டும் -11- ஐந்து பூதங்கள் -காரியப் பொருள்களாகவே இருக்கும் —
25 தத்வங்கள் -சாங்க்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் –
ந பிரகிருதி ந விக்ருதி ஜீவ தத்வம்
26 தத்வம் ஈஸ்வரன் -வேதாந்தம்
முரண்பாடு இல்லாத சாங்க்ய கொள்கைகளை கொள்ளுவோம் –
————-
பாடம் -15- ஐந்து பூதங்கள்
ப்ரக்ருதியில் முக்குணங்களும் சமமாக இருக்கும்
தார தாம்யம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் -ஸூஷ்மம் -புலன்களுக்கு தென்படாதவை –
நுண்ணியவை அல்ல -அளவால் பெரியதாக இருந்தாலும்
ஆகாசம் போல் -பெரியதாக இருந்தாலும் புலன்களுக்கு அப்பால் பட்டவை -இவை-
நியாய மதம் போல் வேறே த்ரவ்யம் என்பது இல்லை
ஒரே த்ரவ்யம் -நிலை அவஸ்தைகள் மாறும் –
தத்வம் என்பது உண்மைப் பொருள் என்றவாறு –
தன்மைகள் மாறுவதால் 24-தத்வங்கள் -வகையாக அவஸ்தா பேதம் -என்றவாறு –
பூதங்களும் தன் மாத்ரங்களும்
பிரக்ருதியில் இருந்து மஹான் தோன்றி -அதில் இருந்து அஹங்காரம் தோன்றுகிறது –
ஸாத்விகமான அஹங்காரத்தில் இருந்து 11 இந்த்ரியங்கள் உண்டாகிறது என்று பார்த்தோம்
தைஜஸம் என்கிற ராஷஸ அஹங்காரம் தனியாக எந்தக் காரியத்தையும் செய்யாது –
ஸாத்விக தாமஸ அஹங்காரங்கள் தம் தம் கார்யங்களைச் செய்ய உதவும்
தாமஸ அஹங்காரம் -பூதாதி என்று அழைக்கப்படும் –
இதில் இருந்தே பஞ்ச பூதங்களும் பஞ்ச தன் மாத்தரங்களும் தோன்றுகின்றன –
பூதங்கள் -என்றால் விசிஷ்ட ஸப்தாதி விஷய அதி கரணம்-அதாவது
சிறப்பு வாய்ந்த ஸப்தம் – ரூபம் -ரஸம் -கந்தம் -என்ற விஷயங்களை உடையது எதுவோ அதுவே பூதம் –
ஸப்தம் முதலானவற்றுக்கு சிறப்பு ஆவது எது என்றால்-
1-ஸத்வ ரஜஸ் தமஸ் குணங்களால் வரும் -ஸாந்தத்வம் -ஆனந்தம் அளித்தல் -கோரத்வம் -துக்கம் அளித்தல்-மூடத்தவம் -மயக்குதல் –
ஆகிய தன்மைகள் ஸப்தங்கள் முதலானவற்றில் உண்டு –
2- நமது புலன்களால் அறியப்படுவதும் அடுத்த சிறப்பு –ஸப்தாதி குணங்களையும் அவற்றின் தன்மைகளான
சாந்தத்வம் இத்யாதிகளை நாம் புலன்களைக் கொண்டு அறியலாம் –
தன் மாத்ரம் -என்றால் அது மட்டும் -என்று பொருள் -அதாவது எந்தப் பொருள்களில் ஸப்தம் முதலான குணங்கள் மட்டுமே இருக்குமோ –
ஆனால் அவற்றில் உள்ள ஸாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் என்ற சிறப்புகள் இருக்காதோ
அதே போல் எந்தப் பொருள்களில் இருக்கும் ஸப்தம் முதலானவற்றை நம்மால் புலன்களைக் கொண்டு அறிய இயலாதோ
அவை தன் மாத்ரங்கள் ஆகின்றன –
தத்வ முக்த கலாபத்தில் இப்படி தன் மாத்ரைகள் பூதங்கள் ஸ்ருஷ்ட்டி பற்றி ஸ்லோகம் அருளிச் செய்கிறார்
பூதங்களின் ஸ்ருஷ்ட்டி
இந்தப் பூதங்களும் தன் மாத்ரங்களும் ஸமமாக ஒரே காலத்தில் தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை அல்ல
அவற்றில் வரிசை உள்ளது
முதலில் -தாமஸ அஹங்காரத்தில் இருந்து -ஸப்த தன் மாத்ரம் தோன்றும் -அதில் ஸப்தம் என்ற குணம் இருக்கும்
ஆனால் முன் சொன்ன விசேஷம் இல்லாமல் –
அந்த ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து ஆகாசம் என்ற முதல் பூதம் தோன்றும் —
அதில் ஸப்தம் இருக்கும் -முன் சொன்ன விசேஷங்களும் இருக்கும் அந்த ஸப்தத்தை நம்மால் காதால் கேட்கவும் முடியும் –
அடுத்து ஆகாசத்தில் இருந்து ஸ்பர்ச தன் மாத்ரம் தோன்றும் -ஆகாசத்தில் இல்லாத குணமான ஸ்பர்சம் அதில் இருக்கும் –
ஆனால் வெளிப்படாமல் இருக்கும்
அடுத்து ஸ்பர்ச தன் மாத்திரத்தில் இருந்து வாயு தோன்றும் -அதில் இருக்கும் ஸ்பரிசத்தை நாம் தோல் என்ற புலனைக் கொண்டு அறிகிறோம் –
அடுத்து வாயுவில் இருந்து ரூப தன் மாத்ரம் தோன்றும் -இதில் புதிதாக ரூபம் -நிறம் -என்ற குணம் இருக்கும் —
ஆனால் வெளிப்படாமல் இருக்கும் -நம்மால் அறிய முடியாது –
ரூப தன் மாத்ரத்தில் இருந்து தேஜஸ் தோன்றும் -அதன் நிறத்தை நாம் அறியலாம்
தேஜஸ்ஸில் இருந்து ரஸ தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக ரஸம் என்ற குணம் இருக்கும் –
ஆனால் முன் சொன்ன எந்தச் சிறப்பும் இல்லாமலே இருக்கும் –
ரஸ தன் மாத்ரத்தில் இருந்து நீர் தோன்றும் -அதில் உள்ள ரஸத்தை நாம் அறியலாம்
நீரில் இருந்து கந்த தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக கந்தம் -மணம் -என்ற குணம் இருக்கும் –
ஆனால் அதில் சிறப்புகள் இல்லாத படியால் நம்மால் அறிய முடியாது –
கடைசியாக அந்த கந்த தன் மாத்திரத்தில் இருந்து பிருத்வீ தோன்றும் –
அதில் இருக்கும் கந்தத்தை -மண் வாசனையை நாம் புலன்களால் அறிகிறோம்
இதுவே தன் மாத்ரங்களும் பூதங்களும் தோற்றும் வரிசை –
பூதங்களின் தன்மைகள்
பால் தயிராக மாறும் பொழுது நடுவில் பாலாவும் தயிராகவும் இல்லாமல் -கலவமாக -இருப்பது போல்
ஒவ்வொரு பூதமும் தன் காரணத்தில் இருந்து உண்டாகும் பொழுது நடுவில் உள்ள நிலையே தன் மாத்ரங்கள் –
ஆகாசம் -ஸப்தம் மட்டும் உடையது –
ஸ்பர்சம் இல்லாததாயும் சிறப்பு வாய்ந்த ஸப்தம் உடையதாயும் இருப்பதே ஆகாசம் என்று அதன் லக்ஷணம்
இது மற்றப் பொருள்களுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் –
நியாய மதத்தில் சொல்வது போல் இது நித்தியமானது அல்ல -உண்டாகி அழியக் கூடியது தான் –
வாயு -ஸப்தமும் ஸ்பர்சமும் உடையது -ரூபம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்
நம் உடலை இயக்க உதவும் பிராண வாயுக்களும்-சரீர தாரண ஹேதுவான – ஒரு வகை வாயுவே தான் –
வாயுவை புலன்களால் அறிகிறோம்
தேஜஸ் -ஸப்தம் -ஸ்பர்சம் -ரூபம் -உடையது –
வெப்பமான ஸ்பர்சத்தை உடையது -ஒளி விடும் நிறத்தை உடையது –
ரஸம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையது என்று பல லக்ஷணங்கள் சொல்லலாம்
இது நான்கு வகைப்படும்
1-பவ்மம் -பிருத்வியை எரி பொருளாகக் கொண்டது
2-திவ்யம் -நீரை எரி பொருளாகக் கொண்டது –மின்னல் போல்வன –
3-உதர்யம் -நீரையும் நிலத்தையும் எரி பொருளாகக் கொண்டு நம் வயிற்றில் இருக்கும் நெருப்பு -ஜாடராக்னி –
4-ஆகரஜம்-எரி பொருளே இல்லாமல் சுரங்கத்தில் தோன்றும் தேஜஸ்
இது மேலும் ப்ரபா -வெளிச்சம் -என்றும்-ப்ரபாவான் -வெளிச்சத்தை உடையது என்று இருவகைப் படும் –
தீபத்தின் ஜ்வாலை ப்ரபாவான் -அதன் வெளிச்சம் பிரபா
தீபம் -வெளிச்சம் -ப்ரபாவான் -பிரபா –
தடை இருக்கும் வரை-பரவிக் கொண்டே விரிந்து கொண்டே இருக்கும் – –
ஜ்வாலை -வெளிச்சம் -குணம் த்ரவ்யத்தை விட்டு இருக்காதே –
இந்த த்ருஷ்டாந்தம் முக்கியம் -இவை இரண்டும் வேறே வேறே த்ரவ்யங்கள்
தீபத்தை விட்டு வெளிச்சம் பிரியாதே – ரத்னம் ஒளி -பிராட்டி பெருமாள் -போல்
நீர் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் உடையது -மணம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்
நிலம் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் உடையது -சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாய் இருப்பதே இதன் லக்ஷணம் –
நறு மணம் இயற்கை –
தமஸ் -நெருப்பின் அபாவம் -தனி த்ரவ்யம் மீமாம்ஸையில்
நியாய மாதத்தில் தரவ்யம் அல்ல
வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் அல்ல பிருத்வியில் ஒரு வகை என்கிறோம்
——————
பாடம் –16- அண்டங்களின் ஸ்ருஷ்ட்டி
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதைக் கீழே பார்த்தோம் –
இந்த பஞ்ச பூதங்களைக் கொண்டே பகவான் இவ்வுலகங்களை எல்லாம் ஸ்ருஷ்டிக்கிறார் –
ஆனால் இவற்றைக் கொண்டு நேரடியாக ஸ்ருஷ்டிக்க இயலாது –
மண் மணல் தண்ணீர் இவற்றை தனித்தனியாகப் படுத்தி சுவர் கட்ட முடியாதே -மூன்றையும் கலந்தே சுவர் எழுப்ப முடியும் –
அதே போல் பஞ்சீ கரணம் செய்தே ஸ்ருஷ்டிக்க முடியும் –
ஒவ்வொரு பூதத்திலும் ஒரு பாதியை விட்டுவிட்டு மீதம் உள்ள பாதியை நான்கு பங்காக்கி
ஒவ்வொரு அரைக்கால் பகுதியையும் ஒவ்வொரு பூதத்தில் கலந்து
இவ்வாறு பஞ்சீ கரணத்துக்குப் பின்னர் பிருத்வீ பூதத்தில் பாதி பிருத்வீயிலும்
அரைக்கால் பிருத்வீ பகுதி நீர் நெருப்பு காற்று ஆகாசம் -இருக்கும் ‘
இவ்வாறு ஒரு பூதத்தின் குணனும் மற்றவற்றில் தோன்றும்
இதனாலே தான் ஆகாசத்துக்கு இயற்கையாகவே நிறம் இல்லை என்றாலும் பிருத்வீ கலந்து இருக்கிற படியாலேயே –
நீலமான ஆகாசம் கண்ணில் படுகிறது –
உபநிஷத்துக்களில் சில இடங்களில் பிருத்வீ -நீர் -தேஜஸ் -மூன்றையும் கொண்டு த்ரீவித் கரணம்
சில இடங்களில் பஞ்ச பூதங்களையும் கொண்டு பஞ்சீ கரணமும்
இவற்றுடன் மஹான் அஹங்காரம் இவற்றையும் சேர்த்து சப்தீ கரணமும் சொல்லப்படுகின்றன
இவற்றில் விரோதம் எதுவும் இல்லை -அவர் ஏழு தத்வங்களையுமே கலக்குகிறார் –
பூ மண்டலம் -14 லோகங்கள் -ஏழு கடல்கள் -ஏழு தீவுகள் ஒன்றுக்கு ஓன்று சூழ்ந்து கொண்டு உள்ளன
இது தாமரை வடிவில் இருக்கும் -நடுவில் மேரு மலை –
அத்தைச் சுற்றி முதலில் உள்ள நிலம் ஜம் பூத் வீபம் -அதில் ஒன்பது நிலப்பகுதிகள் -வர்ஷங்கள் -உள்ளன
மேருவுக்குத்
தெற்கில் நாம் இருக்கும் பாரத வர்ஷம் -கிம்புருஷ வர்ஷம் -மற்றும் ஹரி வர்ஷம் மூன்றும்
வடக்கில் ரம்யகம் -ஹிரண்யகம் குரு மூன்றும்
கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேதுமால வர்ஷம்
நடுவில் இலாவ்ருத வர்ஷம்
இதில் இருக்கும் தீவுகளும் கடல்களும்
1- ஐம்பூத்வீபம் -1- உப்புத் தண்ணீர்க் கடல்
2-ப்லஷ வர்ஷம் -2- கரும்புச்சாருக் கடல்
3-சால்மலி த்வீபம் –3-கள் கடல்
4-குச த்வீபம் 4- நெய்க்கடல்
5-கிரௌஞ்ச த்வீபம் –5-தயிர்க்கடல்
6-சாக த்வீபம் –6-பால் கடல்
7-புஷ்கர த்வீபம் –7-ஸூ த்தமான நீர்க்கடல்
முதல் தீவும் கடலும் ஒரே அளவாய் இருக்கும் -அடுத்த தீவும் இவற்றில் இரண்டு மடங்கு இருக்கும்
ஏழாவது கடலைத் தாண்டினால் தமஸ் ஸூ -இருள் -இருக்கும்
பின்பு கர்த்தோதகம் -என்ற நீர் இருக்கும்
பின்பு அண்ட கடாஹம் என்ற அண்டச் சுவர் இருக்கும் –
கீழ் உலகங்கள்
அதலம்-விதலம் -நிதலம் -தலா தலம் என்கிற கபஸ்திமத் -மஹா தலம் -ஸூ தலம் -பாதாலம்
இவை வெள்ளை கருப்பு அருண நிறம் மஞ்சள் மணல் பாரங்கல் தங்கம் இவற்றால் ஆனவை
இவற்றில் தானவர்கள் கிங்கரர்கள் சர்ப்பங்கள் வாழுகிறார்கள்
இவற்றிலும் மாளிகைகள் மண்டபங்கள் கோபுரங்கள் உண்டு
இவற்றைத் தாண்டி -21 -நரக உலகங்கள்
அதற்குப் பின் தமஸ் இருட்டு
அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்
மேல் உலகங்கள்
பூ மண்டலத்துக்கு மேல் ஆறு உலகங்கள்
1-புவ லோகம் -ஒரு லக்ஷம் யோஜனை உயரம் -நமக்கும் ஸூர்யனுக்கும் இடைப்பட்ட பகுதி -கந்தர்வர்கள் வாழும் இடம் –
2-ஸூவ லோகம் -இந்திரன் வருணன் அக்னி குபேரன் போன்ற ஆதி காரிக புருஷர்கள் வாழும் இடம் –
3-மஹ லோகம் -அதிகாரத்தில் இருந்து நீங்கி அடுத்த பதவியை எதிர்பார்த்து இருப்பவர் வாழும் இடம் -ஒரு கோடி யோஜனை உயரம்
4-ஜன-சனகன் ஸனத் குமாரன் -யோகிகள் வாழும் இடம் -2 யோஜனை உயரம்
5-தப லோகம் -ப்ரஜாபதிகள் வாழும் இடம் 8 கோடி யோஜனை உயரம்
6- ஸத்ய லோகம் -ப்ரம்மா விஷ்ணு சிவன் -அவர்களை உபாசித்தவர்கள் வாழும் இடம் -48-
இவற்றுக்கும் மேல்
தமஸ் என்ற இருளும் -அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்
விளாம் பழத்தை ஓடு மூடிக் கொண்டு இருப்பது போல் இந்த அண்டத்தை 1 கோடி யோஜனை பருமனான அண்டச்சுவர் மூடிக் கொண்டு இருக்கும்
இந்த அண்டத்தை ஜலம் நெருப்பு வாயு ஆகாசம் அஹங்காரம் மஹான் அவ்யக்தம் என்கிற ஏழு தத்வங்கள் அடுத்தடுத்து சூழ்த்துக் கொண்டு உள்ளன
முன் தத்வத்தைக் காட்டிலும் அடுத்த தத்வம் பத்து மடங்கு பெரியதாய் இருக்கும் –
பத்து பத்து மடங்கு ஒவ்வொன்றும்
மஹானை சுற்றி முடிவில்லாத -சூழ்ந்து -முடிவில் பெரும் பாழ் -சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்து பரந்த -பல dimentions
சஹஸ்ராணாம் -அநந்த அண்டங்கள் இப்படி உண்டே –
அண்டங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஸ்ருஷ்டிக்கப்பட்டு அழிக்கப் படுகின்றன – வரிசையில் அல்ல
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி தானே நேராகச் செய்து அருளி
நான்முகனைக் கொண்டு வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி
காலம் நித்யவிபூதி ஞானம் ஜீவன் பரமாத்மா –ஆறு த்ரவ்யங்களையும்
அத்ரவ்யங்களையும் மேலே பார்ப்போம்
———-
பாடம் -17-காலம் –
ஆறு த்ரவ்யங்களுக்குள் முதலான ப்ரக்ருதியைப் பார்த்தோம்
ஸ்ருஷ்டிக்க வேண்டிய பொழுதை உணர்த்துவது காலம் –
ஆறு -த்ரவ்யங்கள் -நித்ய விபூதி -பரமாத்மா ஜீவாத்மா -அவர்களுடைய ஞானம் இவை மற்ற நான்கு த்ரவ்யங்கள்
அஜடமான ஸ்வயம் ப்ரகாசமானவை இவை நான்கும்
மற்றவை அத்ரவ்யங்கள்
காலத்தின் லக்ஷணம் –
முக் குணங்கள் அற்றதான ஜட த்ரவ்யம் காலம் -குண த்ரய ரஹித -ஜட த்ரவ்ய விசேஷ –
அஸ்வயம் பிரகாசம் -ஜடம் –
வெறுமனே முக்குணங்கள் அற்றதான என்று மட்டும் சொன்னால் அது ஜீவாத்மா பரமாத்மா இவர்களுக்கும் பொருந்தும் -ஆகையால் அதி வியாப்தி வரும் –
ஜட த்ரவ்யம் மட்டும் சொன்னால் அது பிரக்ருதிக்கும் பொருந்தும் -எனவே முக் குணங்கள் அற்ற ஜட த்ரவ்யம் என்றே சொல்ல வேண்டும் –
காலம் -நித்யம் -அநாதி -விபு -எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியது —
மாறிக் கொண்டே இருக்கும் -காலமே இல்லாத காலமே இல்லையே
பிரளயத்தில் அழியாதே -ஸ்ருஷ்டிக்க காலமே உணர்த்தும் -காலே ஸம்சயதி யோக்யதே -பராசர பட்டர் –
லீலா விபூதி நித்ய விபூதி முழுவதும் பரந்து விரிந்து உள்ளது –
உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் காலம் ஒரு காரணம் ஆகும்
அது தான் வினாடி நிமிஷம் நாழிகை பகல் இரவு நாள் பக்ஷம் மாஸம் அயனம் வருஷம் என்று பல பிரிவுகளைக் கொண்டது –
உருவத்தில் மாறு பாடு அல்ல
அவஸ்தா பேதம் இல்லை -குடம் மண் போல் அல்ல
காலம் அனைத்துக்கும் அதிகரணம் -தேசம் இடம் போல் –
காலக் கணக்கு
அனைவருக்கும் ஒரே மாதிரி நிகருவது இல்லை
மனிதர் -பித்ருக்கள் -தேவர் -நான்முகன் -போல் வெவ்வேறே காலக் கணக்குகள் உண்டு
நம்முடைய மாதம் -பித்ருக்களின் ஒரு நாள் -அமாவாசை -அவர்களது மதியம் -உச்சிக் காலம் -பவுர்ணமி நடு ராத்திரி –
நம்முடைய வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்
உத்தராயணம் -தை முதல் ஆனி -அவர்களுக்குப் பகல்
தஷிணாயினம் -அவர்களுக்கு இரவு –
தேவ வருஷம் -நமது -365 வருஷங்கள்
சதா யுவர்வை புருஷ அனைவருக்கும் -அவரவர் கணக்குகள் படி
அவர்கள் ஆயுஸ்ஸூ -அவர்கள் வருஷப் படியே 100-நம் கணக்கில் 36500 வருஷங்கள் –
தேவர்கள் கணக்குப்படி 12000 வருஷங்கள் ஒரு சதுர் யுகம்
க்ருத யுகம் -4000-வருஷங்கள் -பூர்வ சந்தி -400 வருஷங்கள் -உத்தர சந்தி -400 வருஷங்கள்
த்ரேதா யுகம் -3000 வருஷங்கள் -பூர்வ சந்தி -300 வருஷங்கள் -உத்தர சந்தி -300 வருஷங்கள்
த்வாபர யுகம் –2000 வருஷங்கள் -பூர்வ சந்தி -200 வருஷங்கள் -உத்தர சந்தி -200 வருஷங்கள்
கலியுகம் -1000 வருஷங்கள் -பூர்வ சந்தி -100 வருஷங்கள் -உத்தர சந்தி -100 வருஷங்கள்
உத்தர சந்தி காலமும் பூர்வ சந்தி காலமும் -இடைப்பட்ட காலம்
க்ருத யுக த்ரேதா யுக இடைப்பட்ட சந்தி காலம் -700 வருஷங்கள்
இப்படி 1000 சதுர் யுகங்கள் முடிந்தால் நான்முகனுக்கு ஒரு பகல் -அதே கால அளவுக்கு இரவு –
அப்பொழுது அண்டத்தில் மஹ லோகத்துக்கு கீழ் உள்ள 10 லோகங்களும் அழியும் -பிதுவே நைமித்திக பிரளயம்
அந்த நான்முகன் வருஷ கணக்குப்படி அவனுக்கு 100 வருஷம் ஆயுஸ்ஸூ முடிந்த பின்பு
அனைத்து உலகங்களையும் பகவான் அழித்து விடுவார் -இதுவே பிராகிருத பிரளயம்
தினமும் பிராணிகள் மரிப்பது நித்ய பிரளயம்
கர்மங்கள் விடுபட்டு முக்தி அடைவது ஆத்யந்திக பிரளயம் –
பிரளயம் -காரியப் பொருளில் லயம் அடைவது என்று பெயர்
14 மனுக்கள் படைக்கிறார் நான்முகன் -ஒரு மனுவுக்கு 71 சதுர்யுகம் -ஆட்சிக் காலம்
தர்மத்துக்கு நான்கு கால்கள்
தபஸ் -உடலை வறுத்திச் செய்யும் செயல்கள்
சவுசம் -தூய்மை
தயை -இரக்கம்
சத்யம் -உண்மை
க்ருத யுகத்தில் தர்மத்துக்கு நான்கு கால்களும் இருக்கும்
அடுத்த அடுத்த யுகத்தில் ஒவ்வொன்றாகக் குறைந்து கலி யுகத்தில் சத்யம் என்ற ஒரே காலோடு இருக்கும்
அத்தையும் கலி திருடப் பார்க்கும் -என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம் –
காலம் நித்ய விபூதியிலும் உண்டு -ஆனால் இங்கு போல் அங்கு -ஆட்சி செய்வது இல்லை –
ந கால தத்ரைவ பிரபு
காலத்தைக் கணிசியாமல் இஷ்டப்படி கைங்கர்யங்கள் செய்யலாம்
காலம் தமோ குணம் அதிகமான மஹான் என்ற தத்வம் தான் என்பர் சிலர் -அது பொருந்தாது –
ஸ்ருஷ்ட்டி நிகழ்ந்தால் தான் மஹான் தத்வம் உண்டாகும்-காலமோ ஸ்ருஷ்டிக்கு முன்பே உள்ளது என்று வேதங்கள் கூறும்
காலத்தை புலன்களைக் கொண்டு அறிகிறோம் -இப்பொழுது வருகிறார் -இங்கு குடம் உள்ளது போன்ற
பேச்சுக்கள் அறிவுகள் அனைத்தும் காலத்தையே காட்டுகின்றன -எனவே காலம் புலன்களால் அறியப்படுவதே –
——–
பாடம் -18- நித்ய விபூதி –
ஸூத்த ஸத்வம்
வேதாந்தத்தில் பொருள்களை எல்லாம் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் இரண்டாக்கப் பிரித்து
த்ரவ்யம் லக்ஷணம் -அவஸ்த்தா நிலைகளை அடைவது –
குணம் -இத்யாதிகள் அத்ரவ்யம்
அவற்றில் ஆறு த்ரவ்யங்கள் -ப்ரக்ருதி -காலம் -நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -ஞானம் —
பிரகிருதி -முக்குண மயம் -மிஸ்ர ஸத்வமானது –
காலம் -மூன்று குணங்களும் இல்லாத பொருள்
நியாயம் -மீமாம்சை வேதாந்தம் மூன்றிலும் இத்தை த்ரவ்யமாகவே கொண்டு உள்ளார்
எங்கும் பரந்து இருக்கும்
ஆகாசமும் பரந்து இருக்கும் -ஆனால் -லீலா விபூதியில் மட்டுமே –இங்கும் பிரகிருதி மஹான் இருக்கும் இடங்களில் இல்லை- –
நித்ய விபூதி -ஸத்வ குணம் ஒன்றுமே உள்ள பொருள் –மண்ணால் வீடு ஆக்கப் படுவது போல் –
ஸூத்த ஸத்வ குணம் ஒன்றாலேயே ஆக்கப்பட்டது –
எனவே இதன்-ஸூத்த ஸத்வத்தின் – லக்ஷணம் -முக்குண மயமான ப்ரக்ருதியில் இருந்து வேறு பட்டதாயும் –
ஆனால் காலம் ஜீவாத்மாவின் இருந்து வேறுபடுத்த – ஸத்வ குணம் மட்டுமே உடையதாய் இருக்கும் –
நித்ய விபூதியின் லக்ஷணம் -மிச்சம் இல்லாமல் அவித்யை என்னும் கர்மம் தொலையும் பூமி என்று சொல்லப் படுகிறது –
அசேஷ -நிஸ் சேஷ அவித்யா நிவ்ருத்தி தேஸம் -அவித்யா இங்கு கர்மம் என்ற பொருள்
மாயா அவித்யை பிரக்ருதிக்கும்
தேக ஆத்மா அபிமானத்துக்கும் அவித்யா -அஞ்ஞானம் என்று பெயர்
ஒருவன் முக்தி அடைந்து நித்ய விபூதியை அடைந்த போது தான் அனைத்துக் கர்மங்களையும் தொலைக்கிறான் –
தத்வஞ்ஞர்கள்-முஸ்யந்தே சர்வ கில்மிஷங்கள் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -விஷ்ணுவின் அந்த உயர்ந்த இடத்தை
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் -என்பதால்
முக்தி அடைபவன் ஒரு இடத்தை -பகவானை மட்டும் அல்ல –
நியாய மதத்தில் கல் போல் இருப்பதே முக்தி –
பகவானை அடைவது -ஸ்ரீ வைகுண்டம் அடைவது -கர்மங்கள் போக்கி -மூன்றாலும் பரமபதம் அடைவது சொன்னாலும் –
விஷ்ணு வாகிய ஸ்தானம் இல்லை -விஷ்ணுவுடைய ஸ்தானம் என்கிறது –
நித்ய விபூதியின் தன்மைகள் –
ஸூத்த ஸத்வத்தால் ஆக்கப் பட்டுள்ளது -பஞ்ச உபநிஷத் மயம் -பஞ்ச சக்தி மயம் –
உபநிஷத் என்றால் இங்கு ரஹஸ்யம் என்று பொருள் –
வேதங்களில் பரமேஷ்டீ -புமான் -விச்வ-நிவ்ருத்தி -ஸர்வ -என்று ஐந்து ரஹஸ்யமான பொருள்கள் –
ஐந்து அப்ராக்ருத பூதங்கள் -என்பதால் பஞ்ச உபநிஷத் மயம் –
அந்த அப்ராக்ருதமான ஐம் பூதங்களுக்கும் சக்திகள் என்றும் பெயர் -ஆகவே பஞ்ச சக்தி மயம் என்றும் சொல்வர் –
லீலா விபூதியில் நீர் நிலம் தீ காற்று ஆகாயம் -பஞ்ச பூதங்கள் போல் அவை அங்கு –
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் -இவை போன்ற குணங்களும் அங்கும் உண்டு -ஆனால் அவை திவ்யம் —
இங்கு போல் சாதாரணம் ஆனவை அல்ல –
இங்கு ஸூத்த ஸத்வமே இருக்கிற படியால் -ஞானத்தையும் ஆனந்தத்தையும் வளர்க்கும் என்பதால்
இந்த உலகமே ஞானத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும் உலகம் என்றும் சொல்லப்படுகிறது –
நித்ய விபூதி பஞ்ச சக்தி மயே -திவ்யே -ஸூத்த சத்வே -ஸூகா தரே-ஸூகத்துக்கு இருப்பிடம் – –
ஞானமும் ஆனந்தமும் வளர்க்கும் –
ஞான ஆனந்த மயா லோகாகா இருப்பிடங்கள் -பாஞ்ச ராத்ர சாஸ்திரம் சொல்லும் –
நித்ய விபூதியின் இடமும் அளவும் –
இந்த நித்ய விபூதி அளவற்றது என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன
நமது லீலா விபூதியும் அளவற்றது என்றும் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ் –
தமஸ் என்ற ப்ரக்ருதிக்கு மேலே நித்ய விபூதி உள்ளது -தமச பரஸ்தாத் –
நித்ய விபூதிக்கு மேலேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -முடிவில்லாமல் போகும் -ஆனால் அதன் கீழ் எல்லை லீலா விபூதி யாகும் –
லீலா விபூதிக்கு கீழேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -ஆனால் அதன் மேல் எல்லை நித்ய விபூதி யாகும் –
பாத அஸ்ய விச்வா பூதாநி -கால் பகுதி
திரிபாதி அம்ருதம் திவி -முக்கால் பகுதி
இந்த லீலா விபூதி பகவானின் சொத்தில் கால் பகுதி –பாதோஸ்ய நித்ய விபூதி மூன்று பங்கு -த்ரிபாத் விபூதி
ஆகவே அளவற்றதாக இருந்தாலும் லீலா விபூதி மிகச் சிறியது -நித்ய விபூதி மிகப் பெரியது என்பதைக் காட்டவே
இவ்வாறு சொல்லப்படுகிறது -மும்மடங்கு என்பது அல்ல –
மண்ணும் தங்கமும் பிருத்வி தான்
மண்ணால் ஆக்கப் பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
தங்கத்தால் ஆக்கப்பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
மண்ணால் ஆக்கப் பட்டவை காட்டிலும் பிருத்வியால் ஆக்கப் பட்டவை அதிகம் தானே –
மண் தங்கம் பஞ்சு எல்லாம் இத்தில் அடங்கும் -அதே போல் தான் இங்கும் இது சிறியது அது பெரியது என்றவாறு –
இந்த நித்ய விபூதி ஆயிரம் ஆயிரம் ஸூர்யன்களை விட மிகுந்த தேஜஸ்ஸூ கொண்டது –
நிரவதிக தேஜோ ரூபம் —துஷ் ப்ரேஷ்யம் தேவ தானவ —
ஆகவே தேவர்கள் அசுரர்கள் காண முடியாத விபூதி -என்று வேதம் கூறுகிறது –
யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் -ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –41-
———
பாடம் -19-நித்ய விபூதி
காலாதீதம் -காலத்தால் வரை அறுக்க முடியாதது
அநாதி அந்தம் –ஆதி அந்தம் இல்லாமல் என்றுமே இருக்கும்
அப்ராக்ருதம் -திவ்யம் –
ஸூத்த ஸத்வ மயம்
அ சஞ்சலம்
ப்ராப்யம்
அர்ச்சிராதி மூலம் –
அவன் திரு உள்ளத்தால் நித்தியமாக உள்ளது –
ஸூத்த ஸத்வ மயம் -நித்தியமானது -உண்டாகி அழிவது இல்லை -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டு -குறையாமலும் அசையாமலும்
சரணாகதர்களால் மட்டுமே அர்ச்சிராதி கதி மூலம் அடையப் படுகிறது –
லீலா விபூதி -அவனது விளையாட்டுக்காக -உண்டாக்கப்பட்டு அழிக்கப் பட்டு இருக்கும் –
நித்ய விபூதியோ அவனுக்கு போகத்துக்கு மட்டுமே -அழியாமல் நித்தியமாக இருப்பது –
நித்யம் என்பதால் மாறுபாடுகள் அல்ல என்று சொல்ல முடியாது -நித்ய முக்தர்கள் பகவானுக்கு ஆசைக்கு இணங்க
பல பல உருவங்களை எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறார்கள்
கூர்மாதீன் திவ்ய லோகான் -போக ஸ்தானம்
இச்சா க்ருஹீதாம்
தத் அனு மணி மயம் மண்டபம்
தத்ர சேஷம்
தர்மாதி பீடம்
ததுபரி கமலேசம்
சாமர க்ராஹணீச் ச விஷ்ணும் தேவிஹி விபூஷா ஆயுத கணம்
ச ஏகதா பவதி இத்யாதி -பல உடல்களை ஆசைப்படும் படி கொள்ளலாம் –
உடல் இருக்கும் வரை சுக துக்கம் வரும் -சரீரம் இல்லை என்பர் சிலர் -இது கர்மத்தால் வந்த சரீரம் பற்றியே
அங்கு அழுக்கு உடம்பு இல்லையே
திவ்ய மங்கள விக்ரஹம் -பல பரிணாமங்கள் அங்கும் உண்டே -இச்சாதீனம் –
ஆனந்தம் அனுபவிக்க -அனுபவிக்கப்படும் பொருள் -போக்யம் -அனுபவத்துக்கு கருவி -போக உபகரணம் –
அனுபவிக்கும் இடம் போக ஸ்தானம் -மூன்றுமே வேண்டுமே –
பரம பதத்தில் போக்யம் பகவானின் திரு மேனி
போக உபகரணங்கள் சந்தனம் மாலை போல்வன
போக ஸ்தானங்கள் கோபுரம் பிரகாரங்கள் தோட்டங்கள் போல்வன
இவை நம் ஆசைக்கு ஏற்ப நித்ய விபூதியில் தோன்றுகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன –
முக்தி அடைந்த ஆத்மாவும் வேண்டிய சரீரம் எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்யலாம் –
அந்த உடலும் ஸூத்த ஸத்வ மயம்-கர்ம வஸ்யம் அல்ல
கர்மத்தால் வந்த உடல் தான் தள்ளத் தக்கது -கைங்கர்யத்துக்காக எடுத்துக் கொள்ளும் சரீரம் கொள்ளத் தக்கதே –
பிரக்ருதியில் இருந்து –24 தத்வங்கள் மாறுவதை கீழே பார்த்தோம்
லீலா விபூதியில் இவை இருந்தாலும் ஒரே தத்வமாகவே கொள்ள வேண்டும் -இவை அனைத்தும் நித்யம் –
ஒன்றில் இருந்து மற்ற ஓன்று உண்டாவது இல்லையே –
இந்த நித்ய விபூதி -த்ரிபாத் விபூதி -பரம வ்யோமம் -பரம ஆகாசம் -பரம பதம் -அம்ருதம் —
நாகம்-துக்கம் இல்லாத இடம் -அப்ராக்ருத லோகம்
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா -அபராஜிதா -ஜெயிக்க முடியாத ஸ்தானம் –
போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் –
இந்த ஸூத்த ஸத்வ த்ரவ்யம் -அஜடமா -தானாகாத் தோற்றக் கூடியதா -ஜடமா -மற்றவற்றில் உதவியால் அறியப் படுகிறதா
சிலர் இது ஜடம் -தானாகாத் தோற்றாது -ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டே அறிய வேண்டும் என்பர்
ஆனால் உண்மையில் இது அஜடம் -அதாவது ஸ்வயம் ப்ரகாஸம் -வேறே ஒன்றை எதிர் பார்க்காமல் தானே தோற்றும் –
நான்-தன்னை அறிய ஞானம் வேண்டாமே -என்னுடைய அறிவு -கொண்டு பாஹ்ய விஷயம் அறிய
தர்ம பூத ஞானம் -தர்மி ஞானம் இரண்டும் உண்டே –
ஆத்மா தன்னைத்தானே அறிந்து கொள்ள எப்படி அறிவை எதிர்பார்க்காமல் தானாகாத் தோற்றுகிறாரோ
அதே போலவே நித்ய விபூதியை அறியவும் தன்னுடைய ஞானத்தை உபயோகிக்கத் தேவை இல்லை –
தானாகவே அறியலாம்
ஸ்வ சத்தா பாஸகம் -இருப்பதாலேயே தோன்றிக் கொண்டே இருக்கும்-ஸ்வயம் பிரகாசம்-
ஆனால் இப்பொழுது நமக்கு ஏன் தோன்ற வில்லை என்னில்
அது முக்தி அடைந்தவர்களுக்குத் தானாகவே தோற்றும் -சம்சாரிகளுக்கு அல்ல –
நான் என்கிற ஆத்மா எனக்கு ஸ்வயம் பிரகாசம்
மற்றவர் ஜீவாத்மாவை அறிய வில்லையே -நாம் ஸ்வயம் பிரகாசமாக இருந்தாலும் –
தான் தனக்கு மட்டுமே ஸ்வயம் பிரகாசம் –
அனுமானம் மூலம் அறிகிறோம் -உடலை இயக்கம் ஆத்மா இருக்க வேண்டும் -அறிவு மூலமே அறிகிறோம்
ஆகவே ஸ்வயம் பிரகாஸம் என்றால் எல்லாருக்கும் எப்பொழுதும் அறிய வேண்டும் என்பது இல்லையே –
மிஸ்ர தத்வம் -காலம் -ஸூத்த சத்வம் -இது இது என்று தோற்றம் அளிக்கும்
ஜீவாத்மா –நான் நான் என்று தோற்றம் அளிக்கும் –
அறிவு -என்ற தன்மை -குடத்தை அறிய ஞானம் மூலம் –
தன்னுடைய ஞானத்தை -அறிய இதுவும் ஸ்வயம் பிரகாசம்
பரமாத்மா –
ஞானம் -இதுவும் ஸ்வயம் பிரகாச வஸ்து -அதுவே பல பொருள்களாக ஆகாது
ஆனால் ஸூ த்த சத்வம் பலவாக அங்கு -ஆகவே இது வேறே
ஸப்தாதி குணங்களும் ஞானத்துக்கு இல்லை –
அறிவு ஒளியை கிரகிக்கும் –
ஸூத்த சத்வம் இதனாலும் வேறு பட்டது
ஆறு த்ரவ்யங்கள் –
தத்வ த்ரயம் -யதீந்த்ர தீபிகா –நியாய சித்தாஞ்சம் -இவற்றை விரிக்கும் –
சம்வித்யா நிரவத்ய ஞான ஆனந்தமே வடிவானது -நிஷ் க்ருஷ்ட சத்வம் -அவன் இச்சையால் போகத்துக்காக –
சிந்தா தூரதயா மனசுக்கு எட்டாதது -சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
கர்மங்கள் முழுவதும் போனாலே அறிய முடியும் —
————–
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply