ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-1–உயர்வற உயர் நலம் உடையவன்–சாரங்கள் —

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

———-

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

———

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

———

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

——–

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

———-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

————

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

———–

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

————–

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

——–

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

————

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -1-

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

உயர்வே பரன்-படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது
ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது
உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –
உயர்வே –என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைபோலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இ றே
அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உள்ளது எல்லாம் தான் கண்டு –பாட்டு தோறும் காட்டியவற்றை தொகுத்து அருளி

உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
1–சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
2–தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
3–தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிற விக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
4–சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்–ஆனந்தமய–ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்மா ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்
5–பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
6–சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–நேஹானா நாஸ்தி கிஞ்சன —ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும் சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்–நாமவன் —அவரிவர் ––என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்
7-தேன வினாத்ருணா க்ரமபி நசலதி – யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா -என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
8–யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
9–அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
10–ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்–திட விசும்பு –என்ற பாட்டாலே மூன்றையும் காட்டியும்
11–தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் – நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து திரி மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
12-வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
13—அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது
அத்தை பற்றி இ றே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இ றே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மயர்வேதும் -ஞான அனுதயம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் ஒன்றுமே இல்லாமல்

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூ க்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
1–இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இ றே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே
2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இ றே –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ -1-உயர்வற

தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்

———————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி

இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -2-உயர்வற

1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –

2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-

3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்

4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –

விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்

எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்

சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-

7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்

8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்

9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்

10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்

பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்

தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading