ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-7–கேசவன் தமர்–சாரங்கள் —

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———-

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம்
கீழில் திருவாய் மொழியில் ஆழ்வாரோடே வந்து கலந்த ஸர்வேஸ்வரன்
க்ருபா ப்ரவாஹம் தத் சம்பந்த சம்பந்தி பர்யந்தம் வெள்ளமிட்ட படி சொல்கிறது
கேசவன் தமரில் —

———

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நம்முடைய சம்பந்த சம்பந்திகளும் கீழும் மேலுமாக ஏழு பிறப்பும்
கேசவனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராகி விட்டார்கள் –
இப்படிப்பட்ட நல்ல சதிரைப் பெற்று நம்முடைய வாழ்வு வாய்த்த பிரகாரம் என் தான் –
ஆராலே என்னில் –
ஈஸ்வரனாய்
எனக்கு போக்யனான கரு மாணிக்கம் போன்ற வடிவு அழகை யுடையவனாய் –
அதுக்குப் பரபாகமான சிவந்து அழகிய திருக்கண்களை யுடையனாய்
அதுக்கு நித்ய லஷ்ய பூதரான நித்ய ஸூ ரிகளுக்கு நாயகனாய்
அவர்களைப் போலே என்னையும் அனுபவிப்பித்த நாராயணனாலே
எமர் கேசவன் தமரானார் -என்கிறார் –இத்யாதியால் –

———-

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

க்ருத்ஸ்னமான ஸர்வ லோகங்களுக்கும் நாதனாய்
இதுக்குப் பிரமாணம் வேதங்களாலே ஓதப்படுபவனாய்
காரணமும் -அது அடியாக வரும் கிரியையும் -தத் சாத்யமான கார்யமுமாகிற இவற்றுக்கு நிர்வாஹாகனாய்
எனக்கு ஜனகனானவனாய்
ஸ்ரீ யாகிய தெய்வப்பெண்ணும் நித்ய ஸூ ரிகளும் மற்றும் உண்டான பலரும் எல்லாரும் தொழுது ஏத்தும் படியாக நின்று
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகனாய் இருக்கிற
ஸ்ரீ மன் நாராயணனே எனக்கு ஸ்வாமி -என்கிறார் –இத்யாதியாலே –

———

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

நான் மாதவன் என்ற யுக்தி மாத்ரத்தையே கொண்டு அஞ்ஞனான என்னை
இனி மேலாகிலும் -இனி மேலுள்ள காலமாகிலும் -ஓர் அவத்யங்களும் சேரும்படி விடேன் என்று ஸங்கல்பித்து
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்து
பூர்வாகங்களையும் உத்தராகங்களையும் கெடுத்து
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்த
செந்தாமரை போலே திருக்கண்களும்
மணி பர்வதம் போலே திருமேனியையும் யுடையவன்
கோதும் அவமும் அற்றவன்
கன்னல் கட்டி போல் போக்யமானவன்
என் ஸ்வாமியான கோவிந்தன் -என்கிறார் -மாதவன் என்றதே கொண்டு-இத்யாதியால் –

————

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

கோ ஸம்ருத்தியால் உள்ள ஐஸ்வர்யத்தை உடையவன்
அத்தால் வந்த செருக்காலே குடக்கூத்து ஆடுமவன்
இவற்றுக்கு அடியான ஆபி ஜாத்யத்தை யுடையவன்
என்று இக்குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு ஹர்ஷத்தாலே கூத்தாடி
ஈஸ்வரத்வத்தையும் -ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் ஸஹ்ருதயமாகப் பாடி ஆடும்படி திருத்தி என்னை அங்கீ கரித்து
என்னால் போக்கிக் கொள்ளாத பாபங்களையும் பாறவடித்து
என்னுடைய சம்பந்தம் உடையார் ஏழு பிறப்பு தன்னைக் கிட்டுக்கையே ஸ்வ பாவமாக யுடையராம் படி பண்ணினான்
எனக்கு உபகாரகனான விஷ்ணுவே ஸர்வ ஸக்தி
அவனுக்கு மாட்டாதது உண்டோ என்கிறார் -கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்–இத்யாதியால் —

————-

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

விட்டு விளங்கா நின்றுள்ள சிவந்த ஒளியை யுடைத்தான தாமரை போலே
திருவடிகளையும் கைகளையும் கண்களையும் யுடையவன் –
விட்டு இலங்குகிற நீல ஜ்யோதிஸ்ஸை யுடைய மலை போல் இருக்கிற திரு உடம்பை யுடையவன் –
விட்டு விளங்கா நின்றுள்ள பிரகாஸத்தை யுடைய சந்திரனைப் போலே அழகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவன் –
ஸூர்ய பரிவேஷம் போலே இருக்கிற திரு ஆழியை யுடையவன் –
விட்டு விளங்கா நின்றுள்ள பிரகாசத்தை யுடைய திரு அபிஷேகத்தை யுடையவன்
ஸர்வ சேஷியான மது ஸூ தனன் -என்கிறார் –தமக்கு
இவை எல்லாம் அடைய –விட்டிலங்கு –இத்யாதியாலே –

———–

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

விரோதி நிரசன ஸ்வ பாவனாய் அவனை ஒழிய ரக்ஷகாந்தரத்தை யுடையேன் அல்லேன் -என்று
ஒன்றாலும் ஒரு கார்யம் இன்றிக்கே ஸ்தோத்ராத்மகமான பகவத் குண வ்யாப்தங்களான பாடல்களை பாடி யாடி நின்று
கல்பம் தோறும் கல்பம் தோறும் சர்வ ஜென்மங்களிலும் எதிராகவும் சூழவும் புக்கு
எனக்கு அருள் செய்கைக்காக சேஷியான த்ரிவிக்ரமனை இப்படி அநிவார்யமான
கிருபை சூழ்ந்து கொண்டது என்கிறார் -மது சூதனை யன்றி மற்றிலேன்-இத்யாதியாலே –

———-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

மூன்று அடியால் சகல லோகங்களையும் அளந்து கொண்டவன் –
திருக்கண்களாலே என்னை அளந்து கொண்டவன்
சிவந்து கனிந்த திருப்பவளத்தின் அழகிலே விளங்கா நின்றுள்ள
ஸூத்த ஸ்படிகா வர்ணமான மந்த ஸ்மிதத்தை யுடையவன் என்று என்று நினைத்து -ஸ்தோத்ரம் பண்ணி –
நிர் மமனாய் இத்திருவடிகளிலே விழுந்து கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யனான உன் திருவடிகளையே
அநந்ய ப்ரயோஜனமாகக் கொண்டு தோலும் மனஸ்ஸைத் தந்தாய்
என்னுடைய வாமனனே -நீ சமர்த்தன் காண் -என்கிறார் -திரிவிக்ரமன்-இத்யாதியாலே –

———-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

நன்மைகளைத் தருமவன் –
மரகதம் போல் வடிவு அழகை யுடையவன் –
தாமரை போல் கண்களை யுடையவன் –
மன்மதனுக்கும் ஜனகன் ஆனவன்
என்று சொல்லிச் சொல்லி திருவடிகளில் விழுந்து பரி ஸூ த்தமான ஹ்ருதயத்தை யுடையவனாய்
ஜென்ம துக்கம் நீங்கும் படி என்னை துஷ்ட ஹ்ருதயத்தைப் போக்கினாய்
என்னுடைய ஸ்ரீ தரனே -இப்படி உபகாரகனான உனக்கு
என்ன பிரதியுபகாரம் செய்வேன் -என்கிறார் –இத்யாதியால் –

———-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவன் –
சிவந்த தாமரை போல் கண்ணை யுடையவன் –
என்று இப்படி மாறாதே சொல்லி திவா ராத்ரி விபாகம் அற வாய் வெருவி அலமாப்பை அடைந்து
கண்ணீர் பிரவஹிக்கும் படி பெரு மூச்சு எறிந்து எறிந்து மருவி இருக்கிற தீ வினைகள் மாளும்படி
இப்படி பொருந்தின விஸ்லேஷ வியசனம் ஆறும்படியாக
கழிகிற காலம் தோறும் உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தாய்
என் ஹ்ருஷீகேசனே என்கிறார் -சிரீ இதரன்-இத்யாதியால் —

———-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

என்னுடைய விஷய இந்திரியங்களுக்கு நியாமகனாய் -அத்தை ப்ராப்த விஷய பிரவாகம் ஆக்கின உபகாரகன்
இலங்கையில் ராக்ஷஸ ஜாதியில் முரடரானவர்களை நிரசித்த உபகாரகன் –
நித்ய ஸூரிகளுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமா போலே எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று இப்படி சொல்லா நின்று கொண்டு ஞான பிரசுர த்வாரமாகில் நெஞ்சே -வணங்கு
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
இப்படி அறிந்து -வள வேழுலகு தலை எடுக்கிலும் அவனை விடாதே கண்டாய் –
கல்யாண குண பூர்ணனான பத்ம நாதனை விட்டுப் புறம்பே போய்
மணலை முகக்கவோ என்கிறார் -இருடீகேசன்-இத்யாதியாலே –

———–

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

ஸகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை யுடையவன் –
பேசப்புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான ஸுர்ய வீர்யாதி குண ப்ரதையை யுடையவன் –
இப்படி இருக்கிறவன் மத் ஏக சித்தன்
என்னை உண்டாக்கிக் கொண்டு எனக்கு ஒருவனுக்கும் குறைவறத் தன்னைத் தந்த பரம உதாரன் –
எனக்கு நிரதிசய போக்யமுமானவன் –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் ஸ்வ பாவத்தை யுடைய திருமலையைத்
தனக்கு வாஸஸ் ஸ்தானமமாக யுடையவன் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும்
கட்டவும் -அடிக்கவுமாம் படி வந்து அவதரித்து அத்தாலே என்னை அடிமை கொண்டவன் என்கிறாள் –இத்யாதியால் –

———-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
த்ரிவித காரணமும் தானேயாய் இருக்கும் இருப்பை அறியப் போமோ
ஆபத்சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ
மற்று ஒருவருக்கும் அன்றி -இப்படி தொழுமவர்களாய் –
தாமோதரற்கு சரீர பூதரான சிவற்கும் ப்ரஹ்மாவுக்கும் ப்ரதான
குண ஆர்னவாமாய் இருக்கும் இருப்பை எனக்கு அறிவித்தவனை
நிர்ஹேதுகமாக அவன் காட்டக் நான் கண்டால் போலே காணலாம் அத்தனை போக்கி
ஸ்வ யத்னத்தாலே பார்க்கும் அவர்களுக்கு அறியப் போமோ என்கிறார் –இத்யாதியால் –

————

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

நிகமம்
அழகிய நிறத்தை யுடையதாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரஹத்தை யுடையவனை –
நித்ய ஸூரிகளுக்கும் பிரதான புருஷனாய் இருக்குமவனை
கண்ணனாய் அவதரித்து ஆஸ்ரித ஸூ லபனாய் இருக்குமவனை
அபர்யந்தமான வ்யாமோஹத்தை யுடையவனை –
தென் குருகூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு
இவை பன்னிரண்டுமான பண்ணியே நடந்த திரு த்வாதச நாம சிஹ்னிதமான பாட்டானவை
அனுசந்திப்பார்களை சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும் -என்று
உக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -வண்ண மா மணிச் சோதியை-இத்யாதியாலே –

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -17-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமர்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—-17-

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading