ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
நீசம் து மாம் அதி கதோ யமதி ஸ்வ ஸூ க்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸுவ விரஹாக மனே அதி சங்காம்
ஷஷ்டே நிரஸ்ய த்ருட சங்க கிரா ஸடாரி
ஆத்மான் வயிஷ் வபி தத் ஆதாரதோ அப்ய நந்தத் –16-
நீசம் து மாம் -தாழ்ந்தவன்
த்ருட சங்க கிரா –வாக்காலே சிக்கென பிடித்தேன்
——–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்
ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் ஆஸ்ரித நியத த்ருஸே ந ஏக போக பிரதாநாத்
தியாக அநர்ஹ பிரகாசாத் ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் பாப பங்காத்
துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே விரஹ பய க்ருதே துர் விபேத ஆத்ம யோகாத்
நித்ய அநேக உபகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் –2-6-
1-ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் —வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே–
தன்னுடைய நிரதிசய போக்யதையை க்யாபனம் பண்ணுகையாலும் –
2–ஆஸ்ரித நியத த்ருஸே–எங்கும்
பக்க நோக்கு அறியான் -ஆஸ்ரித ஜனத்தை விட்டு அந்யத்ர கண் வைக்க மாட்டாமையாலும்
3-ந ஏக போக பிரதாநாத் –நா மருவி நன்கேத்தி இத்யாதி —
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணி -மனஸ்ஸிலே சிந்தித்து -நிர்மமராய் வணங்கி –
ஹ்ருஷ்டராய் கூத்தாடும் படி -அநேக வித அனுபவத்தைக் கொடுக்கையாலும்
4-தியாக அநர்ஹ பிரகாசாத் —-உன்னை எங்கனம் விடுகேன்–தன்னை விடுகைக்கு ஸம்பாவனை இல்லாதபடி பிரகாசிக்கையாலும்
5-ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் —உனது
அந்தமில் அடிமை அடைந்தேன்–ஆத்மாந்த தாஸ்யத்தை நிலை நிறுத்துகையாலும்
6-பாப பங்காத்—-என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்–விரோதிகளான பாபங்களை ஸ வாசனமாகப் போக்குகையாலும்
7-துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே –முடியாதது என் எனக்கேல் இனி- -சம்பந்த சம்பந்திகளும் உத்தீர்ணராம் படி துஸ் சாதனமான காரியத்தை சாதிக்கையாலும் –
8-விரஹ பய க்ருதே —-உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்–விட்டுப் பிரியப் போகிறான் -என்கிற அதி சங்கையை விளைக்கையாலும்
9-துர் விபேத ஆத்ம யோகாத் —உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா—ஆத்மாவோடு ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இருக்கையாலும்
10-நித்ய அநேக உபகாராத் —போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்-கால த்ரயத்தாலும்
மாதா பிதாக்கள் பண்ணும் உபகாரங்களையும் தான் தனக்குப் பண்ணும் உபகாரங்க ளையும் பண்ணுகையாலும்
ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் —எம்பெருமானை -வைகுந்தா மணி வண்ணனே -சதகத்திலே –
ஆஸ்ரிதர் நம்மை விடில் செய்வது என் -என்ற அதி சங்கையை யுடையனாக ஆழ்வார் அத்யவசித்து அருளினார் -என்கிறார் –
——–
ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —
பிரவேசம் –
அந்தாமத்து அன்பிலே -2-5-
ஆழ்வாரோடே வந்து கலந்து -தான் பெறாப் பேறு பெற்றானாய் இருக்கச் செய்தே
இவர் -அல்லாவியுள் கலந்த –2-5-5-என்று
தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்த வாறே
வள வேழுலகு –1-5-தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் -என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை நிவர்த்திப்பிக்கிறார் -வைகுந்த மணி வண்ணனில் -2-6–
——
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-
நித்ய விபூதி யுக்தனே –
நீல மணி போலே குளிர்ந்த ஸ்வ பாவத்தை யுடையவனே
மஹா பலி பக்கலிலே போலவே என் பக்கலிலும் இரப்பாளானாக நின்றவனே
என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து நித்ய வாசம் பண்ணிக் கழிக்கிற காலம் தோறும் எனக்கு அபூர்வவத் போக்யனானவனே –
நித்ய ஸூரிகளோடே கலந்து மேனாணித்து இருக்குமா போலவே என்னோடும் கலந்து இருக்குமவனே
செய்யப்பட்டு கடக்க அரிதான தீமையை உன் பக்கலிலே நிஷிப்த பரராய் இருப்பார்க்கு வராதபடி பரிக்ரஹித்து
ஆஸூர ப்ரப்ருதிகள் மேலே பொகடும்படியான ஸூதிதியை யுடையவனே
ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை
உன்னாலேயே உளனான நான்
த்ருடமாகப் பிடித்தேனாக திரு உள்ளம் பற்று
மாஸூச -என்கிறார் -வைகுந்தா மணி வண்ணனே-இத்யாதியாலே
——–
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-
நாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது -என்று பார்த்து
அத்யல்பமாய் இருபத்தொரு பதார்த்தமும் தன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு நோவு படாதபடியாக
தன் சங்கல்ப ஏக தேசத்திலே லோகங்களை ஒரு காலே வைத்து இனிப் பேராத படி அநந்ய ப்ரயோஜனனாய்ப் புகுந்தான் –
இப்படிப் புகுந்த அநந்தரம் அசங்குசித விகசித ஞான சாகரனாய் –
திவ்ய விக்ரஹமும் புகர் பெற்று உள் நடுக்கமும் தீர்ந்தானாய் இரா நின்றான்
போக்யனுமாயும் இரா நின்றான்
நாய்ச்சிமார் முளைத்தடத்தால் நெருக்கினாலும் அவர்கள் பக்கலில் கண் வைக்கவும் மாட்டு கிறிலன்
ஆற்றாமையால் வந்த தாபமும் தீர்ந்து திருக் கண்களுக்கும் குளிர்ந்து இரா நின்றான் -சிக்கென-இத்யாதியாலே –
——–
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நா மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –-2-6-3-
புண்டரீகாக்ஷனை
நித்ய ஸூரிகளால் ஏத்தப்படும் பிரதான புருஷனை
பரிமளம் மருவி இருந்துள்ள பூத்த திருத்துழாய் மாலையை யுடைய எம்பிரானை
பொன் மலை போல் விளங்கா நின்றவனை
நான் கிட்டி -நன்றாக ஏத்தி -நினைந்து -வணங்கி –
நாம் ஹ்ருஷ்டராய் அதுக்குப் போக்குவித்து ஆட
நாள் பூ அலருமாப் போலே ஜிஹ்வ அக்ரத்திலே விகஸியா நின்றுள்ள சந்தஸ்ஸானது
என் பக்கலிலே நிற்கும்படி யாகத் தந்த இது தன்னை ஸ்வ பாவமாக யுடைய
பரம உதாரனே -என்று வித்தர் ஆகிறார் –தாமரைக் கண்ணனை–இத்யாதியாலே –
———-
வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-
நிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே
உன்னைத் தரும் இடத்திலே மதுவைப் போக்கினால் போலே என் விரோதிகளை நிரசித்தவனே
சீரியதாக அபரிச்சேதயமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவனே –
உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே –
இப்படிப்பட்ட உன்னை நான் எப்படி விடுவேன்
என் செய்வது என்னில்
கடலோடு ஒத்து இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களை நாலு மூலையும் புக்கு வியாபித்து
நான் மறு நனைந்து ப்ரீதி பிரேரிதனாய் –
கர்ம நிபந்தனமாகவும் –
உன்னைப் பிரிந்தும் -அயோக்யன் என்று அகன்றும் -வரும் துக்கங்கள் எல்லாம் தவிர்ந்து
உஜ்ஜீவித்துப் போந்து -நிர்ப்பரனாய் இருந்து –
இனி எப்படி விடுவேன் என்கிறார் -வள்ளலே மது சூதனா-இத்யாதியால் –
———-
உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-
நான் உளேனாய்
ஸம்ஸாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து
என்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாபங்களை வாஸனையோடே போக்கி
உன் திருவடிகளிலே ஆத்மாந்த தாஸ்யத்திலே அதிகரித்த நான் இனி விட சம்பாவனை உண்டோ
பெரு வெள்ளத்துக்கு பல வாய்த் தலைகள் போலே பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்துக்குப்
போக்கு வீடாகப் பல தலைகளை யுடையனாய் -மதுபான மத்தரைப் போலே ஆடா நிற்பவனாய்
சைத்திய ஸுகுமார்ய ஸுகந்தியங்களை யுடையனான திருவனந்த ஆழ்வான் மேலே
திருப்பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தா ரூபமான யோக நித்திரையில் திரு உள்ளம் செய்த என் நாயகன் ஆனவனே
இப்படிப்பட்ட உன்னை நினைத்து வைத்து -விட பிரசங்கம் உண்டோ -என்கிறார் -உய்ந்து போந்து–இத்யாதியாலே –
————
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-
யோக்யனுமாய் -ப்ராப்தனுமான -உன்னை ப்ரீதி பிரேரிதனாய் -அநவரத பாவனை பண்ணி
காநத்திலும் பாவத்திலும் நெடிதாயும் மஹத்தாயும் இருக்கிற உன் விஷயமான ஸூக்திகளுடைய மொழியைப் பாடி
அது இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே ஆடி
என்னுடைய ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கினேன் நான் –
உன்னைப் புத்தி பூர்வகமாக அப லாபம் பண்ணின ஹிரண்யனுடைய அகன்ற மார்பைக் கிழித்து
எனக்கு உபகாரகனான பிராக்தன நரஸிம்ஹமே
இனி எனக்கு அஸக்யம் என்ன இருக்கிறது -என்கிறார் -உன்னைச் சிந்தை செய்து-இத்யாதியாலே –
———-
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-
எனக்காக்கில் இனி அப்ராப்தம் உண்டோ
பிரளய ஆபத்திலே ஸகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவனே
ப்ரீதி பூர்வகமாக தானே வந்து என்னிடத்திலே ஒரு நீராகக் கலந்தான் –
இனிப் பிரிகைக்கு ஸக்தனும் அல்லன் –
பாபத்தாலே பூர்ணமான துக்கங்களை எல்லாம் துரந்து
என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் கீழ் ஏழு படி காலும் மேல் ஏழு படி காலும்
நித்ய ஸம்ஸாரம் ஆகிற குரூரமான நரகத்தில் என்றும் கிடக்கக் கடவதான தண்மை தவிர்த்தார்கள் –
என்கிறார் -முடியாதது என் எனக்கேல்–இத்யாதியாலே –
————
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் –2-6-8-
பர்யாயேண ஸகல ஜென்மங்களும் பிறந்து நிர்ஹேதுகமாகத் திருவடிகளைக் கிட்டி
ஹ்ருதய காலுஷ்யம் தீர்ந்து
அமர்யாதமான ஆனந்த மஹா ஆர்ணவத்திலே நான் தரை காணாத படி மூழ்கினேன்
அஸூர வர்க்கத்தினுடைய பலவகைப்பட்ட ஸமூஹங்களானவை பாறிப் பாறி நீர் எழுந்து போம்படியாக
பிரதிபக்ஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு
உன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்ற இருந்தவனே –
ஸ்வாமியான நீ இனி ஒரு காலமும் உன்னை என் பக்கலிலும் நின்றும் பிரித்துக் கொண்டு
போகாது ஒழிய வேணும் -என்கிறர் -மாறி மாறிப் பல பிறப்பும்-இத்யாதியாலே —
——–
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-
ஸ்ரம ஹரமான திரு மலையில் வந்து நின்று ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை சேஷத்வத்திலே நிலை நிறுத்தினவனே –
பிராட்டியுடைய விரோதியைப் போக்கினால் போலே என் விரோதியைப் போக்கினவனே
பரந்த வடிவை யுடைத்தான மரா மரங்கள் ஏழையும் மாறு பாடு உருவும் படியாக அம்பைக் கோத்த வில்லை யுடையவனே –
பூங்கொத்தாலே நிறைந்த குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனே –
அத்தாலே அம்ருதம் போலே போக்யன் ஆனவனே –
உன்னைக் கொடு வந்து என்னுள் ஒரு நீராக்கின என் நித்ய யுவாவே
நித்ய ஸூரி பரி ப்ருடனே
இனி என்னை விட்டு எங்கே போகக் கடவை -என்கிறார் -எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்–இத்யாதியாலே –
————-
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-
நிர்வாஹகனானவனே
ஸர்வாதி கனாய் இருக்குமவனே
இப்படி இருந்து வைத்து என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையில் வந்து ஸந்நிஹிதன் ஆனவனே –
குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வாஸியா நின்றுள்ள திருமலையை யுடையவனே –
இனி விடுவேனோ என்கிறார் –இத்யாதியாலே –
—————-
கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-
திருத் துழாய் கண்ணியாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்
கமலம் போல் விஸ்திருதமான பெருத்த கண்களை யுடையவனை
அவனுடைய வ்யாமோஹ குணத்திலே அவகாஹித்து
தென் குருகூருக்கு நிர்வாஹகராய் -ஆழ்வாராய்
அனுபவத்தில் ஒன்றுமே குறையுமே அருளிச் செய்த
ஆயிரத்தில் இப்பத்து இசையோடு பாட வல்லவர்கள் யாரேனும் ஆகிலும் –
இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் என்று யுக்த அர்த்தத்தை
நிகமிக்கிறார் -கண்ணித் தண்ணம் துழாய்–இத்யாதியாலே —
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -16-பாசுரம்–
அவதாரிகை –
இதில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று
அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று
ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்
அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே
வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று
அதி சங்கை பண்ணி
அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் –
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி
அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை
வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பாஷ்யத்தை ஒருகால் -திருவாய்மொழியை சதா காலம் அனுபவிக்க -திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மா முனிகளுக்கு ஆஜ்ஞ்ஞை செய்து அருளினாரே
வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்——16–
வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
நித்ய விபூதி உக்தன்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த பின்பு –
வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று
சம்பன்னரான ஆழ்வார் –
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற
நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று
ஈஸ்வரன் விசாரித்து –
பாலாழி கண் வளரும் பண்பை கேட்டே யும் கால் ஆளும் -ஆழ்வாருக்கு -இங்கே -நைகின்ற தன்மையைக் கண்டு பெருமாள் –
நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –
உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விச்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற
உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்
ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –
வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி
துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி
ஸ்தர்யத்தைப் பிராபித்தான் –பிரசக்த கேசவன் ஆனவன் -மரகத மலை –
விஜ்ஜுர ப்ரமோதாக –அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட பிராப்தி -வன்மை அடைந்தார் -இங்கே -விடேன் சொன்னதுமே
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply