18. ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ:
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்,
த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன,
கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்,
கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.
அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.
அறிவு அல்லது ஞானம் என்பது இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது ஞேயம் என்பது
பொதுவாயுள்ள உலகப் பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன்.
இம்மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும்.
அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால் அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது.
அத்தகையவன் எதை அறிகிறான் என்ற கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பது போன்று
திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது.
கர்மத்தில் இனியது எது, இன்னாதது எது என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.
கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய இவை
அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்தும் புறக்கருவிகளாம்.
இவைகள் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன.
கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம் ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன.
ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள்.
படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய முடியும்.
அவனது உடலும் உள்ளமும் சேர்ந்தே வளரவேண்டும்.
ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான்.
முயன்று வினையாற்றும்பொழுது அது ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது.
ஆக, ஞான திரிபுடியும் கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.
ஸர்வம் இதம் அகர்தரித்வாத் யநுஸந்தாநஂ ஸத்த்வ குண வரித்த்யா ஏவ பவதி- இதி ஸத்த்வஸ்ய உபாதேயதா ஜ்ஞாபநாய -கர்மணி ஸத்த்வாதி குண கரிதஂ வைஷம்யஂ ப்ரபஞ்சயிஷ்யந் கர்ம சோதநா ப்ரகாரஂ தாவத் ஆஹ –(இனி ஸத்வ குணம் உபாதேயம் தூண்டப்போகிறான் -அதற்காக -செய்யப்படும் கர்மங்கள் -ஞானம் கர்த்தா இவை அனைத்தும் மூவகை படும் -)
৷৷18.18৷৷ஜ்ஞாநஂ கர்தவ்ய கர்ம விஷயஂ ஜ்ஞாநம்? ஜ்ஞேயஂ ச கர்தவ்யஂ கர்ம? பரிஜ்ஞாதா தஸ்ய போத்தா- இதி த்ரிவிதா -கர்ம சோதநா; -போத போத்தவ்ய போத்தா த்ரி யுக்தோ ஜ்யோதிஷ்டோமாதி கர்ம விதிஃ இத்யர்தஃ. தத்ர போத் தவ்ய ரூபஂ கர்ம த்ரிவிதஂ ஸஂகரிஹ்யதே கரணஂ கர்ம கர்தா இதி. கரணஂ ஸாதந பூதஂ த்ரவ்யாதிகம்? கர்ம யாகாதிகம்? கர்தா அநுஷ்டாதா இதி.
৷৷18.18৷৷ஏவஂ ஸாத்த்விகத்யாகோ விஷோதிதஃ; அத ததர்தஂ’நித்யஸத்த்வஸ்தஃ’ [2.45] இத்யாதிபிர்பஹுதா ப்ராக்ப்ரஸக்தஸத்த்வோபாதேயதா நிரவஷேஷஂ விஷோத்யா; தத்ர மத்யே கர்மசோதநாப்ரகாராதிகதநஂ கதஂ ஸங்கச்சதே இத்யத்ராஹ — ‘ஸர்வமிதி’. கர்மசோதநாப்ரகாரோக்திஸ்ததநுபந்திஷு ஜ்ஞாநாதிஷு குணதஸ்த்ரைவித்யஂ ப்ரபஞ்சயிதுமித்யர்தஃ.’கர்தவ்யகர்மவிஷயமித்யாதி’ ஜ்ஞாநஜ்ஞேயஜ்ஞாதரிஷப்தாஃ ஸாமாந்யவிஷயா அபி கர்மசோதநாத்ரைவித்யார்தத்வாத்விஷேஷபரா இதி பாவஃ. ஏதேந ஜ்ஞாநஷப்தஸ்யாத்ர ஷாஸ்த்ரபரத்வவ்யாக்யா நிரஸ்தா. ப்ரவர்தகவசநரூபசோதநாஸ்வரூபவிலக்ஷணாநாஂ ஜ்ஞாநாதீநாஂ கதஂ சோதநாபேதத்வோக்திஃ இத்யத்ராஹ — ‘போதபோத்தவ்யபோத்தரியுக்த’ இதி. ஜ்ஞாநாதீநாஂ சோதநாநுபந்தித்வமாத்ரேண விதாஷப்தோக்தஂ ப்ரகாரத்வமித்யர்தஃ. ஏவஂ’த்ரிவிதஃ கர்மஸங்க்ரஹஃ’ இத்யத்ர ஹேதுத்வயஸஹிதஸ்வரூபேண த்ரைவித்யம்.அநுக்தவிஷயத்ரைவித்யாந்தரோக்திஷங்காவ்யுதாஸாய த்ரிஷ்வந்யதமஂ விவிச்யத இத்யாஹ — ‘தத்ரேதி’. ஸங்க்ரஹஷப்தஸ்ய கர்மணி வ்யுத்பத்திமாஹ — ‘ஸஂகரிஹ்யத’ இதி. கர்மைவ ஸங்க்ரஹ இதி கர்மதாரயஃ? கர்மணோ வா ஸங்க்ரஹஃ. “வ்ரீஹிபிர்யஜேத” [ஆப.ஷ்ரோ.6.31.24]’தத்நா ஜுஹோதி’ [ஆப.ஷ்ரௌ.6.25.10] இத்யாதிப்ரதிபாதிதஂ க்ரியாகரணமிஹ கரணஷப்தேநோச்யதே. பலாபேக்ஷயா து கர்மண ஏவ கரணத்வாதித்யபிப்ராயேணாஹ’ஸாதநபூதஂ த்ரவ்யாதிகமிதி’. ஆதிஷப்தேந ஜாத்யாதிக்ரஹணம். நந்வத்ர ஜ்ஞாயதேநேநேதி ஜ்ஞாநஂ? ததேவ கரணமித்யுச்யதே; ஜ்ஞாநாதித்ரயமேவ ஹி கரணகர்மகர்தரிஷப்தைர்விவரிதமிதி யுக்தம்; அத ஏவ ஹி’ஜ்ஞாநஂ கர்ம ச கர்தா ச’ இத்யநந்தராநுவாதஸங்கதிரிதி சேத் — மைவஂ? ஷப்தஸ்வாரஸ்யாபாவாத்? உக்தமாத்ரஸ்ய ச ஷப்தாந்தரேண புநரபிதாநே ப்ரயோஜநாபாவாத்; உக்தாவாந்தரவிபஜநஸ்ய து விவேகோபயுக்தத்வாதிதி பாவஃ. கர்தரிகரணஸமபிவ்யாஹாராத்கர்மஷப்தோபி காரகவிஷேஷவிஷய இதி ஷங்காமபாகரோதி’கர்ம யாகாதிகமிதி’. க்ரியாஸ்வரூபஂ ஹி குணதஸ்த்ரிவிதஂ விபஜிஷ்யத இதி பாவஃ. நியோஜ்யாவஸ்ததயா’பரிஜ்ஞாதா’ இதி நிர்திஷ்ட ஏவாநுஷ்டாத்ரவஸ்ததயா புநஃ கர்மஷேஷதயா தத்ப்ரகாரத்வேந’கர்தா’ இதி வ்யபதிஷ்யத இத்யாஹ — ‘கர்தா அநுஷ்டாதேதி’.
————
ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம்.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை வருகிறது :
19. ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி
குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே,
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச-ஞானம், கர்மம், கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால்,
த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும் என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன,
தாநி அபி யதாவத் ச்ருணு-அவற்றையும் உள்ளபடி கேள்.
குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும் மூன்று வகைப்படும்.
அவற்றையும் உள்ளபடி கேள்.
ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர் இயற்றியது.
பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம். ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை
இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது.
அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம் சொல்லுவதில்லை.
பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது.
முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது.
அவைகளை உள்ளபடி கேள் என்று பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும் அவைகள் ஒவ்வும் என்பதாம்.
அதிகாரி பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும்.
உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின் பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது.
தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே.
உத்தம அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை விளங்குகிறது.
அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம் வெவ்வேறு
வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக மந்த அதிகாரிக்கும்
ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.
৷৷18.19৷৷கர்தவ்ய கர்மவிஷயஂ ஜ்ஞாநம்? அநுஷ்டீய மாநஂ ச கர்ம தஸ்ய அநுஷ்டாதா ச ஸத்த்வாதி குண பேததஃ த்ரிதா ஏவ ப்ரோச்யதே. குண ஸஂக்யாநே குண கார்ய கணநே யதாவத் ஷ்ரரிணு தாநி அபி — தாநி குணதோ பிந்நாநி ஜ்ஞாநாதீநி யதாவத் ஷ்ரரிணு.
৷৷18.19৷৷’ஜ்ஞாநஂ ஜ்ஞேயஂ பரிஜ்ஞாதா’ [18.18] இத்யுக்தா ஏவ பதார்தாஃ’ஜ்ஞாநஂ கர்ம ச கர்தா ச’ இத்யநூத்யந்தே. ஜ்ஞாதரித்வகர்தரித்வயோரவஸ்தாபேதமாத்ரத்வாத் ஜ்ஞாநோக்த்யைவ ஜ்ஞாதுரபி ஸித்தேரிஹாநுக்திஃ; ஜ்ஞேயஷப்தஸ்ய ச கர்மவிஷயத்வாத். கரணஂ து கர்மாநுப்ரவிஷ்டத்வாந்ந பரிதக்விபஜிஷ்யதே. குணஸங்க்யாநஷப்தேந ஸாங்க்யராத்தாந்தவிவக்ஷாயாஂ ப்ரமாணாபாவாத்ப்ரகரிதே சாநுபயோகாத் குணஸ்வரூபகணநே ச ஜ்ஞாநாதேரநுப்ரவேஷாபாவாத்’குணகார்யகணந’ இத்யுக்தம்.’யதாவச்சரிணு’ யதாவச்ரவணயோக்யமவதாநஂ குர்வித்யர்தஃ.’யதாவத்’ இதி விவக்ஷிதஂ ப்ரகாரமாஹ’குணதோ பிந்நாநீதி’.
——————
20. ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்
ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான,
ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும்,
அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை,
ஈக்ஷதே – காணுகிறானோ,
தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்தி-அந்த ஞானத்தை சாத்விகம் என்று அறி .
பிரிவு பட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.
பிரகிருதியின் கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா காரியங்களே.
அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து. ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது.
ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து;
கூடுதல் குறைதல் என்பது அதற்கு இல்லை. ஆகையால் அது அழியாதது. ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை.
அங்ஙனம் வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக வடிவெடுக்கவில்லை.
துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி அறிவது சாத்விக ஞானமாம்.
காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை.
பரம் பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
৷৷18.20৷৷ப்ராஹ்மண க்ஷத்ரிய ப்ரஹ்மசாரி கரிஹஸ்தாதி ரூபேண விபக்தேஷு ஸர்வேஷு பூதேஷு கர்மாதிகாரிஷு யேந ஜ்ஞாநேந ஏக ஆகாரம் ஆத்மாக்யஂ பாவஂ தத்ர அபி அவிபக்தஂ ப்ராஹ்மணத்வாத் யநேக ஆகாரேஷு அபி பூதேஷு ஸித தீர்காதி (உயரம் குள்ளம் போன்ற )விபாக வத்ஸு ஜ்ஞாநைக ஆகாரஂ ஆத்மாநஂ விபாக ரஹிதம். அவ்யயஂ வ்யய ஸ்வபாவேஷு அபி ப்ராஹ்மணாதி ஷரீரேஷு அவ்யயம் -அவிகரிதஂ பலாதி ஸங்க அநர்ஹஂ ச கர்மாதிகார கேலாயாம் ஈக்ஷதே? தத் ஜ்ஞாநஂ ஸாத்த்விகஂ வித்தி.(மாடுகள் பல வர்ணங்கள் பால் வெள்ளை தானே )
৷৷18.20৷৷ஸாத்த்விகஜ்ஞாநாதிகதநஂ கர்தரித்வே குணபாரதந்த்ர்யஜ்ஞாபநார்தம்; ஸர்வபூதஷப்தபிப்ரேதமநாத்மவித்பிரநுஸஂஹிதஂ பாஹ்யவைசித்ர்யமாஹ — ‘ப்ராஹ்மணேத்யாதிநா’. ஜ்ஞாநஷப்தஸ்யாத்ர ப்ரகரிதகர்மசோதநாநுபந்திகர்மாநுஷ்டாநதஷாபாவிஜ்ஞாபநபரத்வாத்’கர்மாதிகாரிஷ்விதி’ பூதாநி விஷேஷிதாநி. பாவஷப்தோத்ர பதார்தபர்யாயஃ.’ஏகமிதி’ ஜாத்யைக்யவிவக்ஷயோச்யதே; ஆத்மபஹுத்வஸ்ய ப்ராகேவ ஸமர்திதத்வாத்? அத்வைததர்ஷநஂ ஸாத்த்விகஜ்ஞாநமிதி பரோக்தஸ்ய நிர்மூலத்வாத்?’நாநாபாவாந்’ [18.21] இதி ச அநந்தரஂ பஹுத்வோக்தேஃ? ஸாம்யாநுஸந்தாநப்ரபஞ்சநஸ்யாத்ர ப்ரத்யபிஜ்ஞாநாத்? கர்தேதி ப்ரகரிதப்ரத்யகாத்மவிஷயத்வௌசித்யேந பரமாத்மபரத்வாயோகாச்சேத்யபிப்ராயேணாஹ’ஆத்மாக்யமிதி’.’ஸிததீர்கேத்யாதிநா’ -‘கவாமநேகவர்ணாநாஂ க்ஷீரஸ்ய த்வேக(க்ஷீரஸ்யாப்யேக)வர்ணதா’ [அ.பிந்தூ.19] இத்யாதிஷ்ருதிஸூசநம். அத்ர ஸர்வபூதஷப்தேந ப்ராஹ்மணத்வாதிஜாதிக்ரஹணாத்குணாத்யவாந்தரவிபாகபரோவிபக்தஷப்த இதி ச பாவஃ. கேநாகாரேணைகத்வம் இத்யத்ராஹ’ஜ்ஞாநாகார’ இதி. ப்ரதிஷித்த்யமாநஸ்ய வ்யயஸ்ய ப்ரஸஞ்ஜகமாஹ’வ்யயஸ்வபாவேஷ்வபீதி’. ப்ராகுக்தஂ பலாதிஸங்கரூபவிகரிதிராஹித்யமப்யவிகரிதத்வபரேணாவ்யயஷப்தேந ஸஂகரிஹீதமித்யாஹ’பலாதிஸங்காநர்ஹஂ சேதி’. ஸங்கோத்ர ஸம்பந்தஃ; அநுபவ இத்யர்தஃ. இச்சாபரத்வேபி போகோர்தஸித்தஃ. கர்மசோதநாநுபந்திஜ்ஞாநபலத்வாத்’கர்மாதிகாரவேலாயாமித்யுக்தம்’.’மயேதஂ கர்தவ்யஂ’ இத்யநுஸந்தாநதஷாயாமித்யர்தஃ. யேந ஜ்ஞாநேநேக்ஷதே விஷயீகரோதீத்யர்தஃ.
——————
21. ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்
து யத் ஜ்ஞாநம்-ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக,
ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும்,
ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்,
ப்ருதக்த்வேந வேத்தி-பிரித்துக் காணும்,
தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்தி-அந்த ஞானம் ராஜசம் என்றுணர்.
உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.
ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள் இருக்கின்றன
வென்றும் அறிவது ராஜஸ அறிவு. பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம்.
தாதுவில் படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம். அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை.
அழுக்கு நீங்கப்பெற்ற பின் தூய தங்கம் ஒரே பாங்குடையது. இது இன்ன தேசத்துத் தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது.
உபாதி பேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு.
உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்ம சொரூபம் யாண்டும்
ஒன்றே என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை.
வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.
৷৷18.21৷৷ஸர்வேஷு பூதேஷு ப்ராஹ்மணாதிஷு ப்ராஹ்மணாத்ய ஆகார பரிதக்த்வேந ஆத்மாக்யாந் அபி பாவாந் நாநா பூதாந் ஸித தீர்காதி பரிதக்த்வேந ச பரிதக் விதாந் பலாதி ஸஂயோக யோக்யாந் கர்மாதிகார வேலாயாஂ யத் ஜ்ஞாநஂ வேத்தி தத் ஜ்ஞாநஂ ராஜஸஂ வித்தி.
৷৷18.21৷৷’பரிதக்த்வேந ச பரிதக்விதாந்’ பரிதக்த்வேந விஷேஷிதாநித்யர்தஃ. பரிதக்த்வாதிஷப்தாநாஂ புநருக்திபரிஹாராயாஹ’ப்ராஹ்மணாத்யாகாரபரிதக்த்வேநேதி”ஸர்வேஷு பூதேஷு’ இதி விஷிஷ்டாநுவாதஃ; தத்ர’பாவாந்’ இதி விஷேஷ்யநிஷ்கர்ஷ இத்யபிப்ராயேணாஹ’ஆத்மாக்யாநபி பாவாநிதி’. ஜாதிபேதவிஷேஷ்யபேதகுணாதிபேதபரதயா பரிதக்த்வநாநாத்வபரிதக்விதஷப்தாநாமபுநருக்திஃ. உக்தவ்யதிரேகபரதயா பலாதிஸஂயோகயோக்யத்வோக்திஃ.’ஜ்ஞாநஂ வேத்தீதி’ கர்தரித்வோபசாரஃ.
———————-
22. யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்
து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை,
க்ருத்ஸ்நவத் ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும்,
அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும்,
அல்பம் ச-அற்பத் தன்மை உடையதும்,
தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று கூறப்படும்.
காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.
பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது.
கல்லால் அல்லது மரத்தால் செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர்.
அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும்.
ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும். தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும்,
கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறியான்.
விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர்.
புல்லறிவாளர்க்கு இது விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால்
அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது.
உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று விளைவதில்லை.
ஆக, அது அற்பமானதென்று இயம்பப்படுகிறது.
৷৷18.22৷৷யத் து ஜ்ஞாநம் ஏகஸ்மிந் கார்யே ஏகஸ்மிந் கர்தவ்யே கர்மணி ப்ரேத பூத கணாத் யாராதந ரூபே அத் யல்ப பலே கரித்ஸ்ந பலவத் ஸக்தம் அஹேதுகஂ வஸ்துதஃ து அகரித்ஸ்ந பலவத் தயா ததாவித ஸங்க ஹேது ரஹிதம்; அதத்த்வார்தவத் பூர்வவத் ஏவ ஆத்மநி பரிதக்த்வாதி (ஜாதி குண பேதங்கள் )யுக்த தயா மித்யா பூதார்த விஷயம்? அத் யல்ப பலஂ (ஸ்வரூபத்தால் கீழ் இங்கு பலத்தால் அல்பம் )ச ப்ரேத பூதாத் யாராதந ரூப விஷயத்வாத் அல்பஂ ச? தத் ஜ்ஞாநஂ (நல்ல -விபரீத அஞ்ஞானம் எல்லாவற்றிலும் ஞான பத பிரயோகம் உண்டே )தாமஸம் உதாஹரிதம்.
ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநஸ்ய அதிகார வேலாயாம் அதிகார்யஂ ஷேந குணதஃ த்ரைவித்யம் உக்த்வா அநுஷ்டேயஸ்ய கர்மணோ குணதஃ த்ரைவித்யம் ஆஹ —
৷৷18.22৷৷கார்யஷப்தோத்ர நோத்பத்திமாத்ரபரஃ? ஸ்வகர்தவ்யவிஷயத்வாத்; ஏகஷப்தஷ்ச ஸங்காநர்ஹத்வாய பலத்வாரா பரிமிதபரஃ; தஸ்யாபி ஹேதுஃ ப்ராகுக்தபரிமிதஷக்தீநாமாராதநத்வமித்யபிப்ராயேணாஹ’ஏகஸ்மிந் கர்தவ்யே கர்மணி ப்ரேதபூதகணாத்யாராதநரூபேத்யல்பபல’ இதி. கர்மஸ்வரூபகார்யமாத்ரஸ்யாபி ஸங்கயோக்யத்வாபாவஃ; தத்ராபி பலவிவக்ஷாயாமாஹ’கரித்ஸ்நபலவதிதி’; கரித்ஸ்நபலஹேதுபூதகர்மணீவேத்யர்தஃ. கார்யபூதஸ்ய ஜ்ஞாநஸ்ய ஸங்கஸ்ய வா காரணமாத்ரநிஷேதாயோகாத் ப்ரேக்ஷாவத்ஸங்கஹேதுரிஹ ப்ரதிஷித்யத இத்யாஹ’வஸ்துத’ இதி.’அஹைதுகம்’ இதி பாடேபி ஹைதுகாதந்யத்வவிவக்ஷயாயமேவார்தோ க்ராஹ்யஃ.’பூர்வவதேவேதி’? ராஜஸவதித்யர்தஃ.’ஏகஸ்மிந்கார்யே ஸக்தமஹேதுகம்’ இத்யநேநைவால்பபலத்வஸித்தேஃ கத்யோதப்ரகாஷவத்ஸ்வரூபத ஏவால்பத்வஂ ஸ்வாரஸிகமல்பஷப்தேந விவக்ஷிதமித்யபுநருக்திரித்யபிப்ராயேண’அத்யல்பபலஂ ச ப்ரேதபூதாத்யாராதநரூபவிஷயத்வாதல்பஂ சேத்யுக்தம்’.’ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ [14.17] இதி பூர்வோக்தஂ து ராஜஸதாமஸஜ்ஞாநயோரஜ்ஞாநத்வவிவக்ஷயா. உக்தஂ ஹி’ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநஂ யததோந்யதா’ [13.11] இதி.
——————–
23. நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே
யத் கர்ம-எந்த செய்கை,
நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி,
அபலப்ரேப்ஸுநா-பயனைக் கருதாமல்,
அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி,
க்ருதம்-செய்யப் படுகிறதோ,
தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக மெனப்படும்.
பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை,
சாத்விக மெனப்படும்.
சுவாசிப்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது.
ஒருவனுக்கு நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது.
கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய கர்மமாகும்.
உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய கர்மமாகாது.
அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி
சமுதாயத்தில் எல்லார்க்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது
அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய மேலான கடமையுண்டு.
அதை முறையாகச் செய்யவேண்டும்; சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும்.
பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும். பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும்
கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான். அது சாத்விகமான கர்மமாகும்.
சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை.
கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான்.
இரவில் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.
ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநஸ்ய அதிகார வேலாயாம் அதிகார்யஂ ஷேந குணதஃ த்ரைவித்யம் உக்த்வா அநுஷ்டேயஸ்ய கர்மணோ குணதஃ த்ரைவித்யம் ஆஹ –(ஞான பேதங்கள் பார்த்த பின்பு- கர்ம பேதங்கள் பற்றி அருளிச் செய்கிறான் )
৷৷18.23৷৷நியதஂ ஸ்வ வர்ண ஆஷ்ரம உசிதஂ ஸங்கரஹிதஂ கர்தரித்வாதி ஸங்க ரஹிதம்? அராக த்வேஷதஃ கரிதஂ கீர்தி ராகாத் அகீர்தி த்வேஷாத் ச ந கரிதம்? அதம்பேந கரிதம் இத்யர்தஃ; அபல ப்ரேப்ஸுநா அபலாபி ஸந்திநா கார்யம் இதி ஏவ கரிதஂ யத் கர்ம தத் ஸாத்த்விகம் உச்யதே.
৷৷18.23৷৷’அதிகார்யஂஷேநேதி’ — அவிபக்தத்வவிபக்தத்வாதிவிஷேஷிதகர்மாதிகாரிஸ்வரூபாநுஸந்தாநேநேத்யர்தஃ. விஷிஷ்டே கர்மணி விஷேஷணதயாதிகாரிணோஂஷத்வோக்திஃ. யத்யபி ஸங்கஷப்தோ விபஜ்ய பலஸங்ககர்தரித்வத்யாகப்ரதிபாதநே விஷேஷவிஷயஃ? ததாபி’ஸங்கரஹிதம்’ இத்யத்ர ஸங்கோசகாபாவாதபேக்ஷிதத்வாச்ச கண்டோக்தபலப்ரேப்ஸாதிரிக்தஸாமாந்யவிஷய இத்யாஹ’கர்தரித்வாதிஸங்கரஹிதமிதி’. ஆதிஷப்தேந மமதா கரிஹ்யதே.’முக்தஸங்கோநஹஂவாதீ’ [18.26] இத்யாதிகதிதஃ கர்தரிதர்ம இஹ தத்த்வாரா கர்மவிஷேஷணத்வேந யோஜிதஃ. ப்ரஹ்மணி ராகாத்ஸஂஸாரத்வேஷாச்ச க்ரியமாணஸ்ய கர்மணஃ கதமராகத்வேஷதஃ கரிதத்வஂ இத்யத்ராஹ — ‘கீர்திராகாதகீர்தித்வேஷாச்சேதி’. ஸங்கஷப்தபுநருக்திஷ்சாநேந பரிஹரிதா. அகாரஸ்யாஸமஸ்தத்வவிவக்ஷயா வா பலிதத்வோக்திவிவக்ஷயா வா’ந கரிதமித்யுக்தம்’.’தபோ தம்பேந சைவ யத்’ [17.18] இத்யாத்யுக்தப்ரதிஷேதார்தமிதமித்யபிப்ராயேணாஹ — ‘அதம்பேநேதி’.’கார்யமித்யேவேதி’ ஸாத்த்விகத்யாகஸ்மாரணம்.
———————
24. யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந:
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்
து யத் கர்ம-ஆனால் எந்த செயல்,
புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்,
வா ஸாஹங்காரேண-அல்லது அகங்காரமுடையவனால்,
பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை,
தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது ராஜசம் எனப்படும்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த
ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.
ஆசையில் இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துணைபுரிவது.
அருள் தாகம், சீலத்தில் விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும் ஆசைகளாகின்றன.
ஆனால் மனிதனை உலக பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான ஆசைகளை அகற்றவேண்டும்.
முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும்.
ஆனால் பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும் யந்திரமாய் மாறிவிடலாகாது.
அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.
சரீரம் உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது,
கொழுக்கச் செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும். கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி அதனால் அனர்த்தமாய்ப் போகிறது.
தனக்கு நிகரானவர் யார் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து உண்டானது.
சரீரம் ஈசனுடைய ஆலயம் என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.
துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது;
என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற அகங்காரந்தான்.
৷৷18.24৷৷யத் து புநஃ காமேப்ஸுநா பல ப்ரேப்ஸுநா ஸ அஹஂகாரேண வா? வா ஷப்தஃ சார்தே? கர்தரித்வ அபிமாந யுக்தேந ச? (வா-ஷப்தஃ-இதுவோ அதுவோ என்று இல்லாமல் மூன்றும் சேர்ந்தே வரும் )பஹுல ஆயாஸஂ யத் கர்ம க்ரியதே? தத் ராஜஸம் — (லகு ஆயாசம் சாத்விகத்துக்கு-செய்த கர்மத்தால் அவன் திருப்தி அடைந்து லகுவாக ஆக்கி அருளுவான் அன்றோ )’பஹுல ஆயாஸம் இதஂ கர்ம மயா ஏவ க்ரியதே’ இத் யேவஂ ரூப அபிமாந யுக்தேந யத் கர்ம க்ரியதே தத் ராஜஸம் இத்யர்தஃ.
৷৷18.24৷৷’காமேப்ஸுநா’ இத்யநேந’அபலப்ரேப்ஸுநா’ [18.23] இத்யுக்தவிபரீதோக்தஂ வ்யநக்தி — ‘பலப்ரேப்ஸுநேதி’. ஸம்பந்தஸாமாந்யஷஷ்ட்யாத்ர ஸமாஸஃ. அத்ர விகல்பாத்யஸம்பவாத்’வாஷப்தஷ்சார்த’ இத்யுக்தம். ப்ரவரித்திப்ரதாநரஜோமூலதயாநுபயுக்தப்ரயாஸமிஷ்ரணாத்பஹுலாயாஸத்வம். தத்ர ச ஸர்வத்ர ஸ்வயமேவ ஹேதுரித்யபிமாநஃ ஸாஹங்காரஷப்தேந விவக்ஷிதஃ. தத ஏவ பஹுலாயாஸபதஂ ச ஸப்ரயோஜநமித்யபிப்ராயேணாஹ’பஹுலாயாஸமிதஂ கர்ம மயைவேதி’.
———————
25. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே கர்ம யத்தத் தாமஸமுச்யதே
யத் கர்ம அநுபந்தம்-எந்தச் செய்கையின் பின்விளைவையும்,
க்ஷயம்-அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்,
ஹிம்ஸாம்-துன்பத்தையும்,
பௌருஷம் ச-செய்வானது திறமையையும்,
அநவேக்ஷ்ய-கருதாமல்,
மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ,
தத் தாமஸம் உச்யதே -தாமச மெனப்படும்.
செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும்,
செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.
தமோகுணம் நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று விளைவது நன்மையா, கேடா என்று
எண்ணிப் பார்க்கும் நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள் நஷ்டமும்
சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு மட்டுமல்ல,
மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது. தான் படைத்துள்ள திறமையானது தான்
எடுத்துக் கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான்.
விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.
மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள்.
கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும்.
அவ்வித எளிய மனதை யுடையவர்க்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம்.
ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு.
பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது.
எப்பொழுதும் மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக
மனதிலே விசாரணை செய்து பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.
৷৷18.25৷৷கரிதே கர்மணி அநு பத்த்யமாநஂ துஃகம் அநுபந்தஃ? க்ஷயஃ கர்மணி க்ரியமாணே அர்த விநாஷஃ? ஹிஂஸா தத்ர ப்ராணி பீடா? பௌருஷம் ஆத்மநஃ கர்ம ஸமாபந ஸாமர்த்யம்? ஏதாநி அநவேக்ஷ்ய அவிமரிஷ்ய மோஹாத் பரம புருஷ கர்தரித்வ அஜ்ஞாநாத் யத் கர்ம ஆரப்யதே க்ரியதே? தத் தாமஸம் உச்யதே.
৷৷18.25৷৷க்ஷயஷப்தேந தாதாத்விகார்தவ்யயதோஷவிவக்ஷணாதுபஸர்கஷக்த்யா சாநுபந்தஷப்த ஏதத்ஸம்பந்திதயா பஷ்சாத்பாவிதுஃகபர இத்யாஹ’கரிதே கர்மணீதி’. ஹிஂஸா ஸ்வவிஷயா பரவிஷயா சேத்யபிப்ராயேண’தத்ர ப்ராணிபீடேதி’. ஸாமாந்யோக்திஃ. தைவப்ரதிஸம்பந்திநஃ பௌருஷஸ்ய புருஷஸம்பந்திதரிஷ்டஸாமக்ரீஸமவதாநரூபதாமாஹ’ஆத்மநஃ கர்மஸமாபநஸாமர்த்யமிதி’. பவிஷ்யதோநுபந்தாதேஃ ஸாக்ஷாத்காராஸம்பவாத்யுக்திபிராகமைஷ்ச அபராமர்ஷோத்ராநவேக்ஷணமித்யாஹ’அவிமரிஷ்யேதி’. அநுபந்தாத்யஜ்ஞாநஸ்ய ப்ராகுக்தத்வாத்ப்ரக்ராந்தாகர்தரித்வஜ்ஞாநப்ரத்யநீகோத்ர மோஹஷப்தார்த இத்யாஹ — ‘பரமபுருஷேதி’.
——————-
ஞானத்தையும் கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.
26. முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே
முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும்,
அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்,
த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்,
ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்,
கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.
நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.
எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான்.
எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான்.
அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்;
அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை.
தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.
பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று
எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற
திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.
கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட
மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல,
கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.
৷৷18.26৷৷முக்த ஸங்கஃ பல ஸங்க ரஹிதஃ? அநஹஂவாதீ கர்தரித்வ அபிமாந ரஹிதஃ; தரித் யுத்ஸாஹ ஸமந்விதஃ? ஆரப்தே கர்மணி யாவத் கர்ம ஸமாப்த் யவர்ஜநீய துஃக தாரணஂ தரிதிஃ? உத்ஸாஹஃ உத் யுக்த சேதஸ்த்வம்? தாப்யாஂ ஸமந்விதஃ; ஸித்த்ய ஸித்த்யோஃ நிர் விகாரஃ யுத்தாதௌ கர்மணி ததுபகரண பூத த்ரவ்யார்ஜநாதிஷு ச ஸித்த் யஸித்த்யோஃ அவிகரி சித்தஃ கர்தா ஸாத்த்விக உச்யதே.
৷৷18.26৷৷’அநஹஂவாதீ’ இத்யநேந கர்தரித்வாபிமாநரூபஸங்கஸ்ய பரிதங்நிஷேதாத்’முக்தஸங்கஃ’ இத்யத்ர ஸங்கஷப்தஃ ஸங்குசிதவிஷய இத்யாஹ — ‘பலஸங்கரஹித’ இதி. தத ஏவ கர்மணி ஸ்வகீயதாநுஸந்தாநரூபஸங்கோபி ப்ரதிஷித்தஃ. அஹஂவதநஷீலோஹஂவாதீ? ததந்யோநஹஂவாதீ? தத்ர மநஃபூர்வா ஹி வாகித்யபிப்ராயேணாஹ’கர்தரித்வாபிமாநரஹித’ இதி. கர்தரித்வஸ்ய விவிச்யமாநத்வாத்ததுபயுக்தா தரிதிரிஹ விவக்ஷிதேத்யாஹ’ஆரப்த’ இதி. ப்ரயத்நரூபஸ்யோத்ஸாஹஸ்ய கர்தரிஷப்தேநைவ ஸித்தத்வாத்ராஜஸாதிகர்தரிஸாதாரண்யாச்ச விஷேஷவிவக்ஷாமாஹ — ‘உத்யுக்தசேதஸ்த்வமிதி’.’முக்தஸங்கஃ’ இத்யநேந ஸ்வர்காதிபலஸங்கநிவரித்தேருக்தத்வாத்’ஸித்த்யஸித்த்யோர்நிர்விகாரஃ’ இத்யஸ்ய தரிஷ்டபலவிஷயதாமாஹ’யுத்தாதாவிதி’. முக்தஸங்கத்வபலஂ வா நிர்விகாரத்வம்.
——————-
27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:
ராகீ-வேட்கையுடையோன்,
கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன்,
லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்),
ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன்,
அஸுசி:-தூய்மை யற்றோன்,
ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்,
கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்
வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன்,
களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.
ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக் கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான்.
அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும்,
பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை.
விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான்.
வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.
ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.
வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென
அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச்
சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும்
மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.
৷৷18.27৷৷ராகீ யஷோர்தீ? கர்ம பல ப்ரேப்ஸுஃ கர்ம பலாதீஂ? லுப்தஃ கர்மாபேக்ஷித த்ரவ்ய வ்யய ஸ்வபாவ ரஹிதஃ; ஹிஂஸாத்மகஃ பராந் பீடயித்வா தைஃ கர்ம குர்வாணஃ? அஷுசிஃ கர்மாபேக்ஷித ஷுத்தி ரஹிதஃ? ஹர்ஷ ஷோகாந்விதஃ யுத்தாதௌ கர்மணி ஜயாதி ஸித்த் யஸித்த்யோஃ ஹர்ஷ ஷோகாந்விதஃ கர்தா ராஜஸஃ பரிகீர்திதஃ.
৷৷18.27৷৷’கர்மபலப்ரேப்ஸுஃ’ இத்யநேநாநுஷ்ரவிகஸ்வர்காதிபலார்தீ த்வஸ்யாபிதாநாத்’ராகீ’ இத்யாநுஷங்கிகதரிஷ்டபலஸங்கவிவக்ஷாமாஹ’யஷோர்தீதி’. அபாத்ரவ்யயாதிராஹித்யஸ்ய குணத்வாத்’கர்மாபேக்ஷிதேதி’ விஷேஷிதம்.’காமமாத்மாநஂ பார்யாஂ புத்ரஂ வோபருந்த்யாந்ந த்வேவ தாஸகர்மகரம்’ [ஆ.த.2.4.9.11] இத்யாத்யுக்தவிபரீதஸ்வபாவதாத்ர ஹிஂஸாத்மகஷப்தேந விவக்ஷிதேத்யாஹ’பராந்பீடயித்வேதி’. கர்தரித்வோபயோகாய’தைஃ கர்ம குர்வாண’ இதி பலிதோக்திஃ. ஏவஂ’கர்மாபேக்ஷிதஷுத்திரஹித’ இத்யபி ந ஹி தர்ஷநஸ்பர்ஷநாதியோக்யஷுசித்வமாத்ரேண கர்மண்யதாநிஷ்பத்திரிதி பாவஃ.
—————
28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோऽலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே
அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்,
ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன்,
ஸட:-வஞ்சகம் உடையவன்,
நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்,
விஷாதீ-கவலை கொண்டவன்,
அலஸ:-சோம்பேறியும்,
தீர்கஸூத்ரீ ச-காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,
கர்தா தாமஸ உச்யதே – இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்
யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி,
ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,
இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.
அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத
மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன்.
வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது
தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான்.
பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான்.
செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும்
தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து
பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி
யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு
நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.
ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து
வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன.
ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய்விட்டன.
உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர்.
1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.
৷৷18.28৷৷அயுக்தஃ ஷாஸ்த்ரீய கர்மாயோக்யஃ விகர்மஸ்தஃ? ப்ராகரிதஃ அநதிகத வித்யஃ? ஸ்தப்தஃ அநாரம்ப ஷீலஃ? ஷடஃ அபிசாராதி கர்ம ருசிஃ? நைஷ்கரிதிகஃ வஞ்சந பரஃ? அலஸஃ ஆரப்தேஷு அபி கர்மஸு மந்த ப்ரவரித்திஃ. விஷாதீ அதிமாத்ராவஸாத ஷீலஃ? தீர்க ஸூத்ரீ அபிசாராதி கர்ம குர்வந் பரேஷு தீர்க கால வர்த்யநர்த பர்யாலோசந ஷீலஃ? ஏவஂ பூதோ யஃ கர்தா ஸ தாமஸஃ.
ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநே கர்தவ்யே ச கர்மணி அநுஷ்டாதரி ச குணதஃ த்ரைவித்யம் உக்தம்? இதாநீஂ ஸர்வ தத்த்வ ஸர்வபுருஷார்த நிஷ்சய ரூபாயா புத்தேஃ தரிதேஃ ச குணதஃ த்ரைவித்யம் ஆஹ —
৷৷18.28৷৷அவதாநாபாவாதேஃ’ப்ராகரிதஃ’ இத்யாதிநா ஸித்தேரயுக்தஷப்தேந அநர்ஹத்வஂ விவக்ஷிதமித்யாஹ’ஷாஸ்த்ரீயேதி’. அஷுசிஷப்தநிர்திஷ்டாத்ராஜஸஸ்யாயோக்யத்வாததிகமயோக்யத்வமிஹ விவக்ஷிதமித்யாஹ’விகர்மஸ்த’ இதி. ஏவஂ ஹி தஸ்யாயோக்யதாதிஷயஃ; யதா’ ஷைவாந்பாஷுபதாந் ஸ்பரிஷ்ட்வா லோகாயதிகநாஸ்திகாந். விகர்மஸ்தாந் த்விஜாஞ்சூத்ராந் ஸசேலோ ஜலமாவிஷேத்’ இதி ஷாஸ்த்ராத்யயநததர்தோபதேஷாதிஜநிதஸாத்த்விககர்மாநுஷ்டாநாநுகுணவிஷேஷராஹித்யஂ ப்ராகரிதஷப்தேந விவக்ஷிதமித்யாஹ’அநதிகதவித்ய’ இதி. பூஜ்யேஷ்வபி த்வரிதாவஷ்யகர்தவ்யயதோசிதப்ரணாமாத்யாரம்பவிபரீதஂ ஸ்திமிதஸ்வபாவத்வமிஹ ஸ்தப்தஷப்தார்த இத்யாஹ’அநாரம்பஷீல’ இதி. கூடவிப்ரியகரித்த்வஂ ஷடத்வஂ; தச்ச ப்ரகரணாச்சாஸ்த்ரோதிததாமஸகர்மத்வாரேத்யாஹ — ‘அபிசாராதிகர்மருசிரிதி’. புநருக்திபரிஹாராய மாயாப்ரதாரணாதிலௌகிககர்மத்வாரா நைகரிதிகத்வமாஹ — ‘வஞ்சநபர’ இதி.’ஷ்வஃ கார்யமத்ய குர்வீத’ [ம.பா.12.321.73] இதி ந்யாயாச்சாஸ்த்ரீயேஷு த்வரிதேந பவிதவ்யம்; தத்வைபரீத்யமிஹாலஸ்யஂ? தத்ராநாரம்பஸ்ய ஸ்தப்தஷப்தேநோக்தத்வாத்’ஆரப்தேஷ்விதி’ விஷேஷிதம்.’விஷாதீ’ இத்யத்ர தாதோரேவாவஸாதார்தத்வாதுபஸர்கேண தத்ப்ரகர்ஷஃ? ப்ரத்யயேந தாச்சீல்யஂ ச விவக்ஷிதமித்யாஹ’அதிமாத்ராவஸாதஷீல’ இதி. அவஸாதஷ்ச லக்ஷிதோ வாக்யகாரேண’தேஷகாலவைகுண்யாச்சோகவஸ்த்வாத்யநுஸ்மரிதேஷ்ச தஜ்ஜஂ தைந்யமபாஸ்வரத்வஂ மநஸோவஸாதஃ’ இதி. ப்ராரப்தகர்மணாஂ ஷீக்ரமஸமாபநரூபமந்தப்ரவரித்தித்வாதேரலஸாதிஷப்தேந நிர்திஷ்டத்வாதவயவஷக்தேஃ ஷாட்யாதிஸமபிவ்யாஹாரஸ்ய சாநுகுணதீர்கஸூத்ரத்வஂ விஷிநஷ்டி’அபிசாராதிகர்ம குர்வந்பரேஷு தீர்ககாலவர்த்யநர்தபர்யாலோசநஷீல’ இதி.’ஸூத்ர ஸூத்ரேண(வேஷ்டநே)’ [தா.பா.10-375] இதி தாதுஃ? ஸூத்ரணஂ சிந்தநஂ; தாச்சீல்யார்தப்ரத்யயஃ; தீர்கஸூத்ரணாத்தீர்கஸூத்ரீ. நிரபராதஷகுந்தாதிக்ரஹணார்ததீர்கஸூத்ரகர்தரிஸமாநதயா தீர்கஸூத்ரீத்யௌபசாரிகக்ரஹணஂ து மந்தமிதி பாவஃ.
——————-
அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:
29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய
தநஞ்ஜய-தனஞ்ஜயா,
குணத: ஏவ-குண வகையால்,
புத்தே: த்ருதே: ச-புத்திக்கும் மன உறுதிக்கும்,
த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை,
அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும்,
ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.
குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்;
தனஞ்ஜயா, கேள்.
திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால்
அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும்
செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.
செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது.
அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது
திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது.
அது போன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.
உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன.
அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும்.
இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும்.
மூன்றாவதில் தண்ணீரே நுழையாது.
முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன்.
இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும்.
மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.
ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநே (செய்யத்தகுந்த ஞானம் )கர்தவ்யே (செய்யத்தக்க கர்மா )ச கர்மணி அநுஷ்டாதரி ச (கர்த்தா )குணதஃ த்ரைவித்யம் உக்தம்? இதாநீஂ ஸர்வ தத்த்வ ஸர்வ புருஷார்த நிஷ்சய ரூபாயா புத்தேஃ தரிதேஃ ச குணதஃ த்ரைவித்யம் ஆஹ –(புத்தியைப் பற்றியும் த்ருதியையும் சொல்லப் போகிறேன் )ஞானம் அறிவு -புத்தி- உறுதியான அறிவு -இது வந்தால் தான் முயற்சி தொடங்கும் -அறிந்து பிரயத்தனம் அடைதல் மூன்று நிலைகள்
த்ருதி -அடைந்தே தீருவேன் -செயலில் ஈடுபடும் பொழுது தடங்கல் வந்தால் தளராமல் இருப்பது -கீழ் கர்மம் விஷயமான ஞானம் -இங்கு தத்வ ஞானம் வந்தால் தான் கர்மங்கள் செய்து புருஷார்த்தம் பெறலாம் என்கிற உறுதியான அறிவு -கர்மம் தொடங்கவே இது வேண்டுமே -ஸாஸ்த்ர ஜன்யத்தாலும் ஸ்ரவண ஞானத்தாலும் பிரத்யஷத்தாலும் வரும் ஞானம் -ப்ரமாணங்கள் மேய்ப்படத்தானே அவனும் அவதரிக்கிறான் –
৷৷18.29৷৷புத்திஃ விவேக பூர்வகஂ நிஷ்சய ரூபஂ ஜ்ஞாநம்? தரிதிஃ ஆரப்தாயாஃ க்ரியாயாஃ விக்நோபநிபதிஂ அபி விதாரண ஸாமர்த்யம்? தயோஃ ஸத்த்வாதி குணதஃ த்ரிவிதஂ பேத பரிதக்த்வேந ப்ரோச்யமாநஂ யதாவத் ஷ்ரரிணு.
৷৷18.29৷৷ஜ்ஞாநத்ரைவித்யமுக்தம்; புநர்புத்தித்ரைவித்யஂ வக்ஷ்யதே; தத்ர பர்யாயதயா புநருக்திஷங்காஂ பரிஹர்துமுக்தஸ்ய விஷேஷவிஷயதாமநுவததி’ஏவஂ கர்தவ்யகர்மவிஷயஜ்ஞாந’ இதி. ப்ரகரிதோபயுக்தமநந்தரஂ ப்ரஸ்தூயத இதி ஸங்கத்யபிப்ராயேணாஹ’இதாநீமிதி’. ஜ்ஞாநத்ரைவித்யஂ பூர்வோக்தஂ? புநரிஹ த்ரைவித்யகதநஂ கிமர்தம் இதி ஷங்காயாமநுஷ்டாநதஷாபாவ்யநுஸந்தாநாத்விலக்ஷணஸ்தத்தேதுதயா ததஃ பூர்வபாவிஷாஸ்த்ராதிஜந்யோத்யவஸாய இஹ புத்திஷப்தார்த இத்யாஹ’ஸர்வதத்த்வஸர்வபுருஷார்தநிஷ்சயரூபாயா’ இதி. ஏதேந’ஜ்ஞாநஂ புத்தேர்வரித்திஃ? புத்திஸ்து வரித்திமதீ’ இதி பரோக்தஂ (ஷஂ.) நிரஸ்தம். ததேவ வ்யநக்தி — ‘புத்திர்விவேகபூர்வகஂ நிஷ்சயரூபஂ ஜ்ஞாநமிதி’.’விவேகபூர்வஂ’ பக்ஷாந்தரப்ரதிக்ஷேபபர்யந்தவிசாரபூர்வமித்யர்தஃ. ப்ரஸ்துதத்ரிவிதாநுஷ்டாநோபயுக்தப்ரகாரேண த்ரிவிதாயா தரிதேஃ ஸாதாரணஂ ரூபமாஹ — ‘ஆரப்தாயா’ இதி. அயமபி ஸங்கல்பதார்ட்யாதிரூபோ புத்திஸ்வபாவவிஷேஷ ஏவ. குணதோ விபக்தே வாச்யே? வசநே சாஸங்கீர்ணஸ்வரூபேந்வயாத்ித்ரவிதபரிதக்த்வஷப்தயோரபுநருக்திமாஹ’த்ரிவிதஂ பேதஂ பரிதக்த்வேந ப்ரோச்யமாநமிதி’. ஏவஂ புத்த்யாதிகார்யகாத்ஸ்ந்ர்யபரஸ்ய’அஷேஷேண’ இத்யஸ்ய ஷ்ரவணேந்வயாதபுநருக்திஃ’யதாவச்சரிண்விதி’ தர்ஷிதா. ஸாவதாநஂ ஸஂஷயவிபர்யயரஹிதஂ ஷ்ரரிண்வித்யர்தஃ. திக்விஜயே மாநுஷதைவதநவச்சமாதிதநஂ ச ஜேதவ்யமிதி ஸம்புத்தேர்பாவஃ.
—————–
அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :
30. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ
பார்த-அர்ஜுனா,
யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச-எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்,
கார்யாகார்யே பயாபயே ச-செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது,
பந்தம் மோக்ஷம் ச வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்,
ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.
தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது,
விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.
பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது.
மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால்
மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது.
தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம்.
விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது.
தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை.
அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது.
பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன.
அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.
இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு
பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க,
நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி,
மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும்,
ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது.
ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம்.
எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி,
அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு
உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது !
குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப்
போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை.
பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது.
மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை.
வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும்
அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?
৷৷18.30৷৷ப்ரவரித்திஃ அப்யுதய ஸாதந பூதோ தர்மஃ? நிவரித்திஃ மோக்ஷ ஸாதந பூதோ தர்மஃ? தௌ உபௌ யதா வஸ்திதௌ யா புத்திஃ வேத்தி; கார்யாகார்யே ஸர்வ வர்ணாநாஂ ப்ரவரித்தி நிவரித்தி தர்மயோஃ? அந்யதர நிஷ்டாநாஂ தேஷ காலாவஸ்தா விஷேஷேஷு’இதஂ கார்யம் இதம் அகார்யம்’ இதி ச யா வேத்தி; பயாபயே ஷாஸ்த்ராத் நிவரித்திஃ பய ஸ்தாநஂ தத்நுவரித்திஃ அபய ஸ்தாநஂ பந்தஂ மோக்ஷஂ ச ஸஂஸார யாதாத்ம்யஂ தத் விகம யாதாத்ம்யஂ ச யா வேத்தி? ஸா ஸாத்த்விகீ புத்திஃ.
৷৷18.30৷৷கார்யாகார்யஷப்தாப்யாஂ புநருக்திஷங்காபரிஹாராய’ப்ரவரித்திலக்ஷணஂ தர்மஂ ப்ரஜாபதிரதாப்ரவீத். நிவரித்திலக்ஷணஂ தர்மமரிஷிர்நாராயணோப்ரவீத்’ [ம.பா.12.217.2;3] இத்யாத்யநுஸாரேண ப்ரவரித்திநிவரித்திஷப்தயோஃ ப்ரதாநகர்மவிஷயத்வமாஹ — ‘அப்யுதயஸாதநபூத’ இத்யாதிநா. ராஜஸதாமஸபுத்த்யோஃ’அயதாவத்’ இத்யாதிவிஷேஷணாதிஹார்ததஸ்தந்நிவரித்தேர்விவக்ஷிதத்வஜ்ஞாபநாய யதாவஸ்திதத்வோக்திஃ. கார்யாகார்யஷப்தயோரிஹ ப்ரகரிதப்ரதாநகர்மேதிகர்தவ்யதாபூததரிஷ்டாதரிஷ்டவ்யாபாரபரத்வமாஹ — ‘ஸர்வவர்ணாநாமித்யாதிநா’. தத்ர ஸூக்ஷ்மதீவேத்யத்வாய’தேஷகாலாவஸ்தாவிஷேஷேஷ்விதி’ விஷேஷிதம். ஸ்மர்யதே ஹி — ‘ஷரீரஂ பலமாயுஷ்ச வயஃ காலஂ ச கர்ம ச. ஸமீக்ஷ்ய தர்மவித்புத்த்யா ப்ராயஷ்சித்தாநி நிர்திஷேத்’ இதி;’தேஷஂ காலஂ ததாத்மாநஂ’ இத்யாதி ச. அத்ர ஷக்யாஷக்யயோரபி கார்யாகார்யஷப்தாப்யாமேவ க்ரஹணம். பயாபயயோஃ ஸ்வரூபஜ்ஞாநஸ்ய ஸர்வஸாதாரணத்வாதிஹ தந்நிமித்தஜ்ஞாநஂ விவக்ஷிதம்; தச்ச ப்ராகரணிகவிஷேஷவிஷயமாஹ — ‘ஷாஸ்த்ராந்நிவரித்திர்பயஸ்தாநமிதி’. பிபேத்யஸ்மாதிதி பயம்; ஸர்வப்ரஷாஸிதுரீஷ்வராதேவ ஹி தத்த்வவிதாஂ பயமபயஂ ச; நஹி தத்ப்ரேரணமந்தரேண கேநசித்பாதிதுமபாதிதுஂ வா ஷக்யம். ததஸ்ததாஜ்ஞாநுவரித்த்யதிவரித்தீ ஏவ பயாபயநிமித்தமிதி பாவஃ. பந்தமோக்ஷஸத்பாவஜ்ஞாநஸ்யாபி ஸாதாரண்யாத்பந்தஸ்ய மித்யாத்வாதிவாதோ மோக்ஷஸ்ய பாஷாணவத்பாவாதிமதஂ ச யாதாத்ம்யஷப்தேந வ்யுதஸ்தம்.’வேத்தீதி’ கர்தரித்வோபசாரஃ; ஸ்வாச்சந்த்யேந விஷயீகரோதீத்யர்தஃ.,
—————-
31. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ
பார்த-பார்த்தா.
யயா தர்மம் அதர்மம் ச-எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்,
கார்யம் அகார்யம் ஏவ ச-செய்யத் தக்கது, தகாதது,
அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத,
ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.
தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.
அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான
தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத்
தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான்.
தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல்.
ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.
ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது.
ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது.
அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான்.
ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்;
அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்;
வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான்.
தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்;
ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான்.
வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது.
காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன்.
முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும்
உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான்.
பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும்.
பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான்.
கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும்.
நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான்.
ரஜோ குணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.
৷৷18.31৷৷யயா பூர்வோக்தஂ த்விவிதஂ தர்மஂ தத் விபரீதஂ ச தந்நிஷ்டாநாஂ தேஷ கால அவஸ்தாதிஷு கார்யஂ ச அகார்யஂ ச யதாவத் ந ஜாநாதி ஸா ராஜஸீ புத்திஃ.
৷৷18.31৷৷தரிதிஸாதநஂ தர்ம இதி வ்யுத்பத்த்யா தர்மஷப்தஸ்ய ப்ரவரித்திநிவரித்திஸாதாரண்யாதுபயப்ரஸங்காச்ச — ‘பூர்வோக்தஂ,த்விவிதமித்யுக்தம்’.
——————
32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ
பார்த-பார்த்தா,
யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்,
அதர்மம் தர்மம் இதி ச-அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்,
ஸர்வார்தாந் விபரீதாந் ச-எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக,
மந்யதே-நினைக்கிறதோ,
ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.
பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும்
நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.
நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன்
என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு.
அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை;
துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது.
கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை;
சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர்.
கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது.
வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து.
விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர்.
ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும்,
குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது.
ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள்.
சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள்.
இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.
৷৷18.32৷৷தாமஸீ து புத்திஃ தமஸா ஆவரிதா ஸதீ ஸர்வார்தாந் விபரீதாந் மந்யதே; அதர்மஂ தர்மஂ தர்மஂ ச அதர்மம்? ஸந்தஂ ச அர்தம் அஸந்தம்? அஸந்தஂ ச அர்தஂ ஸந்தம்? பரஂ ச தத்த்வம் அபரம்? அபரஂ ச தத்த்வஂ பரம்? ஏவஂ ஸர்வஂ விபரீதஂ மந்யதே இத்யர்தஃ.
৷৷18.32৷৷’தாமஸீ’ இத்யநேநைவ தமோமூலத்வஸித்தேஃ’தமஸாவரிதா’ இத்யநேந தாதாத்விகதமோநிருத்தப்ரஸரத்வஂ விவக்ஷிதமித்யாஹ — ‘தமஸாவரிதா ஸதீதி’.’ஸர்வார்தாந்’ இத்யநேந ஸித்தஸாத்யரூபஸமஸ்தாநுக்தஸங்க்ரஹமாஹ — ‘ஸந்தஂ சார்தமஸந்தமஸந்தமித்யாதிநா’. ஏதேந பாஹ்யாநாஂ குதரிஷ்டீநாஂ ச மதஂ தாமஸமிதி தர்ஷிதம். உக்தஂ ச மநுநா — ‘யா வேதபாஹ்யாஃ ஸ்மரிதயோ யாஷ்ச காஷ்ச குதரிஷ்டயஃ. ஸர்வாஸ்தா நிஷ்பலாஃ ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தாஃ ஸ்மரிதாஃ’ [மநுஃ12.95] இதி. அத்ர ராஜஸதாமஸபுத்த்யோரியாந்விஷேஷஃ — அஸமக்ரவேதநமந்யதாவேதநஂ ச ராஜஸ்யாஂ’யதாவந்ந ஜாநாதி’ இதி வ்யாக்யாநாத்; தாமஸ்யாஂ து ஸர்வஂ விபரீதஂ மந்யதே?’ஸர்வார்தாந்’ இத்யுக்தேரித்யேகே. அந்யே த்வாஹுஃ — ப்ரகாராந்யதாத்வஂ ப்ரகார்யந்யதாத்வஂ ச விஷேஷஃ. யத்யபி உபயத்ராதிஷ்டாநபூதே தர்மிண்யதத்தர்ம ஏவாத்யாஸ்யதே; ததாபி ஸ்வரூபநிரூபகதர்மவைபரீத்யே தாமஸதா; யதா ஷுக்திரஜதப்ரமே; நிரூபிதஸ்வரூபவிஷேஷகதர்மவைபரீத்யே து ராஜஸதா; யதா பீதஷங்கப்ரம இதி.
—————–
இனி, திருதி விளக்கப்படுகிறது :
33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ
பார்த-பார்த்தா,
யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்,
யோகேந-யோகத்தின் மூலம்,
மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை,
தாரயதே-நிலை நிறுத்துகிறானோ,
ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.
மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன்
தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.
திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே.
நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது.
அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது.
அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது.
அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும்,
பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன.
இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன.
அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும்,
கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம்
விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது.
அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது.
நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும்.
இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும்.
ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது.
ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும்,
கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி
நிற்பது போன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது.
அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.
৷৷18.33৷৷யயா தரித்யா யோகேந அவ்யபிசாரிண்யா மநஃப்ராணேந்த்ரியாணாஂ க்ரியாஃ புருஷோ தாரயதே; யோகோ மோக்ஷ ஸாதந பூதஂ பகவதுபாஸநம்; யோகேந ப்ரயோஜந பூதேந அவ்யபிசாரிண்யா யோகோத்தேஷேந ப்ரவரித்தாஃ தத் ஸாதந பூதா மநஃப்ர பரிதீநாஂ க்ரியாஃ யயா தரித்யா தாரயதே? ஸா ஸாத்த்விகீ இத்யர்தஃ.
৷৷18.33৷৷ராஜஸதரிதௌ த்ரிவர்கோக்தேரபவர்கஸாதநபூதோ யோக இஹ விவக்ஷிதஃ? ஸ சாநந்யோபாஸநமேவ ப்ராகநுஷிஷ்டமித்யாஹ — ‘யோகோ மோக்ஷஸாதநபூதஂ பகவதுபாஸநமிதி’. பலாந்தரஸங்கோத்ர வ்யபிசாரஃ; யோகஸ்ய தந்நிரோதகரணஂ ஸ்வரூபதஃ பலதஷ்ச மஹாநந்தரூபத்வேநேத்யாஹ — ‘யோகேந ப்ரயோஜநபூதேநேதி’. யோகாவ்யபிசாரோக்திஸாமர்த்யாத்யதாஸம்பவமுபகாரவிவக்ஷயா — ‘யோகோத்தேஷேந ப்ரவரித்தாஃ தத்ஸாதநபூதா’ இத்யுக்தம். மாநஸீ க்ரியா தாவத்ஸாக்ஷாத்கரணஂ; ப்ராணக்ரியாபி’யத்ர மநஸ்தத்ர வாயுர்யத்ர வாயுஸ்தத்ர மநஃ’ இத்யந்யோந்யபரிஷ்வங்காத்; யதோச்யதே’புநர்வாயுபதஂ ப்ராப்ய மநோ ப்ரமதி வாயுவத்’ இதி; ததா ப்ராணாயாமப்ரக்ரியயா ய யோகவிரோதிக்லேஷபாபாதிஜயஹேதுத்வாத். பாஹ்யேந்த்ரியக்ரியா து’ஸ்வாத்யாயாத்யோகமாஸீத யோகாத்ஸ்வாத்யாயமாமநேத். ஸ்வாத்யாயயோகஸம்பத்த்யா பரமாத்மா ப்ரகாஷதே’ [வி.பு.6.6.2] இத்யாதிபிருத்தாநகாலபாவியோகாங்கநிஷேவணரூபேண ப்ரத்யாஹாரே நிருத்யமாநரூபேண வா.
——————-
34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேऽர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ
து பார்த-ஆனால் பார்த்தா,
அர்ஜுந-அர்ஜுனா,
பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன்,
யயா த்ருத்யா-எந்த உறுதியினால்,
ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு,
தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ,
ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.
பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப்
பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.
புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது
அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது.
தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும்
சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம்.
காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்;
இது எவ்வளவு உறுதியாக மனதைப் பற்றிப் பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது.
உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான்.
அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது.
சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான்.
அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது.
இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான்.
மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது.
அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன.
இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன.
அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம்.
சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன.
வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது.
உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது.
நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம்.
பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய
அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு.
ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.
தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும்
வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா?
அது போல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன்
ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால்
அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.
৷৷18.34৷৷பலாகாங்க்ஷீ புருஷஃ ப்ரகரிஷ்ட ஸங்கேந தர்ம காமார்தாந் யயா தரித்யா தாரயதே? ஸா ராஜஸீ; தர்ம காமார்த ஷப்தேந தத் ஸாதந பூதா மநஃ ப்ராணேந்த்ரிய க்ரியா லக்ஷ்யந்தே;’பலாகாங்க்ஷீ’ இதி அத்ர அபி பலஷப்தேந ராஜஸத்வாத் தர்ம காமார்தா ஏவ விவக்ஷிதாஃ. அதோ தர்ம காமார்த அபேக்ஷயா மநஃ ப்ரபரிதீநாஂ க்ரியாஃ யயா தரித்யா தாரயதே? ஸா ராஜஸீ இதி உக்தஂ பவதி.
৷৷18.34৷৷ப்ரஸங்கஷப்தோத்ர ந ப்ராஸங்கிகத்வார்தஃ? ததநுபயோகாத். தரிதேஃ ஸ்வவ்யாபாரவிஷயத்வாய ப்ரகரிதப்ரக்ரியாநுஸாராய ச தர்மாதிஷப்தைஸ்தத்தத்ஸாதநலக்ஷணோக்தா. ஸாமாந்யஸ்யாபி பலஷப்தஸ்யாத்ர ஸாத்த்விகபலாதபவர்காத்ஸங்கோசாயாஹ — ‘பலாகாங்க்ஷீத்யத்ராபீதி’. லாக்ஷணிகப்ரயோகாபிப்ரேதஂ விவரிண்வந் ஷப்ததோர்ததஷ்ச பலிதமாஹ — ‘அத’ இதி.
—————–
35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ
யயா-எந்த (மன உறுதியினால்),
ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்,
விஷாதம்-ஏக்கத்தையும்,
மதம்-செருக்கையும்,
ந விமுஞ்சதி-விடமுடியவில்லையோ,
பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத்
திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது.
கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம்.
அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது.
அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.
தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன்.
தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும்.
துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது.
ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது.
தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று.
அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான்.
ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.
தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான்.
ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை.
எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது.
விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.
திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம்
அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை.
அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும்.
செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது.
எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும்.
செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது.
பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள்.
மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது.
கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று.
தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு
துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும்.
இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை.
இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்
৷৷18.35৷৷யயா தரித்யா ஸ்வப்நஂ நித்ராஂ மதஂ விஷய அநுபவ ஜநிதஂ மதஂ ஸ்வப்நமதௌ உத்திஷ்ய ப்ரவரித்தா மநஃ ப்ராணாதீநாஂ க்ரியாஃ துர்மேதாஃ ந விமுஞ்சதி தாரயதி. பய ஷோக விஷாத ஷப்தாஃ ச பய ஷோகாதிதாயி விஷய பராஃ; தத் ஸாதந பூதாஃ ச பநஃ ப்ராணாதி க்ரியாஃ யயா தாரயதே? ஸா தரிதிஃ தாமஸீ.
৷৷18.35৷৷ஸ்வப்நஷப்தோத்ர ஸுஷுப்தேரப்யுபலக்ஷக இத்யபிப்ராயேணாஹ — ‘நித்ராமிதி’. தைவாகதோந்மாதாதிவ்யவச்சேதாய துர்நீதிமூலத்வஂ மதஸ்யாத்ர தர்ஷயதி — ‘விஷயாநுபவஜநிதமிதி’. அஸ்வாதீநாநாஂ ஸ்வப்நாதீநாஂ கதஂ புருஷேண தாரணஂ இதி ஷங்காயாமத்ராபி ஹேதுலக்ஷணா பூர்வவதித்யாஹ — ‘ஸ்வப்நமதாவுத்திஷ்யேதி’. ஸ்வப்நமதயோஃ ஸுகாபிமாநாஸ்பததயா பயாதேஃ பரிதக்கரித்ய வ்யாக்யாநம். தாரணமேவாத்ர யோக்தவ்யத்வஸூசநாய’ந விமுஞ்சதி’ இத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ந விமுஞ்சதி தாரயதீதி’. ந சாத்ர பீரோர்தரிதிர்விருத்தேதி வாச்யம்? ஆகாம்யநவேக்ஷணேந துர்மதேஸ்தத்தேத்வநுவர்தநபரத்வாத். பயதாயிவிஷயோ துர்மாநமூலப்ரபலவிரோதாதிஃ; ஷோகதாயீ து க்ரோதாதிமூலபந்துவதாதிஃ? விஷாததாயீ து வரிதாவித்தவ்யயாதிஃ. துர்மேதாஃ — துர்மேதஸ்த்வாதித்யர்தஃ.
———————
36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி
பரதர்ஷப-பாரதக் காளையே!
இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை,
மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள்,
யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ,
து:காந்தம் ச நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.
பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள்.
எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,
உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை.
அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு.
மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது.
மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது.
இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது.
அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது.
ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது.
அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம்
ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு.
அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம்
பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம்.
அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது.
அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும்.
துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.
৷৷18.36৷৷பூர்வோக்தாஃ ஸர்வே ஜ்ஞாந கர்ம கர்த்ராதயோ யச் சேஷ பூதாஃ? தத் ச ஸுகஂ குணதஃ த்ரிவிதம் இதாநீஂ ஷ்ரரிணு.
யஸ்மிந் ஸுகே சிரகால அப்யாஸாத் க்ரமேண நிரதிஷயாஂ ரதிஂ ப்ராப்நோதி; துஃகாந்தஂ ச நிகச்சதி? நிகிலஸ்ய ஸாஂஸாரிகஸ்ய துஃகஸ்ய அந்தஂ நிகச்சதி.தத் ஏவ விஷிநஷ்டி —
৷৷18.36৷৷அநந்தரக்ரந்தஸங்கத்யர்தஂ துஷப்தத்யோதிதஂ வ்யநக்தி — ‘பூர்வோக்தா’ இதி. பரதர்ஷபஷப்தோத்ர ப்ரகரிஷ்டஸாத்த்விகஸுகஸங்கயோக்யதாஜ்ஞாபநார்தஃ.’இதாநீமிதி’ — ஸாதநபேதஸ்யோக்தஸ்ய ஸாத்யபேதாகாங்க்ஷாவஸர இத்யர்தஃ. ஆபாதமதுரத்வாபாவாத்ஸாத்த்விகஸ்யாப்யாஸஸாபேக்ஷத்வஂ; லோகேப்யாப்யாஸிகீ க்ஷுத்ரா ப்ரீதிரஸ்தி தத்வ்யுதாஸாய’க்ரமேண நிரதிஷயாமித்யுக்தம்’. ரதிம் — அத்யந்தாதரமித்யர்தஃ. துஃகஷப்தஸ்யாத்ர ஸங்கோசகாபாவாத்கரித்ஸ்நவிஷயத்வோக்திஃ.
——————
37. யத்ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்
யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்,
தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ,
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது,
தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.
எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ,
அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.
வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது.
பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது.
அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.
பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம்.
ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும்
இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும்
நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும்.
யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.
முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை
ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர்.
ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான்.
அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர்.
அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க
வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து,
மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம்.
அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்!
அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது.
இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது.
வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது.
இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.
பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள்.
ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து
தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள்.
ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா?
அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.
இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம்.
அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.
৷৷18.37৷৷யத் தத் ஸுகம் அக்ரே யோக உபக்ரம வேலாயாஂ பஹ்வாயாஸ ஸாத்யத்வாத் விவிக்த ஸ்வரூபஸ்ய அநநுபூதத்வாத் ச விஷம் இவ துஃகம் இவ பவதி? பரிணாமே அமரிதோபமஂ பரிணாமே விபாகே அப்யாஸ பலேந விவிக்தாத்ம ஸ்வரூப ஆவிர்பாவே அமரிதோபமஂ பவதி? தத் ச ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்? ஆத்ம விஷயா புத்திஃ ஆத்ம புத்திஃ? தஸ்யாஃ நிவரித்த ஸகலேதர விஷயத்வஂ ப்ரஸாதஃ? நிவரித்த ஸகலேதர விஷய புத்த்யா விவிக்த ஸ்வபாவாத்ம அநுபவ ஜநிதஂ ஸுகம் அமரிதோபமஂ பவதி; தத் ஸுகஂ ஸாத்த்விகஂ ப்ரோக்தம்.
৷৷18.37৷৷அப்யாஸஸாபேக்ஷத்வதுஃகாந்தஹேதுத்வயோஃ ப்ரயோஜகரூபமநந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ததேவ விஷிநஷ்டீதி’.’யத்தத்’ இதி தச்சப்தஷிரஸ்கேண யச்சப்தேநாநுவாதஃ ஷ்ருத்யாதிப்ரஸித்ததரத்வத்யோதநாய.’தத்ஸுகம்’ இதி ப்ரீத்யதிதேஃ.’விஷமிவ’ இத்யநேந ஆபாதப்ராதிகூல்யமாத்ரஂ விவக்ஷிதமித்யாஹ — ‘துஃகமிவேதி’. அநேந மந்தமதீநாஂ,ஜிஹாஸாஸ்பதத்வஂ தர்ஷிதம். ந ஹி ஸுகஂ நாம கிஞ்சித்வஸ்து விஷவதமரிதவச்ச பரிணமதே; அதஸ்ததுபசரிதமாஹ — ‘அப்யாஸபலேந விவிக்தாத்மஸ்வரூபாவிர்பாவ’ இதி. புத்தேராத்மீயத்வாதிமாத்ரோக்தேரபலத்வாத்’ஆத்மவிஷயேத்யுக்தம்’. புத்தேரயோக்யவிஷயஸஂஸர்கரூப காலுஷ்யநிவரித்திர்ஹி ப்ரஸாத இத்யபிப்ராயேணாஹ — ‘நிவரித்தஸகலேதரவிஷயத்வமிதி’. ஜராமரணாதிநிவர்தகத்வாத்போக்யதமத்வேந ஹாதுமஷக்யத்வாச்சாமரிதோபமத்வம். பரஷேஷதைகரஸஸ்வஸ்வரூபஸ்ய யதாவதாவிர்பாவே பரமாத்மாநுபவஸுகஸ்யாந்தர்நீதத்வாதிஹ பரிதகநுக்திஃ.
—————-
38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேऽம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்
யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்,
அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து,
பரிணாமே விஷமிவ – விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ,
தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.
விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது.
வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது.
வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால்
புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது.
செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை.
அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது.
ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.
வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற
உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம்.
அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது.
அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள்.
எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை.
முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி
வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த
உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும்.
இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.
৷৷18.38৷৷அக்ரே அநுபவ வேலாயாஂ விஷயேந்த்ரிய ஸஂயோகாத் யத் தத் அமரிதம் இவ பவதி? பரிணாமே விபாகே விஷயாணாஂ ஸுகதா நிமித்த க்ஷுதாதௌ நிவரித்தே (பசி தாகம் போனபின்பு )தஸ்ய ச ஸுகஸ்ய நிரயாதி நிமித்தத்வாத் விஷம் இவ பீதஂ பவதி? தத் ஸுகஂ ராஜஸஂ ஸ்மரிதம்.
৷৷18.38৷৷’விஷயாணாஂ’ தத்ததிந்த்ரியார்தாநாமந்நபாநாதீநாமித்யர்தஃ.’ஸுகதாநிமித்தக்ஷுதாதௌ நிவரித்தே’ இதி ராஜஸஸுகஸ்ய தரிஷ்டப்ராதிகூல்யநிதாநோக்திஃ. யதுக்தஂ பகவதா பராஷரேண — ‘அக்நேஃ ஷீதேந தோயஸ்ய தரிஷா பக்தஸ்ய ச க்ஷுதா. க்ரியதே ஸுககர்தரித்வஂ தத்விலோமஸ்ய சேதரைஃ’ [வி.பு.1.17.64] இதி.’க்ஷுத்தரிஷ்ணோபஷமஂ தத்வச்சீதாத்யுபஷமஂ ஸுகம். மந்யதே பாலபுத்தித்வாத்துஃகமேவ ஹி தத் புநஃ’৷৷இதி. தரிஷ்டஸுகதாநிமித்தநிவரித்தௌ உபேக்ஷணீயதாமாத்ரவ்யாவரித்த்யர்தஂ துஃகோதர்கத்வஂ’பரிணாமே விஷமிவ’ இத்யநேந வ்யஜ்யதே. பாரதாரிகரஸாதீநி ஹி பயாதிபூயிஷ்டக்ஷணிகக்ஷுத்ரதரஸுகாந்யநந்தரகாலபாவ்யதிகோரநிரதிஷயதுஃகாய பவந்தீத்யாகாமிகஂ விஷத்வமாஹ — ‘நிரயாதிநிமித்தத்வாதிதி’.
——————–
39. யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்
யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச-எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்,
ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,
நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் – உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,
தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும்
தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான்.
சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது.
கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது.
மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது.
வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன.
அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும்
தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.
ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள் தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினாலும்
அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.
৷৷18.39৷৷யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச அநுபவ வேலாயாஂ விபாகே ச ஆத்மநோ மோஹநஂ மோஹ ஹேதுஃ பவதி மோஹஃ அத்ர,யதாவஸ்தித வஸ்த்வ ப்ரகாஷஃ அபிப்ரேதஃ. நித்ர ஆலஸ்ய ப்ரமாதோத்தஂ நித்ர ஆலஸ்ய ப்ரமாத ஜநிதம்; நித்ராதயோ ஹி அநுபவ வேலாயாம் அபி மோஹ ஹேதவஃ.நித்ராயா மோஹ ஹேதுத்வஂ ஸ்பஷ்டம்; ஆலஸ்யம் இந்த்ரிய வ்யாபார மாந்த்யம்; இந்த்ரிய வ்யாபார மாந்த்யே ச ஜ்ஞாந மாந்த்யஂ பவதி ஏவ; ப்ரமாதஃ கரித்ய அநவதாந ரூப இதி தத்த அபி ஜ்ஞாந மாந்த்யஂ பவதி; ததஃ ச தயோஃ அபி மோஹ ஹேதுத்வம்; தத் ஸுகஂ தாமஸம் உதாஹரிதம்;
அதோ முமுக்ஷுணா ரஜஸ் தமஸீ அபிபூய ஸத்த்வம் ஏவ உபாதேயம் இதி உக்தஂ பவதி.(ஆகையால் சத்வம் உபா தேயம் என்றதாயிற்று )
৷৷18.39৷৷அநுபத்யத இத்யநுபந்தோ விபாகஃ? மோஹநஷப்தஸ்யாத்ர பாவார்தாநந்வயாத்கரர்ணார்தத்வமாஹ — ‘மோஹஹேதுரிதி’. நித்ராதிஜந்யஸுகஸ்ய விபரீதஜ்ஞாநஹேதுத்வாபாவாத்’மோஹோத்ர யதாவஸ்திதவஸ்த்வப்ரகாஷ’ இத்யுக்தம். ராஜஸஸுகஸ்ய விபாகே மோஹஹேதுத்வஂ? தாமஸஸுகஸ்ய து ததாநீமபீதி லோகஸித்தமித்யபிப்ராயேணோக்தஂ விவரிணோதி — ‘நித்ராதயோ ஹீதி’.’ஸ்பஷ்டமிதி’ — ந யுக்த்யாகமஸாபேக்ஷமித்யர்தஃ. அலஸஸ்ய ப்ரவரித்த்யபாவமாத்ரஂ தரிஷ்யதே? ந ஜ்ஞாநாபாவ இத்யத்ராஹ — ‘ஆலஸ்யமிந்த்ரியவ்யாபாரமாந்த்யமிதி’. ததஃ கிஂ இத்யத்ராஹ — ‘இந்த்ரியேதி’. கரணவ்யாபாரதாரதம்யாநுகுணஂ ஹி கார்யதாரதம்யம். ஜ்ஞாநஸ்ய மாந்த்யஂ சால்பவிஷயத்வம். தச்ச விஷயாந்தரப்ரகாஷாபாவகர்பமிதி பாவஃ. ப்ரமாதஸ்ய ஸ்வரூபேணைவாபேக்ஷிதாஜ்ஞாநரூபதாமாஹ’கரித்யாநவதாநரூப’ இதி. ஏவமாலஸ்யப்ரமாதயோரஜ்ஞாநாநுவித்தத்வஂ தர்ஷிதஂ; தத்தேதுத்வஂ து கதமித்யத்ராஹ — ‘ததஷ்சேதி’. ஜ்ஞாநஸ்யாபடுத்வஂ ஹி க்ரமாதத்யந்தாஜ்ஞாநே விஷ்ராம்யதீதி பாவஃ. நித்ராயாஃ ஸுகஹேதுத்வமாயாஸவிஷ்ரமஹேதுத்வாதிபிஃ? விச்சேதகேஷு ரோஷாச்ச லோகஸித்தம்? இந்த்ரியவ்யாபாரமாந்த்யஸ்யாப்யங்கஸங்க்ஷோபாதிநிவரித்தித்வாரா அநவதாநஸ்ய து புத்தேரேகாக்ரதாகல்பநரூபப்ரயாஸநிவரித்த்யேதி. ஸுகாபாஸப்ரஸங்கேநாகாலநித்ராதிகஂ நோபாதேயமித்யுக்தஂ பவதி. ஸ்மரந்தி ச — ‘யாமத்வயஂ ஷயாநஸ்து ப்ரஹ்மபூயாய கல்பதே’ இத்யாதி. ஆஹுஷ்சாயுர்வேதவிதஃ — ‘அகாலேதிப்ரஸங்காச்ச ந ச நித்ரா நிஷேவிதா. ஸுகாயுஷீ பராகுர்யாத்காலராத்ரிரிவாபரா’ இதி. குணகரிதவிபாகப்ரகரணதாத்பர்யமநுஷ்டாநபர்யவஸாநரூபப்ரயோஜநேநோபஸஂஹரதி — ‘அத’ இதி.
——————-
40. ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:
ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும்,
ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும்,
முக்தம்-விடுபட்ட,
யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ,
தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ,
திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயோ,
புந: ந அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.
இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை;
வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள்.
அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில்
அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு.
ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல.
அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது.
பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று
பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார்.
அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.
ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும்
ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம்.
முக் குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை.
அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.
৷৷18.40৷৷பரிதிவ்யாஂ மநுஷ்யாதிஷு திவி தேவேஷு வா ப்ரகரிதி ஸஂஸரிஷ்டேஷு ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தேஷு ப்ரகரிதிஜைஃ ஏபிஃ த்ரிபிஃ குணைஃ முக்தஂ யத் ஸத்த்வஂ ப்ராணி ஜாதஂ ந தத் அஸ்தி.’த்யாகேநைகே அமரிதத்வ மாநஷுஃ’ (மஹாநா0 8.14) இத்யாதிஷு மோக்ஷ ஸாதநதயா நிர்திஷ்டஃ த்யாகஃ ஸஂந்யாஸ ஷப்தார்தாத் அநந்யஃ? ஸ ச க்ரிய மாணேஷு ஏவ கர்மஸு கர்தரித்வ த்யாக மூலஃ; பல கர்மணோஃ த்யாகஃ கர்தரித்வ த்யாகஃ ச பரம புருஷே கர்தரித்வ அநுஸந்தாநேந இதி உக்தம். ஏதத் ஸர்வஂ ஸத்த்வ குண வரித்தி கார்யம் இதி ஸத்த்வ உபாதேயதா ஜ்ஞாபநாய ஸத்த்வ ரஜஸ் தமஸாஂ கார்ய பேதாஃ ப்ரபஞ்சிதாஃ;
இதாநீம் ஏவஂ பூதஸ்ய மோக்ஷ ஸாதநதயா க்ரியமாணஸ்ய கர்மணஃ பரம புருஷ ஆராதந வேஷதாம்? ததா அநுஷ்டிதஸ்ய ச கர்மணஃ தத் ப்ராப்தி லக்ஷணஂ பலஂ ப்ரதிபாதயிதுஂ ப்ராஹ்மணாத் யதிகாரிணாஂ ஸ்வபாவ அநுபந்தி ஸத்த்வாதி குண பேத பிந்நஂ வரித்த்யா ஸஹ கர்தவ்ய கர்ம ஸ்வரூபம் ஆஹ —
৷৷18.40৷৷ப்ராகரிதகுணாதீதஷுத்தஸத்த்வமயபகவத்ப்ராப்திலக்ஷணமோக்ஷாத் ப்ராங்நியததேஷகாலபலபோகைருச்சாவசைஃ ஸர்வைரபி க்ஷேத்ரஜ்ஞைருக்தஸ்ய த்ரிகுணஸ்ய நிஷ்ஷேஷதுஸ்த்யஜத்வமுகேந குணகார்யப்ரகரணஂ நிகம்யதே — ‘ந ததஸ்தி’ இதி ஷ்லோகேந. குணத்ரயப்ரகரணஂ து நாத்ரோபஸஂஹரிதம்? அநந்தரமபி’ஸ்வபாவப்ரபவைர்குணைஃ’ [18.41] இத்யுக்தேஃ.’திவி தேவேஷு’ இதி ஸத்த்வோத்தரதேஷாதிகாரிணாமுபலக்ஷணம். தத்துல்யதயா’பரிதிவ்யாம்’ [7.9] இத்யத்ராபி’மநுஷ்யாதிஷ்விதி’ ராஜஸதாமஸாதிகாரிவிவக்ஷாக்யாபநம்.’ஹிரண்யகர்போ பகவாந்’ [வி.பு.6.7.56]’ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தாஃ’ [வி.த.104.23] இத்யாத்யநுஸாரேண பஹுவசநாபிப்ரேதமாஹ — ‘ப்ரஹ்மாதிஷ்விதி’. குணப்ரகரணாத் ஸத்த்வஷப்தஸ்ய குணவிஷேஷார்ததாப்ரமவ்யுதாஸாய ப்ராணிஷப்தஃ. ஸமுதாயரூபேணாபி நிர்தார்யமாணேஷு தத்ராபி குணநிர்முக்தஂ ந கிஞ்சித்ஸத்த்வமித்யபிப்ராயேண ஜாதஷப்தஃ. ஜாதமிதி வா வ்யஸ்தம் — ஆஸஂஸாரஂ ஜந்மப்ரபரிதி குணபத்ததாத்யோதநார்தம்.
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply