ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினேழாம் அத்தியாயம் — ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்–17-14-17-28–

14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே

தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல்,
ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை,
ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை,
பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித்
தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம்.
அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய
மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.

பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய
பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள்.
மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம்.
நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம்
ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது.
சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன.
போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம்.
தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால்
இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.

அத தபஸோ குணதஃ த்ரை வித்யஂ வக்துஂ தஸ்ய ஷரீர வாங் மநோபிஃ நிஷ் பாத்யதயா தத் ஸ்வரூப பேதஂ தாவத் ஆஹ –(தபஸ் -ஆறு ஸ்லோகங்கள் –மானஸ   வாசக காயிக இவ்வாறு மூன்றும் -சாத்விக ராஜஸ தாமஸ இவ்வாறு மூன்றும் )-இதில் காயிகம் –

৷৷17.14৷৷தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞாநாஂ பூஜநம்? -ஷௌசஂ தீர்த ஸ்நாநாதிகம்? -ஆர்ஜவஂ யதா வாங் மநஃ ஷாரீர வரித்தம் -ப்ரஹ்மசர்யஂ யோஷித்ஸு போக்யதா புத்தி யுக்த ஈக்ஷணாதி ரஹிதத்வம்? -அஹிஂஸா அப்ராணி பீடா? ஏதத் ஷாரீரஂ தப உச்யதே.

৷৷17.14৷৷ஆஹாராதீநாஂ ஸாத்த்விகத்வாதித்ரைவித்யே ப்ரக்ராந்தே தபஸஃ கரணபேதேந த்ரைவித்யோக்திஃ கிமர்தா இத்யத்ராஹ — ‘அதேதி’. தேவத்விஜகுருப்ராஜ்ஞாநாஂ ஸந்நிதௌ தத்ததுசிதஃ ஷாஸ்த்ரோதித ஆசார இஹ பூஜநமித்யுச்யதே. யதா — ‘ப்ரஷஸ்தமங்கல்யதேவாயதநசதுஷ்பதாதிப்ரதக்ஷிணமாவர்தேத மநஸா வா தத்ஸமக்ரம்’ இத்யாதி. ததா — ‘ப்ரதக்ஷிணஂ வ்ரஜேத்விப்ராந் காமஷ்வத்தஂ ஹுதாஷநம்’ இதி.’ஆஸநேப்யஃ ஸமுத்தஸ்துர்மாநயந்தஃ புரோஹிதம்”உர்த்வஂ ப்ராணா ஹ்யுத்க்ராமந்தி யூநஃ ஸ்தவிர ஆகதே (ஆயதி). அப்யு(ப்ரத்யு)த்தாநாபிவாதாப்யாஂ புநஸ்தாந்ப்ரதிபத்யதே’ [மநுஃ2.120] இத்யாதிநா. ததா — ‘ந ஹாயநைர்ந பலிதைர்ந வித்தைர்ந (வித்தேந ந) ச பந்துபிஃ. றஷயஷ்சக்ரிரே தர்மஂ யோநூசாநஃ ஸ நோ மஹாந்’ [மநுஃ2.154] இதி. ஷுத்திரூபஸ்ய பலபூதஸ்ய ஷௌசஸ்ய தபஸ்த்வேந விபஜநாயோகாத்தத்தேதுமாஹ’தீர்தஸ்நாநாதிகமிதி’. ஆர்ஜவஸ்ய ஷாரீரதபஸ்த்வேந வ்யபதேஷார்தஂ வாங்மநஃகாயாநாமைகரூப்யஂ ஷரீரப்ரதாநதயா வ்யபதிஷதி’யதா வாங்மநஷ்ஷாரீரவரித்தமிதி’.’ப்ரஹ்மசர்யஂ ச யோஷித்ஸு போக்யதாபுத்திவர்ஜநம்’ இத்யாத்யநுஸாரேணாஹ — ‘யோஷித்ஸ்விதி’. தாதரிஷப்ரேக்ஷணாதிகமபி’ஸ்மரணஂ கீர்தநஂ கேலிஃ ப்ரேக்ஷணஂ குஹ்யபாஷணம்’ [த.ஸ்மரி.7.31] இத்யாதிநா மைதுநத்வேந விபஜ்ய ஸ்மரந்தீதி ப்ராகேவ தர்ஷிதம். அத்ராபீக்ஷணாதிரஹிதத்வ க்ரஹணஂ ப்ரஹ்மசர்யஸ்ய ஷாரீரதபஸ்த்வஜ்ஞாபநாய.

——————

15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே

யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது,
ப்ரிய ஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய,
வாக்யம் ச-சொல்லுதல்,
ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி,
வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.

சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல்,
கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.

காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல்.
தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது.
ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும்.
எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.

மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு.
இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது.
கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.

பரத்தினை சாஷாத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன.
இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம்.
அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது.
பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது.
இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.

৷৷17.15৷৷பரேஷாம் அநுத்வேக கரஂ ஸத்யஂ ப்ரிய ஹிதஂ ச யத் வாக்யஂ ஸ்வாத்யா யப்யஸநஂ ச இதி ஏதத் வாங்மயஂ தப உச்யதே.

৷৷17.15৷৷’அநுத்வேககரமித்யாதி’ — புருஷமர்மோத்தட்டநாபரிவாதாதிராஹித்யாதநுத்வேககரத்வம். பயாதேரஹேதுபூதமித்யர்தஃ. ஸத்யஂ யதாதரிஷ்டார்தவிஷயபூதஹிதவாக்யமிதி ப்ராகேவ தர்ஷிதம். [10.4+16.2?7] ப்ரியத்வமத்ர ஸ்வாகததர்மாநுமோதநாதிரூபேண அப்ராப்தவிஷயஸ்துத்யாதிரூபப்ரியவசநஸ்ய நிஷித்தத்வாத்தத்பரிஹாராய ஹிதத்வவசநஂ புருஷார்தபர்யவஸாயீத்யபிஹிதம்.’ஸ்வாத்யாயாப்யஸநம்’ இதி ஜபயஜ்ஞோக்திஃ.

——————–

16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே

மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி,
ஸௌம்யத்வம்-அமைதி,
மௌநம்-மௌனம்,
ஆத்மவிநிக்ரஹ: – தன்னைக் கட்டுதல்,
பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை,
இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.

மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.

சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம்.
சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும்,
ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச்
சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு
வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது.
வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.

৷৷17.16৷৷மநஃப்ரஸாதஃ — மநஸஃ க்ரோதாதி ரஹிதத்வம்? ஸௌம்யத்வஂ மநஸஃ பரேஷாம் அப்யுதய ப்ராவண்யம்? (என்னைத் தீ மனம் கெடுத்தாய் மருவித் தொழும் மனமே தந்தாய் -)மௌநஂ மநஸா வாக் ப்ரவரித்தி நியமநம்? ஆத்ம விநிக்ரஹஃ — மநோ வரித்தேஃ த்யேய விஷயே அவஸ்தாபநம்? பாவஸஂ ஷுத்திஃ ஆத்ம வ்யதிரிக்த விஷய சிந்தா ரஹிதத்வம்? ஏதத் மாநஸஂ தபஃ.

৷৷17.16৷৷மநஃப்ரஸாதஸௌம்யத்வஷப்தாப்யாஂ பரேஷ்வஹிதாபிப்ராயரூபகாலுஷ்யநிவரித்திஃ? ஹிதாபிப்ராயயோகஷ்ச விவக்ஷித இத்யாஹ’மநஸஃ க்ரோதாதிரஹிதத்வமித்யாதிநா’.’வஸதி ஹரிதி ஸநாதநே ச தஸ்மிந் பவதி புமாஞ்ஜகதோஸ்ய ஸௌம்யரூபஃ’ [வி.பு.3.7.24] இத்யாதிநோக்தமாகாரஸௌம்யத்வமபி மநஸ்ஸௌம்யத்வபலமேவ. அத ஏவ ஹி தேந மநஸஃ ஸௌம்யத்வமுந்நீயதே. இஹ ச மாநஸதபோவிபஜநாந்மநஸ இதி புத்த்யா நிஷ்கரிஷ்யாநுஷஞ்ஜிதம். மௌநஸ்யாபி மாநஸதபஸ்த்வாய மநோவ்யாபாரப்ராதாந்யமாஹ’மநஸா வாக்ப்ரவரித்திநியமநமிதி’.’ஆத்மவிநிக்ரஹஃ’ இதி அப்ராப்தவிஷயவிநிவாரணஂ ஹி ப்ராப்தவிஷயைகாக்ர்யார்தமித்யபிப்ராயேணாஹ’த்யேயவிஷயேவஸ்தாபநமிதி’.’பாவஸஂஷுத்திஃ’ இத்யஸ்ய மநஃப்ரஸாதாதிபிஃ புநருக்திபரிஹாராயாஹ’ஆத்மவ்யதிரிக்தவிஷயசிந்தாரஹிதத்வமிதி’. பாவஷப்தோத்ராபிப்ராயார்தஃ. தஸ்ய ஸஂஷுத்திஃ ஸமஸ்தேதரவர்ஜநம். ஏதேந பரதாராதிஷு மநஸோ ரஹஸ்யபி ப்ரவரித்திர்தூரதோ நிரஸ்தா. அத்ர தபஸஃ ஷாரீரத்வாதிவிபாகஃ? தத்ர ஷரீராதிப்ராதாந்யாத்; அந்யதா’பஞ்சைதே தஸ்ய ஹேதவஃ’ [18.15] இத்யநேந விரோதாத்.

——————

17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே

அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால்,
பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன்,
தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம்,
ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.

பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன்
செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.

பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை
நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும்
அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள்.
அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை.
முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.

৷৷17.17৷৷அபல ஆகாங்க்ஷிபிஃ பல ஆகாங்க்ஷா ரஹிதைஃ. யுக்தைஃ பரம புருஷாராதந ரூபம் இதம் இதி சிந்தா யுக்தைஃ நரைஃ பரயா ஷ்ரத்தயா யத் த்ரிவிதஂ தபஃ காய வாங் மநோபிஃ தப்தஂ தத் ஸாத்த்விகஂ பரிசக்ஷதே.(விதி பூர்வகமாக செய்வதை விட ராக ப்ராப்தமாகச் செய்யும் பொழுது ஸ்ரத்தை மிக்கு இருக்குமே )

৷৷17.17৷৷ஏவஂ ஷாரீரவாசிகமாநஸரூபேண த்ரிவிதஸ்யாபி தபஸஃ ஸத்த்வாதிகுணபேதேந த்ரைவித்யமுச்யதே’ஷ்ரத்தயா’ இத்யாதிநா. பலாகாங்க்ஷாநிஷேதேந ஸஹ படிதோ யுக்தஷப்தஸ்ததுபயுக்தபகவத்ப்ரீதிவிலக்ஷணபலாந்தரத்யாநபர இத்யபிப்ராயேணாஹ’பரமபுருஷாராதநேதி’. புநருக்திஷங்காபரிஹாராய ஸத்காரமாநபூஜாஷப்தாநாஂ க்ரமாந்மநோவாக்காயநிஷ்பாத்யஸம்பாவநாபரத்வோக்திஃ.

————-

18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்

யத் தப:-எந்த தவம்,
ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்),
தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய,
இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும்,
தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.

மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய
தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ
இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள்.
தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்;
வீழ்ந்து வணங்க வேண்டும் – இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர்.
பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும்.
செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.

৷৷17.18৷৷மநஸா ஆதரஃ ஸத்காரஃ? வாசா ப்ரஷஂஸா மாநம்? ஷாரீரோ நமஸ்காராதிஃ பூஜா. பல அபிஸந்தி பூர்வகஂ ஸத்காராத் யர்தஂ (மானஸ காயிக வாசக மாக இம்மூன்றும் எதிர் பார்த்து -க்யாதி லாப பூஜா அபேக்ஷையுடன் )ச தம்பேந ஹேதுநா (பூஜார்த்தம் இப்பொழுது செய்வதை புகழுவதற்காக -டம்பம் பின்பு புகழ்ந்து பேச என்ற வாசி-இங்கு ராஷசத்தில் டம்பம் கர்ப்பத்தில் இருக்கும் -தாமஸத்தில் வியக்தமாய் இருக்கும் )யத் தபஃ க்ரியதே தத் இஹ ராஜஸஂ ப்ரோக்தம்; ஸ்வர்காதி பல ஸாதநத்வேந அஸ்திரத்வாத் சலம் அத்ருவம்; சலத்வஂ பாத பயேந சலந ஹேதுத்வம்; அத்ருவத்வஂ க்ஷயிஷ்ணுத்வம்.

৷৷17.18৷৷’அபலாகாங்க்ஷிபிஃ’ [17.17] இதி ஸாத்த்விகஸ்ய தபஸோ விஷேஷணாதிஹ பலாகாங்க்ஷா அர்தஸித்தேத்யபிப்ராயேணாஹ — ‘பலாபிஸந்திபூர்வகமிதி’.’ஸ்வர்காதிபலஸாதநத்வேநாஸ்திரத்வாதிதி’ அஸ்திரஸ்வர்காதிபலஸாதநத்வாதித்யர்தஃ. ஸ்வரூபதஃ காதாசித்கோக்தேரநுபயோகாத்பலத்வாராத்ர சலத்வமத்ருவத்வஂ ச. தத்ராத்ருவஷப்தேந பலாநித்யத்வோக்தேஷ்சலஷப்தஃ பலஸ்ய வித்யமாநதஷாபாவிதோஷபரஃ. வித்யதே ச தத்ர சலயதீதி வ்யுத்பத்த்யா சலஷப்தஷக்திரித்யபிப்ராயேணாஹ’பாதபயேந சலநஹேதுத்வமிதி’. அத்ர சலஷப்தேந அநித்யபலத்வம்? அத்ருவஷப்தேந ப்ரதிபந்தஸம்பவாதநைகாந்திகபலத்வஂ சோச்யத இத்யயுக்தம்? அந்யத்ராபி ப்ரதிபந்தஸம்பவஸ்யாவிஷேஷாதிதி பாவஃ.

—————

19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்

யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன்,
ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு,
பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய,
தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.

மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும்,
பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.

விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள்.
பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை
செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள்.
அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள்.
அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.

৷৷17.19৷৷மூடாஃ — அவிவேகிநஃ மூட க்ராஹேண மூடைஃ கரிதேந அபிநிவிஷேந ஆத்மநஃ ஷக்த்யாதிகம் அபரீக்ஷ்ய ஆத்ம பீடயா யத் தபஃ க்ரியதே பரஸ்ய உத்ஸாதநார்தஂ ச யத் தபஃ க்ரியதே? தத் தாமஸம் உதாஹரிதம்.

৷৷17.19৷৷அஹிதப்ரவரித்திஹேதுபூதமூடத்வமஹிதேஷ்வேவ ஹிதத்வப்ரம இத்யபிப்ராயேணாஹ — ‘அவிவேகிந’ இதி. மூடாநாமபிநிவேஷேநேதி ஸமாஸார்தஃ. தத்ர கர்தரி ஷஷ்டீதி ஸுவ்யக்த்யர்தமாஹ’மூடைஃ கரிதேநாபிநிவேஷேநேதி’. ஸாமாந்யேநோக்தமநுஷ்டாதரி விஷிஷ்யாஹ’ஆத்மநஃ ஷக்த்யாதிகமபரீக்ஷ்யேதி’. ஆதிஷப்தேந ஷாஸ்த்ரபர்யுதஸ்தத்வம்?’அஷக்யாநி துரந்தாநி ஸம வ்யய பலாநி ச. அஸாத்யாநி ச வஸ்தூநி நார பேத விசக்ஷணாஃ’. இத்யாத் யுக்த விஷய தோஷாஷ்ச ஸஂகரிஹீதாஃ. அயதாபலாரம்பாதிரிஹாத்மபீடா? தேநால்பபீடாகரயதாபலவதாதிவ்யவச்சேதஃ. யதோக்தஂ’ஸந்நிரீக்ஷ்ய பலாபலம்’ இதி. ஸ்மரந்தி ச’தேஷஂ காலஂ ததாத்மாநஂ த்ரவ்யாத்ரவ்யஂ ப்ரயோஜநம். உபபத்திமவஸ்தாஂ ச ஜ்ஞாத்வா ஷௌசஂ ஸமாசரேத்’ இத்யாதி.

—————-

20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதே அநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்

தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம்,
தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும்,
அநுபகாரிணே தீயதே – கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ,
தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.

கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும்
பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.

செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது.
தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம்.
கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார்.
ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது.
இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு
மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.

৷৷17.20৷৷பலாபிஸந்தி ரஹிதஂ தாதவ்யம் இதி தேஷே காலே பாத்ரே ச அநுபகாரிணே யத் தாநஂ தீயதே தத் தாநஂ ஸாத்த்விகஂ ஸ்மரிதம்.

৷৷17.20৷৷ராஜஸே தாநே’பலமுத்திஷ்ய’ இதி விஷேஷணாதத்ர ஸ்வர்காதிபலஸங்கநிவரித்திருக்தா.’அநுபகாரிணே’ இத்யேதத் தரிஷ்டபலாபிஸந்திரஹிதாபிப்ராயம்.’தாதவ்யம்’ இத்யேதத்ஸாத்த்விகதபஃப்ரபரிதிஷ்விவாபிஸந்த்யந்தரவ்யுதாஸார்தமித்யாஹ — ‘பலாபிஸந்திரஹிதமிதி’. யத்யப்யத்ர பாத்ரமேவார்ததோநுபகாரித்வேந விஷேஷ்யதே? ததாபி ஸம்ப்ரதாநத்வத்ரவ்யப்ரதிஷ்டாதிகரணத்வயோர்விவக்ஷயா சதுர்தீஸப்தம்யோஃ ஸஹ ப்ரயோகஃ. பாத்ரே ஸித்தேநுபகாரிணே தஸ்மா இதி வாந்வயஃ. பாத்ரே தீயதே? தச்சாநுபகாரிணே தீயத இதி வா வாக்யபேதோ க்ராஹ்யஃ. தேஷகாலஷப்தாவத்ர தாநார்ஹதயா சோதிதபுண்யதேஷகாலவிஷயௌ. பாத்ரஂ து’ந வித்யயா கேவலயா ஜந்மநா (தபஸா) வாபி பாத்ரதா. யஸ்ய வரித்தமிமே சோக்தே தத்தி பாத்ரஂ ப்ரசக்ஷதே’ [யா.ஸ்மரி.1.200] இத்யாதிபிர்விவக்ஷிதம்.

—————

21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்

து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன்,
ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும்,
பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ,
தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.

கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.

தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு.
அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும்.
ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப்
பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான்.
அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.
தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான்.
இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது.
ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ,
ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான்.
தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம்.
தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும்
அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும்
தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான்.
இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.

৷৷17.21৷৷ப்ரத் யுபகார கடாக்ஷ கர்பஂ பலம் உத்திஷ்ய ச பரிக்லிஷ்டம் அகல்யாண த்ரவ்யகஂ யத் தாநஂ தீயதே தத் ராஜஸம் உதாஹரிதம்.

৷৷17.21৷৷’ப்ரத்யுபகாரகடாக்ஷகர்பமிதி’ — ப்ரத்யுபகாராபிப்ராயபூர்வகமித்யர்தஃ. ஏதேந பூர்வகரிதப்ரத்யுபகாரரூபதா பாவிப்ரத்யுபகாரப்ரயோஜகதா ச ஸங்கரிஹீதா. த்ரவ்யராகாத்பரிக்லேஷேந த்யஜந் ஹி புருஷஃ கல்யாணமஂஷஂ ஸ்வஸ்மை ஸ்தாபயித்வா அந்யத்பரஸ்மை ஸமர்பயதீத்யபிப்ராயேணாஹ’அகல்யாணத்ரவ்யகமிதி’. அஷ்ரத்தாஹதத்வாத்வா த்ரவ்யஸ்யாகல்யாணத்வமிஹ பரிக்லிஷ்டஷப்தார்த இதி பாவஃ.

———————-

22. அதேஸ காலே யத் தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்

யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி,
அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன்,
அதேஸ காலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில்,
அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.

தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன்
செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.

புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக்
கவனித்துக் கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள்
தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள்,
பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம்.
முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி,
ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.

ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக
இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக
ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது.
ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.

৷৷17.22৷৷அதேஷ காலே அபாத்ரேப்யஃ ச யத் தாநஂ தீயதே? அஸத் கரிதஂ பாத ப்ரக்ஷாலநாதி கௌரவ ரஹிதம்? அவஜ்ஞாதஂ ஸாவஜ்ஞம்? அநுபசார யுக்தஂ யத் தீயதே தத் தாமஸஂ உதாஹரிதம்.-

ஏவஂ வைதிகாநாஂ யஜ்ஞ தபோ தாநாநாஂ ஸத்த்வாதி குண பேதேந பேத உக்தஃ. -இதாநீஂ தஸ்ய ஏவ வைதிகஸ்ய யஜ்ஞாதேஃ ப்ரணவ ஸஂயோகேந தத் ஸச் சப்த வ்யபதேஷ்யதயா ச லக்ஷணம் உச்யதே —

৷৷17.22৷৷அதேஷஃ கலிங்ககீகடாதிஃ. அகாலோ ராத்ர்யாதிஃ. அபாத்ராணி பங்க்திதூஷகமூர்கதஸ்கரகிதவபந்திவைதாலிகாதயஃ. ஸத்கரிதஂ ஸத்கரணஂ தத்ரஹிதமஸத்கரிதம்; ததாஹ’பாதப்ரக்ஷாலநேதி’. ப்ரதிக்ரஹீதரிபுருஷாவஜ்ஞைவ க்ரியாபர்யந்தப்ரஸாராத்தத்விஷேஷணதயா வ்யபதிஷ்யத இத்யபிப்ராயேணாஹ’ஸாவஜ்ஞமிதி’. அவஜ்ஞாயா வாசிகாதிவிஷயத்வமாஹ’அநுபசாரயுக்தமிதி’. ஷாஸ்த்ரப்ராமாண்யாநிஷ்சயேந ஸந்திக்தபரலோகத்வாத் பாத்ரேப்யஃ ஸ்வத்வோத்கர்ஷாபிமாநோச்சாஸத்காராவஜ்ஞே. தேஷாதிஸம்பத்தாவப்யஸத்கரிதத்வாதி பரிஹர்தவ்யம்.

—————-

செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம்.
அதற்கு விடை வருகிறது :

23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா

ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக,
ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர்,
தேந புரா-அதனால் முன்பு,
ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும்,
விஹிதா:-வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும்,
வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது.
மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது.
ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது.
ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும்.
கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான்.
அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள்
(தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது
வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.

எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம்.
எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள்
ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.

பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே
பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும்
அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன.
உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர்.
அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும்
நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள
பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.

ஓம் -ஆதாரம் -பிரபாவா வேதா -ஓம் மூவகை அதிகாரிகளுக்கும் -ஓம் தத் மோஷார்த்தி -ஓம் சத் ப்ரயோஜனார்த்திகள்-

பிரணவம் -பிரகர்ஷேண ஸ்துத்யா அநேந -நன்கு ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறான் -சொத்துக்கள் எல்லாம் தனது என்று சொல்லுவதால் ப்ரீதிகரம்

ஏவஂ வைதிகாநாஂ யஜ்ஞ தபோ தாநாநாஂ ஸத்த்வாதி குண பேதேந பேத உக்தஃ. –

இதாநீஂ தஸ்ய ஏவ வைதிகஸ்ய யஜ்ஞாதேஃ ப்ரணவ ஸஂயோகேந தத் ஸச் சப்த வ்யபதேஷ்யதயா ச லக்ஷணம் உச்யதே —

৷৷17.23৷৷’ தத் ஸத்’ இதி த்ரிவிதஃ அயஂ நிர்தேஷஃ ஷப்தஃ ப்ரஹ்மணஃ ஸ்மரிதஃ? ப்ரஹ்மணஃ அந்வயீ பவதி.(வேத வைதிக வைதிக கர்மங்கள் உடன் சேர்ந்தே -இருக்கும் ஸப்தங்கள்-இவ்வாறு ப்ரஹ்மம் வேதம் என்று சொல்லி நிர்வகிக்காமல் -மூன்றும் பர ப்ரஹ்மத்துடன் சேர்ந்தே நேராகவே தொடர்பு கொள்ளலாமே என்னில் -இங்கு பிரகரணம் – -முக் குணங்கள் அடிப்படையில் கர்மங்கள் -பற்றியே -எனவே இப்படியே கொள்ள வேண்டும்  )ப்ரஹ்ம ச வேதஃ; வேத ஷப்தேந வைதிகஂ கர்ம உச்யதே; வைதிகஂ யஜ்ஞாதிகம்; யஜ்ஞாதிகஂ கர்ம’ தத் ஸத்’ இதி ஷப்தாந்விதஂ பவதி.’ஓம்’ இதி ஷப்தஸ்ய அந்வயோ வைதிக கர்ம அங்கத்வேந ப்ரயோகாதௌ ப்ரயுஜ்ய மாநதயா;’தத் ஸத்’ இதி ஷப்தயோஃ அந்வயஃ பூஜ்யத்வாய வாசக தயா.தேந த்ரிவிதேந ஷப்தேந அந்விதா ப்ராஹ்மணா வேதாந்வயிநஃ த்ரை வர்ணிகாஃ வேதாஃ ச யஜ்ஞாஃ ச புரா விஹிதாஃ புரா மயா ஏவ நிர்மிதா இத்யர்தஃ.

த்ரயாணாம்’ தத் ஸத்’ இதி ஷப்தாநாம் அந்வய ப்ரகாரோ வர்ண்யதே. ப்ரதமம்’ஓம்’ இதி ஷப்தஸ்ய அந்வய ப்ரகாரம் ஆஹ —

(இவற்றாலே -கருவியாக கொள்ளாமல் கூடினவரான -என்று உபலஷணத்தால் கொள்ள வேண்டும் -இவை உபாதான காரணம் அல்லவே -இவற்றுடன் கூடியே படைத்தேன் -வேதம் படைக்க ப்பட வில்லையே -நிர்மிதா -நிர்மிக்கப் பட்டன என்றபடி )

৷৷17.23৷৷உக்தத்ரைவித்யவதுபர்யபி த்ரைவித்யாந்தரோக்திரிதி ஷங்காவ்யுதாஸாய உக்தஸமஸ்தலக்ஷணபரதயோத்தரமவதாரயதி — ‘ஏவமித்யாதிநா’. த்ரைவித்யவிதிரநபேக்ஷிதஃ? லக்ஷ்யேஷூத்திஷ்டேஷு லக்ஷணவிதிஸ்த்வபேக்ஷித இத்யபிப்ராயேண’ப்ரஹ்மணஃ ஸ்மரிதஃ’ இத்யந்வயோ தர்ஷிதஃ. வக்ஷ்யமாணப்ரகாரேண த்ரிஷ்வதி நிர்தேஷேஷு கர்மத்வேநாந்வயாயோகாத் — ‘ப்ரஹ்மணோந்வயீ பவதீதி’ ஸம்பந்தஸாமாந்யார்ததோக்திஃ. நநு’ஓஂ தத்ஸத்’ இதி வைதிகஸ்ய யஜ்ஞாதேர்லக்ஷணமுச்யத இத்யுக்தமயுக்தஂ? ப்ரஹ்மஷப்தஸ்ய தத்வாசகத்வாபாவாந்முக்யார்தபாதாபாவாச்ச. த்ரயாணாஂ ச ஸாக்ஷாத்பரப்ரஹ்மநாமத்வஂ ஷ்ருதிஸித்தஂ “தத்தே பதஂ ஸங்க்ரஹேண ப்ரவீமி ஓமித்யேதத்” [கடோ.1.2.15] இதி வா; “ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நாம பவதி? யோஸ்யைததேவ நாம வேத ப்ரஹ்ம பவதீதி” “ஸந்மூலாஃ ஸோம்யேமாஃ ஸர்வாஃ ப்ரஜாஃ ஸதாயதநாஃ ஸத்ப்ரதிஷ்டாஃ” [சாஂ.உ.6.8.6] இத்யாதிஷு. அதஃ ஷாஸ்த்ரப்ரதாநப்ரதிபாத்யபரப்ரஹ்மநிர்தேஷப்ரகாரோயமுபாஸகஸஂவ்யவஹாரார்தமுபதிஷ்யத இதி யுக்தம். த்விகுணமபி ஹி கர்ம,ப்ரஹ்மணோபிதாநத்ரயப்ரயோகேண ஸகுணஂ ஸம்பாதிதஂ பவதி. கர்மணி கர்மாந்தரேண லௌகிகவாசா நித்ராப்ரமாதாதிபிஷ்ச வ்யவாயே ஸந்தஃ ஸர்வத்ர’ஓஂ தத்ஸத்’ இத்யுதாஹரேயுஃ. அதஏவ சாத்யாயாத்யந்தேஷு ஸர்வேஷ்வயமேவ த்ரிவிதோ நிர்தேஷஃ பட்யத இதி ஷங்காயாஂ — கர்மணி ப்ரஹ்மஷப்தமவதாரயிதுஂ தத்ப்ரதிபாதகே ப்ரயோகஸ்தாவத்ஸித்த இத்யபிப்ராயேணாஹ’ப்ரஹ்ம ச வேத’ இதி. வேதாபிதாநஸ்ய பூர்வாபரவஷாத்ததர்தபரதாமபிப்ரேத்யாஹ’வேதஷப்தேநேதி’. வேதநிரூடப்ரயோகேண ஷப்தேநேத்யர்தஃ.’ப்ரஹ்மஷப்தேந’ இதி கேஷாஞ்சித்பாடஃ.

‘அயமபிப்ராயஃ’ — யத்யபி’ஓஂ தத்ஸத்’ இதி ஷப்தாநாஂ ஸாக்ஷாத்பரப்ரஹ்மநாமத்வஂ ப்ரஸித்தஂ? ததாப்யத்ர தத்விவக்ஷா ந யுக்தா; அத்யாயே தத்ப்ரஷ்நாத்யபாவாத்? அநந்தரஂ ச’ப்ராஹ்மணாஸ்தேந’ இத்யாதிநாநந்வயப்ரஸங்காச்ச; அதோ வேதேநோபலக்ஷணேந வைதிகஸ்யைவாயஂ த்ரிதா நிர்தேஷஃ — இதி. ஏததேவ விவரிணோதி — ‘வைதிகமிதி’. த்ரயாணாமந்வயப்ரகாரேவாந்தரபேதஂ வக்ஷ்யமாணமுபக்ஷிபதி’ஓமிதி’. கரணாத்யர்தாஸம்பவாதுபலக்ஷணதரிதீயார்தமாஹ — ‘தேந த்ரிவிதேந ஷப்தேநாந்விதா’ இதி. ப்ராஹ்மணஷப்தோத்ர ப்ரஹ்மஷப்தவிவக்ஷிதவேதாந்வயாத் த்ரைவர்ணிகவிஷயஃ.’ப்ரஹ்மவாதிநாம்

—————

இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :

24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்

தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள்,
விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி,
தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள்,
ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று,
உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.

ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள்
எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.

குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது.
தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது.
கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது.
அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும்.
இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது.
அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும்.
இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன்.
செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது.
ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும்.
அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.

த்ரயாணாம்’ தத் ஸத்’ இதி ஷப்தாநாம் அந்வய ப்ரகாரோ வர்ண்யதே. ப்ரதமம்’ஓம்’ இதி ஷப்தஸ்ய அந்வய ப்ரகாரம் ஆஹ —

৷৷17.24৷৷தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாஂ வேதவாதிநாஂ த்ரைவர்ணிகாநாஂ யஜ்ஞ தாந தபஃ க்ரியாஃ விதாந உக்தாஃ (வேதத்தில் விதிக்கப்பட்ட )வேத விதாந உக்தாஃ ஆதௌ ‘ஓம்’ இதி உதாஹரித்ய ஸததஂ ஸர்வதா ப்ரவர்தந்தே.(ஸததம் -எப்பொழுதும் என்பதால் இதுக்கு-ஓம் – கால நியமம் இல்லை )வேதாஃ ச’ஓம்’ இதி உதாஹரித்ய ஆரப்யந்தே.ஏவஂ வேதாநாஂ வைதிகாநாஂ ச யஜ்ஞாதீநாஂ கர்மணாம்” இதி ஷப்த அந்வயோ வர்ணிதஃ. ஓம் இதி ஷப்த அந்வித வேத தாரணாத் ததந்வித யஜ்ஞாதி கர்ம கரணாத் ச ப்ராஹ்மண ஷப்த நிர்திஷ்டாநாஂ த்ரைவர்ணிகாநாம் அபி’ஓம்’ இதி ஷப்த அந்வயோ வர்ணிதஃ.(பல சாதனமாக கர்மங்களிலும் வேதத்திலும் சேரும் –வைதிகர்கள் வேதம் சொல்வதாலும் வேத விஹித கர்மங்களை அனுஷ்டிக்கிற படியாலும் ப்ராஹ்மண த்ரை வர்ணிகர் களுடனும் அந்வயிக்கும்)அத ஏதேஷாஂ’தத்’ இதி ஷப்த அந்வய ப்ரகாரம் ஆஹ —

[17.24] இதி ஹ்யநந்தரமுச்யதே. தேநைவ ப்ரணவாந்வயப்ரகாரோபி ஸூசித இத்யபிப்ராயேணாஹ — ‘வேதாந்வயிநஸ்த்ரைவர்ணிகா’ இதி.’விஹிதாஃ’ இத்யஸ்ய கர்த்ரபேக்ஷாயாஂ’சாதுர்வர்ண்யஂ மயா ஸரிஷ்டம்’ [4.13] இத்யாதிபராமர்ஷேநாஹ’புரா மயைவ நிர்மிதா’ இதி. வேதாநாஂ விஹிதத்வஂ யதாபூர்வஂ ப்ரவர்திதத்வஂ? “யோ வை வேதாஂஷ்ச ப்ரஹிணோதி தஸ்மை” [ஷ்வே.உ.6.18]’அநாதிநிதநா ஹ்யேஷா வாகுத்ஸரிஷ்டா’ [ம.பா.12.232.24கூ.பு.பூ.2.30] இத்யாதிஷ்ருதிஸ்மரிதிபிஸ்தந்நித்யத்வஸித்தேஃ.

৷৷17.24৷৷’தஸ்மாத்’ இத்யாதீநாஂ சதுர்ணாஂ ஷ்லோகாநாஂ ப்ரகரிதப்ரபஞ்சநரூபதாமாஹ — ‘த்ரயாணாமிதி’. ப்ராஹ்மணவேதயஜ்ஞாநாமித்யர்தஃ. யஜ்ஞஷப்தோத்ர தபோதாநாதீநாமுபலக்ஷகஃ? யஜ்ஞதபஃக்ரியா இத்யாதி ஹ்யநந்தரமுச்யதே. அநுஷ்டாநஸ்வரூபாநுப்ரவேஷாத்தத்ராபி ப்ராதம்யாச்சாத்ராபி ப்ரதமமோங்காரஸ்யோக்திரித்யபிப்ராயேணாஹ’ப்ரதமமிதி’.’தஸ்மாதிதி’ — ஸர்வஸ்ரஷ்ட்ரா மயா ததைவ ததந்விதத்வேந விஹிதத்வாதித்யர்தஃ. கரணவ்யுத்த்பத்த்யா விதாநமிஹ வைதிகஂ விதாயகவாக்யமித்யாஹ’வேதவிதாநோக்தா’ இதி. யஜ்ஞதாநாதீநாமோங்காரபூர்வகத்வஂ தத்தத்விதாயகைஃ ஸித்தமித்யபிப்ராயேணாஹ — ‘ஆதாவிதி’. ஓமித்யுதாஹரணஂ சாத்ர ஷ்ருதவேதாந்தாநாஂ ஸர்வாந்தரபரப்ரஹ்மாநுஸந்தாநேந தத்ஸமாராதநபுத்த்யாநுஸந்தாய. ஸ்மரதி ச பகவாஞ்சௌநகஃ’ஹரிமேவ ஸ்மரேந்நித்யஂ கர்மபூர்வாபரேஷு ச’ [வி.த.] இதி அஷ்ருதவேதாந்தாநாமபி தத்வாசகஷப்தாபிதாநாந்மங்கலாதிலாபோர்தஸித்தஃ. ஏவஂ ச ப்ரணவஸ்ய வைதிகஸமஸ்தாந்வயஸித்திஃ. யத்யபி “வஸந்தே வஸந்தே ஜ்யோதிஷா யஜேத” “ஷரதி வாஜபேயேந யஜேத” இத்யாதிபிஃ காலவிஷேஷநியதாஃ க்ரியா விதீயந்தே; ததாபி ஸர்வாஸாஂ க்ரியாணாஂ ப்ரணவபூர்வகத்வே து ந காலவிஷேஷநியம இதி ஸததஷப்ததாத்பர்யமித்யபிப்ராயேணாஹ’ஸர்வதேதி’. ஸ்வர்கஸாதநத்வேநாநுஷ்டாநே அபவர்கஸாதநத்வேநாநுஷ்டாநே ச ப்ரணவாந்வயஃ ஸாதாரண இதி பாவஃ. அத்ர ஷ்லோகே வேதாநாமநுபாதாநேபி பூர்வஷ்லோகே’ப்ராஹ்மணாஸ்தேந வேதாஷ்ச’ [17.23] இத்யுக்தத்வாத் “யத்வேதாதௌ ஸ்வரஃ ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டிதஃ. தஸ்ய ப்ரகரிதிலீநஸ்ய யஃ பரஃ ஸ மஹேஷ்வரஃ” [தை.நா.6.10.24]’ப்ரஹ்மணஃ ப்ரணவஂ குர்யாதாதாவந்தே ச ஸர்வதா. ஸ்ரவத்யநோஂகரிதஂ பூர்வம்’ [மநுஃ2.74] இத்யாத்யநுஸாரேணாஹ — ‘வேதாஷ்சேதி’.’விதாநோக்தாஃ’ இத்யநேந ப்ரஹ்மவாசிஷப்தேந ச வேதாநாமப்யத்ர ஷ்லோகே ப்ரணவாந்வயஃ ஸூசித இத்யபிப்ராயேணாஹ — ‘ஏவமிதி’. ஓமித்யுதாஹரணகர்தரித்வவ்யபதேஷேந ததந்விதப்ரஹ்மவாதித்வவ்யபதேஷேந ச ப்ராஹ்மணாநாமப்யோமிதிஷப்தேநாந்வயஃ ப்ரதர்ஷித ஏவேத்யாஹ — ‘ஓமிதிஷப்தாந்விதவேததாரணாதிதி’.

—————

25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:

தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து,
பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல்,
விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும்,
தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள்,
மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய
கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும்,
எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும்
அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள்
கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும்.
உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி
அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன்
தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது.
அதனால் முமுக்ஷத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.

‘தத்’ இதி ஷப்த அந்வய ப்ரகாரம் ஆஹ —

৷17.25৷৷பலம் அநபிஸஂதாய வேதாத்யயந யஜ்ஞ தபோ தாந க்ரியாஃ மோக்ஷகாங்க்ஷிபிஃ த்ரை வர்ணிகைஃ யாஃ க்ரியந்தே? தாஃ ப்ரஹ்ம ப்ராப்தி ஸாதநதயா ப்ரஹ்ம வாசிநா தத் இதி ஷப்த நிர்தேஷ்யாஃ.

‘ஸவஃ கஃ கிஂ யத் தத் பதமநுத்தமம்’ (வி0 ஸஹ0 நா0 91) இதி தச் சப்தோ ஹி ப்ரஹ்மவாசீ ப்ரஸித்தஃ.–ஏவஂ வேதாத்யயநய ஜ்ஞாதீநாஂ மோக்ஷ ஸாதந பூதாநாஂ தச் சப்த நிர்தேஷ்யதயா தத் இதி ஷப்தாந்வய உக்தஃ. –த்ரைவர்ணிகாநாம் அபி ததாவித வேதாத்யயநாத் யநுஷ்டாநாத் ஏவ தச் சப்தாந்வய உபபந்நஃ.(வேதத்துடன் அத்யயன சம்பந்தம் – கர்மங்களுடன் அனுஷ்டான சம்பந்தம் -ஆகையால் தத் சப்தம் வைதிகர்கள் உடனும் அன்வயம் )

அத ஏஷாஂ’ஸத்’ ஷப்தாந்வய ப்ரகாரஂ வக்துஂ லோகே ஸச் சப்தஸ்ய வ்யுத்பத்தி ப்ரகாரம் ஆஹ —

৷৷17.25৷৷ஏவஂ ஸ்வர்காபவர்கஸாதநஸமஸ்தவைதிகஸாதாரணஂ ப்ரணவாந்வயரூபஂ லக்ஷணமுக்தம்; அத தத்ஸச்சதௌ மோக்ஷஸாதநாநாஂ த்ரிவர்கஸாதநாநாஂ ச விஷேஷலக்ஷணதயோச்யேதே. வக்ஷ்யதி சைததஷ்டாதஷாரம்பே [ரா.பா.ஷ்லோ.1]’வைதிகஸ்ய ச கர்மணஃ ஸாமாந்யலக்ஷணஂ ப்ரணவாந்வயஃ; தத்ர மோக்ஷாப்யுதயஸாதநயோர்பேதஃ தத் ஸச் சப்த நிர்தேஷ்யத்வேந’ இதி.’ஏதேஷாமிதி’ த்ரயாணாஂ பராமர்ஷஃ. உக்தாநாஂ யஜ்ஞாதீநாமுபலக்ஷணதயா வேதேஷ்வபி தச்சப்தப்ரவரித்திஜ்ஞாபநாய வேதாத்யயநோபாதாநம்.’மோக்ஷகாங்க்ஷிபிஃ’ இத்யநேந’ஸூசிதமாப்ரஹ்மப்ராப்திஸாதநதயேதி’. ததிதி — பலமநபிஸந்தாயேத்யந்வயஃ. தச்சப்தாபிதேயப்ரஹ்மப்ராப்திஸாதநதயா தச்சப்தோபசார்யதயா புத்த்வா பலாந்தரமநபிஸந்தாயேத்யர்தஃ. இதி கரணஸாமர்த்யாத்’உதாஹரித்ய’ இதி பதஂ வா பூர்வஷ்லோகாதநுஷஞ்ஜநீயமித்யபிப்ராயேணாஹ’ததிதிஷப்தநிர்தேஷ்யா’ இதி. தச்சப்தஸ்ய ப்ரஹ்மநாமத்வே ஸித்தே ஹி தேந தத்ப்ராப்திஸாதநதயேதி லக்ஷணா? ததேவ குதஃ இத்யத்ர ததிதி ஷ்ருதேருபபரிஂஹணேந விஷதீகரிதத்வமபிப்ரேத்யாஹ’ஸவ’ இதி. பகவந்நாமஸஹஸ்ரே’யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மநஃ’ [ம.பா.13.149.13வி.ஸ.நா.15] இதி ப்ரக்ரமாத்’நாம்நாஂ ஸஹஸ்ரம்’ [ம.பா.13.149.121வி.ஸ.நா.157] இதி நிகமநாச்ச யத்ததாதிஷப்தாநாஂ ஸர்வநாமதயா வ்யாபிநாமபி விஷேஷதஃ ஸாக்ஷாத்பரப்ரஹ்மநாமத்வஂ ஸித்தமிதி பாவஃ. ஷ்லோகேநுக்தஸ்யாபி வேதாத்யயநஸ்ய ப்ரயோஜகேந ஸங்கரிஹீதத்வமாஹ’ஏவமிதி’. ததாபி த்ரயாணாமந்வயோ ந ஸித்யதி? ப்ராஹ்மணஷப்தநிர்திஷ்டாநாஂ த்ரைவர்ணிகாநாஂ மோக்ஷஸாதநத்வநிபந்தநதச்சப்தநிர்தேஷ்யத்வாபாவாதித்யத்ராஹ’த்ரைவர்ணிகாநாமபீதி’.’மோக்ஷகாங்க்ஷிபிஃ க்ரியந்தே’ இத்யநேந பரம்பரயா ததந்வயஃ ஸூசித இதி பாவஃ.

——————-

26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே

ஸத் இதி-ஸத் என்ற சொல்,
ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும்,
ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது,
பார்த-பார்த்தா,
ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும்,
ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.

ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது.
பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.

முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது.
பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம்.
நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில்
உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.

சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது.
பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது.
அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான்.
சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது.
இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.

இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது.
பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம்.
விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம்.
அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம்.
மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.

பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும்,
முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது.
ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.

அத ஏஷாஂ’ஸத்’ ஷப்தாந்வய ப்ரகாரஂ வக்துஂ லோகே ஸச் சப்தஸ்ய வ்யுத்பத்தி ப்ரகாரம் ஆஹ —

৷৷17.26৷৷ஸத்பாவே வித்யமாநதாயாஂ ஸாதுபாவே கல்யாண பாவே ச ஸர்வ வஸ்துஷு ஸத் இதி ஏதத் பதஂ ப்ரயுஜ்யதே லோக வேதயோஃ. ததா கேநசித் புருஷேண அநுஷ்டிதே லௌகிகே ப்ரஷஸ்தே கல்யாணே கர்மணி ஸத் கர்ம இதம் இதி ஸச் சப்தோ யுஜ்யதே ப்ரயுஜ்யதே இத்யர்தஃ.

(இருப்புக்கும் -நல்லதுக்கும் –லௌகிக மங்களகரமான காரியங்களுக்கும் -சத் பத பிரயோகம் லோகத்தில் உண்டே
ஸாது பாவம் -பிரசாஸ்தே கர்மங்களையும் சேர்க்காமல் -மேல் வைதிக கர்மங்களை சொல்லப் போகிறார் -அதுக்குப் பீடிகையாக இங்கு பிரித்தே சொல்கிறான்)

৷৷17.26৷৷த்ரயாணாஂ த்ரிபிரந்வயே ப்ரதிபிபாதயிஷிதே’ஸத்பாவே ஸாதுபாவே ச’ இத்யப்ரஸ்துதோபந்யாஸஃ கிமர்தஃ இத்யத்ராஹ — ‘அதைஷாமிதி’. யதா ப்ரயோகபலாத்வித்யமாநத்வாதிஷு ஸச்சப்தப்ரவரித்திரங்கீக்ரியதே? ஏவஂ ப்ரஸ்துதேபீத்யபிப்ராயேணாநேகார்தோதாஹரணஂ’வித்யமாநதாயாமிதி’; அஸத்விலக்ஷணத்வரூபஸத்த்வவிஷயோ வா? வர்தமாநத்வவிஷயோ வா ஸத்பாவஷப்த இதி பாவஃ. “ஸாதுகாரீ ஸாதுர்பவதி” [பரி.உ.4.4.5] இத்யாதிஷ்விவாத்ராபி ஸாதுஷப்தஃ புண்யாதிரூபத்வபர இத்யாஹ’கல்யாணபாவ’ இதி; தச்சப்தாந்வயே’மோக்ஷகாங்க்ஷிபிஃ’ இதி விஷேஷணாத். இஹ து’ப்ரஷஸ்தே கர்மணி’ இதி ப்ரஷஸ்ததாமாத்ரநிமித்தவசநாந்மோக்ஷேதரபுருஷார்தஸாதநலக்ஷணதயா ஸச்சப்தோத்ர வ்யுத்பாத்யத இதி பாவஃ. அத்யந்தவிஜாதீயேஷ்வப்யுக்தோபாதித்வயயோகே ஸச்சப்தோநுவரித்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஸர்வவஸ்துஷ்விதி’.’ப்ரயுஜ்யதே’ இத்யவிஷேஷநிர்தேஷாத் ப்ரயோகஸ்ய ஸார்வத்ரிகத்வேந தார்ட்யஂ ஸூச்யத இத்யாஹ’லோகவேதயோரிதி’.’ததா’ இதி ப்ரஸ்துதாஸந்நே லௌகிகோதாஹரணார்தம்; அந்யதா புநருக்திப்ரஸங்காத்? இத்யபிப்ராயேணாஹ’லௌகிக’ இதி.’ஸாதுபாவே’ இதி நிர்திஷ்டமேவ நிமித்தஂ ப்ரகரிதாஸந்நோதாஹரணாந்தரே ப்ரஷஸ்தஷப்தேநாவதார்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கல்யாண’ இதி. தாதுலீநார்தவ்யஞ்ஜநமாத்ரமுபஸர்கேண க்ரியதே. அதோத்ர ஷ்லோகே’யுஜ்யதே”ப்ரயுஜ்யதே’ இதிபதத்வயமேகார்தமித்யாஹ’ப்ரயுஜ்யத இத்யர்த’ இதி.

———————–

இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :

27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும்,
ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது.
பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே
ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம்.
உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம்.
வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல்.
அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல்
இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா.
நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன.
முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள
குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம்.
பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி.
தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான்.
தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும்.
பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில்
குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது.
தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது.
கடவுள் பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.

৷৷17.27৷৷அதோ வைதிகாநாஂ த்ரைவர்ணிகாநாஂ யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதிஃ கல்யாண தயா ஸத் இதி உச்யதே. –கர்ம ச ததர்தீயஂ த்ரைவர்ணிகார்தீயஂ யஜ்ஞ தாநாதிகஂ (ஆதி அத்யயனம் போல்வன )ஸத் இதி ஏவ அபிதீயதே.தஸ்மாத் வேதா வைதிகாநி கர்மாணி ப்ராஹ்மண ஷப்த நிர்திஷ்டாஃ த்ரைவர்ணிகாஃ ச’ஓஂ தத் ஸத்’ இதி ஷப்தாந்வய ரூப லக்ஷணேந அவேதேப்யஃ ச அவைதிகேப்யஃ ச வ்யாவரித்தா வேதிதவ்யாஃ.

৷৷17.27৷৷ஏவஂ ஸச்சப்தஸ்ய வ்யுத்பத்திப்ரகாரஂ ப்ரயோகஂ சோதாஹரித்ய ததுபஜீவநேநாநந்தரஂ லிலக்ஷயிஷிதே ப்ராஹ்மணாதித்ரிகே தத்ப்ரயோகோபபத்திருபஸஂஹ்ரியத இத்யபிப்ராயேணாஹ’அத’ இதி. ஸ்திதிமுகேந ஸ்தாதரி஀ணாஂ ஸ்தாபகாநாஂ ச வேதாநாஂ ஸச்சப்தார்தாந்வயோர்தாதுச்யத இத்யபிப்ராயேணாஹ’வைதிகாநாமிதி’. அத்யாயாந்தேஷு’ஓஂ தத்ஸத்’ இதி பாடாத்ஸ்திதிஷப்தோத்ர அந்தபர இதி வ்யாக்யாந்தரஂ ப்ரகரிதோபயுக்தப்ரஸித்ததமார்தே ஸம்பவத்யயுக்தமிதி பாவஃ. ஸ்திதிஷப்தேந புத்தாவுபஸ்தாபிதாஃ ஸ்தாதாரஸ்தச்சப்தேந பராமரிஷ்யந்த இத்யபிப்ராயேணாஹ’த்ரைவர்ணிகார்தீயமிதி’. த்ரிவிதநிர்தேஷவிஷயதயா’ப்ரகரிதேஷ்வரார்தீயம்’ இதி(ஷாஂ) வ்யாக்யாந்தரமதிவ்யவஹிதபராமர்ஷாத்ஸர்வேஷாஂ யஜ்ஞாதீநாமததர்தீயத்வாச்ச அயுக்தமிதி பாவஃ. யஜ்ஞாத்யர்தீயஸாதநஸம்பாதநரூபகர்மணி ஸச்சப்தநிர்தேஷவசநாதபி ப்ரக்ராந்தே யஜ்ஞாதாவேவ ததுக்திரிஹோபபந்நேத்யபிப்ராயேணாஹ’யஜ்ஞதாநாதிகமிதி’.’ததர்தீயம்’ இதி ஸாமாந்யஸங்க்ரஹாவலம்பிநா ஆதிஷப்தேநாத்யயநாதிக்ரஹணாத்வேதாநாமபி ஸச்சப்தாந்வயோத்ர ப்ரதர்ஷித ஏவ. பவத்வேவஂ த்ரயாணாஂ த்ரிபிரந்வயஃ? ததுக்திரிஹ கிமர்தா இத்யத்ர லக்ஷணோக்திப்ரயோஜநபூதவிவிக்தாநுஸந்தாநப்ரதிபாதநமுகேந’ஓஂ தத்ஸத்’ இத்யாதிஷ்லோகைஃ பலிதஂ வதந்நுபஸஂஹரதி’தஸ்மாதிதி’. யத்து — கைஷ்சித்’ஓஂ தத்ஸத்’ இத்யமீஷாஂ வாக்யத்வகல்பநேந வாக்யார்தவர்ணநஂ? யத்பலாபிஸந்திரஹிதஂ கர்ம? தச்சோபநமிதி யுக்தம் ததோஂததேவேத்யர்த இதி; ஏததேவஂ விவக்ஷிதமித்யத்ர ந கஷ்சித்தேதுஃ; ந சோபயோகஃ; லக்ஷணத்வாபிதாநஂ த்வநுஷ்டாநோக்தமிதி பாவஃ.

——————-

28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ

பார்த-பார்த்தா,
அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும்,
தப்தம் தப: ச-செய்யும் தவமும்,
யத் க்ருதம்-கர்மமும்,
அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.

அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும்.
பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;

யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது.
இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது.
இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும்.
பரம் பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும்.
சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.

சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது.
கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன.
ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான்.
யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது,
தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம்.
பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது.
தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது.
யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன.
சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால்.
அம் மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும்.
அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.

அஸ்ரத்தை யுடன் அஸாஸ்த்ர செயல்கள் அநர்த்தம் விளைவிக்கும் என்று முன்பே சொல்லி
இங்கு அஸ்ரத்தை யுடன் சாஸ்த்ர செயல்களை செய்தால் இங்கும் அங்கும் பயன் இல்லையே
ஆகவே ஸ்ரத்தையுடன் யுத்தம் செய் என்கிறான் இறுதியில்

৷৷17.28৷৷அஷ்ரத்தயா கரிதஂ ஷாஸ்த்ரீயம் அபி ஹோமாதிகம் அஸத் இதி உச்யதே. குதஃ ந ச தத் ப்ரேத்ய நோ இஹ? ந மோக்ஷாய ந ஸாஂஸாரிகாய ச பலாய இதி.

৷৷17.28৷৷’ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய’ [16.27] இத்யாதிநா அத்யாயாரம்பே ப்ரஷ்நோத்தரமுகேந ஷ்ரத்தாயுக்தஸ்யாப்யஷாஸ்த்ரீயஸ்யாஸுரத்வேநாஸத்த்வஂ ப்ரதிபாத்ய ஷாஸ்த்ரீயஸ்ய ததோ வ்யாவரித்திர்தர்ஷிதா; இதாநீஂ வ்யதிரேகேண ப்ரகரிதாநாஂ ஸதிதி நிர்தேஷார்ஹத்வதரிடீகரணாய ஷாஸ்த்ரீயஸ்யாபி ஷ்ரத்தாரஹிதஸ்யாஸத்த்வமுச்யதே. விஷிஷ்டவ்யதிரேகஸ்ய விஷேஷணாபாவே விஷேஷ்யாபாவே ச ஸமாநத்வாதித்யபிப்ராயேணாஹ’அஷ்ரத்தயா கரிதஂ ஷாஸ்த்ரீயமபீதி’. கரிதஷப்தஸ்ய ஹுததத்தயோரந்வயஃ.’தப்தம்’ இத்யநேந தபஸஃ கரிதத்வஸித்தேர்ஹுததத்தஷப்தாவத்ர பாவார்தௌ. ஏவஂ கரிதஷப்தஸ்ய விஷேஷணதயாந்வயேபேக்ஷிதே ஸாமாந்யவிஷயபரோபகாராதிவிஷயத்வக்லரிப்திரயுக்தேதி ச பாவஃ. யத்யப்யஷாஸ்த்ரீயவந்நிரயபதநைகஹேதுத்வஂ நாஸ்தி? ததாபி தத்தத்வாக்யோதிதபலாபாவாதஸத்த்வமுபபத்யத இத்யபிப்ராயேண ஹேத்வாகாங்க்ஷாஂ தர்ஷயதி’குத’ இதி.’யேயஂ ப்ரேதே’ [கடோ.1.1.20] இதி ஷ்ருத்யவிரோதேந ப்ரேத்யஷப்தஸ்ய முக்ததஷாவிஷயத்வோபபத்தௌ’மோக்ஷகாங்க்ஷிபிஃ’ [17.25] இத்யாத்யுக்தபலவ்யதிரேகஸ்ய’ந ச தத்ப்ரேத்ய’ இத்யாதிநா விவக்ஷிதத்வமாஹ’ந மோக்ஷாயேதி’. பரிஷேஷஸித்தமிஹஷப்தஸ்யார்தமாஹ’ந ஸாஂஸாரிகாய பலாயேதி’.,ஷ்ரத்தாயுக்தமப்யவைதிகஂ? வைதிகமபி ஷ்ரத்தாஹீநஂ தரிஷ்டாதரிஷ்டப்ரயோஜநவிரஹாதநநுஷ்டேயம்; உபயவிதப்ரயோஜநயோகாத்வைதிகமேவ ஷ்ரத்தாபூதமேவாநுஷ்டேயமித்யத்யாயஸார இதி பாவஃ.

இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு பகவத்ராமாநுஜவிரசிதஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ ஸப்ததஷோத்யாயஃ৷৷17৷৷

16 அத்யாயம் -மஹாத்ம்யம்
கட்க பாஹு -குஜராத் ஸுராஷ்ராம் பட்டத்து யானை மதம் பிடித்து துவம்சம்
யானையை அடக்க போக
உயிர் தப்பி மீண்டான்
வயோதிகர் -அங்கு மகிழ்ச்சியுடன் சென்று
யானை ஒன்றும் பண்ணாமல் நமஸ்கரித்துப் போனதே
அரசன் மகிழ்ந்து எப்படி வினவ
யோகி 16 அத்யாயம் சொல்லிக் கொடுக்க
அனுசந்தான மஹிமை
தேவ ஸ்ரத்தை அதிகமாக வந்து இருக்கும் –

17 அத்யாயம் மஹாத்ம்யம்
யானை மதம் குறைய வில்லை
கட்க பாஹு பிள்ளை அரசன்
அந்தப்புரத்தில் வேலையாள் யானையை அடக்கப்போக
இவன் 16 அத்யாயம் அத்யயனம் அரசன் பண்ண கேட்டு இருந்தவன்
யானை த்வமஸிக்க
யானையை நினைத்தே பிராணன் விட்டான்
யானையாகவே ஸிம்ஹ தேசத்தில் பிறக்க
கீழ் வாசனை தொடர்ந்தது
இந்த யானையை பரிசாக கொடுக்க
இளவரசன் அத்தை கவிக்கு கொடுக்க
மாள்வ தேச அரசனுக்கு அவன் கொடுக்க
நாள் பட யானை நோய்வாய்ப்பட
அரசன் இடம் யானை பேச
17 அத்யாயம் கற்று சொல் அதுவே எனக்கு உயர்ந்த கதி கிடைக்கும்
ஸ்ரத்தை வளரும்
ஸாத்விக குணம் வளரும் -என்று சொல்லிப் போனதாம்
நம் சம்ப்ரதாயம் குட யானை தென் யானை –பிரஸித்தம் -சங்கிலி தன்னைக் கட்டத் தானே கொடுக்கும் –
பக்தி அருளுவான் நமக்கும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading