அமுத சார்த்தூலம் -அமுதும் அமுதனும் –ஸ்ரீ வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமி -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள்
ஆராவமுதனைக் குறித்து ஆராவமுத ஸ்லோகங்கள்
மன்யே ஸப்த பயோ நிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம்
கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத் புன:
லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தா: ஸ்த்ரிய: 1
மன்யே ஸப்த பயோ நிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்-முனிவராக அகஸ்தியர் ஏழு கடல் நீரைப்பருகி
அசுரர்கள் கடலுக்குள் ஒழிந்து கொள்ள-ஆசமனம் -அச்யுதா ஒரு தடவை சொல்லி உறிஞ்சிய உடனே
உப்புக்கடல் முழுவதும் உள்ளே போக ஒற்றையே கடல் நீர்கள் விழுங்க –
மூன்று தடவை வேண்டுமே –ஏழு கடல்களையும் பருகி –மன்யே-நான் இவ்வாறு கருதுகிறேன்
உத்தாம்ருதம்-சாரமான அமுதம் – சாரதமமான திரு நாமமே ஆராவமுதம் -அவன் திரு நாமமும் இதுவே
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம்-அழகுக்கு எல்லாம் இருப்பிடமாக இருக்க
இத்தைப் பருக தேவர்களுக்கு யோக்யதை இல்லையே
கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத் புன:-தாயான குடத்தில் ஒளித்து வைத்து -குட முனிவர் தானே இவர்
லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தா: ஸ்த்ரிய: பெண்கள் ரஹஸ்யம் -வைத்துக் கொள்ள முடியாதே
குட மூக்கின் வழியாக அமுதத்தை உலகுக்கு காட்டி -ஆராவமுதம் -தானே சாரமான அமுதம் –
திருப்பெயர்களுக்குள் இதைப் போல் இனிமை இல்லையே –அபர்யாப்த்த அமுதன்
வண் தமிழ் மா முனி ஆழ்வார்கள் கொண்டாட -நாவால் சொல்லிப் பார்த்ததை -சுவைத்தார் என்கிறார் –
தேவர்கள் இடம் ஒளித்து வைத்தது தேவ பாஷைகளில் இல்லை =விஷ்ணு சாஸ்ரநாமத்தில் இல்லாமல் ஒளித்து வைத்தார்
குட மூக்கு -கோயிலாகக் கொண்டவனே ஆராவமுதம் -கோணம் -மூக்குக்கு ஸமஸ்க்ருதம் பதம் –
ஆராவமுதே -விளித்து நம்மாழ்வார் –நாலாயிரம் மறைந்து இருக்க அளித்ததும இந்த ஆராவமுதன் தானே –
கும்ப கோண திவ்ய தேசத்துக்கு செய்நன்றி சொல்ல வேண்டும்
————————
யஸ்மின் மந்தர பர்வதஸ்ய வஹனம் ஸாகம் ஸமை: மந்தனம்
பூயச்ச ஆக்ரமணம் பலஸ்ய ச மதேர்தானம் த்விஷாமர்தனம்
இதி ஏவம் திஷணான்விதை: ச விபுதை: நாஸ்மாபி: அப்யர்த்திதம்
ந: ஸ்வாமின் அம்ருதம் பவேதி விபுதை: யத்தர்சிபி: தப்யதே –2-
கீழே திவ்ய தேச மஹிமை –
இதில் ஆராவமுதனின் மஹிமை
33 கோடி தேவர்களால் சூழப் பட்டு சேவை கர்ப்பக்கிருகத்தில்
கடல்கடந்த வ்ருத்தாந்தம் -மந்த்ர மலை வாஸூகி –
அசுரர்கள் இடம் ஒப்பந்தம் செய்து -கருடன் வைத்து மலையைக் கொணர்ந்து -அசுரர்கள் வாய் பகுதி
தாங்கிக் கொள்ள ஸ்ரீ கூர்மம் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -ஆலகால விஷம் -நீல கண்டன் –
தன்வந்திரி அம்ருத கலசம் -உப்புச்சாறு-ஆராவமுதமாக அவனையே கேட்க்காமல் இழந்து
அமுதினிலும் ஆற்ற இனியன் -கடைந்தவனே இனியவன் –
இதற்காகவே தேவர்கள் சூழ்ந்து கர்ப்ப க்ருஹத்தில்
11 ருத்ரர் 12 பன்னிருவர் அஸ்வினி தேவர் 2 வசுக்கள் 8 ஒவ் ஒருவருக்கும் ஒரு கோடி கணங்கள்
அனைவரும் சூழ்ந்து ஆராவமுதனின் வடிவு அழகை பருகிக் கொண்டே உள்ளார்கள் –
————–
க்ஷீராப்தே: அம்ருதம் பபௌ இதி பரம் ஜானந்தி மந்தா: ஸுரா:
யத் கிஞ்சித் தத் அஹோ யத் அங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண:
தன்மத்யே பயஸாம் நிதே: அபி ததா ஸ்ரீகும்பகோணே புரே
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்–3-
க்ஷீராப்தே: அம்ருதம் பபௌ இதி பரம் ஜானந்தி மந்தா: ஸுரா:-பாற் கடலுக்கு அம்ருதம் எப்படி வந்தது –
விபுத புத்தி இல்லாமல் மந்த புத்தி தேவர்கள்
யத் கிஞ்சித் தத் அஹோ யத் அங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண: தன்மத்யே பயஸாம் நிதே: —
ஷீராப்தி சயனம் -அவனது திருமேனியில் சிந்திய வியர்வைத் துளியே அம்ருதமாக
அபி ததா ஸ்ரீகும்பகோணே புரே-அதே போல் இங்கும் ஏரார் கோலம் திகழக் கிடந்த கோமான்
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்-இது விசித்திர அம்ருதம் –
வாயால் பருக வேண்டாம் கண்ணால் பருகலாம்
அது உடலுக்கு ஜீவனம் -இது ஆத்மாவுக்கு உஜ்ஜீவனம் -இத்தை கண்டு பிறவித் துன்பம் தீர்ப்போம் –
————————————-
ஸ்வர்கே பாதி அம்ருதம் யத் அர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:
திங் மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ:
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத் பாதி இதி க்ருதாஞ்ஜலி: யத் அம்ருதம் பக்ஷிச்வர: ஸேவதே –4-
ஸ்வர்கே பாதி அம்ருதம் யத் அர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:-பெரிய திருவடி –
வேத ஸ்வரபி-அவனைக் காட்டும் கண்ணாடி
அஷ்ட பஜ பெரிய திருவடி கொடிமரம் அருகில் -ஆதர்ஷ கருடன் சந்நிதிக்கு எதிரில் –
துவாதச மண்டபத்தில் சேவை
வினதை -கத்ரு -அம்ருதம் கொண்டு வந்த வ்ருத்தாந்தம் -அத்தை கொண்டு வந்து அடிமைத்தனம்
விடுவித்தத்தை நினைத்துப் பார்த்து –
திங் மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ:-ரஸம் பார்க்க -அது கசப்பாக இருக்க –
வியாதி உள்ளவனுக்கே இனிக்குமாம் -உப்புச்சாருக்காக
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்-நீ ஆராவமுதன் -பருக யத்னமே வேண்டாம் –
கண்களாலே பருகலாம் -எப்பொழுதும் ஆராவமுதனே -அபரியாப்த அம்ருதம் –
தத் பாதி இதி க்ருதாஞ்ஜலி: யத் அம்ருதம் பக்ஷிச்வர: ஸேவதே –அமுதத்தை அமுதனைக்
கை கூப்பிக் கொண்டே பருகிக் கொண்டு இருக்கிறார் –
———————–
கும்பம் நாம நிதாய துக்த ஜலதே: தீரே ஸுராணாம் கணே:
ஸக்தே தன்மதனாய ஹந்த ஸ பவ: தத் கும்பகோணாந்தரா
லீன: கும்பம் அதோ ஜஹார ஸ ஹரோ மோக்தும் விஷோத்தாம் வ்யதாம்
தேனைவ அத்ர பவான் ஸ சாத்ர விதித: கும்பேச்வரோ வர்த்ததே–5-
கும்ப கோணம் பெயர் காரணம் -வானில் உள்ள வானவர்களை வாழ வைக்க விஷம் உண்டான் –
ஹரன் -அபஹரிப்பதுக்கும் சிவன் -என் உள்ளம் கவர் கள்வன் -ஞான சம்பந்தர்
குடத்தின் மூக்கில் உடகார்ந்தாராம் -ஆராவமுதனை அங்கே சேவித்து விஷம் உண்ட கவலை தீர்க்க –
குடத்தையே அபகரித்து போனார் -குட மூக்கு -ஆராவமுதம் -பெருமாள் சேவை –
கும்பம் அபகரித்து கும்பேஸ்வரன் பெயர் -ஆலகால விஷத்தை உண்ட துன்பத்தையே
போக்கும் அழகன் -ஆராவமுத ஆழ்வான் என்கிறார் இதில் –
————
துக்தாப்தே: மதனாய தைவதகண: ஸோயம் ப்ரவ்ருத்த: புரா
கும்பாந்தர் பகவன் பவந்தம் அகரோத் ஆவாஹிதம் தம் புன:
அத்ர ஸ்தாபயதி ஸ்ம தத்ர ச பவம் ஸம்ரக்ஷகம் தம் வ்யதாத்
தேனைஷா கில கும்பகோண நகரீ கும்பேச்வரோயம் பவ:–6-
துக்தாப்தே: மதனாய தைவதகண: ஸோயம் ப்ரவ்ருத்த: புரா-தேவர் கூட்டங்கள் கடைவதற்கு முன்னே
கும்பாந்தர் பகவன் பவந்தம் அகரோத் ஆவாஹிதம் தம் புன:-நாராயணனை ஆவாஹனம் பண்ணி
கும்பத்தில் வைத்த பின்பு திரு ஆராதனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே -பூஜைகள் பண்ண
அத்ர ஸ்தாபயதி ஸ்ம தத்ர ச பவம் ஸம்ரக்ஷகம் தம் வ்யதாத்-சிவனையே ஆராதனம் பண்ணைச் சொல்லி கடையப் போக
தேனைஷா கில கும்பகோண நகரீ கும்பேச்வரோயம் பவ: -கும்பத்தில் உள்ள பெருமாளே ஆராவமுதன் –
கும்பேஸ்வரனும் இங்கே நித்ய வாஸம் -ஊரின்
நடுப்பகுதியில் ஆராவமுதனும் கும்பேஸ்வரும் நித்ய வாசம் பண்ணி அருளுகிறார்களே
————————
கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமும் யோக்யம் புராரிம் வ்யதாத்
ஸர்வஜ்ஞம் த்ருத கங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:
ஸ்வஸ்யாதோ பஹுபி: ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ்த்வாம் கும்பகம் ஸேவதே–7-
கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமும் யோக்யம் புராரிம் வ்யதாத்-பூஜிக்க வேண்டும் –
சிவனை நியமிக்க -ஆராவமுதனை பூஜிக்க பலர் வேண்டுமே
ஸர்வஜ்ஞம் த்ருத கங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:-ஸர்வஞ்ஞன் –
ருக்கு திரு மொழி வாய் ஈசன் -கங்கை தரித்து ஆச்சாரம் மிக்கு –
ஸ்வஸ்யாதோ பஹுபி: ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:–தானே பல வடிவம்
எடுத்துக் கொண்டு சூழ்ந்து இருந்து பூஜிக்க
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ்த்வாம் கும்பகம் ஸேவதே-மத்யம் சாரங்க பாணி கோயில் –
சூழ்ந்து பல சிவன் கோயில்கள் இன்றும் உண்டே –
ச ஏகதா பவதி ஸஹஸ்ரா பவதி -ஆகும்படி நமக்கும் கைங்கர்ய ஸ்ரீ அருளுவான்
————-
ஸ்வாமின் த்வத் வசஸா விஷம் கில மயா பீதம் சிரோ கூர்ணதே
த்வத் சித்தாத் அம்ருதாம்சும் ஏகம் உதிதம் குர்யாம் சிரஸி அஞ்ஜஸா
இத்தம் ப்ரார்த்தித லாபதோ அதிமுதித: சம்புஸ்து அனேகாக்ருதி:
நைகாகாரகத: புரே அத்ர பகவன் த்வாம் ஸர்வத: ஸேவதே –8-
ஸ்வாமின் த்வத் வசஸா விஷம் கில மயா பீதம் சிரோ கூர்ணதே-நடுவில் ஆராவமுதன் -இருக்க வேறே ஒரு ஹேது இதில் –
விஷம் உண்ட நீலகண்டன் -ஆராவமுத ஆழ்வான் இடம் -நீர் சொல்ல உண்டேன் தலை சுற்றுகிறது
த்வத் சித்தாத் அம்ருதாம்சும் ஏகம் உதிதம் குர்யாம் சிரஸி அஞ்ஜஸா-சந்தரமாம் மனசோ ஜாயதா-
குளிர வைக்க பிறை சந்திரனை கேட்டு வைத்து -விஷ தாக்கம் போக்கப் பெற்றாராம் -கைம்மாறு செய்யவே
இத்தம் ப்ரார்த்தித லாபதோ அதிமுதித: சம்புஸ்து அனேகாக்ருதி:-மிகவும் மகிழ்ந்து அநேக வடிவுடன்
நைகாகாரகத: புரே அத்ர பகவன் த்வாம் ஸர்வத: ஸேவதே -பல பல கோயில்களில் கோயில் கொண்டு
இருந்து நன்றி செய்து கொண்டே இருக்கிறார்
—————-
சந்த்ரோயம் தவ மானஸாத் யத் அபவத் ஜாதோ அம்ருதாம்சு: த்த:
வ்யோம்னச்சாபி பதன் முஹுர்முஹுர் அஹோ வாராம்நிதௌ ஸர்வதா
பங்கேனாங்கித விக்ரஹோ யச இதம் தத்தே கலங்கீதி அஹோ
ப்ரஷ்டோ விஷ்ணு பதாத் ஜலான்வயம் அபி ப்ராப்த: புமான் ஈத்ருச:–9-
சந்த்ரோயம் தவ மானஸாத் யத் அபவத் ஜாதோ அம்ருதாம்சு: த்த:-சந்திரன் உன்னுடைய மனசில் தோன்றியது –
அத்தை ருத்ரனுக்கு கொடுத்து அருளினாய்
அமுதைப் பொழியும் நிலவு
வ்யோம்னச்சாபி பதன் முஹுர்முஹுர் அஹோ வாராம்நிதௌ ஸர்வதா-வானத்தில் சஞ்சரிக்கிறான்
விஷ்ணு பதம் ஆகாசம் -ஆனால் அடிக்கடி கடலில் வானத்தில் இருந்து விழுகிறானே -ஆகையால் களங்கம் அடைகிறான்
பங்கேனாங்கித விக்ரஹோ யச இதம் தத்தே கலங்கீதி அஹோ-அழுக்கு சேறு -பங்கஜம் -சேற்றில் பிறந்த தாமரை
ப்ரஷ்டோ விஷ்ணு பதாத் ஜலான்வயம் அபி ப்ராப்த: புமான் ஈத்ருச:-நமக்கு வாழ்க்கைப் பாடம் –
உயர்ந்த பக்தர் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் -வாழ்வில் நல்ல இடத்தில் இருந்தாலும் ஜடம் -ஜலம் -அறிவு குன்றிய –
தீய ஸஹ வாஸம் ஏற்பட்டால் களங்கம் அடைகிறோம் -சத் சங்கம் வேண்டுமே
நல்ல குணம் குடையார் இடம் கூடி இருந்தால் பூ உடன் சேர்ந்த நாறும் மணக்கும் -மா முனிகள் –
தீய குணம் அடையாமல் இருக்க நமக்கு அறிவுரை –
———-
சேஷ: சப்த குணாநுசாஸன சணோ யத் தேன தஸ்மின் பவான்
சேதே ஹ்ருஷ்டமனா மமாம்ருத விபோ வேதாப்தி மத்யோத்த்ருத:
வேதாத்மா யத் அயம் ப்ரபு: ச வயஸாம் ஸ்கந்தேஸ்ய யாஸ்யத்யத:
வேதே யோ விஹ்ருதிம் தத் அங்கம் அத வா தத்தே ஸ தே ப்ரீதயே–10-
சேஷ: சப்த குணாநுசாஸன சணோ யத் தேன தஸ்மின் பவான்–ஆதி சேஷன் மேலே பள்ளி கொண்டு அருளி
பதஞ்சலி -வியாகரணம் -பண்ணி அருளி -வேதாத்மா -விஹகேஸ்வரன் –
சேதே ஹ்ருஷ்டமனா மமாம்ருத விபோ வேதாப்தி மத்யோத்த்ருத:-வேதாத்மா யத் அயம் ப்ரபு:-திருப் பாற் கடல்
அமுதம் போல் இல்லை வேதம் பாற் கடல் -திருவாய் மொழி -ஆராவமுதம் –
ச வயஸாம் ஸ்கந்தேஸ்ய யாஸ்யத்யத: வேதே யோ விஹ்ருதிம் தத் அங்கம் அத வா தத்தே ஸ தே ப்ரீதயே-வேதம்
வேத அங்கம் தொடர்பு உள்ளவர்களை அடிமை கொண்டு அருளி உகக்கிறாயே –
————-
தஸ்மாத் ஏவ ஹி கும்பகோண நகரே வேதேஷு பாரம் கதை:
யுக்தே வைதிக நாமதேய மஹிதே சேதே விமானே பவான்
வேதம் வேத்மி ந வேத புஸ்தகம் அஹம் ஹஸ்தே பிபர்மி அன்வஹம்
வ்யாஜீக்ருத்ய தத் ஏவ ஹே கருணயா மாம் பச்ய த்ருஷ்ட்யா மனாக்–11
தஸ்மாத் ஏவ ஹி கும்பகோண நகரே வேதேஷு பாரம் கதை:-அதனாலே -கீழே வேத ஸ்வரூபி -பதாஞ்சலி படுக்கை –
வேத அன்வயம் உள்ளார் இடம் பிரியமானவன் -அதனாலே இங்கு எழுந்து அருளி -வேதம் வல்லார் -நிறைந்த –
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வதங்க ஆடு அரவம் அமளியில்
அறி துயில் அமர்ந்த பரமன் அன்றோ இவன் –
யுக்தே வைதிக நாமதேய மஹிதே சேதே விமானே பவான்-வைதிக விமானம் -வேதம் தொடர்பு இதிலும்
வேதம் வேத்மி ந வேத புஸ்தகம் அஹம் ஹஸ்தே பிபர்மி அன்வஹம்-வேதம் அறியாத அடியேன் -நைச்சியம் –
வேத புஸ்தகம் கையிலே -ஏந்தி உனது திரு முன்னே நிற்கிறேன் -பவித்ரா உத்சவத்தில் –
வேத பாதாரண்யம் பண்ணுபவன் போல்
வ்யாஜீக்ருத்ய தத் ஏவ ஹே கருணயா மாம் பச்ய த்ருஷ்ட்யா மனாக் -கடைக்கண் -சிறுச் சிறிதே விழித்து –
கடாக்ஷ லேஸம் அருளி ரஷித்து அருள வேணும் -அடியோங்களையும் ரக்ஷித்து அருள பிராத்திக்கிறார் –
———–
சாந்த்யா நாம ஸம்ருத்தம் ஏகம் அம்ருதம் ப்ராசீன வாசோதிதம்
மாதுர்யைக நிகேதனம் மனஸி யத் யோகீச்வராணாம் ஸ்திதம்
த்ருச்யம் மாம் ஸத்ருசாம் அபி இஹ ஜயதி ஸ்ரீகும்பகோணே புரே
ஸ்ரீமத் கோமளவல்லிகா பரிஸரே ஸ்ரீவைதிகாக்யே க்ருஹே–12-
சாந்த்யா நாம ஸம்ருத்தம் ஏகம் அம்ருதம் ப்ராசீன வாசோதிதம்-சாந்தி ஒன்றே வடிவு –
ஆனந்தம் அமைதி கிட்டும் ஸேவிக்கவே -ஒப்பற்ற அமுதம் அன்றோ இவன் -மாதுர்யம் ப்ரவாஹிக்கும்
சவுந்தர்யம் பிரசித்தம் இங்கு -கோயிலிலே ஐஸ்வர்யம் -தொன்மையான வேதங்களால் போற்றப்பட்டவன் -வைதிக விமானம்
மாதுர்யைக நிகேதனம் மனஸி யத் யோகீச்வராணாம் ஸ்திதம்-மாதுர்யத்துக்கு இருப்பிடம் -யோகிகள் உள்ளத்தில்
த்ருச்யம் மாம் ஸத்ருசாம் அபி இஹ ஜயதி ஸ்ரீகும்பகோணே புரே-தாழ்ந்த நம்மாலும் காணும்படி இங்கே
ஸ்ரீமத் கோமளவல்லிகா பரிஸரே ஸ்ரீவைதிகாக்யே க்ருஹே-ஸ்ரீ கோமள வல்லித்தாயார் அருகில்
வைதிக விமானத்தின் அடியிலே சேவை சாதித்து அருளுகிறார் -கண்களால் கண்டு அநுபவிப்போம்
————-
பீத்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாதம் புராரி: புரா
நாகை: ஆபரணை: ச ஸம்வ்ருத தனு: தப்தோ நிதாந்தம் தத:
பர்யாப்த்யா விதுரம் பிபன் இஹ த்ருசா கும்பஸ்ய கோணே அம்ருதம்
கும்பம் ஸ்வீயம் இதீவ ஸம்ப்ரகதயன் கும்பேச்வரோ வர்ததே–13-
அனுபவ பரிவாக ரூபமாக ஸ்லோகம் -பொற்றாமரை குளத்தில் நீராடி அனுஷ்டானம் -முடித்து –
ஆண்டாள் சந்நிதி சேவித்து -போகும் பொழுது -கும்பேஸ்வரர் வைத்து ஸ்தோத்ரம் பண்ண சொல்ல
ஸ்ரீ நிவாஸா பட்டாச்சாரியார் -சக்ரபாணி பட்டாச்சாரியார் திருத்தகப்பனார் -சார்ங்கம் வில்லை சாத்தி ஸ்லோகம் அருளச் சொல்ல
விஷம் அருந்தி -வேதனை போக்க -நாக ஆபரணம் -இவற்றை வைத்து கடிக்க சொல்ல –
முள்ளை முள்ளால் எடுத்து -பலன் இல்லாமல் –அமுதம் -கொண்டும் இல்லாமல்
ஆராவமுதம் -கும்பேஸ்வரர் பின்னால் நின்று -பின் அழகை அனுபவிக்க -ரோதம் தீரப் பெற்றார் –
வேதனை தீரப் பெற்றார் -விளங்குகிறார் -என்று அருளிச் செய்தார்
———-
மர்யாதாதிக மஞ்ஜுதா விஹ்ருதயே க்ரௌர்யாதி தூராத்மனே
கர்யாஜீவன கர்மணி ஸ்யதவதே புர்யா நிஜாயா: புரா
அர்யாமோத விமர்தனைக ரதயே வர்யாய தைத்ய த்விஷாம்
பர்யாப்த்யா ரஹித அம்ருதாய பவதே குர்யாம் ஸபர்யாம் முதா–14-
மர்யாதாதிக மஞ்ஜுதா விஹ்ருதயே க்ரௌர்யாதி தூராத்மனே-அனுபவ ஜனாதி பரிவாக -விளைவே -ஸ்லோகம் –
நாம் அனுபவிக்க ஸ்ரீ நிவாஸ பட்டாச்சாரியார் ஏடு படுத்தி வைத்துள்ளார் -நமக்கு கிடைத்த அவற்றுள் நிறைவு ஸ்லோகம் இது –
எல்லை கடந்த இனிமையின் விளையாட்டு நிலமாக உள்ளவன் ஆராவமுதன் -எல்லை நிலம் -தீய குணங்களுக்கு எதிர் தட்டு –
உபக லிங்கங்கள் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணக்கடலாகவும்
கர்யாஜீவன கர்மணி ஸ்யதவதே புர்யா நிஜாயா: புரா-ஆதி மூலமே -த்வரை உடன் வந்தவன்
அர்யாமோத விமர்தனைக ரதயே வர்யாய தைத்ய த்விஷாம்-அடியார் த்வேஷிகளை நிரசித்து
பர்யாப்த்யா ரஹித அம்ருதாய பவதே குர்யாம் ஸபர்யாம் முதா-போதும் என்ற எண்ணம் வரமுடியாத
ஆராவமுதனான உனக்கு உகந்து பணி செய்ய அருள வேண்டும் —
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோமள வல்லி ஸமேத ஆராவமுதாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply