ஸ்ரீ பங்குனி உத்தரம்
சம்பவம் சரித்திரம் சாதனை மூன்று ஆகாரம்
பெருமாள் திருக்கல்யாணம் ஸ்ரீ ராமாயணம்
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள-ஸ்ரீ கம்பர்
சடை தரித்து தவம் -புண்ணிய துறைகள் ஆடி -ஏழு இரண்டு ஆண்டில் வா -இயம்பினன் அரசன் என்றாள்
அரசன் ஆணை -ரஸம் இல்லாத மன்னன் அரசன் –
ஸ்ரீ கௌசல்யை காட்டுக்குச் செல்ல வேண்டாம் -அம்மா உயர்ந்த -ஆபஸ்தம்பர் –
ஸாஸ்த்ர ஓட்டைகளை சாதனமாகக் கொள்பவன் அல்லன் நான்
கணவன் இருக்கும் இடமே அக்ரே சென்று கல்லும் முள்ளும் உமது திருவடியில் படாத படி
மாமியாருக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா -ஸ்வர்க்கம் நரகம் -விளக்கம் -வியக்தி தோறும் மாறுமே –
நரகமும் சுவர்க்கமும் நாள் மலர் கோனைப் பிரிவதும் பிரியாமையும்
இளைய பெருமாள் -சரணவ் காடம் -அஹம் சர்வம் கரிஷ்யாமி
நம்மாழ்வார் அகலகில்லேன் -ஒழிவில் காலம் எல்லாம் போல்
சரணாகதி சம்பவம் பங்குனி உத்தரம் அன்று சாதனை ஆனதே
உண்டோ இந்த உத்சவத்துக்கு ஒப்போ
ஆறாம் திருநாள் கமல வல்லித் தாயார் சேர்த்தி உத்சவம்
தந்தி விட வதந்தியே வேகமாகப் பரவுகிறதே இன்றும்
ஒன்பதாம் நாள் பங்குனி உத்தரம் சேர்த்தி
எட்டாம் நாள் குதிரை வாகனம் –
அலங்காரப் பிரியனாக காலையில் வர -மோதிரம் கீழே மாத்தியது நினைவுக்கு வர
நடிப்பு –
சித்திரை உத்தர வீதி வந்து தாயார் சந்நிதி வர -உபசாரம் எதிர்பார்த்து வர
மட்டை அடி உத்சவம் – ப்ரணய கலஹம் –
கண்கள் சிவந்து இருக்க -செங்கண் கதிர் முகத்தான் -செவ்வரி ஓடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் –
வாய் வெளுத்து -பால் அன்ன வண்ணத்து பாஞ்ச ஜன்யம் ஊதி
குழல் கலைந்து
கஸ்தூரி திருமண் காப்பு
கழுத்தில் கீறல்
குங்குமம் சூர்ணா அபிஷேகம்
மஞ்சள் -வஸ்திரம் -பீதாம்பரம்
திருவடி சிவந்து -குதிரை வாகனத்தால்
தாமதமாக வந்த காரணம் -திருமங்கை மன்னன் -வழியில் வந்து
பெருமானைப் பறித்துப் பாட –
வழி பறிக்கும் உள்ளங்களையும் பறித்துக் கொள்கிறார் நம்மையும் இன்றும்
இந்தக் கதையை உறையூர் நாச்சியார் இடம் சொல்லும் ஒரே பதில் –
எங்கு இருக்கு தெரியாதே -யார் கமல வல்லித் தாயார்
சபதம் -நான் சொல்வது உண்மை
தேவர்களைத் தாண்டி
உலகங்களைத் தாண்டியவர்
கடலில் மூழ்கி -பிரளயம் உண்டே
அக்னி பிரவேசம் -காஞ்சி உத்தர வேதி
குடப்பாம்பில் கை விடவா –சென்றால் குடையாம்
நெய்க்குடத்தில் கை விட்டு சொல்லவா -பழகியவர் தானே
இப்படி வாக்கு வாதம்
பெரியவர் சொல்வதால் ஏற்றுக் கொள்கிறேன்
இப்படி சம்பவம் சாதனை ஆகிறது
உண்மையில் பெரிய பிராட்டியார் கமல வல்லித்தாயார் சேர்த்தி பிடித்தே
வேகவதி -பாத்ம புராணம் -ராவணன் -கூந்தலை இழக்க -தபஸ்ஸால் கை வெட்டப்பட்டு
அக்னியில் குதித்து மறு ஜென்மத்தில் பழி வாங்குவேன்
கபட சந்நியாசி –
மான் பின் போவதற்கு முன்பு -அக்னி ஹோத்ரம் -அக்னி இடம்
போலி சாமியார்-அறிந்து அக்னிக்கு உள்ளே சீதாபிராட்டி
வேகவதி வெளியில் -பழி வாங்க காத்து இருக்க -அவளை அபஹரித்து
மீண்டும் அக்னி பிரவேசம் செய்யச் சொல்லி
சீதாப் பிராட்டி வேகவதி இருவரையும் ஏற்றுக் கொள்ள அக்னி பகவான் பிரார்த்திக்க
ஸீதாப்பிராட்டி ஏற்றுக் கொள்ளச் சொல்ல
அடியார்களைக் காக்கும் விரதமே முக்கியம்
கலியுகத்தில் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளிக்க
சூர்ப்பணகை ஸீதாப்பிராட்டி மூலம் அடையப் பார்த்து இருந்தால் துலுக்க நாச்சியார் போல்
ராக்ஷஸ நாச்சியார் ஆகி இருப்பாள்
திவ்ய ஸூ ரி சரிதம் -தேவதேவியாக தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
திருச்சுகனூர் -ஸ்ரீ நிவாஸன் -வேகவதி மணந்த பின்பே வரச் சொல்லி
பத்மாவதி தாயார் -வேகவதி
மீண்டும் திரு மார்பில் அமர்ந்தாள்
இது தான் லௌகிக வைதிக காதலின் வாசி
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆசை விடாள்
கோமள வல்லித்தாயார் -சேர்த்து வைக்கவே பிராட்டி
நப்பின்னை உன் மணாளனைத் தந்து அபகரிக்க ஆண்டாளும் பிரார்த்தனை
ரஹஸ்யமாக சென்று இருக்காமல் என்னுடன் போய் இருக்க வேண்டுமே
இது அன்றோ நாம் கொடுக்கும் பரிசு -நாடு புகழும் படி
இதுவே தாத்பர்யம்
இந்த நுட்பம் அறிந்த உடையவர் -சேர்த்தி உத்சவத்தில் சரணாகதி -நம்மை இணைத்து வைக்க –
நித்ய கிங்கரோ பவாமி -அவனே திருவாய் மலர்ந்து அனுக்ரஹம்
த்ரேதா யுகம் லஷ்மணன் -சீதா -ராமர் சேர்த்தியில் சரணாகதி
இங்கு அவனே ஸ்ரீ ரெங்க நாதன்
அவளே ஸ்ரீ பெரிய பிராட்டியார்
அந்த இளைய பெருமாளே உடையவர்
அந்த வாக்குவாதம் மட்டை அடி உத்சவம்
சமாதானம் ஆன பின்பே சரணாகதி அங்கும் இங்கும்
அதே கைங்கர்யம்
அது சம்பவம்
இது சாதனை -தான் மட்டும் கைங்கர்ய ஸ்ரீ மான் -இடைவிடாத கைங்கர்யம் பெற்றான் –
இங்கு நாம் எல்லாம் கைங்கர்ய சாம்ராஜ்யம் முடி சூட அன்றோ உடையவர் பிரார்த்தனை –
உடையவர் திருவடி சம்பந்தத்தால் நாம் பெறுவது தானே சாதனை –
ஆசை உடையார்க்கு எல்லாம் –பேசி வரம்பு அறுத்தாரே
ஸிம்ஹம் -மலை தாண்ட
நடுவில் பள்ளத்தாக்கு
மண் புழு ஸிம்ஹ காலைப் பற்றி ஒட்டிக் கொண்டு தாவியது போல்
சம்சாரம் தாண்ட -வலி மிக்க சீயம் -ராமானுஜன் திருத்தாள் பற்றி
அடியேன் ராமானுஜ தாசன் என்பதே பற்றாசாக பேறு பெறுகிறோம்
பூர்வம் சம்பவம்
மீனா உத்தர பல்குநி
ச சரித்திரம் ஏவ
நாளை சாதனம் ஆக
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே . வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply