ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் —
இரண்டாம் அதிகரணம்-சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம் -3-ஸூத்ரங்கள்-
நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
——————————–
நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்-2-ஸூத்ரங்கள்-
விஷயம்
வேதங்கள் அனைத்தும் ப்ரஹ்மம் ஒன்றையே ஜகத் காரணமாக கூறுகின்றன என்று
உரைக்க முடியும் என்பது நிரூபணம்
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
ஆகாசம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது என்று கூறப்பட்டதையே மீண்டும் கூறுவதால் –
ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –
பூர்வ பக்ஷம்
பிரதானமே அனைத்துக்கும் காரணம் என்று சொல்லும் சாங்க்யர்கள் இங்கு மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் ஒரு வஸ்துவிடம் இருந்து மட்டுமே ஸ்ருஷ்ட்டி ஏற்படுவதாகக் கூறப்படுவது இல்லை –
ஆகவே ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்று கூற இயலாது என்பர்
சாந்தோக்யம் -6-2-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்று தொடக்கத்தில் சத் என்பது மட்டுமே காணப்பட்டது என்பதால் –
சத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –
தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று தொடக்கத்தில் இந்த அசத் மட்டுமே இருந்தது -என்பதால் –
அசத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –
வேறு ஒரு இடத்தில் சாந்தோக்யம் -3-19-1-
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத் -என்று
முதலில் அசத்தாக இருந்தது -பின்பு சத் என்று ஆனது -தொடர்ந்து உத்பத்தி அடைந்தது -என்று உள்ளது
ஆகவே வேதாந்தங்களில் ஸ்ருஷ்ட்டிக்கு காரணம் இன்னது என்று கூறப்படாதலால்
ஜகத்துக்கு ப்ரஹ்மமே காரணப் பொருள் என்று உறுதியாக கூற இயலாதே
மாறாக -ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று ஜகத் அப்போது அவ்யாக்ருதமாக –
நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் – இருந்தது -என்று தொடங்குவதன் மூலம்
ஜகத்து பிரளயத்தில் அவ்யாக்ருதத்தில் லயிப்பதாக கூறப்பட்டு
தொடர்ந்து 1-4-7-தந் நாம ரூபாப்யாம் ஏவ வியாக்ரியதே-என்பதன் மூலம்
அவ்யாக்ருதத்தில் இருந்தே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாகிறது என்று கூறப்பட்டது
இந்த அவ்யாக்ருதமே பிரதானம் -நித்யம் –அனைத்து வித பரிணாமங்களுக்கும் இதுவே இருப்பிடம்
இந்த காரணத்தால் தான் ஜகத் காரணமாக இதனைக் கூறும் இடங்களில் சத் என்றும் அசத் என்றும்
இரண்டு விதமாகக் கூறினாலும் முரண்பாடு ஏற்படவில்லை
ஆனால் ப்ரஹ்மம் என்றால் இரண்டு சொற்களையும் முரண்பாடு இல்லாமல் உபயோகிக்க இயலாது
இப்படியாக அவ்யாக்ருதம் என்பதே அனைத்துக்கும் காரணம் என்று நிச்சயித்த பின்பு -ஈஷணம்-அதாவது
பார்த்தல் -சிந்தித்தல் -பஹுஸ்யாம் -பலவாகக் கடவேன்-என்பது போல உபநிஷத்தில் கூறப்பட்ட
ஜகத் காரண வஸ்துவுக்கு இருக்கும் தன்மைகள் அவ்யாக்ருதமானத்துக்கு பொருந்தும்
பிரதானம் மிகப் பெரியதாகவும் பரந்தும் உள்ளதால் -ப்ரஹ்ம சப்தம் ஆத்ம சப்தம் பிரதானத்துக்கு பொருந்தும்
ஆகவே ஸ்ம்ருதிகள் மற்றும் நியாயம் ஆகியவற்றால் உணர்த்தப்படும் பிரதானமே ஜகத்காரணமாகும்
என்றே வேதாந்த வாக்கியங்களும் நிரூபிக்கின்றன என்பர்
ப்ரஹதாரண்யம் -தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத்-அவ்யக்தம் -சாங்க்யர்
பின்பு நாம ரூபங்களை அடைந்தது -name-form-பிரக்ருதியே காரணம் என்பர் பூர்வ பஷி-
இதனால் -ப்ரஹ்மமே காரணம் என்று சொல்ல முடியாது என்பர்
சாந்தோக்யம் -சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-சத் என்ற வாஸ்துவில் இருந்தும் என்றும்
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத்-அசத்தில் இருந்தும் -என்றும் பல வாசிகள் –
வ்ருத்தமான சுருதி வாக்கியங்கள் உண்டே
சத் அசத் என்று பிரக்ருதிக்கே சொல்லலாம் என்பர்
ஈஷத் அதிகரணத்திலே சத் அசத் என்பது பரமாத்மாவையே குறிக்கும் -சொன்ன விஷயம் தானே என்ன
அது கௌணம்-simbolical- பர்வதம் நதி சாக்ஷி சொல்வது போலே -பிரகிருதி பார்த்தது என்கிறது என்பர்
ப்ரஹ்மம் ப்ருஹத்வாத் சொல்வது பிரக்ருதிக்கும் பொருந்தும்
ஆத்ம சப்தமும் இதுக்கு சொல்லலாம் என்பர்
ஸ்ருஷ்ட்டி கர்த்தாவுக்கு விவஸ்தை இல்லை -ப்ரஹ்மம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது
பிரக்ருதியும் காரணம் -அவ்யாக்ருதம் -என்று இருப்பதால் பரிணாமம் அடையாமல் வியக்தமாக இருந்து பின்பு
பரிணாமம் அடைந்து நாம ரூபம் அடைந்து வியக்தம் -அவ்யக்தம் பிரதானம் ஏவ ஜகத் காரணம் என்பர்
சித்தாந்தம்
காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
இதில் ச -என்பது -து –ஆனால் -என்ற பொருளில் வந்துள்ளது –
ஸர்வஞ்ஞத்வ – ஸர்வேஸ்வரத்வ -ஸத்ய ஸங்கல்பத்துவம் -அகில ஹேய பிரத்ய நீகத்வம்-இவை
அனைத்தும் பொருந்திய பர ப்ரஹ்மத்துக்கே ஜகத் காரணத்வம் நிச்சயமாக உரைக்க இயலும் –
ஆகாசாதிஷூ காரணத்வேன ச யதா வ்யபதிஷ்ட உக்தே -ஆகாசம் போன்றவற்றுக்கு ப்ரஹ்மமே காரணம்
என்று கூறப்படுவதால் ஆகும் –
ஸ்ருஷ்டிக்குத் தேவையான அனைத்தும் அறிந்த தன்மை போன்ற சிறப்புக்களுடன் ப்ரஹ்மம் உள்ளதாக
ஜந்மாத் யஸ்ய யத-1-1-2- என்பது போன்றவற்றால் முன்பே கூறப்பட்டது
மேலும் ப்ரஹ்மமே ஆகாசம் போன்றவற்றுக்கு காரணமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது
தைத்ரியம் -2-1-1-
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாசஸ் ஸம்பூத–என்று அந்த ஆத்மா எனப்படும்
ப்ரஹ்மம் இடம் இருந்தே ஆகாசம் உண்டானது -என்றும்
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத–என்று அந்த தேஜஸ்ஸை உண்டாக்கியது என்று அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மமே காரணமாக உள்ளது என்றும்
தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ஸூ சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –என்று
சத்யம் ஞானம் அநந்தம் என்பதாக உள்ள ப்ரஹ்மம் ஜூ -முக்தாத்மா -இப்படிப்பட்ட அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மத்துடன் கூடி இருந்து அனைத்து விருப்பங்களையும் அனுபவிக்கிறான் என்பதால் சர்வஞ்ஞன் என்று கூறப்பட்டு
தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று அந்த ஆத்மாவான ப்ரஹ்மத்திடம் இருந்து தொடங்கி
மேலே உள்ளவை சொல்லிற்று
இது போன்று -சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் –நான் பலவாக தோன்றுவேன் என்று சங்கல்பம் செய்தது-என்று கூறப்பட்ட சர்வஞ்ஞனான ப்ரஹ்மமே
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத –அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டித்தது -என்பதில் கூறப்பட்டது –
இப்படியே அனைத்து ஸ்ருஷ்ட்டி குறித்த வாக்யங்களுக்குப் பொருள் கொண்டு
சத் அசத் அவ்யாக்ருதம் போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது
கர்த்தா -கார்ய உபாதானம் -கடத்துக்கு குயவன் மண் -படத்துக்கு நெசவாளி நூல் –
கர்த்ருத்வம் -ஞானம் பிரயத்தனம் சேதன தர்மங்கள் பிரக்ருதிக்கு கூடாதே
பஹஸ்யாம் ப்ரஜாயேய -என்று சங்கல்பித்து -த்ரிவித காரணம் -அடையக் கடவேன்-சங்கல்பித்து -ஸ்ருஷ்ட்டி –
சர்வஞ்ஞத்வம் வேணுமே -சர்வ ஸ்ருஷ்டிக்கு -சர்வ சக்தித்வமும் வேணும் –
து சகாரார்த்தம் -இங்கு -அவ்யய த்துக்கு அநேக அர்த்தம் கொள்ளலாமே –
பூர்வ பக்ஷம்
தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று உள்ள போது சர்வஞ்ஞனான -ஸத்யஸங்கல்ப விசிஷ்டனான ப்ரஹ்மமே
காரணம் என்பது எப்படி நிச்சயிக்கப்படும்
இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்
—————-
1-4-15-சமாகர்ஷாத் –
தொடர்ந்து கூறப்படுவதால் -என்றபடி –
இந்த ஸூத்ரத்துக்கு -அநு கர்ஷம் அபகர்ஷம் -அதி கர்ஷம் -மூன்று வித பொருள்கள்
முந்தைய இடத்தில் உள்ளத்தை பிந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அநு கர்ஷம் ஆகும் –
பிந்தைய இடத்தில் உள்ளதை முந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அபகர்ஷம் ஆகும்
புதிதாக ஒன்றைச் சேர்த்தல் அதி கர்ஷம் ஆகும்
தைத்ரியத்தில் உள்ள -ஸோ அகாமயத–தத் சத்ய மித்யா சஷதே -என்பதில் கூறப்பட்ட பொருளையே
அசத்வா இதம் அக்ர ஆஸீத் -என்பதில் உள்ள அசத் என்னும் சொல்லால் கூறத் தொடங்குவதால் இது அநு கர்ஷம் ஆகும்
சாந்தோக்யத்தில் அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்பதில் தத் சத் ஆஸீத் -என்று பின்னர் வரும் இடத்தில்
உள்ள சத் என்பதற்கு கூறப்பட்ட பொருளை முன்பு உள்ள அசத் என்பதற்கு எடுப்பதால் இது அபகர்ஷம் ஆகும்
பிருஹத் உபநிஷத்தில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத-என்பதில் வியாக்ரியத என்பதான
செயல் புரியும் சொல் உள்ளதால் -புதிதாக ஒரு கர்த்தாவைச் சேர்ப்பதால் இது அதிகர்ஷம் ஆகும் –
சித்தாந்தம்
சர்வஞ்ஞனான -ஆனந்த மாயா -ஸத்யஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மமே
தைத்ரியம் -3-7-1-அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -என்ற வாக்யத்திலும் தொடர்ந்து கூறப்பட்டது –
எப்படி என்றால் முந்திய பகுதியில் -அநு கர்ஷ முறை –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத்-அந்ய அந்தரே ஆத்மா ஆனந்த மய—2-5-என்று
ஜீவாத்மாவை விட வேறுபட்ட ப்ரஹ்மம் என்றும்
ஸோ காமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய–2 6-என்றும்
இதம் சர்வம் அஸ்ருஜத யதிதம் கி ஞ்ச டு தத் ஸ்ருஷ்ட்வா-தத் ஏவ அநு பிராவிஸத்-தத் அநு பிரவிஸ்ய –
சத் த்யத் ச அபவத்-என்று அனைத்தையும் ஸ்ருஷ்டித்து புகுந்து அனைத்துக்கும் ஆத்மாவாகவே
ப்ரஹ்மம் -என்று கூறப்பட்டது –
தொடர்ந்து -2-6- தத் அபி ஏஷ ஸ்லோகோ பவதி -என்று
இதுவரை கூறிய அர்த்தத்தில் பின்வரும் மந்த்ரமும் உள்ளது -என்றுள்ள வரி மூலமாக இதுவரை கூறப்பட்டவற்றை விளக்க –
அதற்கு சாட்சியாக பின் வரும் மந்த்ரமும் உள்ளது என்று கூறிய பின்னர்
அசத் வா இதம் அக்ர ஆஸீத்–2-7- -என்று தொடக்கத்தில் இவை அனைத்தும் அசத்தாகவே இருந்தன
என்னும் வாக்கியம் உள்ளது
அடுத்து இந்த மந்திரத்தின் அடுத்த வரியை குறைப்பதால் -அபகர்ஷம் தோன்றுகிறது
இத்தைத் தொடர்ந்து பீஷாஸ்மாத் வாத பவதே–தை -2-8- போன்ற வாக்யங்களால் அதே ப்ரஹ்மம் கூறப்பட்டு
ஸர்வேச்வரத்வம் சர்வ ஆனந்த விசிஷ்டத்வம் போன்ற பலவும் உரைக்கப் படுகின்றன
ஆகவே இந்த மந்த்ரம் -அசத் குறித்த வாக்கியம் -ப்ரஹ்மத்தைக் குறித்த விஷயமே யாகும் என்றதாகிறது
அப்போது -ஸ்ருஷ்டிக்கு முன்பு நாம ரூப வேறுபாடுகள் என்பதால் ப்ரஹ்மத்துக்கு சத் -அதாவது -இருக்கின்ற பொருள்
சம்பந்தம் இல்லை என்பதால் ப்ரஹ்மம் அஸத் சப்தத்தால் கூறப்படுகிறது
அஸத் ஏவ இதம் அக்ர ஆஸீத் –சாந்தோ 3-19-1-/6-2-1–போன்ற வாக்யங்களுக்கும் இதே கருத்தே
அடுத்து பூர்வ பக்ஷத்தில்
ப்ருஹி–தத் ஏதத் அவ்யாக்ருதம் ஆஸீத் 1-4-7-என்பது பிரதானமே ஜகத் காரணம் என்பர் -அது கூடாது –
இங்கும் அவ்யாக்ருதம் என்ற சொல்லால் கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே –
ப்ருஹ -1-4-7-
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக் ரேப்ய -பஸ்யம்ச் சஷு ச்ருண்வஞ்சரோத்ரம் மந்வாநோ மந –
ஆத்ம இதி ஏவ உபாஸீத்-என்று ச ஏஷ -என்று உணர்த்தப்படுகிற -தத் -அது என்பதன் மூலம் அவ்யாக்ருதம் என்ற சொல்லால்
கூறப்பட்ட ப்ரஹ்மமே அனைத்துக்கும் உட் புகுந்து நியமிக்கிறார் –
இப்படி முன்னம் கூறப்பட்ட விஷயம் இங்கு சேர்க்கப்பட்டதால் இது அநு கர்ஷம் ஆகும்
மேலும் தை -2-6-1-
தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிஸத்-என்றும்
சாந்தோக்யம் -6-3-2-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்றும் உள்ளவற்றால்
சர்வஞ்ஞனான பர ப்ரஹ்மமே உட் புகுந்து நாம ரூபங்களை ஏற்படுத்துகிறான் என்றதாயிற்று
மேலும் தைத்ரியம் 3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும் உள்ளதால்
உட் புகுந்து நியமித்தல் பிரதானத்துக்கு சம்பவிக்காது –
ஆகவே அவ்யாக்ருதம் என்று கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே ஆகும்
அடுத்து அதிகர்ஷ முறையில் விளக்கம்
பிருஹு -1-4-7-
தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியதே –என்று அதே ப்ரஹ்மம் -பல சரீரங்கள் கொண்டதாக தன்னை மாற்றிக் கொண்டது
பஹுஸ்யாம் ப்ரஜாயேய -போன்ற சங்கல்பம் -ஈஷதே-போன்ற பார்வை
இப்படி பல மேன்மைகளை கொண்ட தன்மை பிரதானத்துக்கு இல்லை என்பதால் ப்ரஹ்ம ஆத்மா சொற்களால் கூற இயலாது
ஆகவே ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபணம்
மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்
அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-
ஆனந்தவல்லி தைத்ரியம் -அசத்-சுருதி வாக்கியம் -அனைத்தையும் ப்ரஹ்மம் குறிக்கும் என்பதைக் காட்ட வந்தது
ப்ராஹ்மண ஷத்ரியம் வைஸ்யம் சூத்திரர் அனைத்திலும் நான்கு வர்ணங்களும் உண்டே
நான்கு வர்ணங்களுக்கு நான்கு வேதங்கள் -யஜுர் க்ஷத்ரியர் -சாம வேதம் ப்ராஹ்மணர் ரிக் வேதம் வைசியர் –
முகத்தில் இருந்து ப்ராஹ்மணர் -அது வேறே விஷயம் -விராட் புருஷன் மூலம் வாதத்தை சொன்னபடி
தைத்ரியம் உபநிஷத் -திருமஞ்சனம் சமயம் -சொல்லுவார்
ராமாயணத்திலும் மனு சாஸ்திரம் quote-உண்டே
நாம ரூப விபாகம் இல்லாததால் அசத் -அவ்யாக்ருதம் இதுவே
தைத்ரியம் -அசன்நேவஸ் ய பவதி -இல்லாமலே ஆகிறான் -ப்ரஹ்மத்தை அறியாதவன் -அசத் ப்ரஹ்ம வேத ச –
ப்ரஹ்ம சத் அவேத ச -என்று கொண்டு கூட்டிப் பொருள் இங்கு
அஸ்தி –சந்தமேனம்-பவதி –
சர்வே சப்தா பரமாத்மாவாவையே குறிக்கும் -அசத் சப்தமும் அவனையே சொல்லலாமே –
அவ்யாக்ருதமான சரீரம் உடைய பர ப்ரஹ்மம் -சொன்னபடி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –
——————–———————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply