ஸ்ரீ பாஷ்யம்— 1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

ஸ்ரீ பாஷ்யம்— —
1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

—————-

சர்வ சாஸ்திர ஸ்ருதிகள் சமன்வய அதிகாரம் -சமன்வய அத்யாயம் –சதுர் சூத்ரம் -அயோக வியச்சேத பாதம் –அந்யோக வியச்சத பாதங்கள் மூன்றும் –
பார்த்த ஏவ தனுர் தாரி -பீமா சேனன் இல்லை -அந்ய யோக வியச்சேதம்–விசேஷயம் ஒட்டி ஏவகாரம்-
சங்கம் வெளுப்பு தான் -விசேஷணம் உடன் ஏவகாரம் -அயோக விவச்சேதம்
பவதி ஏவ கிரியா சங்கத வியச்சேதம் -வலி உறுத்தி சொல்வது -நீலமாகவே உள்ளது -அத்யந்த அயோக விவச்சேதம் –
முதல் பாதம் -ப்ரஹ்ம ஜகத் காரண ஏவ –அயோக விவச்சேதம் –
திரிபாதி-2/3/4/ ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம் -தத்வ த்ரய சம்ப்ரதாயம் சித் அசேதனங்கள் இல்லை ஆத்மாவோ பிரக்ருதியோ இல்லை
தத்வத்ரயம் -போக்தா போக்கியம் ப்ரேரிதா–

1. அயோக விவச்சேத பாதம் – 1. (பிரஹ்ம ஜகத் காரணம் ஏவ )
பிரஹ்மம் ஜகத் காரணம் இல்லை என்பதை நிராகாரணம் பண்ணுகிற பாதம், பிரதம பாதம்.

2. அன்ய யோக விவச்சேத பாதம் – 2,3 , 4 – த்ரிபாதி ( பிரஹ்மைவ ஜகத் காரணம் )
பிரஹ்மத்தைத் தவிர்ந்த வேறு வஸ்துக்கள் ஜகத் காரணம் ஆகலாமே ? என்றால் ஆகமுடியாது என்பதை சொல்ல வந்த பாதங்கள் பின் மூன்றும்.
ஏவகாரம் மூன்று விதம் .
1. அயோகம்.
2. அன்ய யோகம்-இதில் அன்யது என்று குறிப்பிட்டது, சித்தும் , அசித்துமாகும்.
3. அத்யந்த அயோகம்

அத்வைதிகள் – பிரஹ்ம ஏகமேவ தத்வம்
மாத்யமிக பௌத்தர்கள் – சூன்ய ஏகமேவ தத்வம்
யோகாசார பௌத்தர்கள் – விக்ஞான ஏகமேவ தத்வம்
பர்த்ரு ஹரி – ஸப்த பிரஹ்ம ஏகமேவ தத்வம்
ராமானுஜர் – ஸவிசேஷ பிரஹ்ம ஏகமேவ தத்வம்

சாங்கிய மதம் – பிரகிருதி-புருஷ த்வி தத்வ வாதம். (நிரீஸ்வர சாங்கியம்)
ராமானுஜர் – தத்வ த்ரய வாதம் – இது ஸ்ருதி ஆதாரம் இல்லை என்று சிலர் வாதிப்பர். ஆனால்
போக்தா, போக்கியம் பிரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் பிரோகத்தம் திரிவிதம் பிரஹ்ம ஏதது என்கிற ஸ்வேதாஸ்வேதர உபநிஷத்தில் இது ஸ்பஷ்டம்.

முதல் பாதத்தில் அடுத்து வரும் 7 அதிகரணங்களில் வேத வாக்கியங்கள் விஷய வாக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராய பட்டுகின்றன.
எந்த வாக்கியங்கள் எப்படிப்பட்டன என்றால், பிரகிருதியும், ஜீவாத்மாவும், ஜகத் காரணம் என்று சொல்வது போல் அமைந்தவைகள் ஆகும்.
அ.து. அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (very vaguely indicate that Jeeva and Prakruti are Jagat karana)

2வது பாதத்தில் எடுக்கப்பட்டவை அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (vaguely indicate that Jeeva and Prakruti are Jagat karana) )

3வது பாதத்தில் எடுக்கப்பட்டவை ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (clearly indicate that Jeeva and Prakruti are Jagat karana)

4வது பாதத்தில் எடுக்கப்பட்டவை ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (very clearly indicate that Jeeva and Prakruti are Jagat karana)

பேடிகா-சம்பந்தம் -அத்யாயம் -பாதம் -அதிகரணம் -ஸூ த்ரம் -ஒவ் ஒன்றுக்கும் –

சாஸ்திர ஆரம்பன-நான்கும் – –வேதாந்த சாரம் மேலே இரண்டு அதிகரணங்கள் –

முதல் அத்யாயம் முதல் பாதம் -8 ஸூத்ரங்கள்
ஈஷத் அதிகரணம் –பிரகிருதியைக் காட்டிலும் வேறுபட்டுள்ள பிரஹ்மம் ஜகத் காரணம் -பிரகிருதி விலஷணன் ஜகத் காரணன் |
ஆனந்த மய அதிகரணம் -ஜீவாத்மா விலஷணன் ஜகத் காரணம் –

சதேவ சோம்யே —யேக மேவ அத்விதீயம் -பஹூச்யாம் -இத்யாதி –சாந்தோக்யம் -ஸ்ருதி சிரஸ் -உபநிஷத் -உத்தம அங்கம் சிரஸ் -ப்ரஹ்ம பிராப்தி வித்யை —
ஈசா –கேன –கட -பிரச்னம் –முண்டக –தைத்ரிய —ஐதரேயம் –சாந்தோக்யம் –ப்ரேஹாதாரண்யம் தச உபநிஷத் -ஸூபாலிகா -ச்வேதாதர-இத்யாதிகளும் உண்டு
ஈசா உபநிஷத் தேசிகன் வியாக்யானம் -32 ப்ரஹ்ம வித்யைகள்-என்பர் -பின்ன ருசி -என்பதால் -ஸூ பாஸ்ரயம் திரு மேனிகள் -அர்ச்சா ரூபம்
-நியாச வித்யை -நிஷ்டர்கள் -சரணா கதி –

ஈக்ஷதேர் ந ஸப்தம் – சூத். 1-1-5.

உபநிஷத் – ஸ்ருதி ஸிரஸ் -; பிரஹ்ம வித்யா பிரகரணம். தாஸோ பரிஷத் :
ஈஷா கேந கட பிரச்ந முண்ட மாண்டூக்கிய தித்திரி : ஐதரேயஞ்ச சாந்தோக்யம் பிரஹதாரண்யகம் ததா ||
ஸுபாலோபநிஷத்
கௌஷீதிஹி ப்ராஹ்மணம்
ஸ்வேதாஸ்வேதர உபநிஷத்
இவைகளில் இருந்தும் விஷய வாக்கியங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரஹ்ம விசாரம் தான் எல்லா உபநிஷத்துக்களுக்கும் விஷயம். ஒட்டு மொத்தமாக 32 பிரஹ்ம வித்யைகள் பேசப்பட்டுள்ளன. அவற்றில் சில:

பஞ்சாக்கிநி வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
ஸத் வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
தகர வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
பூம வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
நாசிகேத பிரஹ்ம வித்யா – கடோபநிஷத்
மைத்ராயணி வித்யா — பிரஹதாரண்யகம்
வாருணீ வித்யா — தைத்ரீய உபநிஷத்
எல்லா பிரஹ்ம வித்யைகளும், பகவத் குணங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி செய்ய வேண்டிய கர்மாக்களை பேச வந்தவைகளாகும்.
நாநா ஸப்தாதி பேதாத் ” என்று அதிகாரி ருசி, இச்சா, ஆஸக்திக்குச் சேர வித்யை வேறு பட்டாலும் பலவியாப்தியில் பேதமில்லை.

ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் அவதரித்த பிறகு நமக்கு அந்வயிக்கக் கூடிய பிரஹ்ம வித்யை – நியாஸ வித்யை ஒன்றே ஆகும்.

நித்ய, முக்த்தர்களுக்கு ஸுபாஸ்ரயம் – பர ரூபம்
தேவதாந்தரங்களுக்கு – வியூக ரூபம்.
யோகிகளுக்கு – அந்தர்யாமி ரூபம்.
முமுமுக்ஷுக்களுக்கு – அர்ச்சாவதாரம் என்று
பிரபன்னாதிகாரிக்கு விஷய நியமமாவது அர்ச்சாவதாரம் . ஸுபாஸ்ரயமான மூர்த்தியை தியானிக்க 108ல் எந்த திவ்ய தேசத்து எம்பெருமானும் கூடும் .

ஈஷத்யதிகரணத்துக்கு விஷய வாக்கியம்
சாந்தோக்கியம் . ஸத் வித்யா அதிகரணம் 6 – பிரபாடம் – மந்திரம் 3 – அருணர் – ஸ்வேதகேது சம்வாதம்.

ஸதேவ சௌம்ய! இதம் அகர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம்–தது ஐக்ஷத . . . பஹுஸ்யாம் பிரஜாயேய இதி-தத் தேஜோ அஸ்ருஜா

I will see , I will look into means let me think, let me give thought to it என்பது போல
தது = ஸது என்று பேசப்பட்ட பிரஹ்மம்
ஐக்ஷத = பார்த்தது என்றால் சங்கல்பித்தது . என்னவென்று சங்கல்பித்தது என்றால்
பஹுஸ்யாம், பிரஜாயே ஏதி = பலவாக பிறந்தேனாகக் கடவேன் என்பதாக.
தத் தேஜோ அஸ்ருஜத = அக்நி படைக்கப் பட்டது.
தத் ஐக்ஷத அபோ அஸ்ருஜத = அக்நி நான் தண்ணீராக பிறக்கக் கடவேன் என்று, நீர் படைக்கப் பட்டது.

ஸது என்கிற வஸ்துவிலிருந்து நெருப்பு, நீர், பார் இவை பிறந்தது என்று இருக்கிற படியால்,
ஜகத் பரிணாமத்துக்கு, அக்நி , ஆப , பிருதிவி என்கிற த்ரீடிகரண பூதங்கள் காரணம். பிரஹ்மம் காரணமாகாது என்பது சாங்கிய மத ஆட்சேபம்.

In English language, I – you – he -> denotes 1st, 2nd, 3rd person singular, where I = அஹம் is given primary importance.
ஆனால், சமஸ்க்கிருத பாஷையில், அஹம் 3ஆம் வேற்றுமையில் படிக்கப் படுவதன் தாத்பர்யம்,
”அஹம் ” என்பது போய் ”ஸ்வம் ” என்கிற பாவம் வெளிப்பட வேண்டும் என்பதற்காக.

தது -> Pronoun – பூர்வ பராமர்ஷி யாக முன்னால் சொல்லப்பட்ட Noun ஐ குறிக்கும் .
அல்லது புத்திஸ்த பராமர்ஷி யாக சங்கேத்யமாக ஆராயப்படும் ஒன்றாகும்.

இங்கு ”தது ” என்பது முன்னால் சொல்லப்பட்ட ”ஸத் ” ஸப்த வாச்ய அசேதனமான பிரகிருதியைக் குறிக்கிறதா?
அல்லது சேதனமான பிரஹ்மத்தைக் குறிக்கிறதா? என்கிற சந்தேகம் எழ இதை
டோலா விக்ஷேப கல்ப ” என்று குறிப்பிடுகிறார், ஸ்வாமி தேசிகன். ஸ்தாணுர்வா புருஷோ ஏதி?
என்கிற நிலை. இது ”த்விகோடிக சம்ஸயம் ” என்றும் சொல்லுவார்.

பரர்களான சாங்கியர்கள் கருத்து என்னவென்றால், அது ஆனுமானிக பிரதானம்.
அது அனுமான பிரமணத்தால் அறியக் கூடிய பிரக்ருதிதான் ”ஸத் ” என்ற சப்தத்தால் சொல்லப்பட்டது ,
காரணம் த்ரிகுணாத்மகமான பிரகிருதி, த்ரிகுணாத்மகமான ஒன்றாலேயே படைக்கப்பட்டதாக வேண்டும் என்பதாக.

அல்லது நாம் சொல்லக் கூடிய ”யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே. . . . .” என்கிறபடி,
காரண-கார்ய பூதமான எந்த பரமாத்மா படைத்து, காத்து, கரந்து செயல் படுகிறானோ ,
அந்த பிரஹ்ம வஸ்துதான் ”ஸத் ” சப்தத்தால் சொல்லப்பட்டதா? என்பது கேள்வி.

குண ஸாம்யாவஸ்தம் பிரதானம் — All the three Gunas are in a state of equilibrium.
வைஷம்யாவஸ்தம் ஸ்ருஷ்டி: – State in which the three Gunas are unequal proportions. என்பது மஹரிஷி கபிலாசாரியருடைய சித்தாந்தம்.

”ஏன அஸ்ருதம் ஸ்ருதம் பவதி , அமதம் மதம் , அவிக்ஞாதம் விக்ஞாதம் . . மிருக் பிண்டம் காரணம் . கடம் கார்யம் . என்பது போல
”ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம்” என்கிற கூற்று, இந்த அடிப்படையில் விளங்கிக் கொண்டால் அல்லது, பிரகிருதத்துக்குச் சேராது . எனவே
”ஸது ” என்கிற சப்தத்தால் இந்த பிரகரணத்தில் சொல்லப் பட்டது ”பிரகிருதி” தான் .
அப்படி ஏற்றுக் கொள்ளாவிடில், திருஷ்டாந்த-தார்ஷ்டாந்திக வைரூப்யம் வந்து சேரும் என்பது பூர்வ பக்ஷம்

———–

சத்வித்யை –ஸ்வேதகேது–அருணர் மகரிஷி பிள்ளை -இதி -பிள்ளை -அப்பா வாக்ய பேதத்துக்கு –அமதமம் மதம் -இதம் சர்வம் -மய ப்ரத்யயம் –
மண் குடம் -காரணம் அறிந்து காரைப் பொருள்களை அறிவது –சர்வம் லோக மாயம் -தங்க ஆபரணங்கள் –
அக்ரே ஆஸீத் முன்னால் எல்லாம் சத்தாகவே இருந்தது –ஒன்றாகவே இருந்தது ஏக மேவ –சிலர் அசத் சப்த வாச்யமாக என்பர் -இது சரி இல்லை
-அசத்தில் இருந்து சத் உண்டாக்க முடியாதே -சத் வஸ்து பார்த்து பஹூச்யாம் பிரஜாயேவ -சங்கல்பித்தது
தேஜஸ் சிருஷ்டி -தேஜஸ் பார்த்து -சங்கல்பித்து -பிரஜாயேய -ஜலம் சிருஷ்டி -தேஜஸில் இருந்து ஜலம் வெய்யிலில் வியர்வை –அன்னம் -சிருஷ்டி —
மழை பெய்து நெல் விளையுமா போலே –விஷய வாக்ய விசாரணை -பிரகிருதி பரிணாமங்கள் இவை –
சத் சப்த வாச்யம் -பிரகிருதி -பூர்வ பஷம்-தேஜஸ் -ஜலம் -அன்னம் -பிருத்வி -மூன்ற பூதங்கள் –த்ரிவித் கரணம் சாந்தோக்யம்
-மற்ற இடங்களில் வாயு ஆகாசம் -சேர்த்து பஞ்சீ கரணம்
சத் -என்றது -ஜகத் காரணம் –பரோக்தம் -அசலார் -ஆனுமானிக பிரதானம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்கப் படும் பிரகிருதி என்பர் –
ஜகத் சத்வ ரஜஸ் தமஸ் த்ரிகுணமயம்-இருப்பதால் -என்பர் –
இதம் –இந்த வஸ்துக்கள் -இதம் சர்வம் -பிரத்யஷமாகுமே -திரிகுணம் கலந்தவை -சேதனனுக்கு போக உபகரணமாய்–போக்யமாய் –
நாநா ரூபமாய் -அநேக விகார ரூபமாய் -காரண கார்ய -மண் கடம் அவஸ்தை –குண சாம்யம் பிரதானம் –
குண சாம்யம் பிரளயம் குணம்பிரகிருதி அறிந்தால் அதன் பரிணாமமான அனைத்தையும் அறியலாம் -த்ரி குணாத்மகம்-
சத் என்பதால் பிரகிருதி தான் – கபிலர் –
பிரதானம் ஏவ என்று கொண்டால் தான் இந்த வாக்யங்கள் பொருந்தும் —
சத் சப்தம் வியாபார ஈஷதி -அசேதனம் சங்கல்பிக்க முடியாதே -த்ருஷ்டம் –பிரத்யஷம் -ஆனுமானிகம் –ஆப்த சப்தம் -மூன்றும்
கபிலர் நம் போலே பிரமாணங்கள் என்பர்
ஏவம் பிராப்தே -சப்த ஏவ -சப்த வாச்ய ஈஷதே-வியாபாரம் -சேதனனுக்கே-மட்டுமே பொருந்தும் -சங்கல்பம் -மானச கர்மம்
சங்கல்ப ரூபமான ஈஷணம் பண்ணுபவன் சர்வஜ்ஞ்ஞன் சர்வ சக்தன் புருஷோத்தமன் பரமாத்மாவாகவே இருக்க முடியும்
ஞானம் -வேண்டும் என்ற ஆசை -ஞானம் இச்சா க்ருதக-சிருஷ்டி –உபாதான கோசர -ஞானம் –ஆசை –யத்னம் –எந்த கார்யத்துக்கும் இப்படியே –
ந அசப்தம் -பிரகிருதி குறிக்கப் படாது -இது போலே –ஈஷதா –ச இமாம் லோகன் ஸ்ருஜதா -ஐயதேரயம் -ஈஷான் சக்ரதா போன்ற ஸ்ருதி வாக்யங்கள்
கொண்டு -சித்தாந்தம் -அனுபபத்தி -த்ரி குணாத்மயம்-கார்யத்தில் இருக்க -காரணம் -ஏக் விஜ்ஞ்ஞானம் சர்வ விஜ்ஞானம் –

பிரதிபாதன யோக்யதை –2-2- பாதம் -வஸ்து விரோதம் -காட்டி அருளப் போகிறோம் -இங்கே ஸ்ருதி வாக்யார்த்தம் -பார்த்து இருக்கிறோம் –
மேலே சேதனம் ஜீவாத்மாவாக இருக்கலாமே -என்பதற்கு -அடுத்த சூத்ரம் -ஆனந்த மயம்
பூர்வ பஷம் வ்யக்தமாக சூத்ரங்களில் இல்லாமலும் இருக்கலாம் -கேள்வி வந்தால் இந்த பதில்கள் என்று விவரமாக சொல்லி அருளுவார் –
நேராக சித்தாந்த சூத்ரம் -சில இடங்களில் தனியாக பூர்வ பஷ சூத்ரம்
சங்கல்பம் -சேதனம் -நெல் மழையை எதிர்பார்க்கும் –அசேதனம் யோசிக்குமா –விதை –முளை –விஸ்தீரமாக ஆக்கும் –
ஆத்மா சப்தாத் –கௌவன பிரயோகமாக இருக்க முடியாது
த்ரி குணாத்மகம் –த்ரி குணம் கூடியவை -வாசி உண்டே -சிகப்பு பென்சில் -சிகப்பு வேற பென்சில் வேற -சம்பந்தம் உண்டு -யதார்த்த ஜ்ஞானம்
சம்யோக சம்பந்தம் பிரித்து கட்ட முடியும் -பிரிக்க முடியாமல் –
சமவாய சம்பந்தம் -தனியானவை இருந்தாலும் தனித்து பிரிக்க முடியாதவை
அப்ருதக் சித்தி சம்பந்தம் -சம்ப்ரதாய வார்த்தை –

எத்தை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ -அவனே ப்ரஹ்மம் -தத்வமஸி ஸ்வேத கேது -இதி –
ஆல மரம் -பழம் எடுத்து -அதில் – விதை -எடுக்கச் சொல்லி -அணு –விதைத்து -பீஜம் -சூஷ்மம் -குகையில் இருப்பது போலே -மூல ஆதி காரணம் –
பீஜம் மாம் சர்வ பூதானாம் -அணுர் அணீயான் மஹீம் மஹீயாம் -அத்யந்த சூஷ்மம்
விசுவாசம் ஒன்றே வேண்டும் -விதையில் இருந்து ஆலமரம் வருவது போலே என்று -ஸ்ரத்யையே வேண்டுவது -ஐ தாத்ம்ம்யா இதம் சர்வம் —
அடுத்து வேறு உதாரணம் -உப்பு தனி -நீர் தனி -உப்பு சேர்த்து நீரை விட்டு -உப்பு மயம் –கரைந்து -ரசம் நீரிலே சேர்ந்து -உப்பு காண முடியாமல் சூஷ்மமாக –
பரமாத்மா அந்தர்பூதம் அனைத்திலும் என்பதைக் காட்டி உபநிஷத் -யாருக்கு சாஷாத் கரிக்க உணர முடியுமோ அவன் ப்ரஹ்ம ஞானம் உடையவனாக இருக்கிறான் –
இதம் சர்வம் ஸ்வதகேது—6த் அத்யாயம் சத் வித்யை 7த் அத்யாயம் பூமா வித்யை -சனத்குமாரர் -நாரதர் –
சத் சப்தத்தால் -அதே வஸ்து – ஒன்பது தடவை ஐ கதாத்மா இதம் சர்வம் சொல்லி -ஆத்மா சப்தத்தால் சொல்லப் பட்டு இருக்கிறதே
சொன்னது பரமாத்மாவையே குறிக்கும் -பூமா வித்யை 7 அத்யாயம் -அடுத்து -நாரதர் சனத் குமாரரை கேட்டு –
இதில் சங்கல்பம் -இஷதே-பார்க்கிறது -சங்கல்ப்பிப்பதை சொல்லி-பஹுஸ்யாம் பிராஜாயேய- சங்கல்பம் பண்ணி
சத் சப்த வாஸ்யம் ப்ரஹ்மம் காட்டும் என்று காட்டி அருளுகிறார் –
அசேதன வஸ்து சங்கல்ப்பிக்க கூடாதோ என்னில் -ஆத்ம சபிதாத் -பிரக்ருதியை இந்த சப்தத்தால் சொல்ல முடியாதே –
சத் சப்தம் சொல்வதை ஆத்மா என்றும் சொல்வதால் -என்றவாறு -மேலும் பல காரணங்கள் சொல்லுகிறார் -பல ஸூத்ரங்களால்-

சாங்கியர்களுடைய இந்த பூர்வ பக்ஷம். ஏற்புடைத்தல்ல . காரணம்
தது ஐக்ஷத” என்கிற ”ஈக்ஷதேர் தாது ” சப்த நிர்தேசத்தால் , ஜகத் காரணம் ”பிரதான்” என்று வைத்துக் கொண்டாலும்,
அந்த அசித் வஸ்துவால் பார்க்கவோ, சங்கல்பிக்கவோ முடியா தாகையால் , அந்த ”ஸத் ” வஸ்து
ஞான, இச்சா, யத்ன சங்கல்பாதிசய சைத்தன்யம் உடையாத இருக்க வேண்டும்.
ஸத் ஏவ ஸௌம்ய ! அக்ர இதம் ஆஸீத் ” என்கிற ஸ்ருஷ்டி காரண வாக்கியத்தில் உள்ள ”ஸத் ” என்ற ஸப்தத்தால் சொல்லப்பட்ட வஸ்து
ந அஸப்தம் – அனுமானப் பிரமாணத்தால் மட்டுமே அன்றி, சப்த பிரமாண த்தால் அறிய மாட்டாதான ” பிரதானம் ” ஆகமாட்டாது .

ஐக்ஷதே : – காரணம், சங்கல்ப கர்பமான ”பார்த்தது / தீர்மானித்தது ” என்கிற பொருளில்,
சைதன்ய வியாபார விஷயமாய் சொன்ன படியால். எனவே சைதன்ய முடைய பொருளே ”ஸத் ” ஸப்தத்தால் குறிக்கப் படவேண்டும்.
அப் படியாக சைதன்ய முடைய பிரஹ்மம் ஜகத் காரணம்; பிரதான் (Primordial Matter) அன்று, என்பது இத்தால் உறுதி செய்யப் பட்டது.

பஞ்சமி பதத்தில் ஸூத்ரங்கள் முடியும் இந்த பிரகரணத்தில் -ஹேதுத்வ பஞ்சமி -காரணங்களை காட்டி -சத் என்பது ப்ரஹ்மத்தையே காட்டும் –
தன்னிஷ்ட- மோக்ஷ உபதேதேசத் -சத் சப்தம் உபாசித்து மோக்ஷம் கிடைப்பதால் -மாதா பிதா போன்ற வத்சலயையான சாஸ்திரம் –
சரீர அவசானத்திலே- ப்ரஹ்ம சம்ச்லேஷ ரூப மோக்ஷம் –
8 ஸூ த்ரங்கள் இந்த அதிகரணத்தில் –
சாதக யுக்தி -பாதக யுக்தி -இரண்டு வகைகள் -சத் சப்த வாஸ்யம் பிரகிருதி இல்லை -ப்ரஹ்மமே —
ஸூ அப்யயாத் -merges இன்று ப்ரஹ்மம் என்பதால் -கார்யம் சுவ காரணத்தில் லயிப்பதால் –
ஸ்வப்னம் எதனால் -ஸ்வேதகேது -ஜாக்ரத் அவஸ்தை /ஸ்வப்னம் அவஸ்தை -deep sleep தசை -ஸூ ஷூப்தி -நன்றாக தூங்கி
புரியா அவஸ்தை நான்காவது -யோகம் ஸமாப்தி போலே -விலக்ஷணம் விசித்திரம் -ஸமாப்தி சித்தி ஈஸ்வரனாலே கிட்டும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இந்த சமாதி ஸ்திதி இல்லை என்பர் -யோக சம்பிரதாயத்தில் தான் உண்டு என்பர்
இது அபூர்ணம்-நமக்கு பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் –
லயம் அடைவதால் -ஸ்வஸ்மின்-தனக்குள் -தன்னுடைய காரணத்திலே -ஸூ காரண லய பிரளயம் –
கதி சாமான்யாத் –ப்ரஹ்மம் ஒன்றே காரணம் -உபநிஷத் வாக்கியங்கள் -காட்டி –
சர்வஞ்ஞன் – சர்வசக்தன் -சர்வேஸ்வரன் -நிரஸ்த நிகில தோஷ கந்த ரஹிதன் அனவதிக -அஸங்க்யாத குணார்ணவம் –
நாராயண ஏவ -புருஷோத்தமன் -நிகில ஜகத் ஏக காரணம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம் –
மறப்பற-மறப்பனோ நான் என் மணியை -எல்லாம் அவன் அதீனம்-
ஈஷத் அதிகரணம் -முன்பு பார்த்தோம் – 8 சூத்திரங்கள் -உண்டு இதில் –
ஈஷதே ந சப்தம் – கவ்விநஸ்ய ஆத்ம சப்தாத் /–முதல் இரண்டு /ப்ரதிஞ்ஞா விரோதாதி -5 /ஸ்வாபியையா -லயம் ஸூ ஷூப்தி தசை /கதி சாமான்யாத்-
ஆனந்தமயா அதிகரணம்-அடுத்து-

——————————————————————————————–

முதல் 4 அதிகரணங்களில் பூர்வ பக்ஷம் சந்தேகங்கள் சூத்திர வடிவில் ஸ்பஷ்டமாக இல்லாமல், அனுமானித்து பரிகரிக்கப் பட்டன.
இதை ”உத்ஸூத்ரம் ” (implied) என்பதாகச் சொல்லுவார்.
ஆனால் இந்த 6வது சூத்திரத்தில் கேள்வியும் – பதிலும் ஒரே சூத்திரத்தில் அமைந்துள்ளன.

விருஷ்டி பிரீதீக்ஷய : சாலய : – வானம் பார்த்த பூமி என்று சொல்லும்போது அசேதனமான விளைநிலம் மழையை
எதிர்நோக்கி உள்ளது என்று சொல்கிற இடத்தில் ”வானம் பார்த்த” என்று சைதன்ய வியவகாரமிட்டு சொல்கிற வழுக்கு உண்டாதலால்,
ஸது ஐக்ஷத ” என்று சொன்னால், அது சைதன்ய வஸ்துவான பிரஹ்மமாக இருக்க வேண்டும் என்கிற நியமம் இல்லை.
பிரதான் ” என்கிற அசேதனமாகவும் இருக்கலாமே? ”பிரகிருதி பார்த்தது ” என்று கௌணமாக சொன்னதாக கொள்ளலாமே என்பதையே

கௌண : சேத் ந ஆத்ம ஸப்தாத் – சூத் 1-1-6.

ஸதேவ சௌம்ய! இதம் அகர ஆஸீத் ஏக மேவா அத்விதீயம்-தது ஐக்ஷத . . . பஹுஸ்யாம் பிரஜாயேய இதி
தத் தேஜோ அஸ்ருஜா
தத் தேஜோ ஐக்ஷத
தன் ஆபம் ஐக்ஷத
என்று அடுத்து அடுத்து-தேஜஸ் பார்த்தது-ஜலம் பார்த்தது
என்பதாக வேதாந்த வாக்கியம் சொல்லுகிற படியால், அந்த இடத்தில் எல்லாம் ”பிருஹ்மம் ” பார்த்தது என்று சொல்ல முடியுமா?
இல்லை. அவை கௌணப் பிரயோகம் அல்லது லாக்ஷணிகம் என்றே கொள்ள வேண்டும் என்பது ஆக்ஷேபம்.
லாக்ஷணிகம் என்பது Metaphorical sense. உ.ம். சிம்ம: மாணவக: – அவர் கணக்குலே பெரிய புலி என்றால் ”சமர்த்தர் ” என்பதான
குணத்தை வைத்து சொல்லுகிற வழக்கு. கௌணப் பிரயோகம்.

அது தவறு. காரணம் மேலே ”ஐததாத்மம் இதம் ஸர்வம் | தத்சத்யம் | ஸ ஆத்மா |” என்பதாக,
”ஸத் ” ஸப்தம் ”ஆத்ம ” ஸப்தத்தால் வியவகரிக்கப் பட்டுள்ளபடியால்.
ஸ து = ஆத்மா =/= பிரக்ருதி . இரண்டுக்கும் உண்டான சம்பந்தம் எப்பேற்பட்டது என்றால், அது

சமவாய சம்பந்தம் (அ) அபிரதக் ஸித்தி சம்பந்தம் = features separate but not separable as in ரக்தம் புஷ்பம் . மாறாக
சம்யோக சம்பந்தம் என்றால் அது பிரதக் ஸித்தி சம்பந்தம் = separable relation like தனுர்தாரி அர்ஜுணன்.
”ஸத் ” வித்யா பிரகரணத்தின் போக்கு எப்படி உள்ளது என்பதை காட்டுவதுதான் இந்த Ch.6 Part 11 Sath vidya சாந்தோக்ய Upanishad.பாகம்.

ஜீவாபேதம் வாகிலம் மிரியதே ந ஜீவோ மிரியதே ஸ யேஷ: அணிமா – ஸத் சப்த வாச்யமான வஸ்து அணிமா = மிகவும் சிறியது.
ஐத்தாத்மம் இதம் ஸர்வம் = இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக்கும் அது தான் ஆத்மா.
தத் ஸத்யம் = எது எல்லாவற்றிற்கும் உபாதானமாக இருக்கிறதோ, அது சத்யமான வஸ்து.
ஸ ஆத்மா = அதுதான் அனைத்துக்கும் ஆத்மா.
தது துவமஸி ஸ்வேதகேதோ! = அந்த ஆத்மாதான் ஸ்வேதகேதுவாகிய உனக்குள்ளும் இருக்கிறான்.
பூயயேவம் மாம் விஞானம் ஏதது = மேலும் எனக்கு நீர் விளக்குவீராக
ததா ஸோம்ய! =அப்படியே ஆகட்டும்.

பூயயேவம் மாம் விஞானம் ஏதது = என்று மீண்டும் விக்ஞாபிக்க, அப்பில் உப்பு கலந்த கதை விவரிக்கப்படுகிறது
உப்பு கண்ணுக்கு புலப்படாவிட்டாலும், சுவைத்துப் பார்க்கும் போது உணர முடிகிறது.
அதுபோல பிரஹ்ம வஸ்துவானது இந்த நம் வெளிப் புலன்களுக்கு கோசரம் ஆகாவிட்டாலும், பிரஹ்ம வித்யைகள் மூலமாக,
அவன் அப்பினுள் உப்பு போல் அந்தர் பூதமாக இருப்பதை உணரலாம் என்ற உரைக்கலானார்.
”ஐததாத்மம் இதம் ஸர்வம் | தத்சத்யம் | ஸ ஆத்மா |” என்பதாக பன்னிப் பன்னி 9 முறை சொல்ல,
எது ஸது என்று குறிக்கப்பட்டதோ , அது ஆத்மா என்றும் குறிப்பிடப் பட்டுள்ளதாலும் ,
ஆத்ம சப்தம் பிரக்ருதியை குறிப்பதாக எந்த இடத்திலும் சொல்லப் பட வில்லை ஆகையாலும் ,
ஸது என்பது பரமாத்மாவையே குறிக்கும். பிரக்ருதியைக் குறிக்காது, என்று காட்டி சாங்கிய பக்ஷம் நிரஸிக்கப்பட்டது.

————

தந்நிஷ்டஸ்ய மோக்ஷோபதேசாத் – சூத். 1-1-7.

இந்த பிரகரணத்தில் வரும் ஸூத்ரங்கள் அனைத்தும் 5 ஆம் வேற்றுமை உறுப்பில் முடிவதால்,
”ஹேதோ பஞ்சமி ” ( ஹேது = காரணம்) என்கிற வியாகரண விதியின் படி, ஸத் ஸப்தம் பிரக்ருதியை குறிக்காது என்பதை
காரணம் கொண்டு விளக்குவதாகக் கொள்ளலாம்.

ஸத் ஸப்த வாச்யமான வஸ்துவை உபாசிப்பதனால் மோக்ஷம் சித்திக்கும்.
ஸத் ஸப்த வாச்யம் பிரக்ருதி ஆனால் , அதை உபாசிப்பதால் மோக்ஷம் கிட்டும் என்று சாங்கியர்களுக்கும் அபிப்ராயம் இல்லை.
பிரகிருதி – புருஷ விவேகத்தால் மோக்ஷம் என்பதே அவர்களுடைய நிலைப்பாடு.
ஸத் ஸப்த வாச்யமான வஸ்துவை உபாசிப்பதனால் மோக்ஷம் கிடைக்கும் என்று சொல்லி இருப்பதால், அது பரமாத்மாவையே குறிக்க வேண்டும் .

தத் கிரதுன் நியாயம் :
யதா கிரதும் அஸ்மின் லோகே புருஷோ பவதி ததா தத் பிரேத்ய பவதி ( சாந்தோ -பிரபா 3- கண்ட 11)
ஸாதாநுகுணம் பலம் –
செய்தவத் தற்றேயால் துய்பலன் வீடடை மெய்தவத் தாம்பயன் விட்டு.

புத்ர காமேஷ்டி யாகம் பண்ணினவனுக்கு புத்ர பௌத்ர யோகம் உண்டாகுமே ஒழிய, வாயவ்ய யாகத்தின் பயனோ, சேன யாகத்தின் பயனோ கிடைக்காது.
ஆனால் மோக்ஷபலத்தில் வந்தால், கர்மா, க்ஞான, பக்தி, பிரபத்தியாகிற எந்த உபாசனை மூலமாகவும் கிட்டுகிற மோக்ஷ பலத்தில் வித்யாசம் கிடையாது.

ஆனால், மத்வாச்சாரியார் பரஸ்பர ஜீவ பேதம் சொல்லி, அவரர் ஆத்ம உத்கிருஷ்ட, நிகிருஷ்டத்துக்குச் சேர,
மோக்ஷ அனுபத்திலும் தாரதம்யம் உண்டு என்பதாக சொல்கிறார். அது நமக்கு சம்மதம் இல்லை. என்றாலும்
பகவத் சாட்சாத்காரம் பெற்ற நம்மாழ்வார் அடைந்த பகவதனுபவம் திருமங்கை ஆழ்வார் அல்லது மற்றைய ஆழ்வார்கள்
பெற்றாரா என்பது நம்முடைய விசாரத்திற்கு அர்க்கமன்று .

ஒரு வேளை ”ஸது” என்கிற ஸப்தத்தால் பிரக்ருதியே குறிக்கப் பட்டிருந்தால் ,
மோக்ஷ ஸித்திக்கு பிரக்ருதியை உபாஸிக்க சொன்னதாக ஏற்படும். அதை சாங்கியர்களும் ஏற்றுக் கொள்வதில்லை.
பிரதான காரணவாதி நோபிஹி பிரதான ஜனிஷ்டஸ்ய மோக்ஷம் ந அப்யுப கச்சந்தி . பிரதான காரணஸ்ய கைவல்யம் என்று அவர்களும் சொல்வதில்லை.

மேலும் தத் கிரதுன் நியாய படி, பிரக்ருதியை உபாசிப்பதால், பிராக்ருத பலம்தான் (lower state of bonded Soul) கிடைக்குமே ஒழிய
ஆத்ம உன்னதி கிட்டாது. மாதா பித்ரு ஸகஸ்ரோப்யோ வத்சல தரம் ஸாத்திரம் என்பதால்,
சாஸ்த்திரம் அப்படிப்பட்ட அசித் உபாசனத்தை ஒருபோதும் உபதேசிக்காது.

வாத்சல்யம் = தோஷ போக்யத்வம்-தென்கலை பக்ஷம் / தோஷ அனாதரத்வம்-வட கலை பக்ஷம்

தஸ்ய தாவ தேவ சிரம் யாவன் விமோக்ஷ்யே அத ஸம்பத்ச்யே = ஸத் சப்தத்தால் குறிக்கப்பட்ட வஸ்து எதுவோ ,
அதை யார் பக்திப் பிரபத்யா உபாசிக்கிறார்க்ளோ அப்பேர் பட்டவர்களுக்கு
சரீர பாத மாத்ர அந்தராய: பிரஹ்ம ஸம்பத்தி விலக்ஷனோ மோக்ஷ: = பிரஹ்ம ஸம்பத்தியாகிற மோக்ஷத்துக்கும்
அவர்களுக்கும் தடையாய் இருப்பது, இந்த சரீரம் ஒன்றே.
அதாவது, சரீராவஸாநே மோக்ஷம் என்பதும், ஜீவன் முக்தி என்பது கிடையாது என்றும் சொல்லப் பட்டது .

—————

ஹேயத்வ அவசநாத் ச சூத் .1-1-8 ::

ஸத் ஸப்தம் பிரஹ்மத்தையே குறிக்கும் காரணம் அது
ஹேயத்யஸ்ச = மோக்ஷ பிரதிபந்தகமாய், விலக்கப்பட வேண்டிய தடையாய்
அவசனாத் = கூறப்பட வில்லை ஆதலால்

பிரதான வாச்யமாக இருந்ததாயின் பிரக்ருதி சம்பந்தம் மோக்ஷத்துக்குத் தடையாய் விலக்காய் கூறப்பட்டிருக்கும்.
மாறாக ஸத் ஸப்த விஷயம் ஸாபேக்ஷமாய் சொல்லி இருக்கிற படியால், அது பிரஹ்மத்தை மட்டுமே குறிக்க இடமுண்டு.
“தத்வமஸி” இத்யாதி ஸ்ருதி வாக்கியங்கள் இங்கு நோக்க தக்கன.

—————

பிரதிக்ஞா விரோதாத் சூத் 1-1-9 ::

ஸத் ஸப்தம் பிரஹ்மத்தையே குறிக்கும் காரணம் அது பிரதானம் என்கிற பிரக்ருதியைக் குறிப்பதாயின்,
”ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம் ” என்கிற பிரதிக்ஞைக்கு விரோதம் வரும்.
அதாவது சாங்கியர்களும் ஜீவாத்ம தத்துவத்தை பிரக்ருதி கார்யம் என்று ஒத்துக்கொள்வ தில்லை
பிரக்ருதியை அறிந்தால், ஜீவாத்மாவை அறிந்ததாக ஆகாது,
காரணம் பிரகிருதி – புருஷன் இரண்டும் பின்ன தத்வமாகவே அவர்களும் சொல்வதால்,

——————————

ஸ்வாப்யயாத் — சூத் 1-1-10 ::

ஸாதக யுக்தி (Pros ) பாதக யுக்தி (Cons )

”ஸத் ” ஸப்த வாச்யம் பிரஹ்மம் தான் என்று காட்ட உபோத்பலகமானவை – ஸாதக யுக்தி.(அனுகூல உக்திகள்)

”ஸத் ” ஸப்த வாச்யம் பிரதானம் இல்லை என்று காட்ட உபோத்பலக மானவை – பாதக யுக்தி. (அனுபபத்திகள்)

இந்த பிரகரணத்தில் வரும் 8 சூத்ரங்களும் ”ஸத் ” ஸப்த வாச்யம் பிரஹ்மம் தான், பிரதானம் இல்லை என்று காட்டுவந்தவைதான்.

ஸ்வாப்யயாத் – ஸ்வஸ்மின் அப்யய : ஸ்வாப்யய:
அப்யயம் = கலத்தல், சேருதல், லயமடைதல் என்ற பொருளில் வருவது.
ஸத் ஸப்த வாச்யனான பிரஹ்மத்திடத்தில் நித்ராவஸ்யிதைல் இந்த ஜீவாத்மா லயத்தை அடைகிறான்.
ஸ்வஸ்மின் அப்யய : ஸ்வாப்யய : = தனக்குள்ளே லயத்தை அடையக் கூடியது.
ஸ்வ காரணே லய : பிரளய:
சேதனமான ஆத்ம வஸ்துவுக்கு சேதனமான பிரஹ்மம் தான் காரணமாக இருக்க முடியும்.
சேதனமான ஜீவாத்ம வஸ்துவுக்கு அசேதனமான பிரக்ருதி காரணமாக முடியாது.

பாலோடு தண்ணீரோ, தண்ணீரோடு பாலோ சேர்ந்தால், தண்ணீர் வேறு பால் வேறு என்று தெரிவதில்லை.
ஆனால் கல்லின்மேல் நீரை ஊற்றினால், இரண்டும் கலக்காது. தனித்தனியே நிற்கும்.
ஏனென்றால் இரண்டின் ஸ்வரூப ஸ்வபாவம்ங்கள் வேறு வேறு ஆதலால்.
எனவே
சேதனமான வஸ்து அசேதனமான பிரதானத்தில் லயம் அடைய முடியாது
சேதனமான வஸ்து சேதனமான வஸ்துவில்தான் லயம் அடைய முடியும் என்பது இதிலிருந்து கிடைக்கிறது.

ஸ்வேதகேது அருணர் ஸம்வாதத்தில் , சிஷ்யநானா ஸ்வேதகேது ஆச்சாரியனாகப் பட்ட அருணரிடம்,
ஸ்வப்ன தசையைப் பற்றி விவரிக்கும்படி கேட்க அவர் கொடுத்த விளக்கமானது :

ஜாக்ரத் – விழித்த நிலை – Awaken state.
ஸ்வப்ன – கனவு நிலை – Dream state .
ஸுஷுப்தி – ஆழ் உறக்கம் – Deep sleep.
துரீயா – சமாதி சித்திஹி ஈஸ்வர பிராணிதாநாத் .

(சாங்கியர்கள் தத்வம் 25. = அசித் 24 + ஆத்மா .
யோக சித்தாந்த தத்வம் 26 = அசித் 24 + ஆத்மா + ஈஸ்வரன்.)
பக்தி விசேஷேண ஆவர்த்தித : ஈஸ்வர: ஜீவாத்மன : சமாதி ஸ்திதி அநுபாவயிதி ஈஸ்வர பிராணிதாத் ஏவ சமாதி சித்திஹி .
— வியாசர் எழுதிய யோக பாஷ்ய வசனம்.
பக்தியாத் அனந்யாத் ஸக்யா : அஹமேவம் விதோர்ஜுணா க்ஞாதும் திரஷ்டும்ச தத்வேன பிரவேஷ்டும்ச பரம்தப :– பகவத் கீதா வசனம்.

யோக: = யுஜிர் யோகே , யுஐ சமாநௌ என்றால் சேரக்கூடிய = பரமாத்மாவும் ஜீவாத்மாவும் சேரக் கூடிய நிலைக்குத்தான் யோகம் என்று பெயர்.
பகவானுடைய அனுகிரகத்தாலேயே சமாதி ஸ்திதி ஏற்படுவது.
அதிலே
ஸம்பர்க்ஞாதம்
அஸம்பர்க்ஞாதம்
என்று இரண்டு பிரிவு.
பிரஹ்மத்தோடே சேர்ந்தாலும், பரமாத்ம அனுபவம் இவனுக்கு ஏற்படுகிறதா என்றால் இல்லை.
எப்படி, தான் வசிக்கும் பூமிக்கு கீழே புதையல் இருக்குமானாலும் , அதைப் பற்றி அறிவு ஏற்படும்வரை அனுபவத்துக்கு வராதோ,
அதுபோல தியான, உபாசனைகளால் ஆராதிக்குமவர்க்கே சாட்சாத்கார அனுபவம் உண்டாவது.

பல பல ஆத்மாக்கள் தாம் உறங்கும்போது பிரஹ்மத்திட்டத்தில் லயம் அடைந்து, விழிக்கும்போது, அந்தந்த ஆத்மா அது அதுவாகவே,
ஜீவ ஸ்திதிக்கு திரும்புவதும் ஸ்வாபாவிகமே. காரணம்,
ஸ ஏவ கர்மா அனுஸ்ம்ருதி ஸப்த விதிப்பிய = அவனே எச்சரம் ஆகும்போது அவனவன் கர்மாக்கள் அவனவனுக்காய், ,
பூர்வத்தில் நடந்தவைகள் நினைவு பிசகாமே பிரஹ்மத்திட்டத்தினிருந்து விலகி விழித்து எழுகிறான்.
மத்த ஸ்ம்ருதி க்ஞான அபோகனஞ்ச அனைத்தும் பகவதீனமான படியாலே.

பிரதானத்தோடே லயம் ஆகிறபோது இத்தகைய
”ஸுஷுப்தி நிலையில் இந்த ஜீவாத்மா பிரஜ்ஞனான பிரஹ்மத்தோடே ஆலிங்கனம் பண்ணுகிறான்” என்று
பிரஹதாரண்ய உபநிஷத்தில் தெரிவித்தது போலேயான அனுபவம் ஏற்பட்ட வாய்பில்லையாகையால்,
”ஸத் ” என்பது பிரஹ்மத்தையே குறிக்க வேண்டும் என்கிற விருத்திக்காரரான போதாயன ரிஷி வாக்கியம் கொண்டும் இதனை அறியலாம்.

————————

கதி ஸாமாந்யாத் – சூத் 1-1-11 ::

ஸ்ருஷ்டி விஷயமான எல்லா வாக்கியங்களும் ஜகத் காரணம் பரமாத்மாதான் என்று ஓதுகின்ற இடங்களில் எல்லாம்
ஈஸ்வர: போன்ற சப்தங்களால் சொல்லி, இங்கு ”ஸது ” என்கிற சப்தத்தால்,
விக்ஞாபிக்கிற படியால், ஸது என்பது அந்த பரமாத்மாவையே குறிக்கும் .

——————

ஸ்ருதத் வாச்சா – சூத் 1-1-12 ::

பிரக்ருதத்தில் உள்ள சாந்தோக்ய உபநிஷத்தில் வேறு இடங்களில் ஜகத் காரணம் பிரஹ்மமே என்று கூறி இருக்கிற படியாலும் ,
” பிரதான் ” அதற்கு காரணமாகமுடியாது. அல்லாதபோது உபநிஷத் வாக்கியங்கள் ஒன்றுக்கு கொன்று முரண்படுவதாக ஆகும்.

ஆகவே சாங்கியர்கள் சொல்வதுபோல பிரதானம் ஜகத் காரணமாக முடியாது என்பதே முடிவு.

ஸங்கியாதம் நைவ ஸக்யம் தே குணா தோஷாஸ்ச ஸார்ங்கிண : ஆனந்யாது பிரதமோ ராசி : ஆபாவாதேவ பஸ்சிம :

கடல் மணலை எண்ண முடியாதாப் போலே பகவத் குணங்கள் அசங்கியாதமாகையால் அதை எண்ண முடியாது.
ஸஸ்ய ஸ்ருங்கம் போலே இல்லாத ஒன்றை எண்ண முடியாதாப் போலே , தோஷ ராஹித்யத்தாலே,
பகவத் விஷயத்தில் அதையும் எண்ண முடியாது. அப்படிப்பட்டவனே ஜகத் காரணமாக முடியும் .
அசித்துக்கு அந்த யோக்கியதை இருப்பதாக சொல்லவே முடியாது.

இந்த அதிகரணத்தால், பிரஹ்மம் பிரகிருதி விலக்ஷணன் என்றும், ஜகத் காரணதவம் பிரக்ருதிக்கு இல்லை என்பதும் காட்டப்பட்டது.

———————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading