ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –62–இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

தம்முடைய கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த
கார்த்தார்த்த்யத்தை- (-க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் – )யருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே-சமஸ்த கல்யாண குணாத் மகரான ஸ்ரீ எம்பெருமானார்
தம்மைப் பெற வேண்டும் என்று தேடித் திரிந்த படியையும் –
அவர் நிர்ஹேதுகமாக தம்மை அடிமை கொண்ட பின்பு –
அவர் தம்முடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படியையும் -அருளிச் செய்து –
இதிலே –
ஸ்ரீ எம்பெருமானார் பர்யந்தமும் அல்ல –
அவருடைய தாஸ்யத்தை பண்ணிக் கொண்டு போரும் அவர்களுடைய பர்யந்தமும் அல்ல –
தம்முடைய தாஸ்யம் -என்று துர்மாநிகளாகக் கொண்டு வன் நெஞ்சரான ஆத்மா அபஹாரிகளுக்கு
வ்யதிரேக முகேன தாஸ்யத்தை பண்ணுமவர்களுடைய சம்பந்தத்தால்
அவர்க்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை –(க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் யருளிச் செய்கிறார் -)

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இருவினையும் இன்றிப் போக பெறுகையால் தனக்கு வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் .

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

பத உரை
எம் இராமானுசன் -எங்கள் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய
மன்னு மா மலர்த்தாள் -ஒன்றுக்கு ஓன்று பொருந்துவதும் -சீரியதும்-அனுபவிக்கத் தக்கதுமான திருவடியில்
பொருந்தாத -சேராத
நிலை உடை-ஸ்வபாவம் வாய்ந்த
புன்மையினோர்க்கு -அஹங்கார தோஷம் உள்ளவர்களுக்கு
ஒன்றும் -சிறிதும்
நன்மை செய்யா -அநு கூலம் புரியாத
பெரும் தேவரை -பெரிய தேவர்களான நித்ய சூரிகளுக்கு நிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
பரவும் -துதிக்கும்
பெரியோர் தம் -மகான்களினுடைய
கழல் பிடித்து -திருவடிகளைப் பற்றி
இன்று -இப்பொழுது
யான்-நான்
இரு வினை -புண்யம் பாவம் என்றும் இருவகைப்பட்ட கர்மங்கள் ஆகிற
பாசம்-கயிற்றினாவாகிய கட்டுதல்
கழற்றி -விடுபடச் செய்து
இருந்தேன் -செய்ய வேண்டிய கடமை தீரப் பெற்றவனாய் நிம்மதியாய் இருந்தேன்
யான்-இங்கனம் க்ருதக்ருத்யனான நான்
இனி -இனிமேல்
இறை-சிறிதும்
வருந்தேன் -வருத்தத்திற்கு ஹேதுவாகிய கர்ம சம்பந்தம் இல்லாமையின் வருந்த மாட்டேன் .

வியாக்யானம்
நமக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய பரஸ்பரம் பொருந்தி -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமாய் -இருந்துள்ள திருவடிகளில் -சேராத ஸ்வபாவத்தை வுடையரான துர்மாநிகளுக்கு –
ஏக தேசமும் அனுகூல வ்ருத்தி பண்ணாத ஸூரி சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று
ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள மகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-
இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் –
இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்
கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து –

அதவா –
பொருந்தா -இத்யாதிக்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சேரோம் என்னும் துர்மாநிகளுக்கு ஆயிரம் பண்ணை
பல் காட்டிலும் ஒரு நன்மையையும் செய்யோம் என்று இருக்கும் பர தேவதையான ஸ்ரீ பெரிய பெருமாளை –
அந்த ஸ்வபாவத்திலே தோற்று ஸ்தோத்ரங்களை செய்த மொழியைக் கடக்கும் பெரும் புகழானனா– 7-
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளைப் பற்றி –இன்று இருவினைப் பாசம் கழற்றி -இருந்தேன் -என்று
இங்கனே யோஜிக்கவுமாம் –

பெரும் தேவனை என்றும் பாடம் சொல்லுவர்
புன்மையினோர்க்கு என்றும் நன்மை செய்யா -என்று பாடமான போது
ஒரு காலத்திலும் ஆநு கூல்யம் பண்ணாத வென்று பொருளாக கடவது.
புன்மையினோர் என்றது -புன்மையை உடையோர் என்றபடி .
புன்மை-பொல்லாங்கு
இன்றியான் என்கிற இடத்தில் அகரத்தின் மேலேறின இகரம் குற்றியலிகரம் ஆகையாலே
உமக்கியான் -என்கிற இடத்தைப் போலே வண்ணம் கெடாமைக்கு கழித்து
பதினேழு எழுத்தாக எண்ணக் கடவது .

பெரியோர் தம் கழல் பிடித்தே இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி -அந்வயம் –
மன்னி -ரக்ஷிப்பத்தில் திண்ணிய உறுதி –திண் கழல் -மன்னு மா மலர்த் தாள் -இவ்வளவு விசேஷணங்கள்
பெரும் தேவர் -ஸ்ரீ நித்ய ஸூரிகள் -ஸ்ரீ அரங்கன் என்றுமாம் –
விண்ணாடு தான் அளிக்க வேண்டாதவன் தன் குருவை அடையாதவர்களுக்கு -நன்மை செய்யா பெரும் தேவர் –

எம் இராமானுசன் –
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சபதம்பாதி -என்றும்
ஸ்ரீ மத் குருணாம் குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ -என்கிறபடியே –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் சேஷியான ஸ்ரீ எம்பெருமானாருடைய –

மன்னு மா மலர்த் தாள் –
மன்னுகையாவது -ஸ்வ ஆஸ்ரித ரஷணத்திலே தீஷித்து நிச்சலமாய் இருக்கை –
திண் கழல் -என்னுமா போலே –

புஷ்பத்துக்கு மகத்துவமாவது –
காந்தி சௌகுமார்ய லவ்ரப்ய பாவனத்வாதி குண விசிஷ்டதை –
இப்படிப் பட்ட பாவனத்வ போக்யத்வங்களை உடையவனாய் புஷ்ப ஹாச சுகுமாரமான திருவடிகளை –

சீராரும் எதிராசர் திருவடிகள் -என்றும்
அழகாரும் எதிராசர் அடி இணைகள் -என்றும் ஸ்லாக்கிக்கப்பட்ட திருவடிகள் என்றபடி –

பொருந்தாத நிலை வுடைப் புன்மையினோர்க்கு –
மர்க்கட முஷ்டியைப் போலே மூர்க்கித்து நின்ற-வந்து ஆஸ்ரியாதபடியான துஸ் ஸ்வா பத்தை உடைய துர்மாநிகளுக்கு –

ஒன்றும் நன்மை செய்யா –
ஸ்வல்பமானாலும் அவர்களுக்கு ஹிதமாய் இருப்பதொரு பிரயோஜனம் கல்ப்பியாது இருக்கிற –

பெரும் தேவரை –
தேவரை -பிரம ருத்ராதிகள் –
பெரும் தேவர் -யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா – என்கிற நித்ய ஸூரிகள் –
தத் தாச பூதரான திவ்ய ஸூரிகள் -என்னவுமாம் –

பரவும் பெரியோர் தம் –
மாத பிதாயுவதய -என்கிற ஸ்லோகத்திலும் –
பூதம் சரஸ்ஸ-என்கிற ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே –
அவர்களை சர்வ காலத்திலும் சர்வ பிரகாரத்தாலும் ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு போருமவர்களுடைய பெரியோர் –

பெருமை ஞானத்தாலே யாகையாலே-
ஞான பிரதானமாய் இறே பெருமை இருப்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் கொண்ட ஸ்ரீ கூரத் ஆழ்வான்-முதலான முதலிகளுடைய –

கழல் பிடித்து –
திருவடிகளை ஆஸ்ரயித்து -என்கையாலே –
ஸ்ரீ இராமானுஜன் மன்னு மா லார்த்தாள்-பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு என்றும் நன்மை செய்யாத
பெரும் தேவர் என்று ஸ்ரீ பெரிய பெருமாளையும் –

பரவும் பெரியோர் என்று
ஸ்ரீ பராங்குச பரகாலாதிகளையும் ஸ்ரீ சொல்லவுமாம் –

அன்றிக்கே –பெரும் தேவர் என்ற
இத்தை ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே ஒதுக்கி –
பரவும் பெரியோர் தம் கழல் பிடித்து -என்று
த்வேத் தாச தாச சரமாவதியான தாச்யத்திலே ஊன்றி இருக்கிற அத்யாவச்யத்தை சொல்லவுமாம் –

புன்மையினோர்க்கு என்றும் நன்மை செய்யா -என்ற பாடம் ஆன போது –
அவர்களுக்கு ஒரு காலத்திலும் ஆநு கூல்யம் பண்ணாத -என்று பொருளாகக் கடவது –

புன்மையினோர் என்றது புன்மையை உடையோர் என்றபடி –
புன்மை -பொல்லாங்கு –
பெரும் தேவனை -என்றும் பாடம் சொல்லுவார்கள் -இப்படியான போது –

பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே–
பெரும் தேவர் -ஸ்ரீ நித்ய சூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-ஸ்ரீ திருவாய் மொழி -9 3-4 –என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி காண்க .

இங்கு இச் சொல் உவமை யாகு பெயராய் ஸ்ரீ நித்ய சூரிகள் போல்வாரான ஸ்ரீ வைஷ்ணவர்களை சொல்லுகிறது .
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நன்மை ஒன்றும் செய்யாமைக்கு ஹேது இரக்கம் இல்லாமை யன்று –
எங்கனம் நன்மை செய்யினும் திருத்தகிலாத புன்மை வுடைமையே அதற்கு ஹேது என்பார் –
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர் -என்றார் .

இது கருத்துடை அடை கொளி அணி -பரிகராங்குராலங்காரம் –
பெரும் தேவர் செய்யும் நன்மை உத்தாரக ஆசார்யராகிய ஸ்ரீ எம்பெருமானார் உடைய சீரிய திருவடிகளை சிந்தனையில் பதிப்பதே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக காட்டி கொடுப்பது தான் பெரும் தேவர் செய்யும் நன்மை-
அத்திருவடிகள் ஒன்றோடு ஓன்று பொருந்தி வழி படத் தக்கனவாய் அமைந்த புனித தன்மையை-காட்டினாலும் –
புன்மை உடைமை இயல்பாய் நீங்காது நிலை பெற்று இருத்தலின் சிறிதும் நெஞ்சிலே-படுவது இல்லை –

இனி அத திரு வடிகளின் மலர் போல் விரும்பத்தக்க போக்யதையை உணர்த்தினாலும்-
புன்மையினோர் புத்திக்கு சிறிதும் அது புலனாவது இல்லை –
பூஜ்யதையையும் -போக்யதையும் வலிந்து-காட்டினும் -ஊட்டினும் பொருந்தாமை நிலை பெற்ற பின்பு
பெரும் தேவரும் நன்மை ஒன்றும் செய்ய-இயலாததன்றோ –
அத்தகைய ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பரவும் பெரியோர் கழல் பிடித்துக் க்ருத்க்ருத்யனானேன்-என்கிறார் .

இனி பெரும் தேவர் என்பதற்கு
ஸ்ரீ பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
அப்பொழுது இயல்பான ஆசார்யத்வம் வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தாத நிலை வுடைய
புன்மையினோர் எவ்வளவு இரங்கத் தக்க நிலையில் பல்லைக் காட்டிக் கெஞ்சினாலும் அன்னாருக்கு ஒரு
நன்மையையும் செய்யோம் என்று இருக்கும் பர தேவதையான ஸ்ரீ பெரிய பெருமாள் -என்றது ஆயிற்று –

இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் -அடிகளில் விழுந்து
கெஞ்சிப் பல் இளித்தாலும் ஸ்ரீ அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –

நாராயணோ பிவிக்ருதிம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்புத்தே கமலம் ஜலாதபேதம் சோஷ யதி ரவிர் ந போஷயதி –
என்று ஸ்ரீ நாராயணனும் ஆசார்ய சம்பந்தம் அற்ற மதி கேடன் விஷயத்தில் மாறு படுகிறான் .
சூரியன் நீர்-சம்பந்தம் அற்ற தாமரையை உலர்த்துகிறான் ..மலர்த்துவதில்லை -என்னும் பிரமாணம் காண்க .

அத்தகைய ஸ்ரீ பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த கூரத் ஆழ்வானை-
ஸ்ரீ ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத ஸ்வபாவத்திலே தோற்று
ஸ்ரீ பெரிய பெருமானை ஸ்ரீ கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க -அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி..

என்றும் நன்மை செய்யா -என்றும் பாடம் உண்டு ..
பெரியோர் தம் கழல் பிடித்து இருவினைப் பாசம் கழற்றி இருந்தேன் –.இனி இறையும் வருந்தேன் .-என்று கூட்டி முடிக்க .

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி –
புண்ய பாப ரூபேண இரண்டு-வகைப் பட்டு இருக்கிற கர்மமாகிற பிராப்ய பிரதிபந்தகமான பாசத்தை கடந்து இருந்தேன் –
பந்த ஹேதுவாகையாலே பிராப்தி பந்தகமாகிறது –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று அவன் சொன்னதே நமக்கு பிராப்தமாய்-இருந்தது என்றபடி –

இருந்தேன் –இன்று
இருந்தேன் -செய்ய வேண்டியவற்றை செய்து முடிதவனாய் –க்ருதக்ருத்யனாய் –இருந்தேன்
பேற்றினைப் பெறுவதற்காக இவர் புரிய வேண்டிய செயல் யாது ஒன்றும் இல்லாமையின் செயலற இருந்தேன் என்கிறார் .

எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று .
எம்பெருமான் பொது நின்ற பொன் அம் கழல் அன்றி
அவன் அடியார் தம் கழல் பிடித்தால் அக் கழல்கள் முழு வினைகள் கழலுவதற்கு உபாயமாம் .
எம்பெருமானார் அன்றி அவர் அடியார் தம் கழல் பிடித்தாலோ –அவை இருவினை கழலுவதற்கு-
திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம் .
அத்தகைய உபாயம் கைப் புகுந்து இருத்தலின் –இரு வினை பாசம் கழற்றி-என்கிறார் .

பேற்றினை பெறுவதற்கு இடையூறாக புகுந்த –இரு வினைகள்-கழன்ற பின் செயற் பாலது
யாதொன்றும் இல்லை யன்றோ -அதனால் க்ருத்க்ருத்யன் -செய்ய வேண்டியதை செய்து முடித்தவன் –ஆகி விட்டேன்-என்கிறார் .
பிடித்தது பெரியோர் தம் கழல் ஆதலின் பெறப் போகும் பேறும் அதுவே ஆயிற்று ..
ஆகவே உபாயமும் உபேயமும் ஒன்றே யாயின –

பரிபூரணமான உபாயம் ஆதலின் பெரியோர் தம் கழல் அமுதனாரை க்ருத க்ருத்யர் ஆக்கிற்று
அப் பெரியோர் கழலே பரி பூரணமான உபேயமும் ஆதலின் அவரை க்ருதார்த்தர் ஆகவும் ஆக்கியது -என்று உணர்க –
உபாயத்வ பூர்த்தி க்ருத க்ருத்யதுக்கு பிரயோஜனம் என்று பகுத்து அறிக –
இனி செய்ய வேண்டியது எதுவும் இல்லாமையின் –பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து –
தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம் -என்க .

அதஸ்த்வம் தவ தத்வதோ மத ஜ்ஞான தர்சன ப்ராப்தி ஷூ நிச்சம்சயஸ் சுகமாஸ்வ -என்று
ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும் -காண்டலிலும்-அடைதலிலும்-ஐயம் அற்றவனாய் சுகமாய் இரு –
என்று சரணா கதி கத்யத்தில் எம்பெருமான் திரு வாக்காக இந்த க்ருத்க்ருத்யத்வமே-பேசி முடிக்கப் படுகிறது –

சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் -மாசுச -கவலைப்படாதே – என்பதற்கும் இந்த க்ருத்க்ருத்யத்வமே பொருளாம் .
முன்பு சோகம் அடைந்தவனைப் பாபங்கள்-அனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பதனால் சோகம் அடைய வேண்டாம் என்பதனால்-
க்ருதக்ருத்யனாய் இரு என்பதே கண்ணனுடைய கருத்தாம் .

இருவினை -புண்ணியம் பாபம் என்னும் இரண்டு வகைப்பட்ட கன்மங்கள்
அத்தகைய கன்மங்களை பாசமாக உருவகம் செய்கிறார் –
பல செய்வினை வன் கயிற்றால்-திருவாய் மொழி – 5-1 5- -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .

கழற்றி -என்றமையால்
கன்ம பாசத்தின் நின்றும் விடுதலை பெறுதலின் அருமையின்மை தோற்றுகிறது .
தன்னாலும் பிறராலும் செய்ய ஒண்ணாதவை பெரியோர் தம் கழல் பிடித்த மாதரத்தில் கழன்றன –
அசக்ய விச்ரம் சனகர்ம பாசப்ரக்ரதித-என்று –
யாவர்க்கும் அவிழ்க்க ஒண்ணாத கன்மம் என்னும் கயிற்றினால் நன்கு கட்டப்பட்டவன் -என்று ஸ்ரீ கத்யத்திலே
ஸ்ரீ எம்பெருமானார் அருளி செய்தது –
ஏனையோருக்கு அன்றி – எம்பெருமானுக்கும் -சரம பர்வமான எம்பெருமானாருக்கும் -அவர்களை சார்ந்த அடியார்களுக்கும் –
ஆகாத ஓன்று அன்று -என்று அறிக –

பசவ பாசிதா பூர்வம் பரமேன ஸ்வ லீலயா தேனைவ மோசநீ யாஸ்தே நான்யைர் மோசயிதும் ஷமா -என்று
பரம புருஷனாலே விளையாட்டாக ஜீவாத்மாக்கள் கன்ம பாசத்தினால் பசுக்கள் கயிற்றினால் கட்டப் படுவது போலக் கட்டப் படுகிறார்கள்
அவனாலேயே விடுவிக்க படத்தக்கவர்களாய் உள்ளனர் -பிறரால் விடுவிக்க பட தக்கவர்கள் அல்லர் -என்னும் பிரமாணம் காண்க –

ஸ்ரீ எம்பெருமான் வல்லவன் ஆதலானும்
பெரியோர் அவனை தன் வசத்திலே கொண்டு உள்ளமையானும்
இருவினைப் பாசம் கழற்றுவது அரியது அல்லதாயிற்று -என்க .

இன்று யான் இறையும் வருந்தேன் இனி –
இப்போது நான் ஷண மாத்ரமானாலும் சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் –
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூகமாஸ்வ -என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே
சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –

இனி இறையும் வருந்தேன் –
இருவினை பாசமும் கழன்று போய் விட்டன வாதலின் இனி வருந்துவதற்கு இடமில்லை .
காரணமாக கர்மம் இருந்தால் அன்றோ அதன் விளைவான வருத்தம் வருவது என்பது கருத்து .
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன் -என்று இயைக்க
யான் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –

பூர்ண பிராப்யமும் பிராபகமும் பெரியோர் கழல்கள் பிடிப்பதே/தொழுது எழு-ஒரே வேலை தொழுவதே –உபாயமும் பிராபகமும் போல
திருவடி பற்றிய அன்றே -அப் பொழுதே இருவினை பாசம் கழிந்தேன்-
இன்று இறையும் வருந்தேன் யான்-சம்சார துக்கத்தாலே கிலேசம் பட மாட்டேன் –
சர்வதா ஆனந்தம் – எந்தை எதிராசர்க்கு கொடுத்த வரம் இனிதாக-ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ துவயம் அனுசந்தித்து கொண்டு வர்த்திக்க கடவோம்

————–

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து —மூன்றாம் திருவந்தாதி—–88-

ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –ஸ்ரீ திருவாசிரியம் -–6–

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்றம் உரைகின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2 6-

—————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading