ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் –முதல் அதிகரணம்–ஸர்வத்ர ப்ரஸித்தயதிகரணம் – -1-2-1-

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————–
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் —33 ஸூத்ரங்கள் –
—————————————————–

முதல் அத்யாயம் முதல் பாதத்தில் – முதல் அதிகரணத்தில்
ப்ரஹ்ம விசாரம் செய்யும் முன்பு கர்ம மீமாம்சையை தெளிவாக அறிந்து –
அதன் பலன் அல்பம் அஸ்திரம் என்று உணர்ந்து -ப்ரஹ்ம உபாஸனை மூலம் வேதாந்தங்களை நன்றாக உணர்ந்து –
பரம புருஷார்த்த இச்சை கொள்கிறான் –
அதன் பின் வேத வேதாந்த வாக்கியங்கள் -அவற்றில் உள்ள சொற்களும் முன்பே அறியப்பட்ட
ப்ரஹ்ம ஞானத்தையே உணர்த்துகின்றன என்றும்
அப்படிப்பட்ட வேதாந்த வரிகளே ப்ரஹ்ம ஞானத்தை ஏற்படுத்த வல்ல பிரமாணங்கள் என்றும் -அறிகிறான்
அப்படிப்பட்ட மனிதன் ப்ரஹ்மம் எவ்வாறு வேதாந்தங்கள் மூலம் அறியப்படுகிறது என்பதை விளக்குவதான
சாரீர மீமாம்ஸையை அறிய வேண்டும் என்று கூறப்பட்டது

அதன் பின்னர் உள்ள இரண்டாம் அதிகரணத்தில் உள்ள தைத்ரியம் -2-1-1-
யதோ வா இமாநி பூதாநி –இத்யாதியால் எந்த ஒன்றில் இருந்து இவை அனைத்தும் தோன்றினவோ -இத்யாதியால்
ப்ரஹ்மமே உபாயம் -என்றும் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹார அளிக்க வல்லவன் என்றும்
சேதன அசேதனங்களை சரீரமாகக் கொண்டவை என்றும் சொல்லும்

அடுத்து மூன்றாம் அதிகரணத்தில்-ப்ரஹ்மம் சாஸ்த்ரங்களால் மட்டுமே அறியப்படுபவன் என்றும்
வேறே எந்த ப்ரமாணங்களாலும் அறியப்பட இயலாதது என்றும் கூறப்பட்டது

நான்காம் அதிகரணத்தில் -ப்ரஹ்ம பரமான சுருதி வாக்கியங்கள் கர்த்தவ்ய அகர்தவ்யங்களை சொல்லா விட்டாலும்
சாஸ்த்ரங்களாலே மட்டும் அறியப்படும் ப்ரஹ்மமே பரம புருஷார்த்தம் ஆகும் என்று நிரூபிக்கும்

ஐந்தாம் அதிகரணத்தில் ப்ரஹ்மமே ஸர்வவித காரணம் – வேதங்களால் அறியப்படுபவன் -அனுமானம் மூலம் காரணமாக
உணரப்படும் பிரதானம் -மூல பிரக்ருதியை விட -சத்யா சங்கள்பாதி தன்மைகளால் மிக உயர்ந்தது என்று காட்டப்பட்டது

ஆறாம் அதிகரணத்தில் பந்தம் மோக்ஷம் ஆகிய தன்மைகளை உடைய ஜீவாத்மாவை விட நிரதிசய ஞான ஆனந்த நிறைந்த
அவாப்த ஸமஸ்த காமனாய்-சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாக உள்ள தன்மையால் விலக்ஷணன் ப்ரஹ்மம் என்கிறது

ஏழாம் அதிகரணத்தில் அசாதாரண அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டம் ப்ரஹ்மம் அகர்ம வஸ்யம் என்கிறது

எட்டாம் ஒன்பதாம் அதிகரணங்களில்-ஸ்வ இதர விலக்ஷணம் -ஜகத் காரணத்வம் இத்யாதிகளால்
ஆகாசம் பிராணன் முதலான பதங்களால் கூறப்பட்டதும் ப்ரஹ்மமே என்றதாயிற்று –

பத்தாம் அதிகரணத்தில் பரஞ்சோதி இந்த ப்ரஹ்மமே என்று நிரூபணம்
பதினோராம் அதிகரணத்தால் பரம ப்ராப்யமான பர ப்ரஹ்மமே இந்திராதி பதங்களாலும் கூறப்படுகிறான் என்று சாஸ்திரங்களும் கூறும்

பிரதானம் ஜீவாத்மா போன்றவற்றை சில வேதாந்த வரிகள் கூறுகின்றனவோ என்ற சங்கைகளை அடுத்து மூன்று பாதங்கள் நிரசிக்கும்
ப்ரஹ்மத்தின் பரத்வத்தையும் கல்யாண குணங்களையும் வேதாந்த வாக்கியங்கள் கூறும்
இரண்டாவது பாதத்தில் ஜீவாத்மாவைக் குறித்துள்ள வேதாந்த வாக்கியங்களின் சங்கைகளை விளக்கும்
இத்தையே தொடர்ந்து மூன்றாவது பாதமும் சொல்லும் –
நான்காவது பாதமும் வேறே சில வேறு பட்ட கருத்துக்களை விசாரிக்கும்

———-

ஸர்வத்ர ப்ரஸித்தயதிகரணம் –

விஷயம்
சாந்தோக்யம் 3-14-1-
சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -என்பதில் கூறப்படும் ப்ரஹ்மம் என்பது பரமாத்மாவே -என்று நிரூபணம்

1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்

சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -என்பதில் அனைத்து வஸ்துக்களுடன் ஒரே வேற்றுமையில் கூறப்பட்ட வஸ்து
பர ப்ரஹ்மமே ஆகும் -இப்படியே உபதேசிக்கப் பட்டுள்ளதால் ஆகும் -என்றவாறு

விஷயம்
சாந்தோக்யம் -3-14-1-/2–
அத கலு க்ரதமய புருஷோ யதாக்ரது
ரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி ச க்ரதும் குர்வீத மநோ மய பிராண சரீரோ பா ரூப –என்று
ப்ரஹ்ம உபாசனம் -ச க்ரதும் குர்வீத-அவன் உபாசிப்பவனாக –
மநோ மய பிராண சரீரோ -மனதின் வடிவம் கொண்டவன் -ப்ராணத்தைச் சரீரமாகக் கொண்டவன் என்று கூறப்பட்டது

இங்கு மநோ மய பதங்களால் படிக்கப்படுவது சங்கை -ஜீவாத்மாவா பரமாத்மாவா

பூர்வ பக்ஷம்
ஜீவாத்மாவே -மனம் பிராணன் இரண்டும் அவசியம் தேவை பிரயோஜனம் ஜீவனுக்கே
முண்டக 2-1-2-
அப்ரானோ ஹ்யமந–என்று பிராணன் மனம் அற்றவன் பரமாத்மா என்கிறதே
மேலும் சாந்தோக்யம் -3-14-1-
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்று படிக்கப்பட்ட ப்ரஹ்மமே பிற்பகுதியில் உபாசிக்கப்பட வேண்டிய வஸ்துவாக
உரைக்கப்பட்டு இருக்க முடியாதே
முற்பகுதி ப்ரஹ்மம் அனைத்துக்கும் ஆத்மாவாக ப்ரஹ்மம் உள்ளது என்று உபதேசம்
இப்படிப்பட்ட உபதேசம் அடுத்து
சாந்த உபஸீத -சாந்தி அடைந்து உபாசிப்பாயாக -என்று உபாஸனைக்கு வேண்டிய சாந்தியை அடைய உரைக்கப்பட்டதாகும்
மேலும் ச க்ரதும் குர்வீத–உபாஸனைக்குத் தகுந்த வஸ்து அவசியம் -இதற்காகவே முற்பகுதியில் ப்ரஹ்மம் பற்றி சொல்லி
பின்பு உபாசிக்கும் வஸ்துவுக்கு மனம் பிராணன் இருப்பதாக சொல்வதால் ஜீவாத்மாவே –
உபாசிக்கத் தேவையான வஸ்து ஜீவாத்மாவே என்றவாறு

சித்தாந்தம்
அப்படி அல்ல -மநோ மாயம் போன்ற தன்மைகள் ப்ரஹ்மத்துக்கு என்பதை
முண்டகம் 2-2-7-
மநோ மய பிராண சரீரநேதா – சரீரம் மற்றும் பிராணனின் எஜமானன் மநோ மயன்
தைத்ரியம் -1-6-1-
ச ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய அம்ருதோ ஹிரண்ய மய–என்று
தஹராகாசம் போன்றவன் -மநோ மய -அழிவற்ற -ஸ்வர்ண மயன்
கட –6-9-/ஸ்வேதாஸ்வர 3-13-/4-17-
ஹ்ருதா மநீஷா மனஸாபி க்லுப்தோ ய ஏனம் விதுரம் ருதாஸ்தே பவந்தி-என்று ஹ்ருதயம் மூலமும்
இடைவிடாத ஆசை மூலமும் மனசின் மூலமும் உணர்ந்து அறிபவன் மீண்டும் பிறப்பதில்லை
முண்டக -3-1-8-
ந சஷுஷா க்ருஹ்ய தே நாபி வாசா -என்று கண்களாலோ வாக்காலோ க்ரஹிக்கப்பட முடியாதே
கட 6-9-
மனசா து விசுத்தேந –தூய்மையான மனசாலே அறியப்படுகிறார்
கேந –2-
பிராணஸ்ய பிராணன்
கௌஷீதகீ -3-3-
அத கலு பிராண ஏவ ப்ரஞ்ஜாத் மேதம் சரீரம் பரிக்ருஹ்யேத்தா பயதி –என்று இந்த சரீரத்தை
பிராணனைக் கொண்டு ப்ரஞ்ஜாத்மன் நிலை நிறுத்துகிறான்
சாந்தோக்யம் -1-11-5-
ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி பிராண ஏவாம் அபி சம்விசந்தி ப்ராணமப் யுஜ்ஜி ஹேதே –என்று
இந்த உயிர்கள் அனைத்தும் பிராணனின் லயித்து பின்னர் பிராணனை விடுகின்றன –

ஆக மநோ மயத்வம் என்றால் பரிசுத்த மனசாலே க்ரஹிக்கப்படுபவன் என்றும் –
பிராண சரீரத்வம் என்றால் பிராணனாகவும் அந்த சரீரத்தை நியமிப்பவனாகவும் கொண்டு
சாந்தோக்யம் 3-14-4-ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதய ஏதத் ப்ரஹ்ம -என்று
எனது ஹ்ருதயத்தில் உள்ள இதுவே எனது ஆத்மா -இதுவே ப்ரஹ்மம் -என்று நேரடியாகவும்
முண்டக 2-1-2-அப்ரானோ ஹ்யமநா –என்று ப்ரஹ்மம் தனது இருப்புக்கு மனம் பிராணனை சார்ந்து உள்ளது
என்று மறைக்கப்படுகிறது –

இந்த ஸூத்ரத்துக்கு போதாயனர் கருத்துக்குச் சேர
சாந்தோக்யம் 3-14-1-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலா நீதி சாந்த உபாஸீத –என்று இவை அனைத்தும் ப்ரஹ்மமே –
அதனாலே தோன்றி வாழ்ந்து அதிலேயே மறைந்து மனம் அமைதி அடைந்தவனாக உபாசிக்கக் கடவன் என்று
மனம் சாந்தி அடைந்த பின்பு சர்வாத்மாவான ப்ரஹ்மத்தை உபாசிப்பானாக என்று உணர்த்தப்பட்டது –
சாந்தோக்யம் -3-14-1-ச க்ரதும் குர்வீத-அதனை உபாசிப்பானாக என்று ப்ரஹ்மத்தின் குணங்களை
உணர்த்தவே மீண்டும் சொல்லிற்று -இந்த தன்மைகள் மநோ மயத்துவமாகும்

சர்வ உபநிஷத் –4-பரமாத்மா பரம் ப்ரஹ்ம
ஸ்வேதாஸ்வர -5-9– ச சாநந்த்யாய கல்பதே
சாந்தோக்யம் 3-14-1-தஜ்ஜலாநீதி -இத்யாதிகளில் ப்ரஹ்ம சப்தத்தால் ஜீவாத்மாவையும் சொல்வதால்
பூர்வ பக்ஷி இயல்பான நிலையில் ப்ரஹ்மமாகவே ஜீவாத்மா உள்ளான் என்றும்
அவித்யாதிகளாலே தேவாதி சரீரங்களில் உள்ளான் -என்பர்

சித்தாந்தம்
சர்வத்ர பிரசித்த உபதேசாத்-என்று
எங்கும் இதற்கு உரிய உபதேசங்கள் உள்ளத்து அனைவரும் அறிந்ததே ஆகும் -என்றவாறு
சாந்தோக்யம் 3-1-`1-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்று சர்வ லோகங்களையும் சொல்லி –
இவற்றுக்கு ஆத்மா பர ப்ரஹ்மமே -இப்படியே பிரசித்த உபதேசாத்-
இதற்கு அடிப்படை –3-14-1-தஜ்ஜலாநிதி-என்று ப்ரஹ்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டு –
அனைத்தும் ப்ரஹ்மத்திலே தோன்றி -ப்ரஹ்மத்திலே வாழ்ந்து -ப்ரஹ்மத்திலே சென்று ஒடுங்குவதால் ஆகும்
ஸர்வஞ்ஞத்வ-நிரதிசய ஆனந்த யுக்த -சர்வ காரணத்வ -ப்ரஹ்மமே
தைத்ரியம் -3-1-யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரத்யபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ
தத் ப்ரஹ்ம –என்று அந்த ப்ரஹ்மத்தை அடைய ஆசை யுண்டாக்கி
தைத்ரியம் -3-6- ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத் ஆனந்தாத்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தி–என்று
ஆனந்தம் என்பதே ப்ரஹ்மம் என்றும்
ஸ்வேதாஸ்வதர-6-9-ச காரணம் கரண அதிபாதிபோ ந சாஸ்ய கஸ்சித் ஜாநிதா ந சாதிப-என்று அவனே சர்வாத்மா –
இந்திரியங்களுக்கு அதிபதி -அனைத்துக்கும் காரணம் -என்றதாயிற்று –

முக்தாத்மா ஜீவ ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவற்றுக்கு காரணம் என்பது பொருந்தாது
ஜகத் வியாபார வர்ஜனம் -4-4-17-
மேலும் ஸ்ருஷ்ட்டி இத்யாதி கர்மம் அடிப்படையில் என்பதால் அவற்றின் காரணம் ஜீவாத்மா என்பது சரி இல்லை

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதிசாந்த உபாசீத -அனைத்தும் பிரமமே
தோஷங்களும் கூட -கர்மம் தொடர்பு -தோன்றி மறைந்து -இவையுமா ப்ரஹ்மம்
அந்த்ர்யாமிதயா-என்பதால் –
எந்த ஒன்றிடம் இருந்து அனைத்தும் தோன்றுகிறதோ -எதனைச் சார்ந்து வாழ்கின்றதோ –
எதனிடம் சென்று மறைகின்றதோ அதுவே ப்ரஹ்மம்-

சாந்தோக்யம் -3-14-1- சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி
தைத்ரிய -3-1- யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே யேன ஜாதாநி ஜீவநதி யத்ப்ரத்யபி சம்விசந்தி தத்விஜ்ஞாச ஸ்வதத் ப்ரஹ்ம –
தைத்ரிய உபநிஷத் –6-9-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜா நாத் ஆனந்தாத் ஏவ கல்வி மானி பூதானி ஜாயந்தே -என்று
ஆனந்தமாகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
ச்வேதாச்வர உபநிஷத் -6-9- ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சித் ஜா நிதா ந சாதிப –அவனே காரணம் –
அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக உள்ளவனும் அவனே -என்கிறது

—————–

1-2-2-விவஷித குணோபபத்தே —
குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்

சாந்தோக்யம் -3-14-2-
மநோமய பிராண சரீரோ பாருப சத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்ம சர்வ காம சர்வ கந்த
சர்வ ரசசர்வ மிதயப்யாத்த அவாக்ய அநாதர-
அனைத்து குணங்களும் பரமாத்மாவிடம் மட்டுமே பொருந்தும்
மநோ மாயா -தூய்மையான மனத்தால் மட்டுமே அறியப்படுபவன்
பிராண சரீர -உயிர்களுடைய பிராணனை தாங்கி உள்ளவன்
யாரிடம் பிராணன் கட்டுப்பட்டு உள்ளதோ யாரிடம் அடங்கி உள்ளதோ யாருக்கு அடிமையாக உள்ளதோ
யாருக்கு சரீரமாக உள்ளதோ அவனே பிராண சரீரன் எனப்படுகிறான் –
சரீரம் எனபது -ஒன்றைத் தன்னுள் கொண்டும் -ஒன்றுக்கு அடங்கி -ஒன்றுக்கு அடிமையாக உள்ளது -என்பரே –

விவஷீத குண உபபத்தேச்ச -1-2-2-என்பதற்கு ஸ்ரீ பாஷ்யத்தில் சர்வ கந்த சர்வ ரஸ ஸ்ருதியை விவரிக்கும் இடத்தில்
அசப்தம் அஸ்பர்சம் இத்யாதிநா பிராகிருத கந்த ரஸாதி நிஷேதாத் அப்ராக்ருதரஸ் ஸ்வ அசாதாரண நிரவத்ய நிரதிசய
கல்யாணா ஸ்வ போக்ய பூதா சர்வ வித்தா கந்த ரசாஸ் தஸ்ய சந்தீ த்யர்த்த

பாருப -என்றால் பிரகாசத்துடன் கூடியவன் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
சத்ய சங்கல்ப -தடையற்ற உறுதி -சங்கல்பத்தாலேயே செயல் ஆற்றும் தன்மை
ஆகாசாத்மா -தெளிவு ஸூஷ்மம் சர்வ வ்யாபி -அனைத்துக்கும் ஆத்மா
சர்வ கர்ம -இந்த உலகங்கள் அனைத்தும் அவன் செயல்கள்
சர்வ காம -அனுபவிக்கும் பொருள் அனுவ அனைத்தும் தூய்மை
சர்வ கந்த சர்வ ரச-இத்தால்
கட 3-15-அ சப்தம் அ ஸ்பர்சம் -இவ்வுலகில் காணப்படும் மணம் சுவை போன்றவை அல்லவே அவனது
தோஷம் அற்ற -எல்லை அற்ற -மங்களமானவை-அவனாலே மட்டும் அனுபவிக்கக் கூடிய பல என்றவாறு
சர்வ மிதயப்யாத்த -இந்தத் தன்மைகள் வந்தேறி அல்ல -ஸ்வா பாவிகம்
அவாக்ய அநாதர-அவாப்த ஸமஸ்த காமன் அன்றோ -சாரேவேஸ்வரேஸ்வரன் அன்றோ

————–

1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
முன்பு கூறப்பட்ட குணங்கள் யாவும் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது என்பதால் -இவன் ஜீவன் அல்லன் -என்றவாறு

————-

1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –

பரமாத்மாவை அடையப்படுபவனாகவும் ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்

சாந்தோக்யம் -3-14-4-
ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –

———————

1-2-5-சப்த விசேஷாத் –

ஒரு விதமான சப்த காரணமாக இவன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறானாவான்

சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம் ஆத்ம அந்தர்ஹ்ருதயே -என்று
இதயத்தில் உள்ளவன் என்னுடைய ஆத்மா என்றும்

இதே பிரகரணத்தில் உள்ள மற்ற ஒரு வாக்கியத்தில்
மே என்று ஜீவாத்மாவை ஆறாம் வேற்றுமையாலும்
ஆத்மா என்று பரமாத்மாவை முதல் வேற்றுமையாலும் –

சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ
ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –
நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க
இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –

——————–

1-2-6-ச்ம்ருதேச்ச
ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –

சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ச்ம்ருதிர் ஞான அபோஹனம் -ஸ்ரீ கீதை -15-15-
யோ மாமேவ சம்மூடோ -15-19-
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்திர ரூடானி மாயயா–18-61-
தமேவ சரணம் கச்ச -18-62-

—————–

1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ

அர்ப்ப கௌகசஸ்வாத -மிகவும் சிறிய இடத்தில் இருத்தல்
சிறியதான ஹ்ருதயத்தை இருப்பிடமாகக் கொண்டதாலும் -சிறியவன் என்று ஓதப்படுவதாலும்
பரமாத்மா அல்ல என்று கூறுவது சரி இல்லை
உபாசன ஸுகர்யத்துக்காக தன்னை இப்படி அமைத்துக் கொள்கிறான் -ஆகாயம் போன்ற விபுவே அவன்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம ஆதமானந்தர் ஹ்ருதயே
அணீயான் வ்ரீஹேர் வா யாவத்
சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் பரிபச்யந்தி தீரா
இவற்றால் அவனே ஜீவாத்மா -என்பர்

சித்தாந்தம் –
ஜீவாத்மா அல்ல -உபாசனையின் பொருட்டே பரமாத்மாவே தான் சொல்லப் படுகிறான் –
அவன் ஆகாசம் போன்று மிகப்பெரியவன் என்பதை
சாந்தோக்யம் 3-14-3-
ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாத் ஜ்யாயான் திவோ ஜ்யாயாத் அப்யோ லோகேப்ய–என்று சொல்லுமே

சந்தோக்ய உபநிஷத் -3-14-1-
சர்வே கல்விதம் ப்ரஹ்மம் தஜ்ஜலாநிதி சாந்த உபாசித-என்று
இவை அனைத்தும் ப்ரஹ்மமே – -காரணம் அனைத்தும் இதிலே உத்பத்தியாகி இதிலே லயிக்கிறது
ஆத்மாவாகவும் அந்தர்ப்ரேவேசித்து தரிக்க வைப்பதும் ப்ரஹ்மமமே -உபாசன வஸ்துவும் அவனே
சாந்தோக்யம் -3-14-1-
அத கலு க்ரதுமயோயம் புருஷோ யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்று
புருஷன் நம்பிக்கை வடிவன் ஆவான் -அதே நம்பிக்கையுடன் இங்கு இருந்து செல்கிறான்
உபாசனை எவ்விதம் செய்யப்படுமோ அவ்விதமாகவே பலன் கிட்டும்
ஸ க்ரதும் குர்வீத -என்று சிறந்த நம்பிக்கையுடன் உபாசிப்பானாக –
சந்தோக்ய உபநிஷத்-3-14-4-
மநோ மய பிராண சரீரோ பாருப சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா
சர்வகந்த சர்வரச சர்வ மிதமப்யாத்த அவாக்ய அநாதர-என்று
தூய்மையான மனத்தால் அறியத் தக்கவன் -பிராணனை சரீரமாகக் கொண்டவன் -பிரகாசம் ஆனவன் –
தடையில்லா சங்கல்பம் கொண்டவன் -ஆகாசம் போன்ற ஸூ ஷ்மரூபம் கொண்டவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -தான் விரும்பும் அனைத்தையும் கொண்டவன் –
அனைத்து கல்யாண குணங்களையும் ஏற்றுக் கொண்டு யாரையும் சார்ந்து இராமல் யாரிடமும் வாய் பேசாமல் -என்கிறது
சாந்தோக்யம் -3-14-3-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே அணியான் வ்ரீஹேர்வா யவாத்வா சர்ஷபாத்வா ச்யாமாகாத்வா ச்யாமாக தண்டுலாத்வா -என்று
இதயத்துள் ஆத்மாவாக உள்ள இவன் நெல்லைக் காட்டிலும்
கோதுமையைக் காட்டிலும் -கடுகைக் காட்டிலும் சயாமாகத்தைக் காட்டிலும் சிறியவன் என்றும்
சாந்தோக்யம் -3-14-3/4-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே ஜ்யாயாத் ப்ருதிவ்யா ஜ்யாயாத் அந்தரிஷாத் ஜ்யாயாத் தயவோ ஜ்யாயாத்
அப்யோ லோகேப்ய சர்வ கர்ம சர்வகாம சர்வகந்த சர்வமிதப்யாத்தோ அவாக்ய அநாதர -என்று
இதயத்தில் உள்ள அவன் ஏன் ஆத்மா -பூமி -அந்தரிஷம் தேவ லோகம் அனைத்து லோகங்கள் காட்டிலும் முகப் பெரியவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பெற்றவன்
அனைத்து நறுமணம் சுவைகள் கொண்டவன்
யாரையும் ஆதரீக்க வேண்டிய அவசியம் அற்றவன் –
உபாசிக்கப் படும் வஸ்து அவனே -அவனே அடைய வேண்டிய இலக்கு –

சாந்தோக்யம் –3-14-4-
ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஏதத் ப்ரஹ்ம —
இந்த ஆத்மா எனது இதயத்தில் உள்ளது -இது ப்ரஹ்மம்-
கருணை அடியாக நமது இதயத்தில் வந்து அமர்கின்றான்
சாந்தோக்யம் -3-14-4-
ஏதமித ப்ரேத்யாபி சம்பவி தாஸ்மி -என்று
இங்கு இருந்து புறப்படும் நான் அவனைச் சென்று அடைவேன் -உபாசனை மூலம் கிட்டப் பெறுவதைக் கூறும்
சாந்தோக்யம் -3-14-5-
யஸ்ய ஸ்யா தத்தா ந விசிசித் சாஸ்தி –என்று இத்தகைய உறுதி உள்ளவன் குறித்து எந்த சங்கையும் இல்லை
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–
சரீரத்துக்குள் இருப்பதால் சுக துக்கங்கள் ஏற்படுமோ என்றால் அல்ல -வேறுபாடு உள்ளதால் ஆகும் –
முண்டக உபநிஷத் -3-1-1-
தயோரன்ய பிப்பலம் ஸ்வா து அத்தி அநஸ்நன் அன்யோ அபி சாகசீதி -என்று
மரத்தில் இரண்டு பறவைகள் ஓன்று பழங்களை உண்கிறது மற்று ஓன்று அதனை நோக்கியபடி உள்ளது —

——————

1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

சரீரத்துக்குள் இருப்பதால் சுக துக்கங்கள் ஏற்படுமோ என்றால் அல்ல -வேறுபாடு உள்ளதால் ஆகும் –

பூர்வ பக்ஷம்
சரீர சம்பந்தம் அடியாக ஸூக துக்கங்கள் ப்ரஹ்மம் அனுபவிக்க வேண்டி வருமே

சித்தாந்தம்
அப்படி அல்ல –
கர்மங்கள் அடியாகவே ஜீவாத்மா ஸூக துக்கங்கள் அனுபவிக்கிறான்
ஸ்வாபாவிகமாக அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள் கொண்ட ப்ரஹ்மம் வ்யாப்திகத தோஷம் அற்றவன்

முண்டக உபநிஷத் -3-1-1-
தயோரன்ய பிப்பலம் ஸ்வா து அத்தி அநஸ்நன் அன்யோ அபி சாகசீதி -என்று
மரத்தில் இரண்டு பறவைகள் ஓன்று பழங்களை உண்கிறது மற்று ஓன்று அதனை நோக்கியபடி உள்ளது —

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading