ஸ்ரீ திருவாய் மொழி ஆறாம் பத்தில் -ஏழாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

தன் வயிற்றிற் பிறப்பாலும், இவளுடைய ஸ்வபாவத்தாலும் -தன்மையாலும் இவள்
இங்கு நின்றும் போய்ப் புகும் ஊர் ஸ்ரீ திருக் கோளூர் என்று அறுதியிடுகிறாள்.

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-

—————————–

ஸ்ரீ திருக் கோளூருக்கே சென்ற என் பெண் மீள வருமோ என்று பூவைகளை –
ஒரு பஷி விசேஷம் இடம் கேட்கிறாள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

———————–

ஸ்ரீ திருக்கோளூர் ப்ரத்யாசன்னமானால் -அண்மையிலிருந்த தாகில் எங்ஙனே உடை குலைப் படக் கடவள் என்கிறாள்.

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

—————————–

இவளைக் கண்ட நாட்டார் குண ஹீனை -குணம் இல்லாதவள் என்பர் கொலோ?
குணாதிகை -குணங்களால் மேம் பட்டவள் என்று கொண்டாடுவர்களோ? என்கிறாள்.

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே–6-7-4-

——————————–

ஸ்ரீ திருக்கோளூரில் சோலைகளையும் அங்குள்ள பொய்கைகளையும் அவன் திருக் கோயிலையும்
கண்டால் எங்ஙனே உகக்குமோ? என்கிறாள்.

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-

———————–

அவனுடைய ஸ்நேஹ பஹுமான வீஷாதிகளை – மிகுதியைக் காட்டுகிற திருக் கண்கள் முதலாயினவற்றைக் கண்டு
ப்ரீதி பிரகர்ஷத்தாலே உவகையின் மிகுதியாலே -சிதிலையாகா -உருக் குலைந்தவள் ஆவாள் அன்றோ என்கிறாள்.
இவள் தான் உகப்பது அங்கே புக்குத் தரித்து நிற்க வல்லவள் ஆனால் அன்றோ.
அன்றிக்கே,
“எங்ஙனே உகக்கும் கொல்” என்றாள் கீழ் திருப் பாசுரத்தில்; இங்ஙனே உகக்கும் என்கிறாள் இத் திருப் பாசுரத்தில் என்னுதல்.
மகள் காணப் புகுகிற விஷயத்தை அனுசந்திப்பது -நினைப்பது,
தன் மகள் படியை -தன்மையை அனுசந்திப்பதாக -நினைப்பதாய்த்
திருத் தாயார் படுகிறபாடு என் தான்!

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

—————-

இவளுடைய ப்ரக்ருதி மார்த்தவத்தையும் -உடலின் மிருதுத் தன்மையினையும் பிரிவினால் வந்த சைதில்யத்தையும்-
மெலிவினையும் அனுசந்தித்து -நினைத்து, இவை எல்லாம் அவ்வளவும் செல்லப் போக வல்லள் ஆனால் அன்றோ என்கிறாள்.
என்றது, நாம் இலை யகலப் படுகிறோ மத்தனை ஒழிய, இவள் போய் முடியப் புகா நின்றாளோ? என்றபடி.

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

————————

ஸ்ரீ திருக் கோளூரில் சங்கத்தாலே அன்பினாலே, என்னைப் பொகட்டுப் போன என் பெண் பிள்ளை,
அந்த அன்பே துணையாகப் போய்ப் புக வல்லளேயோ? என்கிறாள்.

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-

———————

அவன் பக்கலிலே அத்யந்த பிரவணையாய் -மிக்க ஈடுபாடுடையவளாயிருக்கிற இவள்,
சேரியிலுள்ளார் சொல்லும் பழியே பாதேயமாக -தோட் கோப்பாக-
ஸ்ரீ திருக் கோளூர்க்கே போயினாள் என்கிறாள்.

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-

——————–

இந்தக் குடிக்கு வரும் பெரும் பழியை நினையாதே, ஸ்ரீ திருக் கோளூரிலே புக்கு
அவனை ஒரு காலமும் விடுகின்றிலள் என்கிறாள்.

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-

————————

நிகமத்தில் இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading