ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-
ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –
———————————————–
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-
நான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி
ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –
ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –
அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ஆழ் பொருள்
மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –
சிந்தாமல் -இத்யாதி
நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-
————————————————————————–
பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்
விபவ சம்வஸ்தரம்
தை மாசம்
கிருஷ்ண பஷம் தசமி
குருவாரம்
மக நஷத்ரம் துலா லக்னம்
ஸ்ரீ பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்
ஸ்ரீ கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்
வளர்த்தவர் ஸ்ரீ ஹரிதாசர் -ஸ்ரீ பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி
ஸ்ரீ சுதர்சன அம்ச பூதர்
ஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –
திரு ஆராதன பெருமாள் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சிஷ்யர் ஸ்ரீ கணி கண்டன் -த்ருடவ்ரதர்
ஆசார்யர் ஸ்ரீ பேயாழ்வார்
மங்களாசாசன திவ்ய தேசங்கள்–18-
ஸ்ரீ கோயில் –ஸ்ரீ திருமலை- ஸ்ரீ பெருமாள் கோயில் –
ஸ்ரீ யத்தோதகாரி -ஸ்ரீ திருக் குடைந்தை -ஸ்ரீ திருப்பேர் –
ஸ்ரீ அன்பில் -ஸ்ரீ கபிஸ்தலம் -ஸ்ரீ திரு ஊரகம்
ஸ்ரீ திருப் பாடகம் -ஸ்ரீ திருக் குறுங்குடி -ஸ்ரீ திரு வல்லிக் கேணி
ஸ்ரீ திருக் கோட்டியூர்- ஸ்ரீ திரு எவ்வுள்ளூர்- ஸ்ரீ திருத் த்வாரகை
ஸ்ரீ திருக் கூடல் -ஸ்ரீ திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்
ஸ்ரீ பிராஞ்ஞன் என்னும் சத்சூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை
ஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு ஸ்ரீ கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்
க்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –
தனியன் –
மகாயாம் மகரே மாசி சக்ராம் சம்பார்க்க வோத்பவம்
மகீசார புராதீசம் பக்திசார மகாம் பஜே
சக்தி பஞ்சமயவிக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே
முக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-
அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே
நன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே
நங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே
————————————————————————–
ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்த தனியன் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூக்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏகஸ்திஷ்டதி விச்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என்நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத்த்ருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்
மொழி செப்பி -ஏவம்விதமான ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து
வாழலாம் -உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சே -மனசே நீ சஹ கரிக்க வேணும்
மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ -செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ -ஸ்ரீ மழிசைக்கும் ஸ்ரீ திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
ஸ்ரீ பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஸ்ரீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-
————————————————————————–
அவதாரிகை –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க
அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–
தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
நான்முகனை நாராயணன் படைத்தான் –
சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உபகரணமாக
நாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-
பின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு
இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்
ஆழ் பொருளை -என்று நசிக்கிற பொருளை -என்றுமாம் –
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply