ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-8-11–

அங்குத்தைக்குத் தகுதியாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளிலும்
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார்
என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை –
இன்னபடிப் பட்டது ஒரு தன்மையை யுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-தைத்திரீய. ஆனந். 9 : 1.
அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே,
வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.

ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-
அவனுக்குத் தகுதி யாம்படி ஆழ்வார் அருளிச் செய்த.
அறிவது அரிய அரியை’ என்றதாகில், ‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்?
வ்யாஹதம் -முரண் அன்றோ?’ என்னில்,
அறிந்து உரைத்த’ –
என்கிறார்; என்றது, அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று.
தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?
நெறிவாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சார்த்தி
அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஆம் வண்ணம் ஒண் தமிழ்கள் –
அவனுக்குத் தகுதியாம்படி இருக்கிற அழகிய தமிழ்’ என்னுதல்;
தகுதியாக இருக்கிற சந்தஸ் ஸூ -பாசுரங்களை யுடைத்தாய்,
சர்வாதிகாரமாகிற நன்மையை யுடைத்தான தமிழ்’ என்னுதல்.
வண்ணம் – சந்தஸ் ஸூ -பா. அன்றிக்கே,
வண்ணம்
என்று ஓசையாய், ‘நல்ல ஓசையை யுடைய செந்தமிழ்’ என்னுதல்.

தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் –
தமிழாக இருந்துள்ள இவை ஆயிரத்துள் இப் பத்தையும்.

ஆம் வண்ணத்தால் உரைப்பார் –
பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத் தேவை எல்லாம் ஆழ்வார் தம்மோடே;
இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.

அமைந்தார் தமக்கு என்றைக்கும் –
அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.
என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு- ஆயாமல்——————–‘ஓயாமல்’ என்பதும் பாடம்.
வாய்ந்து நிற்கு மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந் துரைக்க வாழு நாள் என்று?–திருவாய்மொழி நூற்றந்தாதி–68-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading