ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-8-10–

வேதைக சமதி கம்யனாய் -வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் காரணாமாய்
அதி ஸூக்ஷ்மமா யிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும்
விபூதியாக வுடையவனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறிதென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே–7-8-10-

இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் –
இதனைக் காட்டிலும் வேறு ஸூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி.
அதாவது, இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே ப்ரஹ்மத்தினுடைய
நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச -வ்யவஹரிக்க -வேண்டும்படி,
காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு.

தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே –
ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்’-சாந்தோக்யம், 6. 2 : 1.
முதன்முதலில் ‘சத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ?
பழையதாய் -பிராமண ஸ்ரேஷ்டமான வேதத்திலே சொல்லுகிற அசேதனங்களுக்கும்
அதில் காட்டிலும் ஸூஷ்மமான சேதனங்களுக்கும் நிர்வாஹகன் நீயே
ஆக, ஜெகதாகாரனாய் -உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று.

அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
நித்ய விபூதி உக்தனாய் -பரம பதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியை யுடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திரு மார்பினை யுடையவனே!

அச்சுதனே –
அவ் விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரம பதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை
எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –
இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்:
இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சில சொல்லிற்றா மத்தனை போக்கி யல்லது,
உனக்கு ஓர் இயத்தை -அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்;
அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – அது அன்று என்கிறது’ என்னுதல்.
அன்றிக்கே,
உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு இன்றிக்கே, இருந்தாகளாகிலும்,
அவர்கள் ஒன்றைச் சொன்னால், ‘ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகள் நடுவே அவர்களுக்கும் கூடப் பேச்சுக்கு
நிலம் அன்றிக்கே இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே அதி ஷூத்ரனாய் -மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற
இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே,
இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading