ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-2–

அந்ய பரராய் -வேறு விஷயங்களிலே நோக்கு உள்ளவர்களாய்ப்
புறம்பே தாரகம் முதலானவைகளாம் படி இருக்கின்ற வர்களுக்கும் கூட
ஸ்ப்ருஹணீயமாம் படி விரும்பும்படி யாக இருக்கிற திருவடிகளை,
அந்ய பரனாய் -வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாதவனாய்
இதுவே பிரயோஜனமாக இருக்கிற நான் என்று பெறக் கடவேனை?’ என்கிறார்.

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

என்று கொல் –
திருக் கையில் ஸ்பர்ச ஸூகத்தை அபேக்ஷித்து -விரும்பி, ‘என்று கொல் சேர்வது?’ என்ற அளவே அன்றோ கீழே –
அதற்கு ஒரு மறுமொழி பெறாதே இருக்க, என்று கொல் சேர்வது?’ என்கிறது என்ன தசை -நிலையோ தான்!
அந்தோ –
இனி ‘என்று கொல் சேர்வது?’ என்பாரும் கூட இன்றியே ஒழியக் காண் புகுகிறது; நான் முடிந்தேன் என்கிறார்.
அந்தோ’
என்பதனால், தம்முடைய ஆற்றாமையைத் தெளிவு படுத்துகிறார்.

அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை –
அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும் படியான திருவடிகளை.
ப்ரயோஜனாந்தர பரர்க்கும் -வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமாம்படி –
விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை –
அநந்ய ப்ரயோஜனான -வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக் கடவேன்?
தங்கள் தங்கள் தொழில்களிலேயே அந்ய பரராய் -நோக்கு உள்ளவர்கள் பிரமன் முதலாயினாரும்-
அநந்ய பரராய் – தத்தம் தொழில்களிலே நோக்கு இல்லாதவர்களாய் ஏத்தும்படி
ஸ்ப்ருஹணீயமாய் -விரும்பத் தக்கனவாய்ச் சிவந்திருந்துள்ள உன் திருவடிகளை,
அநந்ய பரனான -வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாத நான் கிட்டப் பெறுவது என்றோ?
அரன் நான் முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை யான் என்று கொல் சேர்வது?

நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்ற இவை முதலா முற்றுமாய் நின்ற-
பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, பிரஜையை -குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே
வருந்தும் தாயைப் போலே, படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத்
திரி வ்ருத்கரணத்தை நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,
இவற்றை அடையப் படைத்து,
வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக – படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாம் தன்மையைப் பெறுதல்,
பெயரை அடைதல் முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப் பிரவேசித்து,
பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள், அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் -அபிமானி ஜீவனும் —
ஜீவ அந்தர்யாமியான -உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்மாவுமான-இஸ் சங்காதத்துக்கு வாசகமாய் –
இக் கூட்டத்தைச் சொல்லுகின்றனவாய்க் கொண்டு,
தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால்.

எந்தாயோ
இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச்
சொல்லுகிறது, ‘எந்தாய்’ என்ற இதனால். என்றது,
அதற்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது’ என்றபடி.
இவற்றை உண்டாக்கும் நாளிலே உண்டாக்கி,
இனிமேல் வரும் ஆபத்தை இவை தாமே நீக்கிக் கொள்கின்றன,’ என்று விட்டு வைக்கை அன்றிக்கே,
அரியன செய்தும் நோக்குமவன் என்கிறார் மேல்:

குன்று எடுத்து –
மலையை எடுத்தே அன்றோ நோக்கிற்று?

ஆநிரை மேய்த்து-
நோக்குமிடத்து, வரையாதே பசுக்களை நோக்குமவனாயிற்று.

அவை காத்த எம் கூத்தாவோ –
மழையிலே நோவு படுகிற பசுக்களைப் பாதுகாப்பதற்காக மலையை எடுத்தான் அவன்;
அப்போது திரிபங்கியாய் நின்ற வடிவு தான் வல்லார் ஆடினால் போலே
தமக்கு ஆகர்ஷகமாய் – கவர்ச்சிகரமா யிருக்கையாலே, ‘எம் கூத்தாவோ’ என்கிறார்.

ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும் அவனுடைய ஸ்ப்ருஹணீயதையை- அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும்
தன்மையைச் சொல்லும் முகத்தால், பிராப்யத்துவம் சொல்லப் பட்டது:
மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்வம் சொல்லப் படுகிறது.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading