நிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு-
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு,
பின்னர் நாட்டார் செயல்களைக் கண்டாதல்,
போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.
நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.
போலி வார்த்தைகளாவன: உபாயபல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல், உத்தேஸ்ய துர்லபத்துவம் –
பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல், ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள்
பலவாக இருத்தல் என்னுமிவை.
பாரதப் போரிலே நின்று அர்ஜூனனை நோக்கி,
நான் சொன்ன இது உனக்குத் தொங்கிற்றோ? எதிரே போந்ததோ?’ என்ன,
ஸ்த்திதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.-‘நிலைபெற்றேன்’ என்ன,
அவன், ‘ஆனால் நம் காரியம் செய்யப் பார்த்தது என்?’ என்று கேட்க,
கரிஷ்யே வசநம் தவ’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 72.உன்னுடைய வார்த்தையின் படி செய்கிறேன்’ என்கிறபடியே,
தேவரீர் ஏவின அடிமை செய்யக் கடவேன்,’ என்றான் அன்றோ?
அர்ஜூனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ,இல்லையோ?’ என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க,
உமக்கு அது கொண்டு காரியம் என்?
இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில்,
பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில்.
தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்;
பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச் செய்தார்.
சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத் தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே
தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?
இன்பக் கதி செய்யும் –
நிரதிசய -தனக்குமேல் ஒன்று இல்லாததான ஆனந்தத்தோடு கூடிய பேற்றினைப் பண்ணிக் கொடுக்கும்,
தெளிவுற்ற கண்ணனை –
இவன் தெளியமாட்டாத இழவு தீர இவனுக்கு நித்யமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே
தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை.
ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட பாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்’- வராஹ சரம ஸ்லோகம்.
அஹம் ஸ்மராமி-நான் நினைக்கிறேன்’ என்பது போலே.
தெளிவுற்ற ஆயிரம் –
ஸஹ்யத்திலே -மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து
உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே
மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக்
காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’ஆசார்யஹ்ருதயம், சூத். 71.
அந்த மிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமி ழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே.’- சடகோபரந்தாதி 14.
ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப் பசினும் போலே
ஒன்றே அறுதி யிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடி யாயிருக்கிற வேதார்த்தாமானது,
எல்லாரும் படிக்கத் தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.
இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர்-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள், இவ் வாழ்வார் தம்மைப் போலே
தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
அப்படித் தெளிவது தேச விசேஷத்திலே போனாலோ?’ என்னில்,
பாமரு மூவுலகத்துள்ளே –
பாபத்தை பா என்று கடைக் குறைத்தலாய்
பாபம் நிறைந்திருக்கிற-பூயிஷ்டமான – தேசத்திலே’ என்றபடி.
அவ்வருகே ஒரு தேச விசேஷத்தே போனால் பெறக் கடவ தெளிவை அதற்கு எதிர்த் தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே
தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல
இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-
கற்றோர் கருதும் விசயங்களுக் கெல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை-உற்றுணர்ந்து சொல்
மண்ணி லுள்ளோர் தம் மிழவை வாய்ந்துரைத்த மாறன்
பண்ணி லினிதான தமிழ்ப் பா–திருவாய்மொழி நூற்றந்தாதி-65-
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply