ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-10–

கீழே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?
அவை போன்றது அன்றி, சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே
சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.
ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:- ஸ்ரீ கீதை, 18 : 66.

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–7-5-10-

வார்த்தை அறிபவர் –
மஹா பாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?
வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
மாம் ஏகம் -என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
கீழே சொன்னவை அடங்கலும் கடல் போலே;
அதில் அமிருதம் போலே இது.

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-
அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார்,
இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?
மாயவன் –
வ்யாமோஹத்தை யுடையவன் -ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ
அவள் சூழல் முடிக்கைக்காக?

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை –
பரணி, கூடு வரிந்தால் போலே, இவ் வாத்மாவை அறிய ஒண்ணாதபடி சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள்,
அவை புக்க இடத்தே புகக் கடவ நோய்,
அங்ஙனே யாகிலும் சில நாள் செல்லாதபடி இடி விழுந்தால் போலே நிற்கிற முதுமை,
அங்ஙனே யாகிலும் இருக்க ஓண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான -விருப்பம் இல்லாத இறப்பு,
இவற்றை எல்லாம். பேர்த்து –
ஈஸ்வரனுக்கு ஒரு விரகு பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம்,
விரகர் நெடுஞ்சுவர் தள்ளமாறு போலே தள்ளி?

பெருந்துன்பம் வேர் அற நீக்கி –
பிறவி போனால் பின் வரக்கூடியமான கைவல்யமாகிற பெரிய துக்கத்தை வாசனையோடே போக்கி.
முன்பு நின்ற நிலை தான் நன்று’ என்னும்படி அன்றோ இதன் தன்மை?
அதற்கு, பின்னை ஒரு சரீரத்தை எடுத்தாகிலும் பகவானை அடைவதற்குத் தகுதி உண்டே அன்றோ?
இது எப்பொழுதும் அழிந்ததே அன்றோ?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து-
பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.

அவன் செய்யும் சேமத்தை எண்ணி –
பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணி விடுகை.
இமாந் லோகாந் காமாந்நீ காம ரூப்யநுஸசஞ்சரந்.’ தைத்திரீ. பிரு.
இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முக்தன் ஆனால் கொள்ளும் பல வகையான நிலைகளும்
அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’
இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.

எண்ணித் தெளிவுற்று –
இதனை மநோ ரதித்து -எண்ணித் தெளிந்து. அவன் ‘என்னையே பற்று’ என்று சொன்னதில், தலையாடியிலே,
( தலையாடி -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி-என்றது )
எல்லா விரோதிகளையும் நானே போக்கி என்னைத் தருவான்’ என்று சொன்னதனைத் தெளிந்திருக்குமவர்கள்;

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ?
கீழ்ச் சொன்ன குணங்கள் எல்லாம்,
மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;
இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித்
தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?

கீழில் செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே
சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ?
அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே இதில் சொல்லுகிற குணம்.
கீழில் அவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை;
இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்தது இறே –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading