நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே
விஜயத்தைக் கொடுக்கும் என்கிறார்.
குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு
இருக்குமவர்களோடே கூடி நின்று தாமும் பிரீதராய், பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.
நன்றி புனைந்து ஓர் ஆயிரம் –
சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகை யிட்டுத் தொடுத்த ஆயிரம்
நன்மையாவது,
சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும்,
சர்வ ஸூலபன் என்றும்,
சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச்செய்தது?
அன்றிக்கே, எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும்’ என்னுதல்.
மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் –
சாதாரமாக -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு விஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
ஐஸ்வர்யார்த்திக்கு -செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
இந்திரிய ஜயாதிகளை -ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.
(இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-
ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-
கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-
பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)
ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றுங் காட்டி
வாழி தனால் என்று மகிழ்ந்து நிற்க-ஊழிலவை
தன்னை இன்று போற் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவாரே நல்லது கற் பார்–திருவாய்மொழி நூற்றந்தாதி-64
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply