கோவர்த்தன உத்தாரணம் பண்ணி ரஷித்த செயலை அனுசந்திக்கிறார்
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-
மேய் நிரை கீழ் புக –
மேய்கிற பசுக்கள் புல்லும் உமிழாதே அசை யிட்டுக்கொண்டு கீழே புகுர.
மா புரள –
மலையை எடுத்து மறிக்கையலே அங்கு வாழ்கின்ற மிருகங்கள் எல்லாம் புரண்டு விழ.
சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-
சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறை குடத்தைக் கவிழப் பிடித்தால் போலே
ஒலித்துக் கொண்டு சொரிய.
ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி.
இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க –
பசுத்திரளும் திருவாய்ப்படியும் அங்கே ஒடுங்கவும்.
அப்பன்-
ஆபத் சகனான -ஆபத்திற்குத் துணைவனான உபகாரகன்.
தீ மழை காத்து –
விநாசத்தை -கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவுபட்டார்?
குன்றம் எடுத்தானே –
மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.
பசியினால் உண்டான கோபம் ஆறும் தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று
ஏழு நாள் அன்றோ மலையைத் தரித்துக் கொடு நின்று நோக்கிற்று?
ராவணன் முதலானோர்கள் ஆனால் அன்றோ அழியச் செய்யலாவது?
அநுகூலனால் வந்த பிரதிகூல்யம் -கேடு ஆகையாலே செய்யலாவது இத்தனையே அன்றோ?
இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
ஆஸ்ரிதன் தப்பினாலும் தான் பொறுத்து ரஷிக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply