ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-4-4–

மஹா பிரளயத்தில் ரக்ஷண பிரகாரத்தை அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே, ‘‘இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திரு வயிற்றுள் ஒன்றும் அழியாது
இருக்கக் கண்டான்’ என்கிற புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை
இவ்விடத்தே அருளிச் செய்கிறாரகவுமாம்,’ என்றும் அருளிச் செய்வர்.

நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே–7-4-4-

நாளும் எழ –
கால வ்யவஸ்தை -நியதி போக.
நஅஹ: நராத்ரி: நநப; நபூமி; நஆஸீத்தம; ஜோதி: அபூத்நச அந்யத்
ஸ்ரோத்ராதிபுத்யா அநுப லப்தம்ஏகம் ப்ராதாநிகம் பிரஹ்ம புமாந்ததா ஆஸீத்’-ஸ்ரீவிஷ்ணு புரா, 1. 2 : 25.
இது, மஹா பிரளயத்துக்குப் பிராமணம்.
அக் காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள் இல்லை:
சூரிய சந்திரர்கள் இல்லை; வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷ ரூபமாய் இருந்தது,’ என்கிறபடியே.
ந அஹ:நராத்ரி;’ என்பது மாத்திரமே அவாந்தர பிரளயத்துக்குப் பிரமாணம்.

எழ.
பேர.
ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவை எல்லாம்
சூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ?
வியவச்சேதகனான -பாகுபாட்டைச் செய்கிற சூரியன் உள்ளே புக்கால்-
வியவச்சேத்யமான – பாகு படுத்தப் படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?

நிலம் நீரும் எழ-
காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக.
காரியம் உள்ள இடத்தே காரணம் அனுவர்த்திக்க -தொடர்ந்து நிற்றலைக் காணா நின்றோம்;
மா மாயை –மங்க ஒட்டு’ என்று பிரகிருதி தத்வத்தைச் சொல்லா நிற்கச் செய்தே,
இங்கு இவ்வுயிர் ஏய் பிரகிருதி’ என்று சொல்ல நின்றாரே அன்றோ?
இது தான் காரணத்திலே போகாமைக்ககா.‘உயிர் ஏய் பிரகிருதி’ என்கிறார், –
சேதன சம்ஸ்ருஷ்டையான ஆத்மாக்களோடு கூடியுள்ள பிரகிருதி என்று தோற்றுகைக்காக.

விண்ணும் கோளும் எழ-
ஆகாயமும் அங்குள்ள கிரகங்களும் எழ.

எரி காலும் எழ –
அக்னி தத்துவமும் -நெருப்பும் வாயு தத்துவமும் -காற்றும் போக.

மலை தாளும் எழ-
பர்வதங்கள் -மலைகள் அடியோடே பறிந்து உள்ளே புக. என்றது, ‘வேர்க் குருத்தோடோ பறிய’ என்றபடி.

சுடர் தானும் எழ-
அனுக்தமான- சொல்லப் படாத தேஜஸ் தத்வம் -ஒளிப் பொருள்களும் உள்ளே புக.

அப்பன் ஊளி எழ-
ஊளி -சப்தம் -ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால்
நம்முடைய அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திரு வாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே,
திரு வயிற்றில் புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி.
அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலி காண்!’ என்று அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச்செய்வர்’
அதனால் நினைக்கிறது,ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக ஆஸ்ரித ரக்ஷணமேயாய் இருக்கிறபடி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading