நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே
மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-
அடியார்களைக் காப்பாற்றும் பொருட்டுக் கல்பம் தோறும் கல்பம் தோறும் திரு மேனியும் திருப் பெயரும்
சேஷ்டிதங்களும் -செயல்களும் வேறுபடக் கொள்ளமவன். இதற்குப் பயன்-பிரயோஜனம் – என்?’ என்னில்,
வையம் காக்கும்-
உலகத்தைக் காப்பாற்றுதல். அப்படியே காத்திலனாகில் இப்படி விஸ்வசிப்பார் -நம்புவார் இல்லையே, இவனை ‘ரஷகன்’ என்று,
ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும்
அசாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது.
அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.
அணி குருகூர் –
ஆபரணமான திருநகரி.
கேழ் இல் அந்தாதி –
ஒப்பு இல்லாத அந்தாதி.தம்மாலும் பிறராலும் மீட்க ஒண்ணாதபடி பகவத் விஷயத்தில்
வ்யவசாயத்தை -உண்டான உறுதியைச் சொன்ன பத்து ஆகையாலே, ஒப்பு இன்றிக்கே இருக்கிறபடி.
ஓர் ஆயிரத்துள் திருப் பேரெயில் மேய இவை பத்தும் –
ஒப்பு இல்லாத ஆயிரத்துள் திருப் பேரெயிலிலே சேர்ந்த இப் பத்தைக் கொண்டு.
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் –
இவை எல்லாவற்றாலும் என் சொல்லியவாறோ?’ எனின், கையும் திருவாழியுமான அழகிலே இவர்
அகப்பட்ட படியைத் தெரிவித்த படி.
அல்லாத அழகுகள் ஒரு படியும் இது ஒரு படி யுமாய் இருக்கை; இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே –
அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.
வெள்ளிய நாமங்கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளமங்கே
பற்றி நின்ற தன்மை பகருஞ் சடகோபற்கு
அற்றவர்களை தாமாழி யார்–திருவாய்மொழி நூற்றந்தாதி-63-
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply