‘எனக்கு ‘அவனைக் காண வேணும்’ என்னும் அபிநிவேசம் -காதல் கடலின் மிகப் பெரிது’
என்னுமளவு அன்றிக்கே, அற மிக்கது, ஆன பின்பு, நீங்களாக இசையீர் கோளாகில்,
தன் வேண்டற்பாடு தோன்ற எழுந்தருளியிருக்கிற தென் திருப்பேரெயிலை நான் சென்று சேர்வன்’ என்கிறாள்.
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-
கண்டதுவே கொண்டு –
அவன் பேர் சொல்லுதல்,
தலையில் வணங்கவுமாம் கொலோ?’ திருவாய். 5. 3 : 7.-என்று
ஒரு பிராணாமம் -வணக்கம் செய்தல் செய்யுமன்றோ? அவ் வளவினையே கொண்டு;
புற இதழ் கண்டு படுகிறபடி இது வானால், அக வாயில் ஓடுகிறது அறியில் என் படுவார்கள்?
எல்லாரும் கூடி –
பரிவரோடு, ஹித காமரோடு -நலத்தை விரும்புமவரோடு,
இவை இரண்டும் தான் என்?’ என்று இருப்பாரோடு வாசி அறக்கூடி.
பிறரைப் பழி சொல்ல என்னில், தம்மில் தாம் சேராதவர்களும் சேர்வார்கள் அன்றோ?
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு –
இவள் நிறம் விவர்ணமாம் -பசலை நிறமாம் போது, அவன் திறத்தே இழந்ததாக வேண்டாவோ?
கடல் ஏறி வடிந்த இடம் என்று தோற்றுகிறத் இல்லையோ?
என் இடையாட்டத்தை -செயலை ஸ்ரமத்தைப் போக்குகிற நிறத்தை யுடையவனோடே கூட்டி.
அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் –
இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் ஸூகமே இரேனோ?
நான் பழிக்கு அஞ்சி மீளுவேன் என்று காணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது.
அலர் தூற்றிற்று –
அலர் தூற்றினார்கள்.
அது முதலாக் கொண்ட என் காதல் –
அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது சதசாகமாக -நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.
ஊரவர் கவ்வை’- என்றி திருவாய்மொழிப் பாசுரம் 5. 3 : 4
ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.’-திருக்குறள்.
காதல் உரைக்கில்
தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
யதோவாசோ நிவர்த்தந்தே’ தைத்தீரியம்.
எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும்
இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?
சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,
அதனில் பெரிய என் அவா’ என்றார் அன்றோ?
தோழீ –
இந்தக் காதலை விளைக்கைக்கு நீ செய்யும் கிருஷி அறிதி அன்றோ? இது இருந்தபடி பாராய்.
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிது –
காதல், கடலின் மிகப்பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;
ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில்,
பெரியவற்றில் பெரியது என்னுமித்தனையல்லது,
ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.
மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக் கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும்
என்னுமிவை இத்தனைக்கும் அவ் வருகு பட்டிருக்கை.
இப்படிக் காதல் கரை புரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வான்
இந்தக் காதல் மறு நனையும் படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப் புகுமத்தனை.
தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயிலே போய்ப் புகுமத்தனை.
தஸ்ய உபவந ஷண்டேஷூ நாநாபுஷ்ப ஸூகந்திஷூ
விஹ்ருத்ய ஸலிலக்லிந்நா தவாங்கே ஸமுபாவிஸம்’-, சுந். 38 : 14.
பலவித மலர்களினுடைய சிறந்த வாசனை நிறைந்த அந்தச் சித்ர கூட மலையில் பல உத்தியானங்களில் விளையாடி
அதனால் வியர்வை யடைந்து வாட்ட முடையவளாய்த் தேவரீருடைய மடியில் படுத்துக் கொண்டேன்’ என்கிறபடியே,
அனுபவத்திற்குத் தகுதியான யோக்யமான – தேசத்திலே போய்ப் புகக் கடவோம்.
சேர்வன் சென்றே –
இனிப் பகட்டால் தீராது, புக்கு அல்லது விடேன்.
ஆள் விடுதல், அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.
சென்று சேர்வன் –
இனி எதிரே அவன் வரிலும் மீளேன்.
அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம், அங்கே சென்று கிட்டகை.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply