ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-4-10–

இந்த இரவில் என்னுடைய துன்பத்தைக் கண்டு வைத்து அவன் திறமாக
ஒரு வார்த்தை சொல்லாதே உலகமாக உறங்குவதே! என்கிறாள்.

நின்றுருகு கின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே–5-4-10-

நெடுவானம் சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற-
எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது,
சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழா நின்றது. யாரைப் போன்று எனின்,

நின்று உருகுகின்றேனே போலே –
கண் கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள்.
மஹா தத்துவமான ஆகாசம் அழிகிறபடிக்கு வேறு த்ருஷ்டாந்தம் இல்லை -என்னைச் சொல்லும் அத்தனையே –
அளவுடையார் எல்லாம் அழிகிற காலம் ஆகாதே –
அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும் ராமசாபாஸ்ரயாம் வநே”-ஆரண். 37 : 18.
மாரீசன் வார்த்தை இது –
யஸ்யா சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ–எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ
அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது” என்கிறபடியே,
பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலே யாம்படி இருக்குமவளன்றோ.
திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ.

கங்குல்வாய்-
இப்படிச் செல்லுகிற இரவிடத்து.

அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று சொல்லாது-
பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது,
வரையாதே எல்லாரையும் ஒரு சேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப் போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ
ஜீவித்திருக்கைக்குக் காரணம்,
அதுவும் அவனுக்கு, புழுக்குறி யிட்டது எழுத்தானால் போன்று எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று,
அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்.
அன்று ஒருகால்’ என்றது, அன்று அங்ஙனே ஒருகால் செய்தானித்தனை,
அவனுக்கு எற்றைக்கும் நியதமாய் இருப்பது ஒரு தன்மை அன்று காண் என்கிறார் இலர்.
பிரான்’ என்னா நிற்கச்செய்தே அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது,
உலக முழுதினையும் அளந்துகொண்ட உபகாரகன் அன்றோ என்று நினைக்கிறாயாகில்,
பெருக்காறு பெருகினால் போலே அது அங்ஙனே ஒரு கால் செய்து போன இத்தனை,
வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி.
ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’ என்ன அமையும். இன்னம் வருவான்’ என்னும் நசை கொண்டு
ஜீவிக்க இருப்பார்க்கே அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது. ‘வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம்.

ஒரு கால் –
ஒரு கால் சொன்னால் பின்னையும் ஜீவிப்பார்க்கே அன்றோ இரு கால் மட்டுச் சொல்ல வேண்டுவது.
அவன் இனி வாரான்’ என்று அறிந்த போதே மூச்சு அடங்குமே அன்றோ.

உலகு ஓ உறங்குமே –
அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்று இன்னாதானத்தை லோகத்தை அடைய இன்னாதாம் படி காணும்
அதுக்குப் பின்பு பிறந்த தசா விசேஷம்
பிரிந்தவனோடே ஒத்ததீ இந்த லோகம் –

மானத்து வண்ட லுழவோ ரெழுத்தின் வடிவுற்ற சீர்
மானத்து வண்ட வினையாள ராயினும் மால் வளர்வி
மானத்து வண்டல மா மரங்கம் வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம் பதம் வாய்க்குமங்கே.-என்ற திவ்வியகவி

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading