ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-8–

நாமே செய்யப் புக, நீர் ‘வேண்டா’ என்றவாறே அன்றோ தவிர்ந்தது?
இதற்கு நம்மைக் காற்கட்ட வேண்டுமோ?’ என்ன,
செய்யக் கடவதாகில், அது செய்வது என்று?’ என்கிறார்.
எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றாரே

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் பொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

காட்டி –
முன்பு தானே தான் ஆம்படி இவற்றை அடையத் தன் பக்கலிலே-உப சம்ஹரித்து – சேர்த்துச் ‘சத்’ என்னும் –
அவஸ்தையான -நிலையினதான உலகத்தை,
ததா யதா பூர்வ மகல்பயத்– பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி.
காட்டி’ என்ற சொற்போக்கால், ஐந்திர ஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது போதரும்.

நீ கரந்து உமிழும் –
ஸ்ருஷ்டனான -படைத்தவனான நீயே பிரளயம் வந்தவாறே உள்ளே வைத்துக் காப்பாற்றி,
அது கழிந்தவாறே வெளிநாடு காண உமிழுகின்ற,
அன்றிக்கே, -நீ கரந்து காட்டி, உமிழ்ந்து காட்டும்’ என்னலுமாம்.

நிலம் நீர் தீ விசும்பு கால் –
இப்படி உண்பது உமிழ்வதான மண் முதலான ஐந்து பூதங்களாலே.

ஈட்டி – திரட்டி,
திரிவிருத் கரணத்தைச் சொன்னபடி.
ச மேத் யான்யோன்ய சம்யோகம் பரஸ்பரம் ஸமாச்ரயா — ‘மண் முதலிய பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து
எல்லாவற்றிலும் எல்லாம் உள்ளன,’ என்கிறபடியே,
இவை தனித் தனியும் காரியத்தைப் பிறப்பிக்க மாட்டா;
கூடினாலும்-சம பிரதானமாய் – எல்லாம் ஒத்ததாய் நிற்கில் காரியம் பிறப்பிக்க மாட்டா;
செதுகையும் மண்ணையும் நீரையும் கூட்டிக் குயவன் குடம் முதலியனவற்றைச் செய்யுமாறு போலே, –
தேவாதி கார்ய நாநாவிதம் -தேவர்கள் முதலான பல காரியங்களும் பிறக்கும்படி முக்கியப் பொருள்களாகவும்
முக்கியம் இல்லாத பொருள்களாகவும் நிற்கும். பரஸ்பரம் -ஒன்றற்கு ஒன்று காரணம்-ஏக ரூபமாய் – ஒரே தன்மையாய்
நிற்கில் காரியமும் ஒரே தன்மையாய் இருக்குமே அன்றோ?
ஆக, இப்படி இவற்றைத் திரட்டி இவற்றாலே,

நீ வைத்து அமைத்த –
நீ சமைத்து வைத்த.

இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினில் கழித்து –
பிரமன் முதலானோர் வன்னியம் செய்கிற-அத்விதீயமான – ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு.
கோட்டை என்பது,
புறம்புள்ளாரால் புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே,
புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய் இருக்குமே அன்றோ?
அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது.
துரத்யயா -‘என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?

என்னை –
இக் கோட்டையிலே அகப்பட்டுப் புறப்பட வழி அறியாதிருக்கிற என்னை.
அன்றிக்கே, மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மே தாந்தரந்தி தே- ‘எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ
இதனைக் கழித்து உம்மைக் கொடு போகச் சொல்லுகிறது எங்ஙனே?’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:

உன் கொழுஞ்சோதி உயரத்து –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாததாய்ச் சுத்த சத்வமயமாய்–நிரவதிக – எல்லை இல்லாத
தேஜோரூபமான பரமபதத்திலே.

கூடு அரிய திருவடிக்கள் –
தன் முயற்சியால்–துஷ் ப்ராபமான -அடைய முடியாதனவான திருவடிகளை.

எஞ்ஞான்று கூட்டுதி –
மாஸூச -‘துக்கியாதே’ என்று ஒரு வார்த்தையைச் சொல்லிலும்–
ஸ்த்தி தோஸ்மி – ‘மனம் நிறைவு பெற்றவனாய் இருக்கிறேன்’ என்று இருக்கலாய் அன்றோ இருப்பது?
அப்படியே, ‘நான் கூட்டக் கடவேன்’ என்று ஒரு வார்த்தை அருளிச்செய்ய வேண்டும்.
ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்டா -பிறகு ஸ்ரீ பரதாழ்வான் பாதுகைகளைத் தலையில் வைத்துக்கொண்டு அப்போது
ஆனந்தமடைந்தவராய்ச் சத்துருக்னாழ்வானோடு கூடினவராய்த் தேரில் ஏறினார்’ என்னலாம்படி –
பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே ‘பதினான்கு வருஷங்களும் முடிந்து வருகிறேன்’ என்றதைப் போன்று வார்த்தை அருளிச்செய்தருளவேண்டும்.
இதனைக் கழிக்க வேண்டும்’ என்று இருக்கிற என்னை,

எஞ்ஞான்று கூட்டுதி –
நீ உகந்தாரைக் கொடு போய் வைக்கும் தேசத்திலே, அளவிலாத ஆற்றலையுடையனான நீயே என்று கொடுபோய் வைக்கக்கடவை?’ என்றது,
இக் கோட்டை இட்ட இவன் தானே கழிக்க வேண்டும்?’ என்றபடி.
மாமேவ யே பிரபத்யந்தே – எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்’,
தமேவ சரணம் கச்ச -அந்தச் சர்வேஸ்வரனையே சரணமாக அடைவாய்; அவன் திருவருளாலே பரமபதத்தை அடைவாய்,’என்கிறபடியே.
விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்:
தன்னைப் பெறிலும் தன்னாலே பெறவேண்டும்.
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை;
ஒரு சர்வசத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை. அவனைக் காற்கட்டாதே
இவ் வெலி எலும்பனான சம்சாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading