அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–9-

ஒன்பதாம் திருவாய்மொழியிலே-இப்படி அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம் பிறந்த அளவிலும்
அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உஸாத் துணையாகைக்கு யோக்யர் அல்லாதபடி சம்சாரத்தில் உள்ளாறும் அதிசயித துக்க மக்நராய்க் கொண்டு
கிலேசிக்கிற படியைக் கண்டு -சகல கிலேச நிவர்த்தகனாய் நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுடைய
அர்த்தி தார்த்த கரணத்தையும்
சாதாரண பந்தத்தையும்
அபரிச்சின்ன ஸுந்தர்யத்தையும்
அவ்வழகை அனுபவிக்கும் உதார குணத்தையும்
அனுபவிப்பார்க்கு கைக்கு அடங்கும் படியான ஸுலப்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
சர்வாத்ம பாவத்தையும்
சகல ஜகத் காரணத்வத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஸ்ரீ லஷ்மீ ஷஹாதவத்தால் வந்த பரம ப்ராப்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான நீ அத்யந்த அஸஹ்யமாம்படி கிலேச உத்தரமான சம்சாரத்திலே இருத்தி என்னை
கிலேசிப்பிக்காதே உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ள வேணும் என்று கூப்பிட்டு
இவர் அபேஷா அநு ரூபமாக அவனும் பரமபதத்திலே இருக்கிற இருப்பைக் காட்ட மானஸ ஞானத்தால் கண்டு
ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய ஹேயதா பிரதிபத்தி பூர்வகமாக அவன் திருவடிகளையே
பரம ப்ராப்யமாகப் பற்றின படியை அருளிச் செய்கிறார் –

———————————–

முதல் பாட்டில் -சம்சாரிகள் படுகிற துக்கம் அஸஹ்யமாய் இரா நின்றது –
ஆனபின்பு ஆஸ்ரிதற்கு அரும் தொழில் செய்தும் அபேக்ஷிதம் கொடுக்கும் நீ
இத்துக்கம் காணாத படி என்னை சரீர விஸ்லேஷம் பிறப்பிக்க வேணும் -என்கிறார் –

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

நண்ணாதார் முறுவலிப்ப, –ஸாத்ரவத்தாலே இவனை அணுகி இராதவர்கள் இவன் அநர்த்தத்துக்கு ப்ரீதராய் ஸ்மிதம் பண்ணும்படியாகவும் –
நல்லுற்றார் கரைந்துஏங்க,-ஸ்நேஹத்தாலே கிட்டி இருக்கிற பந்துக்கள் இவன் அநர்த்தத்துக்கு சிதிலராய் என்னாகிறதோ என்று ஏங்கி க்லேசிக்கவும்
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?–எண்ணுதலில் அடங்காத துக்கங்களை தன்னில் தான் விளைத்துக் கொண்டு
போருகிற இந்த லோக யாத்திரைகள் என்னா இருக்கின்றன
கண்ணாளா! கடல்கடைந்தாய்! –நிருபாதிக நிர்வாஹகானாகையாலே காருகணிகனாய்-பிரயோஜனாந்தரங்களை வேண்டிலும்
கடலைக் கடைந்து கொடுக்கும் ஸ்வ பாவத்தை யுடையவனே
கண்ணாளன் -கண்ணையுடைய ஆளன் என்று கிருபையை யுடைய நிர்வாஹகன் என்றபடி –
உனகழற்கே வரும்பரிசு,–இந்த லோக கிலேசம் காணாதே ப்ராப்தனான உன் திருவடிகளுக்கே உறுப்பாய் நான் வரும்படி
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–விளம்பியாதே உனக்கே சேஷபூதனான என்னை சரீர விஸ்லேஷம் பிறக்கும்படி
சர்வ பாபமோக்ஷயிஷ்யாமி என்கிற கணக்கிலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -ஸர்வபாப சப்தத்தில் சரீரமும் அந்தர்பூத்தம் என்று கருத்து –

——————————————

அநந்தரம் லௌகிக கிலேசம் என்னாய் முடியப் புகுகிறது என்று அறிகிறிலேன் –
நிருபாதிக சேஷியான நீ என்னை அழைக்கும்படி விரைய வேணும் -என்கிறார் –

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து–சிரகாலம் ஜீவிக்க விருக்க மத்யே சாகிற பிரகாரமும்
ஐஸ்வர்யத்தைப் பாரிக்க அது நசிக்கிற பிரகாரமும் இது அடியாக தமரான ஞாதிகளும் உற்றாரான சம்பந்திகளும் ஒருவருக்கு ஒருவர் மேல் விழுந்து
தலைத்தலைப்பெய்தல் -தலையோடு தலை சேர்த்தலாகவுமாம்
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?–ஏங்குதல் அற்று கிடந்தது கூப்பிடுகிற கூப்பீடும் ஆகிற இவை
என்ன லோக யாத்ரைகளாய் இருக்கின்றன தான்- ஏமாற்றம் -க்லேசமாகவுமாம்
ஆமாறுஒன்று அறியேன்நான், –நான் இது என்ன பாவிலேயாய் முடியப் புகுகிற பிரகாரம் ஒன்றும் அறிகிறிலேன்
அரவணையாய்? அம்மானே!- சேஷ பூதனான அனந்தனை சேஷ விருத்தி கொள்ளுமவனாய் சேஷ பூதனான என்னை
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–துக்க சஹன் அல்லன் என்று குறிக்கொண்டு அழைக்கும்படி விரைய வேணும் –

———————————–

அநந்தரம் தங்கள் நன்மையாக நினைத்து இருக்கிறவை ஒழிந்து போகத் தங்கள் நசிக்கும் படி கண்டு பொறுக்க மாட்டு கிறிலேன் –
அபரிச்சின்ன ஸுந்தர்யனான உன் திருவடிகளிலே அழைத்து அடிமை கொள்ள வேணும் -என்கிறார் –

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்–சம்பத்தடியாக நாட்டார் ஆரோபித்துச் சொல்லும் கொண்டாட்டமும் –
இல்லாத குலத்தை ஏறிட்டுக் கொண்ட ஆபீஜாத்ய அபிமானமும் –
ஐஸ்வர்யம் கண்டு வந்த ஜ்ஞாதிகளும் -சம்பந்திகளும் -இதுக்கு அடியான சீரிய அர்த்த ஸஞ்சயமும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்–அது அடியாக ஸ்வீ கரித்த வந்து நிறைந்த மாறாத
குழலை யுடையளாகையாலே போக்ய போதையான ஸ்திரீயும்
போக ஸ்தானமாம் படி விலக்ஷணமாக எடுத்த மனையும் தன்னை விட்டுக் குறி அழியாமல் இருக்க பிராண விநாசம் பிறக்கை யாகிற
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்–இந்த லோக யாத்திரை கண்டு பொறுக்க மாட்டு கிறிலேன்
கடல் போலே அளவிறந்த வடிவு அழகை யுடையவனே -உன் வடிவு அழகுக்குத் தோற்று அடிமை புகுந்த என்னை
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–உன்னைப் பிரிந்து கூப்பிட்ட பண்டு போலே நினைத்து இராதே
உன் திருவடிகளுக்கே யாம்படி அழைத்து அடிமை கொண்டு அருள வேணும்

——————————————-

அநந்தரம் நஸ்வரமான ஐஸ்வர்யத்தை ஆதரிக்கிற லோக யாத்ரையைக் காணாதபடி உன் வடிவை எனக்கு உபகரித்த
மஹா உதாரரான நீ என்னை அங்கே ஸ்வீகரிக்கிற உதார குணத்தையும் காட்டி அருள வேணும் என்கிறார் –

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்-என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேன்மேலென
அபி வ்ருத்தமாய்த் தோற்றுகிற பெரிய ஐஸ்வர்யம் விநாசாதிகளாலும் பிரதிபக்ஷங்கள் அபி பவிக்கைக்கு ஹேது வாகையாலும்
பரிதாப கரமாகக் கொண்டு அக்னி கல்பமாகச் செய்தே
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!–வாசனையாலும் சாபல்யத்தாலும் பின்னையும் இத்தையே ஸ்வீகரி என்று
அஞ்ஞான தமஸ்ஸானது அபிபவியா நிற்கிற இவை என்ன லோக யாத்திரைகள் –
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,–நிரதிசய உதார ஸ்வ பாவத்தை யுடையையாய் நீல ரத்னம் போலே
தர்ச நீயமான வடிவை யுடையவனே ஏவம் பூதனான உன் திருவடிகளிலே வரும்படி
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–இதுக்கு என்னவும் ஓர் உதார குண விசேஷத்தைப் பண்ணி உனக்கே
அநந்யார்ஹனான என்னை உன் கிருபையால் கைக் கொண்டு அருள வேணும் –

————————————–

அநந்தரம் ஜென்ம ஜரா மரணாதி கிலேசங்கள் நடையாடுகிற தேசத்தில் இராதபடி
ஆஸ்ரித ஸூ லபனான வடிவையுடைய நீ அங்கீ கரிக்க வேணும் என்கிறார் –

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்–திரைக்குள் அகப்பட்ட பதார்த்தங்களை உள்ளே வாங்கும் சமுத்திர ஜலத்தை யுடைய
விஸ்தீர்ண பூமியில் நிற்பனவும் திரிவனவுமான
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;–அந்த ஸ்தலங்களில் வர்த்திக்கிற பிராண ஆஸ்ரயமான ஆத்மாக்கள்
இவ்விடத்தில் ஜென்ம மரண வியாதி ஜரைகளாலே நெருக்குண்ணா நிற்கும்
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!-இதற்கு மேலே குரூரமான ரௌரவாதி நரகங்களாய் இருக்கும் இவை என்ன லோக யாத்ரைகள்
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–-ஆஸ்ரிதர்க்கு முடிந்து ஆளலாம் படி நீல ரத்னம் போலே தர்ச நீயமாய்
ஸூலபனான வடிவை யுடையவனே நீ இந்த துக்கம் பொறுக்க மாட்டாத என்னை அங்கீ கரித்து அருள வேணும் –
உன் அடியேனான என்னை மறுகப் பண்ணாதே கொள் -மறுக்குதல் -கலக்குதல் –

—————————————————–

அநந்தரம் பர பீடா கரமான சம்சார ஸ்வ பாவத்தைக் காணாத படி நிரதிசய போக்யனான நீ
என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் -என்கிறார் –

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;–பய ஹேதூக்க ளான வார்த்தைகளைச் சொல்லி இவன் நெஞ்சைக் கலக்கி
பய நிவ்ருத்திக்கு தன்னையே தஞ்சமாகப் பற்றும்படி தன் வசமாக சிக்கென்ற வலையிலே அகப்படுத்தி இவன் தன் பதார்த்தங்களை
ஸ்வயமேவ நெகிழும்படி பீடித்து பின் தொடர்த்தி யறும்படி கொன்று தாங்கள் வயிறு வளர்க்கா நிற்பார்கள்
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!–தர்மமாகிற பிரதம புருஷார்த்தத்தை அறிந்து
இதுவே நமக்கு உஜ்ஜீவன ஹேது என்று நிரூபியார் -இவை என்ன லோக யாத்திரைகள் –
அறப் பொருளை அறிந்து ஓரார்;-என்று மிகவும் பொருளையே அறிந்து வேறு ஒன்றையும் விசாரியார் -என்றுமாம்
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை-பரிமளோத்தரமான திருத் துழாயை யுடைத்தான திரு முடியை யுடையவனே –
இந்த போக்யதையைக் காட்டி பாபமே நிரூபகம் என்னலாம் படி யான என்னை உனக்கு அநந்யார்ஹமாக அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–கொண்டவனே-பரிபூரணமாய் நித்ய போக்யமான அம்ருதமானவனே
இனி -சம்சாரத்தில் அத்யந்த ஆர்த்தி பிறந்த பின்பு அழைத்துக் கொண்டு அருள வேணும் –

—————————————-

அநந்தரம் சர்வாத்ம பூதனான நீ குரூரமான துக்கோத்தர ஜகத்தைக் காணாதபடி என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் -என்கிறார்

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்-இந்த லோகத்தில் நிற்பனவும் திரிவனவும் நீயே யாய்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்-வேறு ஒரு பதார்த்தமும் இன்றி நீ நின்ற படியால்
ஸ்வ சரீரத்தில் வ்யாத்யாதிகள் சரீரி தானே சமிப்பிக்குமோபாதி
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்–நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்று சொல்லப்பட்டுத்
தனித் தனியே துக்கத்துக்கு நிரபேஷ ஹேதுவான இவை போம்படியாக
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–உனக்கு அடியேனான என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும்
இவற்றால் ஈடுபடுக்கையாலே கொடியதாய கிலேசோத்தரமான ஜகத்தை என் கண்ணுக்கு இலக்காக்காது ஒழிய வேணும்
மூப்பு பிறப்பு என்கிற சொற்கள் சாந்தி விகார காரியத்தால் புகரம் மறைந்து மூப்பிறப்பு என்று கிடக்கிறது
பிணி என்று தாரித்ர்யத்துக்கும் பெயர்

—————————————————————-

அநந்தரம் சகல ஜகத் காரண பூதனான நீ இந்த ஜகாத் அந்தர்பவாத்தைக் கழித்து என்னை உன் திருவடிகளிலே கூட்டுவது என்கிறார்

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்–பூர்வ ஸ்ருஷ்டியிலே பிரகாசிப்பித்து நிரபேஷ காரண பூதனான நீ
ஸம்ஹ்ருத்ய அவஸ்தையில் நாம ரூப விபாக ரஹிதமாம் படி ஸ்வரூபத்திலே மறைத்து
ஸ்ருஷ்ட்டி தசையில் உண்டது உமிழ்ந்தால் போலே உருக் குலையாத படி ஸ்ருஷ்டிக்கும் ப்ருதிவ்யாதி பூதங்கள் ஐந்தையும்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்–பஞ்சீ காரண பிரகாரத்தாலே திரட்டி இவற்றைப்
புறவாயிலே ஆவாரணமாகவும் வைத்து அகவாயிலே ப்ரஹ்மாதிகளான அநிமிஷருக்கு வாஸஸ் ஸ்தானமாம் படி சமைத்த அத்விதீயமான அண்டமாகிற
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்–முட்டுக் கோட்டையை கழித்து -இதை இருப்பு துக்கமாய் உன்னை பிராபிக்கையிலே
ஆசை யுடைய என்னை உனக்கு அசாதாரணமாய் அதிசயித தேஜோ ரூபமாய் எல்லாவற்றுக்கும் மேலான பரம பதத்தில்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–விதி சிவா சனகாதிகளுக்கும் அத்யந்த தூரமாம் படி பெறுதற்கு அரிதான திருவடிகளை எக்காலம் கூட்டுதி
காலம் அறிந்தேனாகில் தரித்து இருக்கலாம் என்று கருத்து –

———————————

அநந்தரம் இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி ஆர்த்தி தீர்க்கும்படி பரமபதத்தில் இருப்பை பிரகாசிப்பிக்க
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவனான நீ என்னை உன் திருவடிகளை பிராபிக்கக் கண்டேன் என்று திருப்தராகிறார் –

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,–சர்வ சக்தியான நீ கூட்ட நினைத்தாரை அளவிலிகளே யாகிலும்
நிரதிசய போக்யமான உன் திருவடிகளை சேர்த்துக் கொள்ளுதி
ஸ்வ யத்னத்தாலே காண நினைக்கில் விசத ஞானரான தேவர்களும் கண்டு அனுபவியாதபடி பண்ணி அலமருவிப்புதி –
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;–ஆஸ்ரிதற்கு அக்ர புண்யனான திருவனந்த ஆழ்வானை படுக்கையாகக் கொண்டவனே
அது -ஆஸ்ரித அநாஸ்ரித விஷயத்தில் ஸுலப்ய துர்லப்ய ரூபமான ஸ்வ பாவத்தை சேஷ பூதனான நானும் அறிவன் -எங்கனே என்னில்
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்–இதர விஷயங்களில் அபி நிவேசத்தை எல்லாம் சவாசனமாகக் கழித்து
உன்னை ஒழியச் செல்லாத ஆசையை யுடையேனான என்னை நிரதிசய போக்யமான உன் திருவடிகளை சிரஸா வஹித்து அநு சஞ்சரணம் பண்ணும்படியாக
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–எத்தனையேனும் அளவுடையார்க்கும் கூட்டிக் கொள்ள அறிய திருவடிகளிலே கூட்டிக் கொண்டாய்
ப்ராப்தாவான நான் இந்தப் ப்ராப்யத்தை அபரோக்ஷித்து அனுபவித்தேன்
ஏவகாரம் -நிச்சிதம் -என்று கருத்து

————————————————————————

அநந்தரம் உமக்கு இதர புருஷார்த்தங்களைக் கழித்து பரம புருஷார்த்தத்தைக் கூட்டின கணக்கு என் என்ன
ஐஸ்வர்ய கைவல்யங்களை நானே விட்டு ஸ்ரீ யபதியான உன்னையே புருஷார்த்தமாக நிச்சயித்து பிராபிக்கும்படி யானேன் -என்கிறார்

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் –ரூப குணத்தைக் கண்டும் -சப்த குணத்தைக் கேட்டும் –
ஸ்பர்ச குணத்தைக் கிட்டியும் -கந்த குணத்தை மோந்தும் ரஸ குணத்தை புஜித்தும்
ஐங்கருவி கண்ட இன்பம்-ஐந்து இந்த்ரியங்களாலேயும் பரிச்சேதித்து அனுபவித்த ஐஸ்வர்ய ஸூ கமும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,–இந்த இந்திரியங்களுக்கு கிரஹித்து அனுபவிக்க அரியதாய் இவ் வைஸ்வர்ய ஸூகத்தில்
காட்டில் நித்யத்வாதிகளாலே அபரிச்சின்னமாய் -பகவத் அனுபவத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகமும்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,–விலக்ஷணமான முன்கைச் சரியை யுடையளாய் சர்வ சம்பத் சமஷ்டி பூதை யாகையாலே
திருவென்று சொல்லப்பட்ட நாரீணாம் உத்தமையும் புருஷோத்தமனான நீயும் –
அந்த சம்பத்தும் ஆத்ம ஸ்வரூபமும் உபய பிரகாரமுமாம் படி ஒருபடிப்பட்ட நிற்கும்படியாக
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; .–நிரூபித்து வைத்த நல் விரகை அபரோக்ஷித்துக் கொண்டு –
கேவல ஐஸ்வர்யத்தையும் கேவல ஆத்ம அனுபவத்தையும் ஒழிந்தேன்
அடைந்தேன் உன் திருவடியே-சகல பதார்த்தமும் உனக்குள்ளே யாம்படி ஸ்ரீ யபதியாய் பரம புருஷார்த்த பூதனான
உன் திருவடிகளை அனுபவ முகத்தாலே பிராபித்தேன்-

———————————————–

அநந்தரம் இத்திருவாய்மொழி அப்யசித்தவர்களை அவன் திருவடிகளை அடைவிக்கும் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

திருவடியை நாரணனைக் –சர்வ சேஷியாய் -சேஷித்வ நிர்வாஹகமான அந்தராத்மத்வத்தை யுடையனாய் –
கேசவனைப் –சேஷ பூதருடைய விரோதிகளைக் கேசி நிரசனம் பண்ணினால் போலே போக்குமவனாய் –
பரஞ்சுடரைத்-சம்பந்தத்தாலும் -வாத்சல்யத்தாலும் -விரோதி நிராசனத்தாலும் ஸித்தமான
நிரதிசய உஜ்ஜ்வல்யத்தை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனை உத்தேசித்து
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்–அவன் திருவடிகளை பற்ற வேணும் என்கிற அபிசந்தியை யுடையராய்க் கொண்டு
நிரதிசய போக்யமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்–பரனடி மேல் என்று ப்ராப்யமான அவன் திருவடிகளின் மேலே
அருளிச் செய்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–அந்தத் திருவடிகளைத் தானே பிராபிக்கும்
இத்திருவாய் மொழியில் அன்வயமுடைய நீங்கள் அத்திருவடிகளை பிறப்பித்து ப்ருதக் ஸ்திதி இல்லாதபடி அடிமை செய்யப் பாருங்கோள்
இது நாலடித் தாழிசை -கலி விருத்தமுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading