இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –
——————————————–
அவதாரிகை –
நப்பின்னைப் பிராட்டி —போகத்தில் வந்தால் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூடி கிருஷ்ணனை அர்த்திக்க–வாருங்கோள் என்ன –
அவன் குணங்களிலே தோற்றார்–தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஒரு தடவை–
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்–ஒரே பாசுரத்தில் இரண்டு தடவை-திருப்பள்ளி எழுச்சி இதில் –
மதுரையில் அவதரித்து இங்கே நந்த கோபன் மகனாக வந்த பிரயோஜனம் ஆராய்ந்து பாராய்-
ஆனாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக வெண்ணெய் உண்ண வந்தாய் -திருமங்கை
ஆண்டாள் -நாச்சியார் -29-கார் இருள் –போந்தாய் -இன் கன்னியரோடு -குறையினால்
நம் ஆழ்வார் -ஆயர் குலத்தை வீடுய்ய தோன்றிய -கரு மாணிக்க சுடர் 6-2-10-
மகனே அறிவுறாய் -காரணம் ஆராய்ந்து பாராய்–கிருபை–
நான் செய்ய வேண்டியது என்ன கேட்க–
கடாஷம் பிரார்த்திக்கிறார்கள்-
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
வியாக்யானம் –
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப –
ஏற்ற கலங்கள் எல்லாம் எதிரே பொங்கி வழியும்படி –கலமிடாதார் தாழ்வே –
இட்ட கலங்கள் எல்லாம் நிறையும் –ஏலாத கலங்கள் நிறையாது ஒழிகிறது பாலின் குறை அன்றே –
ஏற்ற கலங்கள் –
பெருமை சிறுமை இல்லை –கடலை மடுக்கிலும் நிறைக்கும் அத்தனை –
இவையும் கிருஷ்ணன் படியாய் இருக்கை –
அர்த்தியாதார் குற்றமத்தனை போக்கி-அவன் பக்கல் குறை இல்லை –
ஸ்வீகாரமே அமையும் இறே அவனுக்கு –
உபதேச பாத்திர பூதரான சிஷ்யர்கள் -ஆச்சார்ய உபதேசத்தாலே பரி பூரண ஞானரான சிஷ்யர்களுக்கு –
ஆச்சார்யனுக்கும் உக்துபதேசம் பண்ணும்படி – ஞானமானது பொங்கி வழியும்படியாக
எதிர் பொங்கி மீது அளிப்ப –
ஸத்பாத்ரங்கள் -புத்ராதிச்சேத் பராஜயம் / சிஷ்யாதிச் சேத் பராஜயம் /
விளக்கில் கொளுத்தின தீவட்டி போலே அன்றோ சிஷ்யர்கள் பிரபாவம்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே
மாற்றாதே பால் சொரியும் –
முலைக் கடுப்பாலே-கலம் இடுவார் இல்லை என்னா-அது தவிராது –
மாறாமல் –
பால் போலே போக்யமான -ஞானத்தை உபதேசியா நிற்குமவர்களாய்-
அர்த்த விசேஷங்கள் வர்ஷித்து-மாற்றாதே- இடைவிடாமல்
ஊற்று மாறாமல் பால் சொரியும்
அர்ஜுனன் -பூய ஏவ மகா பாஹோ ச்ருணு வாக்கியம் சந்தோஷத்துடன் நாரதர் சொல்லி
மைத்ரேயர் இதம் தே ஸ்ருணு-நல்ல அர்த்தம் இழக்க ஒண்ணாது என்று
மாற்றாதே –
அர்த்தம் மாற்றாமல்
பிறர் சொல்லி–முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னும் ஓர்ந்து அத்தை பேசுதல்
பிரமாணம் மாற்றாமல்–
ஏமாற்றாமல் -சிஷ்யர்களை
வள்ளல் –
சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை இன்றிக்கே-தன் கார்யம் செய்ததாக உபகரிக்கை –
கிருஷ்ணனைப் போலே-பெண்ணுக்கும் பேதைக்கும் அணைக்கலாம் படி பவ்யமாய் இருக்கை -என்றுமாம்
சிஷ்ய விதேயர்களுமாய் –
வீடுமுன் முற்றவும் அர்த்தியாது இருக்கச் செய்தே–
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே இது கொண்டே மதுரகவி
ஆயிரம் இன் தமிழ் பாடின வண் சடகோபர் வண்மை மிக்க–அருள் மாரி நமரும் உரைமின்
பெரும் பசுக்கள் –
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை –
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயசிலே பதினாறு வயஸூ குமாரன் என்னும்படி
இருக்குமா போலே இருக்கும் –
கீழே -17/18 நந்தகோபன் அற நெறியும்- தோள் வலியும் பேசி –
இதில் கறவை செல்வ சிறப்பு-பசுக்கள் -பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் –
பகவத் குண அனுபவத்தாலே பரிபுஷ்டரான சிஷ்யர்களை –
அபேக்ஷையால் கொடுக்கும் அவனைப் போலே அவையும் அபேக்ஷித்ததற்காக செய்தது -என்கை
அர்த்திக்கை உபாயம் ஆகாதோ என்னில்
ரக்ஷணம் அவனுக்கு ஸ்வரூபமானவோ பாதி ஸ்வரூபத்தில் புகலாம் இறே
அர்த்தித்தவம் நித்தியமாக வேணுமோ என்னில்-முக்தனானாலும் வேணும்
இல்லையாகில் அது ப்ராப்யமாக மாட்டாது என்கை –
சம்சார போகம் சாவதியாகையாலே அர்த்தித்தவம் ஓர் அளவிலே பர்வசிக்கும் –
அங்கு நித்யமாகையாலே உள்ளதனையும் வேணும்
அகலகில்லேன் இறையும் / மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு
ஆற்றப் படைத்தான் –
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி-வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர் –
அதாவது-தொகை இன்றிக்கே இருக்கை –
படைத்தான் மகனே –
அவர்க்கு ஆர்ஜித்து வந்தது -இவன் பிறந்து படைத்த சம்பத்து
இத்தால்
ஸ்ரீ நந்த கோபர் சம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம் –
நீர் தாழ வந்து -நீர்மை நீரின் தன்மை சௌலப்யம்
இடையனுக்கு மகனாய் பிறந்ததே சௌலப்யம்-நந்த கோபன் மகனே
பரமபதம் போலேயும்–நாரயணத்வம் போலேயும்–தான் தோன்றி அன்றே இது –
அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த- ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –
அறிவுறாய்-
சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது –
கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி–கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான
உபாய அந்ய பரதையாலே-எழுப்புகிறார்கள் ஆகவுமாம் –
நீ ப்ரபோதத்தை அடைய வேணும் –
சம்பந்தத்தால் தான் கிடைக்கும் — சாதனையால் இல்லை–
உணர்த்தி உண்டால் போதும் பலம் நிச்சயம் அறிவுற்றாலே போதும்
அறிவியாது பொழுது தான் இழவும் துக்கமும்
பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே –
அடியோமுக்கே எம்பெருமான் -கலியன் -4-9-5-
உன்னை நீ உணர வில்லை -உன் பிறவியைப் புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
பரம பதத்தில் வந்தோமோ -ஷீராப்திக்கு வந்தோமோ -எங்களைத் தேடி நீ திருவாய்ப்பாடிக்கு அன்றோ
வந்தாய் -இங்கே உறங்கலாமோ -ஆண்டாள் –
எங்களைத் தேடி திரு இந்தளூர் எழுந்து அருளிய ஸ்ரீ பரிமள ரெங்க நாதனே உணராய் –
ஊற்றமுடையாய் –
த்ருட பிரமாண சித்தனாகை – –
ஆஸ்ரித பஷபாதம் உடையவனே –
பெரியாய் –
எதோ வாசோ நிவர்த்தந்தே என்று
அந்த பிரமாணங்களுக்கும் தன்னுடைய அவதி-காண ஒண்ணாதாய் இருக்கை –
அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிகளை உடையவனே –
ஏற்ற கலங்கள் -திருக் கண்ண மங்கை- அனுபவம் -ஸூ சகம்
பெரியாய் -பெரும் புறக் கடல் –விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர்
பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே
ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்-வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா-
ஆற்றப் படைத்தான் மகனே -திரு நாராயண புரம்–அனுபவம் -ஸூ சகம்-
யதிராஜ சம்பத் குமாரனே -பல்கலையோர் -பெரும் பசுக்கள் -தோற்றமாய் நின்ற சுடர்
புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே-
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே-எல்லாரும் காணலாம்படி-
அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து –-சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –
சுடரே –
சம்சாரிகளைப் போலே பிறக்க பிறக்க கறை ஏறுகை அன்றிக்கே-
சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை
நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே –
ஊற்றமுடையாய் –
ஆஸ்ரிதர் விஷயத்தில்-பண்ணின பிரதிஞ்ஞையை-மகாராஜர் உள்ளிட்டாரும் விட வேணும் என்னிலும்
விடாதே முடிய நின்று தலைக் கட்டுகை –
பெரியாய் –
1-அந்த பிரதிஞ்ஞை-சம் ரஷணத்து அளவு அன்றியே இருக்கும் பலம் என்றுமாம் –
பெரியாய் –
2-ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று
3-தன் பேறாய் இருக்கை என்றுமாம் –
4-தன் பெருமைக்கு ஈடாக ரஷிக்குமவன் -என்றுமாம்
உலகினில் தோற்றமாய் நின்ற –
கீழ் சொன்ன ஆஸ்ரித பஷ பாதம் லோகத்தில் பிரசித்தம் ஆம்படி இருக்கை
அதாவது –
சிசுபால துரியோதனாதிகளுக்கும் பாண்டவர் பக்கல் பஷபாதம் தோற்ற இருக்கை –
சுடரே –
லோகத்தில் தோற்றின பின்பு நிறம் பெற்ற படி –
இந்த லோகத்தில் சஷூர் விஷயமாம் படி அவதரித்தவனாய் சிரகாலம் இருந்து தேஷிஷ்டனானவனே-
ஆஸ்ரித பஷ பாதம் லோகத்திலே பிரசித்தமாம்படி நின்று தேஷிஷ்டனானவனே–என்றுமாம் –
தோற்றமாய் நின்ற சுடர்–
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தால் வந்த ஔஜ்வல்யம்
இன்னார் தூதன் என நின்றான் –
சொல்லிய பின்பு நின்றான்
நிலை–தரித்து நின்றான்
அவதாரம் எடுப்பதில் நின்றும் நின்றான் –
ஆசைப்பட்டது பெற்றதால்–ஐவர்க்கு அருள் செய்த –-பரஞ்சுடர்
துயில் எழாய் –
இப்போது உணராமையாலே-அந்த குணமும் மழுங்க இறே புகுகிறது –
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும்–ரஷணம் பிரசக்தமாய் இருக்க
ரஷண சிந்தை பண்ணக் கடவதோ –என்று தாத்பர்யம்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து-
உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே-
சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று-போக்கடி இல்லாமையாலே-
உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே –
மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே -என்றுமாம் –
மாற்றார் –
என்று சத்ருக்கள்
நாராயணன் ஆகையாலே-சம்பந்தம் எல்லாரோடும் ஒத்து இருக்க-இவனுக்கு சத்ருக்கள் உண்டோ -என்னில்
ஆஸ்ரித விரோதிகள் இவனுக்கு சத்ருக்கள் –
இத்தால் –
உகாவாதார் வீரத்துக்குத் தோற்று வருமா போலே
உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்று வந்தோம் -என்கிறார்கள் –
அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம் –குணஜிதர்க்கு அதுக்கும் விரகு இல்லை இறே-
பிரமஹாஸ்தரம் விட வேண்டும்படி-பிராட்டி பக்கலில் அபராதத்தைப் பண்ணி-ஓர் இடத்திலும் புகலற்று
பெருமாள் திருவடிகளிலே விழுந்த காகம் போலே -இருக்கை
அம்பு பட்டாரோபாதி குண ஜிதர் -என்றது இறே –
வணக்கம் ஸ்வரூபத்துக்கு என்று இராதே ஆற்றாமைக்கு என்று இருக்கை
போற்றி
போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –
யாம் வந்தோம் –
அவர் தன்னைப் பேணாதே-உன்னைப் பேணினாப் போலே
நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல்-ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே –
வந்தோம்
நசை முடிய ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –
உன்னுடைய சௌந்தர்ய சௌசீல்யாதி குணங்கள் பிடித்து இழுக்க வந்தோம்
யாம் வந்தோம் –
சத்ருக்கள் துரபிமானத்தாலே ந நமேயம் என்று இருக்குமா போலே
ஸ்வரூப ஞானத்தாலே -தத் சத்ருசம் -என்று இருக்கும் நாங்கள்-ஆற்றாமை இருக்க ஒட்டாமையாலே வந்தோம் –
பெரியாழ்வாரை போலேயும் வந்தோம்–
அல்லாதாரைப் போலேயும்-சத்ருக்களைப் போலேயும் –
வந்தோம்-
நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்–
நீ பெறினும் பேறு இழக்கிலும் இழ -என்றபடி-
புகழ்ந்து –
எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –
லௌகிக சத்ருக்களடைய உன்னுடைய மிடுக்குக்கு தங்கள் வலி மாண்டு உன் திருவாசலிலே
பழைய ராஜ்யத்தைக் கொடுத்து
நீ போ என்றாலும் முன்புத்தை எளிவரவை நினைத்து பொறுக்க மாட்டாதே
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமா போலே –
நாங்களும்
உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று–தேகாத்ம அபிமானத்தையும்–ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும்
அந்ய சேஷத்வத்தையும்–ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும்–பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும்
உபாயாந்தர–உபேயாந்தரங்களையும் விட்டு
இவற்றை நீ கொடுத்தாலும்
பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று–உன் திருவாசலிலே வந்து –
போற்றி யாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
நீயே சமஸ்தவித பிராப்யங்களும் பிராபகங்களும் என்று-உன் திருவடிகளை ஸ்துதித்து-
மங்களா சாசனம் பண்ணி வந்து ஆஸ்ரயித்தோம் –
இத்தால் பிரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே ஆஸ்ரிதரானவர்களுக்கு நிர்மமராய்க் கொண்டு
அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –
போற்றி யாம் வந்து புகழ்ந்து
வலி மாண்டு அநந்ய கதித்வம் தோன்ற உன் திரு வாசலிலே படுகாடு கிடந்தது போற்றிப் புகழுமா போலே
உன் பாலே போன்ற சீரிலே பழுத்து ஒழிந்து புகழ் உரைகளை –
ஆச்சார்ய பரம் -குரும் பிரகாசயேத் தீமான் –
வாதம் செய்து வலி மாண்டு அடி பணிந்தவர் எம்பெருமானார் இடத்தில் –
யாதவ பிரகாசர் யஞ்ஞ மூர்த்தி போல்வார்
பட்டர் இடம் தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி -நஞ்சீயர் ஆகி அடி பணிந்தார்
துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் போல்வார் நம்பிள்ளை இடம்
எற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே
எம்பெருமானார் -சிஷ்யர் தேடி -நீ விட்டாலும் நான் உம்மை விடேன் –
ஊற்றம்–பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பெரியாய்–உபகார வஸ்து கௌரவத்தால்–என் அப்பனிலோ -பெரியாய்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்–வாதம் வென்ற ஆசார்யர்
திருநாராயணபுரம் காட்டும் பாசுரம்
எம்பெருமானார் -12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் 700 சன்யாசிகள்–மகன் எதிராஜ சம்பத்குமார்
பெரியாய் -ராமன் கண்ணன் இருவராலும் ஆராதிக்கப் பட்ட–வெளிப்படுத்தி திருமண் தேடும் பொழுது
சுடர் குன்றின் மேல் இட்ட விளக்கு–எதிசைல தீபம்
அடி பணியுமா போலே துலுக்க பெண் —பெரிய பிராட்டியார் தான் சம்ப்ரதாயம்
நவ ஒன்பது புதியது -இரண்டு அர்த்தம் இன்றி ஆர்ஜவம் கோணல் புத்தி இல்லாமல்
சோழ சக்கரவர்த்தி இல்லை -மாறும் பார்ப்போம் -பூ மண்டலம் முழுவதும் ஆளாமல்
முப்பத்து மூவர் ஆளவந்தார் பிரகரணம்
ஏற்ற கலங்கள் -நிறைய ஆசார்யர் பரமான பாசுரம்
இத்துடன் பகவானை எழுப்பும்
அம்பர் ஊடருத்து உம்பர் கோமானே எழுப்பி -சௌலப்யம் சொல்லி
மலர் மார்பா எழுந்திராய் -ராசிக்யம் சொல்லி
கப்பம் தவிர்க்கும் கலியே -பரத்வம் சொல்லி எழுப்புகிறார்கள் மூன்று தடவை –
தேவத்வமும் நிந்தை ஆனவனுக்கு ஒளி வரும் -ஜன்மம் -அவதரித்து ஒளி மிக்கு
எத்திறம் உரலோனோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே மூன்று கண்டம் ஆழ்வார்
பிறந்தவாறும் -நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ –
மகனே அறிவுறாய் என்கிறாள் -இதில் நான்காவது தடவை
அவன் உகக்கும் என்று
ராமன் கிருஷ்ணன் அஹம் பாந்தவோ-
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி -மீதளிப்ப -உக்தி சாதுர்யம்
தகுதியான சிஷ்யர்கள் சத் பாத்ரம் -ஏற்ற கலங்கள்
எதிர் பொங்கி மீது அளிப்ப –
கீதாச்சார்யர் -அளித்தது -மன் மநா பவ –9th அத்யாயம் இறுதி ஸ்லோகம் -பூய ஏவ -ச்ருணு மீண்டும் கேளு –
பரமம் வாச -பரமமான -வாக்கியம் -மாற்றாதே பால் சொரிந்தான் -துக்தம் கீதாம்ருதம் –
முடிவு எடுக்கும் புத்தி அருளி -ததாமி புத்தி யோகம் -முடிவை சொல்லாமல் -சைதன்யம் இருப்பதால் –
முடிவு எடுக்கும் யோக்யதை -அருளி -சாஸ்திரம் -ஆழ்வார் ஆச்சார்யர் உபதேசம் அருளி –
புத்தி வளர்ந்து -அடியேன் என்று சார்ந்து இருக்க வேண்டுமே –
தேஷாம் சதத யுக்தானாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் -அத்தை ஆலம்பனமாக கொண்டு என்னை அடைய–
எதிர் பொங்கி மீது அளித்தவை கீதார்த்த ஸங்க்ரஹம்-ஸ்ரீ கீதா பாஷ்யம் -இத்யாதிகள்
இரண்டு ஜீவாத்மா -நாரதர் -வால்மீகி -ப்ரக்ருஷ்ட வாக்கியம் அப்ரவீத் -ச்ருணு -கோன் வஸ்மி –
பிரமா அனுக்ரஹம் வால்மீகிக்கு சாஷாத்காரம் -முக்காலம் நடப்பதை –
சத கோடி -ஸ்லோகம் ப்ரஹ்ம லோகம் -24000-அர்த்த ஸ்புஷ்டியுடன் சுருக்கி எதிர் பொங்கி மீது அளிக்க
ஸ்ரீ ராம ராமேதி -ஒன்றாக கொடுத்ததும் எதிர் பொங்கி மீது அளித்தான் ருத்ரனும் –
பால் -வெண்ணெய் நெய்-திரட்டு பால் -சாரம் கொடுப்பதே -சரம ஸ்லோகம் -அருளியதால் எதிர் பொங்கி மீது அளிப்பது
நித்ய சத்ருக்ந அநீத-சாரம் -கண்ணி நுண் சிறுத் தாம்பு -மற்றவரை சிரித்து இருப்பாரே –
ராமர் -பொதுவான தர்ம சாஸ்திரம் -பால் போலே சீர் -சாமான்ய -பசுக்கள் –
லஷ்மணன் -சேஷத்வம் -பெரும் பசுக்கள் –
பரதன் -மாற்றாதே பால் சொரியும் பெரும் பசுக்கள் திரு உள்ளம் -பார தந்தர்யம்
கடல் போலே -நீர் கரை போலே அடியேன் -கரைக்கு உட்பட்டு -பாதுகை பெற்று திரும்பி –
எதிர் பொங்கி மீது அளிக்கும் மாற்றாதே பால் சொரியும் -வள்ளல் பெரும் பசு -சத்ருக்கனன் -பாகவத பாரதந்தர்யம் –
ராமனை அன்றி மற்று ஓன்று அறியாத பரதனை இன்றி மற்று ஓன்று அறியாத சத்ருக்நனனே நமக்கு தஞ்சம் –
சாஸ்திரம் -பகவத் கைங்கர்யம் -திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யம் -திருவடி ஸ்தானீயர் திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யம்
இதே போலே பரத்வம் -கூப்பீடு -விபவம்-அந்தர்யாமி -அர்ச்சை -இவையும் கருணையில் எதிர் பொங்கி சேவை
ரிஷிகள் -ஆழ்வார்கள்-மதுரகவி – -இதே ரீதியில் -கோது அருளி –
ஆச்சார்யர் உபதேசம் -சிஷ்ய பரம்பரைகள் ஒருவருக்கு ஒருவர் -எதிர் பொங்கி மீது அளிக்கும் படி
பசுக்கள் -பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் –
உபதேசம் கால் வாசி -கடாக்ஷம் -அவகாசம் இல்லாமையால் -அனுக்தமானவை எல்லாம் ஸ்புரிக்க –
கிரந்த அவகாஹனம் நித்தியமாக செல்ல வேணுமே
அறிவுறாய் -மனஸ் உணர்ந்து -துயில் எழாய்-அடுத்த அவஸ்தை /
செற்றார் -கீழே இங்கு மாற்றார் -மாறி -ஆற்றாதவர்களாகி -ஆசற்றார் மாசற்றார் போலே –
மாற்றாதே பால் சொரியும் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -ஸ்திரமான
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்டாய் கிடாம்பி ஆச்சான் -எம்பெருமானார் – -4-8-2-
ஊற்றம் உடையாய் -திட பிரமாணத்தால் சித்திக்கப்படுபவன்
இல்லை என்பவன் வார்த்தை கொண்டு இருக்கிறவன் என்று
இங்கே இல்லை இப் பொழுது இல்லை இருந்தே தீர வேண்டும்
மலடி பிள்ளை -மலடியும் உண்டு பிள்ளையும் உண்டு சம்பந்தம் தான் இல்லை –
ஒரே பதம் சொல்லி இல்லை சொல்லு –
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவங்கள்
பெரியாய் -ரிணம்-செய்தது எல்லாம் செய்தாலும்
உலகினில் தோற்றமாய் சுடரே –
நின்ற சுடரே -பிரித்து வியாக்யானம்
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லதே பேரேன் என்று –
மாற்றார் -அடி பணியுமா போலே பிரபத்தி பண்ணுகிறார்கள் –
யாதவ பிரகாசர் -எம்பெருமானார் –
அவரே அடி பணியும் படி -வலி தொலைந்து உன் வாசல் கண் வந்து அடி பணியுமா போலே –
பால் சொரியும் திருமலை அருவி போலே
மாற்றாதே தான் சொல்லி மாற்றாமல்
முன்னோர் சொன்ன வழி மாறாமல்
ஏமாற்றாதே –
வள்ளல் உதாரர் -இருப்பது அனைத்தையும் வழங்கி
பெரும் பசுக்கள் –
ஆற்ற படைத்தான் –
மகனே மகான் சுவாமி போலே
அத்யவாசாயம் ஈடுபாடு 87 திரு நஷத்ரம் அன்றும் உபன்யாசம் செய்து அருளி —பெரியாய் –
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் –
ஸ்வாமி சிஷ்ய ஏகாந்தி நாம் த்வாதசபிஸ் சஹஸ்ரை
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா அனைவரும் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
சிஷ்யாதிச்சேத் பராஜ்யம் -விஞ்சி இங்கே செய்யவோ –
இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ -ஆழ்வான்
பால் சொரியும் –
அர்த்த விசேஷங்கள் ஆற்ற படைத்தான் –
அபரிமிதமாக மாற்றார் வலி தொலைந்து –யாதவ பிரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம்-
—————————————————
இப்பாசுரத்தில் நான்கு ஆச்சார்ய-சிஷ்ய (குரு-சீடன்) தலைமுறைகள் சொல்லப்பட்டுள்ளன!
‘ஏற்ற கலங்கள்’ முதல் தலைமுறையையும், ‘வள்ளல் பெரும்பசுக்கள்’ இரண்டாம் தலைமுறையையும்,
‘ஆற்றப்படைத்தான்’ மூன்றாம் தலைமுறையையும், ‘மகனே’ நான்காம் தலைமுறையையும் குறிப்பில் உணர்த்துவதாம்.
ஊற்றமுடையாய் – தன்னிடம் சரணடைந்தவரின் குற்றம் குறைகளை ஆராயாத பெருமாளின் திருக்குணம் உணர்த்தப்படுகிறது
பெரியாய் – தயையும் வலிமையும் ஒரு சேர அமைந்த தயாநிதியும், பராக்கிரமசாலியும் ஆவான் பரமன்.
அடியவரை ரட்சிக்க இவ்விரண்டும் அவசியமில்லையா!
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே – பகவான் இப்பூவுலகில் எடுத்த அவதாரங்களையும், தோற்ற நிலைகளையும் குறிக்கிறது.
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! –
ஊற்றம் உடையாய்! – பர(த்துவ) வாசுதேவனாக, அவனது (உலகம் மற்றும் உயிர்கள்) படைக்கும் தொழிலை போற்றும் உட்குறிப்பாம்.
பெரியாய்! – பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது.
உலகினில் – ஸ்ரீராமன், கிருஷணன் என்று பரமன் எடுத்த பூவுலக (விபவ அவதாரங்களைச் சொல்கிறது.
தோற்றமாய் நின்ற – இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில், பரமன் அர்ச்சாவதார (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்)
நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது.
சுடரே! – பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது!
மாற்றார் வலி தொலைந்து – அடியவர் அகந்தை, உலகப்பற்று, பொறாமை, தீய நட்பு என்று அனைத்தையும் துறந்து
உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியும் – உன் கல்யாண குணங்களால் கவரப்பட்டு,
நீயே (பரமனே) உபாயமும் (வழி) உபேயமும் (முக்தி) என்று உணர்ந்து, வேறு கதியின்றி உன் திருவடிகளில் சரண் புகுந்தோம்
போற்றி யாம் வந்தோம் – பல்லாண்டு பாடுவதை – மங்களாசாசனம் செய்வதைக் குறிப்பதாம்.
இப் பாசுரத்தின்படி, பரமனின் திருவடி நிழலுக்கு வெகு அருகில் கோபியர் வந்து விட்டனர்!
————————-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply