ஸ்ரீ திருப்பாவை சாரம் – உங்கள் புழைக்கடை — —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
அவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமே யாம்படி
ஞான பக்தி விரக்திகளால் பூரணரான பாகவதரை எழுப்புதல் –
எல்லாருக்கும் முன்னே எழுப்ப மறந்து வாய் பேசும் நங்காய்
வாயாலே பேசி கார்யம் செய்யாமல் உறங்கும்

செங்கழு நீர் புழக்கடை தோட்டம் மலர -அனுமானம் கொண்டு சொல்லி
திருக் கோவில் சங்கிடப் போகின்றார் பிரத்யஷம்
வாய் பேசும் ஆப்த வாக்கியம் சப்தம் சாஸ்திரம் –
பிரமாணங்கள் மூன்றையும் காட்டும் பாசுரம் –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் வாய் மொட்டிக்கும்படி–போது விடிந்தது உறங்குவதே இன்னம் -என்ன –
அல்லிக் கமலம் முகம் காட்டும் – தோட்டத்து வாவியுள் –
நீங்கள் வயலிலே போனீர்களோ என்ன –
புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்து என்ன –
அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகோள் -என்ன –
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்–
எங்களுக்கு புகுர ஒண்ணாதே
அசூர்ய அம்பஸ்யமான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் மொட்டித்தன –
வெயில் பட்டன்றிக்கே கால பாகத்தாலே -என்கை –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா பொழில்கள் திரு வல்லிக்கேணி
காலத்தின் பரிபாகத்தால் அலர்ந்தும் மொட்டிதவையும்–அனுமானத்தால் சொல்கிறார்கள்
இவள் எழுந்திராத இன்னாப்பாலே -உங்கள் புழக் கடை என்று வேறிட்டுச் சொல்கிறார்கள்

அஹங்காரம் த்யாஜ்யம்–
பகவத் சம்பத்தால் வரும் அஹங்கார உத்தேச்யம்
மம அஹம் ஏகாஷரம்-மிருத்யு தள்ளும் ஆத்மா நாசம்
நீர் நுமது வேர் முதல் வாய்த்து -நாம் எனது சொல்லாமல்-யானே என் தனதே என்று இருந்தேன் த்யாஜ்யம் இவை
இவர்கள் உணர்ந்தவர்கள் உங்கள் எங்கள் சொல்வது வ்ருத்தம்
பாகவத சம்பந்தம் -அஹங்காரம் அபிமான துங்கன் -செல்வனைப் போல சாத்விக அஹங்காரம்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -மின்னிடை மடவார் பதிகம் அச்சுதச்ய பக்தன் அஹம் –
ஆழ்வார் நான் சொன்னாலும் அடியேன் நாம் அடியேன் சொல்வது நான்
எம்பார் கொண்டாட்டம் இசைந்து -எம்பெருமானார் கடாஷத்தால் வந்த பெருமை
கால கத பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருமே

ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய
மத்யே வர்த்திக்கிற நமஸிலே-
பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

செங்கழு நீர் –ஆம்பல் -என்றது
பரதந்த்ர ஞானம் பிறந்து -ஸ்வ தந்திரம் போக –
புழக்கடை வேதம் -அதர்வண வேதம் –
அஷ்டாக்ஷர மந்த்ரம் -ஓமித்யேகாஷாரம் –
நாராயணா பஞ்சாக்ஷராணி -நாராயண உபநிஷத்தில் வரும் –

அலரப் புகுகிற அளவிலே கழிய அலர்ந்தது என்று சொல்லுகிறிகோள்
வேறு அடையாளம் உண்டோ என்ன –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –
அளற்றுப் பொடியிலே புடைவையைப் புரட்டி ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி
தண்ட பரிஹார்தமாக தபோ வேஷத்தை உடையரான சிவ த்விஜரும் கூட தங்கள் தேவதைகளை
ஆராதிக்கும் காலம் ஆய்த்து-
திருக் கோயில் -என்றது
அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே
சங்கு -என்றது
ஆராதன உபகரணத்துக்கு உப லஷணம் –
குச்சி இட என்றுமாம் –
இத்தால் அசூத்தரும் கூட எழுந்து இருக்கும் காலம் ஆய்த்து என்கை –
சன்யாசிகள் சந்த்யா வந்தனம் பண்ணித் தங்கள் உடைய அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆய்த்து என்றுமாம் –
தம பிரசுர அனுஷ்டானம் பிரமாணமோ -என்ன
தர்மஜ்ஞையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே-
தாமஸ பிரக்ருதிகள் என்பார் எம்பார்-
சத்வ நிஷ்டர் என்பார் திருமலை நம்பி

சக்கரவர்த்தி திருமகன் அந்தபுர காவல்
காஷாய வேத்திர பாணி -கொம்பு கையில் காவல் -அலங்காரம் காஷாயம் அணிந்த வயசான கிழவர்கள் –
வ்ருத்தாம் – கைங்கர்ய த்வரையால் வஸ்த்ரம் பேண அவகாசம் இல்லாமல் –
நீர் காவி ஏறி காஷாயம் வைராக்கியம் விரக்தி – சக்ரவர்த்தியோபாதி பழையவர்
சக்ரவர்த்தி திருமகன் தழுவி குங்குமப் பூ சந்தனம் அலங்காரம் – வெண் பல் போக்ய த்ரவ்யங்களில் விரக்தி
தவா தவா என்பர் தவத்தவர் –
யானே நீ என் உடைமையும் நீயே — கண்ட பேர் இடம் பல்லைக் காட்டாமல் வெண் பல் தவத்தவர்-
குறடு வேறு ஏறோம்-
சததம் கீர்த்தி யந்தாம்-எப்பொழுதும் ஸ்தோத்ரம் நித்ய யுக்தர் – அனவரதம் -விடிவுக்கு அடையாளம் இல்லை

ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்-
தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது–உன் பக்கல் கண்டிலோமீ -என்கிறார்கள் –
வாய் பேசும் –
உக்தி மாத்ரமேயாய் -அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை –
கிருஷ்ணன் உடன் பழகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி
ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

பிரத்யஷமும் பிரமாணம் இல்லை சாஸ்திரம் பிரதிகூலமாக இருந்தால்
வாய் பேசும் –
வாய் மட்டும் சொல்லி
மேலையார் செய்வனகள்
சிஷ்டாசாரம் ஆப்த வாக்கியம் தர்மஞ்ஞச்ய- நடவடிக்கை வேதாஸ் ச கூட அபிரதானம் -ஆபஸ்தம்ப சூத்திரம் –
யச்தய தாசரதி ச்ரேஷ்டா -யதா ததே அவர்கள் போலே செய்ய வேண்டும் –
சொன்னது செயலிலே கண்டிலோம் -அனுஷ்டான பர்யந்தம்
உக்தி மாதரம் ஹிருதயத்தில் நினைவும் செயலும் வேறே வேறே கண்ணன் ஸ்வபாவம் கடைக் கணித்து–
அவளுக்கு பாம்பணையாருக்கும் நாவு இரண்டு மனஸ் ஏகம்- வசஸ் ஏகம் வாய்-செயல் ஒன்றாக

நங்காய் –
பூரணை இறே–எனக்கு உங்களை ஒழியச் செல்லாது என்று சொல்லும்படியும் –
உன் நைர பேஷ்யமும் எல்லாம் கண்டோம் இறே –
சொலவும் செயலும் பேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –

எழுந்திராய் –
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

நாணாதாய்-
சொல்லி வைத்து சொன்னபடி செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் இன்றிக்கே இருந்ததீ –
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -என்கை – பூசணி உடைய சரசரப்பையும் சுணை என்பதால் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு நாணமும் இன்றிக்கே ஒழிவதே இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என் பக்கல் சாபேஷராய் வருவது என்ன –
நாணினார் போல் இறையே செய்யும் -திரு நெடும் தாண்டகம் —
நாண் இத்தனையும் இல்லார் நப்பின்னை காணில் சிரிக்கும் –
பகவானை ஆஸ்ரையித்தவர் வெட்கம் – தலையினோடு ஆசனம் தட்ட வீதி யார ஆடி உலோகர் சிரிக்க
நாண் எனக்கு இல்லை தோழிமீர்காள்

நாவுடையாய் –
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என்-என்ன
உன் பேச்சின் இனிமை கேட்க இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
வாக் மாதுர்யமுடையவரே நீர் அஹ்ருதமாய் சொல்லிலும் பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –
நா வுடையாய்
பாம்பணை யாருக்கும் தனது பாம்பு போலே நாவும் இரண்டு உளவாயிற்று-நீயும் அங்கனே
அன்றிக்கே
உன் பேச்சின் இனிமை கேட்க வந்தோம்
நா வீறுடைமை-
பெருமாள் திருவடியை புகழ்ந்தால் போலே-
ந ரிக் வேத -ந யஜுர் வேத -சொல்லின் செல்வன் விரிஞ்சனோ விடைவலானோ கம்பர் –
மதுரம் வாக்கியம் -திரு நாராயண ஐயங்கார் மதுரம் இனிமை தமிழ் பேசினார்
தேவ பாஷை பேச மாட்டேன் -ராவணன் ஆள் என்று நினைக்கலாம்
வால்மீகியும் தமிழும் -வால்மீகி தமிழ் அறிவார்-
போதரிக் கண்ணினாய்
கடாஷம்
நா வுடையாய் உபதேசம்

நா உடையாய்
மா சாஹசம் ந குரு- பறவை-ஸிம்ஹம் வாயில் உள்ள மான் மாமிசம் உண்டு கொண்டே -நா உடையாய் –
போதரிக் கண்ணினாய் நா உடையாய் -ஞானம் அனுஷ்டானம் -ஸ்தித ப்ரதிஜ்ஜன் –
கீதாச்சார்யர் ஸ்தித ப்ரதிஜ்ஜன் எப்படி இருப்பான் என்று விளக்கி நான்கு ஸ்லோகங்கள் –
நாணாதாய்-
அகார்ய கரணம் கிரீடா -லஜ்ஜை -எழுப்புவேன் சொல்லி தூங்குவதால் நாணாதாய் –
தயா -பேராசை இல்லாமல் -மார்த்தவம் -தெய்வ தன்மை -கீதை –
ஹ்ரீஸ்ஸ-லஷ்மீ ச பத்ந்வ் -பூமி தேவியும் லஷ்மியும் இருவரும் -இரண்டு சகாரம்-ச குடும்ப சமேதராய் -நீளா தேவியும்
வெட்கமே நிரூபகம் பூமா தேவிக்கு
நாவ காரியம் சொல் இல்லாதவர் -4-4-பெரியாழ்வார் -ந அகார்யம்-திருக் கோஷ்ட்டியூர் மக்கள்
அ ஸத்யம் பேசுதல் -மனம் புண்படும்படி பேசுவது -உண்மையாக இருந்தாலும் -சத்யம் பிரியம் –
சத்யம் பூத ஹிதத்துக்காக இருக்க வேண்டுமே –
பிள்ளான் -கொங்கு நாட்டில் -பெருமாள் திரு நாமம் சொல்பவரை -ஆச்சார்யர் நாமம் சொல்லாமல் -இதுவும் நாவகாரியம்
அனந்தாழ்வான் -சரம தசை -பட்டர் -ராமானுஜர் இவர் என்று பிரதி பத்தி அருளிச் செய்ததை –
எங்கள் குடிக்கு அரசே கொண்டாட -பிடித்த திரு நாமம் -அழகிய மணவாளன் -நம்பெருமாள் அரங்கா சொல்லாமல்
பார்யா பத்ரு நாமம் சொல்வதை போலே நாவ காரியம் -அவர் மட்டும் சொல்லலாம் -நமக்கு கூடாது என்பாராம் –
அப்படி எல்லை வகுத்து வைத்து இருப்பார்கள் பூர்வர் –
வடுக நம்பி -அஷ்டாக்ஷரம் நாவ கார்யம் -ஸ்ரீ மதே ராமாநுஜாயா சொல்லாமல் -அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்–நம் பெருமாள் அரங்கா -நாவ கார்யம் -திருவரங்கம் -சொல்ல வேண்டும் –
உகந்து அருளின திவ்ய தேசம் சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம்
திருக்கடித்தானம் – ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் நன்றி உணர்வுடன் இன்றும் சேவை
நாவினால் சுட்ட வடு -யா காவாராயினும் நா காக்க –
நாணாதாய் –
பாற் கடல் -தேவர் குழாம் சூழ அன்றோ -திரு மார்பில் அமர்ந்தாள் -என்று சொல்ல –
பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் வேண்டாமே -புருஷோத்தமன்
சீதை வெட்கப்பட்ட இடம் -திருவடி -தூக்கில் –
அனலா- திரிஜடை -சார்பா மூவரும் கூட இருந்து -சீதா கைங்கர்யம் செய்தவர்கள் –
பாடப்படாதவர்கள் -இந்த மூவரும் –சுமித்திரை – ஊர்மிளை போலே இவர்களும் /
சொப்பனம் கண்டு சொல்ல -பர்த்துர் விஷயீ ஹர்ஷதீ வெட்க்கி முகம் சிவந்ததாம் -வெட்கத்தை திருவடி பார்க்க
32-வயசில் வெட்கம் /பெருமிதம் கலந்த வெட்கம் -லகு தாரா ராமஸ்ய கோஷ்ட்டி / அந்நிலைமை ஏற்பட்டால் நாமே சரணம் –
அதே போலே நீயும் நாணப்பட்டு கண்ணனை எங்களுக்கு தரலாகாதோ –
தண்டகாரண்யம் ரிஷிகளை கண்டு பெருமாள் காவல் சோர்வால் வெட்க்கி –

உங்கள் புழக்கடை -வாவியுள் செங்கழுநீர் -நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் –அனுபவம் -ஸூ சகம்
நாவுடையாய் -செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தா;லே வளர்ந்த திருக் கைகளை உடையவனாய்
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-
திவ்ய ஆயுதங்களை கண்ணபிரான் மறைத்தது உகவாதர்களுக்கே–
நெய்த்தலை சங்கும் நேமியும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே-
பெருமாள் சங்கு சக்கரம் காட்டி அருளினை இடங்கள் நிறைய இல்லை –
கண்ணனோ பிறக்கும் பொழுதே தாய் தந்தைக்கு காட்டி அருளினான் –
சங்கு சக்கரம் -சூர்ய சந்திரன் -நாபி கமலம் அலரும் குவியும் –
சந்த்ர மண்டலம் போல் -சங்கரய்யா -விருப்புற்று கேட்க்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே –

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற
திருக் கண்களையும் உடையவனை பாட-
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம் எழுந்திராய் -என்கிறார்கள் –
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க
கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்
எப்போதும் உண்டு அது பெண்களுக்கு தோற்றும்–
அல்லாதார்க்கு தோற்றாது –இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே
மயக்க வைக்கும் அழகு கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்
பங்கயக் கண்ணன் தன்னை எழுதி கொடுத்து வாங்கப்படும் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி மயக்கி
விடலை தனம் விடவே செய்து குறும்பு காண பார்த்து
ஜிதந்தே
தாமரைக் கண்ணனை விண்ணோர் தோற்று பரவும் தோற்க வைத்து –
உபய விபூதியையும் தோற்பிக்கும் திருக் கண்கள்
சந்திர ஆதித்யன் -திங்களும் ஆதித்யன் போலே அலருவதும் மொட்டிப்பதுவும்
உந்தி தாமாரை -சங்கு சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் ஆங்கு மலரும் குவியும்
மால் உந்தி வாய் கமலத்தின் பூ — பேய் ஆழ்வார்
திருக் கண்களும் அலருவதும் மொட்டுவதும் – நெய்த்தலை நேமியும் கை தலம் வந்து காணீரே
மெச்சூடு சங்கம் இடத்தாம் அப்பூச்சி காட்டி –
பரத்வ சின்னம் காட்டாமல் பெருமாள் போலே இல்லையே கண்ணன்

சங்கொடு சக்கர பங்கயக் கண்ணன் –
வெள்ளச் சுரி -தாமரைக் கண்ணன் -திருவாய்மொழி -7-3-1-
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்கள்
திருமேனிக்கு திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாக இருப்பது போலே
திருக் கண் நோக்கு ஆத்ம குணங்களுக்கு பிரகாசகமாய் -அகவாயில் தண் அளிவு கண் வழியே
தோற்றுமே -பிரதி கூலருக்கு திவ்ய ஆயுதங்களும் திருக் கண்களும் விரோதியாய் தோற்றும்
அநு கூலருக்கு அழகுக்கு உடலாய் தோன்றும் -தோற்பித்த படிக்கு இரண்டுமே சேருமே –
ஜிதம் தே –பண்ண வைக்குமே –
செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வலலானே -கலியன் -7-7-1-என்னக் கடவது இறே-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பி–
எம்பெருமானார் பரமான வியாக்யானம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தத்வமஸி-ஸ்வாமி அர்த்த விசேஷம் கேட்டு யாதவ பிரகாசர்
போல்வார் மூடிக் கொண்டது போலே
செங்கல் பொடிக் கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசநா-யதிராஜ சப்ததி
வெண் பல் -அச்யுத பதாம்புஜ யுக்மருக் மவ்யா மோஹதஸ் ததிராணி த்ருணாய மேன-என்னும்படி
மகா விரஹ சார்வ பௌமர்
தவத்தவர் -மம மம என்னாத தவ தவ -என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் அதீனத்தில் இருந்த கோயில் தங்கள் திருக் கோயில் என்னும்படி
சங்கிடுவான் -திறவு கோல்-ஆழ்வான் மூலமாக திரு கோவிலைப் பெற்ற இதிகாசம்-

வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து -கப்யாஸம் வியாக்யானம் இத்தைக் கொண்டே ராமானுஜர்
கபி -ஸூர்யன் -நாளம் -இரண்டும் தண்ணீர் பருகுமே –
வாய் நெகிழும் -மலரும் –
இளநீர் நேராகவே கொண்டு திருமஞ்சனம்
பாத்திரத்தில் விட்டு பண்ணினால் சுத்தி போகுமே -கள் போலே ஆகுமே –
ஆகவே தாமரைத் தண்டு கொண்டே உறிஞ்சி குடிப்பார்களாம் ஆஸ்திகர்

தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி பரிசுத்தம் ஆக்குமே
திருப் புன்னை மரத்தில் சந்தை சொல்வார்களாம் -காலை -இத்தாலே வளர்ந்ததாம்
தர்சயம் தந்த பந்தி -அரங்கன் கையை இப்படி மறித்தாலும் அவன் குறடு தவிர வேறு எங்கும் ஏற மாட்டோம் –
வெண் பல் தவத்தர் –
த்ருணீக்ருத-ராமானுஜ பதாம் புஜ சமாஸ்ரையான சாதினாக –
சதுரா சதுரஷரீ -ராமானுஜ திவாகரா –
வெண் பல் -நின் சாயை அழிவு கண்டாய் -பெரியாழ்வார் –
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –
இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை உன் சாயிக்கு அழிவு கண்டாய்
உனக்கு அவத்யம் -ராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணி ஜீவிக்கும் காட்டில் ராஜாவுக்கே அவத்யம் –
தங்கள் திருக் கோயில்
தங்கள் இல்
திரு இல்
கோ இல்
திருமந்த்ரார்தம் -ஸ்வரூபம் பிரகாசித்து -தங்கள் -ஆத்மாவாலே பேறு
த்வயத்தில் பெரிய பிராட்டியால் பேறு -திரு இல்
சரம ஸ்லோகம் ஈஸ்வரனால் பேறு என்கிறது –
முமுஷூ வுக்கு அறிய வேண்டும் ரகஸ்யங்கள் இவை –
சங்கிடுவான் -அர்த்தம் உள்ள ரத்னம் அருள –
ஞானக் கை தா காலம் களிவு செய்யேல்
எங்களை முன்னம் சம்சாரிகளை எழுப்புவான் வாய் பேசும்
பேசின வார்த்தை பேசின ராமன் இரண்டு இடத்திலும் அன்வயிக்கும் –
உத்தரிப்பிக்க வந்து இருக்கிறோம் –
அபய பிரதானம் கேட்ட பிள்ளை உறங்கா வல்லி தாசர் அழ –
உம்மை நாம் கூட்டியே போவோம்
உனக்கு நான் உண்டு
எனக்கு பெரிய நம்பி உண்டு
ஆளவந்தார் உண்டு தொடர் சங்கிலி உண்டே –
அவதரிக்கப் போகிறார்கள் தத்வ தர்சனிகள் கீதை –
பேசப்படுபவர்கள் ஆசார்யர்கள்
சிஷ்யாசார்யா க்ரமம் குரு பரம்பரை அவனே கொடுத்து அருளி
உபேதசந்தி ஞானம் –
சங்கு சக்கரம் -உள்ளவரை உள்ள விட -கண்ணனே சொல்லி அருளி –
ந முத்தரை ந பிரவேஷ்டத்வய –
சங்கு போலே அவன் திருவடிகளில் இருந்து
சக்கரம் சுழன்று தீர்தகரராய் திரீந்து
பங்கய கண் -ஆசார்ய கடாஷமே உத்தாராகம் –

திருப்பாண் ஆழ்வார்
புழக்கடை தோட்டம் காலை எழுந்து பாட
லோக சாரங்க மகா முனி -செங்கல் பொடி -திருக் கோயில் சங்கு இடுவான் போனாரே
நங்காய் -பூர்த்தி நைச்யம் தான் பூர்த்தி -ஜன்ம சித்தம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
நாணாதாய்
நாண் கௌரவம் நாடுவோம் நாமே தேசிகன்
அஹங்காரம் படாமல் அடியார்க்கு ஆட்படுத்திய விமலன்
தோள் மேலே உட்கார லஜ்ஜை இன்றி
நா வுடையாய் சொல்ல வந்த விஷயம் -சுருக்கமாக
காண்பனவும் -கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பல மறையின் பொருள் -நாண் பெரியோம் அல்லோம் நன்றும் தீதும் உரைக்க உளர் என்று
நாடுதுமே விநயத்துடன் இருப்பவள் நாணாதாய்
நாவுடையாய் –
நா அசைந்தால் நாடு அசையும்-
நன்றும் தீதும் உரைக்க உளர் என்று நாடுதுமே -தேசிகன் -முனிவாகன போகம் –

பிரணவம் சகாரம் பாதுகை
முன்னம் எழுப்புவான் அடியார்க்கு ஆட்படுத்த விமலன்
ஜன்ம சித்தம்
திருத் துழாய் திரு முடியில் இருந்தால் சேஷத்வம் குறையுமா
ஏழு விசேஷணம் திருக் கண்ணுக்கு சொல்லி
கரிய வாகி -நீண்ட அப்பெரிய அ -சுட்டு பேதைமை செய்தன-

நாவுடையாய் –என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே –

ஸ்ரீ மன் நாத முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நங்காய்-நாணாதாய் –நாவுடையாய் -ஆச்சார்ய ஸார்வ பவ்மருக்கு விளிச் சொற்கள்
நாண் -லஜ்ஜைக்கும் அஹங்காரத்துக்கும் -உப லக்ஷணத்தால் மமகாரத்துக்கும்
வாசா தர்மம் ஆப்நுஹி / சா ஜிஹ்வா ஸ்யாத் யயா சர்வே ஜீவந்தி பிராணிநோ புவி
ச ஜிஹ்வா யத்ர ராஜந்தே வித்யா ஹ்ருதயாச் சதுர்தசி
திரு நா வீறுடையார்கள் அன்றோ நம் ஆச்சார்யர்கள் –

————

ஸ்ரீ புழைக்கடை” என்பது அனுமான பிரமாணம்
“தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்” என்பது பிரத்யட்ச பிரமாணம்
“எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்!” என்ற ஆப்த வாக்கியம் (சப்தம்) சாத்திரப் பிரமாணமாம்.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து – உலகப் பற்றுகளில் உழன்று கொண்டிருக்கும்
ஒருவனுக்கு ஞானம் துளிர்க்கத் தொடங்குவது உள்ளர்த்தமாம்

ஆம்பல்வாய் கூம்பினகாண் – காமம், குரோதம் போன்ற அஞ்ஞானம் சார் உணர்வுகள் விலகின

செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் –
மிக்க ஞானமுடைய ஆச்சார்யனின் சம்பந்தம் ஏற்படப் போவதை குறிப்பில் உணர்துவதாம்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்! எழுந்திராய்! – நாங்கள் சம்சார பந்தம் என்ற
நித்திரையிலிருந்து வெளிவர உத்தம் அதிகாரியான நீயே அருள வேண்டும்!

நாணாதாய் – நாணம் என்பது தன்னடகத்தை மட்டும் குறிப்பதாகாது, அது அகங்காரத்தையும் குறிப்பதாம்.
அதனால், அகங்கார-மமகாரங்கள் அற்றவள் அப்பெண் என்பதால், “நாணாதாய்” என்ற பதம் அவளுக்கு பொருத்தமே!

நாவுடையாய் – சகல சாத்திரங்களையும், வித்தையையும் பேசும் (நல்வாக்கு அருளும் ஹனுமன், உடையவர் போன்ற)
சான்றோர் அனைவரும் நாவுடையவரே! அதனால், இதுவும் உறங்கும் பெண்ணின் சிறப்பையே சொல்கிறதாக கூறுவார்.

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய் – சங்கும் சக்கரமும் பரமனது
பரத்துவத்தை உணர்த்துவதாம். பெருமானை உபாசனை செய்யும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டுவது என்பது உள்ளுரை.

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading