ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –
———————————–
த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –
————————————–
இவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –
சூரணை-217–
ஸ்வசோபி மஹீ பால
பகவத் ப்ரேமம் சம்பந்தம் அற்ற -உத்க்ருஷ்ட உத்தமன் -விட சம்பந்தம் உள்ள நிக்ருஷ்ட அதமன் என்று பிரமிக்கும் –நாய் மாம்சம் உண்டவனாக இருந்தாலும் விஷ்ணு பக்தி இருந்தவனாக இருந்தாலும் பக்தி இல்லாத -த்விஜ -ப்ராஹ்மணனை விட உயர்ந்தவன் –
மேலே ஆஸ்ரம யதி பற்றி – வர்ணாஸ்ரம கேவல உத்க்ருஷ்ட பிரமம் போக வேண்டுமே /யதியாகவே இருந்தாலும் -ச காரம் – அபி -உம்மைத் தொகை
விஷ்ணு பக்தி உக்தன் -என்றது அநந்யார்ஹத்வ சேஷத்வமும் ஒன்றே -சினேக பூர்வம் அநு சந்தானம்-ஞானம் வளர்ந்தே பக்தி ஆகுமே -அநு சப்தம் இருப்பதால் -பிரதானம் முன் அப்பிரதானம் பின் வருமே -தாழ்ச்சியை நினைத்து சினேகா பூர்வம் அநு த்யானம் -பஜ கீர்த்தனம் பஜ சேவாயாம் -கைங்கர்யத்தைக் காட்டுமே -ச காரம் அபி சப்தம் -உத்க்ருஷ அபகிருஷ நிர்ணயம் இவற்றால் இல்லையே -தாழ்ந்தவனாக இருந்தானே ஆகிலும் –இருப்பவனாக என்று -சொல்ல வில்லை –
பூர்வ வ்ருத்தம் பற்றி தானே இது -பெருமாள் திரு உள்ளத்தில் பூர்வ வ்ருத்த நினைவே இருக்காதே -மறப்பானோ சர்வஞ்ஞன் –ஸத்யஸங்கல்பன் அன்றோ –
கிருபாதீன கார்யம் தான் இதுவும் -அப்ரீதி தானே பாபம் -நினைவு இருக்க பாபம் போகாதே நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னடையே போகும் என்றானே –
போக்க நினைவும் போக்க முயற்சியும் போன நிலைமையும் வேறே வேறே இல்லை –
உத்க்ருஷ்ட வர்ணம் உத்தம ஆஸ்ரமி -யதி மூன்று வர்ணத்திலும் வழக்கம் இல்லை -ப்ராஹ்மண யதியையே குறிக்கும் -சந்நியாசி -அனைத்தையும் விட்ட த்ரிவித தியாகம் -ஸ்வ பசன் -நாய் மாமிசம் உண்ணுபவன் -பகவத் சம்பந்தமே உத்கர்ஷ ஹேது –விஷ்ணு பக்தியே பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் -கைங்கர்யம் -பஜனம்- சேவை – அதுவே பக்தி என்றதாயிற்று –-உத்தம ஆஸ்ரமம் ப்ராஹ்மணனுக்கே ஆகும் ப்ராஹ்மண ஜென்மத்திலும் ஏத்தி -உயர்ந்ததில் உயர்ந்தவனை காட்டிலும் என்று காட்ட –சரக்கு அற்று -பசை அறுத்து -ப்ராஹ்மத்வம் யதித்வம் இவைகளைப் போக்கி -சினேக பூர்வ அநு தியானமே –பஜ தாது சேவாயாம் -விஷ்ணு பக்தன் —சாத்தியம் சாதனம் -சம்பந்தம் -நாய் மாமிசம் உண்ணுபவனாக இருந்தானாகிலும் -இது ஹேதுவா விஷ்ணு பக்திக்கு –கிட்டே கொண்டு வருமே -நைச்யன் நீசன் இதை விட வேறே வழி இல்லை போக்கற்ற புத்தி வரும் -கர்ம ஞான சஹ ஹ்ருத கீதையில் சொன்ன பக்தி இல்லையே – நிர்ஹேதுகமாக பகவத் கிருபையால் -நீசன் என்ற எண்ணத்தால் வந்த பக்தி அன்றோ-கறவைகள் பின் சென்ற ஆய்க்குலம் அறிவு ஒன்றுமே இல்லாத –ஒன்றுமே இல்லா விடிலும் -உன் தன்னை புண்ணியம் யாம் யுடையோம் -எல்லாம் உள்ளதே –பள்ள மடையார் கீழே சொன்ன பக்ஷம் இல்லை – இவர் வந்து பிறந்த பின்பு தானே உயர்வு -அதனால் பகவத் சம்பந்தம் பெற்றார்கள் அன்றோ –
பிறவி உயர்வுக்கு காரணம் இல்லையே – விஷ்ணு பக்தனுக்கு உபயோகி நாய் மாமிசம் உண்ணுவது -யதி ப்ராஹ்மணன் அஹங்காரம் வர நிறைய வாய்ப்பு உண்டே--சேஷத்வ விரோதி இல்லை யாகிலும் -ததீய சேஷத்வ பர்யந்தம் கைங்கர்யம் பண்ண விரோதி ஆகலாம் – -விஷ்ணு பக்தன் ஆவதற்கு தடங்கலாக இருக்கும் -பட்டர் கைங்கர்யத்துக்கு இழவுக்கு உறுப்பானால் திரி தண்டத்தை உடைத்து வெள்ளை வஸ்திரம் கொள்வேன் என்றாரே –
எக்குற்றவாளர் -இத்யாதி –-மேவும் நல்லோர் -முன்பே எப்படி இருந்தாலும் -அந்த தாழ்வே ஈர்க்கும் -பிடிக்குமோ என்னில்-தீய ஒழுக்கம் பிடித்தால் தப்பு வரும் -நினைவே கூடாதே பூர்வ வ்ருத்தம் பற்றி -அத்தை எனக்கு பிடிக்கும் என்று பறை வேறே சாற்றுவோம் –
ப்ராஹ்மணராகவோ உயர்ந்தவனான் -பேற்றுக்கு இழவுக்கு அவை காரணம் இல்லை –ராமானுஜர் சம்பந்தத்தால் காரேய் கருணை -திருமேனி அழகால்- இல்லை எனக்கு எதிர் என்ன பண்ணுமே -உடையவர் சம்பந்தமே மோக்ஷம் -குற்றம் பிறப்பு இயல்வு -ஜென்ம விருத்தம் ஞானம் ஹேயம் என்ற நினைவு வந்த பின்பு -நிற்கிற உருகும் நிலையே நம்மை ஆள்கொள்ளும் என்றவாறு -அஹங்கார ஹேதுதயா தாழ்ந்ததாக நினைத்து பயப்பட அதுவே உத்தேச்யம் என்றவாறு-
மிஸ்ர ஸம்ப்ரதாயர்–ரஹஸ்ய த்ரய பாஹ்யர்களும் -பள்ள மடையார்–ரஹஸ்ய த்ரய குத்ருஷ்டிகளும் – மூலத்துக்கும் வியாக்யானத்துக்கும் தங்கள் மதப்படி அர்த்தம் சொல்லி- -இரண்டு பக்ஷமும் -நிரசித்து விலக்ஷண ஞான ஜென்ம சித்தாந்தம் –
சாமான்ய சப்த பிரயோகம் –உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட-மற்றையவன் – ப்ராஹ்மணர் என்றோ சூத்ரர் என்றோ சொல்லாமல் -ஒவ் ஒருவருக்கும் ஒவ் ஒன்றுமே உத்கர்ஷமாகவும் அபகரக்ஷகமாகவும் உள்ளதே –
பள்ளமடையான் பக்ஷம் படி நாய் மாம்சம் உண்பவனும் உத்க்ருஷ்டம் -என்பான் -குலங்களாய நாலில்-ஆபீஜாதியாதிகள் –
அஹங்கரித்து நசிக்கும்-நால்வர் -கும்பி நரகர் ஏத்துவரேலும்-மணி வண்ணனுக்கு ஆளானால் ஆழ்வார் திருவடி தலை மேல் கொள்வார் –
வேத தத் அங்க உபாகங்களிலே ஆபாத ப்ரதீதியாலே மேலோட்டமாக ப்ராஹ்மணாதிகள் உத்க்ருஷ்டம் போலே திராவிட அருளிச் செயல்களிலும் ஆபாத ப்ரதீதி இவன் பக்ஷம் உத்க்ருஷ்டம் -இருவருக்கும் பொது-தேக சம்பந்தம் உபாதியால் –
நிரபேஷ சித்த உபாயம் -பர கத ஸ்வீகாரமோ ஆச்சார்ய அபிமானம் இத்யாதி ஸ்ரீ பாஷ்யத்திலே இல்லை -கர்ம ஞான பக்தி இத்யாதிகளை தானே சொல்லிற்று
நாயமாத்மா சுருதி -சேதன க்ருதி-ப்ரீதி ரூபாபன்ன பக்தி ஹேதுக பகவத் ஸ்வீ காரம் –அனவரத கால ஷேபம் செய்தே இத்தை உணரலாம்
பிரபத்தி சர்வாதிகாரம் -ஸக்ருத் -பல காலம் நினைக்கில் பேறு நழுவும் – பக்தி துல்ய சாதானாந்தரம் பிரபத்தி – அத்யந்த அபிமதமான ரஹஸ்ய த்ரயம் பிரகிரியை –
அவதார ரஹஸ்ய ஞானத்துடன் பக்தி செய்தால் தேகாவசனத்தாலே மோக்ஷம் -உபாயாந்தரமாக இத்தையும் முமுஷுப்படியில் தேச வாச த்வய சங்கீர்த்தநாத்திகள் -மோக்ஷம் போகலாம் பிரசம்ஹா பாவம் உண்டாகலாம் -கர்மாதீனமான சரீரம் எல்லாம் பய ஜனகம் தானே என்றவாறு –
தூண்டில் போலே -இந்த லகு உபாயங்களை காட்டி நீக்குதியோ -அவற்றில் இழிந்த நித்ய சம்சாரியான நான் அன்றோ -முன்பு நின்ற நிலையம் கெடுமே –
நிரபேஷ உபாய பூதன் ஒருவனே சரண்யன் ஆவான் –
காலேஷு –விலக்ஷண காலம் தேசம் – பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -சோகமும் அச்சமும் சரீர காரணம் –
உபாயாந்தர சம்பந்தம் மஹா பயம் -விஷயாந்தரத்தால் வந்த பயத்துக்கு கிருபையை பிரார்த்திக்கலாம் -அத்தையும் நழுவ விட்டானே –
அச்சுதன்-சர்வ உபாய ஸூன்யராய் இருப்பாரையும் நழுவ விடாதவன் -துவாரகா நிலைய அச்சுத ரக்ஷமாம் -அவள் கை விட்டாள் -நீர் கை விட வில்லையே
சேஷியுடைய போகத்தை அழிக்கக் கூடாதே -ஞானத்தால் வந்ததால் -திருமந்திர யாதாம்ய அர்த்தம் அறிந்த ஆழ்வார் நிஷ்டை –பிறப்பால் அல்ல —
பாகவதர் இடம் கைங்கர்யம் கொள்ள மேன்மை வேணும் -கைங்கர்யம் செய்ய தாழ்ச்சி உணர வேணும் – என்னை வணங்கினார் -அனுவர்த்தனத்துக்கு – மேன்மையால் இசைவானாகில் ஸ்வரூப நாசகமாகுமே – அத்யந்த பாரதந்தர்யம் ரூப நைச்ய அனுசந்தானத்தால் இசைந்து இருப்பதே — கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள உத்கர்ஷம் வேண்டாம் –நீசன் இருந்தாலும் அவருக்கு பரதந்த்ரன் அவர் சொல்வதை கேட்க வேண்டுமே
ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் -சேர்க்கும் பொழுது -தம் ஆச்சார்யர் உடைய சிஷ்யன் தாமும் இந்த சிஷ்யனும் என்ற எண்ணம் வேன்டும் – அத்யந்த பரதந்த்ரன் என்ற எண்ணம் வேணும் – உத்தவர் சுகர் -நைச்யம் ஸ்தாவர பாகவதர்கள் இடம் –
ஆண்டாள் பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து நைச்யம் இயற்க்கை -சரீரம் பார்க்காமல் ஆத்மாவைப் பார்த்து அன்றோ –
நைச்யம் ஜென்ம சித்தம் -ஸ்வரூப பிராப்தம் – ஸ்தாவர ஜங்கம பாகவதர்களைப் பார்த்தால் நான்காம் வர்ணத்தவர் தங்களை நீசராக நினைக்க மாட்டார்களே- திருமந்திர யாதாம்ய ஞானம் அறிந்தவன் தானே இவ்வாறு நடப்பான் -திருமந்த்ரார்த்த ஸ்ரவண ஜன்ய ஞானம் உள்ளவர்களுக்கே பொருந்தும் – சர்வாதிகார உபாயாந்தர பயம் -தேச வாஸம்-அவதார ரஹஸ்ய ஞானம் – இத்யாதி –
தேகத்தால் உயர்வு சொன்னால் வரும் குற்றங்கள் -1-பாகவத ஜென்மம் கண்டு தாழ்வாக எண்ண வைக்கும் -2-ஸஹ காரி ஜாதி என்ற குற்றம் வரும்-பகவத் அனுக்ரஹத்துக்கு நிர்ஹேதுகத்வத்துக்கு கொத்தை வருமே-3–துர் ஜாதி தோஷ சஹத்வம் பெருமை பக்திக்கு -4-சாத்யாந்தர சாதனாந்தர அந்வய பயம் 5–தேக உபாதி கொண்டு ப்ராஹ்மண பாகவதர் -ஜென்ம நிரூபணம் அபசாரம் ஆகுமே- 6–ஹே ப்ராஹ்மணரே என்பதும் ஹே சூத்ரன் என்பதும் குற்றமே-அர்ச்சா த்ரவ்யம் உபாதானம் சொல்வது போலே -பாகவதர்களை ஜென்ம நிரூபணம் செய்வதும் —7–என்னை விட எல்லா பாகவதரும் உயர்ந்தவர்கள் -அவர்களுக்கும் சிலர் அவர்கள் அதிகாரம் அடியாக உயர்ந்தார் என்று சொன்னால் குற்றமோ என்னில் -ஆச்சார்யர் சாம்யத்தில் இவர்களை வைக்க வேண்டி இருக்க -இது மேலே 225 226 சூரணைகளில் வரும் -இப்படி சிலரைக் குறைய நினைப்பதும் குற்றமே –8–நிக்ருஷ்ட ஜென்ம பாகவதர்களை ஆச்சார்யராக நினைக்கச் சொல்லிற்றோ என்னில் –சகலரையும்-சம்சாரிகளிலும் தன்னிலும் -ஈஸ்வரனையும் விட உயர்ந்தவர் —ஆச்சார்யருக்கு சமம் என்றும் கொள்ள வேன்டும் -என்பதே விவரணம்- பிறரைக் காட்டிலும் குறைந்தவர் என்று நினைப்பதும் அபசாரம்-
மீமாம்ச சாஸ்திரம் ஸ்ரீ வசன பூஷணம் -உயர்த்தி சொல்லத் தான் வந்தேன் -அவதி காட்ட தாழ்ச்சி என்பான் என்னில் -ஈஸ்வரன் நீ சம்சாரி இவர்களை விட சொல்லிக் கொள்ளலாமே -எதுக்கு இன்னும் ஒரு பாகவதரைச் சொல்ல வேன்டும் தன்னைத் தாழ விட்டு வந்து நம்மை திருத்த -கண்ணுற நிற்கிலும் -கணகில்லா -ஆச்சார்யர் உயர்ந்தவர் —மிருத சிலா மயமாக இருந்தாலும் -இவ்வளவு தாழ நின்றவராக இருந்தாலும் -என்று காட்டவே -இந்த வாக்கியம் உபாதானம் சொல்ல வந்தது இல்லை -பாகவதர் ஏற்றம் சொல்லவே வந்தது இந்த உபாதாந சிந்தநை போல் இதுவும் குறையில்லை என்னில்-தாழ்ச்சி சொல்ல தன்மையும் சம்சாரிகளையும் ஈஸ்வரனையே சொல்லலாம் அன்றோ -வேறு ஒரு பாகவதரைச் சொல்வதே குற்றமாகும் –வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசிக்கும் ஆச்சார்யர் ஸ்ரேஷ்டம் இருப்பதில் தாழ வந்த பெருமாள் நமக்காக -வந்தவர் -என்று காட்டவே – ம்ருத்மயம்
தேஹாத்ம அபிமானிகள் ரிஷிகள் பர்வத பரமாணு -படிக்கட்டு ஏற்றி ஆண்டாள் ஏற்றம் சொல்ல வந்தது –இப்படி உயர்ந்தவர் காட்டி உள்ளார்கள் பூர்வர்– அவரைச் சிரித்து இருப்பார் ஒருவர் -என்று ஒப்பிட்டமை உண்டே – இருந்தாலும் இவற்றை பாகவத அபசாரம் என்பார் இல்லையே –ஞான தாரதம்யத்தால் சொல்ல வந்தவை -ஜென்ம நிரூபணத்தால் இல்லை – கீழே ஞான உத்கர்ஷம் அபகர்ஷம் சொல்ல வில்லை –
பெரியாழ்வார் ஆண்டாளை விட உத்க்ருஷ்ட ஞானவான் என்பார் இல்லையே – உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு உண்டோ ஒப்பு அனைவருக்கும் சொல்லி – எதனால் சொன்னீர் –
பகவத் அங்கீ காரத்தால் வந்த தாரதம்யமே–அவன் அபிமதத்துக்கு காரணம் சொல்ல முடியாதே -நிவாரகர் இல்லாத ஸ்வா தந்திரம் கொண்டவன் -1-நிர்ஹேதுக கிருபையால் புருஷோத்தமத்வத்தில் ஆழங்கால் பட்டு மஹிஷிகளாகவும் – 2-குணங்களால் ஆழங்கால் பட்டு அற்று தீரும் படி யாவதாத்மா பாவியாக கைங்கர்யம் செய்யவும் -3-அஸ்தானே பய சங்கிகளாக பண்ணி மங்களா சாசனம் – 4-ஆஸ்ரித பரதந்த்ரன் -குணம் காட்டி சரம பர்வ நிஷ்டராக்கி-யாவதாத்மா பாவியாக அடியார்க்கு ஆட்படுத்தும் -இப்படி நான்கு வகைகள் உண்டே –திவ்ய மஹிஷிகள் – மற்ற ஆழ்வார்கள் – பெரியாழ்வார் – மதுரகவி ஆழ்வார் வடுக நம்பி போன்றோர் – இப்படி நான்கு வகைகள்
தாரதம்ய நிரூபணம் –ஆஸ்ரயத்தில் உள்ள உயர்வு தாழ்வு காரணம் இல்லையே -பகவத் விஷயீ காரம் வாசியால் தானே -உயர்வு தாழ்வு என்பதே இல்லையே –
ஈஸ்வர குண ரூபமாய் இருக்குமே இவை –தேக உபாதி மூலம் சொன்னால் ஆஸ்ரய ஏற்றத் தாழ்வு உண்டாகும் -அபசாரம் ஆகுமே –விலக்ஷண பாகவதர் உயர்ந்தவர் -உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட சப்தம் நீரே சொல்கிறீர் என்னில் –விலக்ஷண பாகவதர் உயர்ந்தவர் -அவிலக்ஷணர் தாழ்ந்தவர் -அவிலக்ஷண பாகவதர் என்று சொல்ல வில்லையே – விலக்ஷணர் விஷயத்தில் பேசும் உயர்வு தாழ்வு தானே அபசாரம் -நான் சொன்ன உயர்வு தாழ்வு அவிலக்ஷணர் என்பான் பூர்வ பக்ஷி இதுக்கும் –
அவிலக்ஷணருக்கு ஜாதி போகாதே — விலக்ஷண பாகவதருக்கு ஜாதி போகுமே -பிரமாணம் இதுக்கு என் என்னில் -நீ தான் -இவ்வளவு சொல்லியும் உம் கண்ணில் இருந்து ஜாதி விஷயம் போகவில்லையே -உம் கண் பார்வையே காட்டிக் கொடுக்கும்
ப்ரத்யக்ஷ சித்தம் -இது -இது இல்லா விடில் தாரதம்யம் சொல்ல மாட்டாய் –பகவத் சம்பந்தமே பிரயோஜகம் -உன் கண்ணில் பட்டதாலேயே -210-சூரணை பிறந்தது –
தனியனில் கோத்ராதிகள் வம்சம் சொல்லுவான் என் என்னில் என்பான் பூர்வ பக்ஷி
சுகர் -வயம் விஷ்ணு தாச யூயம் ப்ராஹ்மண வர்ணர்-என்பார் – ந ப்ராஹ்மண ந சூத்ர ந ஸ்திரீ நர ஹரி தாச தாச தாச பூதர் -என்று சொல்கையாலே-பிருகு வம்சம் திரு மழிசை ஆழ்வார் -கிருஷ்ணாநாம் -கறுப்பு நெல் -வாயைத் திறவாமல் -வேதம் பெரும் புலியூர் அடிகள் -குலங்களாய ஈரிரண்டில் பிறந்திலேன் –த்ரரை வரண அதிகார வேதம் கற்க வில்லை -வழக்கம் அபிவாதம் சொல்லும் பொழுது அடியேன் ராமானுஜ தாசன் என்றே சொல்லிக் கொள்ள வேன்டும் –லோக ஸங்க்ரஹ அர்த்தம்–பகவத் சம்பந்தம் வளர்க்க -மர்யாதா பாலான அர்த்தம் —சிஷ்யர்களுக்கு பரம போக்யம் -என்பதால் தனியன் கோத்ரம் வம்சம் – ஆச்சார்யர் ஆழ்வார் பூர்வ விருத்தங்கள் எல்லாம் உத்தேச்யம் – விப்ர நாராயணன் பற்றியும் உண்டே-வர்ணாஸ்ரம தர்மம் பண்ணிக் காட்ட வேண்டுமே லோகத்துக்கு –பகவத் ஏக நிரூபணம் தானே பாகவதர் -இவர்களே விலக்ஷணர் –
பகவத் பக்தி -சர்வ விஷய உத்கர்ஷத்துக்கு ஸூவ ஆஸ்ரயத்துக்கு கொடுக்கும் -படிப்படியாக -இரண்டு அவஸ்தைகள் -பூர்வ உத்தர அவஸ்தைகள்-பூர்வம் ஞான அவஸ்தை – உத்தர ப்ரேம அவஸ்தைகள் -சம்பந்த உபாய பலன்களுக்கு –-தோழி தாய் மகள் – பக்திஸ் ச ஞான விசேஷ– தச வித நிலைகளை உண்டாக்கும் பகவத் பக்தி ப்ரேமம் -விவித உத்கர்ஷம் 2 அவஸ்தைகளில் -பூர்வ பூர்வ அபேக்ஷயா உத்தர உத்தர ஸ்ரேஷ்டம்
1- அத்வேஷம் –வெறுக்காமல் –ஹரி லோக நியமனம் லோக பாவனம்- ஸ்ரீ வைஷ்ணவர்களைத் த்வேஷிக்காமல் கிருஷி பலித்தது என்ற நினைவால் வெறுக்காமல்
2-ஆனுகூலஸ்ய — அநு வர்த்தனங்களுக்கு -பகவத் பாகவத விஷயங்களில் அனுவர்த்தங்களுக்கு அனுகூலமாக
3–திவ்ய நாம தாரி -பெயராக வைத்து ப்ரீதி விஷய அனுகூல்ய ஞானம் – விரலை வெட்டி ஏகலைவன் – நெஞ்சில் பச்சை குத்தி –
4—சக்ராங்கிதம் -பொறி ஒற்றிக் கொண்டு -வைஷ்ண ரூபம் துளசி மலை தரித்து -தேவதாந்த்ர பஜனம் இல்லாமை
5—மந்த்ர பாடித்வம் -ரஹஸ்ய த்ரயம் -த்வயம் உச்சாரணம் – சாதன அபேக்ஷை பிறந்து ஸூகர சாதனம் இழிந்து
6–வைஷ்ணவத்வம் -பக்தி உபாயம் -சாதனாந்தர நிஷ்டர்கள் -புருஷார்த்தங்களை விட்டு -அரதி -விரக்தனாய் அவனைப் பெற -தேக பந்துக்களை விடாமல்
7-ஸ்ரீ வைஷ்ணவத்வம்-தேக பந்துக்களை விட்டு – ச வாசனமாக விட்டு -விஷயாந்தர பரர்களை விட்டு -ஆத்ம பந்துக்கள் உத்தேச்யம் -பகவத் விஷய ஞானத்தால் விளைந்ததாய் இருக்க வேன்டும்
8–பிரபன்னத்வம் ஆவது –பக்திக்கு அங்கமாக -அங்க பிரபன்னர்-இவரும் சாதனாந்தர நிஷ்டர் -ஸூ தேக விருப்பத்தையும் விட்டு சாதன பக்தன் -பக்தி ஆரம்ப விரோதி போக்க பிராயச்சித்த ஸ்தானத்தில் பிரபத்தி —
9—ஏகாந்தி –கிருஷ்ணனே ஏக சாதனம் -சாதனாந்தரங்களை ச வாசனமாக விட்டு -தான் உபாயமாக பகவானைப் பற்றி இருக்கை-தூ மணி மாடம் கோபி -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
10–பரமை காந்தி -கிருஷியால் -அவனே உபாயம் -ஸூவ கத ஸ்வீகார நிஷ்டர் கீழே பர கத நிஷ்டர் இவர் -நீரே உபாயம் உபேயம் –தன்னையும் இல்லை என்று இருப்பவர் பரமை காந்தி-நம்மை நம் வசத்திலே விட வேண்டாம் – தன் திருவடிக்குக் கீழே வைத்து கைங்கர்யம் அருளி சித்த உபாய வரணத்தையும் விட்டு -காம்பற தலை சிறைத்து –
நோற்று ஸ்வர்க்கம் கோபி இது–யாருக்கு ப்ரஹ்மத்தால் ஆனந்தம் ஊட்டப் பட்டனோ – –
அதுவும் அவனது இன்னருள் –யானும் தானாய் ஒழிந்தானே -அவன் பண்ணும் ஸ்வீ காரம்
கீழே இவன் பண்ணும் உபாய வரணம் – ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் -தூது -திரு வண் வண்டூர் -பிராப்தியை அறிவிக்கத் தானே ஓடி வருவானே –
11-பக்தத்வம்–ப்ரேம அவஸ்தா கார்யங்கள் மேலே -கீழே பத்தும் ஞான அவஸ்தா கார்யங்கள் –வேறே யாரையும் அண்டாமல் என் பக்தர்கள் இடம் பிரியம் -அடியார்க்கு அடியார் –மத் பக்த ஜன பிரியர் -சினேக ரூபமாய் -பாகவதர் வரை வந்தவர் —
ஒருவன் பக்கல் ஞானம் ஏற்பட்டால் கூட இருப்பவர் கண்டு கொள்ளாமல் – பகவத் விஷய பிரியம் வந்தால் தான் சம்பந்தி சம்பதிகள் அளவும் போகுமே
12–பாகவதத்வம் -அர்த்த பஞ்சகம் -ஆகார த்ரய சம்பன்ன -சகலார்த்த விஷயமாய் -பர கத ஸ்வீகார நிஷ்டர்- ஆச்சார்ய அங்கீ கார விஷயீ க்ருதராய்–பாகவதர் இடத்தில் அநந்யார்ஹ சேஷத்வ சரண்யத்வ போக்யத்வ–பூர்வர்கள் ஈஸ்வர பரதந்த்ரர்கள் இவரே ஆச்சார்ய பரதந்த்ரர்-
ஆக —முதல் ஒன்பது -சர்வாத்மா -முழுவதுமாக பகவத் பக்தி இல்லை -கார்யங்களைத் தன் தலையிலே ஏறிட்டு கொள்ளாமல் -யாவச் சரீர பாவம் ஜாதி போகாது
பத்தாம் அதிகாரி முழுவதும் பகவானைப் பற்றியதால் -நதி கடலில் கலக்க பெயர் ரூபம் போகுமே -முனையில் கலந்தால் இரண்டு வர்ணமும் தெரியுமே – வர்ணம் ஜாதி என்றுமாம்
விஷ்ணு நாமம் கோத்ரம் சரண ஸூத்ர கூடஸ்தர்– பராங்குச பரகால யதிவராதிகள் நிரதிசய ப்ரீதர் -ஆத்ம சத்தை உண்டாக பெற்றிலன் —அத்யந்த ப்ரீதிக்கு விஷயம் ஆக வில்லையே -பகவத் விஷயீ க்ருதன் இல்லை
அடுத்த அதிகாரி -பாகவத விஷயத்தில் சினேக பூர்வ பக்தி தான் பூஜ்ய விஷயம் இல்லை -தனக்கு சமம் என்கிற நினைவில் உள்ளான் – அத்யந்த அபிமதம் இவனுக்கும் இல்லை
பன்னிரண்டாம் அதிகாரி -ததீய பக்தி -தேவன் இடம் பக்தி ஆச்சார்யர் இடம் பண்ணுபவன் -சத்தை பற்று -பாகவதத்வம் என்ற ஜாதி பிறந்து சர்வ உத்க்ருஷ்டன் -ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் –
பயிலும் சுடர் ஒளிக்கும் நெடுமாற்க்கு அடிமை நெடு வாசி -இது தான் -11–12- அதிகாரிக்கும் வாசி – கொடு மா வினையேன் -என்று பாகவத சேஷத்வம் இழந்தேன் – என்பது முதல் -9-அதிகாரிகள் ஆழ்வார்களும் இதனாலே பத்தும் இரண்டும் -ஆண்டாளும் மதுரகவி ஆழ்வாரும் சரம பர்வ நிஷ்டர்கள் – எதிராசரைச் சேர்த்து இவர்களையும் ஒரே பாசுரத்தால் மா முனிகள் –
தனக்கு சமம் என்ற புத்தி இல்லாமல் பாகவத விஷயத்தில் மஹாநீய விஷய பக்தியும் ப்ரீதியும் கொண்டவன் -12-அதிகாரி -எம்மை ஆளும் பரமர் -சேஷிகள் என்றவர்
ஸ்வாமி என்றும் பரம போக்யன் என்றும் அறிந்து அடியார் அடியோங்கள் கூடவே இருக்க -முனி மா பிரம முதல் தனி வித்தாய் –தனி மா தெய்வம் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவர் அடியார் –எடுத்துக் கழிக்க இவ்வளவு பெருமை சொல்லி -அடியார் நனி மா கல்வி இன்பம் -போகம் அனுபவிக்க ஆசைப் பட்டார்
சயமே அடியார் -தலை நின்றார் படியும் –நீக்கமில்லா அடியார் -கோதில் அடியார் -மூவர் நிலையையும் கொண்ட அடியாருக்கு அடியாராக ஆசைப்பட்டார்-
இது வரை தான் ஸ்ரீ எம்பார் ஸ்வாமி அரும் பதம் காணப்படுகிறது -)
ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-
உத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரமியுமாய் இருந்தானே ஆகிலும்
பகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று
வர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாகச் சொல்லுகையாலே –
பிரம சம்பாவனாதிகளாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து
இங்கன் அன்றாகில் -கீழ்ச் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே-
——————————-
ஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜன்மங்கள் இன்னது என்று நிரூபிக்கப் பட்டது கீழே-
அதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் மேலே –
சூரணை -218–
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்தத்தாலே-
(ஆயி ஸ்வாமிகள் -அஹங்கார கர்ப்பமான -ஜென்மம் -பகவத் சம்பந்தம் இல்லாத -துஷ்ட ஜென்மம் –துஷ் ப்ரதிக்ரியா தோஷம் -பிராயச்சித்தம் பண்ணி போக்கிக் கொள்ள முடியாதே
மேலிடாமல் சமிப்பது -நெருப்பில் இட்டது போலே-தீயினில் தூசாகும் – ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலன் -அதில் உள்ள பிரதிபத்தியை விட்டேன் -தாஸ்ய ஜென்மமே உயர்ந்தது -என்றவாறு -ச தோஷ ஜென்ம சம்பந்தம் –உபாயாந்தர சம்பாவனை இல்லாமலும் நைச்யம் பாவிக்க வேண்டாத -இரண்டு தோஷங்களும் இல்லாமல் -தேக உபாதியால் வருமவை இல்லாமல் –ஸ்வரூப அனுரூப ஜென்ம வ்ருத்தராய்–ஹீந ஸ்பர்ஸம் பொறுக்காத விலக்ஷணரான சரம ததியர்கள்- தர்ஸன-ஸ்பர்ஸநாதி சம்பந்தத்தால் போகும் -)
அதாவது
அஹங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது – ஜன்ம சித்தமான நைச்யத்தை உடையவராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த ரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை-(தர்சித்து ஸ்பர்சித்து கைங்கர்யம் பண்ண தோஷங்கள் விலகும்)
—————————————–
தத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -219–
சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –
(ஆயி ஸ்வாமிகள்-பாக்ய வசத்தால் தத் சம்பந்தம் ஏற்படும் பொழுது – அஹங்காரம் போவது பாகவத சம்பந்தத்தால் -அது ஏற்பட இது போக வேன்டும் –விலக்ஷண சம்பத்தை தூஷகமான துர் அபிமான தூஷித்தமான நிக்ருஷ்ட ஜென்மம் -அஹங்கார ஜென்மம் -ச வாசனமாக போகும்-அனுகுணமான யோக்யதை –அஹங்காரம் தொலைந்தால்–துளி மாறினால் அதிகாரம் பிறக்கும் –– இல்லை போல் இருக்கு என்று வாய் மாத்திரம் சொன்னாலே போதும்-ஜென்ம கொத்தை ச வாசனமாக போகும் –அஹங்காரம் மறுவல் விடாதபடி போகும் -திரும்ப முளை விடாதபடிக்கு நிவ்ருத்தமாகும்)
(இந்திரியங்கள் வசப்பட என்னைத் தியானி என்னைத் தியானிக்க வசப்படுத்து என்றால் போலே இங்கும் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் –சத்வ குணம் வளர – ஞானம் வளர இவை போலே பய க்ருதும் பய நாசகனும் அவனே -ஆஜ்ஜை அதி லங்கனம் பண்ணுபவனுக்கு பயம் உண்டாக்கி —ஆஜ்ஜா அனுவர்த்திகளுக்கு பயம் போக்கி தான் ஏற நாள் பார்த்து இருப்பானே –நிவேதியத மாம் சிப்ரம் -என்றானே –அபிஜன அபிமானம் போனால் தான் பாகவத சம்பந்தத்தால் ச வாசனமாக போக்கும் பாகவத சம்பந்தம் -ஆத்ம ஞானம் வந்து கர்ம யோகத்துக்கு வந்து பண்ணப் பண்ண சித்தம் நிர்மலமாகி ஞான யோகம் நிலைத்து ஞானம் வளரும்- –ஆத்மா தேக விலக்ஷணம் என்கிற ஞானம் வந்தால் தானே கர்ம யோகத்துக்கே வருவான் -அது கீழ் நின்ற ஞானம் -இது மேல் உள்ள ஞான நிலைகள் –அதே போலே அஹங்காரம் மாத்திரம் தொலைந்து விலக்ஷண சம்பந்தம் ஏற்பட்டு -மேல் நிலைகள் -ஸ்வாமி போக்யம் இத்யாதி நிலைகள் வரும் -)
அதாவது
அவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது
தன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி
————————————————–
ஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்கு பரிகாரம் ஏது ?-என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -220–
ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-
(ஆயி ஸ்வாமிகள்-ஸூஷ்ம தர்சி ஸூ வியக்தமாக அருளிச் செய்கிறார் -பழுது குற்றம் இல்லாத பிரவாஹ ரூபமான ஜென்மம் -பேதிமார்களே -சதுர் வேதிகளை கூப்பிட்டு –
இழி குலத்தவர்கள் ஆகிலும் எம் அடியார்களாகில் –நின்னோடும் ஓக்க -உம்மை -கடைசி பக்ஷம் என் அளவாகாவாது -என்றவாறு -மதிள் திருவரங்கத்தானே -அனுஷ்டான பர்யந்தமாக காட்டி -லோக சாரங்க முனிவர் -திருப் பாண் ஆழ்வார் -ஜன்மத்துக்கு கொத்தை -ஒழுகல் ஆறா -சதுப்பேதிமார்கள் போக்க பரிகாரமும் காட்டி தொண்டர் அடிப் பொடியை தலையிலே சூட்டி – பெயரே பிரமாணம் தானே -விப்ர நாராயணர் பேர் மறந்து –அடியார்க்கு ஆட்படுத்த பிரார்த்தித்து அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் –ஏக கண்டர்-நெடுகப் போகும் வம்ச பரம்பரை —உள்ள அனைவரையும் விழித்து உபதேசம் – பரம பக்தனை பிராணாயாமம் நமஸ்காரம் பண்ணி – ஞானம் ஆதரித்து சொல்லியும் -கேட்டும் க்ருதார்த்தராக வேன்டும் பரம சேஷி என்னும் அளவுக்காகவாது -பிரிய ஞானி அத்யந்த பிரியம் -அங்கும் இப்படியே அருளிச் செய்வான் -த்வார சேஷிகளையும் நினைத்து நாயகனாய் நின்ற நந்த கோபன் நாயகனாய் நின்ற கோயில் காப்பான் நாயகனாய் நின்ற வாசல் காப்பான் –பரம ரஹஸ்யம் -அர்த்தம் விசேஷித்து காட்டி அருளினான் மதிள் திருவரங்கத்தான் -அபிஜனம் அபிமானம் ஜன்மத்துக்கு கொத்தை – தொலைத்து விலக்ஷண ததியர் -எம் அடியார்களாகில் -அநந்யார்ஹ சேஷத்வம் -அருளிச் செய்ததை அனுசரித்து வித்தாராகிறார் பிள்ளை லோகாச்சார்யார் -)
(வித்யா தானம் -ஆச்சார்யத்வ ப்ரீதி – கொடுமின் கொள்மின் -ஞான தான ஆதாயம் -என்றவாறு -சரீர சம்பந்தம் இல்லையே -)
அதாவது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர நெடுகப் போகிற வம்ச பிரவாஹத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்-
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே யாகிலும்
என்னோடு உண்டான அசாதாரண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்துச் சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என் மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழிப் போகுங்கோள் என்ற இந்தப் பரம ரகஸ்யத்தை –
பக்திர் அஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம்-என்று
பரம ஆப்தரான தேவர் அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ ?
இப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்
தலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் வர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –
இப் பாட்டிலே -அபிஜனாத்ய அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத
விலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்குப் பரிஹாரம் என்று- ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை-
(1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும் தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர் இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-)
——————————————–
ஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே
இவனும் விலக்ஷணனாய் விடுமோ என்ன அருளிச் செய்கிறார் —
சூரணை -221–
வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-
(ஆயி ஸ்வாமிகள்-ரஸ குளிகை –வேதகம் பேதனம் மாற்றி விடும் -பேதம் பண்ணும் பொன் என்றபடி -பித்தளை ஹாடகம் பித்தலாட்டம்-இது நிஜமாகவே மாற்றும் –சாம்யா பத்தியை கடுக உண்டாக்கும் -ஸ்பர்சம் தர்சனம் கைங்கர்யம் மூலம் உண்டாக்கும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய வேன்டும் என்று -இடையர்கள் அறிந்தவாறு என் என்னில்-ரஸ குளிகை போலே கண்ணன் இருக்க இவர்கள் கிருத்யம் இதுவாகும் –சேஷத்வ பாரதந்தர ஞானம் பெருக பெருக பழைய நிலை ச வாசனமாகப் போகுமே —சதாசார்ய கைங்கர்யம் செய்யச் செய்ய -கசடு அற்ற ஞானம் பிறந்து –அஹங்கார தூஷிதராய் -அசத் கல்பராய் இருந்தவர்களையும் –விலக்ஷணர் ஆக்குமே )
வேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளிச் செய்கிறார்-
வேதகப் பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு -பல கால் உருக்கி குளியையாகப் பண்ணி ரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பைப் பொன்னாக்குமாம் போலே ஆய்த்து–
ஜன்ம சித்தமான நைச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தைப் போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –
————————————–
ஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி இருக்க வேணும் என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -222–
இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —
(ஆயி ஸ்வாமிகள் — இவர்கள் –இதம் ஸ்வ சம்பந்த ஹேதுக சாம்யாபத்தி பிரதானரான விலக்ஷணர் -சமமானவர்களாயும் உயர்வானவர்களையும் என்றது -ஆச்சார்யருக்கு சாம்யம் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈஸ்வரனிலும் உயர்ந்தவர்கள் -கீழேயே பார்த்தோமே
இவர்கள் – ஸூவ சம்பந்த ஹேதுக -சாம்யா பத்தி பிரதத்வ ரூப–உபய தோஷ ராஹித்யம் -உள்ள -விலக்ஷணர் -உத்க்ருஷ்ட தமரான ஆச்சார்யருக்கு சாம்யம் -நிக்ருஷ்ட சம்சாரிகளிலும்- உத்க்ருஷ்ட ஈஸ்வரனை விட ஆதிக்ய புத்தி-)
இவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் என்று –
—————————————–
சூரணை-223–
அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும்
அதிகர் என்றும் நினைக்கை-
(ஆயி ஸ்வாமிகள்-புத்தி த்வயம் -ஆத்ம ஈஸ்வர விலக்ஷணரான சதா ஆச்சார்யர் சாம்யம் – ஞானம் இல்லா சம்சாரிகளை விட ஞானம் இருந்தாலும் சேஷியான தன்னில் அதிகராய் – ஸூ ஆச்சார்ய பரதந்த்ரராய் -உபதேசித்து –திருத்தும் -பெருமாள் உதாசீனராய் -ஸ்வ தந்தரராய் மௌனியாய் இருக்க –மூன்றாலும் அதிகராய் அன்றோ லீலையிலும் விநியோகம் கொள்ளக் கடவனாய்-உம்மை தொகை -போகத்தில் ஆழ்வாராதிகளை விநியோகம் கொள்ளுவான் –ஸ்வரூப அனுகுணமாகவே -ஸ்வா தந்த்ர ஹேதுக கர்ம அனுகுணமாக -கர்ம பரதந்த்ரனாக வேஷம் ஏறிட்டுக் கொண்டு -ஸ்வா தந்த்ரனாய் இருந்தே ஸ்வரூப விருத்தனாய் அன்றோ ஈஸ்வரன் -அவனைப் போலே இல்லாமல் ஆச்சார்யர்கள் –ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளுவார்கள் -)
(ஈஸ்வரனுக்கு உண்டான சேஷித்வ ப்ராபகத்வ ஸ்வரூப ஞான ஹேதுத்வ அநந்யார்ஹ சேஷ பூதன் தாரகத்வ ப்ராப்யத்வ ஐந்தும் போல்-சரம சேஷித்வ-சரம ப்ராபகத்வ -சரம ஸ்வரூப ஞான ஹேதுத்வ–அநந்யார்ஹ சேஷ பூதன் என்ற ஞானமும் இவரால் –சரம -சரம –சரம ப்ராப்யத்வ –-திருமந்த்ரார்த்த தாத்பர்யம் இது தானே -சர்வ பிரகாரத்தாலும் ஆச்சார்யருக்கு துல்யர் என்றது -மாதா பிதா -விபூதி சர்வம் போலே —
சத்தா ஞான -தாரகம் ஆச்சார்யர் தானே –ஆகவே சர்வ பிரகாரத்வம் -இப்படி ஐந்தும் உண்டே
கொண்ட பெண்டிர் -மக்கள் உற்றார் -அனைத்தும் அவனே-9–1- அந்த உறவுக்கு ஏற்ற கைங்கர்யம் பண்ண வேண்டுமே –9–2-எல்லா உறவின் காரியமும் பண்டை நாளாலே-நின் கடைத்தலை -பிரார்திக்கிறார் -ஆச்சார்யர் பகவானே ஆழ்வாருக்கு –ஜாதியாதி ஜாதி ஜென்ம விருத்தம் ஞானாம் — ஞானாதிகள் –ஞானம் பக்தி வைராக்யம் —ஞானம்-வேதம் வேதாங்கம் ஞானம் –ஸ்வரூப யாதாம்ய ஞானம் பாகவத அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் )
ஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிப் படியே-
தனக்கு சர்வ பிரகார உத்தேஸ்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –
சம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே -ஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
தன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே -அத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
ஈஸ்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே -கர்ம அனுகுணமாக லீலையிலும் (உம்மைத் தொகை போகத்திலும் -ஆழ்வார்கள் )விநியோகம் கொள்ளக் கடவனாய்- ஸ்வ சரண கமல சமாஸ்ராயண தசையில் புருஷகாரம் வேண்டும் படியாய் -உகந்து அருளின நிலங்களிலே -சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே இருக்கும் அவனைப் போல் அன்றியே (அவன் கர்ம அனுகுணமாக நன்மை விநியோகம் கொள்ளுகிறான் அன்றோ -ஸ்வரூபம் ஸ்வா தந்திரமாக இருக்க இப்படி இருப்பது ஸ்வரூப விருத்தம் அன்றோ-பரதந்த்ரமாய் இருந்து வைத்தும் தமது ஆச்சார்யருக்கு கைங்கர்யமாக நம்மை விநியோகம் கொள்ளும் ஆச்சார்யர் )-ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் -ஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு போரும் அவர்கள் ஆகையாலே -ததிகர் என்று பிரபத்தி பண்ணுகை-
—————————————–
ஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –
ஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -224-
ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –
(ஆயி ஸ்வாமிகள்-ரஜோ குணத்துடன் சொன்ன புராணங்களை அப்ரதானமாகம் -சொன்னது ப்ரஹ்மாவே சாத்விக புராணத்திலே ஆச்சார்யத்தை விரும்பிய ஈஸ்வரனே சொன்னதாகவும் உண்டே-ஸ்ருத பலத்தால் -ஸ்ரீ கீதையில் -உண்டே –ஜாதியாதிகளால் சம்சாரி சாம்யமும் -ஞானாதிகளால் ஸூ சாம்யமும் -சங்கை வருமே பாகவதர்களையும் நினைக்கத் தோன்றுமே -ஞானாதிக்த்வ சேஷித்வங்கள் இவற்றைத் தடுக்க வேன்டும் -தத் உபய ஆதிக்ய புத்தியை பிறப்பிக்கும் – அஞ்ஞானம் இருளை போக்கும்-அஞ்ஞானம் போக்கும் இவர்களும் ஈஸ்வரனும் -சாம்யா புத்தி வந்தாலும் -பர ஹிதை மட்டுமே நினைக்கும் இவர்கள் -புருஷகாரமாகவும் இருப்பதால் பகவானை விட ஆதிக்யம் -சர்வாதிக-ஆச்சார்யருக்கு சாம்யா புத்தி சாதிக்க –கிரமமாக -நிக்ருஷ்ட –மத்யம -உத்க்ருஷ்ட -அதிகராயும் -சர்வ உத்க்ருஷ்ட சாம்யருமான -புத்தி -சம்சாரி வைஷ்ணவ ஈஸ்வர ஆதிக்யம் – பரம்பரையா ஹேது கீழ் இரண்டும் – சாஷாத் ஹேது மூன்றாவது -ஸங்க்ரஹம் ஆச்சார துல்யர் என்பது எதனால் என்றால் -தத் இதர சர்வாதிக புத்தி விவரணம் -)
(குரு ரேவ -ஏவ சப்தம் இந்த ஸூ இதர சர்வாதிக்யம் சொல்லுமே-ஆத்ம சிந்தனையில் ஈடுபட்டு -இதர விஷயாந்தரங்களை விட்டு -உபாஸ்ய நித்யம் வைஷ்ணவன் –பிரகார விசேஷ ஆகாங்கஷையிலே —ஆச்சர்யவத்–தெய்வவத் –மாதாவத் –ராஜாவத் –சமம் என்பதுக்கு பிரமாணம் -பக்திர் அஷ்டவித —ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு கீதாச்சார்யன் — என்னைப் போலே பரம பாகவதனை -என்றானே –இத்தாலும் ஆச்சார்ய சாம்யம் – ச பூஜயக-என் அளவிலாவது பூஜிக்கத் தக்கவன் -சாஸ்த்ர அனுகுண தத் வசன மூலம் -குரு ரேவ -இந்த விலக்ஷண பாகவதர்களைத் தவிர வேறே யாரையும் கொள்ளக் கூடாது என்றபடி -ஆகாரங்களைப் பற்ற தெய்வவத் -ஆச்சார்யவத்- மாத்ருவத்-உண்டே என்னில் –சர்வ பிரகாரத்தாலும் -ஒவ் ஒரு பிரகாரத்தாலும் இவர்கள் சமம் என்றபடி
ஆச்சார்யர் போலே ஸமாஸ்ரயணம் பண்ணாதார்கள் அன்றோ இவர்கள் )
(ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு கீதாச்சார்யன் — என்னைப் போலே பரம பாகவதனை -என்றானே-ச பூஜயக-என் அளவிலாவது பூஜிக்கத் தக்கவன் –பக்திர் அஷ்டவித-1-மத் பக்த ஜன வாத்சல்யம்-2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து-3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி-6-சுர நேத்ர அங்க விக்ரிதா-7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும் தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர் இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-)
அதாவது ஆச்சார்ய சாம்ய பிரதிபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று உபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-
——————————————–
இப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -225-
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –
(ஆயி ஸ்வாமிகள்-அகரணே ப்ரத்யவாயம் உண்டே – ஆச்சர்ய சமமாக சொல்வது தன் நினைவால் இல்லை -ஆச்சார்ய வசனம் அடியாக சொல்வதால் விகல்பிக்காது -பகவானைப் போலே பூஜிக்கத் தக்கவன் –இத்யாதி சொன்னதால் –ஆச்சார்ய வசனம் கேட்க்காமல் இருந்தால் பகவத் பாகவத -அஸஹ்யா அபசாரமாகவும் ஆகும்-)
(அபாகவதர்களைக் கண்டு வையாமல் விலகுவது போலே இங்கும் வாழ்த்தாமல் போனால் அபசாரம் ஆகும் -காம்ய விதி செய்யாமல் இருந்தால் பாபம் வராதே – நித்ய விதி நைமித்திக விதி செய்யாமல் விட்டால் பாபம் வருமே-பூர்வ யுக்த ஜென்ம நிரூபணம் அபசாரம் போலே-இங்கே சொல்லாமல் விடுவதும் ஜென்ம நிரூபணம் அடியாக நினையாமல் வாழ்த்தாமல் போவதும் -குருவின் இடத்திலும் பாகவதர்கள் இடத்திலும் கௌரவ புத்தி அபாவமும் அபசாரமும்)
அதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை அபசாரம் ஆனாப் போலே –
இப்படி கௌரவித்து நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி –
——————————————
இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -226-
இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –
(ஆயி ஸ்வாமிகள்-இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –சாத்விகர்கள் பிரமாணம் காட்டி அருளுகிறார் -ஆப்த தமர்கள் அன்றோ –ஜென்மாதி மினுக்கும் அற்ற ததீயரும்-ஒளிக்கு மினி மினி சப்தமே இது த்யாஜ்யம் என்று காட்டும்-ஜென்மாதி –ஞான ஜென்மத்தால் – உத்க்ருஷ்ட பஹுமந்தவ்யர் -இவர்கள் –சமேவ பூஜ்ய -மத் பக்தன் நாய் மாமிசம் உண்பவராகிலும் –பகவத் பக்தர்களாகில் பாகவதர்கள் சேஷிகள் -ஜென்ம விருத்த விபாகமற குண ஏக தாரகர்-பரம சேஷியர் பயிலும் சுடர் ஒளி-பரம போக்யர் நெடுமாற்கு அடிமை – ஸ்மரணாதி ரஸ்யதை கண் சோர வெங்குருதி —அர்ச்சாவதார ப்ரவணர் சேஷிகள் நண்ணாத வாளவுணரிலும் –பக்தி பரவசர்கள் தர்ச நீயர்கள் தேட்டரும் திறல் தேனிலும் -வாழும் சோம்பரை யுகத்தி -ஈஸ்வரன் உகப்பைக் காட்டி அடுத்து –ஜென்மாதி மினுக்கும் இல்லா –கடமை பட்ட குக்கர் -ததியர் முடியினில் துளவம் மொய் கழற்கு அன்பு செய்யும் -சிரஸாவாஹ்யர்-அருவினை பயனை அடையார் – ஸூ பாவன ப்ரசாதர் போனகம் செய்த சேதம் தருவரேல் புனிதம் அன்றே –ஞான ப்ரதிக்ரஹ யோக்யர் கொடுமின் கொள்மின்
தன் நிந்தையர் கர்ம சண்டாளர் -நுமர்களை பழிப்பராகில்—- — புலையர் போலும் – துர் லப பல லாபிகள் -வெள்கி நிற்ப —ஆனைக்கு அன்று அருளை ஈந்த – மேலில் பாட்டுக்களில் -ஆறு பாசுரங்களிலும்-சம்சயம் இல்லாமல் விசதமாக நிதி தர்சனவத் -த்வியைக நிஷ்டையர்கள் பக்கலில் ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதம் -யுகத்தி போலும் )
(ஸ்ரீ ராமாயணத்தில் இந்த அர்த்தம் பிரமாணம் நிறைய இடங்களில் இல்லை -பெருமாள் அன்றோ – கண்ணன் தானே தாழ நின்று தூதுவனாய் இத்யாதி காட்டி அருளினான்-)
(மெய்யடியார்கள்-அடியார்-மெய் சிலிர்ப்பவர் – -பாகவத நிரூபணம் மட்டுமே –சாதி பற்றி நம்மாழ்வார் மட்டும் -நாலிலும் கீழ் இழிந்த பேர் ஆறு போல் கண்ண நீர் கொண்டு -தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே —பகவத் பக்தி பாரவஸ்யமே-இவர்களுக்கு நிரூபகம் த்வயத்தில் த்வி வசனம் –இரண்டு திருவடித் தாமரைகளை -உபாய நிர பேஷம் ஸூசகம் – சரம ஸ்லோகம் விதியை காதில் வாங்கிய பின்பு தானே த்வயம் அனுஷ்டானம் –மாம் -கண்ணன் தொட்டுரைத்த திருமேனி வாசகம் – -ஸ்ரீ மன் நாராயண அர்த்தம் -சரணவ் – –குண பூர்த்தி உள்ள இடமே சரண்யம் -அர்ச்சாவதாரம் -அர்ச்சா திருமேனி வரை –தாய்க்கு பால் பிரவஹிக்கும் ஸ்தனம் போலே திருவடிகள் -உபாயமும் பிராப்யமும் இங்கே – மாம் -அஹம் இரண்டும் காட்ட இரண்டு திருவடிகள் — சாதனாந்தரம் விட்டதையும் –பிரயோஜனாந்தரம் விட்டதையும் -ஸூவ போக்யத்வம் விட்டதையும் — காம்பற -என்று காட்டி –ப்ரபத்யே -வர்த்தமானம் –வாழும் சோம்பர்கள் –கால ஷேபம் போக ஹேது – யுகத்தி போலும் -நிரதிசய ப்ரீதி காட்டுவான்-சம்பாவன விஷயம் —மொய் கழல் சரண சப்தார்த்தம் – திரு மறு மார்பா -ஸ்ரீ மத் சப்தார்த்தம் -மேலில் பாட்டுக்களை த்வயார்த்தம் தானே -)
(போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே-பாத்திர சேஷம் இருக்குமே அத்தை – சொல்லுமோ என்னில் — விளம்பிதம் ஆகும் -சாப்பிட்ட இலையில் உள்ளதே –
ஆச்சார்யர் விஷயத்தில் ஒக்கும் – இங்கே பாகவதர்கள் விஷயத்திலே தானே -உச்சிஷ்டம் கூடாதே- கீதை -குருக்கள் முதலாமவர் தவிர -கீதா பாஷ்யம் –
ஆச்சார்யர் -பிதா- ஜ்யேஷ்ட பிராதா -பர்த்தா -பரம பாகவதர்கள் -தேசிகன் – நாராயண ஏக நிஷ்டர்கள் செய்யும் அனைத்தும் உத்தேச்யம் -ஜல்பம் தான் ஜபம் –
சேஷம் பாவனம் -ஸ்ரீ பாத தீர்த்தத்துக்கு நிகர் இல்லை -யுக்தியே மந்த்ரம் -இந்த பிரமாணத்தில் உச்சிஷ்டம்–இலை சேஷம் – –மோர் முன்னால் ஐயன் -உண்டே -ஆத்மா சத் ப்ரஹ்மம் பொது சொற்கள்-நாராயண -சாமான்ய விசேஷ பர்யவசயாம் –நாராயண ஏக நிஷ்டர் பொது– குரு விசேஷம் -பர்யவசான விதி கொள்ளலாமோ என்னில் –வேத அத்யயனம் பண்ணி வைத்த குருவைப் பற்றி சொல்லிய வசனம் –வேத அத்யயனம் பண்ணுபவர்கள் எல்லாம் நாராயண ஏக நிஷ்டராக இருக்க மாட்டார்களே -பரத்வாஜ சம்ஹிதை -பிரமாணம் –திரு மந்த்ரம் அருளிய -குரு உச்சிஷ்டம் பாவனம் வசனம் உண்டே – பாதம் வந்தால் தானே பொது வசனம்- விசேஷ அர்த்தத்தில் பர்யவசாயம் பண்ண வேன்டும் –தூய பெரு நீர் யமுனை –கோபிகளும் கண்ணனும் கொப்பளித்த தூய்மை உண்டே)
இவ் வர்த்தம் என்று -கீழ் விஸ்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –
மகா பாரதத்தில் -மத் பக்தம் ஸூத்திர சாமான்யத் அவமன்யந்தி யே நரா நரகேஷ்வ வதிஷ்டந்தி வர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணேஷு தே ஸூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –
மத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-ஸூயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம் மத் கதா ஸ்ரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ஸ்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோப ஜீவதி- பக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித
நமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ஸ்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ யதாக்யகம்-இத்யாதியாலும் –
பல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்
இதிகாச உத்தமத்தில் -ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வபசம் ததா வீஷதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் –பாகவத பிரபாவம் பிரகீர்திதம் –
இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
ஸ்ரீ பாகவதத்திலே – “ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி விகீநஸ்து யதிச்ச ஸ்வபதாசம :”.
“விப்ராத் த்விஷட் குணயுதாத் அரவிந்த நாப பாதார விந்த விமுகாஸ் ஸ்வபசம் வரிஷ்டம்–
மந்யே ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த ப்ராண: புநாதி ஸகலம் நது பூரி மாந:” இத்யாதிகளாலே பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –
லைங்கத்திலும் “வைஷ்ணவானாம் விசேஷோஸ்த்தி விஷ்ணோ ராயாதனம் மஹத
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஹிருதயாதி மநீஷிணாம் . ய: பஸயதி ஸூபாசாரம் வைஸ் ணவம்
வீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குலேஜாதம் பிரணமேத் தண்டவத்புவி ” இத்யாதியாலே – பாகவத வை பவம் ப்ரதிபாதிதம்-
இப்படி பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம் பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-
இதிகாசாதிகளில் உபாதித்த வசனங்களிலே–
1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –
2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –
3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்களுமாய் -பரம சேஷியான ஈஸ்வரனோபாதி பூஜ்யரும் ஆவர்கள் என்னும் இடமும் –
4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –
5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர் அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –
6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –
7–அவர்களைக் கண்டால் தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச புராணங்களிலும் –
நம் ஆழ்வார்
பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –
பகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே தமக்கு சேஷிகள் என்னும் இடத்தை பிரதி பாதித்து அருளும் இடத்தில் –
யவரேலும் அவர் கண்டீர் –
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் –
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று
ஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு மிகவும் உத்தேஸ்யர் என்று அருளிச் செய்த -பயிலும் சுடரொளி யிலும் –
கொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு என்பது என் அந்தோ -என்று தொடங்கி –
பாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –
சயமே அடிமை தலை நின்றார் –
அவன் அடியார் –
மணி மலை போல் கிடந்தான் தமர்கள் –
கோதில் அடியார் –
நீக்கமில் அடியார் –
என்று பகவத் ஸூவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு ) தோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –
திரு மங்கை ஆழ்வார் –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே ) அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் (கீழே பயிலும் சுடரொளி ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு )எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -ஸூரிகளிலும் கைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –அவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும் இனியதாக நின்றது –அவர்களைக் கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –அவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –
அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –
என்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும் ஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் –(நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே)
கடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று
ஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை
அனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மைக் கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –
அவர் எங்கள் குல தெய்வமே -என்று –
உகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று
அருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
மெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –
இத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவஸ்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
த்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் – எத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –
1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் – திரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸா வாஹ்யர் என்றும் –
2-ஜன்மத்தால் வந்த தண்மையே அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்
உடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –
3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு
சம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ஸ்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –
4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-ஜன்ம விருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு ஸர்வேஸ்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதி க்ரஹங்களுக்கு அர்ஹர் ஆவார் என்றும் –
5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை -பகவத் பிரபாவத்தால் வந்த வைலஷண்யத்தைப் புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி தாழ நினைத்தார்கள் ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –
6-இப்படி பிரசாதித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம் ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை திர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -(கஜேந்திர ஆழ்வான்) -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –
விசத தமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –
—————————————————
இப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா ச விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் ச யதிஸ் சச பண்டித -என்று சொன்ன விப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் -அந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா அருளிச் செய்கிறார் –
சூரணை-227-
ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .
(ஆயி ஸ்வாமிகள் -தேகத்தோடே இருக்கும் பொழுது அந்த பிறவியிலே சாதி போகுமோ என்ற சங்கைக்கு -வசிஷ்டர் வாக்கால் ப்ரஹ்ம ரிஷி பட்டம் பெற்ற வ்ருத்தாந்தம்
கர்ம விசேஷத்திலே -வர்ணாந்தரம் காண்கையாலே- வர்ணம் அநித்தியம் என்பது சித்தம் -அல்ப சக்தன் வசிஷ்டராலே முடிந்தால் விலக்ஷண -சர்வ சக்தி சம்பந்தம் பண்ணும் என்று சொல்ல வேணுமோ -)
(சரு வால் ஏற்பட்டது இல்லை –தபோ விசேஷத்தால் மாறினார் பிரமாணம் – ரிஜிகர் பிள்ளை ஜமதக்கினி பிள்ளை பார்கவ ராமர் -சத்யவதி இரண்டு சரு கொடுக்க -மாறி போக-ஷத்ரியருக்கு உண்டான –க்ரூர பிள்ளை பிறந்து -தாயார்-ப்ராஹ்மணருக்கு உள்ள தபோ பிள்ளை உள்ளுக்குள்ளே ப்ராஹ்மண தன்மை வெளிப்பட்டது என்று ஆஷேபம் – சரு மாறாட்டம் தன்மைக்கு தான் காரணம் -ஜமதக்கினி -விச்வாமித்ரர் – தபஸுக்கு முன்பே இருந்தது சொல்ல முடியாதே –ஸ்ரீ ராமாயணம் வஸிஷ்டர் வாக்கால் வந்தது -பிராபல்ய பிரமாணம் -சருவுக்கு ப்ராஹ்மண உத்தேச்யம் இல்லை -சம தமத்துடன் பிள்ளை கேட்டே சரு ஜாதி பெற்றவர்கள் இடம் வரும் – புத்ரன் நிச்சயம் இல்லை -அவற்றை சரு கொடுக்கும் அதே போலே சாதுர்யம் வீரம் -மாற்றி கொடுத்ததால் விபரீதம் -ஜாதி பிரயுக்தம் சொல்ல வில்லை –பூர்வம் செய்த வர்ணாஸ்ரம சம்ஸ்காரங்கள் -செல்லுபடியாமல் போகுமே –
அனவதிக சக்திக -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1–27–28—ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –2-1-27-ஆத்ம நிச ஏவம் விசித்ராச் சஹி –2-1-28-உபாதானம் -நிர்விகாரம் நிர் அவயவம் சேர்ந்து இருப்பது -ஸ்ருதியில் சொல்லி இருக்கிறபடியால் ஒத்துக் கொள்ள வேண்டும் -மண் குயவன் -சப்த மூலத்வாத் -ப்ரத்யக்ஷத்துடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாதே -ப்ரஹ்மம் அறிந்ததே சப்தம் மூலம் தானே -விசித்திர சக்தி படைத்து இருக்கிற படியால் பொருந்தும் -இங்கே பரசுராமனை சொல்லாமல் விச்வாமித்ரர்–அபசாரம் பட்ட கோபத்தால் தான் ஷத்ரிய தன்மை திரிசங்கு விருத்தாந்தம் சொல்ல வில்லை – இங்கு லஷ்யம் வஸிஷ்டர் வசனத்தால் உயர்ந்ததை காட்ட வேன்டும் -அந்த இரண்டிலும் இப்படி சொல்ல முடியாதே –ஸூவசனத்தால்- தன்னுடைய வசனத்தாலே இத்தை ஆக்கினார் பட்டர் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் உண்டே -)
அதாவது
ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன்- அந்த ஜன்மத்திலே- தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக – வசிஷ்ட வாக்யத்தாலே- ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷியாய் விட்டான் இறே-
ஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் -அந்த சரீரம் தன்னோடே-
அனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே -அத்யந்த உத்க்ருஷ்ட
குலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –
அல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-
(புஷ்ப தியாக போக மண்டபங்களில் பணி பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும் வைதிகோதமரும் மகா முனியும் அனுவர்தித்த க்ரமும் )
——————————————–
இதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —
சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே சிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில்
பிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று கீழ்ச் சொன்ன அர்த்தத்தை ஸ்த்ரீகரிக்கைகாக ராவண அனுஜனைக் குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –
சூரணை -228-
ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ஸ்யனாக நினைத்து
வார்த்தை அருளிச் செய்கிறார் –
(புதல்வரால் பொலிந்தான் உந்தை –புகல் அரும் கானம் தந்ததே இதற்கு தானே -இஷுவாகு வம்சனாக கொண்டாரே பெருமாள் –
ஆயி ஸ்வாமிகள்-பஹுமதி பண்ணினத்துக்கு திருஷ்டாந்தம்-பெருமாள் முதலானோர் -பலர் உண்டு -மேலே ஆறு சூரணை காலிலே விவரணம்
விபீஷணஸ்து தர்மாத்மா -சூர்ப்பணகை வாக்கியம் -ந து ராக்ஷஸ சேஷ்டிதா-பிரதீயதாம் தாசாரதி மைதிலி சொன்னதே காரணமாக குபிதனான ராவணன் -குலத்துக்கு கோடரி காம்பே -அதர்ம செடியில் களை போலே இது -தள்ளுண்டவனை அஸ்மாத் துல்ய பவது –
ஸூக்ரீவன் வாக்கியம் -தங்கள் நால்வரையும் பெருமாள் சொன்னதாக -தம்பி ஆக்கிக் கொண்டாரே பெருமாள் -திரு உள்ளம் பற்றி -திருவாய் மலர்ந்து கைக் கொண்டார்
இத்தால் – ஸூவ ஜனம் கை விட்டவனை பெருமாள் கைக் கொண்டது அறிகிறோம் -)
(தர்மஞ்ஞய சமய பிரமாணம் வேதாஸ் ச -தர்மம் அறிந்தவனின் அனுஷ்டானமும் பிரமாணம் -முதலில் சொல்லி அப்புறம் வேதம் பிரமாணம் -அதுவே பிரதானம் –
கலை இலங்கு மொழியாளார்–திருக் கண்ண புரத்தில் -திண்ணைப் பேச்சும் வேதார்த்தம் அன்றோ -வேத வேத்யனை கையிலே வைத்தவர்கள் –வேதம் இவர்கள் பின் செல்லுமே – த்வதீய கம்பீர மனஸ் அநு சாரி -ஆளவந்தார்-உங்கள் பலாபலம் -கேட்க்காமல் ராக்ஷஸ ஜாதி அபிமத விரஹமும் –ராவண வதம் அநந்தரம் -உனக்கு எப்படியோ எனக்கும் அப்படியே –ஸூ பிராதா என்றாரே –தனக்கு உடன் பிறந்தவராக திரு உள்ளம் –அனுகூல புத்தியால் சஜாதீய வ்யாவ்ருத்தம் வருமே — குலத்துக்கு கோடாலி என்பதாலே வியாவ்ருத்தம் —உத்க்ருஷ்டம் பெருமாள் அங்கீ கரித்த பின்பு தானே -ஆக இரண்டு நிலைகள் இத்தால் அறிவோம்-நாயகா நாயினேனை உடன் உதித்தவர் உடன் ஒருவனாக நினைத்தீர் -குடல் துவக்கு உடையார் – கோஷ்ட்டி –விபீஷணன் கூட வந்த நால்வரையும் –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் -கேசவ தமர் ஆழ்வார் -21-சம்பந்திகளும் நம் வரை பாயுமே)
அதாவது –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் குபிதனாய் த்வாந்து திக் குல பாம்ஸ்னம் -என்று இக் குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –
இஷ்வாகு குல நாதனான பெருமாள் இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-
ஆக்க்யாஹி மம தத்வே நராஷா ஸாநாம் பலாபலம் -என்று ராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும் என்கையாலே இவனை ராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதி யாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –
இவ் வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே பாகவத அனுகூல்யம் உண்டாகவே -ப்ராக்ருதர் இவன் நமக்கு உடல் அல்லன் என்று கை விடுவார்கள் என்னும் இடமும் – பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும் என்னும் இடமும் சொல்லப் பட்டது-
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply