ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –
ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –
———————————–
த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –
————————————————
இப்படி பிரஸ்துதையான பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் – கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -142-
இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )
(ஆய் ஸ்வாமிகள்-ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-இது முதல் -மேல் –ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242 – சித்த உபாய வைபவம்
கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் -பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் – ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே -உபாயமாகாதே அபாயமாகவே யாகும் -)
(வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்–ஆனந்த மயன் அறிந்தவன் அடைகிறான்--தூ மணி விஷய வாக்கியம் அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் –நோற்காமலே பெற்ற கோபி –நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் -இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்-பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபத்திக்கும் கேட்க வேண்டுமே-அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் –பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் – பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே -இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே -உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் —அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் -இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே- நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷண கார்யம் செய்ய மாட்டார்களே )
அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல் லாப சாதனம் ஆகாது என்றபடி –
—————————————-
இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –
சூரணை-143-
அவன் இவனைப் பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —
(ஆய் ஸ்வாமிகள்-ஸூவ இச்சையால் –ஸ்வ தந்த்ர ஸ்வாமி – பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதி காலமாக புத்தி பூர்வகமாக அநேக மஹா பாதகங்களும் -அவனைப் பெறுகைக்கு விலக்கு அன்று -)
(பாவங்கள் பாதகங்களை விட சிறியவை –ஸ்வ தந்த்ர ஸ்வாமி-லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் -லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து-உபாய அந பேஷ ரக்ஷண சங்கல்பம் தான் பரகத ஸ்வீ காரம் -நரகங்களில் விழப் பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் -)
அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் -பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் – பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யே து நைவாஸ்ய பிரதிஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–
—————————————–
இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன – அருளிச் செய்கிறார் –இவை என்று தொடங்கி
சூரணை -144-
இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –
(உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க – தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே-)
————————————-
அவர்கள் தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -145-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –
(ஆய் ஸ்வாமிகள்-தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே-ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் அங்கீகார ஹேதுவான நன்மையாயிற்றே -)
( ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பா ஐயங்கார் ஸ்வாமிகள் அரும்பதம் -ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும் பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –சிரஸா யாஜிதோ மயா- பிராது- சிஷ்யஸ்ய- தாஸஸ்ய -பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
இன்றே திரு அபிஷேகம் –ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் –ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் —தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —சீக்ர கால அநவச்சின்ன சரணாகதி ராவண வதம் -ரூபம் அது –
தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் —காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே -இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே –
பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து —இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே-நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே –பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ -திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் -பாஞ்சஜன்ய அம்சம் -அங்கம் குறை சொல்ல முடியாதே -அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும் சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்-மதி -இச்சா -கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் -சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே – ப்ரயோஜகத்வம் ஸித்தியாது அனுபாயமாகும் –
ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை-ஒரே மாதிரி இவை இருக்காதே -இந்த தேசம் இந்த காலம் பொறுத்தே பாபங்களும் புண்யங்களும் -நியதங்கள் இல்லை-தேச கால அதிகாரி பேதத்தால் மாறுமே –
அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம் நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை -)
(ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் அரும்பதம் -வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் -அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க –அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
திரு உள்ளம் அறியாதவன் என்று -அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே –ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி -சர்வஞ்ஞனான அவனும் ஸூவதந்திரத்தால் — செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து – அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே-அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை-இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக – பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே –ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்து –சர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம் –ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
இவரே பண்ணி உள்ளாரே-சில அதிகார தோஷங்களைத் தப்பாகச் சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி —பிராயச்சித்தம் பண்ணச் சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ணச் சொல்லியும் -விஸிஷ்ட வேஷ பிராயச்சித்தம்- மந்தாகினி நீரைத் தொட்டு — இரண்டையும் பண்ணச்சொல்ல -பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை -மடல் தூது போன்றவை தானே இவை -ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே-மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே
தோஷமே பச்சையாக என்றது -ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் –துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்-விஷய சபலமும் ஏழை ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம் கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும் ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான் நன்மையே தீமையாயிற்று தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் —வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம் நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி -இது நிலைக்குமோ —நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு -இனி நான் பழுதே அகலும் படி என் உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள் அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும் தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே
தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கணிசியாமல் இங்கு மட்டுமே தானே அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே – மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி – ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு – உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
வழி பறிப்பாகிய வழி அடி –ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு
பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் – சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
ராமன் இருக்கச் சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் –காட்டிக் கொடுக்கும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் காள மேகப் பெருமாள் –ஆப்தன் குகனும் கரிய திரு மேனி ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம் அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும் கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம் அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்குக் குறை இல்லையே – ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு-மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே -)
அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிஸ் ச சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள் தாமே வந்து
அங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே -பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –
————————————————
இவன் பண்ணும் பிரபதனம் –சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது – அபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –
இது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -146-
சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —
(சாஸ்த்ர சம்பிரதாய பரமாக அரும்பதம் – பெருமாள் திரு உள்ளம் கருத்தும் பார்த்தோம் பிரபத்தியே அபராத கோடி –வியபிசாரம்- காரணம் இருந்தும் கார்யம் இல்லாமல்- பலம் கிடைக்காத குற்றம் பரதன் இடம் ஷாமணம் பிரார்த்திக்கும் படியும் கத்ய த்ரயத்தில் உண்டே திரு உள்ளக் கருத்துக்கு அனுசாரியாய் இருக்க வேண்டுமே -)
(ஆய் ஸ்வாமிகள்-பகவத் அபசாராதி பாகவத அஸஹ்ய அபசாரங்களும் -ஆற்றி விட பிராயச்சித்தம் -பூர்வ கத்யத்தில் – பண்ணின பிரபத்தியும் ஸ்வ கதயாம் என்னும் பீதியாலே நாநா வித அபசாரங்களுடன் இத்தையும் சேர்த்து திரு உள்ளம் பற்றி புத்ராதிகள் குற்றத்தை பித்ராதிகள் பொறுப்பது போலே – பந்த விசேஷங்களை விண்ணப்பம் செய்து கொண்டு தஸ்மாத் ப்ரணம்ய முக் கரண பிரபத்தி திரு முன்பே கூசாமல் வந்து நின்று -பூர்வ விருத்தத்தைப் பார்க்காமல் -பிரபத்தி பண்ணின இதுக்கு ஷாமணம் – இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -)
(அநாதி காலம் அபராதம் பண்ணி ஆபி முக்கியம் பண்ணினான் ஆகிலும் -அவனைப் பார்த்தால் அவருக்கு தேட்டம் அது –ராவணனனே வந்தாலும் கூட்டிவா -என்று இருக்கும் ஈஸ்வர ஹிருதயம் –நம்மையும் நம் பூர்வ விருத்தத்தையும் பார்த்தால் பண்ண வேண்டி இருக்குமே- பீதனான படியால் -மாம் ஏகம் –பற்றும் பற்றும் உபாயம் ஆகாது -ஸ்வீ காரத்தில் உபாய பாவம் கூடாது- உபாய வரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும் -ஸ்வீகார பர கத ஸ்வீ காரம் -பிராப்தா யார் – பலி-யார் – அடைபவன் யார் -நாமா அவனா என்ற வாசி உண்டே -சரண்ய ஹ்ருதய அனுசாரி முன்னே சொல்லி இங்கு பூர்வ விருத்தத்தையும் பார்த்து உம்மைத் தொகை -இரண்டு காரணங்களால் அபராத கோடியிலே ஆகுமே -திருமுக மண்டல மலர்த்திக்காகவே சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அதி பிரசன்னமாகி ஆவான்- சொத்தை அடையப் பெற்றோமே என்று –தான் ஏற இடம் பார்த்து மடி மாங்காய் இட்டு -அவன் இருக்க -நான் உன்னைப் பற்றுகிறேன் -என்றால் திரு உள்ளம் கன்னும் அன்றோ –த்வமேவ -என்று தொடங்கி –உற்றேன் உகந்து பணி செய்தேன் சொல்லாமல் -பந்த விசேஷங்களை விண்ணப்பம் செய்து -குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை -பரதன் அனைவரையும் கூட்டிப் போனது போலே அனைத்து உறவுகளையும் சொல்லிக் கொண்டு —பிரபத்தி பிராயச்சித்தமாக அருளிச் செய்கிறார் -)
(சர்வ பாபங்கள் என்னாமல் அபராதங்கள் –அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய -என்பதால் –
பிராயா =பாவம் – சித்தம் -விஜானீய சோதனம் போக்கும் செயல் -த்வா-பிரபத்தி அதிகாரி விசேஷணமாக மீண்டும் –கீழே சரணம் வ்ரஜ -சொல்லி இங்கு -பாப நிவ்ருத்தி நிமித்தமாக சரணாகதி பண்ணு எங்கே உள்ளது என்னில் – பிராப்தி பந்தக நிவ்ருத்தி -பிரார்த்திக்கிற அடியேன் –பிரபத்தி அனுஷ்டித்தவனை குறித்து சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாம் என்பதால் -பிராத்த பண்ணினதால் அல்லவே -ஸ்ரீ மன் விழித்து த்வயம் அர்த்தம் கொண்டால் த்வத் சரணம் -உன்னுடைய திருவடிகளை என்று அத்யாஹாரம் கொள்ள வேண்டும் -ஸ்ரீ மன் நாராயண -சமஷ்டி யாக கொண்டால் அவர் திருவடிகளில் -என்று கொண்டு த்வத் வேண்டாமே -ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக ரக்ஷித்து மாதா -பிதாவும் நீயே – உள்ளே நியமித்து நல் வழி படுத்தும் பந்து –குரு வித்யா தனம் சர்வரும் நீரே -தேவதேவ –
ஞானப் பிதா பூஜ்யத்தின் எல்லை ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் வார்த்தைகளை மீண்டும் கத்யத்தில் அருளி –
தேவரீரை பிரகாசப்படுத்த பிரதிபத்தி –அபராத ஷாமணம் -)
(அபராத அனுகுண தண்டனை நிவர்திக்க சங்கல்பம் –ஒரு பந்துவே இல்லாமல் சத்ருவாய் இருந்தாலும் பிரபத்தி மாத்ரத்திலே ரஷிப்பவன் –ஆர்த்தோ வா -சுக்ரீவன் இடம் பிராணனை விட்டே இஷ்வாகு வம்ச சரணாகதி ஈசானம் தர்மம் பெருமாள் சொன்னாரே –
அவதாரத்தில் மெய்ப்பாட்டாக முன்னோடியாக பாஷ்யகாரர் காட்டி அருளுகிறார் கத்யத்தில் -சேஷ அவதாரமாய் இருக்க பூர்வ விருத்தங்கள் இவருக்கே இல்லையே என்னில் நமக்காக என்று பாவனா மாத்ரமாகில் என்றால் -வர பிரசாதமும் பாவனா மாத்ரமாகுமே —
ந்யாஸ திலகம் இறுதியும் ஆர்த்தி பிரபந்தம் இறுதி பாசுரமும் ஒரே கருத்து -நீர் கொடுத்த வரத்தை கேட்டு புது தெம்பு-சாத்விக – அஹங்காரம் எனக்கு வந்தது -அடியேன் ராமானுஜ தாசன் என்ற மதத்தால் சம்சார காட்டில் அலைகிறேன்–ஸ்ரீ ரெங்க நாதா –
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் நம்மதன்றோ மா முனிகள் -பாவனா மாத்திரம் என்று சொல்ல ஒண்ணாது பாரமார்த்தகமாகும் –பிரஜை செய்த குற்றத்தை அத்தோடு உண்டான பந்தத்தால் தங்களது என்று கொண்டு -ஏறிட்டுக் கொள்வது போலே -பாரமார்த்திகமே -தாச பூதம் -அடியேனை தாண்டுவிப்பாய் பிரார்த்தனை உண்டே -என்னுடையவர் பாபங்களை என்னைக் குறித்து சொல்ல வேண்டாமோ என்னில் -மாம் -அஸ்மாதாதிகள் அந்தர்பூதம் ஆகையால் விரோதம் இல்லை நிழல் தாண்டாமல் நாம் அவருடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் அவருடைய மாம் சப்தத்துக்குள் இருக்க வேண்டுமே -அபிமானத்துக்குள் ஒதுங்கியவர்களை தம்மோடு சேர்த்து கொள்ளலாமே -)
(த்வயி சாதி ரங்க துர்ய சரணாகத காமதுகே நிருபதிக ப்ரவாஹ கருணா பரிணாஹவதி
பரிமித தேச கால பலதான் பல தாக்ருதிக்காந் கதமதி குர்மஹே விதி சிவ ப்ரமுகாந முகாந்–ந்யாஸ திலகம் –29–ஸ்ரீ ரெங்க நாதா –அடியேன் ராமானுஜ தாசன் என்ற மதத்தால் சம்சார காட்டில் அலைகிறேன்-)
(இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-)
அதாவது –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே –
சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –
இப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று பண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் –
த்வமேவ மாதா ச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு
உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –
தஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின இவ் வபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று ஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –
ஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –
ரிபூணாபி வத்சல –
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்று
இருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு குறை இல்லை –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால் இவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –
——————————————–
இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் -அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –
சூரணை -147-
நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு ஸஹாத்திலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –
(இதுக்கு மூலம் பெரியவாச்சான் பிள்ளை சரணாகதி கத்ய வியாக்யானம்
தஸ்மாத் ப்ரணம்ய -இத்யாதி-அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது
யாருடைய ஹ்ருதயத்தாலே என்னில் -ஸ்வ ஹ்ருதயத்தாலே
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபி முக்யம் பண்ணினானே யாகிலும்
ரிபூணம் அபி வத்ஸல –
யதிவா ராவணஸ் ஸ்வயம் –
என்கிற அவன் படி பார்த்தால் இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை
ஆகிலும் பதி விரதையாய் இருப்பவள் நெடு நாள் வியபசரித்துப் பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் என்கிற இதுவே ஆலம்பனமாக வந்து என்னை ரக்ஷிக்க வேணும் என்று முன்னே நின்றால் வருகை தானே அபராதமாய் அதுக்கும் மேலே
என்னை ரக்ஷிக்க வேணும் என்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹானியுமாயும் இருக்கும் இறே -)
(அழகிய மணவாளனே பார்த்தா -இங்கு –மாதரார் கயல் கண்
பண்டு காமன் ஆனவாறும் பாவையர் அமுது உண்டவாறும் -ஓடினேன் ஓடினேன் -இதை போலே முகம் சுளிக்கும் படி அன்றோ பிரபத்தி -கீழே
ஸ்ரீ பரத ஆழ்வான் – ஸ்ரீ பாஷ்யகாரர் அனுஷ்டானம் அருளிச் செய்து –
இங்கு நமக்கு தெரிந்த ஒன்றால் விளக்கி அருளுகிறார் -)
(ஆய் ஸ்வாமிகள்-லஜ்ஜையும் பயமும் இல்லாமல் திரும்பி -சக்திமான் இடம் திரும்பி -துஸ் சரிதம் கேட்டு கண்டு கிளர்ந்து இருக்கிற –ஸ்வ தந்த்ர பர்த்தா இடம் அருகே சென்று தொடை நடுங்காமல் காலில் விழுவது அதி சாஹசமாய் அந்நிய பரனாய் அநாதி காலம் -பரம சேதனன் அறியும் படி -நிருபாதிக –சம்சாரத்தில் வந்த பொழுதும் -அர்ச்சாவதார -முன்னே போகாமல் – திரிந்து -அவன் முன்னே வெட்கம் இல்லாமல் போக -பர புருஷ காமினி ஆசை என்றும் கமனம் -கூடச் செல்வதும் அர்த்தம் – குற்றம் கணக்கிட்டு ஷிபாமி என்னும் ஸ்வ தந்த்ர ஸ்வாமி முன்னே -நின்று -சரண வரண ப்ரபத்தியும் –ஆக-பலித்தவ அபிமானம் அற்ற பர தந்த்ரன் பண்ணும் பிரபத்தி உபாயமாகாது-பலியுமாய் ஸ்வ தந்திரனுமாய் தான் வரிக்கும் உபாய பிரபத்தி அபாயகரமாகுமே ஸஹஸாரம் -கூடவே போகும் காரணமும் காரியமும்– சார செல்லுதல் -அபிசார – வியபிசாரம்-வேறே வேறே சப்த பிரயோகங்கள் -)
அதாவது –
நெடும் காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள் ஒரு பார்யை –இப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல் சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் –இத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது நம்மை வந்து இப்படி நம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில் செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –அவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் –எத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –
பகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் – ஸ்வ பூர்வ விருத்த அனுசந்தாநத்தால் வரும் லஜ்ஜையும் –
ஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிகே
தத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –
ஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –
———————————————
இனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –
தந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-
சூரணை -148-
கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –
(அவிதேயாத்மா -அடங்காதவன் சங்கர பாஷ்யம் — விதேயாத்மா-அடங்கினவன் –பற்றுடை அடியவர்க்கு எளியவன் -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் இரங்கி-கிருபா காரியமாகவும் ஸ்வா தந்த்ரமாகவும் பாரதந்தர்யம் வருமே -தானே ஸ்வா தந்ரத்ரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் -குறுக்கே கேட்க ஆள் இல்லை -கிருபைக்கு குறுக்கே ஸ்வா தந்தர்யம் வரலாமே )
(ஆய் ஸ்வாமிகள்-ஸ்வகத ஸ்வீ காரத்தால் இரக்கம் கிருபை வரும் – பரகத ஸ்வீ காரம் ஸ்வா தந்தர்யம் அடியாக சம்சார சக்கரத்தால் கர்மம் அடியாக சுற்றி -துக்கத்தில் உழல -காபி யார் இடமோ (-காபி சபரி -தயா சதகம் )-கிருபா ஏற்பட்டு -பிரகாரதயா சேஷபூதன் –
கிருபைக்கு வசப்பட்டு -கடாக்ஷித்து அங்கீ கரிக்குமதில் காட்டில் — இத்தலையில் சுக துக்கங்கள் காணாமல்-இச்சா காரியமாக ஸ்வா தந்திரம் அடியாக பாரதந்த்ரன் –
உகந்தார் ஒருவனை யானை தலையிலே வைத்துக் கொள்ளுமா போலே -செருக்கால் மேல் விழுந்து அங்கீ கரிக்குமதே பிரபலம் -இரக்கப்பட்டு அனைவருக்கும் மோக்ஷம் கொடுத்தால் லீலா விபூதி நீடிக்கவும் சாஸ்திரம் ஜீவிக்கவும் ஸ்வா தந்திரம் சொல்லலாமே —
சிறை இட்டவனே சிறை வெட்டுவதே சிறப்பு-கடாக்ஷ பிரேரகமாகும் அளவு இல்லாமல் மேல் விழுந்து அங்கீ கரிப்பதே உசிதம் ஸூ இச்சா அனுரூப கிருபா விகாச விசிஷ்டானாவதை விட ஆகாராந்தர ஆபன்ன ஸ்வாதந்த்ர விகாச விசிஷ்டானாவது உயர்ந்தது என்றபடி -)
(ஸ்வ தந்த்ர ஸ்வரூபம்- ஸ்வதந்த்ர பரதந்த்ரமான -தனது குணத்துக்கு தானே -பரதந்த்ரம் படுகிறான் – அவன் நினைவு கூடின போது -இவனுடைய ஆர்த்தி அதிசய காரி ஸ்வீ காரம் அவனுக்கு கிருபா ஜனகம் -ஸ்வ கத ஸ்வீ காரம் -கிருபையை தோற்றுவிக்கும் -பரகத ஸ்வீ காரத்தோடு துல்யமாக இருக்காதே –பலத்தில் வேறு பாடு உண்டே –ஸ்வார்த்த பலம் அதுக்கு -பரார்த்த பலம் இதுக்கு கிருபையை ஸ்வா தந்தர்யம் தடுக்குமோ என்னில் –இன்புறும் இவ் விளையாட்டுடையான் அன்றோ –-லீலா விபூதியும் நித்யம் அன்றோ -தத் அபிமத நித்ய விபூதி விருத்தமான லீலா விபூதி வர்த்தமாவதற்கு தடுக்கலாம் )
அதாவது –
ஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –
தனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் நிர்ஹேதுகமாக சிலரை அங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-
இரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –
இதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும்-(பலத்தோடு சேராமல் ) கூடும் –
பிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –
ஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –
——————————————–
இவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –
சூரணை -149-
இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-
(தானே வரித்து -என்ற பிரமாணம்–யாரோ ஒருவனை -என்றது -சேதனனுடைய அபேக்ஷை கல்பிதமாக உள்ளது -ரஷிக்க வேண்டும் என்று-அபேக்ஷித்தவனை என்றவாறு –பூர்வ பக்ஷம் – இல்லையாகில் வைஷம்யாதி தோஷம் வருமே –ரஷ்யாம் அபேக்ஷை சாஸ்திரமும் சொல்லுமே -புருஷ அபேக்ஷை இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே -ஆகவே திருவடி குகப் பெருமாள் இருவருக்கும் அபேக்ஷை -ஏழை ஏதலன் – வாத மா மகன் -இரண்டும் பிரார்த்தித்து பெற்றார் என்பர் பூர்வபஷி -நாதவ் புருஷகாரம் -நாதவ் -புருஷகாரமும் வேண்டாம் -ஸூ இச்சையாலேயே யாரையாவது எப்போதோ கூட்டிப் போவேன் —
கஞ்சன-இந்த ஸ்லோகத்தில் -அபேஷித்த ஒருவனை என்று பூர்வபஷி –
யமேவைஷ-– ஏவ ஈஷா யார் ஒருவன் இந்த பரமாத்வாவின் இடத்தில் உபாசனத்தில் உள் அடங்காமல் காதல் உடன் உள்ளவன் ஸ்ரீ பாஷ்யகாரர்-நிர்வஹிக்க -பரகத ஸ்வீ காரம் என்று சொல்ல முடியாது –
நாய மாத்மா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ஸ்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய தஸ்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்- இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது –பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாது —நமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்-யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் -யமேவ-அநீயத வியக்தி- கேவல -ஸ்வாதந்தர்யம் அடியாக வந்தது தானே —-கட வல்லி யிலும் முண்ட உபநிஷத்தில் -உம்மை தொகை அனைத்திலும் பர கத ஸ்வீ காரம் பிடித்ததாக உண்டே –குகன் திருவடி விபீஷணன் மூவரும் கொஞ்சம் வந்தது -அபேஷா காரணம் என்பர் பூர்வபஷி -தாத்பர்யம் அறிய உபக்ரம உபஸம்ஹாரம் திரும்ப திரும்ப சொல்வது-அசக்ருத் கீர்த்தனம்- அடையாளம் காட்டுவது -தட்டுங்கள் திறக்கப்படும் என்பர் இத்தை கொண்டே அபேஷா கார்யம் –யமேவ -யாரை வரிக்கிறானோ -சொல்வது ஸ்வாரஸ்யம் -கல்பித்து பிரார்த்தனை பண்ணினவர்களுள் ஒருவனை சொன்னால் ரசிக்குமோ-பிரிய தமத்தை-இதில் வைத்தால் அவனை விருப்பமுடன் ஏற்கிறான் –பிரிய ரூப உபாசனத்தால் அடைய முடியாது சொன்ன பின்பு இது அதுக்கு விரோதம் வரும் –யமேவ என்பதால் – வைஷம்யம் குற்றம் வராது -தர்மி -பகவான் கிரஹநம் மான பிரமாணம் -இன்னான் என்று சொல்லும் பிரமாணம் –வைஷம்யம் கிடையாது என்கிறதே வேதமும் இயற்கையில் இப்படி தானே கிரஹிக்க வேண்டும் -மான சித்தம் ஆகையால் தோஷம் இல்லை -சித் அசித்தாக பிறவி எடுக்க முடியாதே -அசேதனமும் சித்தாக முடியாது உருவாகாது அழியாது -வைஷம்யம் இது என்று சொல்ல முடியாது
ஸ்ரீ மஹா லஷ்மீ பூமா தேவி வியக்திகள் மாறாமல் தானே உண்டு –உபாசன விதி வையர்த்தமும் இல்லை -குக மாருதி விஷய அனுஷ்டானமும் சுருதி அர்த்த -பிடித்த பரகத ஸ்வீ காரமே என்றதாயிற்று-ரக்ஷகத்வம் நிருபாதிகம் கல்யாணத்வம் சித்தியாது அபேக்ஷை எதிர்பார்த்தால் -சிக்ஷணமும் ரக்ஷணமும் சமம் -தவறு செய்தால் சிக்ஷிக்கிறான் –நல்லது செய்தால் ரக்ஷிக்கிறான் ஆகவே இரண்டுமே சோபாதிகம் சமம் என்பர் பூர்வபஷி– ரக்ஷகத்வம் இயற்க்கை சிக்ஷகத்வம் வந்தேறி அன்றோ—ஈஸ்வரனே பலி –புருஷன் பிரார்த்திக்காமல் புருஷார்த்தம் இல்லை என்றால் -சேதன அபேக்ஷை இல்லாமலேயே -புருஷ சப்தம் ப்ரஹ்மத்தையே குறித்து-ஈஸ்வரனே வெகு நாளாக இவனை அடைய யத்னம் பண்ணி இருக்கிறான் -அன்றோ இவ்வாறு அனைத்து பூர்வ பஷ வாதங்களையும் நிரசித்து அருளுகிறார் -)
இவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ஸ்வீகாரத்தை –
வேத புருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –
நாய மாத்மா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ஸ்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய தஸ்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று
கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
அஸக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –
———————————-
இத் தலையில் அபேஷை இன்றிக்கே இருக்க -இவ் விஷயீகாரம் சித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -150-
அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –
(ஆய் ஸ்வாமிகள் -வைஷம்யம் அவனுக்கு இல்லையே –ஸ்வா தந்தர்யம் உள்ளது என்கிற வேத புருஷனே வைஷம்யம் இல்லை என்கிறான் –திர்யக் ஜென்ம-மற்றோர் ஜாதி பாட்டு -கீழ் மகன் இருவருக்கும் உண்டே –ஸ்வா தந்த்ரனுடைய அங்கீகாரம் நினைவற உண்டாயிற்றே)
(உப ப்ருஹ்மணம் – சுருதி போலே –த்வமேவ உபாய பூத -ரஷ்யாபேஷாம் ப்ரதீஷ்யதே -உபாசனம் விதித்து -அபேக்ஷை -நாயமாத்மா -எத்தாலும் அடைய முடியாது -நாசவ் புருஷகாரேண கேவலம் மதீய இச்சாயா -கேவலம் இச்சா ஏவ யாரையோ எப்போதோ -கர்மத்தால் மட்டுமே -சம்சித்தி -ஜனகர் போலே – அதே போலே இடைவெளி இல்லாமல் சித்தி சொல்ல வில்லையே –கடாக்ஷித்து பலம் உண்டு என்று சொல்ல வில்லையே -பல உபாதானம் வேணுமே –யாரையும் கடாஷிப்பேன் என்றாரே ஒழிய அத்தால் சம்சித்திம் சொல்ல வில்லையே -பிரதம கடாக்ஷம் நிர்ஹேதுகம் தான் –இதுக்கு பின்பும் விஷயாந்தர வாசனை ருசிகளால் பிரதிபந்தகங்கள் வருமே -பல சித்தி இவை தொலைந்த பிறவியில் தான்-ஆக கடாக்ஷத்துக்கு பின்பும் -மோக்ஷம் போகாதவர் உண்டே –பர கத ஸ்வீகாரம் மோக்ஷத்துடன் இணைக்க வேண்டுமே-அதுக்கு பதில் -இந்த சூர்ணிகை – அபேஷா எதிர்பார்க்காமல் -பம்பா தீரத்தில் -கூடினார் என்கிற இத்தையும் குகனை அடைந்து ஸந்தோஷம் –இரண்டாம் வேற்றுமை உடன் வருவதே -கர்மா -தானே ப்ராப்யம் – குகனை -பிராப்யம் -ராமன் பிராப்தா -பலி இவன் என்றால் எல்லாம் பொருந்தும்
ஹநுமதா உடன் சேர்ந்தார்-சங்கதா –த்ருதீய வேற்றுமை இங்கு -சைத்ரன் மைத்ரனோடே அடைந்தார் போலே -ராமன் ஹநுமானோடே சேர்ந்தான்-பெருமாள் எழுந்தருளி சங்கதரானபடியைச் சொல்லிற்று –கர்த்தா உடைய கிரியையாக மூன்றாவது வேற்றுமை -ராமனுக்கு தான் வேலை -கர்த்தா -இவன் தானே –அத்யந்த தூரம் பெருமாளும் கிஞ்சித் தூரம் இவர்கள் – கபட சந்நியாசி வேஷம் -சரண் அடைய வரவில்லையே-சாதூனாம் பரித்ராணாம் பெருமாள் வந்த காரணம்-ஹேத்வந்தரத்தால் வந்தது அசத் கல்பமாகுமே -இவர்கள் கிஞ்சித் செய்ததும் மற்ற காரணத்துக்காகவே வந்தார்கள் – இரண்டாம் வேற்றுமை துணியை –உத்பாதகத்வம் -ஸம்ஸ்காரத்வம் -விகார்யத்வ -மூன்றாலும்–இல்லை என்றால் அடைதல் விகார்யத்வ-மண்ணைக் குடமாக்கி –ஸம்ஸ்காரத்வம்-தண்ணீரைத் தெளித்து போலே-ராமன் மூன்றாலும் இல்லை-அடைந்தார்–திருக்குறுங்குடியை அடைந்தார் பிராப்பியமாக -நாலாவது காரணமே இங்கும் –பலியாவார் பரகத ஸ் வீ காரம் தானே –தர்மாத்மா ராமன் அடைந்தார் என்பதாலே அபேக்ஷை எதிர்பார்க்க வில்லையே -அன்புக்கு இருப்பிடம் ராமன் விஷயம் குகன் -அங்கு தானே பிரபலமாய் இருக்கும் பிரியம் என்று தான் யாரை விரும்புகிறானோ -விருப்பம் அவர் இடம் பிராப்யம் அவரே -பர கத ஸ்வீ கார்த்தம் தெளிவாக -விவரணமாக அடுத்து -திருமந்திரம் த்வயம் சரம–விவரண பாவம் என்பதால் முமுஷுப்படியில் இந்த க்ரமம் -திருமந்திரம் – சரம- த்வயம் -மற்ற இடங்களில் ஞானம் உபதேசம் அனுஷ்டானம் என்பதால் க்ரமம் –இங்கு இரண்டாம் வேற்றுமையில் தெளிவாக ப்ராப்யம் அவன் என்று காட்டுவதால்-குகன் ஆஸாத்யா-இரண்டாம் வேற்றுமை -ஹநுமாதா சங்கதா -மூன்றாம் வேற்றுமை –அஸ்பஷ்டமானவற்றை முதலில் திருவடி விஷயத்தை -முதலில் சொல்லி பின்பு ஸ்பஷ்டமான குகன் விஷயத்தை பின்பு வைத்தார் -முன்னால் இது நடந்ததாகிலும் -விவரண பாவமாக இங்கு அருளிச் செய்கிறார் –)
அதாவது –
தம் தாம் பக்கல்-( இருவர் உண்டே என்பதால் பன்மை ) அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –
பம்பா தீரத்திலும் –
கங்கா கூலத்திலும் –
பெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –
——————————————-
இப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –
தமப்யபாஷ ஸௌமித்ரே ஸூக்ரீவ ச சிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –
மாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி– பெரிய திரு மொழி -5- 8- 1 என்று
இளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே
மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன
அருளிச் செய்கிறார் –
சூரணை -151-
இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்-
அபய பிரதாநத்திலும் காணலாம் –
(உம்மைத் தொகையால் கீழ் குகனை பிராட்டிக் மூலம் -இங்கு லஷ்மண மூலம் திருவடி -ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருந்தும் அதே ஸ்வா தந்த்ரம் அடியாக இவர்களை வைத்தால் என்றே கொள்ள வேண்டும்)
(சம்பிரதாயத்தில் அபய பிரதானம் என்றால் ஸ்ரீ விபீஷண விஷயீ காரம் – புருஷகாரம் எதிர்பார்க்காமல் கேவலம் இச்சையால் என்பான் என்னில்-இதுவே இயற்க்கை -ஸ்வா பாவிகம் – இருந்தாலும் ஸ்வா தந்தர்யம் அடியாக புருஷகாரமாக ஏற்படுத்தி வைத்து உள்ளான்-நிரதிஷ்டா ஸ்ருதியும் சொல்லுமே-யாரும் யாதும் இல்லாமலும் இவன் பண்ணுவான் – -இவள் மூலமாகவே தான் பண்ணுவான் -இரண்டும் உண்மை –
நமக்கு கைங்கர்யம் தருமா போலே இவளுக்கும் இது -)
(ஆய் ஸ்வாமிகள்-ஆஸ்ரயண உன்முகனான சேதனன் ஸூ அபராத பய நிமித்தமாக -முன்னிட்டும் புருஷகார பூதனை முன்னிட்டே கைக் கொள்ளும் ஆஸ்ரயணீயனும் முன்னிட்டே கைக் கொள்ளும் – சுக்ரீவாதிகளை -பெருமாளும் முன்னிட்டு -ஸூ ஸ்பஷ்டமாக காணலாம் -பிரதானரை முன்னிடவே அப்ரதானரும் அந்தர்கதம் தானே முதலிகள் அனைவரும் ஸூக்ரீவன் இடமும் அந்தர்கதம் தானே –விபீஷணன் வானர உத்தமர்களை முன்னிட்டு பெருமாள் சுக்ரீவனை அழைத்து வரச் சொன்னாரே -பிராட்டியையும் முன்னிட்டு -உம்மைத் தொகை -மேலே வானர முதலிகளையும் புருஷகாரமாகப் பற்றினான்-என்பதால்)
(அவதார பிரயோஜனம் ஸ்ரீ விபீஷணனை அங்கீ கரிக்கத் தானே -கீழ் எல்லாம் முன்னுரை -அபய பிரதானம் சாரம் -பரதந்த்ரை -பிராட்டிக்கு ஸ்வரூபம் -இதனாலே வலிய சிறை புகுந்தாள்–இதனாலே இங்கும் பரகத ஸ்வீ காரம் தானே-
ஹனுமான் ப்ரஹ்ம பட்டத்துக்காக தபஸ் புராணாந்தரம் சொல்ல- பகவத் விஷயீகாரம் உச்சிதமோ என்னில் -பூர்வ சதகம் –57-விஷ்வக் சேனர் விபீஷணன் ஹனுமான் மோக்ஷம் உபேக்ஷித்து ஸ்ரீ ரெங்காதனத்தில் பெரிய பெருமாளை ஸந்தோஷம் படுத்திக் கொண்டே –
குண அனுபவ ஏக பரர்கள்-அகிலமும் காணும் படி எழுந்து அருள-புராணாந்தரங்கள் கல்பாந்தர ஹனுமான் பற்றி -நமக்கு தெரிந்த கல்ப திருவடியை சொல்ல வில்லை இது)
(மாழை-அழகு – மான் போன்ற பவ்யமான கண்கள் – வால்மீகி மித்ரன் -என்பர் -தம்பி ஆழ்வார்கள் –புதல்வரால் பொலிந்தான் கம்பர் -முதல் வேற்றுமை கர்த்தா -இரண்டாம் வேற்றுமை கர்மா -மூன்றாம் வேற்றுமை-கருவி உண்டே -கர்மீ பவித்தல் ஆளாவது என்றவாறு -விபீஷணன் விஷயத்தில் தான் பலர் எதிர்க்க இவன் அங்கீ கரித்தான் – ச பக்ஷ விஷயம் அபய பிரதானம்–புகை ஹேது மலை பக்ஷம் நெருப்பு சாத்தியம் -மடப்பள்ளி ச பக்ஷம் -என்பது போலே –
ஹநுமாதா சங்கதா- குகன் ஆஸாத்யா – விபீஷணன் சங்கமித்தான் -சுவாரஸ்யம் தத் தத் உத்தேச்யம் -தூரத்தில் நின்றும் தத் தத் தேசம் வரை வந்து -தத் தத் சம்ச்லேஷ -தத் தத் இவர்களை கர்மமாகக் கொண்டு பகவான் கர்த்தா -பர கத ஸ்வீ காரம் சித்தம்
யாதிருச்சிகமாக இவர்களும் சில தூரம் நடக்க – ஆஜகாம -முஹுர்த்தேன அதி பலஸ்ய லஷ்மணன் -முன்னிட்டு திருவடி ஸுமித்ரே அவரையே பெருமாளும் முன்னிட்டு அங்கீ கரித்தது ஸ்பஷ்டம் -குகனும் பிராட்டி மூலம் –சீதை யுடன் கூடி ரதத்தில் நின்றும் இறங்கினான் என்பதால் — தத்வ தர்சி வாக்கியத்தில் ஸ்பஷ்டம் -நிர்ஹேதுக பரகத ஸ்வீகாரமே தாத்பர்யம் – யாதிருச்சிகமாக சரணாகதி போலே இவர்கள் கிஞ்சித் காரம் -மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் -அபயம் சர்வ பூதானாம் -நிவேதயதே கூட்டத்தை முன்னிட்டு-சுக்ரீவனையும் நோக்கிச் சொன்னான் -ஹரி சிரேஷ்ட சுக்ரீவ -சப்தம் –
அவனுக்குள் குரங்கு கூட்டமும் அடங்கும் – -சுக்ரீவன் மூலம் பெருமாள் ப்ராஹ்மணர்களும் வந்தார் வசிஷ்டரும் வந்தார் போலே பிரதானரை தனித்து சொன்னது போலே
பிரதான கிருதம் ஸர்வத்ர கிருதம் பவதி -ஆச்சார்யருக்கு மட்டுமே அச்சதை கொடுக்க வேண்டும் -கிருஷ்ணன் ஒரு பருக்கை சாப்பிட அனைவரும் உண்டதாகவும் உண்டே
ஐந்து வானரங்களை பிராட்டி கண்டாள் ரிஷ்யமுக பர்வதம் –தேஷாம் மத்யே விசாலாட்ஷி –
கனக ப்ரபம் –கௌசேயம் -பொன்னாடையில் பொன் ஆபரணம் — மாழை மான் மட நோக்கி வார்த்தை போலே இங்கே விசாலாட்ஷி சப்தம் – கடாக்ஷ விசேஷம் -நிர்ஹேதுக பகவத் அங்கீ காரத்துக்கு அவன் விரும்புவது அன்றோ இது-த்ரிஜடை உடன் பிறந்தவள் — சரமா-மனைவி – அனலா -பெண் மூவரும் -துல்ய நியாயம் – சரமா உடன் சீதா தோழமை என்பதால் விபீஷணன் உடன் பெருமாள் அபிபாகம் -வேறு பாடு இல்லையே இருவருக்குள்ளும் ராவணனையே திருத்தப் பார்த்தாளே ராமஸ்ய வியவஸ்தாயா அது வழியே நடப்பதே இவளுக்கு ஸ்வரூபம் – இவளது கடாக்ஷம் பரகத ஸ்வீ கார உபயோகி -)
அதாவது –
இச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை
அவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –
திருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –
எங்கனே என்னில் –
சோஹம் பருஷி தச்தேன தாசவச் ச அவமானித த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை
அபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் –
ஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –
திருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை
அல்லாமையாலே அவளை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –
பிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே –திரு ஆபரணங்களை பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-
இலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –
பெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள வேண்டும் –
பரதந்த்ரையான அவளுக்கு இத் தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –
ஆகையால் இறே –
பரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது
—————————————————-
இவன் நிருபாதிக சேஷ பூதனாய்- அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –
இப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–
சூரணை –152
இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –
(ஆய் ஸ்வாமிகள்-ஆஸ்ரய உன்முகனும் ஆஸ்ரயணீயனும் புருஷகாரரை முன்னிட்டு –அநாதி கால வைமுக்யம் -அன்யா விஷய ப்ராவண்யராய் ஆஜ்ஜா அதிலங்கராய் –அநாதி காலம் உபேக்ஷிப்பதால் வந்த குற்றங்கள் –என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமால் -அவர்ஜனீய சம்பந்தம் -விட்டு ஒழிக்க ஒண்ணாத சம்பந்தம் – உசித உபாயம் எடுத்து சொல்லி சீறாமல்- கிருதி ஸாத்யராய்–சமிப்பிக்கைக்கு –போக்கி விடுகை -இத்தை நினைத்து சேதனன் வெருவாதப்படி பண்ணி அகன்று போகாமல் இருக்கப் பண்ணுகை -என்றவாறு –பிராட்டி பேச நமக்கு பயம் போகும் -அவளது -கிருதி சாத்தியம் -)
(அனலா பற்றி-சுந்தர காண்டம் -தாயார் தூண்ட சீதை இடம் சொன்னதை-தோழி -என் கையைப் பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்-திருவடியிடம் தெரிவிக்கிறாள் –மாத்ரா தாயாரால் தூண்ட இவள் தோழி போலே சொல்ல – ச குடும்பராக-அனலா சரமா திரிசடை — தன் திரு உள்ளத்திலே உகப்புக்கு ஊன்றி போனார்கள் –இந்த விஷயத்தை பெருமாள் திரு உள்ளத்தில் படுத்த அன்றோ திருவடி இடம் தாயார் இவ்விடம் அருளிச் செய்கிறாள் -)
சேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய் ததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி கூடு பூரித்து வைத்த அபராதம்
ஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –
அபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது
இவன் தன குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-
அவன் தன் குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை-
————————————
இவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–
சூரணை-153 —
ஸ்வரூப சித்தியும் அத்தாலே –
(ஆய் ஸ்வாமிகள்-ரஷ்யமாயும் ரஷித்தும் போகிற இருவருக்கும் -ரஷிப்பிக்கும் புருஷகாரம் –இரண்டுமே நித்யமானாலும் -பிரேரிகை தூண்டுவது இவள் அன்றோ –இதனால் ஸ்வரூபம் சித்திக்கும் இருவருக்கும் -கீழே – குற்றத்தை சமிப்ப்பிக்கைக்காக புருஷகாரத்தைச் -சொல்லி இங்கு இன்னும் ஒரு பிரயோஜனம்-ஆஸ்ரியையும் ததீயையும் பிராட்டி தானே –நமக்கு ததீய பாரதந்தர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -நடுவில் பிராட்டிக்கு இரண்டு ஆகாரங்கள் இதற்காக -அவளே ததியை உடைமை – நம்மை ஆஸ்ரயித்தவள் சொல்வதால் நம்மை ரஷிக்க என்று அவனும் ரக்ஷிப்பானே -)
(தேவும் தன்னையும் -தானான தன்மை யன்றோ ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸ்வரூபமாவது -சேதனனுக்கு ததீய பாரதந்தர்யம் -உடைமைக்கு -பிரணவம் சப்த ஜாலம் அடங்கி இருப்பது போலே அறிகிறோம் –
ஈஸ்வரனுக்கு ஸ்வா தந்தர்யம் தானே ஸ்வரூபம் –பரதந்தர்யமானால் உபாயத்வம் வராதே -இத்தை ஸ்தாபிக்க -பிராமணம் -கொண்டு –தேவத்வம் பரத்வம் தன்னையும் ஸ்வரூபம்- தத் ப்ரத்ய நீகமான ஆஸ்ரித பாரதந்தர்யம் – –ஆத்மாநாம் நாதி வர்த்ததே உன்னை நீ மீறாதே என்று லஷ்மணனும் பரதனும் சொல்வதும் மர்மம் நாடி பிடித்து ஆஸ்ரித பாரதந்தர்யத்தை மீறாதே என்று பிரார்த்திக்கிறார்கள் –
கடலை தன் கரையை மீறி வராமல் இருக்கத் தானே பிரார்த்தனை –சமுத்திர இவ காம்பீரம் இவனுக்கு -கரை கடலுக்கு சொந்தமே தானே-வேதாந்தத்திலும் -ஈசித்திருத்தவம் ஸ்வரூபம் என்றும் – ப்ரணத ஸுலப்யம் ஸ்வ பாவம் என்றும் -வேதாந்த ஸங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ருத பிரகாசிகையில் இவை இரண்டுமே உண்டே -வியாக்யானம் உண்டே -)
ஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -தேவும் தன்னையும் என்று-ஆஸ்ரித பாரதந்தர்த்தை இறே இவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-
பாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-
இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது , புருஷகார புரஸ் கரணத்தாலே என்கை–
—————————-
கீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-
சூரணை-154–
ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—
(ஆய் ஸ்வாமிகள் -ஸ்வ தந்த்ர ரக்ஷணம் உள்ளவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் ரக்ஷித்தால் கொத்தை அன்றோ -தத் ஏக பரதந்த்ரமான சேதனன் ஸ்வரூபத்துக்கும் கொத்தை வருமே என்னில்-இருவருக்கும் காரணத்தைப் பற்றி உபாதி ஓவ்பாதிகம் -காரணம் பற்றி வந்தால் காரணம் போனால் காரியம் போகும் –பிராட்டிக்கு பரதந்த்ரன் -சொல் படி ரக்ஷித்தால் குறை -வராதோ -தத் ஏக ரக்ஷகத்வம் சேதனனுக்கும் பிராட்டியால் பெற்ற ரக்ஷணம் குறை அன்றோ என்னில் –குறை இல்லை-காரணமே நித்யம் அன்றோ இங்கு -போகாமல் நித்யம் -அவள் எப்போதும் உடைமை –ததியை ஆகாரமும் ஆஸ்ரயியை ஆகாரமும் போகாதே
பிரணயி பிரணயினி சம்பந்தம் அபங்குரா-அழிவில்லாத காதல்- தொடர்ந்து இருக்கும் –
ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கு மேலே இவள் இடம் ப்ரணயித பாரதந்தர்யமும் உண்டே
ததீயத்வ நிபந்தனம்–அவனுக்கும் அவன் உடைமைக்கும் உள்ள சம்பந்தமும் அபங்குரம் தானே -இந்த ததீயத்வ உபாதி அடியாக வந்தவை அன்றியே -இயற்கையையிலே-நிருபாதிக – நிராங்குச ஸ்வாதந்த்ரயமும் -தத் ஏக பாரதந்தர்யமும் நமக்கு உண்டே -இவை தானே இருவர் ஸ்வரூபம்-இருவர்களுடைய–புருஷகார சாபேஷை -ரக்ஷகத்வ ரஷ்யத்வங்கள் -நிருபாதிக சம்பந்த சித்த -ஸ்வா தந்தர்ய பாரதந்தர்யங்களுக்கும் கொத்தை ஆகாதே–ஆக -ஈஸ்வரனுக்கு நிருபாதிகவுமாம் நித்யமுமாய் ஸ்வ சித்த வேஷம் ஸ்வா தந்திரம் ஒவ் பாதிகமாய் நித்யமுமாய் பிரணயித்தவ பாரதந்த்ரம்-சேதனனுக்கு நிருபாதிக நித்ய பகவத் பாரதந்தர்யம் ஸ்வ சித்த வேஷம் – ததீய பாரதந்தர்யம் ஓவ் பாதிகமாயும் நித்யமுமாயும் இருக்கும் என்றவாறு – பிரணயித்தவ ததீய பாரதந்த்ர்யத்துக்கு பிரதம விஷயம் பிராட்டி -சரம விஷயம் ததியர் -நம் வரை அவன் விஷயீ கரிப்பானே-ததீய பாரதந்த்ரயத்துக்கு பிரதம விஷயம் பிராட்டி -சரம விஷயம் அவனும் ததீயரும் அடியார் அடியார் அடியோம் ஆக வேண்டுமே-)
(இந்த இரண்டில் வலிமை -யுடையது -பிரணயித்தவம் போலே கதாசித் கிலாய்ப்பதுக்கு சம்பாவனை இல்லை-ஊடல் திறமோ பிரிவோ இல்லையே-கிம் கார்யம் சீதயாம் மம -சுக்ரீவன் ஆஸ்ரித சம்பந்தம் முக்கியமாக கொண்டானே –பத்நீத்வம் ஆஸ்ரிதத்வம் இரண்டும் பிராட்டிக்கு -இரண்டு ஆகாரங்கள் -இதிலும் ஆஸ்ரயித்வமே பிரதானம் – நித்யத்வம் உத்பத்தி விநாசம் இல்லை -பிரசித்த பிரமாணங்கள் — பும் பிரதான ஈஸ்வர ஈஸ்வரீ-மூன்று ஆகாரம்-– பும்ஸாம் சேதனானாம் த்ரிகுணம் பிரகிருதி ஈஸ்வரனுக்கு -ஸ்வரூபதயா ஜீவனுக்கு பத்நீத்வத்தால் அசேதனத்துக்கு ஈஸ்வரி -மனைவியான படி -பிரணயித்தவம் ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரி —இப்படி -தானான பத்னி காதல் மூன்று ஆகாரங்கள் ஸ்ரீ ஸ்ரயதே –ஆறு வித்புத்தி ஆஸ்ரயிக்கிறாள் ஆஸ்ரயிக்கப்படுகிறாள் -)
அதாவது சேதனனுக்கு இவ் (பிராட்டி)விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே –ஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —
ஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்– அவ் வுபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–
இருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் வர்த்தத்திலே பிரமாண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-
ஒவ்பாதிகம்-காரணத்தின் அடிப் படையில்-
————————————
இவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-
சூரணை-155–
அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —
(ஆய் ஸ்வாமிகள் –கர்ம பாரதந்தர்யம் அநித்தியம் தானே – நமக்கு மட்டும் இல்லை –பகவானும் நம் கர்மங்களுக்கு பர தந்திரம் -வைஷம்யம் இல்லை அவனுக்கு – –கர்மங்களை எதிர்பார்த்தே தண்டனை -ஆகந்துக பாரதந்தர்யம் குலைக்கும்-புருஷகாரத்தால் -கர்மம் குலையும் -அநித்யமாய் -தான் பண்ணின கர்மம் தானே அனுபவிக்கிறான் -கர்மத்தின் தலையிலே ஸ்வாதந்தர்யம் வைத்து தன்னைக் கொண்டு நழுவுகை தானே -ஈஸ்வரனுக்கு நம்முடைய கர்ம பாரதந்தர்யம்–தேவரீர் ஒழிய கர்மத்துக்கு ஒரு மூச்சு உண்டோ –சாஸ்திரம் விதிக்கலாம் -பிராட்டி சொல்வாள் – உம்மை தவிர்த்தா இவை -சும்மெனாதே ஓடாதோ -புருஷகார பூர்வகமாக – சித்த உபாய -ஸ்வீகார வர்ணத்தால் இவை விநாசம் அடையும் -அநித்தியம் –நெடும் காலம் கர்மம் இட்ட வழக்காய் -பகவத் பரதந்த்ரனாய் இல்லாமல் கர்மத்துக்கு அன்றோ வசமாக்கி உழல்கிறான் என்று பிராட்டி திரு உள்ளம் கொள்ள- திருத்தி -குலைய வைக்கிறாள் -சமிப்பிக்கும் அங்கு பிராட்டி கார்யம் செய்ய வேண்டும் அங்கு எல்லாம் -இங்கு கர்மம் குலையும் -குலைப்பிக்கும் என்பது இல்லையே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்றதும் தானே போகுமே தன்னடையே போகுமே நீயும் வேண்டா நானும் வேண்டா ரஷ்ய ரஷக பாவேனே சேரும் படி அன்றோ அவள் கார்யம்-இது கீழே சொல்லப்பட்டாலும் இங்கு அநித்தியம் சொல்வதால் புநர் யுக்தி தோஷம் இல்லை -)
அநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–
அதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது-அவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–
ஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –
தான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று
இவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–
இது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-
இவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையைத் திருத்தியும் , அவன் முன்னிடும் அளவில் இத் தலையைத் திருத்தியும்
இரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-
———————————–
அநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று பிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான இந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்- நிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம் விநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து முன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன அருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–
சூரணை-156–
ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —
(அரும்பதம்-உத்தர வாக்ய அவதாரிகை –பிரபன்னன் ஆகவே இருந்தாலும் ஹி பிரசித்தம் -கர்ம கிருத தேகம் ஒட்டிக் கொண்டே இருக்க -அதன் ஸ்வரூபம் காட்டுமே-சடக்கென பலாத்காரத்தாலே தீய பாதைக்கு இழுத்துக் கொண்டே போகுமே துரிதங்கள் வழியாக -இந்த ப்ராமணம் கொண்டு இந்த சூரணை -சாக்ஷி பிராட்டி இருப்பதால் ஆஸ்ரயணத்துக்கும் அங்கீ காரத்துக்கும் -இரண்டுக்கும் சாக்ஷி உண்டே -பந்தம் இருவராலும் ஒழிக்க முடியாதே -)
(ஆய் ஸ்வாமிகள் புருஷகாரத்தால் வந்த நன்மை சாத்தியம் இதுவே உபய அனுமத சாக்ஷி இருவருக்கும் அபிமதம் தானே இவள் -ரஷ்ய ரஷக சம்பந்தம் -ஸ்வத சித்தம் பந்தம் -சம்பந்தம் தெரியாமல் தவித்து இருக்க – ரஷகமான அவனாலும் ரஷியாமல் இல்லை செய்ய ஒண்ணாது -ரஷ்யகமான இவனால் அதுக்கு இலக்கு ஆகாமல் இல்லை செய்ய முடியாதே – –ரஷ்யமாக இல்லாமல் என்னாமல் அதுக்கு இலக்கு ஆகாமல் -என்று அருளிச் செய்தது -கர்தவ்யம் ஈஸ்வரனுடையதே என்பதால் -)
அதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் (மட்டுமே)அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார ரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—
——————————————
இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –
சூரணை -157-
என்னை நெகிழ்க்கிலும்-
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-
(சேதன ஆஸ்ரயத்துக்கும் -இவன் முன்னிடும் -முதல் பிரமாணம் -அவன் அங்கீகாரத்துக்கு அடுத்த பிரமாணம்)
(ஆய் ஸ்வாமிகள் -பிரமாணம் காட்டுகிறார் கீழே சொன்ன அர்த்தத்துக்கு – என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க கில்லான்-நப்பின்னை பிராட்டி சாக்ஷி உண்டே -ஆஸ்ரயணத்துக்கு இந்த பிரமாணம்-அமரர் முழு முதன் -நித்ய ஸூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு சர்வ சக்தியான தானும் கில்லான்
என் அன்பேயோ -சொல்வதற்கு முன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய -அங்கீகாரத்துக்கு இந்த பிரமாணம் – பிராட்டி பக்கல் உள்ள பரிவு அவள் பரிக்ரமமான என் அளவும் வந்ததே –முற்பட்டதில் சம்பந்தத்தில் சிதிலம் ஆகாமையையும் -கீழ்
அதில் பிராட்டி புருஷகார பூர்வகமாவதையும் ஸ்பஷ்டமாக உண்டே
இவன் முன்னிட்டும் அவர்களை அவன் முன்னிட்டும் என்பதால் இந்த க்ரமத்திலே அருளிச் செய்கிறார் )
(இருவராலும் -சொன்னாலும் அவன் விடாமல் இருப்பதே பிரதான்யம் -பரகத ஸ்வீ கார முக்யத்வ பிரகரணம் நப்பின்னை -கடகத்வம்-பிராட்டி செய்யும் கைங்கர்யம் இவர்களாலும்-நிழல் போலவே -)
இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் – நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு ஸர்வ ஸக்தனான தானும் கைவிட மாட்டான் என்கையாலே அவனாலே இப் பந்தத்தை இல்லை செய்யப் போகாது என்பதற்கு பிரமாணம் -அகல்விக்க தானும் கில்லான் -பெரிய பிராட்டியாருக்கு ஸ்னேஹி -அவள் பரிக்ரமான என் பக்கலிலே அதி ஸ்நேகிதியாய் ––
(அவள் இடம் அன்பு காட்டி என்னிடம் அன்பே உருவாகி -அதி சப்தம் இதனாலே -)
அரியன செய்து-(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -இதனாலே வந்து என்னுடன் கலந்த-என்கிறார் )இனி நான் நழுவ விடுவேனோ -என்கிறார்
புருஷகாரம் முன்னாக வந்த பந்தத்தை சேதனனாலும் இல்லை செய்யப் போகாதே –
அங்கே அவனாலே இல்லை செய்யப் போகாது -இங்கே சேதனலாலேயும் போகப் போகாது –
உம்மைத் தொகை பகவானால் இல்லை செய்யாமல் போகாதே என்பதே முக்கிய அர்த்தம் என்றவாறு –
—————————–
ஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –
சாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –
சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –
(வாத பிரதிவாதங்கள் இருந்தால் தானே சாக்ஷி வேண்டும் -நீதிபதியே ஒரு கட்சி வக்கீலாக இருக்க சாக்ஷி எதற்க்காக -கர்த்தா-நாமும் பகவானும் -பிராட்டியை குறித்து கர்த்தா -சேஷி சேஷ நமக்கு–ஸ்வரூபம் இது – பிரணயித்தவம் அடியால் அவருக்கு -குணம் இது
-கர்த்ரு சங்கோசம் செய்ய ஆள்கள் இல்லாமல் —ஸ்ரீயதே -ஆஸ்ரயிக்கிறோம் –கர்தரி முதல் வேற்றுமை – கர்மணி இரண்டாம் வேற்றுமை – கரணே வ்யுதோசத்தி மூன்றாம் வேற்றுமை – ராமன் ராவணனை வில்லாலே கொன்றான் –இருவரையும் நியமிக்கும் சாமர்த்தியம் உண்டே -இல்லை செய்ய முடியாமல் உபயருடைய சாக்ஷி பாரதந்தர்யம் -உண்டே –அன்பால் அவன் -ஸ்வரூபத்தால் நாம் – )
( ஆய் ஸ்வாமிகள்-இதுக்கு பிரமாணம் ஸ்ரீ -திரு நாமத்தின் வயுத்தபத்திகளே பிரமாணம்-ஸ்ரீ யதே கர்மணி வ்யுத்பத்தி மிதுன சேஷத்வ ஸ்வரூபம் -ஸ்வ ஸ்வ அனுகுணமாக அவளுடைய சேவா கர்த்தாக்கள் இல்லாமல் போகாதே – அனைவரும் சேவா கர்த்தா -நாம் ஸ்வரூபத்தால் அவன் அன்பால் –புருஷகார பரதந்தர்யம் –நினைத்தாலே சாக்ஷி வீண் ஆகாதே – இருவரும் பெரியதாக மதிக்கும் சம்பந்தம் இப்புருஷகாரத்துக்கு உண்டே-உன்மேஷித பந்தம் –தூண்டி கிளப்பிய பந்தத்தை இருவராலும் இல்லை செய்யப் போகாதே -)
(நிருபாதிக சேஷத்வ லக்ஷணம் -ஸ்வரூபம் -நமக்குத் தானே -பிரணயித்தவ சேஷத்வம் அவனுக்கு -ஆக இரண்டாலும் அனைவருக்கும் உண்டே –ஆகவே சேஷத்வ குண இரண்டையும் அருளிச் செய்தது –நியாய சித்த அர்த்தத்தை -தான் ஆஸ்ரயிக்கிறாள் -அகிலமும் இவளை ஆஸ்ரயிக்கப்படுகிறாள் -சகல -அகில வாசி ஓன்று விடாமல் காட்ட அகில – நிகில-வும் இதே அர்த்தம் –அகில புவன ஜென்ம -இதனால் -சகல சொன்னால் கர்த்ரு சங்கோசம் வருமே-எல்லாமும் மட்டுமே சொல்லாமல் ஒருவர் இடாமல் அனைவரும் –அகில பரமாத்வாயையும் சேர்த்து அகார வாஸ்யனையும் சேர்த்து சொல்லுமே -)
கர்மணி வ்யுத்புத்தி யாவது -ஸ்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள் என்று இறே –
இவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன
பரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –
அதாவது –
இரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-
இத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான
பார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –
——————————————
இப்படி இருக்கையால் இப் புருஷகாரம் பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல்
சூரணை -159-
அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம்
அவர்ஜநீயம் –
(அதிகாரி சித்தி அர்த்தத்துக்கு புருஷகாரம் அவர்ஜனீயம் –அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர்-ஐஸ்வர்யார்த்தி கைவல்ய பகவத் லாபார்த்தி மூவருக்கும் உண்டே என்பர் மா முனிகள் –ஆயி ஸ்வாமிகள் அப்ரஸ்துதம் என்பர் -அவர்களுக்கு பிராயச்சித்தம் தவிர புருஷகாரம் வேண்டாம் என்பர் -சூரணை -267-நாலாம் அதிகாரிக்கு -அனுக்ரஹத்துக்கு இலக்கு –அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர்-பிரபத்தி அதிகாரி த்ரயத்துக்கும் அபசார பய நிவ்ருத்திக்கு -ஸ்வ ஸ்வ அதிகாரி நியதி பூர்வ பாவியைப் பற்ற -இடத்தாலும் காலத்திலும் அவர்ஜநீயமாய் -பக்தி நிஷ்டருக்குப் போல பிராயச்சித்தம் தோஷங்கள் பண்ணிப் போக்காமல் புருஷகாரம் பண்ணி-பூ மேல் இருப்பவள் வினை தீர்க்கும் -விநாஸ்யமாய் இருக்கும் -இத்தை ஒழிய ஸித்த உபாயம் பலியாமையாலும் பிரபத்தி அதிகாரிகள் அனைவருக்கும் வேண்டும் -அதிகாரி த்ரயம் -என்று ஐஸ்வர்யாதி த்ரயங்களையும் கொள்ளுவது -அப்ரஸ்துதம் ஆகையாலும் -அவர்களுக்கு தத் தத் தோஷம் போக்க பிராயச்சித்தம் ஒழிய வேண்டியதில்லை -267 நான்காம் அதிகாரிகளான உபாயாந்தர நிஷ்டருக்கு உபாயாந்தர நிஷ்டருக்கு பிராயச்சித்தம் விசேஷம் என்று இவர் தாமே விசேஷிக்கையாலே — ஸ்ரீ யபதியைப் பற்ற உபாஸிக்க சொல்வதாலேயே புருஷகாரம் வேண்டும் என்பது இல்லை -நான்கு காரணங்களால் ஐஸ்வர்யாதிகளைச் சொல்ல முடியாது என்பர் ஆயி ஸ்வாமிகள் –இங்கே நாம் பேசுவது பிரபத்தி நிஷ்டரை பற்றியே என்பதால் கொள்ளலாம் என்பர் மா முனிகள்-பிரபத்தி பண்ணியும் பிரயோஜனாந்தரம் பெறலாமே -பிரயோஜனம் பகவானே என்பதே அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் என்கிற மூவருக்கும் -268-13)
(அரும்பதம் -ஐஸ்வர்யம் அக்ஷய மோக்ஷ கதிக்கும் அவள் தேவை -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று லஜ்ஜித்து இருப்பாள் – ஆகையால் அனைவருக்கும் புருஷகாரம் அபேக்ஷிதம்-உத்தர வாக்கியம் அவனுக்கு நாம் சொல்லும் மா ஸூ ச -பூர்வ வாக்கியம் -பல சதுஷ்ட்யங்கள் நான்குக்கும் பொது அன்றோ
அப்ரஸ்துதம் -இல்லையே அஞ்ஞர் என்பதே ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்திகளையே —
சாதனாந்தரம் மூலம் பிரயோஜனாந்தரம் பெற புருஷகாரம் வேண்டாம் -பகவானைப் பற்றி பிரயோஜனாந்தரம் பெறும் பொழுது -பிரபத்திக்கு புருஷகாரம் வேணும் –
நாலாம் அதிகாரி பிரபன்னரே இல்லையே -267-சூர்ணிகையில் சொன்னது-உபாயாந்த நிஷ்டர் தானே இவர்கள் –அபின்ன -வக்தா -பிள்ளை லோகாச்சார்யார் -பிரபந்தாந்தரங்களில்-நிறைய அருளிச் செய்து -சமான அர்த்தம் –தத் அனுஜராலே நாயனார் ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே –ஆகவே நாலு தோஷங்களும் இல்லை -இரண்டு யோசனைகளும் உப பன்னமே)
அதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் -இவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு புருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –
அதவா –
இப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்குயேயோ பிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார்
அதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-
இவர்கள் மூவருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித
சித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக ஸ்வீகரிக்கும் அளவில் -இவர்கள்
அபராதங்களைப் பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –
பூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே –உத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது – பூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –அதில் இவ் வதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –கீழ்ச் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே இவனுக்கு அபேஷிதமான பல விசேஷத்தைச் சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப் படியிலும் –
உத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரத்துக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷுப் படியிலும் -இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –
அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி-பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து-ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –
அடிமையைப் பேறு என்று கீழ் சொன்ன உபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர் திருத் தம்பியாரும் அருளிச் செயல் ரஹஸ்யத்தில் அருளிச் செய்தது –
ஆக –
இவன் அவனை பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –
ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்- பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –
அவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –
இருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –
பிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,
உபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி பாதித்த அனந்தரம்-
பிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–80-பிரபத்யே என்கிற பதத்தால்-
சொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-
அதுக்கு விஷயம் சொல்லுகைக்காக -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி முக்த கண்டமாக மீளவும் நாராயண -பத அர்த்தத்தையும்-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரியையும்-
பிரபத்தியில் சாதனத்வம் இல்லாமையையும்-
பிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சம தம அதிசயம் முதலான வற்றையும்
பிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்
தத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர்தோஷ்யாதிகளையும் –பிரபத்தி பிரசங்கத்தாலே-
முக பேதேன ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும்
தத் பிராபல்யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷகாரத்தை முன் இட்டே ஸ்வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,
உபயரும் புருஷகாரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,
அதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதிபாதிக்கை யாலே இவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply